Аль-МухтасарТа Ха · 20:1–64

Аль-Мухтасар · Тафсир · на тамильском

طه

Та Ха

Та Ха  · Мекканская · 135 аятов

20:1Страница 312

طه ١

Та. Ха.

(طه) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

20:2Страница 312

مَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لِتَشۡقَىٰٓ ٢

Мы ниспослали тебе Коран не для того, чтобы ты стал несчастен,

தூதரே!- உம் சமூகம் உம்மை நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணிப்பதனால் நீர் வருத்தப்பட்டு துன்பப்படுவதற்காக நாம் உம்மீது இந்தக் குர்ஆனை இறக்கவில்லை.

20:3Страница 312

إِلَّا تَذۡكِرَةٗ لِّمَن يَخۡشَىٰ ٣

а только в качестве назидания для тех, кто страшится.

தன்னை அஞ்சுவதற்கு அல்லாஹ் அனுகூலம் புரிந்தோருக்கு இது நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இதனை இறக்கியுள்ளோம்.

20:4Страница 312

تَنزِيلٗا مِّمَّنۡ خَلَقَ ٱلۡأَرۡضَ وَٱلسَّمَٰوَٰتِ ٱلۡعُلَى ٤

Это - Ниспослание от Того, Кто сотворил землю и высокие небеса.

பூமியையும் உயரமான வானங்களையும் படைத்த அல்லாஹ்வே இதனை இறக்கினான். இது மகத்தான குர்ஆனாகும். ஏனெனில் நிச்சயமாக இது மகத்தானவனிடமிருந்து இறங்கியதாகும்.

20:5Страница 312

ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ ٥

Милостивый вознесся на Трон (или утвердился на Троне).

அளவிலாக் கருணையாளன் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.

20:6Страница 312

لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَمَا تَحۡتَ ٱلثَّرَىٰ ٦

Ему принадлежит то, что на небесах, и то, что на земле, и то, что между ними, и то, что под грунтом.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், மண்ணிற்கு அடியிலுள்ள படைப்பினங்களும் படைப்பால், உரிமையால், நிர்வாகத்தால் அவனுக்கே உரியன.

20:7Страница 312

وَإِن تَجۡهَرۡ بِٱلۡقَوۡلِ فَإِنَّهُۥ يَعۡلَمُ ٱلسِّرَّ وَأَخۡفَى ٧

Если даже ты будешь говорить громко, Ему все равно известно тайное и сокрытое.

தூதரே!- நீர் வெளிப்படையாகக் கூறினாலும் அல்லது மறைவாகக் கூறினாலும் நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிவான். அவன் இரகசியங்களையும் உள்ளத்தின் ஊசலாட்டங்கள் போன்ற அதைவிட மறைவானதையும் அறிகிறான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

20:8Страница 312

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ ٨

Аллах - Тот, кроме Которого нет иного божества и у Которого самые прекрасные имена.

வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. மிகப் பரிபூரண அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன.

20:9Страница 312

وَهَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ٩

Дошел ли до тебя рассказ о Мусе (Моисее)?

தூதரே!- மூஸா இப்னு இம்ரானின் செய்தி உமக்கு வந்துள்ளது.

20:10Страница 312

إِذۡ رَءَا نَارٗا فَقَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِقَبَسٍ أَوۡ أَجِدُ عَلَى ٱلنَّارِ هُدٗى ١٠

Вот он увидел огонь и сказал своей семье: «Оставайтесь здесь! Я увидел огонь. Быть может, я принесу вам головню или же найду возле огня дорогу».

அவர் தம் பயணத்தில் நெருப்பைக் கண்டபோது தம் குடும்பத்தாரிடம் கூறினார்: “உங்களின் இந்த இடத்திலேயே இருங்கள். நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஏதேனும் தீப்பிழம்பை உங்களிடம் எடுத்து வருகிறேன். அல்லது எனக்கு பாதையின்பால் வழிகாட்டக்கூடிய யாரையாவது அங்கு பெறலாம்.

20:11Страница 312

فَلَمَّآ أَتَىٰهَا نُودِيَ يَٰمُوسَىٰٓ ١١

Когда он подошел к нему, раздался глас: «О Муса (Моисей)!

அவர் நெருப்பின் பக்கம் வந்தபோது அல்லாஹ் அவரை, “மூஸாவே!” என்று அழைத்தான்.

20:12Страница 312

إِنِّيٓ أَنَا۠ رَبُّكَ فَٱخۡلَعۡ نَعۡلَيۡكَ إِنَّكَ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوٗى ١٢

Воистину, Я - твой Господь. Сними же свою обувь. Ты находишься в священной долине Тува (Това).

நிச்சயமாக நான் உம் இறைவன். எனவே என்னுடன் இரகசியமாகப் பேசுவதற்காக உம் காலணியைக் கழட்டுவீராக. நிச்சயமாக நீர் (துவா) என்னும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்.

20:13Страница 313

وَأَنَا ٱخۡتَرۡتُكَ فَٱسۡتَمِعۡ لِمَا يُوحَىٰٓ ١٣

Я избрал тебя, и посему прислушайся к тому, что внушается тебе в откровении.

மூஸாவே!- என் தூதுப் பணியை எடுத்துரைப்பதற்காக நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். நான் உனக்கு வஹியாக அறிவிப்பதை செவிதாழ்த்திக் கேட்பீராக.

20:14Страница 313

إِنَّنِيٓ أَنَا ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدۡنِي وَأَقِمِ ٱلصَّلَوٰةَ لِذِكۡرِيٓ ١٤

Воистину, Я - Аллах! Нет божества, кроме Меня. Поклоняйся же Мне и совершай намаз, чтобы помнить обо Мне.

நிச்சயமாக நானே அல்லாஹ் ஆவேன். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. எனவே என்னை மட்டுமே வணங்குவீராக. தொழுகையை, என்னை அதில் நினைவுகூர்வதற்காக பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவீராக.

20:15Страница 313

إِنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ أَكَادُ أُخۡفِيهَا لِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا تَسۡعَىٰ ١٥

Я едва ли не скрываю Час от Самого Себя, но он непременно настанет, чтобы каждому человеку воздали тем, к чему он стремился.

நிச்சயமாக மறுமை நாள் சந்தேகம் இல்லாமல் வந்தே தீரும், அது நிகழ்ந்தே தீரும். நான் அதனை மறைத்துவைக்க விரும்புகிறேன். அது வரும் சமயத்தை எந்தவொரு படைப்பும் அறிய முடியாது. ஆனால் தூதரின் அறிவிப்பின் மூலம் அதன் அடையாளங்களை அவர்கள் அறிவார்கள். ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மை அல்லது தீமையான செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவ்வாறு மறைத்து வைத்துள்ளான்.

20:16Страница 313

فَلَا يَصُدَّنَّكَ عَنۡهَا مَن لَّا يُؤۡمِنُ بِهَا وَٱتَّبَعَ هَوَىٰهُ فَتَرۡدَىٰ ١٦

Пусть не отворачивает тебя от него тот, кто не верует в него и потакает своим желаниям, а не то ты погибнешь.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல் தன் மனம் நேசிக்கும் பாவங்களை பின்பற்றும் நிராகரிப்பாளன் அதனை நம்பிக்கைகொண்டு, அதற்காக நற்செயல் புரிவதை விட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறு நீர் செய்தால் அழிந்துவிடுவீர்.

20:17Страница 313

وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ ١٧

Что это у тебя в правой руке, о Муса (Моисей)?».

மூஸாவே! உம்முடைய வலது கையில் உள்ளது என்ன?

20:18Страница 313

قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّؤُاْ عَلَيۡهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَـَٔارِبُ أُخۡرَىٰ ١٨

Муса (Моисей) сказал: «Это - мой посох. Я опираюсь на него и сбиваю им листья для моих овец (или отгоняю им моих овец). Я нахожу ему и другое применение».

மூசா கூறினார்: “அது என் கைத்தடி. நடக்கும்போது அதனை ஊன்றிக் கொள்வேன். அதனைக் கொண்டு மரத்திலிருந்து என் ஆடுகளுக்காக இலை பறிப்பேன். நான் குறிப்பிட்டதைத்தவிர அதில் இன்னும் வேறு சில பயன்களும் எனக்கு இருக்கின்றன.”

20:19Страница 313

قَالَ أَلۡقِهَا يَٰمُوسَىٰ ١٩

Аллах сказал: «О Муса (Моисей)! Брось его».

அல்லாஹ் கூறினான்: “மூஸாவே! அதனைப் போடுவீராக.”

20:20Страница 313

فَأَلۡقَىٰهَا فَإِذَا هِيَ حَيَّةٞ تَسۡعَىٰ ٢٠

Он бросил посох, и тот превратился в змею, которая быстро двигалась.

மூஸா அதனைப் போட்டார். அது விரைவாக, ஊர்ந்து செல்லக்கூடிய பாம்பாகி விட்டது.

20:21Страница 313

قَالَ خُذۡهَا وَلَا تَخَفۡۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا ٱلۡأُولَىٰ ٢١

Аллах сказал: «Возьми ее и не бойся. Мы вернем ее в прежнее состояние.

அல்லாஹ் மூசாவிடம் கூறினான்: “கைத்தடியை எடுப்பீராக. அது பாம்பாக மாறியதைக் கண்டு பயந்துவிடாதீர். நீர் அதனை எடுத்ததும் நாம் அதனை மீண்டும் முந்தைய நிலைக்கே திருப்புவோம்.”

20:22Страница 313

وَٱضۡمُمۡ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخۡرُجۡ بَيۡضَآءَ مِنۡ غَيۡرِ سُوٓءٍ ءَايَةً أُخۡرَىٰ ٢٢

Прижми свою руку к боку, и она выйдет белой (цвета молока, светящейся), без следов болезни. Вот тебе еще одно знамение!

உம் கையை உம் விலாப்புறத்தில் வைப்பீராக. அது வெண்குஷ்டமற்ற வெண்மையாக வெளிப்படும். இது உமக்கு இரண்டாவது சான்றாகும்.

20:23Страница 313

لِنُرِيَكَ مِنۡ ءَايَٰتِنَا ٱلۡكُبۡرَى ٢٣

Мы покажем тебе некоторые из Наших величайших знамений.

மூஸாவே!- நம்முடைய மகத்தான வல்லமையையும் நிச்சயமாக நீர் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் என்பதையும் அறிவிக்கும் நமது அத்தாட்சிகளை நாம் உமக்கு காட்டுவதற்காகவே இந்த இரு சான்றுகளையும் உமக்கு காட்டியுள்ளோம்.

20:24Страница 313

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ٢٤

Ступай к Фараону, ибо он преступил границы дозволенного».

மூஸாவே! ஃபிர்அவ்னிடம் செல்வீராக. நிச்சயமாக அவன் நிராகரித்து அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் வரம்புமீறி விட்டான்.

20:25Страница 313

قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِي صَدۡرِي ٢٥

Муса (Моисей) сказал: «Господи! Раскрой для меня мою грудь!

மூஸா பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்காக என் நெஞ்சை விசாலமாக்கித் தருவாயாக.

20:26Страница 313

وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي ٢٦

Облегчи мою миссию!

என் காரியத்தை எனக்கு எளிதாக்கு.

20:27Страница 313

وَٱحۡلُلۡ عُقۡدَةٗ مِّن لِّسَانِي ٢٧

Развяжи узел на моем языке,

தெளிவாகப் பேசுவதற்குரிய ஆற்றலை எனக்குத் தருவாயாக!

20:28Страница 313

يَفۡقَهُواْ قَوۡلِي ٢٨

чтобы они могли понять мою речь.

அப்போதுதான் உன் தூதை எடுத்துரைக்கும்போது அவர்கள் என் பேச்சை புரிந்துகொள்வார்கள்.

20:29Страница 313

وَٱجۡعَل لِّي وَزِيرٗا مِّنۡ أَهۡلِي ٢٩

Назначь мне помощника из моей семьи -

என் குடும்பத்திலிருந்து என் விஷயங்களுக்கு உதவிசெய்யக்கூடிய ஒருவரை ஏற்படுத்துவாயாக.

20:30Страница 313

هَٰرُونَ أَخِي ٣٠

брата моего Харуна (Аарона).

அவர் என் சகோதரர் ஹாரூன் இப்னு இம்ரானாக இருக்கட்டும்.

20:31Страница 313

ٱشۡدُدۡ بِهِۦٓ أَزۡرِي ٣١

Умножь благодаря ему силу мою

அவரைக்கொண்டு என் முதுகை வலுப்படுத்து.

20:32Страница 313

وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي ٣٢

и позволь ему разделить со мной мою миссию,

தூதுப்பணியில் என்னுடன் அவரையும் கூட்டாக்கு.

20:33Страница 313

كَيۡ نُسَبِّحَكَ كَثِيرٗا ٣٣

чтобы мы славили Тебя многократно

அதனால் நாங்கள் உன் தூய்மையை அதிகமதிகம் பறைசாற்ற வேண்டும்;

20:34Страница 313

وَنَذۡكُرَكَ كَثِيرًا ٣٤

и поминали Тебя многократно.

உன்னை நாங்கள் அதிகமதிகம் புகழ வேண்டும்.

20:35Страница 313

إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرٗا ٣٥

Воистину, Ты видишь нас».

நிச்சயமாக நீ எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எங்களின் எந்தவொரு விடயமும் உனக்கு மறைவாக இல்லை.”

20:36Страница 313

قَالَ قَدۡ أُوتِيتَ سُؤۡلَكَ يَٰمُوسَىٰ ٣٦

Аллах сказал: «О Муса (Моисей)! Ты уже получил то, что попросил.

அல்லாஹ் கூறினான்: “மூஸாவே! நீர் வேண்டியதை நாம் உமக்கு வழங்கிவிட்டோம்.”

20:37Страница 313

وَلَقَدۡ مَنَنَّا عَلَيۡكَ مَرَّةً أُخۡرَىٰٓ ٣٧

Мы и прежде оказывали тебе милость,

நாம் உம்மீது மீண்டும் ஒருமுறை அருள்புரிந்துள்ளோம்.

20:38Страница 314

إِذۡ أَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ ٣٨

когда внушили твоей матери откровение:

ஃபிர்அவ்னின் சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாக்கும் விதத்தில் ஒர் உதிப்பை நாம் உம் தாய்க்கு ஏற்படுத்தினோம்.

20:39Страница 314

أَنِ ٱقۡذِفِيهِ فِي ٱلتَّابُوتِ فَٱقۡذِفِيهِ فِي ٱلۡيَمِّ فَلۡيُلۡقِهِ ٱلۡيَمُّ بِٱلسَّاحِلِ يَأۡخُذۡهُ عَدُوّٞ لِّي وَعَدُوّٞ لَّهُۥۚ وَأَلۡقَيۡتُ عَلَيۡكَ مَحَبَّةٗ مِّنِّي وَلِتُصۡنَعَ عَلَىٰ عَيۡنِيٓ ٣٩

«Положи его в сундук и пусти его по реке, и река выбросит его на берег. Его подберет Мой враг и его враг». Я одарил тебя Своей любовью, и тебя взрастили у Меня на Глазах.

நாம் அவளுக்கு உள்ளுதிப்பின் மூலம் பின்வருமாறு கட்டளையிட்டோம்: “குழந்தை பிறந்த பிறகு அதனை ஒரு பெட்டியில் வைத்து கடலில் எறிந்து விடுவீராக. நம் கட்டளையின்படி கடல் அதனைக் கரை ஒதுக்கி விடும். அக்குழந்தையை எனக்கும் அக்குழந்தைக்கும் எதிரியாக இருக்கின்ற ஃபிர்அவ்ன் எடுப்பான்.” நான் உம்மீது என் அன்பைப் பொழிந்துள்ளேன். அதனால் மக்களும் உம்மை நேசித்தனர். நீர் என் கண்காணிப்பில், பாதுகாப்பில் பராமரிப்பில் வளர வேண்டும் என்பதற்காக.

20:40Страница 314

إِذۡ تَمۡشِيٓ أُخۡتُكَ فَتَقُولُ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ مَن يَكۡفُلُهُۥۖ فَرَجَعۡنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَۚ وَقَتَلۡتَ نَفۡسٗا فَنَجَّيۡنَٰكَ مِنَ ٱلۡغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونٗاۚ فَلَبِثۡتَ سِنِينَ فِيٓ أَهۡلِ مَدۡيَنَ ثُمَّ جِئۡتَ عَلَىٰ قَدَرٖ يَٰمُوسَىٰ ٤٠

Твоя сестра пришла к семье Фараона и сказала: «Не указать ли вам на ту, которая будет заботиться о нем?». Мы вернули тебя к твоей матери, чтобы порадовался ее взор и чтобы она не горевала. Ты убил человека, и Мы спасли тебя от скорби и подвергли тебя тяжелому испытанию. О Муса (Моисей)! Ты пробыл многие годы среди жителей Мадьяна, а теперь вернулся в срок.

பெட்டியை பின்தொடர்ந்துகொண்டே உம் சகோதரி சென்றாள். அக்குழந்தையை எடுத்தவர்களிடம் உம் சகோதரி கூறினாள்: “நான் உங்களுக்கு இக்குழந்தையை பாதுகாத்து பாலூட்டி, வளர்க்கும் ஒருவரைக் குறித்து அறிவிக்கட்டுமா?” உம் தாய் மகிழ்ச்சியடைவதற்காக, உம்மைக் குறித்து கவலையடையாமல் இருப்பதற்காக உம்மை அவளிடம் திரும்பச் செய்து உம்மீது அருள்புரிந்தோம். நீர் கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றுவிட்டீர். அதனால் கிடைக்கும் தண்டனையிலிருந்து நாம் உம்மைக் காப்பாற்றி உம்மீது அருள்புரிந்தோம். உமக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட ஒவ்வொரு சோதனையிலிருந்தும் உம்மை விடுவித்தோம். நீர் மத்யன்வாசிகளிடம் நீண்ட காலம் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே உரையாடுவதற்கு உமக்கு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் வந்தீர்.

20:41Страница 314

وَٱصۡطَنَعۡتُكَ لِنَفۡسِي ٤١

Я избрал тебя для Себя.

நான் உமக்கு வஹியாக அறிவிப்பவற்றை நீர் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நான் உம்மை என் புறத்திலிருந்து தூதராக தேர்ந்தெடுத்தேன்.

20:42Страница 314

ٱذۡهَبۡ أَنتَ وَأَخُوكَ بِـَٔايَٰتِي وَلَا تَنِيَا فِي ذِكۡرِي ٤٢

Ступайте же вместе с твоим братом с Моими знамениями и не уставайте поминать Меня.

மூஸாவே!- நீரும் உம் சகோதரர் ஹாரூனும் அல்லாஹ்வின் ஆற்றலையும் அவனது ஏகத்துவத்தையும் அறிவிக்கக்கூடிய நம்முடைய சான்றுகளுடன் செல்லுங்கள். என் பக்கம் அழைப்பதைவிட்டும் என்னை நினைவுகூர்வதைவிட்டும் சோர்ந்துவிடாதீர்கள்.

20:43Страница 314

ٱذۡهَبَآ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ٤٣

Ступайте к Фараону вдвоем, ибо он преступил границы дозволенного.

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் அல்லாஹ்வை நிராகரிப்பதில் பிடிவாதமாக இருந்து வரம்பு மீறிவிட்டான்.

20:44Страница 314

فَقُولَا لَهُۥ قَوۡلٗا لَّيِّنٗا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ ٤٤

Говорите с ним мягко, быть может, он прислушается к назиданию или устрашится».

அவன் அறிவுரையை ஏற்று அல்லாஹ்வை அஞ்சி பாவமன்னிப்பு கோரும் பொருட்டு கடினமற்ற மென்மையான வார்த்தைகளை அவனுக்குக் கூறுங்கள்.

20:45Страница 314

قَالَا رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفۡرُطَ عَلَيۡنَآ أَوۡ أَن يَطۡغَىٰ ٤٥

Они сказали: «Господь наш! Мы боимся, что он поспешит наказать нас или преступит границы дозволенного».

மூஸாவும் ஹாரூனும் கூறினார்கள்: “எங்களின் அழைப்பை நிறைவுசெய்வதற்கு முன்பே அவன் எங்களைத் தண்டித்துவிடுவான் அல்லது வரம்புமீறி அநியாயமாக எங்களைக் கொலை அல்லது வேறு ஏதும் செய்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் அஞ்சுகிறோம்.”

20:46Страница 314

قَالَ لَا تَخَافَآۖ إِنَّنِي مَعَكُمَآ أَسۡمَعُ وَأَرَىٰ ٤٦

Аллах сказал: «Не бойтесь, ибо Я - с вами. Я слышу и вижу.

அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் கூறினான்: “நீங்கள் அஞ்சாதீர்கள். நான் உதவி செய்வதன் மூலம் உங்களுடன் இருக்கின்றேன். உங்களுக்கும் அவனுக்கும் இடையில் நடப்பதை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்.

20:47Страница 314

فَأۡتِيَاهُ فَقُولَآ إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَا تُعَذِّبۡهُمۡۖ قَدۡ جِئۡنَٰكَ بِـَٔايَةٖ مِّن رَّبِّكَۖ وَٱلسَّلَٰمُ عَلَىٰ مَنِ ٱتَّبَعَ ٱلۡهُدَىٰٓ ٤٧

Ступайте к нему вдвоем и скажите: «Мы - посланники твоего Господа. Отпусти с нами сынов Исраила (Израиля) и не причиняй им мучения. Мы явились к тебе со знамением от нашего Господа. Мир тому, кто последовал верному руководству!

நீங்கள் இருவரும் அவனிடம் சென்று அவனிடம் கூறுங்கள்: “-ஃபிர்அவ்னே!- நாங்கள் இருவரும் உம் இறைவனின் தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பிவிடும். அவர்களின் ஆண்மக்களைக் கொலைசெய்து பெண்மக்களை உயிருடன் விட்டுவிட்டு அவர்களை வேதனைக்குள்ளாக்காதீர். நாங்கள் உண்மையாளர்கள் என்பதைக் காட்டுவதற்காக உம் இறைவனிடமிருந்து சான்றினைக் கொண்டு வந்துள்ளோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியவருக்கு அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு உண்டு.

20:48Страница 314

إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨

Мы получили откровение о том, что мучениям подвергнется всякий, кто счел истину ложью и отвернулся».

அல்லாஹ்வின் சான்றுகளை பொய்ப்பித்து, தூதர்கள் கொண்டு வந்ததைப் புறக்கணித்தவர்களுக்கே, இவ்வுலகிலும், மறுவுலகிலும் வேதனை உண்டு என்று நிச்சயமாக எங்கள் இறைவன் எங்களுக்கு அறிவித்துள்ளான்.

20:49Страница 314

قَالَ فَمَن رَّبُّكُمَا يَٰمُوسَىٰ ٤٩

Фараон сказал: «Кто же ваш Господь, о Муса (Моисей)?».

ஃபிர்அவ்ன் அவர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தவாறு கேட்டான்: “மூஸாவே! என் பக்கம் உங்கள் இருவரையும் அனுப்பியதாக நீங்கள் எண்ணும் உங்கள் இறைவன் யார்?”

20:50Страница 314

قَالَ رَبُّنَا ٱلَّذِيٓ أَعۡطَىٰ كُلَّ شَيۡءٍ خَلۡقَهُۥ ثُمَّ هَدَىٰ ٥٠

Муса (Моисей) ответил: «Господь наш - Тот, Кто придал облик всякой вещи, а затем указал всему путь».

மூஸா கூறினார்: “ஒவ்வொரு படைப்புக்கும் உருவத்தையும் அதற்குப் பொருத்தமான வடிவத்தையும் வழங்கி, பின்பு படைக்கப்பட்டதன் நோக்கத்தின்பால் படைப்பினங்களை வழிகாட்டியவனே எங்கள் இறைவன்.”

20:51Страница 314

قَالَ فَمَا بَالُ ٱلۡقُرُونِ ٱلۡأُولَىٰ ٥١

Фараон сказал: «А что будет с первыми поколениями?».

ஃபிர்அவ்ன் கேட்டான்: “நிராகரிப்பில் இருந்த முந்தைய சமூகங்களின் நிலை என்ன?”

20:52Страница 315

قَالَ عِلۡمُهَا عِندَ رَبِّي فِي كِتَٰبٖۖ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى ٥٢

Муса (Моисей) ответил: «Знание об этом - у моего Господа в Писании. Мой Господь не ошибается и не забывает».

மூஸா ஃபிர்அவ்னிடம் கூறினார்: “அந்த சமூகங்களைக் குறித்த அறிவு என் இறைவனிடமே உள்ளது. அது லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனை அறிவதில் என் இறைவன் தவறிழைப்பதுமில்லை; அவற்றில் அறிந்ததை மறந்து விடுவதுமில்லை.

20:53Страница 315

ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَسَلَكَ لَكُمۡ فِيهَا سُبُلٗا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّن نَّبَاتٖ شَتَّىٰ ٥٣

Он сделал землю для вас колыбелью, проложил для вас на ней дороги и низвел с неба воду. Благодаря ей Мы взрастили различные растения.

அவனே பூமியை நீங்கள் வாழ்வதற்கேற்ப வசதியாக அமைத்து அதில் நீங்கள் செல்வதற்கான பொருத்தமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளான். அவன் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன்மூலம் பல்வேறு வகையான தாவரங்களை வெளிப்படுத்துகிறான்.

20:54Страница 315

كُلُواْ وَٱرۡعَوۡاْ أَنۡعَٰمَكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ ٥٤

Вкушайте сами и пасите свой скот. Воистину, в этом - знамения для обладающих разумом.

மனிதர்களே! நாம் உங்களுக்கு வெளிப்படுத்திய தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள். உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். நிச்சயமாக அவ்வாறு கூறப்பட்டுள்ளவைகளில் அறிவுடையோருக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.

20:55Страница 315

۞ مِنۡهَا خَلَقۡنَٰكُمۡ وَفِيهَا نُعِيدُكُمۡ وَمِنۡهَا نُخۡرِجُكُمۡ تَارَةً أُخۡرَىٰ ٥٥

Мы сотворили вас из нее (земли), в нее Мы вас вернем и из нее выведем еще раз.

பூமியின் மண்ணிலிருந்தே உங்களின் தந்தை ஆதமைப் படைத்தோம். நீங்கள் இறந்த பிறகு அதில்தான் அடக்கம் செய்யப்படுவீர்கள். மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும்போது அதிலிருந்தே மீண்டும் உங்களை வெளிப்படுத்துவோம்.

20:56Страница 315

وَلَقَدۡ أَرَيۡنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ ٥٦

Мы явили ему (Фараону) всевозможные Наши знамения, но он счел их ложью и отказался.

நாம் ஃபிர்அவ்னுக்கு நம்முடைய ஒன்பது சான்றுகளை வெளிப்படுத்தினோம். ஆனால் அவன் அவற்றைக் கண்டு பொய்ப்பித்தான். அவன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு விடையளிப்பதை தவிர்த்துக்கொண்டான்.

20:57Страница 315

قَالَ أَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ أَرۡضِنَا بِسِحۡرِكَ يَٰمُوسَىٰ ٥٧

Он сказал: «О Муса (Моисей)! Неужели ты явился к нам, чтобы изгнать нас из нашей земли своим колдовством?

ஃபிர்அவ்ன் கூறினான்: “-மூஸாவே!- நீர் கொண்டுவந்துள்ள சூனியத்தைக் கொண்டு உம் ஆட்சியை நிலைநாட்டி எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றவா வந்துள்ளீர்?

20:58Страница 315

فَلَنَأۡتِيَنَّكَ بِسِحۡرٖ مِّثۡلِهِۦ فَٱجۡعَلۡ بَيۡنَنَا وَبَيۡنَكَ مَوۡعِدٗا لَّا نُخۡلِفُهُۥ نَحۡنُ وَلَآ أَنتَ مَكَانٗا سُوٗى ٥٨

Мы непременно покажем тебе такое же колдовство. Назначь же срок для нашей встречи на открытом месте, где мы будем иметь равные шансы, и никто из нас не должен нарушить его».

மூஸாவே!- உனது சூனியத்தைபோல் நாங்களும் சூனியத்தைக் கொண்டு வருவோம். எங்களுக்கும் உமக்கும் இடையில் குறிப்பிட்ட நேரத்தையும், இடத்தையும் நிர்ணயித்துக் கொள்வீராக. நாங்களும் அதனை மீற மாட்டோம். நீரும் அதனை மீறக்கூடாது. அது இரு பிரிவினருக்கும் நடுநிலையான இடமாக இருக்க வேண்டும்.

20:59Страница 315

قَالَ مَوۡعِدُكُمۡ يَوۡمُ ٱلزِّينَةِ وَأَن يُحۡشَرَ ٱلنَّاسُ ضُحٗى ٥٩

Муса сказал: «Сроком для вас будет день украшения, и пусть люди соберутся утром».

மூஸா ஃபிர்அவ்னிடம் கூறினார்: “மக்கள் தங்களின் பண்டிகையைக் கொண்டாடியவாறு நண்பகல் வேளையில் ஒன்றுகூடும் பண்டிகை நாளே எங்களுக்கும் உங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நாளாக இருக்கட்டும்.”

20:60Страница 315

فَتَوَلَّىٰ فِرۡعَوۡنُ فَجَمَعَ كَيۡدَهُۥ ثُمَّ أَتَىٰ ٦٠

Фараон отвернулся и собрал свои козни (собрал своих колдунов), а затем пришел в назначенный срок.

ஃபிர்அவ்ன் திரும்பிச்சென்று தன் சூழ்ச்சிகள், தந்திரங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டினான். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு குறித்த நேரத்தில் வெற்றி பெற வேண்டுமென வந்து சேர்ந்தான்.

20:61Страница 315

قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ ٦١

Муса (Моисей) сказал им: «Горе вам! Не возводите навет на Аллаха, а не то Он уничтожит вас, подвергнув мучениям. Неудача постигнет того, кто измышляет ложь».

மூஸா ஃபிர்அவ்னின் சூனியக்காரர்களுக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் மக்களை ஏமாற்றும் சூனியத்தைக்கொண்டு அல்லாஹ்வின்மீது பொய்யாக இட்டுக்கட்டாதீர்கள். அவன் தன் வேதனையால் உங்கள் அனைவரையும் அழித்துவிடுவான். அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டியவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்.

20:62Страница 315

فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ ٦٢

Они стали спорить между собой о своих действиях и сохранили свой разговор в тайне.

மூஸாவின் பேச்சைக் கேட்ட சூனியக்காரர்கள் தங்களுக்குள் இரகசியமாக விவாதித்துக் கொண்டார்கள்.

20:63Страница 315

قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ ٦٣

Они сказали: «Эти двое мужчин - колдуны. Они хотят колдовством изгнать вас из вашей страны и вдвоем следовать вашим превосходным путем.

சூனியக்காரர்கள் சிலர் சிலரிடம் இரகசியமாகக் கூறினார்கள்: “நிச்சயமாக மூஸாவும் ஹாரூனும் சூனியக்காரர்களாவார். தாங்கள் கொண்டுவந்த சூனியத்தைக்கொண்டு உங்களை எகிப்திலிருந்து வெளியேற்றவும் உங்களின் உயர்ந்த வாழ்க்கை வழிமுறைகளை, உங்களின் உயர்ந்த கொள்கைகளை போக்கவும் நாடுகிறார்கள்.

20:64Страница 315

فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ ٦٤

Объедините ваши козни и выстройтесь в ряд. Сегодня преуспеет тот, кто одержит верх».

எனவே நீங்கள் உங்களின் விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். பின்னர் ஒன்றுதிரண்டு வாருங்கள். உங்களிடம் உள்ளதை ஒரே தடவையில் எறிந்து விடுங்கள். தனது எதிரியை இன்று யார் மிகைப்பாரோ அவர்தாம் வெற்றியாளராவார்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English