Al-MukhtasarYunus · 10:68–105

Al-Mukhtasar · Tafsir · in Tamil

Yunus 10:68–105

10:68Page 216

قَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱلۡغَنِيُّۖ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ إِنۡ عِندَكُم مِّن سُلۡطَٰنِۭ بِهَٰذَآۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٦٨

They1 have said, "Allāh has taken a son." Exalted is He; He is the [one] Free of need. To Him belongs whatever is in the heavens and whatever is in the earth. You have no authority2 for this [claim]. Do you say about Allāh that which you do not know?

இணைவைப்பாளர்களில் ஒரு பிரிவினர், “அல்லாஹ் வானவர்களை மகள்களாக எடுத்துக் கொண்டான்” என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டு தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. -இணைவைப்பாளர்களே!- உங்களது இக்கூற்றுக்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வுக்கு பிள்ளை உண்டு என்ற மிகப் பெரும் கருத்தை அதன் யதார்த்தத்தைப் புரியாமல் ஆதாரமின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?

10:69Page 216

قُلۡ إِنَّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا يُفۡلِحُونَ ٦٩

Say, "Indeed, those who invent falsehood about Allāh will not succeed."

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கு பிள்ளை உள்ளதாக அவன் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுபவர்கள் தாங்கள் விரும்பும் விஷயத்தைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து தப்பித்து ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

10:70Page 216

مَتَٰعٞ فِي ٱلدُّنۡيَا ثُمَّ إِلَيۡنَا مَرۡجِعُهُمۡ ثُمَّ نُذِيقُهُمُ ٱلۡعَذَابَ ٱلشَّدِيدَ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ ٧٠

[For them is brief] enjoyment in this world; then to Us is their return; then We will make them taste the severe punishment because they used to disbelieve.

அவர்கள் அனுபவிக்கும் இவ்வுலக இன்பங்களைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட வேண்டாம். அவை அழியக்கூடிய அற்ப இன்பமே. பின்னர் மறுமை நாளில் நம்மிடமே அவர்கள் திரும்பிவர வேண்டும். பின்னர், அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதரை பொய்யர் என்று கூறியதனாலும் நாம் அவர்களை கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.

10:71Page 217

۞ وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ نُوحٍ إِذۡ قَالَ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِن كَانَ كَبُرَ عَلَيۡكُم مَّقَامِي وَتَذۡكِيرِي بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلۡتُ فَأَجۡمِعُوٓاْ أَمۡرَكُمۡ وَشُرَكَآءَكُمۡ ثُمَّ لَا يَكُنۡ أَمۡرُكُمۡ عَلَيۡكُمۡ غُمَّةٗ ثُمَّ ٱقۡضُوٓاْ إِلَيَّ وَلَا تُنظِرُونِ ٧١

And recite to them the news of Noah, when he said to his people, "O my people, if my residence and my reminding of the signs of Allāh has become burdensome upon you - then I have relied upon Allāh. So resolve upon your plan and [call upon] your associates. Then let not your plan be obscure to you.1 Then carry it out upon me and do not give me respite.

தூதரே!- நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு நூஹின் செய்தியை எடுத்துரைப்பீராக. அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “என் சமூகமே, நான் உங்களிடையே இருப்பதும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கொண்டு உங்களை அறிவுறுத்துவதும் உங்களுக்குப் பாரமாகத் தோன்றி, நீங்கள் என்னைக் கொல்ல நாடினால் உங்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே உறுதியான திட்டம் தீட்டி என்னை அழிக்க முடிவுசெய்யுங்கள். அதற்கு உங்களின் தெய்வங்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களின் திட்டம் புரியாத இரகசியமாக இருக்க வேண்டாம். என்னை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிறகு அதனைச் செயல்படுத்துங்கள். ஒரு வினாடி கூட எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்.

10:72Page 217

فَإِن تَوَلَّيۡتُمۡ فَمَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ ٧٢

And if you turn away [from my advice] - then no payment have I asked of you. My reward is only from Allāh, and I have been commanded to be of the Muslims [i.e., those who submit to Allāh]."

நீங்கள் எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இறைவனின் தூதை எடுத்துரைப்பதற்காக உங்களிடம் எந்த கூலியையும் நான் எதிர்பார்க்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என் மீது நம்பிக்கை கொண்டாலும் என்னை நிராகரித்தாலும் எனது கூலி அல்லாஹ்விடமே இருக்கின்றது. நான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரியக்கூடியவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.

10:73Page 217

فَكَذَّبُوهُ فَنَجَّيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ وَجَعَلۡنَٰهُمۡ خَلَٰٓئِفَ وَأَغۡرَقۡنَا ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ ٧٣

And they denied him, so We saved him and those with him in the ship and made them successors, and We drowned those who denied Our signs. Then see how was the end of those who were warned.

அவருடைய சமூகம் அவரை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. நாம் அவரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் கப்பலில் காப்பாற்றினோம். அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் வழித்தோன்றல்களாக அவர்களை ஆக்கினோம். அவர் கொண்டு வந்த சான்றுகளையும் ஆதாரங்களையும் நிராகரித்தவர்களை வெள்ளத்தால் அழித்து விட்டோம். -தூதரே!- நூஹ் எச்சரித்தும் நம்பிக்கை கொள்ளாத மக்களின் கதி என்னாவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக.

10:74Page 217

ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ بِهِۦ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ نَطۡبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلۡمُعۡتَدِينَ ٧٤

Then We sent after him messengers to their peoples, and they came to them with clear proofs. But they were not to believe in that which they had denied before.1 Thus We seal over the hearts of the transgressors.

நூஹுக்கு சில காலத்திற்குப் பிறகு பல தூதர்களை அவர்களது சமூகங்களின்பால் அனுப்பினோம். தூதர்கள் தங்களின் சமூகங்களிடம் சான்றுகளையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் தூதர்களை நிராகரிப்பதில் முன்பு உறுதியாக இருந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். முந்தைய தூதர்களை நிராகரித்த அந்த மக்கள் மீது முத்திரையிட்டது போன்றே எல்லா கால கட்டங்களிலும் இடங்களிலும் நிராகரிப்பின் மூலம் இறைவரம்பை மீறக்கூடிய நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களின் மீதும் முத்திரையிட்டு விடுகின்றோம்.

10:75Page 217

ثُمَّ بَعَثۡنَا مِنۢ بَعۡدِهِم مُّوسَىٰ وَهَٰرُونَ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ بِـَٔايَٰتِنَا فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ ٧٥

Then We sent after them Moses and Aaron to Pharaoh and his establishment with Our signs, but they behaved arrogantly and were a criminal people.

இந்த தூதர்கள் அனுப்பப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் எகிப்தின் அரசன் பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து தலைவர்களிடமும் அனுப்பினோம். அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பினோம். ஆனால் பிர்அவ்னும் அவன் சமூகத்தினரும் அவர்கள் இருவரும் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்ளாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை மறுத்ததனாலும் குற்றவாளிகளாக இருந்தார்கள்.

10:76Page 217

فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُوٓاْ إِنَّ هَٰذَا لَسِحۡرٞ مُّبِينٞ ٧٦

So when there came to them the truth from Us, they said, "Indeed, this is obvious magic."

பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து பெரியவர்களிடமும் மூஸாவும் ஹாரூனும் கொண்டு வந்த சத்திய மார்க்கம் வந்த போது மூஸா கொண்டு வந்த இறை அத்தாட்சிகளைப் பற்றி அவர்கள் “நிச்சயமாக இவை தெளிவான சூனியமே. அவை உண்மையல்ல.” என்று கூறினார்கள்.

10:77Page 217

قَالَ مُوسَىٰٓ أَتَقُولُونَ لِلۡحَقِّ لَمَّا جَآءَكُمۡۖ أَسِحۡرٌ هَٰذَا وَلَا يُفۡلِحُ ٱلسَّٰحِرُونَ ٧٧

Moses said, "Do you say [thus] about the truth when it has come to you? Is this magic? But magicians will not succeed."

மூஸா, அவர்கள் கூறியதை மறுத்தவராக கூறினார்: “உங்களிடம் வந்துள்ள சத்தியத்தையா சூனியம் என்று கூறுகிறீர்கள்? இது ஒருபோதும் சூனியமாக முடியாது. சூனியக்காரன் ஒரு போதும் வெற்றிபெற மாட்டான் என்பதை நான் நன்கு அறிவேன். பிறகு எவ்வாறு நான் அதில் ஈடுபட முடியும்?

10:78Page 217

قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلۡأَرۡضِ وَمَا نَحۡنُ لَكُمَا بِمُؤۡمِنِينَ ٧٨

They said, "Have you come to us to turn us away from that upon which we found our fathers and so that you two may have grandeur in the land? And we are not believers in you."

பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் விடையளித்தவாறு கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு எம்மைத் திசை திருப்பவும் உமக்கும் உமது சகோதரருக்கும் அதிகாரம் கிடைக்கவுமா இந்த சூனியத்தை எம்மிடம் எடுத்து வந்துள்ளீர்கள்? -மூஸாவே ஹாரூனே- நீங்கள் இருவரும் எங்களிடம் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை.

10:79Page 218

وَقَالَ فِرۡعَوۡنُ ٱئۡتُونِي بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٖ ٧٩

And Pharaoh said, "Bring to me every learned magician."

பிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் கூறினான்: “கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.”

10:80Page 218

فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ٨٠

So when the magicians came, Moses said to them, "Throw down whatever you will throw."

பிர்அவ்னிடம் சூனியக்காரர்களை அவர்கள் கொண்டு வந்த போது அவர்களை வென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் மூஸா அவர்களிடம் கூறினார்: -“சூனியக்காரர்களே-, நீங்கள் எறிய வேண்டியதை எறியுங்கள்.”

10:81Page 218

فَلَمَّآ أَلۡقَوۡاْ قَالَ مُوسَىٰ مَا جِئۡتُم بِهِ ٱلسِّحۡرُۖ إِنَّ ٱللَّهَ سَيُبۡطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصۡلِحُ عَمَلَ ٱلۡمُفۡسِدِينَ ٨١

And when they had thrown, Moses said, "What you have brought is [only] magic. Indeed, Allāh will expose its worthlessness. Indeed, Allāh does not amend the work of corrupters.

சூனியக்காரர்கள் தங்களிடமுள்ள சூனியத்தை எறிந்த போது மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் வெளிப்படுத்தியவை சூனியமே. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்ததை எந்தத் தாக்கமுமற்ற வீணானதாக ஆக்கிவிடுவான். நீங்கள் உங்களுடைய சூனியத்தின் மூலம் உலகில் குழப்பம் விளைவிக்கிறீர்கள். குழப்பம் விளைவிப்பவர்களின் செயல்களை அல்லாஹ் சீராக்க மாட்டான்.

10:82Page 218

وَيُحِقُّ ٱللَّهُ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ ٨٢

And Allāh will establish the truth by His words, even if the criminals dislike it."

அல்லாஹ் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறான். விதிரீதியான தன் வார்த்தைகளாலும் மார்க்க ரீதியான தன் வார்த்தைகளில் காணப்படும் ஆதாரங்கள் மற்றும் சான்றுகளாலும் அதனை ஸ்திரப்படுததுகிறான். அதனை பிர்அவ்னின் சமூகத்தைச் சார்ந்த பாவிகளான நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே.

10:83Page 218

فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٞ مِّن قَوۡمِهِۦ عَلَىٰ خَوۡفٖ مِّن فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِمۡ أَن يَفۡتِنَهُمۡۚ وَإِنَّ فِرۡعَوۡنَ لَعَالٖ فِي ٱلۡأَرۡضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلۡمُسۡرِفِينَ ٨٣

But no one believed Moses, except [some] offspring [i.e., youths] among his people, for fear of Pharaoh and his establishment that they would persecute them. And indeed, Pharaoh was haughty within the land, and indeed, he was of the transgressors.

அச்சமுதாயம் புறக்கணிப்பதாக தீர்மானித்திருந்தனர். அதனால் மூஸா -தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும்- கொண்டு வந்தும் அவர்கள் அவரை நம்பவில்லை. ஆயினும் இஸ்ராயீலின் மக்களில் சில இளைஞர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டார்கள். அவர்களும் தங்களின் விஷயம் வெளிப்பட்டுவிட்டால் பிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் தங்களை வேதனைக்குட்படுத்தி ஈமானை விட்டும் திசைதிருப்பி விடுவார்களோ என்ற பயத்தில்தான் இருந்தார்கள். நிச்சயமாக பிர்அவ்ன் எகிப்திய மக்களின் மீது அடக்குமுறையாளன். மேலும் அவன் நிராகரிப்பிலும், இஸ்ராயீலின் மக்களைக் கொல்வதிலும் வேதனைக்குட்படுத்துவதிலும் வரம்புமீறுபவன்.

10:84Page 218

وَقَالَ مُوسَىٰ يَٰقَوۡمِ إِن كُنتُمۡ ءَامَنتُم بِٱللَّهِ فَعَلَيۡهِ تَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّسۡلِمِينَ ٨٤

And Moses said, "O my people, if you have believed in Allāh, then rely upon Him, if you should be Muslims [i.e., submitting to Him]."

மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வின் மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தால் அவனையே முழுவதுமாக சார்ந்திருங்கள். அல்லாஹ்வை முழுமையாக சார்ந்திருப்பது உங்களை விட்டும் தீங்கினை அகற்றும், உங்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும்.”

10:85Page 218

فَقَالُواْ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٨٥

So they said, "Upon Allāh do we rely. Our Lord, make us not [objects of] trial for the wrongdoing people

அவர்கள் மூஸாவிடம் விடையளித்தவாறு கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே முழுமையாக நம்பியுள்ளோம். எங்கள் இறைவா! எங்கள் மீது அநியாயக்காரர்களை சாட்டிவிடாதே. அவர்கள் வேதனையளித்தும் கொலை செய்தும் ஆசை காட்டியும் எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டும் திருப்பி விடுவார்கள்.

10:86Page 218

وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ٨٦

And save us by Your mercy from the disbelieving people."

எங்கள் இறைவா!- உன் அருளால் நிராகரிக்கும் பிர்அவ்னின் சமூகத்தாரிடமிருந்து எங்களுக்கு விடுதலையளிப்பாயாக. அவர்கள் எங்களை அடிமைகளாக்கி வேதனை செய்தும் கொலை செய்தும் எம்மை தொல்லைக்குட்படுத்தினர்.

10:87Page 218

وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوۡمِكُمَا بِمِصۡرَ بُيُوتٗا وَٱجۡعَلُواْ بُيُوتَكُمۡ قِبۡلَةٗ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ٨٧

And We inspired to Moses and his brother, "Settle your people in Egypt in houses and make your houses [facing the] qiblah1 and establish prayer and give good tidings to the believers."

நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரர் ஹாரூனுக்கும் வஹி அறிவித்தோம்: “அல்லாஹ் ஒருவனையே வணங்குவதற்கு உங்கள் சமூகத்துக்கு சில வீடுகளை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது வீடுகளை கிப்லாவான (பைதுல் முகத்தஸின்) பக்கம் முன்னோக்கியதாக அமைத்துக் கொள்ளுங்கள். தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். -மூஸாவே!- நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்தும் அல்லாஹ்வின் உதவி, எதிரிகளின் அழிவு, பூமியில் அவர்களை வழித்தோன்றல்களாக ஆக்குதல் ஆகிய விஷயங்களைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.

10:88Page 218

وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيۡتَ فِرۡعَوۡنَ وَمَلَأَهُۥ زِينَةٗ وَأَمۡوَٰلٗا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا رَبَّنَا لِيُضِلُّواْ عَن سَبِيلِكَۖ رَبَّنَا ٱطۡمِسۡ عَلَىٰٓ أَمۡوَٰلِهِمۡ وَٱشۡدُدۡ عَلَىٰ قُلُوبِهِمۡ فَلَا يُؤۡمِنُواْ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ٨٨

And Moses said, "Our Lord, indeed You have given Pharaoh and his establishment splendor and wealth in the worldly life, our Lord, that they may lead [men] astray from Your way. Our Lord, obliterate their wealth and harden their hearts so that they will not believe until they see the painful punishment."

மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! இவ்வுலக வாழ்வில் நீ பிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கும் உலகத்தின் அலங்காரங்களையும் இந்த உலக வாழ்கையில் செல்வங்களையும் வழங்கியுள்ளாய். நீ அவர்களுக்கு அளித்தவற்றிற்காக அவர்கள் உனக்கு நன்றி செலுத்தவில்லை. மாறாக அவற்றைக் கொண்டு மக்களை உன் வழியை விட்டும் நெறிபிறழச் செய்தார்கள். எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை நீ அழித்து விடுவாயாக. அவர்களின் உள்ளங்களை கடினமாக்கி விடுவாயாக. எனெனில் அவர்கள் நம்பிக்கை கொள்வது பயனளிக்காத, வேதனை மிக்க தண்டனையை அவர்கள் காணும் நேரம் அன்றி அவர்கள் நம்பிக்கைகொள்ளமாட்டார்கள்.

10:89Page 219

قَالَ قَدۡ أُجِيبَت دَّعۡوَتُكُمَا فَٱسۡتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ ٨٩

[Allāh] said, "Your supplication has been answered."1 So remain on a right course and follow not the way of those who do not know."

அல்லாஹ் கூறினான்: -மூஸா மற்றும் ஹாரூனே!- பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் செய்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. உங்களின் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள். அதிலிருந்து நெறிபிறழ்ந்து சத்திய பாதையை அறியாத மூடர்களின் பாதையைப் பின்பற்றி விடாதீர்கள்.

10:90Page 219

۞ وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ وَجُنُودُهُۥ بَغۡيٗا وَعَدۡوًاۖ حَتَّىٰٓ إِذَآ أَدۡرَكَهُ ٱلۡغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱلَّذِيٓ ءَامَنَتۡ بِهِۦ بَنُوٓاْ إِسۡرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلۡمُسۡلِمِينَ ٩٠

And We took the Children of Israel across the sea, and Pharaoh and his soldiers pursued them in tyranny and enmity until, when drowning overtook him, he said, "I believe that there is no deity except that in whom the Children of Israel believe, and I am of the Muslims."

கடலைப் பிளந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அதனைக் கடப்பதை நாம் எளிதாக்கினோம். அவர்கள் பாதுகாப்பாக அதனைக் கடந்தார்கள். பிர்அவ்னும் அவனுடைய படைகளும் அநியாயமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். கடல் அவனை மூடி, மூழ்கடித்து, தப்புவதில் விரக்தியடைந்து அவன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்கள் யார் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான எந்த இறைவனும் இல்லை என்று நான் நம்பிக்கை கொள்கிறேன். கட்டளைகளை கொண்டு நான் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகி விட்டேன்.”

10:91Page 219

ءَآلۡـَٰٔنَ وَقَدۡ عَصَيۡتَ قَبۡلُ وَكُنتَ مِنَ ٱلۡمُفۡسِدِينَ ٩١

Now? And you had disobeyed [Him] before and were of the corrupters?

இப்பொழுது, வாழ்க்கையிலிருந்து விரக்தியடைந்த பிறகுதானா நம்பிக்கைகொள்கிறாய்? -பிர்அவ்னே- வேதனை இறங்குவதற்கு முன்னர் அல்லாஹ்வை நிராகரித்து, அவனது பாதையை விட்டும் தடுத்து; அவனுக்கு மாறாகச் செயல்பட்டாய்; நீயும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்ததனால் நீ குழப்பவாதிகளில் ஒருவனாக இருந்தாய்.

10:92Page 219

فَٱلۡيَوۡمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنۡ خَلۡفَكَ ءَايَةٗۚ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ عَنۡ ءَايَٰتِنَا لَغَٰفِلُونَ ٩٢

So today We will save you in body1 that you may be to those who succeed you a sign. And indeed, many among the people, of Our signs, are heedless.

பிர்அவ்னே!- உனக்குப் பின்னர் வரக்கூடியவர்கள் படிப்பினை பெறும் பொருட்டு இன்றைய தினம் கடலிலிருந்து உன்னை வெளிப்படுத்தி பூமியின் உயர்ந்த நிலப்பரப்பு ஒன்றில் உன்னை வைப்போம். மக்களில் பெரும்பாலோர் நம்முடைய சான்றுகளையும் ஆதாரங்களையும் விட்டு அலட்சியமாகவே இருக்கிறார்கள். அவற்றில் அவர்கள் சிந்தனை செலுத்துவதில்லை.

10:93Page 219

وَلَقَدۡ بَوَّأۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدۡقٖ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخۡتَلَفُواْ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡعِلۡمُۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ٩٣

And We had certainly settled the Children of Israel in an agreeable settlement and provided them with good things. And they did not differ until [after] knowledge had come to them. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.

நாம் இஸ்ராயீலின் மக்களை அருள்வளம்மிக்க ஷாம் தேசத்திலுள்ள சிறந்த, விரும்பத்தக்க ஓர் இடத்தில், இறங்கச் செய்தோம். அவர்களுக்குத் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட பொருள்களை வழங்கினோம். தவ்ராத்தில் அவர்கள் படித்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணணையை உண்மைப்படுத்தக்கூடியதாக அல்குர்ஆன் அவர்களிடம் வரும் வரை அவர்கள் தமது மார்க்க விடயத்தில் முரண்படவில்லை. அவர்கள் அதனை நிராகரித்த போது அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் முரண்பட்டுள்ளவற்றில் மறுமை நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் சத்தியத்தில் இருந்தவர்களுக்கும் அசத்தியத்தில் இருந்தவர்களுக்கும் தகுந்த கூலியை அவன் வழங்குவான்.

10:94Page 219

فَإِن كُنتَ فِي شَكّٖ مِّمَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ فَسۡـَٔلِ ٱلَّذِينَ يَقۡرَءُونَ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكَۚ لَقَدۡ جَآءَكَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ ٩٤

So if you are in doubt, [O Muḥammad], about that which We have revealed to you, then ask those who have been reading the Scripture before you. The truth has certainly come to you from your Lord, so never be among the doubters.

தூதரே!- நாம் உம்மீது இறக்கிய குர்ஆனின் உண்மை நிலையைக் குறித்து நீர் சந்தேகத்தில் இருந்தீரானால் தவ்ராத்தையும் இன்ஜீலையும் படித்துக் கொண்டிருந்த யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் தங்களின் வேதங்களில் உம்மீது இறக்கப்பட்டதைக் குறித்து கூறப்பட்டுள்ளதைக் கண்டதனால் உம்மீது இறக்கப்பட்டது சத்தியமே என்பதை அவர்கள் உமக்கு கூறுவார்கள். சந்தேகமற்ற சத்தியம் உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்துள்ளது. எனவே சந்தேகம் கொள்வோரில் ஒருவராகிவிடாதீர்.

10:95Page 219

وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلۡخَٰسِرِينَ ٩٥

And never be of those who deny the signs of Allāh and [thus] be among the losers.1

அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் பொய் எனக்கூறி மறுத்தவர்களில் ஒருவராகிவிடாதீர். அவ்வாறு செய்தால் நிராகரித்து தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தியவர்களில் ஒருவராகி விடுவீர். இவையனைத்தும் பொய்பித்தல், சந்தேகம் என்னும் ஆபத்தைக் குறித்து எச்சரிப்பதற்காகத்தான். மற்றபடி இது போன்ற சந்தேகம் ஏற்படுவதை விட்டும் நிச்சயமாக நபியவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.

10:96Page 219

إِنَّ ٱلَّذِينَ حَقَّتۡ عَلَيۡهِمۡ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤۡمِنُونَ ٩٦

Indeed, those upon whom the word [i.e., decree] of your Lord has come into effect will not believe,

நிச்சயமாக, நிராகரிப்பில் நிலைத்திருந்ததனால் நிராகரித்த நிலையிலேயே மரணிப்பார்கள் என்று அல்லாஹ்வின் விதி யார் மீது தீர்மானமாகி விட்டதோ அவர்கள் ஒருபோதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

10:97Page 219

وَلَوۡ جَآءَتۡهُمۡ كُلُّ ءَايَةٍ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ٩٧

Even if every sign should come to them, until they see the painful punishment.

அவர்களிடம் மார்க்க ரீதியான அல்லது பிரபஞ்ச ரீதியான சான்றுகள் அனைத்தும் வந்தாலும் வேதனை மிக்க தண்டனையைக் காணும் வரை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அப்போது அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலை வரும் போது ஈமான் கொள்வார்கள்.

10:98Page 220

فَلَوۡلَا كَانَتۡ قَرۡيَةٌ ءَامَنَتۡ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوۡمَ يُونُسَ لَمَّآ ءَامَنُواْ كَشَفۡنَا عَنۡهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ٩٨

Then has there not been a [single] city that believed so its faith benefited it except the people of Jonah? When they believed, We removed from them the punishment of disgrace in worldly life and gave them enjoyment [i.e., provision] for a time.

யூனுஸ் உடைய சமூகத்தாரைத் தவிர நாம் தூதர்களை அனுப்பிய எந்த ஊர்வாசிகளும் வேதனையைக் காண்பதற்கு முன்னால் தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லை. யூனுஸின் சமூகத்தார் உண்மையாகவே நம்பிக்கை கொண்டதனால் நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை விட்டு இழிவு, அவமானம் ஆகிய வேதனையை அகற்றினோம். அவர்களின் தவணை முடியும் வரை அவர்களை அனுபவிக்கச் செய்தோம்.

10:99Page 220

وَلَوۡ شَآءَ رَبُّكَ لَأٓمَنَ مَن فِي ٱلۡأَرۡضِ كُلُّهُمۡ جَمِيعًاۚ أَفَأَنتَ تُكۡرِهُ ٱلنَّاسَ حَتَّىٰ يَكُونُواْ مُؤۡمِنِينَ ٩٩

And had your Lord willed, those on earth would have believed - all of them entirely. Then, [O Muḥammad], would you compel the people in order that they become believers?

தூதரே!- உம் இறைவன் பூமியிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொள்வதை நாடியிருந்தால் அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆயினும் அவன் ஒரு நோக்கத்திற்காக அவ்வாறு நாடவில்லை. தான் நாடியவர்களை தன் நீதியால் அவன் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்குத் தன் அருளால் அவன் நேர்வழி காட்டுகிறான். உம்மால் மக்களை நம்பிக்கை கொள்ளும்படி நிர்ப்பந்திக்க முடியாது. ஈமான் கொள்வதற்கு பாக்கியமளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.

10:100Page 220

وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تُؤۡمِنَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَجۡعَلُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يَعۡقِلُونَ ١٠٠

And it is not for a soul [i.e., anyone] to believe except by permission of Allāh, and He will place defilement1 upon those who will not use reason.

அல்லாஹ்வின் அனுமதியின்றி எவராலும் நம்பிக்கை கொண்டுவிட முடியாது. அவனது நாட்டமின்றி நம்பிக்கை ஏற்படாது. எனவே நீர் அவர்களுக்காக வருத்தப்படாதீர். அல்லாஹ்வின் ஆதாரங்களையும், ஏவல்களையும், விலக்கல்களையும் விளங்கிக் கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் வேதனையையும் இழிவையும் சாட்டிவிடுகிறான்.

10:101Page 220

قُلِ ٱنظُرُواْ مَاذَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَا تُغۡنِي ٱلۡأٓيَٰتُ وَٱلنُّذُرُ عَن قَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ ١٠١

Say, "Observe what is in the heavens and the earth." But of no avail will be signs or warners to a people who do not believe.

தூதரே!- உம்மிடம் சான்றுகளை வேண்டும் இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நிராகரிப்பில் நிலைத்திருந்து நம்பிக்கை கொள்வதற்கு தயாரற்ற சமூகத்திற்கு அத்தாட்சிகளையும் சான்றுகளையும் இறக்குவதும், தூதர்களை அனுப்புவதும் பயனளிக்கப் போவதில்லை.

10:102Page 220

فَهَلۡ يَنتَظِرُونَ إِلَّا مِثۡلَ أَيَّامِ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِهِمۡۚ قُلۡ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ١٠٢

So do they wait except for like [what occurred in] the days of those who passed on before them? Say, "Then wait; indeed, I am with you among those who wait."

இந்த நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு முந்தைய பொய்பித்த சமூகங்களின் மீது அல்லாஹ் இறக்கிய வேதனையைப் போன்றல்லாத ஒன்றையா எதிர்பார்க்கிறார்கள்?! -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் என் இறைவனின் வாக்குறுதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

10:103Page 220

ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيۡنَا نُنجِ ٱلۡمُؤۡمِنِينَ ١٠٣

Then We will save Our messengers and those who have believed. Thus, it is an obligation upon Us that We save the believers.1

பின்னர் அவர்கள் மீது வேதனையை இறக்கி நம்முடைய தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றுகின்றோம். அவர்களின் சமூகத்திற்கு ஏற்பட்டது அவர்களுக்கு ஏற்படுவதில்லை. நாம் அந்த தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றியது போன்றே அல்லாஹ்வின் தூதரையும் அவருடன் உள்ள நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுவது நம்மீது நாம் விதித்துக் கொண்ட கடமையாகும்.

10:104Page 220

قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمۡ فِي شَكّٖ مِّن دِينِي فَلَآ أَعۡبُدُ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنۡ أَعۡبُدُ ٱللَّهَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُمۡۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ١٠٤

Say, [O Muḥammad], "O people, if you are in doubt as to my religion - then I do not worship those which you worship besides Allāh; but I worship Allāh, who causes your death. And I have been commanded to be of the believers

தூதரே!- நீர் கூறுவீராக: “மக்களே! நான் உங்களை அழைக்கும் ஓரிறைக் கொள்கை என்னும் என் மார்க்கத்தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தாலும் உங்களின் மார்க்கம் அசத்தியம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனவே நான் அதனைப் பின்பற்றமாட்டேன். அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் எதையும் நான் வணங்க மாட்டேன். ஆனாலும் உங்களை மரணிக்கச் செய்பவனான அல்லாஹ்வையே நான் வணங்குவேன். நான் வணக்கத்தை அவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.

10:105Page 220

وَأَنۡ أَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ١٠٥

And [commanded], 'Direct your face [i.e., self] toward the religion, inclining to truth, and never be of those who associate others with Allāh;

அவ்வாறே நான் எல்லா மார்க்கங்களையும் விட்டு விட்டு உண்மையான மார்க்கத்தில் நிலைத்திருக்குமாறு ஏவியுள்ளான். இணைவைப்பாளர்களில் ஒருவனாகி விடுவதை விட்டும் அவன் என்னைத் தடுத்துள்ளான்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском