Al-MukhtasarYusuf · 12:1–39

Al-Mukhtasar · Tafsir · in Tamil

يوسف

Yusuf

Joseph · Meccan · 111 ayahs

12:1Page 235

الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ١

Alif, Lām, Rā.1 These are the verses of the clear Book.

( الٓر ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் இறக்கப்பட்ட இந்த வசனங்கள் தெளிவான உள்ளடக்கத்தைக் கொண்ட குர்ஆனின் வசனங்களாகும்.

12:2Page 235

إِنَّآ أَنزَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٢

Indeed, We have sent it down as an Arabic Qur’ān1 that you might understand.

அரபுக்களே!- நீங்கள் குர்ஆனை, அதனை புரிந்துகொள்ளும் பொருட்டு நாம் அதனை அரபு மொழியில் இறக்கியுள்ளோம்.

12:3Page 235

نَحۡنُ نَقُصُّ عَلَيۡكَ أَحۡسَنَ ٱلۡقَصَصِ بِمَآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ هَٰذَا ٱلۡقُرۡءَانَ وَإِن كُنتَ مِن قَبۡلِهِۦ لَمِنَ ٱلۡغَٰفِلِينَ ٣

We relate to you, [O Muḥammad], the best of stories in what We have revealed to you of this Qur’ān although you were, before it, among the unaware.

தூதரே!- நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்குவதன் மூலம் மிகச் சிறந்த சம்பவத்தை நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். ஏனெனில் அவை உண்மையானவை, அதனது வார்த்தைகளும் சொல்லணியும் தவறுகளற்றவை. நிச்சயமாக இதனை இறக்குவதற்கு முன்னர் இந்த சம்பவங்களைக் குறித்து அறியாதவராக நீர் இருந்தீர்.

12:4Page 235

إِذۡ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَٰٓأَبَتِ إِنِّي رَأَيۡتُ أَحَدَ عَشَرَ كَوۡكَبٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ رَأَيۡتُهُمۡ لِي سَٰجِدِينَ ٤

[Of these stories mention] when Joseph said to his father,1 "O my father, indeed I have seen [in a dream] eleven stars and the sun and the moon; I saw them prostrating to me."

தூதரே!- யூஸுஃப் தம் தந்தை யஃகூபிடம் கூறியதை நாம் உமக்கு அறிவிக்கின்றோம்: “என் தந்தையே! நான் கனவில் பதினொன்று நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் கண்டேன். அவையனைத்தும் எனக்கு சிரம்பணிவதைக் கண்டேன்.” இந்த கனவு யூசுப் (அலை) அவர்களுக்கு விரைவாக கிடைக்கக்கூடிய நற்செய்தியாக இருந்தது.

12:5Page 236

قَالَ يَٰبُنَيَّ لَا تَقۡصُصۡ رُءۡيَاكَ عَلَىٰٓ إِخۡوَتِكَ فَيَكِيدُواْ لَكَ كَيۡدًاۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لِلۡإِنسَٰنِ عَدُوّٞ مُّبِينٞ ٥

He said, "O my son, do not relate your vision to your brothers or they will contrive against you a plan. Indeed Satan, to man, is a manifest enemy.

யஃகூப் தம் மகன் யூஸுஃபிடம் கூறினார்: “நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் சொல்லி விடாதே. அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு உன் மீது பொறாமை கொள்வார்கள். பொறாமையினால் உனக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கின்றான்.

12:6Page 236

وَكَذَٰلِكَ يَجۡتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِ وَيُتِمُّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَعَلَىٰٓ ءَالِ يَعۡقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيۡكَ مِن قَبۡلُ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٞ ٦

And thus will your Lord choose you and teach you the interpretation of narratives [i.e., events or dreams] and complete His favor upon you and upon the family of Jacob, as He completed it upon your fathers before, Abraham and Isaac. Indeed, your Lord is Knowing and Wise."

யூஸுஃபே!- நீ அக்கனவைக் கண்டது போல உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக் கொடுப்பான். உன்னுடைய முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோருக்கு தனது அருட்கொடைகளைப் பூரணப்படுத்தியது போல் உனக்கு தூதுத்துவத்தையும் ஆட்சியதிகாரத்தையும் வழங்கி உன்மீது பொழிந்த தன் அருளை நிறைவுபடுத்துவான். நிச்சயமாக உன் இறைவன் தன் படைப்புகளைக் குறித்து நன்கறிந்தவன்; தன் நிர்வாகத்தில் ஞானம் மிக்கவன்.

12:7Page 236

۞ لَّقَدۡ كَانَ فِي يُوسُفَ وَإِخۡوَتِهِۦٓ ءَايَٰتٞ لِّلسَّآئِلِينَ ٧

Certainly were there in Joseph and his brothers signs for those who ask, [such as]

நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களின் சம்பவத்தில் அவர்களது தகவல்களைப் பற்றிக் கேட்போருக்கு படிப்பினைகளும் அறிவுரைகளும் இருக்கின்றன.

12:8Page 236

إِذۡ قَالُواْ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ٨

When they said, "Joseph and his brother1 are more beloved to our father than we, while we are a clan. Indeed, our father is in clear error.

சகோதரர்கள் தங்களிடையே பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்குப் பிரியனமாவர்களாக இருக்கிறார்கள். நாம்தாம் அதிக எண்ணிக்கையுடைய கூட்டத்தினர். எவ்வாறு நம்மைவிட அவர்கள் இருவருக்கும் அவர் முக்கியத்துவம் வழங்கலாம்? எமக்குத் தோன்றும் விதமான எவ்வித காரணமுமின்றி நம்மைவிட அவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வழங்கியதனால் அவர் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.”

12:9Page 236

ٱقۡتُلُواْ يُوسُفَ أَوِ ٱطۡرَحُوهُ أَرۡضٗا يَخۡلُ لَكُمۡ وَجۡهُ أَبِيكُمۡ وَتَكُونُواْ مِنۢ بَعۡدِهِۦ قَوۡمٗا صَٰلِحِينَ ٩

Kill Joseph or cast him out to [another] land; the countenance [i.e., attention] of your father will [then] be only for you, and you will be after that a righteous people."1

யூஸுஃபைக் கொன்று விடுங்கள் அல்லது தூர தேசத்தில் தொலைத்து விடுங்கள். உங்கள் தந்தையின் அன்பு உங்களுக்கு மட்டுமே உரித்தானதாக ஆகிவிடும். அவர் உங்களை முழுமையாக நேசிக்க ஆரம்பித்து விடுவார். நீங்கள் அவரைக் கொன்ற பிறகு அல்லது தொலைத்த பிறகு அல்லாஹ்விடம் பாவங்களுக்கு மன்னிப்புக்கோரி நல்ல கூட்டமாக ஆகிவிடலாம்.

12:10Page 236

قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ لَا تَقۡتُلُواْ يُوسُفَ وَأَلۡقُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّ يَلۡتَقِطۡهُ بَعۡضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمۡ فَٰعِلِينَ ١٠

Said a speaker among them, "Do not kill Joseph but throw him into the bottom of the well; some travelers will pick him up - if you would do [something]."

சகோதரர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்று விடாதீர்கள். மாறாக பாழுங்கிணற்றின் ஆழத்தில் அவரைப் போட்டு விடுங்கள். அந்த வழியாக கடந்து செல்லும் பயணிகள் அவரை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர் விடயத்தில் நீங்கள் கூறியவற்றில் உறுதியானவர்களாக இருந்தால் அவரைக் கொல்வதைக்காட்டிலும் இதுதான் குறைவான தீங்குடையது.

12:11Page 236

قَالُواْ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأۡمَ۬نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ ١١

They said, "O our father, why do you not entrust us with Joseph while indeed, we are to him sincere counselors?

அவரை அகற்றும் விஷயத்தில் அவர்கள் உடன்பட்ட போது தங்களின் தந்தை யஃகூபிடம் வந்து கூறினார்கள்: “எங்களின் தந்தையே! உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் யூஸுஃபின் விஷயத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை? நாங்கள் அவர்மீது அன்பு செலுத்தக் கூடியவர்கள்; அவரை தீங்கிலிருந்து பாதுகாக்கக் கூடியவர்கள்; நிச்சயமாக அவர் உங்களிடம் பாதுகாப்பாக திரும்பி வரும் வரை நாம் அவரைக் காத்து கவனித்து அவருக்கு விசுவாசமாக இருப்போம். எனவே எங்களுடன் அவரை அனுப்புவதற்கு உங்களுக்கு என்ன தடை உள்ளது?

12:12Page 236

أَرۡسِلۡهُ مَعَنَا غَدٗا يَرۡتَعۡ وَيَلۡعَبۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ ١٢

Send him with us tomorrow that he may eat well and play. And indeed, we will be his guardians."

நாளை அவரை எங்களுடன் அழைத்துச் செல்வதற்கு அனுமதி அளியுங்கள். அவர் எங்களுடன் உண்டு மகிழட்டும், விளையாடட்டும். அவருக்கு எந்தவொரு தீங்கு நிகழ்வதை விட்டும் நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாப்பவர்களாகவே உள்ளோம்.

12:13Page 236

قَالَ إِنِّي لَيَحۡزُنُنِيٓ أَن تَذۡهَبُواْ بِهِۦ وَأَخَافُ أَن يَأۡكُلَهُ ٱلذِّئۡبُ وَأَنتُمۡ عَنۡهُ غَٰفِلُونَ ١٣

[Jacob] said, "Indeed, it saddens me that you should take him, and I fear that a wolf would eat him while you are of him unaware."

யஃகூப் தம் பிள்ளைகளிடம் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. ஏனெனில் என்னால் அவரைப் பிரிந்து இருக்க முடியாது. நீங்கள் மெய்மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓநாய் அவரைத் தின்று விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.”

12:14Page 236

قَالُواْ لَئِنۡ أَكَلَهُ ٱلذِّئۡبُ وَنَحۡنُ عُصۡبَةٌ إِنَّآ إِذٗا لَّخَٰسِرُونَ ١٤

They said, "If a wolf should eat him while we are a [strong] clan, indeed, we would then be losers."

அவர்கள் தம் தந்தையிடம் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருந்தும் ஓநாய் அவரைத் தின்றுவிட்டால் எங்களிடையே எந்த நன்மையும் இல்லை. அவரை ஓநாயிலிருந்து காப்பாற்றவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவோம்.”

12:15Page 237

فَلَمَّا ذَهَبُواْ بِهِۦ وَأَجۡمَعُوٓاْ أَن يَجۡعَلُوهُ فِي غَيَٰبَتِ ٱلۡجُبِّۚ وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمۡرِهِمۡ هَٰذَا وَهُمۡ لَا يَشۡعُرُونَ ١٥

So when they took him [out] and agreed to put him into the bottom of the well...1 But We inspired to him, "You will surely inform them [someday] about this affair of theirs while they do not perceive [your identity]."

யஃகூப் யூஸுஃபை அவர்களுடன் அனுப்பினார்: “அவர்கள் அவரை தூரமாக அழைத்துச் சென்ற போது அவரை ஒரு பாழுங்கிணற்றில் போட்டுவிட உறுதிகொண்டார்கள். நாம் அந்த நிலையில் யூஸுஃபிற்கு வஹி அறிவித்தோம்: “அவர்களின் இந்த செயலை நீர் அவர்களுக்கு அறிவிப்பீர். அப்போது அவர்கள் உம்மைப்பற்றி உணர்ந்திருக்க மாட்டார்கள்.

12:16Page 237

وَجَآءُوٓ أَبَاهُمۡ عِشَآءٗ يَبۡكُونَ ١٦

And they came to their father at night, weeping.

யூஸுஃபின் சகோதரர்கள் தமது சூழ்ச்சியை மறைக்க தம்தந்தையிடம் இரவு வேளையில் அழுதவாறு நடித்தவர்களாக வந்தார்கள்.

12:17Page 237

قَالُواْ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبۡنَا نَسۡتَبِقُ وَتَرَكۡنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئۡبُۖ وَمَآ أَنتَ بِمُؤۡمِنٖ لَّنَا وَلَوۡ كُنَّا صَٰدِقِينَ ١٧

They said, "O our father, indeed we went racing each other and left Joseph with our possessions, and a wolf ate him. But you would not believe us, even if we were truthful."

அவர்கள் கூறினார்கள்: “எங்களின் தந்தையே! நாம் அம்பெய்தும் ஓடியும் விளையாடிக் கொண்டிருந்தோம். எங்களின் ஆடைகள் மற்றும் பொருள்களைப் பாதுகாப்பதற்காக யூஸுஃபை அவற்றிற்கு அருகில் விட்டு விட்டோம். ஓநாய் அவரைத் தின்று விட்டது. நாங்கள் இப்போது உங்களிடத்தில் உண்மையைக் கூறினாலும் நீங்கள் எங்களை நம்பப்போவதில்லை.”

12:18Page 237

وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٖ كَذِبٖۚ قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٞۖ وَٱللَّهُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ ١٨

And they brought upon his shirt false blood.1 [Jacob] said, "Rather, your souls have enticed you to something, so patience is most fitting. And Allāh is the one sought for help against that which you describe."

தந்திரம் செய்து தங்களின் செய்தியை உறுதிப்படுத்தினார்கள். ஓநாய் தின்றதன் அடையாளம் என்று வேறு இரத்தத்தில் தேய்த்து எடுக்கப்பட்ட யூஸுஃபின் சட்டையைக் கொண்டு வந்தார்கள். கிழியாத சட்டையைக் கண்ட யஃகூப் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக உங்களின் மனம் நீங்கள் செய்த தீய காரியத்தை உங்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளது. நான் பதற மாட்டேன். அழகிய பொறுமையை மேற்கொள்வேன். யூஸுஃபைக்குறித்து நீங்கள் கூறும் விஷயத்திற்கு நான் அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன்.

12:19Page 237

وَجَآءَتۡ سَيَّارَةٞ فَأَرۡسَلُواْ وَارِدَهُمۡ فَأَدۡلَىٰ دَلۡوَهُۥۖ قَالَ يَٰبُشۡرَىٰ هَٰذَا غُلَٰمٞۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةٗۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَعۡمَلُونَ ١٩

And there came a company of travelers; then they sent their water drawer, and he let down his bucket. He said, "Good news! Here is a boy." And they concealed him, [taking him] as merchandise;1 and Allāh was Knowing of what they did.

கடந்து செல்லக்கூடிய ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தண்ணீரைத் தேடி ஒருவரை அனுப்பினார்கள். அவர் தம் வாளியைக் கிணற்றில் போட்டார். யூஸுஃப் அந்த கயிற்றைப் பிடித்துத் தொங்கினார். வாளியைப் போட்டவர் யூஸுஃபைக் கண்ட போது மகிழ்ச்சியில் கூறினார்: “நற்செய்தி! இதோ ஒரு சிறுவன்.” தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் அவரை தங்களின் வியாபாரப் பொருளாகக் கருதி மற்றவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டார்கள். அவர்கள் யூஸுஃபை அற்பமாகக் கருதி விற்றுவிடுவார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

12:20Page 237

وَشَرَوۡهُ بِثَمَنِۭ بَخۡسٖ دَرَٰهِمَ مَعۡدُودَةٖ وَكَانُواْ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ ٢٠

And they sold him for a reduced price - a few dirhams - and they were, concerning him, of those content with little.

தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் எகிப்தில் யூஸுஃபை அற்ப விலைக்கு விற்றுவிட்டார்கள். அவர்கள் விரைவாக அவரை விட்டு விடுபட வேண்டும் என்ற எண்ணத்தினால் அவரின் விஷயத்தில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். அவரைப் பார்த்தால் அடிமை போன்று இல்லை என்பதை புரிந்துகொண்டு, அவருடைய குடும்பத்தினர் வந்துவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். இதனால்தான் அவர் அவர்களுடன் நீண்ட காலம் தங்கியிருக்கவில்லை.

12:21Page 237

وَقَالَ ٱلَّذِي ٱشۡتَرَىٰهُ مِن مِّصۡرَ لِٱمۡرَأَتِهِۦٓ أَكۡرِمِي مَثۡوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوۡ نَتَّخِذَهُۥ وَلَدٗاۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي ٱلۡأَرۡضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمۡرِهِۦ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٢١

And the one from Egypt1 who bought him said to his wife, "Make his residence comfortable. Perhaps he will benefit us, or we will adopt him as a son." And thus, We established Joseph in the land that We might teach him the interpretation of events [i.e., dreams]. And Allāh is predominant over His affair, but most of the people do not know.

எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தம் மனைவியிடம் கூறினார்: “இவருடன் நல்ல முறையில் நடந்துகொள். நம்முடன் தங்கவைத்து இவரைக் கண்ணியப்படுத்து. இவர் நமக்குத் தேவையுள்ளவராக இருக்கலாம் அல்லது நாம் இவரை நம் மகனாக தத்தெடுத்துக் கொள்ளலாம். நாம் யூஸுஃபைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றி, கிணற்றிலிருந்து வெளியாக்கியது போல எகிப்தின் அரசனை அவர் மீது அன்பு செலுத்த வைத்து எகிப்தில் அவருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினோம். நாம் அவருக்கு கனவின் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தோம். அல்லாஹ் தன் விஷயத்தில் மேலோங்கியவனாக இருக்கின்றான். அவனுடைய கட்டளை நிறைவேறியே தீரும். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் -நிராகரிப்பாளர்கள- இதனை அறியமாட்டார்கள்.

12:22Page 237

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥٓ ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٢٢

And when he [i.e., Joseph] reached maturity, We gave him judgement and knowledge. And thus We reward the doers of good.

யூஸுஃப் உடல் ரீதியான பலத்தைப் பெற்று பக்குவமடைந்த போது நாம் அவருக்கு புரிதலையும் ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நாம் அல்லாஹ்வின் வணக்கத்தில் நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம்.

12:23Page 238

وَرَٰوَدَتۡهُ ٱلَّتِي هُوَ فِي بَيۡتِهَا عَن نَّفۡسِهِۦ وَغَلَّقَتِ ٱلۡأَبۡوَٰبَ وَقَالَتۡ هَيۡتَ لَكَۚ قَالَ مَعَاذَ ٱللَّهِۖ إِنَّهُۥ رَبِّيٓ أَحۡسَنَ مَثۡوَايَۖ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلظَّٰلِمُونَ ٢٣

And she, in whose house he was, sought to seduce him. She closed the doors and said, "Come, you." He said, "[I seek] the refuge of Allāh. Indeed, he1 is my master, who has made good my residence. Indeed, wrongdoers will not succeed."

அரசனின் மனைவி இதமாகவும் தந்திரமாகவும் யூஸுஃபை தவறான நடத்தைக்காக அழைத்தாள். தனிமையை உறுதிப்படுத்த கதவுகள் அனைத்தையும் தாழிட்டுக்கொண்டு, “என் பக்கம் நெருங்கி வா” என்றாள். யூஸுஃப் கூறினார்: “நீ அழைக்கும் விஷயத்திலிருந்து நான் அல்லாஹ்வின் மூலம் பாதுகாவல் தேடுகிறேன். என் எஜமான் என்னை நல்ல முறையில் அவரிடம் தங்க வைத்துள்ளார். நான் அவருக்கு ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன். நான் அவருக்கு துரோகமிழைத்தால் அநியாயக்காரனாக ஆகிவிடுவேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”

12:24Page 238

وَلَقَدۡ هَمَّتۡ بِهِۦۖ وَهَمَّ بِهَا لَوۡلَآ أَن رَّءَا بُرۡهَٰنَ رَبِّهِۦۚ كَذَٰلِكَ لِنَصۡرِفَ عَنۡهُ ٱلسُّوٓءَ وَٱلۡفَحۡشَآءَۚ إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُخۡلَصِينَ ٢٤

And she certainly determined [to seduce] him, and he would have inclined to her had he not seen the proof [i.e., sign] of his Lord. And thus [it was] that We should avert from him evil and immorality. Indeed, he was of Our chosen servants.

அவள் மானக்கேடான காரியம் செய்வதற்கு ஆசைகொண்டாள். அவரை அதைவிட்டுத் தடுக்கக்கூடிய, தூரப்படுத்தக்கூடிய அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர் கண்டிருக்காவிட்டால் அவரது உள்ளத்திலும் அது ஏற்பட்டிருக்கும். அவரை விட்டும் தீங்கை அகற்றி விபச்சாரம் மோசடி என்பவற்றை விட்டு அவரை அப்புறப்படுத்தவே நாம் அவருக்கு அவற்றைக் காட்டினோம். நிச்சயமாக யூஸுஃப் நபித்துவம், தூதுப்பணிக்காக நாம் தேர்ந்தெடுத்த அடியார்களில் உள்ளவராவார்.

12:25Page 238

وَٱسۡتَبَقَا ٱلۡبَابَ وَقَدَّتۡ قَمِيصَهُۥ مِن دُبُرٖ وَأَلۡفَيَا سَيِّدَهَا لَدَا ٱلۡبَابِۚ قَالَتۡ مَا جَزَآءُ مَنۡ أَرَادَ بِأَهۡلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسۡجَنَ أَوۡ عَذَابٌ أَلِيمٞ ٢٥

And they both raced to the door, and she tore his shirt from the back, and they found her husband at the door. She said, "What is the recompense of one who intended evil for your wife but that he be imprisoned or a painful punishment?"

இருவரும் கதவின்பால் விரைந்தனர். யூஸுஃப் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடினார். அவள் அவரை வெளியேற விடாமல் தடுப்பதற்காக ஓடினாள். வெளியேறுவதைத் தடுக்க அவரது சட்டையைப் பிடித்து அவருடைய ஆடையின் பின் பகுதியை அவள் கிழித்து விட்டாள். கதவுக்கு அருகில் அவளுடைய கணவனை இருவரும் கண்டார்கள். அரசனின் மனைவி தந்திரமாக அரசனிடம் கூறினாள்: “மன்னரே! உங்களின் மனைவியுடன் மானக்கேடான காரியம் செய்ய நாடியவருக்கான தண்டனை, சிறையிலடைத்தல் அல்லது நோவினை தரும் வேதனையைத் தவிர வேறெதுவும் இல்லை.”

12:26Page 238

قَالَ هِيَ رَٰوَدَتۡنِي عَن نَّفۡسِيۚ وَشَهِدَ شَاهِدٞ مِّنۡ أَهۡلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٖ فَصَدَقَتۡ وَهُوَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ٢٦

[Joseph] said, "It was she who sought to seduce me." And a witness from her family testified, "If his shirt is torn from the front, then she has told the truth, and he is of the liars.

யூஸுஃப் கூறினார்: “அவள்தான் என்னை மானக்கேடான காரியம் செய்ய அழைத்தாள். நான் அவ்வாறு செய்ய நாடவில்லை. அவளுடைய வீட்டில் இருந்த ஒரு குழந்தையை தொட்டிலில் இருந்தவாறு அல்லாஹ் பேசச் செய்தான். அது சாட்சி கூறியது: “யூஸுஃபின் சட்டை முன்புறமாக கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள் என்பதற்கான ஆதாரமாகும். அவர் பொய்யராவார். ஏனெனில் அவள் தன்னை விட்டும் அவரைத் தடுத்திருப்பாள்.

12:27Page 238

وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٖ فَكَذَبَتۡ وَهُوَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٢٧

But if his shirt is torn from the back, then she has lied, and he is of the truthful."

அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அது அவர் உண்மை கூறுகிறார் என்பதற்கு ஆதாரமாகும். அவள் பொய் கூறுபவளாவாள். ஏனெனில் அவர் அவளை விட்டும் தப்பி ஓடும் போது அவள் அவரை நாடியிருக்கலாம்.

12:28Page 238

فَلَمَّا رَءَا قَمِيصَهُۥ قُدَّ مِن دُبُرٖ قَالَ إِنَّهُۥ مِن كَيۡدِكُنَّۖ إِنَّ كَيۡدَكُنَّ عَظِيمٞ ٢٨

So when he [i.e., her husband] saw his shirt torn from the back, he said, "Indeed, it is of your [i.e., women's] plan. Indeed, your plan is great [i.e., vehement].

யூஸுஃபின் சட்டை பின் புறமாக கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்ட மன்னர் யூஸுஃப் உண்மையாளர் என்பதை அறிந்துகொண்டார். அவர் கூறினார்: “இது -பெண்களாகிய நீங்கள்- செய்த சூழ்ச்சிதான். நிச்சயமாக உங்களின் சூழ்ச்சி கடுமையானதாகும்.”

12:29Page 238

يُوسُفُ أَعۡرِضۡ عَنۡ هَٰذَاۚ وَٱسۡتَغۡفِرِي لِذَنۢبِكِۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلۡخَاطِـِٔينَ ٢٩

Joseph, ignore this.1 And, [my wife], ask forgiveness for your sin. Indeed, you were of the sinful."

அவர் யூஸுஃபிடம் கூறினார்: “யூஸுஃபே இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடும். இதனை யாரிடம் கூறிவிடாதீர். பெண்ணே! நீ உன் பாவத்திற்கு மன்னிப்பு தேடிக்கொள். யூஸுஃபை அவரது விருப்பமின்றி கவர்ந்திழுக்க முயற்சி செய்து நீதான் பாவியாகி விட்டாய்.

12:30Page 238

۞ وَقَالَ نِسۡوَةٞ فِي ٱلۡمَدِينَةِ ٱمۡرَأَتُ ٱلۡعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفۡسِهِۦۖ قَدۡ شَغَفَهَا حُبًّاۖ إِنَّا لَنَرَىٰهَا فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٣٠

And women in the city said, "The wife of al-ʿAzeez is seeking to seduce her slave boy; he has impassioned her with love. Indeed, we see her [to be] in clear error."

அந்தச் செய்தி நகரெங்கும் பரவியது. இதைக் கண்டிக்கும்விதமாக பெண்களில் சிலர் கூறினார்கள்: “அரசனின் மனைவி தன் அடிமையை தன்பக்கம் கவர்ந்திழுக்க முயற்சி செய்தாள். அவள் தன்அடிமையின் மீது காதலில் விழுந்து விட்டாள். -தனது அடிமையில்- அவள் மதிமயங்கி அவர் மீது கொண்ட அன்பினால் அவள் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.

12:31Page 239

فَلَمَّا سَمِعَتۡ بِمَكۡرِهِنَّ أَرۡسَلَتۡ إِلَيۡهِنَّ وَأَعۡتَدَتۡ لَهُنَّ مُتَّكَـٔٗا وَءَاتَتۡ كُلَّ وَٰحِدَةٖ مِّنۡهُنَّ سِكِّينٗا وَقَالَتِ ٱخۡرُجۡ عَلَيۡهِنَّۖ فَلَمَّا رَأَيۡنَهُۥٓ أَكۡبَرۡنَهُۥ وَقَطَّعۡنَ أَيۡدِيَهُنَّ وَقُلۡنَ حَٰشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنۡ هَٰذَآ إِلَّا مَلَكٞ كَرِيمٞ ٣١

So when she heard of their scheming, she sent for them and prepared for them a banquet and gave each one of them a knife and said [to Joseph], "Come out before them." And when they saw him, they greatly admired him and cut their hands1 and said, "Perfect is Allāh!2 This is not a man; this is none but a noble angel."

அந்தப் பெண்கள் தன்னை மறைமுகமாக பழித்துப் பேசுவதை கேள்விப்பட்ட அரசனின் மனைவி அவர்களுக்கு அழைப்பு விடுத்து அனுப்பினாள். அவர்கள் யூஸுஃபைக் கண்டு விட்டு அவளை நியாயப்படுத்தலாம் என்பதற்கே அவ்வாறு செய்தாள். அவர்களுக்கு விரிப்பும் தலையணையும் உள்ள ஓர் இடத்தைத் தயார்படுத்தி அழைக்கப்பட்ட ஒவ்வொருத்திக்கும் உணவினை (பழங்களை) அறுப்பதற்கான கத்தியை வழங்கினாள். அவர்களை நோக்கி வரும்படி யூஸுஃபிடம் கூறினாள். அந்த பெண்கள் அவரைக் கண்ட போது அப்படியே பிரமித்துவிட்டார்கள். வியப்பில் உணவை (பழங்களை) அறுப்பதற்காக வழங்கப்பட்ட கத்தியைக் கொண்டு தங்களின் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “அல்லாஹ் தூய்மையானவன், இந்தப் பையன் மனிதரே அல்ல. இத்தனை அழகும் ஒரு மனிதனிடம் கொட்டிக் கிடக்காது. இவர் கண்ணியமான வானவரேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.

12:32Page 239

قَالَتۡ فَذَٰلِكُنَّ ٱلَّذِي لُمۡتُنَّنِي فِيهِۖ وَلَقَدۡ رَٰوَدتُّهُۥ عَن نَّفۡسِهِۦ فَٱسۡتَعۡصَمَۖ وَلَئِن لَّمۡ يَفۡعَلۡ مَآ ءَامُرُهُۥ لَيُسۡجَنَنَّ وَلَيَكُونٗا مِّنَ ٱلصَّٰغِرِينَ ٣٢

She said, "That is the one about whom you blamed me. And I certainly sought to seduce him, but he firmly refused; and if he will not do what I order him, he will surely be imprisoned and will be of those debased."

அந்த பெண்களுக்கு நேர்ந்ததைக் கண்ட அரசனின் மனைவி கூறினாள்: “யாரை நேசித்ததனால்தான் நீங்கள் என்னைக் குறை கூறினீர்களோ அந்த இளைஞனே இவர். நான் அவரை அடைய முயன்றேன். அவரைத் தவறில் ஈடுபட வைக்க நான் தந்திரம் செய்தும், அவர் மறுத்துவிட்டார். அவர் என் ஆசைக்கு இணங்கவில்லையெனில் அவரை நிச்சயம் சிறையில் அடைத்திடுவேன். அவர் இழிவடைந்தவர்களில் ஒருவராகி விடுவார்.

12:33Page 239

قَالَ رَبِّ ٱلسِّجۡنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدۡعُونَنِيٓ إِلَيۡهِۖ وَإِلَّا تَصۡرِفۡ عَنِّي كَيۡدَهُنَّ أَصۡبُ إِلَيۡهِنَّ وَأَكُن مِّنَ ٱلۡجَٰهِلِينَ ٣٣

He said, "My Lord, prison is more to my liking than that to which they invite me. And if You do not avert from me their plan, I might incline toward them and [thus] be of the ignorant."

யூஸுஃப் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “அவர்கள் என்னை அழைக்கும் தவறான நடத்தையில் ஈடுபடுவதை விட அவள் என்னை அச்சுறுத்தும் சிறையே எனக்குப் பிரியமானது. நீ அவர்களின் சூழ்ச்சியை என்னை விட்டும் அகற்றவில்லையெனில் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். அவர்களின் பக்கம் சாய்ந்து அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதற்கு நான் உடன்பட்டால் அறிவற்றவர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்.

12:34Page 239

فَٱسۡتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنۡهُ كَيۡدَهُنَّۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٣٤

So his Lord responded to him and averted from him their plan. Indeed, He is the Hearing, the Knowing.

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். மன்னனின் மனைவி மற்றும் நகரத்துப் பெண்களின் சூழ்ச்சியை அவரை விட்டும் நீக்கினான். யூஸுஃபுடையவும் ஒவ்வொரு பிரார்த்தனை புரிவோரின் பிரார்த்தனையையும் நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். அவரதும் ஏனையோரதும் நிலமைகளை அவன் நன்கறிந்தவன்.

12:35Page 239

ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعۡدِ مَا رَأَوُاْ ٱلۡأٓيَٰتِ لَيَسۡجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٖ ٣٥

Then it appeared to them after they had seen the signs1 that he [i.e., al-ʿAzeez] should surely imprison him for a time.2

மன்னரும் அவரது கூட்டமும் அவர் தூய்மையானவர் என்பதற்கான ஆதாரத்தைக் கண்ட போது -தவறு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக- அவரை நிர்ணயிக்கப்படாத காலம் வரை சிறையில் அடைக்க நாடினார்கள்.

12:36Page 239

وَدَخَلَ مَعَهُ ٱلسِّجۡنَ فَتَيَانِۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَعۡصِرُ خَمۡرٗاۖ وَقَالَ ٱلۡأٓخَرُ إِنِّيٓ أَرَىٰنِيٓ أَحۡمِلُ فَوۡقَ رَأۡسِي خُبۡزٗا تَأۡكُلُ ٱلطَّيۡرُ مِنۡهُۖ نَبِّئۡنَا بِتَأۡوِيلِهِۦٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ ٣٦

And there entered the prison with him two young men. One of them said, "Indeed, I have seen myself [in a dream] pressing [grapes for] wine." The other said, "Indeed, I have seen myself carrying upon my head [some] bread, from which the birds were eating. Inform us of its interpretation; indeed, we see you to be of those who do good."

அவர்கள் அவரை சிறையில் அடைத்தார்கள். அவருடன் இரு இளைஞர்களும் சிறைபுகுந்தார்கள். அவர்களில் ஒருவர் யூஸுஃபிடம் கூறினார்: “நான் கனவிலே மதுபானம் தயாரிப்பதற்கான திராட்சை ரசம் பிழிவதாகக் கண்டேன்.” மற்றொருவர் கூறினார்: “நான் என் தலையிலே ரொட்டியை சுமந்து செல்வதாக, அதனைப் பறவைகள் கொத்தித் தின்பதாகக் கண்டேன்.” -யூஸுஃபே!- நாங்கள் கண்டதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக. நாங்கள் உம்மை உபகாரம் செய்வோரில் ஒருவராகக் காண்கிறோம்.

12:37Page 239

قَالَ لَا يَأۡتِيكُمَا طَعَامٞ تُرۡزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأۡتُكُمَا بِتَأۡوِيلِهِۦ قَبۡلَ أَن يَأۡتِيَكُمَاۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّيٓۚ إِنِّي تَرَكۡتُ مِلَّةَ قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ ٣٧

He said, "You will not receive food that is provided to you except that I will inform you of its interpretation before it comes to you. That is from what my Lord has taught me. Indeed, I have left the religion of a people who do not believe in Allāh, and they, in the Hereafter, are disbelievers.

யூஸுஃப் கூறினார்: “அரசரிடமிருந்தோ ஏனையோரிடமிருந்தோ உங்களுக்கு வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்னரே அதன் உண்மை நிலையையும் முறையையும் நான் உங்கள் இருவருக்கும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த விளக்கம் எனக்கு என் இறைவன் கற்றுத் தந்தவையாகும். இது ஜோதிடமோ வானவியல் சாஸ்திரமோ அல்ல. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையை ஏற்க மறுக்கிறார்கள்.

12:38Page 240

وَٱتَّبَعۡتُ مِلَّةَ ءَابَآءِيٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ مَا كَانَ لَنَآ أَن نُّشۡرِكَ بِٱللَّهِ مِن شَيۡءٖۚ ذَٰلِكَ مِن فَضۡلِ ٱللَّهِ عَلَيۡنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ ٣٨

And I have followed the religion of my fathers, Abraham, Isaac and Jacob. And it was not for us to associate anything with Allāh. That is from the favor of Allāh upon us and upon the people, but most of the people are not grateful.

நான் என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றினேன். அது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் மார்க்கமாகும். அவன் மாத்திரமே வணங்குவதற்குத் தகுதியானவனாக இருக்கும் போது அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவது எங்களுக்கு உகந்ததல்ல. நானும் எனது மூதாதையர்களும் ஏற்றுள்ள தவ்ஹீதும் நம்பிக்கையும் அவன் எங்கள் மீது பொழிந்த அருளாகும். அவன் மனிதர்கள் அனைவரின்பாலும் தூதர்களை ஏகத்துவத்தைக் கொடுத்து அனுப்பி அவர்கள் மீது அருள் புரிந்துள்ளான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில்லை. மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

12:39Page 240

يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ ءَأَرۡبَابٞ مُّتَفَرِّقُونَ خَيۡرٌ أَمِ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ٣٩

O [my] two companions of prison, are separate lords better or Allāh, the One,1 the Prevailing?2

பின்னர் யூசுஃப் சிறையில் இருந்த இரு இளைஞர்களையும் பார்த்துக் கூறினார்: “பல கடவுள்களை வணங்குவது சிறந்ததா? அல்லது தன்னை யாரும் அடக்கி ஆளாமல் மற்றவர்களை அடக்கியாளும், எவ்வித இணையுமற்ற அல்லாஹ் ஒருவனையே வணங்குவது சிறந்ததா?”

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском