Al-MukhtasarAn‑Nur · 24:1–34

Al-Mukhtasar · Tafsir · in Tamil

النور

An-Nur

The Light · Medinan · 64 ayahs

24:1Page 350

سُورَةٌ أَنزَلۡنَٰهَا وَفَرَضۡنَٰهَا وَأَنزَلۡنَا فِيهَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لَّعَلَّكُمۡ تَذَكَّرُونَ ١

[This is] a sūrah which We have sent down and made [that within it] obligatory and revealed therein verses of clear evidence that you might remember.

இது நாம் இறக்கிய ஓர் அத்தியாயமாகும். இதில் கூறப்பட்டுள்ள சட்டங்களின்படி செயல்படுவதை கடமையாக்கியுள்ளோம். அதிலுள்ள சட்டங்களை நீங்கள் சிந்தித்து, அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக இதில் தெளிவான வசனங்களை நாம் இறக்கியுள்ளோம்.

24:2Page 350

ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجۡلِدُواْ كُلَّ وَٰحِدٖ مِّنۡهُمَا مِاْئَةَ جَلۡدَةٖۖ وَلَا تَأۡخُذۡكُم بِهِمَا رَأۡفَةٞ فِي دِينِ ٱللَّهِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ وَلۡيَشۡهَدۡ عَذَابَهُمَا طَآئِفَةٞ مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢

The [unmarried] woman or [unmarried] man found guilty of sexual intercourse1 - lash each one of them with a hundred lashes,2 and do not be taken by pity for them in the religion [i.e., law] of Allāh,3 if you should believe in Allāh and the Last Day. And let a group of the believers witness their punishment.

திருமணமாகாத விபச்சாரி, விபச்சாரன் இருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் தண்டனையை நிறைவேற்றாமல் அல்லது அதனைக் குறைத்து அவர்களின் விஷயத்தில் இரக்கம் காட்டாதீர்கள். அவ்விருவரையும் பகிரங்கப்படுத்தவும் அவர்களுக்கும், ஏனையோருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைவதற்கும் அவர்களின் மீது தண்டனை நிறைவேற்றப்படும்போது நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டம் அங்கு இருக்கட்டும்.

24:3Page 350

ٱلزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوۡ مُشۡرِكَةٗ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوۡ مُشۡرِكٞۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ ٣

The fornicator does not marry except a [female] fornicator or polytheist, and none marries her except a fornicator1 or a polytheist, and that [i.e., marriage to such persons] has been made unlawful to the believers.

விபச்சாரம் மோசமானது என்பதால் அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக விபச்சாரன் தன்னைப்போன்ற விபச்சாரியையே அல்லது விபச்சாரத்தைத் தவிர்ந்துகொள்ளாத திருமணம் செய்வது தடைசெய்யப்பட்ட இணைவைக்கும் பெண்ணையே மணமுடிக்க விரும்புவான். விபச்சாரி தன்னைப்போன்ற விபச்சாரனையே அல்லது விபச்சாரத்தைத் தவிர்ந்துகொள்ளாத திருமணம் செய்வது தடைசெய்யப்பட்ட இணைவைக்கும் ஆணையே மணமுடிக்க விரும்புவாள். விபச்சாரம் புரியும் பெண்ணைத் திருமணம் செய்வதும் விபச்சாரம் செய்யும் ஆணுக்கு திருமணம் செய்துவைப்பதும் நம்பிக்கையாளர்களின் மீது தடைசெய்யப்பட்டுள்ளது.

24:4Page 350

وَٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ثُمَّ لَمۡ يَأۡتُواْ بِأَرۡبَعَةِ شُهَدَآءَ فَٱجۡلِدُوهُمۡ ثَمَٰنِينَ جَلۡدَةٗ وَلَا تَقۡبَلُواْ لَهُمۡ شَهَٰدَةً أَبَدٗاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ٤

And those who accuse chaste women and then do not produce four witnesses - lash them with eighty lashes and do not accept from them testimony ever after. And those are the defiantly disobedient,

ஆட்சியாளர்களே!- ஒழுக்கமுள்ள பெண்கள் மீது விபச்சாரப் பழிசுமத்தி -இது ஒழுக்கமுள்ள ஆண்களுக்கும் பொருந்தும்- தாங்கள் கூறிய விஷயத்திற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஒழுக்கமுள்ளவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்துபவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் வெளியேறியவர்களாவர்.

24:5Page 350

إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٥

Except for those who repent thereafter and reform, for indeed, Allāh is Forgiving and Merciful.

ஆயினும் தாம் செய்த அச்செயலுக்குப் பிறகு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்களைத் தவிர. நிச்சமாக அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையையும் சாட்சியத்தையும் ஏற்றுக்கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

24:6Page 350

وَٱلَّذِينَ يَرۡمُونَ أَزۡوَٰجَهُمۡ وَلَمۡ يَكُن لَّهُمۡ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمۡ فَشَهَٰدَةُ أَحَدِهِمۡ أَرۡبَعُ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ ٦

And those who accuse their wives [of adultery] and have no witnesses except themselves - then the witness of one of them1 [shall be] four testimonies [swearing] by Allāh that indeed, he is of the truthful.

தங்களின் மனைவியர் மீது பழிசுமத்தும் ஆண்களிடம் அவர்கள் பழிசுமத்தும் விஷயத்திற்கு அவர்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லையெனில், அவர் நான்கு முறை அல்லாஹ்வைக்கொண்டு சத்தியம் செய்து நிச்சயமாக தன் மனைவி மீது சுமத்திய விபச்சாரக் குற்றத்தில் உண்மையாளர் என்று கூற வேண்டும்.

24:7Page 350

وَٱلۡخَٰمِسَةُ أَنَّ لَعۡنَتَ ٱللَّهِ عَلَيۡهِ إِن كَانَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ٧

And the fifth [oath will be] that the curse of Allāh be upon him if he should be of the liars.

பின்னர் ஐந்தாவது முறை அவள் மீது கூறியதில் தான் பொய்யராக இருந்தால் தான் அல்லாஹ்வின் சாபத்திற்கு தகுதியானவன் என்று கூறி பிரார்த்தனையில் அதனை சேர்க்க வேண்டும்.

24:8Page 350

وَيَدۡرَؤُاْ عَنۡهَا ٱلۡعَذَابَ أَن تَشۡهَدَ أَرۡبَعَ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ٨

But it will prevent punishment from her if she gives four testimonies [swearing] by Allāh that indeed, he is of the liars.

அதன் மூலம் விபச்சாரத்தின் தண்டனையைப் பெற அவள் தகுதியானவளாகிவிடுவாள். அவள் தன் தண்டனையை நீக்குவதற்கு நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து “நிச்சயமாக அவர் தன்மீது சுமத்தும் குற்றத்தில் பொய்யர்” என்று கூற வேண்டும்.

24:9Page 350

وَٱلۡخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيۡهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٩

And the fifth [oath will be] that the wrath of Allāh be upon her if he was of the truthful.

பின்னர் ஐந்தாவது முறை அவன் கூறியதில் உண்மையாளராக இருந்தால் தான் அல்லாஹ்வின் சாபத்திற்கு தகுதியானவள் என்று கூறி பிரார்த்தனையில் அதனை சேர்க்க வேண்டும்.

24:10Page 350

وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ ١٠

And if not for the favor of Allāh upon you and His mercy...1 and because Allāh is Accepting of Repentance and Wise.

மனிதர்களே!- உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும், நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தான் வழங்கும் சட்டங்களில், திட்டங்களில் ஞானம்மிக்கவனாகவும் இல்லையெனில் உங்கள் பாவங்களுக்கு அவன் உங்களைத் உடனே தண்டித்து அவற்றால் உங்களை கேவலப்படுத்தியிருப்பான்.

24:11Page 351

إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلۡإِفۡكِ عُصۡبَةٞ مِّنكُمۡۚ لَا تَحۡسَبُوهُ شَرّٗا لَّكُمۖ بَلۡ هُوَ خَيۡرٞ لَّكُمۡۚ لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُم مَّا ٱكۡتَسَبَ مِنَ ٱلۡإِثۡمِۚ وَٱلَّذِي تَوَلَّىٰ كِبۡرَهُۥ مِنۡهُمۡ لَهُۥ عَذَابٌ عَظِيمٞ ١١

Indeed, those who came with falsehood1 are a group among you. Do not think it bad for you; rather, it is good for you. For every person among them is what [punishment] he has earned from the sin, and he who took upon himself the greater portion thereof2 - for him is a great punishment [i.e., Hellfire].

நம்பிக்கையாளர்களே!- நிச்சயமாக (விசுவாசிகளின் அன்னை ஆயிஷாவைக் குறித்து) அவதூறு கூறியவர்கள் உங்களிலுள்ள ஒரு பிரிவினர்தாம். அவர்கள் இட்டுக்கட்டியதை உங்களுக்குத் தீங்காக எண்ண வேண்டாம். மாறாக அது உங்களுக்கு நன்மையானதாகும். ஏனெனில் அதில் நம்பிக்கையாளர்களுக்கு கூலியும் சோதனையும் உண்டு என்பதுடன் முஃமின்களின் தாய் நிரபராதி என்பதும் நிரூபனமாகிறது. அவர் மீது விபச்சார அவதூறு கூறுவதில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் அவதூறு கூறி அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கான கூலி உண்டு. இந்த அவதூறை ஆரம்பித்து இதில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது. இது நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபைய் இப்னு சலூலைக் குறிப்பதாகும்.

24:12Page 351

لَّوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ ظَنَّ ٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بِأَنفُسِهِمۡ خَيۡرٗا وَقَالُواْ هَٰذَآ إِفۡكٞ مُّبِينٞ ١٢

Why, when you heard it, did not the believing men and believing women think good of themselves [i.e., one another] and say, "This is an obvious falsehood"?

நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும் இந்த பாரிய அவதூறை செவியுற்றபோது அவதூறு கூறப்பட்ட நம்பிக்கைகொண்ட தங்களின் சகோதரர்களைக்குறித்து நல்லெண்ணம் கொண்டு, “இது தெளிவான பொய்” என்று அவர்கள் எண்ணி இருக்க வேண்டாமா?

24:13Page 351

لَّوۡلَا جَآءُو عَلَيۡهِ بِأَرۡبَعَةِ شُهَدَآءَۚ فَإِذۡ لَمۡ يَأۡتُواْ بِٱلشُّهَدَآءِ فَأُوْلَٰٓئِكَ عِندَ ٱللَّهِ هُمُ ٱلۡكَٰذِبُونَ ١٣

Why did they [who slandered] not produce for it four witnesses? And when they do not produce the witnesses, then it is they, in the sight of Allāh, who are the liars.

நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா மீது பாரிய அவதூறு கூறியவர்கள் தாங்கள் கூறியது சரி என்பதற்காக நான்கு சாட்சிகளை கொண்டு வந்திருக்க வேண்டாமா? அதற்கு அவர்கள் நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையெனில் -அவர்களால் ஒருபோதும் நான்கு சாட்சிகளைக் கொண்டுவர முடியாது- அல்லாஹ்வின் சட்டத்தில் அவர்கள்தாம் பொய்யர்களாவர்.

24:14Page 351

وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ لَمَسَّكُمۡ فِي مَآ أَفَضۡتُمۡ فِيهِ عَذَابٌ عَظِيمٌ ١٤

And if it had not been for the favor of Allāh upon you and His mercy in this world and the Hereafter, you would have been touched for that [lie] in which you were involved by a great punishment

நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் அருளும் கருணையும் உங்கள் மீது இருந்ததால் அவன் உங்களை உடனுக்குடன் தண்டிக்கவில்லை, உங்களில் மன்னிப்புக் கோரியவர்களை மன்னித்துவிட்டான் - நம்பிக்கையாளர்களின் அன்னையைக் குறித்து நீங்கள் கூறிய பொய், அவதூறின் காரணமாக பெரும் வேதனை உங்களைத் தாக்கியிருக்கும்.

24:15Page 351

إِذۡ تَلَقَّوۡنَهُۥ بِأَلۡسِنَتِكُمۡ وَتَقُولُونَ بِأَفۡوَاهِكُم مَّا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞ وَتَحۡسَبُونَهُۥ هَيِّنٗا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٞ ١٥

When you received it with your tongues1 and said with your mouths that of which you had no knowledge and thought it was insignificant while it was, in the sight of Allāh, tremendous.

உங்களில் சிலர் சிலரிடம் கூறினீர்கள். அது பொய்யாக இருந்தபோதும் உங்களின் நாவுகளால் அதனைப் பரப்பினீர்கள். அது குறித்து உங்களுக்கு எந்த அறிவும் இல்லை. நிச்சயமாக அதனை நீங்கள் இலகுவாக எண்ணினீர்கள். ஆனால் அல்லாஹ்விடத்திலோ அது மிகப் பெரியதாகும். ஏனெனில் அது பொய்யும் அப்பாவியை அவதூறு கூறுவதுமாகும்.

24:16Page 351

وَلَوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ قُلۡتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبۡحَٰنَكَ هَٰذَا بُهۡتَٰنٌ عَظِيمٞ ١٦

And why, when you heard it, did you not say, "It is not for us to speak of this. Exalted are You, [O Allāh]; this is a great slander"?

நீங்கள் இந்த அவதூறைக் கேள்விப்பட்டபோது, “இந்த கெட்ட விஷயத்தைக் குறித்துப் பேசுவது நமக்கு உகந்ததல்ல. எங்களின் இறைவன் தூய்மையானவன். நம்பிக்கையாளர்களின் அன்னையின்மீது சுமத்தப்படும் இந்த அவதூறு பெரும் பொய்யாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?

24:17Page 351

يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُواْ لِمِثۡلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤۡمِنِينَ ١٧

Allāh warns you against returning to the likes of this [conduct], ever, if you should be believers.

நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால் இதுபோன்ற அவதூறை குற்றமற்ற ஒருவரின்மீது அபாண்டமாகக் கூறிவிடக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான், உபதேசம் செய்கிறான்.

24:18Page 351

وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ١٨

And Allāh makes clear to you the verses [i.e., His rulings], and Allāh is Knowing and Wise.

தன் சட்டங்களையும் அறிவுரைகளையும் அடக்கியுள்ள வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அவன் உங்களின் செயல்களை நன்கறிந்தவன். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். தான் வழங்கும் சட்டங்களில், திட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.

24:19Page 351

إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ١٩

Indeed, those who like that immorality1 should be spread [or publicized] among those who have believed will have a painful punishment in this world and the Hereafter. And Allāh knows2 and you do not know.

நிச்சயமாக நம்பிக்கையாளர்களிடையே தீமையான விஷயங்கள் - அவற்றில் அவதூறும் உள்ளடங்கும் - பரவ வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இவ்வுலகில் அவதூறுக்கான கசையடி நிறைவேற்றும் தண்டனையும் மறுமையில் நரக வேதனையும் உண்டு. அவர்களின் பொய்களையும் அடியார்களின் விஷயங்களையும் நலன்களையும் அல்லாஹ் அறிவான். நீங்கள் அவற்றை அறிய மாட்டீர்கள்.

24:20Page 351

وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٞ رَّحِيمٞ ٢٠

And if it had not been for the favor of Allāh upon you and His mercy...1 and because Allāh is Kind and Merciful.

அவதூறில் பங்கெடுத்தவர்களே!- உங்களின் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும் இல்லையெனில், அவன் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இல்லையெனில் அவன் உங்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.

24:21Page 352

۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدٗا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّي مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ٢١

O you who have believed, do not follow the footsteps of Satan. And whoever follows the footsteps of Satan - indeed, he enjoins immorality and wrongdoing. And if not for the favor of Allāh upon you and His mercy, not one of you would have been pure, ever, but Allāh purifies whom He wills, and Allāh is Hearing and Knowing.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அசத்தியத்தை அலங்கரித்துக் காட்டும் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றுவாரோ அவர்களை, அவன் மானக்கேடான சொல், செயல் மற்றும் மார்க்கம் தடுத்த செயல்களையே செய்யுமாறு ஏவுகிறான். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் அருளும் கருணையும் உங்கள் மீது இல்லாதிருக்குமானால் உங்களில் எவரும் பாவமன்னிப்புக் கோரிக்கையின் மூலம் தூய்மையடைய முடியாது. ஆயினும் அல்லாஹ் தான் நாடியவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களைத் தூய்மைப்படுத்துகிறான். அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை நன்கறிந்தவன். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

24:22Page 352

وَلَا يَأۡتَلِ أُوْلُواْ ٱلۡفَضۡلِ مِنكُمۡ وَٱلسَّعَةِ أَن يُؤۡتُوٓاْ أُوْلِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱلۡمُهَٰجِرِينَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَلۡيَعۡفُواْ وَلۡيَصۡفَحُوٓاْۗ أَلَا تُحِبُّونَ أَن يَغۡفِرَ ٱللَّهُ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٌ ٢٢

And let not those of virtue among you and wealth swear not to give [aid] to their relatives and the needy and the emigrants for the cause of Allāh, and let them pardon and overlook. Would you not like that Allāh should forgive you? And Allāh is Forgiving and Merciful.

மார்க்கத்தில் சிறப்பினைப் பெற்றவர்களும் செல்வம் படைத்தவர்களும் தேவையுடைய அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த உறவினர்களுக்கு அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக கொடுக்காமல் இருப்பதற்கு சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் தங்களின் உறவினர்களை மன்னித்து அவர்கள் செய்த பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடட்டும். நீங்கள் அவர்களை மன்னிப்பதனால் அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டும், கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவே அவனது அடியார்களும் அவனைப் பின்பற்றி நடக்கட்டும். இந்த வசனம் அபூபக்ர் (ரலி) அவர்களின் விஷயத்தில் இறங்கியதாகும். மிஸ்தஹ் அவதூறு பரப்புவதில் பங்கெடுத்ததால் அவருக்கு இனி எதுவும் வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

24:23Page 352

إِنَّ ٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡغَٰفِلَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ لُعِنُواْ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ٢٣

Indeed, those who [falsely] accuse chaste, unaware and believing women are cursed in this world and the Hereafter; and they will have a great punishment

நிச்சயமாக பாவங்களை விட்டும் கலங்கமற்ற, கற்பொழுக்கமுள்ள நம்பிக்கைகொண்ட பெண்களின்மீது பழி சுமத்துபவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் பெரும் வேதனையும் உண்டு.

24:24Page 352

يَوۡمَ تَشۡهَدُ عَلَيۡهِمۡ أَلۡسِنَتُهُمۡ وَأَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ٢٤

On a Day when their tongues, their hands and their feet will bear witness against them as to what they used to do.

மறுமை நாளில் அந்த வேதனை அவர்களுக்குக் கிடைக்கும். அப்போது அவர்கள் கூறிய பொய்களைக்குறித்து அவர்களின் நாவுகள் அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும். அவர்களின் கைகளும் கால்களும் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து சாட்சி கூறும்.

24:25Page 352

يَوۡمَئِذٖ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلۡحَقَّ وَيَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ ٱلۡمُبِينُ ٢٥

That Day, Allāh will pay them in full their true [i.e., deserved] recompense, and they will know that it is Allāh who is the manifest Truth [i.e., perfect in justice].

அந்த நாளில் அவர்களுக்கான நியாயமான கூலியை நீதியாக அல்லாஹ் முழுமையாக வழங்கிடுவான். நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன் என்பதையும் அவர்கள் உறுதியாக அறிந்துகொள்வார்கள். அவனிடமிருந்து வெளிப்படும் அனைத்து செய்திகளும், வாக்குறுதிகளும், எச்சரிக்கைகளும் சந்தேகமற்ற தெளிவான உண்மையானவையே.

24:26Page 352

ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُوْلَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٢٦

Evil words are for evil men, and evil men are [subjected] to evil words. And good words are for good men, and good men are [an object] of good words.1 Those [good people] are declared innocent of what they [i.e., slanderers] say. For them is forgiveness and noble provision.

ஆண்கள், பெண்கள், சொல், செயல் என்பவற்றில் கெட்ட ஒவ்வொன்றும் கெட்ட ஒன்றுக்கே பொருத்தமாகும். அவற்றில் நல்லவை ஒவ்வொன்றும் நல்லவற்றிற்குப் பொருத்தமாகும். தீய ஆண்களும் பெண்களும் கூறுபவற்றை விட்டும் நல்ல ஆண்களும் பெண்களும் பரிசுத்தமானவர்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பும் சுவனம் என்னும் கண்ணியமான வெகுமதியும் அவர்களுக்கு உண்டு.

24:27Page 352

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ بُيُوتِكُمۡ حَتَّىٰ تَسۡتَأۡنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهۡلِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ٢٧

O you who have believed, do not enter houses other than your own houses until you ascertain welcome and greet1 their inhabitants. That is best for you; perhaps you will be reminded [i.e., advised].

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! உங்களின் வீடுகள் அல்லாத மற்றவர்களின் வீடுகளில் அங்கு வசிப்பவர்களின் அனுமதியின்றியும், அவர்களுக்கு சலாம் கூறாமலும் நுழையாதீர்கள். (அஸ்ஸலாமு அலைக்கும், நான் உள்ளே வரலாமா? என்ற கூறி அனுமதி கோர வேண்டும்) நீங்கள் திடீரென்று அவற்றில் நுழைவதைவிட இவ்வாறு ஏவிய பிரகாரம் அனுமதிபெற்று நுழைவதே உங்களுக்குச் சிறந்ததாகும். அதனால் உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் நினைவுகூர்ந்து அதற்குக் கட்டுப்படலாம்.

24:28Page 353

فَإِن لَّمۡ تَجِدُواْ فِيهَآ أَحَدٗا فَلَا تَدۡخُلُوهَا حَتَّىٰ يُؤۡذَنَ لَكُمۡۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرۡجِعُواْ فَٱرۡجِعُواْۖ هُوَ أَزۡكَىٰ لَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ٢٨

And if you do not find anyone therein, do not enter them until permission has been given you. And if it is said to you, "Go back,"1 then go back; it is purer for you. And Allāh is Knowing of what you do.

நீங்கள் அந்த வீடுகளில் யாரையும் பெறவில்லையெனில் வீட்டு உரிமையாளரினால் உங்களுக்கு அனுமதியளிக்கப்படும்வரை அவற்றில் நுழையாதீர்கள். வீட்டின் உரிமையாளர்கள் உங்களை ‘திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூறினால் நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள். அவற்றில் நுழைந்துவிடாதீர்கள். நிச்சயமாக அதுதான் அல்லாஹ்விடத்தில் உங்களுக்குத் தூய்மையானதாகும். நீங்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

24:29Page 353

لَّيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ مَسۡكُونَةٖ فِيهَا مَتَٰعٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ ٢٩

There is no blame upon you for entering houses not inhabited in which there is convenience1 for you. And Allāh knows what you reveal and what you conceal.

நூலகங்கள், சந்தையிலுள்ள உணவகங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள, யாருக்கும் சொந்தமில்லாத பொது இடங்களில் நீங்கள் அனுமதியின்றி நுழைவதில் குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்களையும், நிலைமைகளையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

24:30Page 353

قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ ٣٠

Tell the believing men to reduce [some] of their vision1 and guard their private parts.2 That is purer for them. Indeed, Allāh is [fully] Aware of what they do.

தூதரே!- நம்பிக்கைகொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக: “அவர்களுக்கு பார்ப்பதற்குத் தகாத அந்நியப் பெண்கள் மற்றும் மறைவிடங்களை பார்க்காமல் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தடைசெய்யப்பட்டதில் ஈடுபடாமலும், வெளிப்படாமலும் தங்களின் வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அல்லாஹ் தடுத்தவற்றைப் பார்க்காமல் தவிர்ந்திருப்பதும் மர்மஸ்தானத்தைப் பாதுகாப்பதும் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குத் தூய்மையானதாகும். நிச்சயமாக அவர்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.”

24:31Page 353

وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَاۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآئِهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآئِهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ أَخَوَٰتِهِنَّ أَوۡ نِسَآئِهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيۡرِ أُوْلِي ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٰتِ ٱلنِّسَآءِۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ٣١

And tell the believing women to reduce [some] of their vision1 and guard their private parts and not expose their adornment2 except that which [necessarily] appears thereof3 and to wrap [a portion of] their headcovers over their chests and not expose their adornment [i.e., beauty] except to their husbands, their fathers, their husbands' fathers, their sons, their husbands' sons, their brothers, their brothers' sons, their sisters' sons, their women, that which their right hands possess [i.e., slaves], or those male attendants having no physical desire,4 or children who are not yet aware of the private aspects of women. And let them not stamp their feet to make known what they conceal of their adornment. And turn to Allāh in repentance, all of you, O believers, that you might succeed.

நம்பிக்கைகொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக: “அவர்களுக்கு பார்ப்பதற்கு அனுமதியில்லாத மறைவிடங்களைப் பார்ப்பதை விட்டும் தமது பார்வைகளைத் தடுத்துக் கொள்ளட்டும். மானக்கேடான காரியங்களை விட்டு விலகி மறைவாக இருப்பதன் மூலம் தங்களின் வெட்கத்தலங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். ஆடை போன்ற மறைக்க முடியாத தானாக வெளிப்படுபவற்றைத் தவிர அந்நிய ஆண்களுக்கு முன்னால் அவர்கள் தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். தங்களின் முடி, முகம், கழுத்து ஆகிய பகுதிகளை மறைப்பதற்காக முந்தானைகளால் தங்கள் ஆடைகளின் மேல் பகுதியின் இடைவெளிகளை மூடிக்கொள்ளட்டும். தங்களின் மறைவான அலங்காரத்தை பின்வரும் நபர்களுக்கே அன்றி அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்: “கணவன்மார்கள், தந்தையர், கணவன்மார்களின் தந்தையர், தங்களின் பிள்ளைகள், கணவன்மார்களின் பிள்ளைகள், தங்களின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் பிள்ளைகள், நம்பகத்தன்மையுடைய முஸ்லிமான மற்றும் நிராகரிக்கும் பெண்கள், தங்களின் ஆண் பெண் அடிமைகள், பெண்களின் மீது நாட்டமில்லாத ஆண்கள், பெண்களின் மறைவிடங்களைப் பற்றி அறியாத குழந்தைகள். பெண்கள் தாம் மறைத்து வைத்திருக்கும் சலங்கை போன்ற அழகுகள் அறியப்பட வேண்டும் என்ற நோக்கில் தமது கால்களை தரையில் அடித்துக்கொண்டு நடக்க வேண்டாம். -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அனைவரும் உங்களால் நிகழ்ந்த பார்வை மற்றும் ஏனைய விடயங்களில் இருந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி விடுங்கள். அதனால் நீங்கள் பயப்படும் விடயத்திலிருந்து விடுதலையடைந்து எதிர்பார்த்ததை பெற்று வெற்றியடையலாம்.

24:32Page 354

وَأَنكِحُواْ ٱلۡأَيَٰمَىٰ مِنكُمۡ وَٱلصَّٰلِحِينَ مِنۡ عِبَادِكُمۡ وَإِمَآئِكُمۡۚ إِن يَكُونُواْ فُقَرَآءَ يُغۡنِهِمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ٣٢

And marry the unmarried among you and the righteous among your male slaves and female slaves. If they should be poor, Allāh will enrich them from His bounty, and Allāh is all-Encompassing and Knowing.

நம்பிக்கையாளர்களே!- மனைவியரில்லாத ஆண்களுக்கும் கணவர்கள் இல்லாத சுதந்திரமான பெண்களுக்கும் மணமுடித்து வையுங்கள். உங்கள் அடிமைகளில் நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் மணமுடித்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் அருளால் அவர்களைத் தன்னிறைவானவர்களாக்குவான். அவன் வாழ்வாதாரம் வழங்குவதில் தாராளமானவன்.ஒருவனை தன்னிறைவுள்ளவனாக்குவது அவனிடம் இருக்கும் வாழ்வாதாரத்தைக் குறைத்துவிடாது. தன் அடியார்களின் நிலமைகளைக் குறித்து நன்கறிந்தவன்.

24:33Page 354

وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ ٣٣

But let them who find not [the means for] marriage abstain [from sexual relations] until Allāh enriches them from His bounty. And those who seek a contract [for eventual emancipation] from among whom your right hands possess1 - then make a contract with them if you know there is within them goodness and give them from the wealth of Allāh which He has given you. And do not compel your slave girls to prostitution, if they desire chastity, to seek [thereby] the temporary interests of worldly life. And if someone should compel them, then indeed, Allāh is [to them], after their compulsion, Forgiving and Merciful.

வறுமையின் காரணமாக மணமுடிக்காமல் இருப்பவர்கள் அல்லாஹ் தன் விசாலமான அருளால் அவர்களைத் தன்னிறைவானவர்களாக ஆக்கும்வரை விபச்சாரத்தை விட்டுத் தவிர்ந்து பக்குவமாக இருக்கட்டும். உங்களின் அடிமைகள் பணம் கொடுத்து சுதந்திரம் பெறுவதற்காக உங்களிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அதனை நிறைவேற்றுவதற்கான ஆற்றலையும் மார்க்கப் பற்றையும் அவர்களிடம் கண்டால் அவர்களின் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் வழங்குவதாக வாக்களித்த தொகையில் ஒரு பகுதியைக் குறைப்பதன் மூலம் அல்லாஹ் உங்களுக்கு அளித்த செல்வங்களிலிருந்து நீங்கள் அவர்களுக்கு அளியுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக உங்களின் அடிமைப் பெண்களை விபச்சாரம் செய்யும்படி நிர்ப்பந்திக்காதீர்கள். -நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை, தூய்மையையும், மானக்கேடான விடயங்களை விட்டும் தூரமாகவும் விரும்பிய தன் இரு அடிமைப் பெண்களை விபச்சாரம் புரிந்து சம்பாதிக்கும்படி வேண்டினான்-. நீங்கள் அவர்களை நிர்ப்பந்தம் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்துவிடுவான். அவர்களோடு கிருபையாளனாகவும் இருக்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நிர்ப்பந்தித்தவர்களையே பாவம் சென்றடையும்.

24:34Page 354

وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖ وَمَثَلٗا مِّنَ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۡ وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ٣٤

And We have certainly sent down to you distinct verses1 and examples from those who passed on before you and an admonition for those who fear Allāh.

மனிதர்களே!- நாம் உங்களின் மீது சந்தேகமற்ற தெளிவான சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டும் வசனங்களையும் முன்சென்ற நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களின் உதாரணங்களையும் இறக்கியுள்ளோம். தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் அறிவுரை பெறுவதற்காக அறிவுரையையும் உங்கள் மீது இறக்கியுள்ளோம்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском