Al-Mukhtasar · Tafsir · in Tamil
الشعراء
Ash-Shu'ara
The Poets · Meccan · 227 ayahs
(طسٓمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
இவை அசத்தியத்திலிருந்து சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் குர்ஆனின் வசனங்களாகும்.
26:3Page 367
لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ ٣
Perhaps, [O Muḥammad], you would kill yourself with grief that they will not be believers.
தூதரே!- அவர்கள் நேர்வழியடைவதில் உள்ள உமது ஆர்வத்தின் காரணமாக கவலையினால் உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்.
26:4Page 367
إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ ٤
If We willed, We could send down to them from the sky a sign for which their necks would remain humbled.1
நாம் அவர்களின் மீது வானத்திலிருந்து ஏதேனும் சான்றினை இறக்க நாடினால் இறக்கியிருப்போம். அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். ஆயினும் அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கைகொள்கிறார்களா? என்பதை நாம் சோதிக்கும்பொருட்டு அவ்வாறு நாம் நாடவில்லை.
26:5Page 367
وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ ٥
And no mention [i.e., revelation] comes to them anew from the Most Merciful except that they turn away from it.
அளவிலாக் கருணையாளனிடமிருந்து அவன் ஒருவனே என்பதையும் தூதரின் நம்பகத்தன்மையையும் அறிவிக்கக்கூடிய ஆதாரங்களுடன் எந்தவொரு புதிய அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் கேட்காமலும் நம்பாமலும் புறக்கணிக்கவே செய்கிறார்கள்.
26:6Page 367
فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٦
For they have already denied, but there will come to them the news of that which they used to ridicule.
தங்களின் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பித்துவிட்டார்கள். எனவே அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவற்றின் தகவல்களின் உண்மைநிலை அவர்களிடம் வந்துவிடும். அவர்களின் மீது வேதனை இறங்கும்.
26:7Page 367
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ ٧
Did they not look at the earth - how much We have produced therein from every noble kind?
இவர்கள் தமது நிராகரிப்பில் இன்னும் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்களா? இவர்கள் பூமியில் எத்தனை விதமான, அழகான, பயன்தரக்கூடிய தாவரங்களின் வகைகளில் ஒவ்வொரு வகையையும் நாம் முளைக்கச் செய்துள்ளோம் என்பதைப் பார்க்கவில்லையா?
26:8Page 367
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ٨
Indeed in that is a sign, but most of them were not to be believers.
நிச்சயமாக பூமியில் பல்வேறு விதமான தாவரங்களை முளைக்கச் செய்துள்ளமை, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவனிடம் உண்டு என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.
26:9Page 367
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٩
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
தூதரே!- உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் தன் அடியார்களின் மீது மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
26:10Page 367
وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ١٠
And [mention] when your Lord called Moses, [saying], "Go to the wrongdoing people -
தூதரே!- உம் இறைவன் மூஸாவை அழைத்ததை நினைவுகூர்வீராக. அவன் அவரிடம் “அல்லாஹ்வை நிராகரித்து உம் சமூகத்தை அடிமையாக்கி அநியாயம் இழைத்த மூஸாவின் சமூகத்திடம் செல்வீராக. என்று ஏவினான்.
26:11Page 367
قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ ١١
The people of Pharaoh. Will they not fear Allāh?"
அவர்கள் ஃபிர்அவ்னின் சமூகத்தவர்களாவர். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுமாறு அவர்களிடம் மென்மையாகக் ஏவுவீராக.
26:12Page 367
قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ ١٢
He said, "My Lord, indeed I fear that they will deny me
மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் அவர்களுக்கு உன்னை பற்றி எடுத்துரைக்கும் விடயத்தை அவர்கள் பொய்ப்பிப்பார்கள் என்று நான் அஞ்சுகிறேன்.
26:13Page 367
وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ ١٣
And that my breast will tighten and my tongue will not be fluent, so send for Aaron.
அவர்கள் என்னை பொய்ப்பித்தால் என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும். என் நாவு பேசாமல் நின்றுவிடும். எனவே என் சகோதரர் ஹாரூன் எனக்கு உதவியாக இருக்கும் பொருட்டு அவரிடம் ஜிப்ரீலை அனுப்புவீராக.
26:14Page 367
وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ ١٤
And they have upon me a [claim due to] sin, so I fear that they will kill me."
நான் கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொன்றதால் எனக்கெதிரான ஒரு குற்றச்சாட்டும் அவர்களிடம் இருக்கிறது. எனவே அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.
26:15Page 367
قَالَ كـَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ ١٥
[Allāh] said, "No. Go both of you with Our signs; indeed, We are with you, listening.
அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்: “ஒருபோதும் இல்லை. அவர்கள் உம்மைக் கொல்ல மாட்டார்கள். நீரும் உம் சகோதரர் ஹாரூனும் உங்களின் நம்பகத்தன்மையை எடுத்துரைக்கக்கூடிய நம் சான்றுகளைக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக உங்கள் இருவருக்கும் உதவிசெய்து உறுதிப்படுத்துவதன் மூலம் நான் உங்களுடன் இருக்கின்றேன். நீங்கள் கூறுவதையும் உங்களிடம் கூறப்படுவதையும் செவியேற்றுக் கொண்டிருப்பேன். அவற்றில் எதுவும் நம்மைவிட்டுத் தப்பிவிட முடியாது.
26:16Page 367
فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٦
Go to Pharaoh and say, 'We are the messengers1 of the Lord of the worlds,
இருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, அவனிடம், “நிச்சயமாக நாங்கள் படைப்புகள் அனைத்தையும் படைத்த இறைவனிடமிருந்து உம் பக்கம் அனுப்பப்பட்டுள்ள தூதர்களாவோம்.” என்று கூறுங்கள்.
26:17Page 367
أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٧
[Commanded to say], "Send with us the Children of Israel."'"
இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடும்.
26:18Page 367
قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ ١٨
[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life?
ஃபிர்அவ்ன் மூஸாவிடம் கூறினான்: “நீ சிறுவனாக இருந்தபோது நாங்கள் உன்னை வளர்க்கவில்லையா? உன் வாழ்நாளில் பல வருடங்களை நீ எங்களிடையே கழித்துள்ளாய். எது உன்னைத் தூதர் என்று வாதாடத் தூண்டியது?
26:19Page 367
وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ١٩
And [then] you did your deed which you did,1 and you were of the ungrateful."
உன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு உதவிசெய்யும்பொருட்டு கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவனைக்கொன்று பெரும் ஒரு விபரீதத்தை செய்தாய். நான் உனக்குச் செய்த உபகாரங்களுக்கு நன்றிகெட்டவனாக உள்ளாய்.
26:20Page 368
قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ ٢٠
[Moses] said, "I did it, then, while I was of those astray [i.e., ignorant].
மூஸா ஃபிர்அவ்னிடம் ஒத்துக்கொண்டவராக கூறினார்: “எனக்கு வஹி வருதற்கு முன்னால், அறியாதவனாக இருந்தபோது நான் அந்த மனிதனைக் கொன்றுவிட்டேன்.
26:21Page 368
فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ ٢١
So I fled from you when I feared you. Then my Lord granted me judgement [i.e., wisdom and prophethood] and appointed me [as one] of the messengers.
நான் அவரை கொன்றதன் பின், நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள் என்று நான் அஞ்சியதனால் உங்களிடமிருந்து தப்பி மத்யன் என்ற ஊரின் பக்கம் ஒடிவிட்டேன். என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி மக்களிடம் அவன் அனுப்பும் தூதர்களில் ஒருவராக என்னையும் ஆக்கினான்.
26:22Page 368
وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٢٢
And is this a favor of which you remind me - that you have enslaved the Children of Israel?"
நீ இஸ்ராயீலின் மக்களை அடிமையாக்கிவிட்டு என்னை அடிமையாக்காமல் நீ வளர்த்தது உண்மையிலேயே நீ எனக்குச் செய்த அருள்தான். ஆனாலும் உனக்கு பிரச்சாரம் செய்வதற்கு அது எனக்குத் தடையல்ல.
26:23Page 368
قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٣
Said Pharaoh, "And what is the Lord of the worlds?"
ஃபிர்அவ்ன் மூஸாவிடம் கேட்டான்: “ நிச்சயமாக உம்மைத் தூதராக அனுப்பியதாக நீர் எண்ணும், படைப்புகள் அனைத்திற்குமான அந்த இறைவன் யார்?”
26:24Page 368
قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٢٤
[Moses] said, "The Lord of the heavens and earth and that between them, if you should be convinced."
மூஸா பிர்அவ்னுக்கு பதிலாகக் கூறினார்: “வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் படைத்து, அனைத்து படைப்புகளையும் படைத்த இறைவனாவான். நிச்சயமாக அவன்தான் அவற்றின் இறைவன் என நீங்கள் உறுதியாக நம்பிக்கைகொள்பவர்களாக இருந்தால் அவனையே வணங்குங்கள்.”
26:25Page 368
قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ٢٥
[Pharaoh] said to those around him, "Do you not hear?"
ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றியிருந்த தன் சமூகத்துத் தலைவர்களிடம் கூறினான்: “நீங்கள் மூஸாவின் பதிலையும் அதிலுள்ள பொய்யான வாதத்தையும் கேட்கமாட்டீர்களா?”
26:26Page 368
قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ٢٦
[Moses] said, "Your Lord and the Lord of your first forefathers."
மூஸா அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்தான் உங்களின் இறைவனும் முன்சென்ற உங்கள் முன்னோர்களின் இறைவனும் ஆவான்.”
26:27Page 368
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ٢٧
[Pharaoh] said,1 "Indeed, your 'messenger' who has been sent to you is mad."
ஃபிர்அவ்ன் கூறினான்: “நிச்சயமாக தன்னை உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர் என்று எண்ணிக் கொள்ளும் இவர் எப்படி பதிலளிப்பது என்று தெரியாத, புரியாததைக் கூறும் பைத்தியக்காரர் ஆவார்.”
26:28Page 368
قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ٢٨
[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason."
மூஸா கூறினார்: “நீங்கள் புரிந்துகொள்வோராக இருந்தால் நான் உங்களை எந்த இறைவனின்பால் அழைக்கின்றேனோ அவன் கிழக்கு, மேற்கு மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் இறைவனாவான்.”
26:29Page 368
قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ٢٩
[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned."
ஃபிர்அவ்னால் வாதம் செய்ய முடியாமல் போனபோது அவன் மூஸாவிடம் கூறினான்: “என்னைத் தவிர வேறு இறைவனை நீ வணங்கினால் உன்னை சிறையிலடைத்து விடுவேன்.”
26:30Page 368
قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ ٣٠
[Moses] said, "Even if I brought you something [i.e., proof] manifest?"
மூஸா பிர்அவ்னிடம் கூறினார்: “அல்லாஹ்விடமிருந்து உன்னிடம் கொண்டுவந்தவற்றில் நான் உண்மையாளனே என்பதை தெளிவாக்கக்கூடிய ஆதாரத்தை உன்னிடம் கொண்டுவந்தாலும் நீ என்னை சிறையில் அடைப்பாயா?”
26:31Page 368
قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٣١
[Pharaoh] said, "Then bring it, if you should be of the truthful."
அவன் கூறினான்: “உமது வாதத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் உமது நம்பகத் தன்மைக்குரிய ஆதாரம் என நீர் கூறுவதைக் கொண்டு வாரும்.”
26:32Page 368
فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ٣٢
So [Moses] threw his staff, and suddenly it was a serpent manifest.1
மூஸா தம் கைத்தடியை தரையில் எறிந்தார். அது பார்ப்பவர்களுக்குத் தெளிவான பாம்பாகிவிட்டது.
26:33Page 368
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ٣٣
And he drew out his hand; thereupon it was white for the observers.
தம் கையை சட்டைப்பையில் நுழைத்தார். அதனை வெளியே எடுத்தபோது அது பார்ப்பவர்களுக்கு பிரகாசிக்கும் வெண்குஷ்டமற்ற வெண்மையாக வெளிப்பட்டது.
26:34Page 368
قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ٣٤
[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician.
ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றியிருந்த தன் சமூகத்தின் தலைவர்களிடம் கூறினான்: “நிச்சயமாக இந்த மனிதர் கைதேர்ந்த சூனியக்காரராக இருக்கின்றார்.
26:35Page 368
يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ ٣٥
He wants to drive you out of your land by his magic, so what do you advise?"
தன் சூனியத்தின் மூலம் உங்களை உங்களின் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகிறார். நாம் அவரை என்ன செய்யலாம்? இது குறித்து உங்களில் ஆலோசனை என்ன?
26:36Page 368
قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ٣٦
They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers
அவனிடம் கூறினார்கள்: “அவருக்கும் அவரது சகோதரருக்கும் அவகாசம் அளியுங்கள். அவர்கள் இருவரையும் அவசரப்பட்டு தண்டித்து விடாதீர்கள். எகிப்தின் நகரங்களில் சூனியக்காரர்களை ஒன்றுதிரட்டக்கூடியவர்களை அனுப்புங்கள்.
26:37Page 368
يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ ٣٧
Who will bring you every learned, skilled magician."
அவர்கள் உங்களிடம் கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் கொண்டுவருவார்கள்.
26:38Page 368
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ٣٨
So the magicians were assembled for the appointment of a well-known day.1
ஃபிர்அவ்ன் மூஸாவுடன் போட்டியிடுவதற்காக சூனியக்காரர்களை குறித்த நேரத்தில், இடத்தில் ஒன்றுதிரட்டினான்.
26:39Page 368
وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ٣٩
And it was said to the people, "Will you congregate
மக்களிடம் கூறப்பட்டது: “மூஸா வெல்லப்போகிறாரா? அல்லது சூனியக்காரர்கள் வெல்வார்களா? என்பதைப் பார்க்க நீங்கள் ஒன்றுகூடுவீர்களா?
26:40Page 369
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ٤٠
That we might follow the magicians if they are the predominant?"
சூனியக்காரர்கள் மூஸாவை வென்றுவிட்டால் நாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றலாம்.
26:41Page 369
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ٤١
And when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?"
மூஸாவுடன் போட்டிபோட சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தபோது அவனிடம் கேட்டார்கள்: “நாங்கள் மூஸாவை வென்றுவிட்டால் எங்களுக்கு பொருளோ, பதவியோ கூலியாகக் கிடைக்குமா?”
26:42Page 369
قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ ٤٢
He said, "Yes, and indeed, you will then be of those near [to me]."
ஃபிர்அவ்ன் கூறினான்: “ஆம். உங்களுக்குக் கூலி உண்டு. நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறும் சமயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்று எனக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிடுவீர்கள்.”
26:43Page 369
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ٤٣
Moses said to them, "Throw whatever you will throw."
மூஸா அல்லாஹ்வின் வெற்றியின் மீது உறுதியான நம்பிக்கைகொண்டவராக, நிச்சயமாக தன்னிடம் உள்ளது சூனியம் அல்ல என்பதை தெளிவுபடுத்தியவராக அவர்களிடம் கூறினார்: “நீங்கள் போடக்கூடிய கயிறுகளையும் கைத்தடிகளையும் போடுங்கள்.”
26:44Page 369
فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ ٤٤
So they threw their ropes and their staffs and said, "By the might of Pharaoh, indeed it is we who are predominant."
அவர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டார்கள். போடும்போது, “ஃபிர்அவ்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக, நாங்கள்தாம் வெற்றிபெறுவோம். மூஸா தோற்பவரே” எனக் கூறினார்கள்.
26:45Page 369
فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ٤٥
Then Moses threw his staff, and at once it devoured what they falsified.
மூஸா தம் கைத்தடியைப் போட்டார். அது பாம்பாக மாறி அவர்கள் சூனியத்தினால் மக்களை மயக்குவதற்கு உருவாக்கியிருந்தவற்றை விழுங்கிவிட்டது.
26:46Page 369
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ٤٦
So the magicians fell down in prostration [to Allāh].
மூஸாவின் கைத்தடி அவர்கள் தமது சூனியத்தின் மூலம் உருவாக்கிய அனைத்தையும் விழுங்கியதைக் கண்ட சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக விழுந்தார்கள்.
26:47Page 369
قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٧
They said, "We have believed in the Lord of the worlds,
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டோம்.
அவன் தான் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாவான்.”
26:49Page 369
قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ٤٩
[Pharaoh] said, "You believed him [i.e., Moses] before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic, but you are going to know. I will surely cut off your hands and your feet on opposite sides, and I will surely crucify you all."
ஃபிர்அவ்ன் சூனியக்காரர்கள் நம்பிக்கை கொண்டதை மறுத்தவனாக கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவை ஏற்றுக் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த குரு. நீங்கள் அனைவரும் எகிப்தியர்களை வெளியேற்றுவதற்காக இரகசியமாகத் திட்டம் தீட்டியுள்ளீர்கள். உங்களுக்கு நான் அளிக்கும் தண்டனையை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரின் மாறுகை, மாறுகாலை (இடது கையுடன் வலது காலையும் அல்லது வலது கையுடன் இடது காலையும்) வெட்டிவிடுவேன். பேரீச்சந்தண்டுகளில் உங்கள் அனைவரையும் கட்டிவிடுவேன். உங்களில் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.
26:50Page 369
قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ٥٠
They said, "No harm. Indeed, to our Lord we will return.
சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: “உலகிலே வெட்டித் தொங்கவிடுவேன் என்ற உம்முடைய மிரட்டலால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. உமது தண்டனை நீங்கிவிடும். நாங்கள் எங்கள் இறைவனின்பால் செல்லக்கூடியவர்கள். அவன் விரைவில் எங்களை நிலையான தன் அருளில் பிரவேசிக்கச் செய்திடுவான்.
26:51Page 369
إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ ٥١
Indeed, we aspire that our Lord will forgive us our sins because we were the first of the believers."
நிச்சயமாக நாங்கள் மூஸாவின் மீது முதலில் நம்பிக்கைகொண்டவர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் செய்த முந்தைய பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுவான் என்றே நாங்கள் ஆதரவு வைக்கிறோம்.
26:52Page 369
۞ وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ ٥٢
And We inspired to Moses, "Travel by night with My servants; indeed, you will be pursued."
இஸ்ராயீலின் மக்களை இரவோடு இரவாக அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம். ஏனெனில் நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனைச் சார்ந்தவர்களும் அவர்களைத் தடுக்க பின்தொடர்ந்து வருவார்கள்.
26:53Page 369
فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ٥٣
Then Pharaoh sent among the cities gatherers1
இஸ்ராயீலின் மக்கள் எகிப்தைவிட்டுச் செல்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் அவர்களை தடுக்க ஃபிர்அவ்ன் தன் படையினரில் சிலரை படையை திரட்டுமாறு நகரங்களில் அனுப்பிவைத்தான் .
26:54Page 369
إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ ٥٤
[And said], "Indeed, those are but a small band,
இஸ்ராயீலின் மக்களை குறைத்து மதிப்பிட்டவனாக ஃபிர்அவ்ன் கூறினான்: “நிச்சயமாக இவர்கள் சிறிய கூட்டம்தான்.
நிச்சயமாக அவர்கள் மீது நம்மைக் கோபம் கொள்ள வைத்து விட்டார்கள்.
நிச்சயமாக நாங்கள் அவர்களுக்காக தயார்நிலையிலும் விழித்துக்கொண்டும் இருக்கின்றோம்.
எகிப்திலிருந்து ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் வெளியேற்றினோம். அந்த நாடு செழிப்பான தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் கொண்டிருந்தது.
பண கருவூலங்களையும் அழகிய வசிப்பிடங்களையும் பெற்றிருந்தது.
26:59Page 369
كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٥٩
Thus. And We caused to inherit it the Children of Israel.
ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் இந்த அருள்களிலிருந்து வெளியேற்றியது போன்றே அவர்களுக்குப் பின் இந்த வகையான அருட்கொடைகளை இஸ்ராயீலின் மக்களுக்கு நாம் ஷாம் தேசத்தில் நாம் வழங்கினோம்.
ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் இஸ்ராயீலின் மக்களை சூரியன் உதிக்கும் சமயத்தில் பின்தொடர்ந்து சென்றார்கள்.
26:61Page 370
فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ ٦١
And when the two companies saw one another, the companions of Moses said, "Indeed, we are to be overtaken!"
இரு கூட்டத்தாரும் - ஃபிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் மூஸாவும் அவரது கூட்டத்தாரும் - நேருக்குநேர் எதிர்கொண்டபோது மூஸாவின் தோழர்கள் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் நம்மைப் பிடித்துவிடுவார்கள். நமக்கு அவர்களுடன் மோதும் பலம் இல்லை.”
26:62Page 370
قَالَ كـَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ ٦٢
[Moses] said, "No! Indeed, with me is my Lord; He will guide me."
மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக ஆதரவளித்து உதவி செய்ய என் இறைவன் என்னுடன் இருக்கின்றான். அவன் எனக்கு தப்புவதற்கான பாதையைக் காட்டுவான்.”
26:63Page 370
فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ ٦٣
Then We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain.
தம் கைத்தடியால் கடலை அடிக்குமாறு கட்டளையிட்டு நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம். அவர் அவ்வாறு அடித்தார். கடல் பிளந்து இஸ்ராயீலின் மக்களின் பன்னிரண்டு குலங்களுக்கேற்ப பன்னிரண்டு பாதைகளாக மாறியது. கடலில் இருந்து பிளந்த ஒவ்வொரு பிளவும் தண்ணீர் புகாதவாறு உறுதியான பிரமாண்டமான பெரும் மலைகளை போன்று இருந்தது.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences