Аль-МухтасарАль‑Кахф · 18:1–31

Аль-Мухтасар · Тафсир · на тамильском

الكهف

Аль-Кахф

Пещера · Мекканская · 110 аятов

18:1Страница 293

ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَىٰ عَبۡدِهِ ٱلۡكِتَٰبَ وَلَمۡ يَجۡعَل لَّهُۥ عِوَجَاۜ ١

Хвала Аллаху, Который ниспослал Своему рабу Писание и не допустил в нем неправды,

கண்ணியம் மற்றும் பரிபூரண பண்புகளைக்கொண்டும் வெளிப்படையான, அந்தரங்கமான அருட்கொடைகளைக் கொண்டும் புகழ்தல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனே தன் அடியார், தன் தூதர் முஹம்மது மீது குர்ஆனை இறக்கினான். இந்தக் குர்ஆனில் அவன் எந்தக் கோணலையும் சத்தியத்தை விட்டும் சாய்வதனையும் ஏற்படுத்தவில்லை.

18:2Страница 293

قَيِّمٗا لِّيُنذِرَ بَأۡسٗا شَدِيدٗا مِّن لَّدُنۡهُ وَيُبَشِّرَ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرًا حَسَنٗا ٢

и сделал его правильным, чтобы предостеречь неверующих от тяжких мучений от Него и сообщить верующим, совершающим праведные деяния, благую весть о том, что им уготована прекрасная награда,

மாறாக முரண்பாடுகளோ, கருத்துவேறுபாடுகளோ அற்ற முற்றிலும் நேர்த்தியான வேதமாக அதனை ஆக்கியுள்ளான். நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை காத்திருக்கின்றது என்று எச்சரிக்கை செய்வதற்காகவும் நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக இணையற்ற அழகிய கூலி இருக்கின்றது என்று நற்செய்தி கூறுவதற்காகவும்தான் அவ்வாறு அருளியுள்ளான்.

18:3Страница 293

مَّٰكِثِينَ فِيهِ أَبَدٗا ٣

в которой они пребудут вечно,

அவர்கள் அந்த வெகுமதியில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அது அவர்களை விட்டு என்றும் முடிவுறாதது.

18:4Страница 293

وَيُنذِرَ ٱلَّذِينَ قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗا ٤

и чтобы предостеречь тех, которые говорят: «Аллах взял Себе сына».

அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறும் யூதர்களையும் கிருஸ்தவர்களையும் சில இணைவைப்பாளர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும்தான் அவ்வாறு இறக்கியுள்ளான்.

18:5Страница 294

مَّا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٖ وَلَا لِأٓبَآئِهِمۡۚ كَبُرَتۡ كَلِمَةٗ تَخۡرُجُ مِنۡ أَفۡوَٰهِهِمۡۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبٗا ٥

Знания об этом нет ни у них, ни у их отцов. Тяжки слова, выходящие из их ртов, и говорят они одну только ложь.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை உள்ளதாக இட்டுக்கட்டும் இவர்களிடம் அவர்களின் வாதத்திற்கு, இவர்களிடமோ இவர்கள் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் இவர்களின் முன்னோர்களிடமோ எந்த ஆதாரமோ, அறிவோ இல்லை. சிந்திக்காமல் அவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் அந்த வார்த்தை மிகவும் மோசமானது. அவர்கள் எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ அற்ற பொய்யான வார்த்தையையே கூறுகிறார்கள்.

18:6Страница 294

فَلَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ إِن لَّمۡ يُؤۡمِنُواْ بِهَٰذَا ٱلۡحَدِيثِ أَسَفًا ٦

Ты можешь погубить себя от скорби по их следам (скорбя о том, что они отворачиваются от истины), если они не уверуют в это повествование?

தூதரே!- அவர்கள் இந்தக் குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளவில்லை என்றால் கவலையால் உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!. அவ்வாறு செய்யாதீர். அவர்களை நேர்வழிக்குக் கொண்டுவருவது உம்மீதுள்ள கடமையல்ல. எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும்.

18:7Страница 294

إِنَّا جَعَلۡنَا مَا عَلَى ٱلۡأَرۡضِ زِينَةٗ لَّهَا لِنَبۡلُوَهُمۡ أَيُّهُمۡ أَحۡسَنُ عَمَلٗا ٧

Воистину, все, что есть на земле, Мы сделали украшением для нее, чтобы испытать людей ивыявить, чьи деяния окажутся лучше.

நாம் பூமியின் மேற்பகுதியிலுள்ள படைப்புகள் அனைத்தையும் அதற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளோம். அவர்களில் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்களைச் செய்பவர் யார்? தீய செயல்களைச் செய்பவர் யார்? என்று நாம் அவர்களைச் சோதித்து, ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை நாம் வழங்குவதற்கே அவ்வாறு செய்துள்ளோம்.

18:8Страница 294

وَإِنَّا لَجَٰعِلُونَ مَا عَلَيۡهَا صَعِيدٗا جُرُزًا ٨

Воистину, все, что есть на земле, Мы превратим в безжизненный песок.

நாம் பூமியின் மேற்பகுதியிலுள்ள படைப்புகள் அனைத்தையும் தாவரங்களோ செடிகொடிகளோ அற்ற மண்ணாக ஆக்கிடுவோம். இது படைப்புகளுக்குரிய வாழ்க்கை முடிந்தபிறகேயாகும். அவர்கள் அதன் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.

18:9Страница 294

أَمۡ حَسِبۡتَ أَنَّ أَصۡحَٰبَ ٱلۡكَهۡفِ وَٱلرَّقِيمِ كَانُواْ مِنۡ ءَايَٰتِنَا عَجَبًا ٩

Или же ты решил, что люди пещеры и Ракима (название селения, из которого вышли юноши, или плита, на которой были начертаны их имена) были самым удивительным среди Наших знамений?

தூதரே!- நிச்சயமாக குகைவாசிகளின் சம்பவமும் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஏடுகளும் நம்முடைய வியக்கத்தக்க சான்றுகளில் உள்ளவை என்று எண்ணாதீர். மாறாக அதுவல்லாத வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பது போன்றவை அதனை விட வியக்கத்தக்கதாகும்.

18:10Страница 294

إِذۡ أَوَى ٱلۡفِتۡيَةُ إِلَى ٱلۡكَهۡفِ فَقَالُواْ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةٗ وَهَيِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدٗا ١٠

Вот юноши укрылись в пещере и сказали: «Господь наш! Даруй нам от Себя милость и устрой наше дело наилучшим образом».

தூதரே!- நம்பிக்கைகொண்ட இளைஞர்கள் தங்களின் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சமடைந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து, எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றி உன் புறத்திலிருந்து அருளை எங்களுக்கு வழங்குவாயாக. நிராகரிப்பாளர்களைவிட்டு புலம்பெயர்ந்ததையும் நம்பிக்கைகொண்டதையும் சத்திய வழியை அடைந்ததாகவும் சரியான நிலைப்பாடாகவும் எங்களுக்கு ஆக்குவாயாக.

18:11Страница 294

فَضَرَبۡنَا عَلَىٰٓ ءَاذَانِهِمۡ فِي ٱلۡكَهۡفِ سِنِينَ عَدَدٗا ١١

Мы запечатали их уши (погрузили их в глубокий сон) в пещере на много лет.

அவர்கள் புறப்பட்டு குகையில் தஞ்சமடைந்த பிறகு சப்தங்களை செவியுறமுடியாதவாறு அவர்களில் செவிகளில் ஒரு திரையை ஏற்படுத்திவிட்டோம். பல்லாண்டுகள் அவர்களை தூங்கச் செய்தோம்.

18:12Страница 294

ثُمَّ بَعَثۡنَٰهُمۡ لِنَعۡلَمَ أَيُّ ٱلۡحِزۡبَيۡنِ أَحۡصَىٰ لِمَا لَبِثُوٓاْ أَمَدٗا ١٢

Потом Мы разбудили их, чтобы узнать, какая из двух партий точнее подсчитает, какой срок они пробыли там.

பின்னர் அவர்களின் நீண்ட தூக்கத்திற்குப் பிறகு நாம் அவர்களை எழுப்பினோம், அவர்களின் விஷயத்தில் கருத்துவேறுபாடுகொண்ட இரு கூட்டங்களில் யார் அவர்கள் குகையிலே தங்கியிருந்த கால அளவை சரியாக அறிகிறார்கள் என்பதை நாம் -மற்றவர்களுக்குப் புலப்படும் விதத்தில்- அறிவதற்காகவே அவ்வாறு செய்தோம்.

18:13Страница 294

نَّحۡنُ نَقُصُّ عَلَيۡكَ نَبَأَهُم بِٱلۡحَقِّۚ إِنَّهُمۡ فِتۡيَةٌ ءَامَنُواْ بِرَبِّهِمۡ وَزِدۡنَٰهُمۡ هُدٗى ١٣

Мы расскажем тебе их историю правдиво. Это были юноши, которые уверовали в своего Господа, и Мы увеличили их приверженность прямому пути.

தூதரே!- அவர்களின் செய்தியை சந்தேகமற்ற உண்மையான விதத்தில் நாம் உமக்கு அறிவிக்கின்றோம். தங்கள் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டு நற்செயல்கள் புரிந்த இளைஞர்களே அவர்கள். நாம் அவர்களுக்கு மென்மேலும் நேர்வழியையும், சத்தியத்தின் மீது உறுதியையும் வழங்கினோம்.

18:14Страница 294

وَرَبَطۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ إِذۡ قَامُواْ فَقَالُواْ رَبُّنَا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَن نَّدۡعُوَاْ مِن دُونِهِۦٓ إِلَٰهٗاۖ لَّقَدۡ قُلۡنَآ إِذٗا شَطَطًا ١٤

Мы укрепили их сердца (укрепили их веру и решимость), когда они встали и сказали: «Господь наш - Господь небес и земли! Мы не станем взывать к другим божествам помимо Него. В таком случае мы произнесли бы чрезмерное.

நம்பிக்கை மற்றும் அதில் உறுதியைக் கடைபிடித்தல் மூலம் அவர்களின் உள்ளங்களைப் பலப்படுத்தினோம். மேலும் நிராகரிக்கும் அரசனுக்கு முன்னிலையில் எழுந்து அல்லாஹ்வை மாத்திரமே நம்புவோம் என தமது நம்பிக்கையை அறிவித்து நாட்டைத் துறப்பதற்கான பொறுமையின் மூலமும் அவர்களின் உள்ளங்களை பலப்படுத்தினோம். அவர்கள் அரசனிடம் கூறினார்கள்: “எங்கள் இறைவனின் மீது நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவனையே நாங்கள் வணங்கினோம். அவன்தான் வானங்கள் மற்றும் பூமியை படைத்துப் பராமரிக்கும் இறைவன். அவனைத் தவிர பொய்யாக கருதப்படக்கூடிய கடவுள்கள் யாரையும் நாங்கள் ஒருபோதும் வணங்க மாட்டோம். -அவனைத் தவிர மற்றவர்களை நாம் வணங்கினால்-, சத்தியத்தை விட்டு தூரமான, அநீதியான வார்த்தையை நாம் கூறியதாகிவிடும்.”

18:15Страница 294

هَٰٓؤُلَآءِ قَوۡمُنَا ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ لَّوۡلَا يَأۡتُونَ عَلَيۡهِم بِسُلۡطَٰنِۭ بَيِّنٖۖ فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا ١٥

Этот наш народ стал поклоняться вместо Него другим божествам. Почему же они не приводят в пользу этого ясного довода? Кто может быть несправедливее того, кто возводит навет на Аллаха?

பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கி கூறினார்கள்: “நம்முடைய இந்த சமூகத்தினர் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை வணங்கப்படும் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களின் வணக்க வழிபாட்டிற்கு தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவருவதற்கு சக்திபெற மாட்டார்கள். அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை.

18:16Страница 295

وَإِذِ ٱعۡتَزَلۡتُمُوهُمۡ وَمَا يَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأۡوُۥٓاْ إِلَى ٱلۡكَهۡفِ يَنشُرۡ لَكُمۡ رَبُّكُم مِّن رَّحۡمَتِهِۦ وَيُهَيِّئۡ لَكُم مِّنۡ أَمۡرِكُم مِّرۡفَقٗا ١٦

Если вы удалились от них и от того, чему они поклоняются помимо Аллаха, то укройтесь в пещере, и ваш Господь распространит на вас Свою милость и сделает ваше дело легким».

நீங்கள் உங்கள் சமூகத்தை விட்டு ஒதுங்கி, அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கும் தெய்வங்களை விட்டு விட்டு அவனை மட்டுமே வணங்கிய போது உங்கள் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த குகையில் சென்று தஞ்சமடையுங்கள். உங்கள் இறைவன் தன் அருளினால் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வான். உங்களின் சமூகத்தினரிடையே வாழ்ந்த வாழ்க்கைக்குப் பகரமாக உங்களுக்குப் பயனுள்ளவாறு உங்கள் காரியங்களை எளிதாக்கித் தருவான்.

18:17Страница 295

۞ وَتَرَى ٱلشَّمۡسَ إِذَا طَلَعَت تَّزَٰوَرُ عَن كَهۡفِهِمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقۡرِضُهُمۡ ذَاتَ ٱلشِّمَالِ وَهُمۡ فِي فَجۡوَةٖ مِّنۡهُۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِۗ مَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِۖ وَمَن يُضۡلِلۡ فَلَن تَجِدَ لَهُۥ وَلِيّٗا مُّرۡشِدٗا ١٧

Ты увидел бы, что солнце на восходе уклонялось от их пещеры вправо, а на закате отворачивалось от них влево. Они же находились в середине пещеры. Это были некоторые из знамений Аллаха. Тот, кого Аллах ведет прямым путем, следует прямым путем. Тому же, кого Он вводит в заблуждение, ты не найдешь ни покровителя, ни наставника.

அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செயல்படுத்தினார்கள். அல்லாஹ் அவர்களை தூங்க வைத்தான். எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தான். -அவர்களை பார்க்கக்கூடியவரே!- சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது அது அவர்களின் குகையைவிட்டு அதிலே நுழைபவருக்கு வலப்பக்கமாகச் சாய்வதையும் அது மறையும்போது அவர்கள் மீது விழாமல் இடப்பக்கமாகச் சாய்வதையும் காண்பீர். அவர்கள் நிரந்தர நிழலில் இருந்தார்கள். சூரிய வெப்பம் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் குகையில் அவர்களுக்குத் தேவையான காற்றுக் கிடைக்குமளவு விசாலமான இடத்தில் இருந்தார்கள். குகையில் அவர்கள் தஞ்சமடைந்தது, அங்கு அவர்கள் மீது தூக்கம் சாட்டப்பட்டது, சூரியன் அவர்கள் மீது விழாமல் இருந்தது, விசாலமான இடத்தைப் பெற்றது, தங்கள் சமூகத்தவரிடமிருந்து தப்பித்தது ஆகியவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆச்சரியமான சான்றுகளாகும். அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவராவார். அவன் யாரைக் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேரான வழியைக்காட்டும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். ஏனெனில் நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது வேறு எவரிடத்திலும் இல்லை.

18:18Страница 295

وَتَحۡسَبُهُمۡ أَيۡقَاظٗا وَهُمۡ رُقُودٞۚ وَنُقَلِّبُهُمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَذَاتَ ٱلشِّمَالِۖ وَكَلۡبُهُم بَٰسِطٞ ذِرَاعَيۡهِ بِٱلۡوَصِيدِۚ لَوِ ٱطَّلَعۡتَ عَلَيۡهِمۡ لَوَلَّيۡتَ مِنۡهُمۡ فِرَارٗا وَلَمُلِئۡتَ مِنۡهُمۡ رُعۡبٗا ١٨

Ты решил бы, что они бодрствуют, хотя они спали. Мы переворачивали их то на правый бок, то на левый. Их собака лежала перед входом, вытянув лапы. Взглянув на них, ты бросился бы бежать прочь и пришел бы в ужас.

அவர்களைப் பார்க்கக்கூடியவரே!- அவர்களின் கண்கள் திறந்திருப்பதால் நீர் அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்றே எண்ணுவீர். உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மண் அவர்களின் உடலைத் தின்றுவிடாமல் இருக்க நாம் அவர்களை வலதுபுறமும் இடதுபுறமும் புரட்டிக்கொண்டே இருக்கின்றோம். அவர்களின் நாய் குகையின் நுழைவாயிலில் தன் முன்னங்கால்களை நீட்டியவாறு உள்ளது. நீர் அவர்களை எட்டிப் பார்த்தால் பயந்து அவர்களை விட்டு பின்வாங்கி ஓடிவிடுவீர். உம் உள்ளம் அவர்களை கண்டு பயத்தால் நிரம்பி விடும்.

18:19Страница 295

وَكَذَٰلِكَ بَعَثۡنَٰهُمۡ لِيَتَسَآءَلُواْ بَيۡنَهُمۡۚ قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ كَمۡ لَبِثۡتُمۡۖ قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۚ قَالُواْ رَبُّكُمۡ أَعۡلَمُ بِمَا لَبِثۡتُمۡ فَٱبۡعَثُوٓاْ أَحَدَكُم بِوَرِقِكُمۡ هَٰذِهِۦٓ إِلَى ٱلۡمَدِينَةِ فَلۡيَنظُرۡ أَيُّهَآ أَزۡكَىٰ طَعَامٗا فَلۡيَأۡتِكُم بِرِزۡقٖ مِّنۡهُ وَلۡيَتَلَطَّفۡ وَلَا يُشۡعِرَنَّ بِكُمۡ أَحَدًا ١٩

Так Мы пробудили их для того, чтобы они расспросили друг друга. Один из них сказал: «Сколько вы пробыли здесь?». Они сказали: «Мы пробыли день или часть дня». Они сказали: «Вашему Господу лучше известно о том, сколько вы пробыли. Пошлите одного из вас в город с вашими серебряными монетами. Пусть он посмотрит, какая еда получше, и принесет вам ее поесть. Но пусть он будет осторожен, чтобы никто не догадался о вас.

நாம் குறிப்பிட்ட வியக்கத்தக்க நம்முடைய வல்லமைகளை அவர்கள் விடயத்தில் நிகழ்த்தியது போன்று நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் அவர்களை எழுப்பினோம், அவர்கள் ஒருவருக்கொருவர் தூக்கத்தில் கழித்த காலத்தைப் பற்றி விசாரிப்பதற்காக. அவர்களில் சிலர் கூறினார்கள்: “நாம் ஒரு நாளோ அதற்கு குறைவான நாளோ தூங்கியவாறு கழித்திருப்போம்.” அவர்கள் தங்கியிருந்த காலத்தை சரியாக கணிக்க முடியாத சிலர் கூறினார்கள்: “நீங்கள் தூங்கியவாறு தங்கியிருந்த காலத்தை உங்கள் இறைவனே நன்கறிந்தவன். எனவே இதுகுறித்த விஷயத்தை அவனிடமே ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்குச் சம்பந்தமுள்ளவற்றில் ஈடுபடுங்கள். இந்த வெள்ளி நாணயங்களைக்கொண்டு நம்முடைய நமது நகரத்திற்கு உங்களில் ஒருவரை அனுப்புங்கள். அவர், தூய்மையான, நல்ல உழைப்புடையவரிடமுள்ள உணவைப் பார்த்து வாங்கிவரட்டும். அவர் அங்கு செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளட்டும். விவேகமாக நடந்து கொள்ளட்டும். எவரும் உங்களின் இடத்தை அறியவிடவேண்டாம். ஏனெனில் அதனால் பாரிய தீங்குகள் ஏற்படும்.

18:20Страница 295

إِنَّهُمۡ إِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ يَرۡجُمُوكُمۡ أَوۡ يُعِيدُوكُمۡ فِي مِلَّتِهِمۡ وَلَن تُفۡلِحُوٓاْ إِذًا أَبَدٗا ٢٠

Если они узнают о вас, то побьют вас камнями или обратят вас в свою религию, и тогда вы никогда не преуспеете.

உங்களின் சமூகத்தினர் நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து உங்களைக் கண்டுபிடித்தால் கல்லால் எறிந்து உங்களைக் கொன்றுவிடுவார்கள் அல்லது உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்து சத்திய மார்க்கத்தின்பால் நேர்வழி பெறுவதற்கு முன்னர் இருந்த அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் உங்களைத் திருப்பி விடுவார்கள். நீங்கள் அதனை மீண்டும் ஏற்றுக்கொண்டால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாறாக அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய சத்தியத்தை விட்டுவிட்டு அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் திரும்பியதனால் ஈருலகிலும் பெரும் இழப்பிற்குள்ளாகி விடுவீர்கள்.

18:21Страница 296

وَكَذَٰلِكَ أَعۡثَرۡنَا عَلَيۡهِمۡ لِيَعۡلَمُوٓاْ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيۡبَ فِيهَآ إِذۡ يَتَنَٰزَعُونَ بَيۡنَهُمۡ أَمۡرَهُمۡۖ فَقَالُواْ ٱبۡنُواْ عَلَيۡهِم بُنۡيَٰنٗاۖ رَّبُّهُمۡ أَعۡلَمُ بِهِمۡۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُواْ عَلَىٰٓ أَمۡرِهِمۡ لَنَتَّخِذَنَّ عَلَيۡهِم مَّسۡجِدٗا ٢١

Так Мы дали знать о них людям для того, чтобы они узнали, что обещание Аллаха есть истина и что в Часе невозможно усомниться. Но вот они стали спорить о них и сказали: «Воздвигните над ними строение. Их Господу лучше знать о них». А те, которые отстояли свое мнение, сказали: «Мы непременно воздвигнем над ними мечеть».

அவர்களைப் பல வருடங்கள் தூங்க வைத்து பின்னர் எழுப்பி எங்களுடைய வல்லமையை அறிவிக்கக்கூடிய நாம் செய்த வியக்கத்தக்க செயல்களைப்போல அந்த நகர மக்களுக்கும் அவர்களைக் குறித்து அறிவித்தோம். அது நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் உதவிசெய்வதாகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதாகவும் அல்லாஹ் வழங்கிய வாக்குறுதி உண்மையே என்பதையும் சந்தேகமின்றி மறுமை நாள் வந்தே தீரும் எனவும் அவர்கள் அறிந்துகொள்வதற்காகவேயாகும். குகைவாசிகளின் விஷயம் வெளிப்பட்டு, அவர்கள் இறந்துவிட்ட பின் அவர்களுடைய விடயத்தையறிந்த மக்கள் அவர்களின் விஷயத்தில் என்ன செய்வது என கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் கூறினார்கள்: “அவர்கள் தங்கியிருந்த குகை வாயிலில் அவர்களைக் காக்கும் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள். இறைவனே அவர்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவர்களின் நிலை அவனிடத்தில் அவர்களுக்கு சிறப்பு இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. அவர்களில் அறிவும் சரியான பிரச்சாரமும் அற்ற செல்வாக்கு உடையவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அவர்களைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு, அவர்கள் தங்கியிருந்த இடத்தை நினைவுபடுத்தும் பொருட்டு அதன் மீது ஒரு வணக்கஸ்தலத்தை அமைப்போம்.”

18:22Страница 296

سَيَقُولُونَ ثَلَٰثَةٞ رَّابِعُهُمۡ كَلۡبُهُمۡ وَيَقُولُونَ خَمۡسَةٞ سَادِسُهُمۡ كَلۡبُهُمۡ رَجۡمَۢا بِٱلۡغَيۡبِۖ وَيَقُولُونَ سَبۡعَةٞ وَثَامِنُهُمۡ كَلۡبُهُمۡۚ قُل رَّبِّيٓ أَعۡلَمُ بِعِدَّتِهِم مَّا يَعۡلَمُهُمۡ إِلَّا قَلِيلٞۗ فَلَا تُمَارِ فِيهِمۡ إِلَّا مِرَآءٗ ظَٰهِرٗا وَلَا تَسۡتَفۡتِ فِيهِم مِّنۡهُمۡ أَحَدٗا ٢٢

Одни говорят, что их было трое, а четвертой была собака. Другие говорят, что их было пятеро, а шестой была собака. Так они пытаются угадать сокровенное. А другие говорят, что их было семеро, а восьмой была собака. Скажи: «Моему Господу лучше знать об их числе. Это неизвестно никому, кроме немногих». Препирайся относительно них только открыто и никого из них не спрашивай о них.

அவர்களின் சம்பவத்தில் அவர்களின் எண்ணிக்கையைக்குறித்து யூகம் செய்து கூறுபவர்களில் சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் மூன்று பேர். நான்காவது அவர்களின் நாய் என்று.” சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் ஐந்து பேர். ஆறாவது அவர்களின் நாய் என்று.” இரு பிரிவினரும் ஆதாரமின்றி அனுமானத்தின் படியே கூறுகிறார்கள். அவர்களில் சிலர், “அவர்கள் ஏழு பேர். எட்டாவது அவர்களின் நாய்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “என் இறைவனே அவர்களின் எண்ணிக்கையை நன்கறிந்தவன். அல்லாஹ் கற்றுக்கொடுத்த சிலரைத் தவிர வேறு யாரும் அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள். அவர்களின் எண்ணிக்கையைக் குறித்தோ, அவர்களது நிலைமைகளில் மற்ற விஷயங்களைக்குறித்தோ வேதக்காரர்களிடமோ அவர்களைத் தவிர மற்றவர்களிடமோ வெளிப்படையாக அன்றி ஆழமாக விவாதம் செய்யாதீர். அவர்கள் குறித்து அல்லாஹ் உமக்கு இறக்கிய வஹியை போதுமாக்கிக் கொள்வீராக. அவர்களைக் குறித்த விபரங்களை வேறு யாரிடமும் நீர் கேட்காதீர். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அதனை அறியமாட்டார்கள்.

18:23Страница 296

وَلَا تَقُولَنَّ لِشَاْيۡءٍ إِنِّي فَاعِلٞ ذَٰلِكَ غَدًا ٢٣

И никогда не говори: «Я сделаю это завтра».

நபியே! நீர் நாளை செய்ய விரும்பும் எதைக் குறித்தும், “நான் இதனை நாளை செய்து விடுவேன்” என்று கூறாதீர். ஏனெனில் நீர் அதைச் செய்வீரா? அல்லது உமக்கும் அந்த விஷயத்திற்கும் மத்தியில் ஏதேனும் குறுக்கிட்டு விடுமா? என்பதைக் குறித்து நீர் அறியமாட்டீர். இது ஒவ்வொரு முஸ்லிமுக்குமான வழிகாட்டலாகும்.

18:24Страница 296

إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ وَٱذۡكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلۡ عَسَىٰٓ أَن يَهۡدِيَنِ رَبِّي لِأَقۡرَبَ مِنۡ هَٰذَا رَشَدٗا ٢٤

Если только этого не пожелает Аллах! Если же ты забыл, то помяни своего Господа и скажи: «Быть может, Господь мой поведет меня более правильным путем».

ஆயினும் . “அல்லாஹ் நாடினால் நாளை செய்வேன்” என்று கூறுவதன் மூலம் உம்முடைய செயலை இறைநாட்டத்தோடு இணைத்தாலே தவிர. நீர் -அவ்வாறு கூற மறந்துவிட்டால்- (இன்ஷா அல்லாஹ்) அல்லாஹ் நாடினால் என்று கூறி உம் இறைவனை நினைவுபடுத்திக் கொள்வீராக. இன்னும் “என் இறைவன் எனக்கு இதைவிட நேர்வழிக்கு அண்மையான விஷயத்தின்பால் வழிகாட்டக்கூடும்” என்று கூறுவீராக.

18:25Страница 296

وَلَبِثُواْ فِي كَهۡفِهِمۡ ثَلَٰثَ مِاْئَةٖ سِنِينَ وَٱزۡدَادُواْ تِسۡعٗا ٢٥

Они провели в пещере триста лет и еще девять.

குகைவாசிகள் குகையில் முந்நூற்று ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்.

18:26Страница 296

قُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا لَبِثُواْۖ لَهُۥ غَيۡبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ أَبۡصِرۡ بِهِۦ وَأَسۡمِعۡۚ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا يُشۡرِكُ فِي حُكۡمِهِۦٓ أَحَدٗا ٢٦

Скажи: «Аллаху лучше знать, сколько они пробыли. У Него - сокровенное небес и земли. Как прекрасно Он видит и слышит! Нет у них покровителя помимо Него, и никто не принимает решений вместе с Ним».

தூதரே! நீர் கூறுவீராக: “அவர்கள் குகையில் தங்கியிருந்ததை அல்லாஹ்வே நன்கறிவான். அவர்கள் தங்கியிருந்த காலத்தை நாம் அறிவித்துவிட்டோம். அதற்குப் பிறகு எவருடைய கூற்றும் ஏற்றுக்கொள்ளப்படாது. வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்களை அல்லாஹ்வே நன்கறிவான். அவன் எவ்வளவு நன்றாக பார்க்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எவ்வளவு நன்றாக கேட்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் செவியேற்கிறான். அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பொறுப்பாளன் இல்லை. தனது சட்டத்தில் யாரையும் அவன் சேர்த்துக்கொள்ளமாட்டான். அவன் தனித்து சட்டம் கூறுபவன்.

18:27Страница 296

وَٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِن كِتَابِ رَبِّكَۖ لَا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦ وَلَن تَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدٗا ٢٧

Читай Писание твоего Господа, ниспосланное тебе в откровении. Нет замены Его Словам, и тебе не найти помимо Него прибежища.

தூதரே! அல்லாஹ் உமக்கு வஹியாக அளித்த குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவீராக. அதனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. ஏனெனில் நிச்சயமாக அவை முழுக்க முழுக்க உண்மையானதாகவும் நீதியானதாகவும் இருக்கின்றது. அவனைத் தவிர உமக்கு ஒதுங்குவதற்கு அடைக்கலத்தையோ பாதுகாத்து அபயமளிப்பரையோ நீர் காணமாட்டீர்.

18:28Страница 297

وَٱصۡبِرۡ نَفۡسَكَ مَعَ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ وَلَا تَعۡدُ عَيۡنَاكَ عَنۡهُمۡ تُرِيدُ زِينَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَا تُطِعۡ مَنۡ أَغۡفَلۡنَا قَلۡبَهُۥ عَن ذِكۡرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمۡرُهُۥ فُرُطٗا ٢٨

Будь же терпелив вместе с теми, которые взывают к своему Господу по утрам и перед закатом и стремятся к Его Лику. Не отвращай от них своего взора, желая украшений этого мира, и не повинуйся тем, чьи сердца Мы сделали небрежными к Нашему поминанию, кто потакает своим желаниям и чьи дела окажутся тщетными.

தங்கள் இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் வணக்கம் மற்றும் பிரார்தனையின் மூலம் அவனை அழைத்துக் கொண்டிருப்போரின் சகவாசத்தைக் கடைபிடிப்பீராக. செல்வமும் பதவியும் உடையவர்களின் சகவாசத்தை நாடி உம் பார்வையை அவர்களை விட்டும் திருப்பிவிடாதீர். உள்ளத்தில் முத்திரையிடுவதன் மூலம் எவருடைய உள்ளத்தை நம்முடைய நினைவை விட்டும் அலட்சியம் செய்யக்கூடியதாக நாம் மாற்றிவிட்டவர்களுக்கு நீர் கட்டுப்படாதீர். அவர்கள் உம் சபையைவிட்டு ஏழைகளை விரட்டுமாறு உம்மை ஏவுகிறார்கள். தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவதைக்காட்டிலும் தங்களின் மன இச்சையைப் பின்பற்றுவதற்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள். அவர்கள் செயல்கள் அனைத்தும் வீணானவையாக ஆகிவிட்டன.

18:29Страница 297

وَقُلِ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَن شَآءَ فَلۡيُؤۡمِن وَمَن شَآءَ فَلۡيَكۡفُرۡۚ إِنَّآ أَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمۡ سُرَادِقُهَاۚ وَإِن يَسۡتَغِيثُواْ يُغَاثُواْ بِمَآءٖ كَٱلۡمُهۡلِ يَشۡوِي ٱلۡوُجُوهَۚ بِئۡسَ ٱلشَّرَابُ وَسَآءَتۡ مُرۡتَفَقًا ٢٩

Скажи: «Истина - от вашего Господа. Кто хочет, пусть верует, а кто не хочет, пусть не верует». Мы приготовили для беззаконников Огонь, стены которого будут окружать их со всех сторон. Если они станут просить о помощи (или дожде), то им помогут водой, подобной расплавленному металлу (или осадку масла), которая обжигает лицо. Мерзкий напиток и скверная обитель!

தூதரே!- தமது உள்ளங்களிலுள்ள மறதியினால் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அலட்சியமாக இருக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்ததே சத்தியமாகும். அது நான் என் புறத்திலிருந்து கொண்டு வந்ததல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததாகும். நம்பிக்கையாளர்களை நான் விரட்டவேண்டும் என்ற உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. உங்களில் யார் இந்த சத்தியத்தின் மீது நம்பிக்கைகொள்ள விரும்புகிறாரோ அவர் நம்பிக்கைகொள்ளட்டும். அவர் அதற்கான கூலியைப் பெற்று மகிழ்ச்சியடைவார். உங்களில் யார் இதனை நிராகரிக்க விரும்புகிறாரோ அவர் நிராகரித்துக் கொள்ளட்டும். அவர் தனக்காகக் காத்திருக்கும் வேதனையை அனுபவிப்பார். நிராகரிப்பை தேர்ந்தெடுத்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்காரர்களுக்கு நாம் மிகப் பெரும் நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் அங்கிருந்து தப்பமுடியாது. அவர்கள் அனுபவிக்கும் கடுமையான தாகத்தினால் அவர்கள் தண்ணீர் வேண்டினால் கடுமையான வெப்பத்தினால் முகங்களை பொசுக்கக்கூடிய கொதிக்கும் எண்ணெய்யைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் நீர் மிகவும் மோசமான நீராகும். அது தாகத்தை தீர்க்காது. மாறாக அதிகப்படுத்தும். அவர்களின் தோல்களைப் பொசுக்கும் நெருப்பையும் அணைக்காது. அவர்கள் தங்கும் நரகம் மிகவும் மோசமானதாகும்.

18:30Страница 297

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ مَنۡ أَحۡسَنَ عَمَلًا ٣٠

А что до тех, которые уверовали и совершали праведные деяния, то ведь Мы не теряем награды тех, кто совершал добро.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து அமல்களை சீர்செய்தவர்களுக்கு பெரும் கூலி இருக்கின்றது. நிச்சயமாக நற்செயல் புரிந்தோரின் கூலியை நாம் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டோம். மாறாக அவர்களுக்கான கூலியை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவோம்.

18:31Страница 297

أُوْلَٰٓئِكَ لَهُمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَيَلۡبَسُونَ ثِيَابًا خُضۡرٗا مِّن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۚ نِعۡمَ ٱلثَّوَابُ وَحَسُنَتۡ مُرۡتَفَقٗا ٣١

Именно им уготованы сады Эдема, в которых текут реки. Они будут украшены золотыми браслетами и облачены в зеленые одеяния из атласа и парчи. Они будут возлежать там на ложах, прислонившись. Замечательное вознаграждение и прекрасная обитель!

ஈமான் மற்றும் நற்செயல் செய்து தங்களை அலங்கரித்தவர்களுக்கு சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றின் தங்குமிடங்களுக்குக் கீழே சுவையான நீரினையுடைய ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்க வலையல்களால் அலங்கரிக்கப்படுவார்கள். மெல்லிய, கனமான பச்சைநிற பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அழகிய விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்திருப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் கூலி எத்துணை அழகானது! அவர்கள் தங்கியிருக்கும் சுவனம் எத்துணை அழகானது!

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English