Аль-Мухтасар · Тафсир · на тамильском
البقرة
Аль-Бакара
Корова · Мединская · 286 аятов
الم - குர்ஆனின் சில அத்தியாயங்கள் இவ்வகையான எழுத்துக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அறபு மொழியிலுள்ள எழுத்துக்களாகும். இவ்வாறு அலிஃப், பா, தா என்று தனித்து இடம்பெறும்போது அவற்றுக்குப் பொருள் கிடையாது. ஆனால், குர்ஆனில் எதுவும் நோக்கமின்றிக் கூறப்பட்டிருக்காது என்பதால் இவ்வாறான எழுத்துகள் இடம்பெறுவதற்கும் ஒரு நோக்கம் உண்டு. அறபிகள் பேசுவதற்குப் பயன்படுத்துகிற அவர்களுக்குத் தெரிந்த அதே எழுத்துகளின் மூலம் அமைந்த குர்ஆனைக் கொண்டு சவால் விடுவதே அந்த நோக்கமாகும். அதனால்தான் பெரும்பாலும் இந்த எழுத்துகளைக் குறிப்பிட்ட பின்னர் குர்ஆனைப் பற்றியே பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்திலும் அவ்வாறே வந்துள்ளது.
2:2Страница 2
ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ ٢
Это Писание, в котором нет сомнения, является верным руководством для богобоязненных,
மகத்துவமிக்க இந்தக் குர்ஆன் இது இறங்கிய மூலத்தின் அடிப்படையிலும், உச்சரிப்பு மற்றும் பொருளின் அடிப்படையிலும் அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தனக்குப் பயப்படக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் வரக்கூடிய வழியைக் காட்டுகிறான்.
2:3–4Страница 2
ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ٣
которые веруют в сокровенное, совершают намаз и расходуют из того, чем Мы их наделили,
وَٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ وَبِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ٤
которые веруют в ниспосланное тебе и ниспосланное до тебя и убеждены в Последней жизни.
அவர்கள் மறுமைநாள் போன்ற தங்களின் புலனுணர்வுகளால் உணரமுடியாத, தங்களை விட்டும் மறைவாக இருக்கின்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மறைவானவற்றை நம்புகிறார்கள். தொழுகையை, அல்லாஹ் ஏற்படுத்திய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் அதன் சுன்னத்துகளோடு நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவனது திருப்தியை நாடி, கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ கடமையாக்கப்படாத உபரியான தர்மமாகவோ செலவு செய்கிறார்கள். தூதரே! அவர்கள் உங்கள்மீது இறக்கப்பட்ட வஹ்யியையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் பாகுபாடின்றி நம்புகிறார்கள். மறுமையின் மீதும் அங்கு வழங்கப்படும் கூலி மற்றும் தண்டனையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
2:5Страница 2
أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٥
Они следуют верному руководству от их Господа, и они являются преуспевшими.
இந்தப் பண்புகளால் தங்களை அலங்கரித்தவர்கள்தாம் நேர்வழியின் பாதையில் இருப்பவர்கள். தாங்கள் ஆதரவு வைத்ததை அடைந்து, அச்சப்பட்டவற்றிலிருந்து பாதுகாப்புப்பெற்று இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெறக்கூடியவர்கள் இவர்களே.
2:6Страница 3
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ ٦
Воистину, неверующим безразлично, предостерег ты их или не предостерег. Они все равно не уверуют.
விசுவாசம் கொள்ளமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் முடிவு விதியானவர்கள் அவர்களின் வழிகேட்டிலும், பிடிவாதத்திலும் தொடர்ந்திருப்பார்கள். எனவே நீர் அவர்களை எச்சரிப்பதும் எச்சரிகாதிருப்பதும் சமமே.
2:7Страница 3
خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ٧
Аллах запечатал их сердца и слух, а на глазах у них - покрывало. Им уготованы великие мучения.
ஏனெனில் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு அதிலிருக்கும் அசத்தியத்தோடு அதனைப் பூட்டிவிட்டான். அவர்களுடைய செவிகளின் மீதும் முத்திரையிட்டுவிட்டான். எனவே, அவர்களால் சத்தியத்தைச் செவியுற்று அதற்குக் கீழ்ப்படிய முடியாது. அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையைப் போட்டுவிட்டான். ஆகவே, சத்தியம் தெளிவாக இருந்தும் அதனை அவர்களால் காணமுடியாது. மறுமையில் அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
2:8Страница 3
وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَمَا هُم بِمُؤۡمِنِينَ ٨
Среди людей есть такие, которые говорят: «Мы уверовали в Аллаха и в Последний день». Однако они суть неверующие.
தங்களைத் தாங்களே நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டமும் மக்களில் உள்ளனர். தங்களின் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆபத்து வருவதைப் பயந்து தங்களை விசுவாசிகள் என்று நாவால் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் உள்ளத்தால் நிராகரிப்பாளர்கள்.
2:9Страница 3
يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ ٩
Они пытаются обмануть Аллаха и верующих, но обманывают только самих себя и не осознают этого.
விசுவாசம் கொண்டிருப்பதாக வெளியே காட்டிவிட்டு, நிராகரிப்பை மறைத்து அல்லாஹ்வையும், நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றிவிடலாம் என்று தமது அறியாமையின் காரணமாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆயினும், அவர்களால் இதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் அல்லாஹ் இரகசியத்தையும் அதனை விட மறைவானதையும் அறிகிறான். அவர்களின் பண்புகளையும், நிலமைகளையும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு அறிவித்தும் விட்டான்.
2:10Страница 3
فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ ١٠
Их сердца поражены недугом. Да усилит Аллах их недуг! Им уготованы мучительные страдания за то, что они лгали.
காரணம், அவர்களின் உள்ளங்களில் சந்தேகம் இருக்கிறது. அவர்களின் சந்தேகத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்திவிட்டான். செயலின் தன்மைக்கேற்பத்தான் கூலியும் வழங்கப்படும். அல்லாஹ்விடமும் மக்களிடமும் அவர்கள் பொய் கூறியதாலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த தூதை நிராகரித்ததாலும் நரகத்தின் அடித்தளத்தில் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
2:11Страница 3
وَإِذَا قِيلَ لَهُمۡ لَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ قَالُوٓاْ إِنَّمَا نَحۡنُ مُصۡلِحُونَ ١١
Когда им говорят: «Не распространяйте нечестия на земле!». - они отвечают: «Только мы и устанавливаем порядок».
அல்லாஹ்வை நிராகரிப்பது, பாவங்கள் புரிவது மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்து உலகில் குழப்பம் விளைவிப்பதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டால் அதனை ஏற்க மறுத்து, நாங்கள்தாம் நல்லவர்கள், சீர்திருத்தம் செய்பவர்கள் என்று கூறுகிறார்கள்.
2:12Страница 3
أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡمُفۡسِدُونَ وَلَٰكِن لَّا يَشۡعُرُونَ ١٢
Воистину, именно они распространяют нечестие, но они не осознают этого.
உண்மையில் இவர்கள்தாம் குழப்பம் ஏற்படுத்துகிறவர்கள். ஆயினும், அவர்கள் அதை உணர்ந்துகொள்வதில்லை. அவர்களது செயலே குழப்பம்தான் என்பதைப் புரியாமல் உள்ளனர்.
2:13Страница 3
وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ ١٣
Когда им говорят: «Уверуйте так, как уверовали люди», - они отвечают: «Неужели мы уверуем так, как уверовали глупцы?». Воистину, именно они являются глупцами, но они не знают этого.
நபியின் தோழர்கள் நம்பிக்கைகொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால்,மூடர்கள் நம்பிக்கைகொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும்,இதனை அவர்கள் அறிந்து கொள்வதில்லை.
2:14Страница 3
وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ إِلَىٰ شَيَٰطِينِهِمۡ قَالُوٓاْ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ ١٤
Когда они встречают верующих, то говорят: «Мы уверовали». Когда же они остаются наедине со своими дьяволами, они говорят: «Воистину, мы - с вами. Мы лишь издеваемся».
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்தித்தால் அவர்களுக்குப் பயந்து, நீங்கள் நம்பிக்கைகொண்டது போல் நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்று தங்களின் தலைவர்களுடன் தனித்திருக்கும்போதோ, நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். அவர்களைப் பரிகாசம் செய்வதற்காகத்தான் வெளிப்படையில் அவர்களுடன் ஒத்துப்போகின்றோம் எனக் கூறி தங்களின் விசுவாசத்தை அவர்களிடம் உறுதிப்படுத்துகிறார்கள்.
2:15Страница 3
ٱللَّهُ يَسۡتَهۡزِئُ بِهِمۡ وَيَمُدُّهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ١٥
Аллах поиздевается над ними и увеличит их беззаконие, в котором они скитаются вслепую.
அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களை இவர்கள் பரிகாசம் செய்ததற்குப் பகரமாக அல்லாஹ்வும் இவர்களைப் பரிகாசம் செய்கிறான். இவர்களின் செயல்களுக்கு ஏற்ற கூலியைத்தான் இவ்வாறு கொடுக்கிறான். இதனால் இவர்களின் விஷயத்தில் முஸ்லிம்களுக்குரிய சட்டத்தையே இவ்வுலகில் நடைமுறைப்படுத்துகிறான். மறுமையிலோ இவர்களின் நிராகரிப்புக்கும் நயவஞ்சகத்திற்குமான கூலியைக் கொடுத்துவிடுவான். இவர்களுக்கு அவன் அவகாசம் கொடுத்திருப்பதின் நோக்கமே, இவர்கள் வழிகேட்டில் முன்னேறிக்கொண்டே சென்று தடுமாறியவர்களாக நிலைத்திருக்கட்டும் என்பதற்குத்தான்.
2:16Страница 3
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ١٦
Они - те, которые купили заблуждение за верное руководство. Но сделка не принесла им прибыли, и они не последовали прямым путем.
இப்பண்புகளுக்குரிய அந்த நயவஞ்கர்கள்தான் ஈமானுக்குப் பதிலாக நிராகரிப்பை வாங்கிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்வதை இழந்துவிட்டதனால் இவர்களின் இந்த வியாபாரம் பலனளிக்கவில்லை; சத்தியத்தின் பக்கம் செல்கின்ற நேரான வழியையும் இவர்கள் பெற்றுக்கொள்வதாக இல்லை.
2:17Страница 4
مَثَلُهُمۡ كَمَثَلِ ٱلَّذِي ٱسۡتَوۡقَدَ نَارٗا فَلَمَّآ أَضَآءَتۡ مَا حَوۡلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمۡ وَتَرَكَهُمۡ فِي ظُلُمَٰتٖ لَّا يُبۡصِرُونَ ١٧
Они подобны тому, кто разжег огонь. Когда же огонь озарил все вокруг него, Аллах лишил их света и оставил их в темноте, где они ничего не видят.
இந்த நயவஞ்சகர்களுக்கு நெருப்பைக் கொண்டும் நீரைக் கொண்டும் அல்லாஹ் இரண்டு உதாரணங்களைக் கூறுகிறான். நெருப்பைக் கொண்டு கூறப்படும் உதாரணம், அவர்கள் வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பை மூட்டினார்கள். அது ஒளி வீசி அதிலிருந்து அவர்கள் பயனடைய எண்ணியபோது அந்த ஒளி அணைந்து வெப்பம் மட்டுமே எஞ்சிவிட்டது. இதன் விளைவாக, அவர்கள் எதையும் பார்க்கவோ, எந்த வழியையும் அறியவோ முடியாத இருட்டில் மூழ்கிவிட்டார்கள்.
2:18Страница 4
صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَرۡجِعُونَ ١٨
Глухие, немые, слепые! Они не вернутся на прямой путь.
அவர்கள், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் செவிமடுக்காத செவிடர்கள்; அதனைப் பேசாத ஊமையர்கள். அதனைப் பார்க்காத குருடர்கள். எனவே, தமது வழிகேட்டிலிருந்து அவர்கள் திரும்பமாட்டார்கள்.
2:19Страница 4
أَوۡ كَصَيِّبٖ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٞ وَرَعۡدٞ وَبَرۡقٞ يَجۡعَلُونَ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلۡمَوۡتِۚ وَٱللَّهُ مُحِيطُۢ بِٱلۡكَٰفِرِينَ ١٩
Или же они подобны тем, кто оказался под ливнем с неба. Он несет мрак, гром и молнию. Они же в смертельном страхе затыкают уши пальцами от грохота молний. Воистину, Аллах объемлет неверующих.
தண்ணீரைக் கொண்டு கூறப்படும் உதாரணம், மேகம் கறுத்து இருள் சூழ இடியும் மின்னலுமாகப் பெய்யும் பேய்மழையில் சிக்கிவிட்ட ஒரு கூட்டத்தின் நிலைமைக்கு ஒப்பாகும். அதனால் அவர்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள். கடுமையான இடிமுழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தங்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கிறார்கள். நிராகரிப்பாளர்களை அல்லாஹ் சூழ்நதுள்ளான். அவனிடமிருந்து அவர்கள் தப்பவே முடியாது.
2:20Страница 4
يَكَادُ ٱلۡبَرۡقُ يَخۡطَفُ أَبۡصَٰرَهُمۡۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوۡاْ فِيهِ وَإِذَآ أَظۡلَمَ عَلَيۡهِمۡ قَامُواْۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٢٠
Молния готова отнять у них зрение. Когда она вспыхивает, они отправляются в путь, когда же опускается мрак, они останавливаются. Если бы Аллах пожелал, Он лишил бы их слуха и зрения. Воистину, Аллах способен на всякую вещь.
பளீரென்று ஒளிரும் வெளிச்சத்தாலும் பளபளப்பாலும் அந்த மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது வெளிச்சம் தரும்போதெல்லாம் அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். அது வெளிச்சம் தராதபோது அசையாமல் இருளில் அப்படியே நின்றுவிடுகிறார்கள். சத்தியத்தை அவர்கள் புறக்கணித்தனால் அல்லாஹ் நாடினால் அனைத்தையும் வியாபித்த தனது ஆற்றலினால் அவர்களின் செவிப்புலனையும் பார்வையையும் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காத வகையில் பறித்துவிடுவான். இங்கு மழை என்பது குர்ஆனையும் இடிமுழக்கம் என்பது அதிலுள்ள எச்சரிக்கைகளையும் மின்னல் வெளிச்சம் என்பது சிலவேளை அவர்களுக்குத் தோன்றும் சத்தியத்தையும், இடிமுழக்கங்களால் காதுகளை அடைத்துக்கொள்ளுதல் என்பது சத்தியத்தை அவர்கள் புறக்கணித்து அதற்குப் பதிலளிக்காதிருப்பதையும் குறிக்கிறது. இந்த இரண்டு உதாரணங்களில் கூறப்பட்டோருக்கும் நயவஞ்சகர்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமை, பயனடையாமை ஆகும். நெருப்பு உதாரணத்தில் அதனை மூட்டியவன் இருளையும் வெப்பத்தையும் தவிர வேறு எந்தப் பயனையும் அடையவில்லை. நீரைக் கொண்டு சொல்லப்பட்ட உதாரணத்தில் மழையைப் பெற்றவர்கள் தங்களைப் பயமுறுத்திச் சிரமப்படுத்துகிற இடியையும் மின்னலையும் தவிர வேறு எந்தப் பயனையும் அடையவில்லை. இவ்வாறே நயவஞ்சகர்களும் இஸ்லாமில் கடுமையையும் சிரமத்தையும் தவிர வேறொன்றையும் காணமாட்டார்கள்.
2:21Страница 4
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ٢١
О люди! Поклоняйтесь вашему Господу, Который сотворил вас и тех, кто был до вас, - быть может, вы устрашитесь.
மனிதர்களே! உங்கள் இறைவனை மட்டுமே வணங்குங்கள். ஏனெனில், அவன்தான் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்த சமூகங்களையும் படைத்தான். இதனால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
2:22Страница 4
ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ فِرَٰشٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ فَلَا تَجۡعَلُواْ لِلَّهِ أَندَادٗا وَأَنتُمۡ تَعۡلَمُونَ ٢٢
Он сделал для вас землю ложем, а небо - кровлей, низвел с неба воду и взрастил ею плоды для вашего пропитания. Посему никого не равняйте с Аллахом сознательно.
அவன்தான் உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், அதற்கு மேலே வானத்தை நன்கு கட்டமைக்கப்பட்ட முகடாகவும் ஆக்கினான். அவனே மழையைப் பொழிய வைத்து அருட்கொடைகளை அளிப்பவன். அதன் மூலம் பல வகையான தாவரங்களை முளைக்கச் செய்து உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குபவன். எனவே, அவனைத்தவிர வேறு படைப்பாளி எவனுமில்லை என்பதை அறிந்துகொண்டே அவனுக்கு இணைகளையோ பங்காளிகளையோ ஏற்படுத்திவிடாதீர்கள்.
2:23Страница 4
وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٖ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٢٣
Если же вы сомневаетесь в том, что Мы ниспослали Нашему рабу, то сочините одну подобную суру и призовите своих свидетелей, помимо Аллаха, если вы говорите правду.
மனிதர்களே! நம்முடைய அடியார் முஹம்மது மீது நாம் இறக்கிய குர்ஆனின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டால் நாம் உங்களுக்குச் சவால் விடுகிறோம். உங்கள் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். அது மிகச்சிறிய அத்தியாயமாக இருந்தாலும் சரியே. முடியுமான உங்களின் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.
2:24Страница 4
فَإِن لَّمۡ تَفۡعَلُواْ وَلَن تَفۡعَلُواْ فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ ٢٤
Если же вы этого не сделаете - а ведь вы никогда этого не сделаете, - то побойтесь Огня, растопкой которого являются люди и камни. Он уготован для неверующих.
நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாதுதான். தண்டனைக்குரிய மனிதர்களையும் மற்றும் அவர்கள் வணங்கிவந்த, வணங்காத பலவகை கற்களையும் எரிபொருளாகக்கொண்டு எரிக்கப்படுகின்ற நரக நெருப்புக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். தன்னை நிராகரிப்பவர்களுக்காகவே அல்லாஹ் இந்த நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளான்.
2:25Страница 5
وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ كُلَّمَا رُزِقُواْ مِنۡهَا مِن ثَمَرَةٖ رِّزۡقٗا قَالُواْ هَٰذَا ٱلَّذِي رُزِقۡنَا مِن قَبۡلُۖ وَأُتُواْ بِهِۦ مُتَشَٰبِهٗاۖ وَلَهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَهُمۡ فِيهَا خَٰلِدُونَ ٢٥
Обрадуй тех, которые уверовали и совершали праведные деяния, тем, что им уготованы Райские сады, в которых текут реки. Всякий раз, когда им будут подавать плоды для пропитания, они будут говорить: «Это уже было даровано нам прежде». Но им будут давать нечто похожее. У них там будут очищенные супруги, и они пребудут там вечно.
முன்னர் கூறப்பட்ட எச்சரிக்கை நிராகரிப்பாளர்களுக்குரியதாகும். தூதரே! அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்வூட்டும் சொர்க்கச் சோலைகள் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. அவற்றின் மாளிகைகள் மற்றும் மரங்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றின் தூய்மையான பழங்களிலிருந்து அவர்களுக்கு உணவளிக்கப்படும்போதெல்லாம் அவை உலகிலுள்ள பழங்களை ஓத்திருப்பதைப்பார்த்து, இதற்கு முன்னரும் இதுபோன்றுதானே எங்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறுவார்கள். அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வடிவத்திலும் பெயரிலும் ஒத்த, சுவையில் வேறுபட்ட பழங்கள் அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும். மனித மனமும் இயல்பும் வெறுக்கும் இவ்வுலகில் உள்ளோரிடம் காணப்படும் அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கிய தூய்மையான துணைகளும் சொர்க்கத்தில் அவர்களுக்கு உண்டு. முடிந்துவிடும் உலக இன்பத்திற்கு மாற்றமாக என்றும் முடிவடையாத நிரந்தரமான இன்பத்தில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.
2:26Страница 5
۞ إِنَّ ٱللَّهَ لَا يَسۡتَحۡيِۦٓ أَن يَضۡرِبَ مَثَلٗا مَّا بَعُوضَةٗ فَمَا فَوۡقَهَاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۖ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۘ يُضِلُّ بِهِۦ كَثِيرٗا وَيَهۡدِي بِهِۦ كَثِيرٗاۚ وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلۡفَٰسِقِينَ ٢٦
Воистину, Аллах не смущается приводить притчи о комаре или том, что больше него. Те, которые уверовали, знают, что это - истина от их Господа. Те же, которые не уверовали, говорят: «Чего хотел Аллах, когда приводил эту притчу?». Посредством нее Он многих вводит в заблуждение, а многих наставляет на прямой путь. Однако вводит Он в заблуждение посредством нее только нечестивцев,
தான் விரும்பும் உதாரணங்களைக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். அவன் கொசுவையோ அல்லது அதைவிடச் சிறியதையோ, பெரியதையோ உதாரணங்களாகக் கூறுகிறான். இவ்விஷயத்தில் மக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர், அவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள். மற்றவர்கள், அவனை நிராகரிப்பவர்கள். இந்த இருவரில் அவன்மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அவன் கூறியதை உண்மைப்படுத்தி, இதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்கிறார்கள். ஆனால், அவனை நிராகரிப்பவர்களோ, கொசு, ஈ, சிலந்தி போன்ற அற்பமான படைப்பினங்களையா உதாரணம் கூறுவது? என்று பரிகாசமாகக் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கான பதிலை அல்லாஹ்வே கூறுகிறான்: இந்த உதாரணங்களில் வழிகாட்டல்களும் அறிவுரைகளும் மக்களுக்குச் சோதனையும் இருக்கின்றன. இவற்றைச் சிந்திக்காத காரணத்தால் அவர்களில் அதிகமானவர்களை அவன் வழிதவறச் செய்கிறான். அவர்களில் இவற்றின் மூலம் படிப்பினை பெற்ற அதிகமானோருக்கு அவன் வழிகாட்டவும் செய்கிறான். வழிகேட்டிற்குத் தகுதியானவர்களைத்தான் வழிகேட்டில் ஆழ்த்துகிறான். நயவஞ்சகர்களைப் போல அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களே அவர்கள்.
2:27Страница 5
ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ٢٧
которые нарушают завет с Аллахом после того, как они заключили его, разрывают то, что Аллах велел поддерживать, и распространяют нечестие на земле. Именно они окажутся в убытке.
தன்னை மட்டுமே வணங்குமாறும், முன் சென்ற தூதர்கள் அறிவித்துவிட்டுச் சென்ற தனது தூதரைப் பின்பற்றுமாறும் அல்லாஹ் அவர்களிடம் செய்த உடன்படிக்கையை அவர்கள் முறித்துவிடுகிறார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிக்கும் இவர்கள் அவன் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட இரத்த சொந்தங்களையும் துண்டித்துவிடுகிறார்கள். பாவங்களின் மூலம் பூமியில் குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்கள்.
2:28Страница 5
كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ٢٨
Как вы можете не веровать в Аллаха, тогда как вы были мертвы, и Он оживил вас? Потом Он умертвит вас, потом оживит, а потом вы будете возвращены к Нему.
நிராகரிப்பாளர்களே! உங்களின் விஷயம் ஆச்சரியமானது. அல்லாஹ்வை எப்படித்தான் மறுக்கிறீர்கள்!? அவனுடைய வல்லமைக்குரிய சான்றுகளை உங்களுக்குள்ளும் நீங்கள் காண்கிறீர்களே!? ஒன்றும் இல்லாத நிலையில் நீங்கள் இருந்தீர்கள். அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு உயிரளித்தான். பின்னர் மீண்டும் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் மீண்டும் உங்களுக்கு உயிர்கொடுப்பான். நீங்கள் செய்த செயல்களுக்கு அவன் உங்களிடம் விசாரணை செய்வதற்காக அவனிடமே நீங்கள் திரும்ப வேண்டும்.
2:29Страница 5
هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٢٩
Он - Тот, Кто сотворил для вас все, что на земле, а затем обратился к небу и сделал его семью небесами. Ему известно о всякой вещи.
பூமியிலுள்ள ஆறுகள், மரங்கள் மற்றும் எண்ண முடியாத எத்தனையோ படைப்பினங்களை அல்லாஹ் ஒருவனே உங்களுக்காகப் படைத்திருக்கிறான். அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்ததை அனுபவித்து அவற்றின் மூலம் பயனடைகிறீர்கள். பின்னர் வானத்தைப் படைக்க விரும்பி, அதனை சமமான ஏழு வானங்களாகப் படைத்தான். அவனது அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது.
2:30Страница 6
وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي جَاعِلٞ فِي ٱلۡأَرۡضِ خَلِيفَةٗۖ قَالُوٓاْ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّيٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ ٣٠
Вот твой Господь сказал ангелам: «Я установлю на земле наместника». Они сказали: «Неужели Ты поселишь там того, кто будет распространять нечестие и проливать кровь, тогда как мы прославляем Тебя хвалой и освящаем Тебя?». Он сказал: «Воистину, Я знаю то, чего вы не знаете».
வானவர்களிடம் பின்வருமாறு உரையாடியதை அல்லாஹ் அறிவிக்கிறான்: நான் பூமியில் மனிதர்களை ஏற்படுத்தப் போகின்றேன். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து பூமியை வாளப்படுத்துவதற்கு அவர்கள் தங்களுக்குள் தொன்றுதொட்டு உருவாகும் தலைமுறைகளாக இருப்பார்கள்.வானவர்கள் தங்கள் இறைவனிடம், பூமியில் ஆதமுடைய மக்களை வழித்தோன்றல்களாக ஆக்குவதின் காரணம் என்ன? அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து அநியாயமாக இரத்தம் சிந்துவார்களே? என்று அறியாதவர்களாக, தெளிவடைய வேண்டி கேட்ட அவர்கள், நாங்கள் உனக்குக் கீழ்ப்படிகின்றோம்; உனது தூய்மையைப் பறைசாற்றி உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இதில் நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம்; உனது கண்ணியத்தையும், பரிபூரணத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்கள். அதற்கு அல்லாஹ், அவர்களைப் படைப்பதன், வழித்தோன்றல்களாக ஆக்குவதன் நோக்கங்கள் குறித்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று கூறினான்.
2:31Страница 6
وَعَلَّمَ ءَادَمَ ٱلۡأَسۡمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمۡ عَلَى ٱلۡمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِي بِأَسۡمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٣١
Он научил Адама всевозможным именам, а затем показал их (творения, нареченные именами) ангелам и сказал: «Назовите мне их имена, если вы говорите правду».
ஆதமின் அந்தஸ்தை தெளிவுபடுத்துவதற்காக அவருக்கு உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்தின் பெயா்களையும், வார்த்தைகளையும், விளக்கங்களையும் அல்லாஹ் கற்றுக்கொடுத்தான். பின்னர் வானவர்களிடம் அப்பெயர்குறிக்கப்பட்ட பொருட்களை முன்வைத்து, இந்த படைப்பைவிட நீங்கள்தாம் கண்ணியமானவா்கள் என்ற உங்களின் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்றான்.
2:32Страница 6
قَالُواْ سُبۡحَٰنَكَ لَا عِلۡمَ لَنَآ إِلَّا مَا عَلَّمۡتَنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ٣٢
Они ответили: «Пречист Ты! Мы знаем только то, чему Ты научил нас. Воистину, Ты - Знающий, Мудрый».
அவர்கள் தங்களின் தவறை ஒத்துக்கொண்டவர்களாகவும் அருளுக்குரியவன் அல்லாஹ் என்பதை ஏற்றவர்களாகவும், எங்கள் இறைவா, உன்னுடைய கட்டளைகளில் ஆட்சேபனை எழுப்புவதை விட்டுவிட்டு உன் தூய்மையை நாங்கள் பறைசாற்றுகின்றோம். நீ எங்களுக்குக் கற்றுத்தந்ததைத்தவிர நாங்கள் எதையும் அறியமாட்டோம். நிச்சயமாக நீ நன்கறிந்தவன். எதுவுமே உன்னை விட்டு மறைவாக இல்லை. நீ ஏற்படுத்தும் விதிகளிலும் கட்டளைகளிலும் ஞானம்மிக்கவன் என்று கூறினார்கள்.
2:33Страница 6
قَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ ٣٣
Он сказал: «О Адам! Поведай им об их именах». Когда Адам поведал им об их именах, Он сказал: «Разве Я не говорил вам, что знаю сокровенное на небесах и земле, и знаю, что вы совершаете открыто и что утаиваете?».
அப்போது அல்லாஹ் ஆதமிடம், இப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக என்று கூறினான். தம் இறைவன் கற்றுத் தந்தவாறு அவர் அறிவித்தபோது, அல்லாஹ் வானவர்களிடம் கூறினான்,நான் உங்களிடம் கூறவில்லையா? வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் உள்ளத்தில் மறைப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии