Al-MukhtasarMaryam · 19:1–49

Al-Mukhtasar · Tafsir · in Tamil

مريم

Maryam

Mary · Meccan · 98 ayahs

19:1Page 305

كٓهيعٓصٓ ١

Kāf, Hā, Yā, ʿAyn, Ṣād.1

(كٓهيعٓصٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

19:2Page 305

ذِكۡرُ رَحۡمَتِ رَبِّكَ عَبۡدَهُۥ زَكَرِيَّآ ٢

[This is] a mention of the mercy of your Lord to His servant Zechariah

இது உம் இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவின் மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும். அதன் மூலம் படிப்பினை பெறுவதற்காக உமக்கு நாம் அதனை எடுத்துரைக்கின்றோம்.

19:3Page 305

إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيّٗا ٣

When he called to his Lord a private call [i.e., supplication].

அவன் தம் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்பொருட்டு தம் இறைவனை ரகசியமான முறையில் அழைத்த போது,

19:4Page 305

قَالَ رَبِّ إِنِّي وَهَنَ ٱلۡعَظۡمُ مِنِّي وَٱشۡتَعَلَ ٱلرَّأۡسُ شَيۡبٗا وَلَمۡ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيّٗا ٤

He said, "My Lord, indeed my bones have weakened, and my head has filled1 with white, and never have I been in my supplication to You, my Lord, unhappy [i.e., disappointed].

அவர் கூறினார்: “என் இறைவா! என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. என் தலையில் நரை முடியும் அதிகமாகி விட்டது. உன்னிடம் பிரார்த்தனை செய்து நான் ஏமாற்றம் அடைந்ததில்லை. மாறாக நான் பிரார்த்தனை செய்த போதெல்லாம் நீ எனக்குப் பதிலளித்துள்ளாய்.

19:5Page 305

وَإِنِّي خِفۡتُ ٱلۡمَوَٰلِيَ مِن وَرَآءِي وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا فَهَبۡ لِي مِن لَّدُنكَ وَلِيّٗا ٥

And indeed, I fear the successors1 after me, and my wife has been barren, so give me from Yourself an heir

நான் மரணித்த பிறகு என் உறவினர்கள் அவர்கள் உலக இன்பங்களில் மூழ்கியிருப்பதால் மார்க்கத்தின் கடமைகளை சரிவர நிறைவேற்ற மாட்டார்கள் என்று நான் அஞ்சுகிறேன். எனது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாக இருக்கிறாள். உன் புறத்திலிருந்து உதவிசெய்யும் பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.

19:6Page 305

يَرِثُنِي وَيَرِثُ مِنۡ ءَالِ يَعۡقُوبَۖ وَٱجۡعَلۡهُ رَبِّ رَضِيّٗا ٦

Who will inherit me1 and inherit from the family of Jacob. And make him, my Lord, pleasing [to You]."

அவர் என்னிடமிருந்தும் யஅகூபின் குடும்பத்தினரிடம் இருந்தும் தூதுத்துவத்தை அனந்தரமாகப் பெறுவார். என் -இறைவா!- அவரை மார்க்கத்திலும், குணத்திலும், கல்வியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக ஆக்குவாயாக.

19:7Page 305

يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسۡمُهُۥ يَحۡيَىٰ لَمۡ نَجۡعَل لَّهُۥ مِن قَبۡلُ سَمِيّٗا ٧

[He was told],1 "O Zechariah, indeed We give you good tidings of a boy whose name will be John. We have not assigned to any before [this] name."

அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். “ஸகரிய்யாவே! நாம் உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். உமது பிரார்த்தனைக்கு நாம் விடையளித்து விட்டோம். யஹ்யா என்னும் பெயருடைய ஆண் பிள்ளையை நாம் உமக்கு வழங்குகிறோம். நாம் இதற்கு முன்னர் வேறு யாருக்கும் இந்தப் பெயரை வைத்ததில்லை” என்று அவன் அவரை அழைத்துக் கூறினான்.

19:8Page 305

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا وَقَدۡ بَلَغۡتُ مِنَ ٱلۡكِبَرِ عِتِيّٗا ٨

He said, "My Lord, how will I have a boy when my wife has been barren and I have reached extreme old age?"

அவர் அல்லாஹ்வின் வல்லமையை குறித்து வியந்தவராகக் கூறினார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? எனது மனைவியோ பிள்ளை பெற முடியாத மலடியாக இருக்கிறாள். நானோ எலும்புகள் பலவீனமடைந்து வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்துவிட்டேனே!”

19:9Page 305

قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٞ وَقَدۡ خَلَقۡتُكَ مِن قَبۡلُ وَلَمۡ تَكُ شَيۡـٔٗا ٩

[An angel] said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, for I created you before, while you were nothing.'"

வானவர் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறுதான். உமது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாகத்தான் இருக்கிறார். நிச்சயமாக நீரோ வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்து எலும்புகளும் பலவீனமடைந்து விட்டன. ஆயினும் உம் இறைவன் கூறினான்: மலடியான தாயிடமிருந்தும், வாழ்வின் இறுதியை அடைந்துவிட்ட தந்தையைக் கொண்டும் யஹ்யாவை உமது இறைவன் படைப்பது எளிதானது. -ஸகரிய்யாவே!- இதற்கு முன்னர் குறிப்பிடத்தக்க ஒன்றுமே இல்லாமல் இருந்த உம்மை நான் படைக்கவில்லையா?”

19:10Page 305

قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٖ سَوِيّٗا ١٠

[Zechariah] said, "My Lord, make for me a sign." He said, "Your sign is that you will not speak to the people for three nights, [being] sound."1

ஸகரிய்யா கூறினார்: “என் இறைவா! வானவர்கள் கூறிய நற்செய்தியைக் குறித்து அமைதி பெற்று அதனை அறிவிக்கக்கூடிய அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக.” அவன் கூறினான்: “உமக்கு அளிக்கப்பட்ட நற்செய்தி நிகழும் என்பதற்கான அடையாளம், எந்த நோயும் இன்றி மூன்று நாட்கள் வரை உம்மால் மக்களுடன் பேச முடியாதிருப்பதாகும். ஆனால் எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவராகவே இருப்பீர்.

19:11Page 305

فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ مِنَ ٱلۡمِحۡرَابِ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ أَن سَبِّحُواْ بُكۡرَةٗ وَعَشِيّٗا ١١

So he came out to his people from the prayer chamber and signaled to them to exalt [Allāh] in the morning and afternoon.

ஸகரிய்யா தம் தொழுமிடத்திலிருந்து தம் மக்களிடம் வந்தார். பேசாமல் அவர்களிடம் சைகை மூலம் கூறினார்: “காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதிபாடுங்கள்.”

19:12Page 306

يَٰيَحۡيَىٰ خُذِ ٱلۡكِتَٰبَ بِقُوَّةٖۖ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحُكۡمَ صَبِيّٗا ١٢

[Allāh said], "O John, take the Scripture [i.e., adhere to it] with determination." And We gave him judgement [while yet] a boy

அவருக்கு யஹ்யா பிறந்தார். யஹ்யா உரையாடும் வயதை அடைந்த போது நாம் அவரிடம் கூறினோம்: “யஹ்யாவே! தவ்ராத்தை உறுதியுடன் பற்றிக் கொள்வீராக.” அவர் சிறுவராக இருந்த போதே நாம் அவருக்குப் புரிதலையும், கல்வியையும், உறுதியையும் வழங்கினோம்.”

19:13Page 306

وَحَنَانٗا مِّن لَّدُنَّا وَزَكَوٰةٗۖ وَكَانَ تَقِيّٗا ١٣

And affection from Us and purity, and he was fearing of Allāh

நாம் நம் புறத்திலிருந்து அவருக்கு அருளை வழங்கினோம். பாவங்களிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தினோம். அவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவராக இருந்தார்.

19:14Page 306

وَبَرَّۢا بِوَٰلِدَيۡهِ وَلَمۡ يَكُن جَبَّارًا عَصِيّٗا ١٤

And dutiful to his parents, and he was not a disobedient tyrant.

அவர் தம் தாய், தந்தையருக்கு உபகாரம் செய்யக்கூடியவராகவும், மிருதுவாக, அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளக்கூடியவராகவும் இருந்தார். அவர் தம் இறைவனுக்கும், அவ்விருவருக்கும் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளக்கூடியவராக இருக்கவில்லை. இறைவனின் கட்டளைக்கோ, தாய், தந்தையரின் கட்டளைக்கோ மாறாகச் செயல்படக்கூடியவராகவும் இருக்கவில்லை.

19:15Page 306

وَسَلَٰمٌ عَلَيۡهِ يَوۡمَ وُلِدَ وَيَوۡمَ يَمُوتُ وَيَوۡمَ يُبۡعَثُ حَيّٗا ١٥

And peace be upon him the day he was born and the day he dies and the day he is raised alive.

அவர் பிறந்த நாளிலும், மரணித்து வாழ்விலிருந்து வெளியேறும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளிலும் அல்லாஹ்விடமிருந்து சாந்தியும், பாதுகாப்பும் அவருக்கு உண்டாகட்டும். இந்த மூன்று இடங்களும் மனிதன் மிகவும் அஞ்சக்கூடிய இடங்களாகும். இவற்றில் அவன் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் ஏனைய இடங்களில் எந்த அச்சமும் கொள்ளவேண்டியதில்லை.

19:16Page 306

وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مَرۡيَمَ إِذِ ٱنتَبَذَتۡ مِنۡ أَهۡلِهَا مَكَانٗا شَرۡقِيّٗا ١٦

And mention, [O Muḥammad], in the Book [the story of] Mary, when she withdrew from her family to a place toward the east.

தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மர்யமைக் குறித்து நினைவு கூர்வீராக. அவர் தம் குடும்பத்தாரை விட்டு தனித்து தூரமாகி கிழக்குத் திசையிலுள்ள ஓரிடத்திற்குச் சென்று விட்டார்.

19:17Page 306

فَٱتَّخَذَتۡ مِن دُونِهِمۡ حِجَابٗا فَأَرۡسَلۡنَآ إِلَيۡهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرٗا سَوِيّٗا ١٧

And she took, in seclusion from them, a screen. Then We sent to her Our Angel [i.e., Gabriel], and he represented himself to her as a well-proportioned man.

தான் இறைவனை வணங்கும் போது தன் சமூகத்தார் யாரும் தன்னைப் பார்க்காதவண்ணம் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். நாம் அவரிடம் ஜிப்ரீலை அனுப்பினோம். அவர் குறைகளற்ற மனித உருவில் மர்யமுக்கு முன்னால் தோன்றினார். தம்முடன் நிச்சயமாக அவர் தீய விஷயத்தை நாடுகிறார் என்று எண்ணிப் மர்யம் பயந்துவிட்டார்.

19:18Page 306

قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا ١٨

She said, "Indeed, I seek refuge in the Most Merciful from you, [so leave me], if you should be fearing of Allāh."

மர்யம் அவரை குறைகளற்ற மனித உருவில் தன்னை நெருங்கி வருவதைக் கண்டபோது கூறினார்: “-எ மனிதா!- நீ அல்லாஹ்வை பயந்து அஞ்சக் கூடியவராக இருந்தால் நான் உம்மால் ஏற்படும் தீங்கினை விட்டு அளவிலாக் கருணையாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”

19:19Page 306

قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَٰمٗا زَكِيّٗا ١٩

He said, "I am only the messenger of your Lord to give you [news of] a pure boy [i.e., son]."

ஜிப்ரீல் கூறினார்: “நான் மனிதர் அல்ல. உம் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். உமக்கு தூய்மையான குழந்தையை நன்கொடையாக வழங்குவதற்காக அவன் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான்.”

19:20Page 306

قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا ٢٠

She said, "How can I have a boy while no man has touched me and I have not been unchaste?"

மர்யம் ஆச்சரியமாகக் கேட்டார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? கணவரோ, மற்றவர்களோ என்னை நெருங்கியதில்லையே! பிள்ளை உண்டாவதற்கு நான் விபச்சாரியும் அல்லவே!?

19:21Page 306

قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٞۖ وَلِنَجۡعَلَهُۥٓ ءَايَةٗ لِّلنَّاسِ وَرَحۡمَةٗ مِّنَّاۚ وَكَانَ أَمۡرٗا مَّقۡضِيّٗا ٢١

He said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, and We will make him a sign to the people and a mercy from Us. And it is a matter [already] decreed.'"

ஜிப்ரீல் அவரிடம் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறு, கணவரோ மற்றவர்களோ உம்மைத் தீண்டியதுமில்லை. விபச்சாரியாகவும் இருக்கவில்லை. ஆனால் உம் இறைவன் கூறுகிறான், தந்தையின்றி ஒரு குழந்தையை பிறக்கவைப்பது எனக்கு மிகவும் எளிதானது. நாம் அதனை மக்களுக்கு நம் வல்லமையை அறிவிக்கும் சான்றாகவும் உமக்கும் அவரை நம்பியோருக்கும் நமது அருளாகவும் இருப்பதற்காக அவ்வாறு செய்கிறோம். இவ்வாறு உம் குழந்தையைப் படைப்பது லவ்ஹுல் மஹ்ஃபூல் ஏட்டில் எழுதப்பட்ட, அல்லாஹ்வின் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும்.

19:22Page 306

۞ فَحَمَلَتۡهُ فَٱنتَبَذَتۡ بِهِۦ مَكَانٗا قَصِيّٗا ٢٢

So she conceived him, and she withdrew with him to a remote place.

வானவர் ஊதிய பிறகு அவள் கர்ப்பமுற்றாள். அதனை எடுத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமான இடத்திற்குச் சென்றுவிட்டாள்.

19:23Page 306

فَأَجَآءَهَا ٱلۡمَخَاضُ إِلَىٰ جِذۡعِ ٱلنَّخۡلَةِ قَالَتۡ يَٰلَيۡتَنِي مِتُّ قَبۡلَ هَٰذَا وَكُنتُ نَسۡيٗا مَّنسِيّٗا ٢٣

And the pains of childbirth drove her to the trunk of a palm tree. She said, "Oh, I wish I had died before this and was in oblivion, forgotten."

பிரசவ வேதனை அவரை பேரீச்சை மரத்தின் தண்டின்பால் கொண்டு சென்றது. மர்யம் கூறினாள்: “நான் இந்த நாளுக்கு முன்னரே இறந்து போயிருக்க வேண்டுமே! மக்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணாமல் இருக்க நான் நினைவுகூரப்படாத ஒரு பொருளாக, இருந்திருக்க வேண்டுமே!

19:24Page 306

فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا ٢٤

But he1 called her from below her, "Do not grieve; your Lord has provided beneath you a stream.

மர்யமின் பாதங்களுக்குக் கீழ்ப்புறமிருந்து மர்யமை ஈஸா அழைத்துக் கூறினார்: “கவலைப்படாதீர். அல்லாஹ் உமக்குக் கீழே ஒரு நீரோடையை ஏற்படுத்தியுள்ளான். அதிலிருந்து நீர் பருகலாம்”

19:25Page 306

وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا ٢٥

And shake toward you the trunk of the palm tree; it will drop upon you ripe, fresh dates.

பேரீச்சை தண்டுப் பகுதியைப் பிடித்து அசைப்பீராக. அது கனிந்த புதிய பேரீச்சைகளை உம் பக்கம் உதிர்க்கும்.

19:26Page 307

فَكُلِي وَٱشۡرَبِي وَقَرِّي عَيۡنٗاۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلۡبَشَرِ أَحَدٗا فَقُولِيٓ إِنِّي نَذَرۡتُ لِلرَّحۡمَٰنِ صَوۡمٗا فَلَنۡ أُكَلِّمَ ٱلۡيَوۡمَ إِنسِيّٗا ٢٦

So eat and drink and be contented. And if you see from among humanity anyone, say, 'Indeed, I have vowed to the Most Merciful abstention, so I will not speak today to [any] man.'"

பேரீச்சம் பழங்களை உண்டு நீரை அருந்துவீராக. உமது குழந்தையைக் கொண்டு மகிழ்ச்சியடைவீராக. கவலைப்படாதீர். மக்களில் யாரையேனும் சந்திக்க நேரிட்டு குழந்தையைக் குறித்து உம்மிடம் கேட்டால், “நான் என் இறைவனுக்காக பேசாமல் மௌன விரதம் மேற்கொண்டுள்ளேன். இன்று நான் மக்களில் யாருடனும் பேச மாட்டேன்” என்று கூறுவீராக.

19:27Page 307

فَأَتَتۡ بِهِۦ قَوۡمَهَا تَحۡمِلُهُۥۖ قَالُواْ يَٰمَرۡيَمُ لَقَدۡ جِئۡتِ شَيۡـٔٗا فَرِيّٗا ٢٧

Then she brought him to her people, carrying him. They said, "O Mary, you have certainly done a thing unprecedented.

மர்யம் தம் மகனை சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவருடைய சமூகத்தார் அவரிடம் வெறுப்போடு கூறினார்கள்: “மர்யமே! நீ பெரும் பாவமான காரியத்தைச் செய்து விட்டாயே! தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துவிட்டாயே!”

19:28Page 307

يَٰٓأُخۡتَ هَٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءٖ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِيّٗا ٢٨

O sister [i.e., descendant] of Aaron, your father was not a man of evil, nor was your mother unchaste."

வணக்க வழிபாட்டில் ஹாரூனைப் போன்றவளே! (அவர் நல்ல மனிதர்) உன் தந்தையும், தாயும் விபச்சாரம் செய்வோராக இருக்கவில்லை! நீ தூய்மையான நற்பெயருள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணாயிற்றே! எவ்வாறு தந்தையின்றி ஒரு குழந்தையைக் கொண்டு வந்துள்ளாய்?

19:29Page 307

فَأَشَارَتۡ إِلَيۡهِۖ قَالُواْ كَيۡفَ نُكَلِّمُ مَن كَانَ فِي ٱلۡمَهۡدِ صَبِيّٗا ٢٩

So she pointed to him. They said, "How can we speak to one who is in the cradle a child?"

அவர் தொட்டிலில் இருந்த தம் மகன் ஈஸாவின்பால் சுட்டிக் காட்டினார். அதற்கு அவர்கள் ஆச்சரியமாகக் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் நாங்கள் எவ்வாறு பேசுவது?”

19:30Page 307

قَالَ إِنِّي عَبۡدُ ٱللَّهِ ءَاتَىٰنِيَ ٱلۡكِتَٰبَ وَجَعَلَنِي نَبِيّٗا ٣٠

[Jesus] said, "Indeed, I am the servant of Allāh. He has given me the Scripture and made me a prophet.

அப்போது ஈஸா கூறினார்: நிச்சயமாக “நான் அல்லாஹ்வின் அடியாராவேன். அவன் எனக்கு இன்ஜீலை வழங்கி என்னை அவனின் நபிமார்களில் ஒருவராகவும் ஆக்கியுள்ளான்.

19:31Page 307

وَجَعَلَنِي مُبَارَكًا أَيۡنَ مَا كُنتُ وَأَوۡصَٰنِي بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمۡتُ حَيّٗا ٣١

And He has made me blessed wherever I am and has enjoined upon me prayer and zakāh as long as I remain alive

நான் எங்கிருந்தாலும் என்னை அடியார்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியவராக ஆக்கியுள்ளான். என் வாழ்நாள் முழுவதும் தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.

19:32Page 307

وَبَرَّۢا بِوَٰلِدَتِي وَلَمۡ يَجۡعَلۡنِي جَبَّارٗا شَقِيّٗا ٣٢

And [made me] dutiful to my mother, and He has not made me a wretched tyrant.

என் தாய்க்கு நன்மை செய்யக்கூடியவனாக என்னை ஆக்கியுள்ளான். என் இறைவனுக்குக் கட்டுப்படாத கர்வம் கொண்டவனாக, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவனாக அவன் என்னை ஆக்கவில்லை.

19:33Page 307

وَٱلسَّلَٰمُ عَلَيَّ يَوۡمَ وُلِدتُّ وَيَوۡمَ أَمُوتُ وَيَوۡمَ أُبۡعَثُ حَيّٗا ٣٣

And peace is on me the day I was born and the day I will die and the day I am raised alive."

நான் பிறந்த நாளிலும் மரணிக்கும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமைநாளிலும் ஷைத்தானைவிட்டும் அவனுடைய உதவியாளர்களைவிட்டும் என் இறைவன் என்னைப் பாதுகாத்துள்ளான். இந்த மூன்று கடினமான சூழ்நிலைகளிலும் ஷைத்தான் என்னைத் தீண்டவில்லை.”

19:34Page 307

ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ ٣٤

That is Jesus, the son of Mary - the word of truth about which they are in dispute.

இந்தப் பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்தான் மர்யமின் மகன் ஈஸா ஆவார். இதுதான் அவருடைய விஷயத்தில் உண்மையான தகவலாகும். அவருடைய விஷயத்தில் சந்தேகம் கொண்டு முரண்பட்டு வழிகெட்டவர்கள் கூறும் விஷயம் உண்மையல்ல.

19:35Page 307

مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٖۖ سُبۡحَٰنَهُۥٓۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ٣٥

It is not [befitting] for Allāh to take a son; exalted is He!1 When He decrees an affair, He only says to it, "Be," and it is.

மகனை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்கு தேவையானது அல்ல. அவன் அதனை விட்டும் தூய்மையானவன். அவன் ஏதேனும் ஒன்றை நாடினால் அவன் அவ்விடயத்தில் ‘ஆகு’ என்று கூறி போதுமாக்கிக் கொள்வான். நிச்சயமாக அது ஆகிவிடும். அது அவனுக்கு முடியாதது அல்ல. அவ்வாறானவன் பிள்ளையை விட்டும் பரிசுத்தமானவன்.

19:36Page 307

وَإِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٣٦

[Jesus said], "And indeed, Allāh is my Lord and your Lord, so worship Him. That is a straight path."

அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனும் ஆவான். வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குக் கூறிய வழியே அல்லாஹ்வின் திருப்தியின்பால் கொண்டு சேர்க்கும் நேரான வழியாகும்.

19:37Page 307

فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن مَّشۡهَدِ يَوۡمٍ عَظِيمٍ ٣٧

Then the factions differed [concerning Jesus] from among them, so woe to those who disbelieved - from the scene of a tremendous Day.

ஈஸாவின் விஷயத்தில் முரண்படுவோர் முரண்பட்டு, அவரது கூட்டத்துக்கு மத்தியிலேயே பல பிரிவினர்களாக ஆகிவிட்டனர். அவரை நம்பிய சிலர் கூறினார்கள், “அவர் இறைத் தூதர்” என்று. யூதர்களைப் போன்ற இன்னும் சிலர் அவரை மறுத்தனர். பல பிரிவினர்கள் அவருடைய விடயத்தில் எல்லை மீறினர் அவர்களில் சிலர் கூறினர் அவர் இறைவன் என்று, இன்னும் சிலர் கூறினார்கள் “அவர் அல்லாஹ்வின் மகன் என்று.” அதனை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமாகி விட்டான். நிகழ்வுகள், விசாரணை, தண்டனை போன்ற வரப்போகும் மகத்தான மறுமை நாளில் அவர் விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டவர்களுக்கு கேடு உள்ளது.

19:38Page 307

أَسۡمِعۡ بِهِمۡ وَأَبۡصِرۡ يَوۡمَ يَأۡتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلۡيَوۡمَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٣٨

How [clearly] they will hear and see the Day they come to Us, but the wrongdoers today are in clear error.

மறுமை நாளில் அவர்கள் எவ்வளவு சிறந்த முறையில் கேட்பார்கள், பார்ப்பார்கள்! கேட்பது பயனளிக்காத போது கேட்பார்கள். பார்ப்பது பயனளிக்காத போது பார்ப்பார்கள். ஆனால் இவ்வுலக வாழ்வில் அநியாயம் இழைத்தவர்கள் நேரான வழியை விட்டு தெளிவான வழிகேட்டில் உள்ளார்கள். மறுமைக்காக அவர்கள் எந்த முன்னேற்பாடும் செய்வதில்லை. தங்களின் அநியாயத்தில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென அது அவர்களிடம் வந்து விடும்.

19:39Page 308

وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡحَسۡرَةِ إِذۡ قُضِيَ ٱلۡأَمۡرُ وَهُمۡ فِي غَفۡلَةٖ وَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٣٩

And warn them, [O Muḥammad], of the Day of Regret, when the matter will be concluded;1 and [yet], they are in [a state of] heedlessness, and they do not believe.

தூதரே!- மக்கள் வருத்தப்படும் நாளைக்குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த நாளில் தீய செயல்கள் செய்தவன் தான் செய்த தீய செயல்களுக்காக வருத்தப்படுவான். நற்செயல்கள் செய்தவன் தான் இன்னும் அதிகமாக வழிப்பட்டு நற்செயல்கள் செய்யவில்லையே என்று வருத்தப்படுவான். அடியார்களின் பதிவேடுகள் அனைத்தும் சுருட்டப்பட்டுவிடும். அவர்களின் கணக்குகள் முடிக்கப்படும். ஒவ்வொருவரும் தான் முற்படுத்திய செயல்களின்பால் சென்றுவிடுவார்கள். அவர்களோ மறுமையின் மீது அலட்சியமாக இருக்கிறார்கள். தங்களின் உலக வாழ்வில் மயங்கியுள்ளார்கள். அவர்கள் மறுமை நாளை நம்புவதில்லை.

19:40Page 308

إِنَّا نَحۡنُ نَرِثُ ٱلۡأَرۡضَ وَمَنۡ عَلَيۡهَا وَإِلَيۡنَا يُرۡجَعُونَ ٤٠

Indeed, it is We who will inherit the earth and whoever is on it, and to Us they will be returned.

படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகு நிச்சயமாக நாமே நிலைத்திருப்போம். பூமிக்கும் அதிலுள்ளோருக்கும் நாமே உரிமையாளர்களாவோம். ஏனெனில் அவர்கள் அழிந்து விடுவார்கள். அவர்களுக்கு பிறகு நாம் எஞ்சியிருப்போம். அவர்களுக்கு நாமே உரிமையாளர்கள். அவர்களுடைய விடயத்தில் நாம் விரும்பியதைச் செயல்படுத்துவோம். விசாரைணைக்கும், கூலி பெறவும் மறுமை நாளில் அவர்கள் நம்மிடம் மட்டுமே திரும்பிவர வேண்டும்.

19:41Page 308

وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِبۡرَٰهِيمَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيًّا ٤١

And mention in the Book [the story of] Abraham. Indeed, he was a man of truth and a prophet.

தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இப்ராஹீமை பற்றிய செய்தியை நினைவு கூர்வீராக. அவர் உண்மையாளராகவும், அல்லாஹ்வின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும், அல்லாஹ்விடம் இருந்து அனுப்பப்பட்ட நபியாகவும் இருந்தார்.

19:42Page 308

إِذۡ قَالَ لِأَبِيهِ يَٰٓأَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا يَسۡمَعُ وَلَا يُبۡصِرُ وَلَا يُغۡنِي عَنكَ شَيۡـٔٗا ٤٢

[Mention] when he said to his father, "O my father, why do you worship that which does not hear and does not see and will not benefit you at all?

அவர் தம் தந்தை ஆஸரிடம் கூறினார்: “என் தந்தையே! நீங்கள் அழைத்தால் உங்களின் பிரார்த்தனையைச் செவியேற்க முடியாத, நீங்கள் வணங்கினால் உங்கள் வணக்கத்தைப் பார்க்க முடியாத, உங்களுக்கு நன்மையளிக்கவோ உங்களை விட்டு தீங்கினை அகற்றவோ சக்திபெறாத, அல்லாஹ் அல்லாத சிலைகளை ஏன் வணங்குகிறீர்கள்?

19:43Page 308

يَٰٓأَبَتِ إِنِّي قَدۡ جَآءَنِي مِنَ ٱلۡعِلۡمِ مَا لَمۡ يَأۡتِكَ فَٱتَّبِعۡنِيٓ أَهۡدِكَ صِرَٰطٗا سَوِيّٗا ٤٣

O my father, indeed there has come to me of knowledge that which has not come to you, so follow me; I will guide you to an even path.

என் தந்தையே! உங்களிடம் வராத அறிவு நிச்சயமாக வஹியின் மூலம் என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறேன்.

19:44Page 308

يَٰٓأَبَتِ لَا تَعۡبُدِ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلرَّحۡمَٰنِ عَصِيّٗا ٤٤

O my father, do not worship [i.e., obey] Satan. Indeed Satan has ever been, to the Most Merciful, disobedient.

என் தந்தையே! ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு அவனை வணங்காதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் அளவிலாக் கருணையாளனின் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவனாக இருக்கின்றான். ஆதமுக்கு சிரம் பணியுமாறு அவன் அவனுக்கு ஏவிய போது அவன் சிரம்பணியவில்லை.

19:45Page 308

يَٰٓأَبَتِ إِنِّيٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ فَتَكُونَ لِلشَّيۡطَٰنِ وَلِيّٗا ٤٥

O my father, indeed I fear that there will touch you a punishment from the Most Merciful so you would be to Satan a companion [in Hellfire]."

என் தந்தையே! நிச்சயமாக நீங்கள் நிராகரித்த நிலையிலேயே மரணித்து விட்டால் அளவிலாக் கருணையாளனிடமிருந்து ஏதேனும் வேதனை உங்களைத் தாக்கிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அப்போது நீங்கள் வேதனையில் ஷைத்தானுடன் நட்பு வைத்ததால் அவனுக்கு தோழனாகி விடுவீர்கள்.

19:46Page 308

قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنۡ ءَالِهَتِي يَٰٓإِبۡرَٰهِيمُۖ لَئِن لَّمۡ تَنتَهِ لَأَرۡجُمَنَّكَۖ وَٱهۡجُرۡنِي مَلِيّٗا ٤٦

[His father] said, "Have you no desire for my gods, O Abraham? If you do not desist, I will surely stone you, so avoid me a prolonged time."

ஆஸர் தம் மகன் இப்ராஹீமிடம் கூறினார்: “இப்ராஹீமே! நான் வணங்கும் என்னுடைய சிலைகளை நீ புறக்கணிக்கிறாயா? நீ என் சிலைகளைத் திட்டுவதை நிறுத்தவில்லையென்றால் நான் உன்னைக் கல்லால் அடிப்பேன். நீண்ட காலத்திற்கு என்னை விட்டுப் பிரிந்துவிடு. என்னுடன் பேசாதே. என்னுடன் சேரவும் வேண்டாம்”

19:47Page 308

قَالَ سَلَٰمٌ عَلَيۡكَۖ سَأَسۡتَغۡفِرُ لَكَ رَبِّيٓۖ إِنَّهُۥ كَانَ بِي حَفِيّٗا ٤٧

[Abraham] said, "Peace [i.e., safety] will be upon you.1 I will ask forgiveness for you of my Lord. Indeed, He is ever gracious to me.

இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறினார்: “என்னிடமிருந்து உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும். நீங்கள் வெறுக்கக்கூடிய எதுவும் என் மூலம் உங்களுக்கு ஏற்படாது. நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்பையும், நேர்வழியையும் வேண்டுவேன். நிச்சயமாக அவன் என்மீது மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான்.

19:48Page 308

وَأَعۡتَزِلُكُمۡ وَمَا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدۡعُواْ رَبِّي عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّي شَقِيّٗا ٤٨

And I will leave you and those you invoke other than Allāh and will invoke1 my Lord. I expect that I will not be in invocation to my Lord unhappy [i.e., disappointed]."

நான் உங்களையும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டு பிரிந்துவிடுகிறேன். நான் என் இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்கின்றேன். அவனுக்கு இணையாக எதையும் ஆக்க மாட்டேன். அப்பொழுதுதான் நான் பிரார்த்தித்தால் அவன் மறுக்க மாட்டான். அவ்வாறு மறுத்தால் அவனைப் பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியசாலியாகி விடுவேன்.

19:49Page 308

فَلَمَّا ٱعۡتَزَلَهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۖ وَكُلّٗا جَعَلۡنَا نَبِيّٗا ٤٩

So when he had left them and those they worshipped other than Allāh, We gave him Isaac and Jacob, and each [of them] We made a prophet.

அவர் அந்த மக்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டுவிட்ட போது குடும்பத்தை இழந்ததற்கு பகரமாக அவரது மகன் இஸ்ஹாக்கையும் பேரன் யஃகூபையும் நாம் அவருக்கு வழங்கினோம். அவர்கள் இருவரையும் நாம் நபியாக ஆக்கினோம்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском