Аль-Мухтасар · Тафсир · на тамильском
الحج
Аль-Хаджж
Паломничество · Мединская · 78 аятов
22:1Страница 332
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ إِنَّ زَلۡزَلَةَ ٱلسَّاعَةِ شَيۡءٌ عَظِيمٞ ١
О люди! Бойтесь вашего Господа! Воистину, сотрясение Часа является ужасным событием.
மனிதர்களே! உங்கள் இறைவன் ஏவிய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நெருங்கும்போது ஏற்படும் பூமியதிர்ச்சி மற்றும் ஏனைய பயங்கரங்கள் ஒரு மகத்தான நிகழ்வாகும். அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களைச் செய்து அந்த நாளுக்காக உங்களை தயாராக்குவது அவசியமாகும்.
22:2Страница 332
يَوۡمَ تَرَوۡنَهَا تَذۡهَلُ كُلُّ مُرۡضِعَةٍ عَمَّآ أَرۡضَعَتۡ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٞ ٢
В тот день, когда вы увидите его, каждая кормящая мать забудет того, кого она кормила, а каждая беременная женщина выкинет свой плод. Ты увидишь людей пьяными, но они не будут пьяны, зато мучения от Аллаха будут тяжки.
அந்நாளை நீங்கள் காணும்போது பாலூட்டக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவாள். கர்ப்பமான ஒவ்வொரு பெண்ணும் அந்த நாளில் ஏற்படும் பயத்தால் தன் வயிற்றிலுள்ளதை ஈன்றுவிடுவாள். அந்த நாளின் பயங்கரத்தால் மக்கள் புத்தியிழந்து மயங்கியவர்களைப்போல் தோன்றுவார்கள். அவர்கள் மதுவின் போதையால் மயங்கியவர்களாக இல்லை. மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது. அதுதான் அவர்களின் அறிவைப் போக்கிவிட்டது.
22:3Страница 332
وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّبِعُ كُلَّ شَيۡطَٰنٖ مَّرِيدٖ ٣
Среди людей есть такие, которые спорят об Аллахе, не имея знаний, и следуют за всяким мятежным дьяволом.
மறுமை நாளில் மரணித்தவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்படுவதைக்குறித்து எவ்வித அறிவுமின்றி அல்லாஹ்வின் வல்லமையில் வாதம் புரிபவர்களும் மனிதர்களில் உண்டு. தனது இறைவனை மீறிய ஷைத்தான்களையும் வழிகேடான தலைவர்களையுமே அவன் தனது நம்பிக்கையிலும் வார்த்தையிலும் பின்பற்றுகிறான்.
22:4Страница 332
كُتِبَ عَلَيۡهِ أَنَّهُۥ مَن تَوَلَّاهُ فَأَنَّهُۥ يُضِلُّهُۥ وَيَهۡدِيهِ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ ٤
Ему было предписано, что любого, кто сочтет его своим покровителем и помощником, он введет в заблуждение и приведет к мучениям в Пламени.
வரம்புமீறிய இந்த மனித மற்றும் ஜின் இனத்திலுள்ள ஷைத்தானை யார் பின்பற்றி அவனை உண்மைப்படுத்துவார்களோ அவன் அவர்களை சத்தியப் பாதையைவிட்டுத் திருப்பி நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்கு வழிகாட்டி, நரக நெருப்பின் பக்கம் இழுத்துச் சென்றுவிடுவான் என்று விதிக்கப்பட்டுள்ளது.
22:5Страница 332
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّنَ ٱلۡبَعۡثِ فَإِنَّا خَلَقۡنَٰكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ مِن مُّضۡغَةٖ مُّخَلَّقَةٖ وَغَيۡرِ مُخَلَّقَةٖ لِّنُبَيِّنَ لَكُمۡۚ وَنُقِرُّ فِي ٱلۡأَرۡحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ نُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡلَا يَعۡلَمَ مِنۢ بَعۡدِ عِلۡمٖ شَيۡـٔٗاۚ وَتَرَى ٱلۡأَرۡضَ هَامِدَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡ وَأَنۢبَتَتۡ مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ ٥
О люди! Если вы сомневаетесь в воскрешении, то ведь Мы сотворили вас из земли, потом - из капли, потом - из сгустка крови, потом - из разжеванного кусочка, сформировавшегося или не сформировавшегося. Так Мы разъясняем вам истину. Мы помещаем в утробах то, что желаем, до назначенного срока. Потом Мы выводим вас младенцами, чтобы вы могли достигнуть зрелого возраста. Одни из вас умирают, другие же возвращаются в жалкую старость и забывают все, что знали. Ты видишь безжизненную землю. Но стоит Нам ниспослать на нее воду, как она приходит в движение, набухает и порождает всякие прекрасные растения.
மனிதர்களே! மரணித்த பிறகு மீண்டும் உங்களை நாம் உயிர்கொடுத்து எழுப்புவோம் என்ற எங்கள் வல்லமையில் நீங்கள் சந்தேகம் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் படைக்கப்பட்ட விதத்தைக் கவனித்துப் பாருங்கள். உங்களின் தந்தை ஆதமை நாம் மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் அவருடைய சந்ததியினரை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் ஆண் செலுத்தும் விந்திலிருந்து படைத்தோம். பின்னர் விந்து இரத்தக்கட்டியாக மாற்றமடைகிறது. பின்னர் இரத்தக்கட்டி சதைப்பிண்டமாக மாற்றமடைகிறது. பின்னர் சதைப்பிண்டம் முழுமையான படைப்பாக மாறி கருவறையில் தங்கியிருந்து உயிருள்ள குழந்தையாக வெளிப்படுகிறது. அல்லது முழுமையடையாத படைப்பாக கற்பப்பையிலிருந்து வெளிப்பட்டுவிடுகிறது. உங்களைப் படிப்படியாக படைக்கும் நம்முடைய வல்லமையை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இவற்றை எடுத்துரைக்கின்றோம். நாம் நாடிய சிசுக்களை குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் வரை ஒன்பது மாதங்கள் கருவறையில் தங்கச் செய்கின்றோம். பின்னர் உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து உங்களைக் குழந்தைகளாக வெளிப்படுத்துகின்றோம். பின்னர் நீங்கள் முழுமையான உடல் பலத்தையும் அறிவாற்றலையும் அடைகிறீர்கள். உங்களில் சிலர் இதற்கு முன்னரே மரணிப்போரும் இருக்கிறார்கள். சிலர் உடலும் அறிவும் பலவீனமடையும் முதுமை வரை வாழ்கிறார்கள். எந்த அளவுக்கெனில் குழந்தையைவிட மோசமானவர்களாக, தான் அறிந்தவற்றை அறியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். நீர் பூமியை தாவரங்களற்ற வறண்ட பூமியாக காண்கிறீர். நாம் அதன்மீது மழை பொழியச் செய்தவுடன் வித்துக்கள் வெடித்து செடிகொடிகள் செழித்து வளர்கின்றன. பார்ப்பதற்கு அழகான பலவகையான தாவரங்களை அது முளைக்கச் செய்கிறது.
22:6Страница 333
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّهُۥ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٦
Это происходит, потому что Аллах является Истиной, оживляет мертвых и способен на всякую вещь,
உங்களைப் படைத்தல், அதன் கட்டங்கள், உங்களில் பிறப்பவர்களின் நிலமைகள் ஆகிய- நாம் உங்களுக்குக் குறிப்பிட்டவை, உங்களைப் படைத்த அல்லாஹ்வே சந்தேகமற்ற உண்மையாளன், நீங்கள் வணங்கும் உங்கள் சிலைகளல்ல என்பதை நம்பிக்கைகொள்வதற்கும், அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியன், நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன், எதுவும் அவனுக்கு இயலாததல்ல என்பதை நம்பிக்கை கொள்வதற்குமேயாகும்.
22:7Страница 333
وَأَنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَأَنَّ ٱللَّهَ يَبۡعَثُ مَن فِي ٱلۡقُبُورِ ٧
потому что Час, в котором нет сомнения, непременно наступит и потому что Аллах воскресит тех, кто в могилах.
மறுமை நாள் நிச்சயமாக வந்தே தீரும், அது வந்துவிடுவதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவன் மரணித்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக நிச்சயமாக அவர்களை அவர்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுப்பியே தீருவான் என்பதையும் நீங்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
22:8Страница 333
وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَلَا هُدٗى وَلَا كِتَٰبٖ مُّنِيرٖ ٨
Среди людей есть такой, который спорит об Аллахе, не имея ни знаний, ни верного руководства, ни освещающего Писания.
நிராகரிப்பாளர்களில் சிலர், அல்லாஹ்வின் ஏகத்துவத்தில் தர்க்கம் புரிகின்றனர். ஆனால் அவர்களிடம் சத்தியத்தை அடைந்துகொள்ளும் அறிவும் இல்லை. அதனை அவர்களுக்கு அறிவிக்கும் ஒரு வழிகாட்டியையும் அவர்கள் பின்பற்றவுமில்லை. அதற்கு வழிகாட்டும், அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட ஒளிவீசும் வேதமும் அவர்களிடமில்லை.
22:9Страница 333
ثَانِيَ عِطۡفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِۖ لَهُۥ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَنُذِيقُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَذَابَ ٱلۡحَرِيقِ ٩
Он надменно поворачивает шею, чтобы сбить других с пути Аллаха. Ему уготован позор в этом мире, а в День воскресения Мы дадим ему вкусить мучения от обжигающего Огня.
அவன் மக்களை நம்பிக்கைகொள்வதை விட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை விட்டும் தடுப்பதற்காக கர்வத்தினால் தன் கழுத்தை திருப்பிக்கொள்கிறான். இத்தகைய பண்புகளை உடையவனுக்கு இவ்வுலகில் அடையப்போகும் வேதனையால் இழிவுதான் உண்டு. மறுமையில் சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.
22:10Страница 333
ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ يَدَاكَ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ١٠
Ему будет сказано: «Это - за то, что приготовили твои руки, ведь Аллах не поступает несправедливо с рабами».
அவனிடம் கூறப்படும்: “நீ அனுபவிக்கும் இந்த வேதனை உன்னுடைய நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் நீ சம்பாதித்ததாகும். எந்தப் பாவமுமின்றி அல்லாஹ் தன் படைப்புகளில் யாரையும் வேதனை செய்யமாட்டான்.”
22:11Страница 333
وَمِنَ ٱلنَّاسِ مَن يَعۡبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرۡفٖۖ فَإِنۡ أَصَابَهُۥ خَيۡرٌ ٱطۡمَأَنَّ بِهِۦۖ وَإِنۡ أَصَابَتۡهُ فِتۡنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجۡهِهِۦ خَسِرَ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ ١١
Среди людей есть и такой, который поклоняется Аллаху, находясь на грани между верой и неверием. Если ему достается добро, то благодаря этому он чувствует себя уверенно; если же его постигает искушение, то он оборачивается вспять. Он теряет как этот мир, так и Последнюю жизнь. Это и есть очевидный убыток!
மக்களில் சிலர் தடுமாற்றமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சந்தேகத்துடனே அல்லாஹ்வை வணங்குகிறார்கள். ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் நன்மை அவர்களுக்கு ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையிலும் அவனை வணங்குவதிலும் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் வறுமை, நோய் போன்ற சோதனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டால் தங்களின் மார்க்கத்தை துர்ச்சகுனமாகக் கருதி, மதம்மாறி விடுகிறார்கள். அவர்கள் இவ்வுலகையும் இழந்துவிட்டார்கள். ஏனெனில் அவனது நிராகரிப்பு அவனுக்கு உலகில் எழுதப்படாத எவ்வித பாக்கியத்தையும் அதிகரிக்காது. அல்லாஹ்வின் வேதனையைப் பெறுவதன் மூலம் மறுவுலகையும் இழந்துவிட்டார்கள். இதுதான் தெளிவான இழப்பாகும்.
22:12Страница 333
يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ ١٢
Вместо Аллаха он взывает к тому, что не приносит ему ни вреда, ни пользы. Это и есть глубокое заблуждение!
அவர்கள் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவைகளுக்கு மாறுசெய்தால் அவைகளால் அவனுக்கு பாதிப்பையோ அவற்றுக்கு அவன் கட்டுப்பட்டால் அவனுக்குப் பலனையோ அவற்றால் ஏற்படுத்தமுடியாது. எவ்வித பலனையும் தீங்கையும் அளிக்க இயலாத சிலைகளை அழைப்பது சத்தியத்தை விட்டு தூரமாக வழிகெட்டுச் செல்வதாகும்.
22:13Страница 333
يَدۡعُواْ لَمَن ضَرُّهُۥٓ أَقۡرَبُ مِن نَّفۡعِهِۦۚ لَبِئۡسَ ٱلۡمَوۡلَىٰ وَلَبِئۡسَ ٱلۡعَشِيرُ ١٣
Он взывает к тому, кто может быстрее навредить, чем принести пользу. Плох такой господин! Плох такой товарищ!
சிலைகளை வணங்கும் இந்த நிராகரிப்பாளன், பலனை விட அதிக உறுதியான பாதிப்பை ஏற்படுத்துவோரையே அழைக்கின்றான். பலனை விட அதிக பாதிப்பையே ஏற்படுத்தும் அந்த தெய்வங்கள் மோசமானவையாகும்! அவற்றிடம் உதவி தேடுவோருக்கு அது மோசமான உதவியாளனாகும். அதனுடன் சகவாசம் கொள்வோருக்கு அது மோசமான தோழனாகும்!
22:14Страница 333
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ ١٤
А тех, которые уверовали и совершали праведные деяния, Аллах введет в Райские сады, в которых текут реки. Воистину, Аллах поступает так, как пожелает.
தன்னை நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்யக்கூடியவன். தான் நாடியவர்களுக்குக் கருணை காட்டுவான். தான் நாடியவர்களைத் தண்டிப்பான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
22:15Страница 333
مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ فَلۡيَمۡدُدۡ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لۡيَقۡطَعۡ فَلۡيَنظُرۡ هَلۡ يُذۡهِبَنَّ كَيۡدُهُۥ مَا يَغِيظُ ١٥
Кто полагает, что Аллах не окажет ему (Мухаммаду) помощи в этом мире и в Последней жизни, пусть подвяжет веревку к небу (или потолку), а затем перережет ее и посмотрит, устранит ли его хитрость то, что вызывает его ярость.
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உதவிசெய்ய மாட்டான் என்று எண்ணுபவர் தன் வீட்டின் கூரையில் ஒரு கயிற்றை நீட்டட்டும். பின்னர் அவர் அதைக்கொண்டு பூமியை விட்டும் தொங்கி அதை தன்னை மாய்த்துக்கொள்ளட்டும். பின்னர் தன் மனதில் தேங்கியிருந்த கோபம் தணிந்துவிடுகிறதா என்று பார்க்கட்டும். பிடிவாதமுடையவன் விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும் அல்லாஹ் தன் தூதருக்கு உதவி செய்யக்கூடியவன்.
22:16Страница 334
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ وَأَنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يُرِيدُ ١٦
Таким образом Мы ниспослали его (Коран) в виде ясных аятов, и Аллах ведет прямым путем того, кого пожелает.
மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான தெளிவான ஆதாரங்களை நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியது போன்றே முஹம்மதின் மீது குர்ஆனை தெளிவான சான்றுகளாக இறக்கியுள்ளோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அருளால் தான் நாடியவர்களுக்கு நேர் வழியை அடைவதற்கு உதவுகிறான்.
22:17Страница 334
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلۡمَجُوسَ وَٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ إِنَّ ٱللَّهَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ١٧
В День воскресения Аллах рассудит между верующими, исповедующими иудаизм, сабиями, христианами, огнепоклонниками и многобожниками. Воистину, Аллах является Свидетелем всякой вещи.
நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தில் உள்ளவர்கள், யூதர்கள், சாபியீன்கள் - சில இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள்- கிருஸ்தவர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள் ஆகியோரிடையே மறுமை நாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அவர்களில் நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். மற்றவர்களை நரகத்தில் புகுத்திவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் சொல், செயல் என அனைத்திற்கும் சாட்சியாளனாக இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
22:18Страница 334
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَسۡجُدُۤ لَهُۥۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلۡجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٞ مِّنَ ٱلنَّاسِۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيۡهِ ٱلۡعَذَابُۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكۡرِمٍۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يَشَآءُ۩ ١٨
Неужели ты не видишь, что перед Аллахом падают ниц те, кто на небесах и на земле, солнце, луна, звезды, горы, деревья, животные и многие люди. А многие из них заслуживают мучений. Никто не окажет почтения тому, кого унизит Аллах. Воистину, Аллах поступает так, как пожелает.
தூதரே!- நிச்சயமாக வானங்களிலுள்ள வானவர்களும் பூமியிலுள்ள நம்பிக்கைகொண்ட மனித, ஜின் இனத்தாரும் அல்லாஹ்வை வழிப்படுவதற்காக சிரம்பணிகின்றார்கள். மேலும் சூரியனும், சந்திரனும், வானிலுள்ள நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பூமியிலுள்ள உயிரினங்களும் அவனுக்குக் கட்டுப்பட்டு சிரம்பணிகின்றன. இன்னும் ஏராளமான மக்களும் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிகிறார்கள் என்பதை நீர் அறியவில்லையா? அதிகமானோர் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிவதற்கு மறுக்கின்றனர். அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை உறுதியாகி விட்டது. யாருக்கு அல்லாஹ் அவருடைய நிராகரிப்பின் காரணமாக இழிவை விதித்துவிட்டானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
22:19Страница 334
۞ هَٰذَانِ خَصۡمَانِ ٱخۡتَصَمُواْ فِي رَبِّهِمۡۖ فَٱلَّذِينَ كَفَرُواْ قُطِّعَتۡ لَهُمۡ ثِيَابٞ مِّن نَّارٖ يُصَبُّ مِن فَوۡقِ رُءُوسِهِمُ ٱلۡحَمِيمُ ١٩
Вот две тяжущиеся группы, которые препирались по поводу своего Господа. Для тех, которые не уверовали, выкроят одеяния из Огня, а на головы им будут лить кипяток.
தமது இறைவனுடைய விடயத்தில் தம்மில் யார் சத்தியவாதிகள் என முரண்பட்டுக்கொள்ளும் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் நம்பிக்கையாளர்கள், மற்றொரு பிரிவினர் நிராகரிப்பாளர்கள். ஆடை உடலை சூழ்ந்துகொள்வது போல நிராகரிப்பாளர்களை நரகம் சூழ்ந்துகொள்ளும். அவர்களின் தலைக்கு மேலிருந்து கொதிக்கும் நீர் கொட்டப்படும்.
22:20Страница 334
يُصۡهَرُ بِهِۦ مَا فِي بُطُونِهِمۡ وَٱلۡجُلُودُ ٢٠
От него будут плавиться их внутренности и кожа.
அதன் அதிக வெப்பத்தினால் அவர்களின் வயிற்றிலுள்ள குடல்கள் உருக்கிவிடுவதோடு அவர்களின் தோல்களையும் தாக்கி அதனையும் உருக்கிவிடும்.
நரகத்தில் வானவர்கள் இரும்புச் சம்மட்டியால் அவர்களின் தலைகளில் அடிப்பார்கள்.
22:22Страница 334
كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَا مِنۡ غَمٍّ أُعِيدُواْ فِيهَا وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ ٢٢
Каждый раз, когда они захотят выбраться оттуда и избавиться от печали, их вернут обратно. Вкусите мучения от обжигающего Огня!
அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனை தாங்காமல் நரகிலிருந்து வெளியேற முயற்சி செய்யும்போதெல்லாம் அதிலேயே அவர்கள் தள்ளப்படுவார்கள். அவர்களிடம் கூறப்படும்: “கொழுந்து விட்டெரியும் நெருப்பின் வேதனை அனுபவியுங்கள்.”
22:23Страница 334
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ ٢٣
А тех, которые уверовали и совершали праведные деяния, Аллах введет в Райские сады, в которых текут реки. Там они будут украшены золотыми браслетами и жемчугом, а их одеяния будут из шелка.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்ட நம்பிக்கையாளர்களை அல்லாஹ் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு தங்கம் மற்றும் முத்துகளிலான காப்புகளை அணிவித்து அல்லாஹ் அலங்கரிப்பான். அங்கு அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்.
22:24Страница 335
وَهُدُوٓاْ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلۡقَوۡلِ وَهُدُوٓاْ إِلَىٰ صِرَٰطِ ٱلۡحَمِيدِ ٢٤
Их научили благим словам и наставили на путь Достохвального.
லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுதல், அல்லாஹ்வைப் புகழ்தல், அவனுடைய பெருமையை எடுத்துரைத்தல் போன்ற நல்ல வார்த்தைகளின் பக்கமும் சிறப்பான இஸ்லாத்தின் பாதையின் பக்கமும் அல்லாஹ் அவர்களுக்கு உலக வாழ்வில் வழிகாட்டினான்.
22:25Страница 335
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ ٱلَّذِي جَعَلۡنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلۡعَٰكِفُ فِيهِ وَٱلۡبَادِۚ وَمَن يُرِدۡ فِيهِ بِإِلۡحَادِۭ بِظُلۡمٖ نُّذِقۡهُ مِنۡ عَذَابٍ أَلِيمٖ ٢٥
Воистину, тем, которые не веруют, сбивают других с пути Аллаха, не пускают их в Заповедную мечеть, которую Мы воздвигли для всех людей, независимо от того, проживают они в ней или кочуют, а также тем, кто желает там уклониться от истины по несправедливости, Мы дадим вкусить мучительные страдания.
நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்து மற்றவர்களையும் இஸ்லாத்தில் நுழைவதை விட்டும் தடுப்பவர்கள், இணைவைப்பாளர்கள் ஹுதைபிய்யாவின் போது நடந்துகொண்டதைப் போல மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் மக்களைத் தடுப்பவர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனையைச் சுவைக்கச் செய்வோம். மக்கள் தங்களின் தொழுகையில் முன்னோக்கும் கிப்லாவாகவும் ஹஜ் மற்றும் உம்ராவின் கிரிகைகளில் ஒன்றாகவும் ஆக்கிய அந்தப் பள்ளிவாயிலில் மக்காவில் வசிப்போரும் அதற்கு வெளியிலிருந்து வருவோரும் சமமானவர்களே. அங்கு வேண்டுமென்றே யார் பாவமான காரியத்தை செய்து சத்தியத்தை விட்டும் நெறிபிறழ நாடுகிறாரோ நாம் அவருக்கு வேதனை மிக்க தண்டனையை அனுபவிக்கச் செய்வோம்.
22:26Страница 335
وَإِذۡ بَوَّأۡنَا لِإِبۡرَٰهِيمَ مَكَانَ ٱلۡبَيۡتِ أَن لَّا تُشۡرِكۡ بِي شَيۡـٔٗا وَطَهِّرۡ بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ ٢٦
Вот Мы указали Ибрахиму (Аврааму) на место Дома (Каабы): «Ничего не приобщай ко Мне в сотоварищи и очищай Мой Дом (Каабу) для тех, кто совершает обход, выстаивает намазы, кланяется и падает ниц».
தூதரே!- நாம் இப்ராஹீமுக்கு அறியப்படாமல் இருந்த கஃபாவின் இடத்தையும் அதன் எல்லையையும் தெளிவுபடுத்தியதை நினைவு கூர்வீராக. நாம் அவருக்கு வஹி அறிவித்தோம்: “நீர் வணக்க வழிபாட்டில் என்னுடன் எதையும் இணையாக்கி விடாதீர். மாறாக என்னை மட்டுமே வணங்குவீராக. என்னுடைய வீட்டை -தவாஃப் செய்து- சுற்றி வரக்கூடியவர்களுக்காகவும் தொழக்கூடியவர்களுக்காகவும் உள்ரங்கமான, வெளிரங்கமான அனைத்து வகையான அழுக்குகளிலிருந்தும் தூய்மைப்படுத்துவீராக.
22:27Страница 335
وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالٗا وَعَلَىٰ كُلِّ ضَامِرٖ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٖ ٢٧
Возвести людям о хадже, и они будут прибывать к тебе пешком и на всех поджарых верблюдах с самых отдаленных дорог.
நாம் உமக்குக் கட்டுமாறு கட்டளையிட்ட இந்த இல்லத்தை ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு அறிவிப்புச் செய்வீராக. அவர்கள் நடந்தவாறும் பயணம் செய்து களைப்பை உணர்ந்தவாறு பலவீனமான ஒவ்வொரு ஒட்டகங்களிலும் உம்மிடம் வருவார்கள். தூரமான ஒவ்வொரு இடங்களிலிருந்தும் ஒட்டகம் அவர்களைக் சுமந்து வரும்.
22:28Страница 335
لِّيَشۡهَدُواْ مَنَٰفِعَ لَهُمۡ وَيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ فِيٓ أَيَّامٖ مَّعۡلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۖ فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ ٢٨
Пусть они засвидетельствуют то, что приносит им пользу, и поминают имя Аллаха в установленные дни над скотиной, которой Он наделил их. Ешьте от них и кормите неимущего страдальца!
அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு, நன்மையைப் பெறல், ஒற்றுமை இன்னும் பல அவர்களுக்குப் பயனளிப்பவற்றைப் பெறுவதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் - துல்ஹஜ் பத்து மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் அதனை அடுத்து வரக்கூடிய மூன்று நாட்கள் - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அவன் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பலிப்பிராணிகளை அவன் பெயர்கூறி அறுத்து அவனை நினைவுகூர்வதற்காகவும் அங்கு வருவார்கள். அறுக்கப்பட்ட அந்த பிராணிகளிலிருந்து உண்ணுங்கள். கடும் வறிய ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
22:29Страница 335
ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ وَلۡيُوفُواْ نُذُورَهُمۡ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ٢٩
Затем пусть они завершат свои обряды, исполнят свои обеты и обойдут вокруг древнего Дома (Каабы).
பின்னர் அவர்கள் மீதமிருக்கும் ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, தலைமுடியை மழித்து, நகங்களை வெட்டி, இஹ்ராமின் காரணமாக தேங்கியிருக்கும் அழுக்குகளைக் களைந்து இஹ்ராமிலிருந்து வெளியேறட்டும். ஹஜ் அல்லது உம்ரா அல்லது பலிப்பிராணி ஆகியவற்றில் தங்கள் மீது கடமையாக்கிக் கொண்டதை நிறைவேற்றிவிடட்டும். அநியாக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து அல்லாஹ் விடுவித்த இந்த வீட்டையும் அவர்கள் தவாஃப் இபாளா மூலம் சுற்றி வரட்டும்.
22:30Страница 335
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ وَأُحِلَّتۡ لَكُمُ ٱلۡأَنۡعَٰمُ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡۖ فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ ٣٠
Вот так! Кто почитает святыни Аллаха, тот поступает во благо себе перед своим Господом. Вам дозволена скотина, кроме той, о которой вам читается. Избегайте же скверны идолов и избегайте лживых речей.
உங்களுக்குக் கட்டளையிப்பட்ட -தலைமுடியை மழித்தல், நகங்களை வெட்டுதல், அழுக்குகளைக் களைதல், நேர்ச்சைகளை நிறைவேற்றுதல், இறை இல்லத்தைத் தவாஃப் செய்தல் ஆகியவை- அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியவைகளாகும். அவன் உங்கள் மீது கடமையாக்கியதை கண்ணியப்படுத்துங்கள். யார் இஹ்ராம் அணிந்த நிலையில் அல்லாஹ் விதித்த வரம்புகளில் வீழ்ந்து விடக்கூடாது, தடுத்தவற்றை ஆகுமாக்கக் கூடாது என்ற கண்ணியத்தினால் அவன் தவிர்ந்து கொள்ளுமாறு ஏவிய விடயங்களை விட்டும் தவிர்ந்து இருக்கின்றாரோ அது அவரது இறைவனிடத்தில் அவருக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் சிறந்ததாகும். -மனிதர்களே!- ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹாமியா, பஹீரா, வஸீலா ஆகிய எந்த ஒன்றையும் அவன் தடை செய்யவில்லை. அவற்றில் குர்ஆனில் காணப்படும் இறந்தவை, இரத்தம், அது போன்றவற்றை மாத்திரமே தடைசெய்துள்ளான். சிலைகள் என்னும் அசுத்தத்தை விட்டும், அல்லாஹ்வின் மீதும் அவனது படைப்புகள் மீதும் அசத்தியமாக பொய் கூறுவதை விட்டும் விலகியிருங்கள்.
22:31Страница 336
حُنَفَآءَ لِلَّهِ غَيۡرَ مُشۡرِكِينَ بِهِۦۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخۡطَفُهُ ٱلطَّيۡرُ أَوۡ تَهۡوِي بِهِ ٱلرِّيحُ فِي مَكَانٖ سَحِيقٖ ٣١
Оставайтесь ханифами и не приобщайте к Нему сотоварищей. А кто приобщает сотоварищей к Аллаху, тот словно падает с неба, и птицы подхватят его, или же ветер забросит его в далекое место.
அல்லாஹ் அங்கீகரித்த மார்க்கத்தைத் தவிர மற்ற அனைத்து மார்க்கங்களையும் விட்டுவிட்டு வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவற்றைத் தவிர்ந்திருங்கள். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ அவர் வானத்திலிருந்து விழுந்துவிட்டவரைப் போலாவார். பறவைகள் அவரது சதையையும், எலும்பையும் வாரிச் சென்றுவிடுகின்றன அல்லது காற்று அவரை தூரமாக எறிந்துவிடுகிறது.
22:32Страница 336
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ٣٢
Вот так! И если кто почитает обрядовые знамения Аллаха, то это исходит от богобоязненности в сердцах.
அதுவே அல்லாஹ் கட்டளையிடும் ஏகத்துவமும் மனத் தூய்மையும், சிலைகளையும் பொய்ச் சாட்சியையும் தவிர்ந்துகொள்வதுமாகும். யார் பலிப்பிராணி ஹஜ் கிரியைகள் உட்பட மார்க்கத்தின் அடையாளங்களைக் கண்ணியப்படுத்துவாரோ அது உள்ளங்களில் தனது இரட்சகனைப் பற்றிய அச்சத்தின் வெளிப்பாடாகும்.
22:33Страница 336
لَكُمۡ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ٣٣
Они (жертвенные животные) приносят вам пользу до определенного времени, а место их заклания - у древнего Дома (Каабы).
அநியாயக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து அல்லாஹ் விடுவித்த அந்த இல்லத்திற்கு நெருக்கமாக நீங்கள் பலிப்பிராணிகளை அறுப்பதற்கான குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் கஅபாவில் அறுக்கக்கூடிய பலிப்பிராணிகளை பயணம் செய்தல், மயிர், இனப்பெருக்கம், பால் என்பவற்றிற்காக உங்களுக்குப் பயன்படுத்தலாம்.
22:34Страница 336
وَلِكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكٗا لِّيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۗ فَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَلَهُۥٓ أَسۡلِمُواْۗ وَبَشِّرِ ٱلۡمُخۡبِتِينَ ٣٤
Для каждой общины Мы установили места жертвоприношений (или религиозные обряды), чтобы они поминали имя Аллаха над скотиной, которой Он наделил их. Ваш Бог - Бог Единственный. Будьте же покорны Ему. А ты сообщи благую весть смиренным,
கடந்துபோன ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளுக்காக நன்றி செலுத்தும் பொருட்டு அவனுடைய பெயர்கூறி அறுத்துப் பலியிடும் குர்பான் எனும் வணக்கத்தை நாம் ஏற்படுத்தியிருந்தோம். -மனிதர்களே!- உங்களின் உண்மையான வணங்கப்படுபவன் ஒருவன்தான். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனுக்கே நீங்கள் வழிப்பட்டு அடிபணியுங்கள். -தூதரே!- அவனை உளத்தூய்மையாக பயப்படக்கூடியவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
22:35Страница 336
ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَٱلصَّٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمۡ وَٱلۡمُقِيمِي ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ٣٥
сердца которых при упоминании имени Аллаха переполняются страхом, которые терпеливы к тому, что их постигает, совершают намаз и расходуют из того, чем Мы их наделили.
அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் நினைவுகூறப்பட்டால் அவனுடைய தண்டனையிலிருந்து அஞ்சுவார்கள்; அதனால் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதைவிட்டும் விலகியிருப்பார்கள். தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்பவர்களாகவும் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுபவர்களாவும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவும் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии