Al-Mukhtasar · Tafsir · in Tamil
Yunus 10:31–67
10:31Page 212
قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ ٣١
Say, "Who provides for you from the heaven and the earth? Or who controls hearing and sight and who brings the living out of the dead and brings the dead out of the living and who arranges [every] matter?" They will say, "Allāh," so say, "Then will you not fear Him?"
தூதரே! அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் இவர்களிடம் நீர் கேட்பீராக: “வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? பூமியிலிருந்து தாவரங்களையும் இன்னபிற கனிமங்களையும் வெளிப்படுத்தி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை விந்திலிருந்து மனிதனை, முட்டையிலிருந்து பறவையை வெளிப்படுத்துபவன் யார்? உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உதாரணமாக மிருகத்திலிருந்து விந்தை பறவயிலிருந்து முட்டையை வெளிப்படுத்துபவன் யார்? வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிலுமுள்ள எல்லா படைப்புகளையும் பராமரித்து நிர்வகிப்பவன் யார்? இவையனைத்தையும் செய்பவன் அல்லாஹ்தான் என்று அவர்கள் பதில் கூறுவார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் இவற்றை அறிய மாட்டீர்களா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”
10:32Page 212
فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلۡحَقُّۖ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ ٣٢
For that is Allāh, your Lord, the Truth. And what can be beyond truth except error? So how are you averted?
மனிதர்களே!- இவையனைத்தையும் செய்பவனே உங்களைப் படைத்த, உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற உண்மையான இறைவனான அல்லாஹ் ஆவான். சத்தியத்திற்குப் பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தெளிவான இச்சத்தியத்திலிருந்து உங்களுடைய சிந்தனைகள் எங்கு செல்கின்றன?
10:33Page 212
كَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ فَسَقُوٓاْ أَنَّهُمۡ لَا يُؤۡمِنُونَ ٣٣
Thus the word [i.e., decree] of your Lord has come into effect upon those who defiantly disobeyed - that they will not believe.
தூதரே!- அல்லாஹ் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்பது உறுதியானது போல பிடிவாதத்தினால் சத்தியத்தை விட்டும் வெளியேறிவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்ற உம் இறைவனின் விதி ரீதியான வார்த்தையும் உறுதியாகி விட்டது.
10:34Page 213
قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۚ قُلِ ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ٣٤
Say, "Are there of your 'partners' any who begins creation and then repeats it?" Say, "Allāh begins creation and then repeats it, so how are you deluded?"
தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்களின் இணைத் தெய்வங்களில் யாராவது முன்மாதிரியின்றி படைப்பைப் படைத்து பின்னர் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவார்களா?” நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தான். பின்னர் அவனே அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். -இணைவைப்பாளர்களே!- சத்தியத்தை விட்டு விட்டு அசத்தியத்தின் பக்கம் எவ்வாறு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்?”
10:35Page 213
قُلۡ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّۚ قُلِ ٱللَّهُ يَهۡدِي لِلۡحَقِّۗ أَفَمَن يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّيٓ إِلَّآ أَن يُهۡدَىٰۖ فَمَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ٣٥
Say, "Are there of your 'partners' any who guides to the truth?" Say, "Allāh guides to the truth. So is He who guides to the truth more worthy to be followed or he who guides not unless he is guided? Then what is [wrong] with you - how do you judge?"
தூதரே!- அவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்கள் இணைத்தெய்வங்களில் யாராவது உங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவார்களா? நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறான். மனிதர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுபவன், அதன்பால் அவர்களை அழைப்பவன் பின்பற்றத்தகுதியானவனா? அல்லது மற்றவர்கள் வழிகாட்டா விட்டால் நேர்வழியடைய இயலாத உங்கள் தெய்வங்களா? உங்களுக்கு என்னவாயிற்று? அவை அல்லாஹ்வுக்கு இணையானவை என்பதாக எவ்வாறு தவறாக தீர்ப்பளிக்கிறீர்கள்? உங்களது கூற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்து விட்டான்.
10:36Page 213
وَمَا يَتَّبِعُ أَكۡثَرُهُمۡ إِلَّا ظَنًّاۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ ٣٦
And most of them follow not except assumption. Indeed, assumption avails not against the truth at all. Indeed, Allāh is Knowing of what they do.
இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு எது குறித்து அறிவில்லையோ அதனையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் யூகங்களையும் சந்தேகங்களையுமே பின்பற்றுகிறார்கள். ஐயம் அறிவுக்கு சமனாகாது, அறிவுக்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. அவர்கள் செய்யக் கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
10:37Page 213
وَمَا كَانَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ أَن يُفۡتَرَىٰ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن تَصۡدِيقَ ٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِ وَتَفۡصِيلَ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٣٧
And it was not [possible] for this Qur’ān to be produced by other than Allāh, but [it is] a confirmation of what was before it and a detailed explanation of the [former] Scripture, about which there is no doubt,1 from the Lord of the worlds.
இந்த அற்புதமான குர்ஆன் புனைந்துரைக்கப்படவோ அல்லாஹ்வைத் தவிர உள்ள யாருக்கும் சேர்க்கப்படவோ முடியாது. ஏனெனில் அது போன்ற ஒன்றை மனிதர்களால் கொண்டுவரவே முடியாது. ஆயினும் இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவற்றில் சுருக்கமாக கூறப்பட்ட சட்டதிட்டங்களை சிறந்த முறையில் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. எனவே அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறங்கியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
10:38Page 213
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِسُورَةٖ مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٣٨
Or do they say [about the Prophet (ﷺ)], "He invented it?" Say, "Then bring forth a sūrah like it and call upon [for assistance] whomever you can besides Allāh, if you should be truthful."
நிச்சயமாக “முஹம்மது இந்த குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டு அல்லாஹ்வின் வார்த்தை என்று பொய் கூறுகிறார்” என்று இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்பாக கூறுவீராக: “நான் இதனை சுயமாகப் புனைந்து கொண்டுவந்திருந்தால் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; எனவே இதுபோன்ற ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களால் அழைக்க முடிந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு அதனைச் செய்யுங்கள். உங்களால் ஒருபோதும் இவ்வாறு செய்ய முடியாது. நீங்கள் மொழிச் சொந்தக்காரர்களாகவும் இலக்கிய ஜாம்பவான்களாகவும் இருந்தும் உங்களால் அவ்வாறு கொண்டுவர முடியாமை குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது என்பதற்கான சான்றாகும்.
10:39Page 213
بَلۡ كَذَّبُواْ بِمَا لَمۡ يُحِيطُواْ بِعِلۡمِهِۦ وَلَمَّا يَأۡتِهِمۡ تَأۡوِيلُهُۥۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ ٣٩
Rather, they have denied that which they encompass not in knowledge and whose interpretation has not yet come to them. Thus did those before them deny. Then observe how was the end of the wrongdoers.
அவர்கள் பதிலளிக்கவில்லை. மாறாக இந்த குர்ஆனை புரிந்து, சிந்திப்பதற்கு முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை நிகழ்வதற்கு முன்னர் விரைந்து அவர்கள் அதனை மறுத்து விட்டார்கள். அது வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இதுபோன்றே முந்தைய சமூகத்தினரும் நிராகரித்தார்கள். வேதனை அவர்கள் மீது இறங்கியது. -தூதரே!- பொய்ப்பித்த சமூகங்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.
10:40Page 213
وَمِنۡهُم مَّن يُؤۡمِنُ بِهِۦ وَمِنۡهُم مَّن لَّا يُؤۡمِنُ بِهِۦۚ وَرَبُّكَ أَعۡلَمُ بِٱلۡمُفۡسِدِينَ ٤٠
And of them are those who believe in it, and of them are those who do not believe in it. And your Lord is most knowing of the corrupters.
இணைவைப்பாளர்களில் சிலர் மரணிப்பதற்கு முன்னர் இந்த குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டு விடுவார்கள். சிலர் பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளாமலேயே மரணித்துவிடுவார்கள். -தூதரே!- நிராகரிப்பில் நிலைத்திருப்பவர்களை உம் இறைவன் நன்கறிவான். அவர்களின் நிராகரிப்பினால் அவர்களுக்குத் தண்டனையளிப்பான்.
10:41Page 213
وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمۡ عَمَلُكُمۡۖ أَنتُم بَرِيٓـُٔونَ مِمَّآ أَعۡمَلُ وَأَنَا۠ بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ ٤١
And if they deny you, [O Muḥammad], then say, "For me are my deeds, and for you are your deeds. You are disassociated from what I do, and I am disassociated from what you do."
தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்யர் என்று கூறினால் அவர்களிடம் நீர் கூறுவீராக: “என் செயலுக்கான கூலியை நான் பெறுவேன். என் செயலுக்கான பொறுப்பை நான் சுமப்பேன். உங்களின் செயலுக்கான கூலியையும் தண்டனையையும் நீங்கள்தாம் பெறுவீர்கள். நான் செய்யும் செயல்களுக்கு நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் தண்டிக்கப்படவும் மாட்டேன்.
10:42Page 213
وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُونَ إِلَيۡكَۚ أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ وَلَوۡ كَانُواْ لَا يَعۡقِلُونَ ٤٢
And among them are those who listen to you. But can you cause the deaf to hear [i.e., benefit from this hearing], although they will not use reason?
தூதரே!- நீர் குர்ஆனை ஓதும் போது இணைவைப்பாளர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்ளும், கீழ்ப்படியும் எண்ணமின்றி உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். உம்மால் செவிடர்களுக்குச் செவியுறச் செய்ய முடியுமா? அதுபோன்று சத்தியத்தை செவியேற்பதை விட்டும் செவிடர்களாக இருப்பர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது. ஏனெனில் அவர்கள் அதனை விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
10:43Page 214
وَمِنۡهُم مَّن يَنظُرُ إِلَيۡكَۚ أَفَأَنتَ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَلَوۡ كَانُواْ لَا يُبۡصِرُونَ ٤٣
And among them are those who look at you. But can you guide the blind although they will not [attempt to] see?
தூதரே!- இணைவைப்பாளர்களில் சிலர் வெளிப்படையான பார்வையால் உம்மைப் பார்க்கிறார்கள். அவர்கள் அகப் பார்வையால் உம்மைப் பார்ப்பதில்லை. உம்மால் பார்வைகள் பறிக்கப்பட்டவனைப் பார்க்க வைக்க முடியுமா என்ன? நிச்சயமாக அது உம்மால் முடியாது. அது போன்று அகப் பார்வையை இழந்தவர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது.
10:44Page 214
إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ ٱلنَّاسَ شَيۡـٔٗا وَلَٰكِنَّ ٱلنَّاسَ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ٤٤
Indeed, Allāh does not wrong the people at all, but it is the people who are wronging themselves.
அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதியிழைப்பதை விட்டும் தூய்மையானவன். அணுவளவு கூட அவன் அவர்களுக்கு அநீதியிழைக்க மாட்டான். ஆயினும் அவர்கள் தாம் அசத்தியத்தில் உள்ள பிடிவாதத்தினால் அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
10:45Page 214
وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ كَأَن لَّمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّنَ ٱلنَّهَارِ يَتَعَارَفُونَ بَيۡنَهُمۡۚ قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ٤٥
And on the Day when He will gather them, [it will be] as if they had not remained [in the world] but an hour of the day, [and] they will know each other. Those will have lost who denied the meeting with Allāh and were not guided.
மனிதர்களை விசாரணை செய்வதற்காக அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் மறுமை நாளில் இந்த உலக வாழ்விலும் மண்ணறை வாழ்விலும் பகலின் சில பொழுதே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். பின்னர் மறுமை நாளில் பயங்கரமான காட்சிகளைக் கண்டதனால் அவர்களது அறிமுகம் அறுபட்டுப் போகும். மறுமை நாளில் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரித்தவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள். அவர்கள் இழப்பிலிருந்து தப்பிப்பதற்கு உலக வாழ்வில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் நாளை நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.
10:46Page 214
وَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفۡعَلُونَ ٤٦
And whether We show you some of what We promise them, [O Muḥammad], or We take you in death, to Us is their return; then, [either way], Allāh is a witness concerning what they are doing.
தூதரே!- நீர் மரணிப்பதற்கு முன்பே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டுவோம். அல்லது அதற்கு முன்பே உம்மை மரணிக்கச் செய்வோம். இந்த இரண்டு நிலைமைகளும் எவ்வாறு இருந்தாலும் மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை அல்லாஹ் கவனித்தவனாகவே உள்ளான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
10:47Page 214
وَلِكُلِّ أُمَّةٖ رَّسُولٞۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمۡ قُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ٤٧
And for every nation is a messenger. So when their messenger comes,1 it will be judged between them in justice, and they will not be wronged.
முந்தைய ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்பட்டார். அவருக்கு ஏவப்பட்டதை அவர் நிறைவேற்றிய பிறகு அவர்கள் அவரை நிராகரித்துவிட்டால் அவருக்கும் அவர்களுக்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்பட்டு விடும். அல்லாஹ் தன் அருளால் அவரைக் காப்பாற்றுவான். தன் நீதியால் அவர்களை அழிப்பான். அவர்களின் செயல்களுக்கான கூலியில் அவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்படவில்லை.
10:48Page 214
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٤٨
And they say, "When is [the fulfillment of] this promise, if you should be truthful?"
இந்த நிராகரிப்பாளர்கள் பிடிவாதமாகவும் சவால் விடுத்தவர்களாவும் கேட்கிறார்கள்: ”நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் எங்களை எச்சரித்த வேதனை எப்போது வரும்?”
10:49Page 214
قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي ضَرّٗا وَلَا نَفۡعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌۚ إِذَا جَآءَ أَجَلُهُمۡ فَلَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ٤٩
Say, "I possess not for myself any harm or benefit except what Allāh should will. For every nation is a [specified] term. When their time has come, then they will not remain behind an hour, nor will they precede [it]."
தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “எனக்கு நானே தீங்கிழைக்கவோ அதனைத் தடுக்கவோ சக்திபெற மாட்டேன் எனும் போது எவ்வாறு மற்றவர்களுக்கு என்னால் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும்? ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. நான் எவ்வாறு அவன் மறைவாக வைத்திருக்கும் விஷயங்களை அறிய முடியும்? அல்லாஹ் அழிப்பதாக எச்சரித்த ஒவ்வொரு சமூகத்திற்கும் அழிவதற்கான குறிப்பிட்ட நேரம் உண்டு. அதனை அல்லாஹ் மட்டுமே அறிவான். அழியும் நேரம் வந்துவிட்டால் அது சிறிது நேரம் கூட முந்தவோ பிந்தவோ செய்யாது.
10:50Page 214
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُهُۥ بَيَٰتًا أَوۡ نَهَارٗا مَّاذَا يَسۡتَعۡجِلُ مِنۡهُ ٱلۡمُجۡرِمُونَ ٥٠
Say, "Have you considered: if His punishment should come to you by night or by day - for which [aspect] of it would the criminals be impatient?"1
தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களிடம் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்பதைக் கூறுங்கள். இந்த வேதனையிலிருந்து எதனை அவசரமாக எதிர்பார்க்கிறீர்கள்?
10:51Page 214
أَثُمَّ إِذَا مَا وَقَعَ ءَامَنتُم بِهِۦٓۚ ءَآلۡـَٰٔنَ وَقَدۡ كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ ٥١
Then is it that when it has [actually] occurred you will believe in it? Now?1 And you were [once] for it impatient.2
உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை உங்களிடம் வந்த பிறகு இதற்கு முன்பு நம்பிக்கை கொள்ளாமல், நம்பிக்கை பயனளிக்காத சமயத்தில்தான் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா? இப்பொழுதுதான் நீங்கள் நம்பிக்கைகொள்கிறீர்களா? வேதனையை நிராகரிக்கும் வண்ணம் இதற்கு முன்னர் அதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களே!
10:52Page 214
ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ ٥٢
Then it will be said to those who had wronged, "Taste the punishment of eternity; are you being recompensed except for what you used to earn?"
பின்னர் அவர்களை வேதனையில் ஆழ்த்திய பிறகு அதிலிருந்து வெளியேற விரும்பும் அவர்களிடம் கூறப்படும்: “மறுமையில் நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள். நீங்கள் செய்த நிராகரிப்பு மற்றும் பாவங்களுக்கே தவிர கூலி கொடுக்கப்படவில்லை.
10:53Page 214
۞ وَيَسۡتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَۖ قُلۡ إِي وَرَبِّيٓ إِنَّهُۥ لَحَقّٞۖ وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ ٥٣
And they ask information of you, [O Muḥammad], "Is it true?" Say, "Yes, by my Lord. Indeed, it is truth; and you will not cause failure [to Allāh]."
தூதரே!- இணைவைப்பாளர்கள், “எங்களுக்கு வாக்களிப்படும் வேதனை உண்மையானதா?” என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “ஆம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது உண்மையாகும். நீங்கள் அதிலிருந்து தப்பமுடியாது.”
10:54Page 215
وَلَوۡ أَنَّ لِكُلِّ نَفۡسٖ ظَلَمَتۡ مَا فِي ٱلۡأَرۡضِ لَٱفۡتَدَتۡ بِهِۦۗ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۖ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ٥٤
And if each soul that wronged had everything on earth, it would offer it in ransom. And they will confide regret when they see the punishment; and they will be judged in justice, and they will not be wronged.
அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஒவ்வொருவருக்கும் பூமி நிறைய பெறுமதியான செல்வங்கள் இருந்தாலும், ஈட்டுத் தொகை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் ஈடாக அளித்துவிடுவார். மறுமை நாளில் தங்களின் நிராகரிப்பினால் இணைவைப்பாளர்கள் வேதனையைக் காணும் போது கைசேதத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களிடையே அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். தங்களின் செயல்களுக்குத்தான் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.
10:55Page 215
أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٥٥
Unquestionably, to Allāh belongs whatever is in the heavens and the earth. Unquestionably, the promise of Allāh is truth, but most of them do not know.
அறிந்து கொள்ளுங்கள், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அறிந்து கொள்ளுங்கள், நிராகரிப்பாளர்களுக்கு வேதனை அளிப்பேன் என்று அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறியே தீரும். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்ள மாட்டார்கள். எனவே சந்தேகம் கொள்கிறார்கள்.
10:56Page 215
هُوَ يُحۡيِۦ وَيُمِيتُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٥٦
He gives life and causes death, and to Him you will be returned.
அவனே இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி அளிப்பான்.
10:57Page 215
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَتۡكُم مَّوۡعِظَةٞ مِّن رَّبِّكُمۡ وَشِفَآءٞ لِّمَا فِي ٱلصُّدُورِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ ٥٧
O mankind, there has come to you instruction from your Lord and healing for what is in the breasts and guidance and mercy for the believers.
மனிதர்களே! உங்களிடம் குர்ஆன் வந்துள்ளது. அதில் அறிவுரையும் ஆர்வமூட்டலும் அச்சமூட்டலும் அடங்கியுள்ளது. அது உள்ளங்களிலுள்ள சந்தேகம் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக இருக்கின்றது; சத்தியப் பாதையின் பக்கம் வழிகாட்டுகிறது. அது நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.
10:58Page 215
قُلۡ بِفَضۡلِ ٱللَّهِ وَبِرَحۡمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلۡيَفۡرَحُواْ هُوَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ٥٨
Say, "In the bounty of Allāh and in His mercy - in that let them rejoice; it is better than what they accumulate."
தூதரே! நீர் மக்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்துள்ள குர்ஆன், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருளாகவும் கருணையாகவும் இருக்கின்றது. குர்ஆனை உங்களுக்கு இறக்கி அல்லாஹ் உங்கள் மீது புரியும் அருளையும் கருணையையும் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். வேறொன்றைக் கொண்டுமல்ல. முஹம்மது தம் இறைவனிடமிருந்து அவர்களிடம் கொண்டு வந்தது, அழிந்து விடும் உலகில் அவர்கள் சேர்த்துவைப்பவற்றை விட சிறந்தது.
10:59Page 215
قُلۡ أَرَءَيۡتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزۡقٖ فَجَعَلۡتُم مِّنۡهُ حَرَامٗا وَحَلَٰلٗا قُلۡ ءَآللَّهُ أَذِنَ لَكُمۡۖ أَمۡ عَلَى ٱللَّهِ تَفۡتَرُونَ ٥٩
Say, "Have you seen what Allāh has sent down to you of provision of which you have made [some] lawful and [some] unlawful?" Say, "Has Allāh permitted you [to do so], or do you invent [something] about Allāh?"
தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் வாழ்வாதாரங்களை இறக்கி உங்கள் மீது அருள் புரிந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவற்றில் உங்களுடைய மனஇச்சைகளைக் கொண்டு சிலவற்றை தடைசெய்யப்பட்டதாகவும் சிலவற்றை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்கிவிட்டீர்கள்.” நீர் அவர்களிடம் கேட்பீராக: நீங்கள் நினைத்ததைத் தடைசெய்யும் அதிகாரத்தையும் அனுமதியளிக்கும் அதிகாரத்தையும் அல்லாஹ்தான் உங்களுக்கு அளித்தானா? அல்லது நீங்களாகவே அவன் மீது பொய்யாக புனைந்து கொண்டீர்களா?
10:60Page 215
وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ ٦٠
And what will be the supposition of those who invent falsehood about Allāh on the Day of Resurrection?1 Indeed, Allāh is the possessor of bounty for the people, but most of them are not grateful.
பொய்யை புனைபவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு என்ன நிகழும் என்று எண்ணுகிறார்கள்? அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எண்ணுகிறார்களா? சாத்தியமேயில்லை. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்கள் மீது அருள்புரியக் கூடியவனாவான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.
10:61Page 215
وَمَا تَكُونُ فِي شَأۡنٖ وَمَا تَتۡلُواْ مِنۡهُ مِن قُرۡءَانٖ وَلَا تَعۡمَلُونَ مِنۡ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيۡكُمۡ شُهُودًا إِذۡ تُفِيضُونَ فِيهِۚ وَمَا يَعۡزُبُ عَن رَّبِّكَ مِن مِّثۡقَالِ ذَرَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ وَلَآ أَصۡغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡبَرَ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ ٦١
And, [O Muḥammad], you are not [engaged] in any matter and do not recite any of the Qur’ān and you [people] do not do any deed except that We are witness over you when you are involved in it. And not absent from your Lord is any [part] of an atom's weight1 within the earth or within the heaven or [anything] smaller than that or greater but that it is in a clear register.
தூதரே!- நீர் ஏதேனும் ஒரு காரியத்தில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதைப் படித்தாலும் -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் நீங்கள் அதனைச் செய்வதற்கு முன்வந்து அதனை ஆரம்பிக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டும், அறிந்து கொண்டும், செவியேற்றுக் கொண்டும் இருக்கிறோம். வானத்திலோ பூமியிலோ அணுவளவும், அதைவிட சிறியதும் பெரியதும் உம் இறைவனின் அறிவை விட்டும் மறையாது. அவைகள் எதுவும் தெளிவான பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை. சிறியது, பெரியது என எதையும் பாதுகாக்காது அவன் விட்டு விடமாட்டான்.
10:62Page 216
أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٦٢
Unquestionably, [for] the allies of Allāh there will be no fear concerning them, nor will they grieve -
அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் நேசர்களுக்கு, அவர்கள் மறுமை நாளில் எதிர்கொள்ளும் பயங்கரங்களால் எந்த அச்சமும் இல்லை. அவர்களுக்குத் தவறிவிட்ட உலக பாக்கியங்களை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்.
10:63Page 216
ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ٦٣
Those who believed and were fearing Allāh.
இந்த இறைநேசர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்களும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுபவர்களாக இருந்தவர்களுமேயாவர்.
10:64Page 216
لَهُمُ ٱلۡبُشۡرَىٰ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۚ لَا تَبۡدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ٦٤
For them are good tidings in the worldly life and in the Hereafter. No change is there in the words [i.e., decrees] of Allāh. That is what is the great attainment.
அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் நல்ல கனவின் மூலம், மக்கள் அவர்களைப் புகழ்வதன் மூலம் நற்செய்தி உண்டு; அவர்களின் உயிர்களைக் கைப்பற்றப்படும் போதும், மரணித்த பின்னரும், ஒன்று திரட்டப்படும் போதும் வானவர்களிடமிருந்து அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வெகுமதியே மாபெரும் வெற்றியாகும். ஏனெனில் அதில்தான் எதிர்பார்த்தது கிடைத்து அச்சப்பட்டதில் இருந்து பாதுகாப்பு உண்டு.
10:65Page 216
وَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعًاۚ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٦٥
And let not their speech grieve you. Indeed, honor [due to power] belongs to Allāh entirely. He is the Hearing, the Knowing.
தூதரே!- உம் மார்க்கத்தைக் குறைகூறி இவர்கள் கூறும் கருத்துகளால் நீர் கவலையடைய வேண்டாம். நிச்சயமாக ஆதிக்கமும் வெற்றியும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. யாரும் அவனை மிகைத்துவிட முடியாது. அவர்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
10:66Page 216
أَلَآ إِنَّ لِلَّهِ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِۗ وَمَا يَتَّبِعُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ شُرَكَآءَۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ ٦٦
Unquestionably, to Allāh belongs whoever is in the heavens and whoever is on the earth. And those who invoke other than Allāh do not [actually] follow [His] "partners." They follow not except assumption, and they are not but misjudging.
அறிந்துகொள்ளுங்கள், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வைத் தவிர இணைத் தெய்வங்களை வணங்கும் இணைவைப்பாளர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? உண்மையில் அவர்கள் யூகங்களையே பின்பற்றுகிறார்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியதில் அவர்கள் பொய்யே கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்துவிட்டான்.
10:67Page 216
هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ ٦٧
It is He who made for you the night to rest therein and the day, giving sight.1 Indeed in that are signs for a people who listen.
மனிதர்களே!- நீங்கள் களைப்பிலிருந்து ஓய்வெடுப்பதற்காக இரவை அவனே உண்டாக்கினான். நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதை உழைத்துக் கொள்வதற்காக பகலை அவனே பிரகாசமானதாக ஆக்கியுள்ளான். நிச்சயமாக இதில் படிப்பினை பெற்று கீழ்ப்படியும் எண்ணத்துடன் செவியேற்கக் கூடியவர்களுக்கு தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences