Al-Mukhtasar · Tafsir · in Tamil
An-Nahl 16:38–74
16:38Page 271
وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَا يَبۡعَثُ ٱللَّهُ مَن يَمُوتُۚ بَلَىٰ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٣٨
And they swear by Allāh their strongest oaths [that] Allāh will not resurrect one who dies. But yes - [it is] a true promise [binding] upon Him, but most of the people do not know.
உயிர் கொடுத்து எழுப்பப்படுவதைப் பொய்பிக்கக்கூடிய இவர்கள் உறுதியாக, எல்லை கடந்து, சத்தியமிட்டுக் கூறுகிறார்கள், “அல்லாஹ் மரணித்தவர்களை ஒருபோதும் எழுப்ப மாட்டான் என்று.” அவர்களிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அவன் மரணித்தவர்களை நிச்சயம் உயிர் கொடுத்து எழுப்புவான். இது அவனுடைய உறுதியான வாக்குறுதியாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் மரணித்தவர்களை அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை அறியமாட்டார்கள். எனவேதான் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவதை மறுக்கிறார்கள்.
16:39Page 271
لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِي يَخۡتَلِفُونَ فِيهِ وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ كَانُواْ كَٰذِبِينَ ٣٩
[It is] so He will make clear to them [the truth of] that wherein they differ and so those who have disbelieved may know that they were liars.
அவர்கள் முரண்பட்டுக்கொண்டிருந்த ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புதல் ஆகிய விஷயங்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காகவும் அல்லாஹ்வுக்கு இணைகள் உண்டு என்ற தமது வாதத்திலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதை மறுத்ததிலும் அவர்கள் பொய்யர்களே என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் மறுமைநாளில் அவர்கள் அனைவரையும் அவன் உயிர்கொடுத்து எழுப்புவான்.
16:40Page 271
إِنَّمَا قَوۡلُنَا لِشَيۡءٍ إِذَآ أَرَدۡنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ ٤٠
Indeed, Our word to a thing when We intend it is but that We say to it, "Be," and it is.
நாம் மரணித்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்ப விரும்பினால் எதுவும் நம்மை தடுத்துவிட முடியாது. நாம் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய விரும்பினால் ’ஆகு’ என்றுதான் கூறுவோம். அது சந்தேகமில்லாமல் ஆகிவிடும்.
16:41Page 271
وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْ لَنُبَوِّئَنَّهُمۡ فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗۖ وَلَأَجۡرُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٤١
And those who emigrated for [the cause of] Allāh after they had been wronged - We will surely settle them in this world in a good place; but the reward of the Hereafter is greater, if only they could know.
நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டு நெருக்கடிக்குள்ளான பிறகு தங்களின் வீடுகளையும், செல்வங்களையும், குடும்பத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக நிராகரித்த நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்தவர்களுக்கு இவ்வுலகில் தங்குமிடத்தை வழங்குவோம். அங்கு அவர்கள் கண்ணியமிக்கவர்களாகி விடுவார்கள். மறுமையில் கிடைக்கும் கூலி அனைத்தையும்விட சிறந்ததாகும். எனெனில் அங்குதான் சுவனம் உண்டு. புலம்பெயராமல் பின்தங்கியவர்கள் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையை அறிந்திருந்தால் ஒருபோதும் பின்தங்கியிருக்க மாட்டார்கள்.
16:42Page 271
ٱلَّذِينَ صَبَرُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ٤٢
[They are] those who endured patiently and upon their Lord relied.
அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த இவர்கள்தாம் தங்களின் சமூகத்தார் அளித்த துன்பங்களையும், நாட்டையும், வீட்டையும் பிரிந்ததனால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக்கொண்டார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் தங்கள் இறைவனையே சார்ந்திருக்கிறார்கள். எனவேதான் அல்லாஹ் அவர்களுக்கு மிகப் பெரும் இக்கூலியை வழங்கியுள்ளான்.
16:43Page 272
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ٤٣
And We sent not before you except men to whom We revealed [Our message]. So ask the people of the message [i.e., former scriptures] if you do not know.
தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக்கி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். வானவர்களை நாம் தூதர்களாக அனுப்பவில்லை. இதுதான் நம்முடைய வழமையான வழிமுறை. நீங்கள் இதனை மறுப்பவர்களாக இருந்தால், அவர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அறியாதவர்களாக இருந்தால் முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடம் கேட்டுப் பாருங்கள். தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள், வானவர்களாக இருக்கவில்லை என்பதை அவர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
16:44Page 272
بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِۗ وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلذِّكۡرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيۡهِمۡ وَلَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ ٤٤
[We sent them] with clear proofs and written ordinances. And We revealed to you the message [i.e., the Qur’ān] that you may make clear to the people what was sent down to them and that they might give thought.
மனிதர்களிலுள்ள இந்த தூதர்களை நாம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் இறக்கப்பட்ட வேதங்களைக் கொண்டும் அனுப்பினோம். -தூதரே!- குர்ஆனில் விளக்கம் தேவையானவற்றை நீங்கள் விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தமது சிந்தனையைச் செயற்படுத்தி, அதிலுள்ளவற்றின் மூலம் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காகவும் நாம் உம் மீது அதனை இறக்கியுள்ளோம்.
16:45Page 272
أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخۡسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ٤٥
Then, do those who have planned evil deeds feel secure that Allāh will not cause the earth to swallow them or that the punishment will not come upon them from where they do not perceive?
அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக பல் வேறு சூழ்ச்சிகள் செய்தவர்கள், காரூனைப் பூமியில் புதையச் செய்தததைப் போல அவர்களையும் பூமியில் அல்லாஹ் புதையச் செய்திடுவான் அல்லது அவர்கள் அறியாத புறத்திலிருந்து வேதனை அவர்களை வந்தடையும் என்பதில் அச்சமற்று உள்ளனரா?
16:46Page 272
أَوۡ يَأۡخُذَهُمۡ فِي تَقَلُّبِهِمۡ فَمَا هُم بِمُعۡجِزِينَ ٤٦
Or that He would not seize them during their [usual] activity, and they could not cause failure [i.e., escape from Him]?
அல்லது வாழ்வாதாரம் தேடி அவர்கள் பயணத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களை வேதனை வந்தடையலாம். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தப்பவோ தவிர்ந்து கொள்ளவோ முடியாது.
16:47Page 272
أَوۡ يَأۡخُذَهُمۡ عَلَىٰ تَخَوُّفٖ فَإِنَّ رَبَّكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٌ ٤٧
Or that He would not seize them gradually [in a state of dread]?1 But indeed, your Lord is Kind and Merciful.2
அல்லது அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தடையக் கூடும் என்பதைக் குறித்து அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? எல்லா நிலைகளிலும் அவர்களைத் தண்டிப்பதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். உங்களின் இறைவன் பரிவுமிக்கவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். தனது அடியார்கள் தன்னிடம் தவ்பா செய்யலாம் என்பதனால் அவன் விரைவாக தண்டிப்பதில்லை.
16:48Page 272
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ يَتَفَيَّؤُاْ ظِلَٰلُهُۥ عَنِ ٱلۡيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدٗا لِّلَّهِ وَهُمۡ دَٰخِرُونَ ٤٨
Have they not considered what things Allāh has created? Their shadows incline to the right and to the left, prostrating to Allāh, while they [i.e., those creations] are humble.
இந்த பொய்பிப்பவர்கள் அவனுடைய படைப்புகளை ஆய்வுக்கண் கொண்டு பார்க்கவில்லையா? பகலில் சூரியனின் இயக்கத்திற்கேற்பவும் இரவில் சந்திரனின் இயக்கத்திற்கேற்பவும் அவற்றின் நிழல்கள் வலது புறமும் இடது புறமும் சாய்கின்றன; தம் இறைவனுக்கு அடிபணிந்து உண்மையாக சிரம்பணிகின்றன.
16:49Page 272
وَلِلَّهِۤ يَسۡجُدُۤ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ مِن دَآبَّةٖ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ ٤٩
And to Allāh prostrates whatever is in the heavens and whatever is on the earth of creatures, and the angels [as well], and they are not arrogant.
வானங்களிலும் பூமியிலும் உள்ள உயிரினங்கள் யாவும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிகின்றன. வானவர்கள் அவனுக்கே சிரம்பணிகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை வணங்கி அவனை வழிப்படுவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை.
16:50Page 272
يَخَافُونَ رَبَّهُم مِّن فَوۡقِهِمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ۩ ٥٠
They fear their Lord above them, and they do what they are commanded.
அவர்கள் - அவனை இடைவிடாமல் வணங்கி வழிப்பட்ட போதும் - உள்ளமையால் தமக்கு மேலிருந்து ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் தம் இறைவனை அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவன் அவர்களுக்கு வழிப்படுமாறு இடும் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள்.
16:51Page 272
۞ وَقَالَ ٱللَّهُ لَا تَتَّخِذُوٓاْ إِلَٰهَيۡنِ ٱثۡنَيۡنِۖ إِنَّمَا هُوَ إِلَٰهٞ وَٰحِدٞ فَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ ٥١
And Allāh has said, "Do not take for yourselves two1 deities. He [i.e., Allāh] is but one God, so fear only Me."
அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் கூறுகிறான்: “இரு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே, இருவர் அல்ல. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. எனவே என்னையே அஞ்சுங்கள். என்னைத் தவிர மற்றவர்களை அஞ்சாதீர்கள்.
16:52Page 272
وَلَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَهُ ٱلدِّينُ وَاصِبًاۚ أَفَغَيۡرَ ٱللَّهِ تَتَّقُونَ ٥٢
And to Him belongs whatever is in the heavens and the earth, and to Him is [due] worship constantly. Then is it other than Allāh that you fear?
வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்பு, அதிகாரம், நிர்வாகம் அனைத்தும் அவனுக்கே உரியன. கட்டுப்படுவதும், அடிபணிவதும், உளத்தூய்மையும் அவனுக்கே உரியன. நீங்கள் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கா அஞ்சுகிறீர்கள்? இல்லை, என்றாலும் அவனையே அஞ்சுங்கள்.
16:53Page 272
وَمَا بِكُم مِّن نِّعۡمَةٖ فَمِنَ ٱللَّهِۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيۡهِ تَجۡـَٔرُونَ ٥٣
And whatever you have of favor - it is from Allāh. Then when adversity touches you, to Him you cry for help.
மனிதர்களே!- நீங்கள் அனுபவிக்கும் மார்க்க, உலக, அருட்கொடைகள் யாவும் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். வேறு யாரிடமும் அல்ல. பின்னர் உங்களை வறுமையோ, நோயோ, துன்பமோ தாக்கிவிட்டால் அதனை நீக்குவதற்காக அவனிடமே நீங்கள் பிராா்த்தித்து மன்றாடுகிறீர்கள். உங்களுக்கு அருட்கொடைகள் அளிக்கும், துன்பத்தைப் போக்கும் இறைவன் மாத்திரமே வணங்கப்படுவது கட்டாயமாகும்.
16:54Page 272
ثُمَّ إِذَا كَشَفَ ٱلضُّرَّ عَنكُمۡ إِذَا فَرِيقٞ مِّنكُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ ٥٤
Then when He removes the adversity from you, at once a party of you associates others with their Lord
பின்னர் அவன் உங்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்து உங்களின் துன்பத்தைப் போக்கி விட்டால் உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்துகிறார்கள். அவனுடன் மற்றவர்களையும் வணங்குகிறார்கள். எவ்வளவு மோசமான விஷயம் இது?
16:55Page 273
لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ ٥٥
So they will deny what We have given them. Then enjoy yourselves, for you are going to know.
அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தமை, அவர்களை அவனது அருள்களுக்கு நன்றி மறந்து செயற்பட வைத்து விட்டது. அந்த அருள்களில் ஒன்றே துன்பத்தை அகற்றுவதுமாகும். எனவேதான் அவர்களிடம் கூறப்பட்டது: “விரைவாகவோ, தாமதமாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வரும் வரை உங்களிடம் இருக்கும் அருட்கொடைகளை அனுபவித்துக் கொள்ளுங்கள்.”
16:56Page 273
وَيَجۡعَلُونَ لِمَا لَا يَعۡلَمُونَ نَصِيبٗا مِّمَّا رَزَقۡنَٰهُمۡۗ تَٱللَّهِ لَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَفۡتَرُونَ ٥٦
And they assign to what they do not know1 [i.e., false deities] a portion of that which We have provided them. By Allāh, you will surely be questioned about what you used to invent.
இணைவைப்பாளர்கள் எதுவும் அறியாத, -நிச்சயமாக பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ முடியாத ஜடப்பொருள்களான- தங்களின் சிலைகளுக்கு நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து ஒரு பங்கை ஏற்படுத்தி அதன் மூலம் அவற்றை நெருங்குகிறார்கள். -இணைவைப்பாளர்களே!- இந்த சிலைகளை தெய்வங்கள் என்றும் அவற்றிற்கு உங்களின் செல்வங்களிலிருந்து ஒரு பங்கு உண்டு என நீங்கள் எண்ணியது குறித்து மறுமை நாளில் நிச்சயம் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
16:57Page 273
وَيَجۡعَلُونَ لِلَّهِ ٱلۡبَنَٰتِ سُبۡحَٰنَهُۥ وَلَهُم مَّا يَشۡتَهُونَ ٥٧
And they attribute to Allāh daughters1 - exalted is He - and for them is what they desire [i.e., sons].
இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுக்கு பெண் மக்கள் உண்டு என இணைத்துக் கூறினார்கள். அவர்கள்தாம் வானவர்கள் என்றும் நம்புகிறார்கள். அவர்கள் தமக்கு தாம் விரும்பும் ஆண்மக்களை தெரிவுசெய்துகொண்டு, தாம் விரும்பாததை அல்லாஹ்வுக்கு உண்டு எனக் கூறுகின்றார்கள். இதைவிட பெரும் அநியாயம் என்ன இருக்க முடியும்? அல்லாஹ்வுக்கு அவர்கள் ஏற்படுத்தும் இவ்வுறவை விட்டும் அவன் தூய்மையாகி விட்டான்.
16:58Page 273
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلۡأُنثَىٰ ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٞ ٥٨
And when one of them is informed of [the birth of] a female, his face becomes dark, and he suppresses grief.
இந்த இணைவைப்பாளர்களில் யாருக்கேனும் பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி கூறப்பட்டால் வெறுப்பால் அவனுடைய முகம் கருத்து விடுகிறது. அவனுடைய உள்ளம் கவலையாலும் துக்கத்தாலும் நிரம்பி வழிகிறது. பின்னர் அவன் தனக்கு விரும்பாததை அல்லாஹ்வோடு இணைத்துக் கூறுகிறார்கள்.
16:59Page 273
يَتَوَٰرَىٰ مِنَ ٱلۡقَوۡمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓۚ أَيُمۡسِكُهُۥ عَلَىٰ هُونٍ أَمۡ يَدُسُّهُۥ فِي ٱلتُّرَابِۗ أَلَا سَآءَ مَا يَحۡكُمُونَ ٥٩
He hides himself from the people because of the ill of which he has been informed. Should he keep it in humiliation or bury it in the ground? Unquestionably, evil is what they decide.
பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தனக்குக் கூறப்பட்ட செய்தியால் அவன் மக்களை விட்டும் மறைந்து திரிகிறான். இந்த பெண் குழந்தையை இழிவுடன் வைத்துக் கொள்வதா? அல்லது உயிருடன் மண்ணில் புதைத்து விடுவதா? என்று தனக்குள்எண்ணுகிறான். தமக்குக் குறையாகக் கருதி வெறுப்பதை தங்களின் இறைவனுக்கு கற்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களின் தீர்ப்பு எவ்வளவு மோசமானது!
16:60Page 273
لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ مَثَلُ ٱلسَّوۡءِۖ وَلِلَّهِ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٦٠
For those who do not believe in the Hereafter is the description [i.e., an attribute] of evil;1 and for Allāh is the highest attribute. And He is Exalted in Might, the Wise.
பிள்ளைத் தேவை, அறியாமை, நிராகரிப்பு ஆகிய குறையுள்ள பண்புகள் மறுமையை பொய்பிக்கும் இந்த நிராகரிப்பாளர்களிடமே உள்ளது. கண்ணியம், பரிபூரணம், தேவையற்ற தன்மை, அறிவு போன்ற புகழுக்குரிய பண்புகள் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாரும் மிகைக்க முடியாது. தன் படைப்பில், நிர்வாகத்தில், தான் சட்டமியற்றுவதில் அவன் ஞானம் மிக்கவன்.
16:61Page 273
وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِظُلۡمِهِم مَّا تَرَكَ عَلَيۡهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ٦١
And if Allāh were to impose blame on the people for their wrongdoing, He would not have left upon it [i.e., the earth] any creature, but He defers them for a specified term. And when their term has come, they will not remain behind an hour, nor will they precede [it].
மனிதர்கள் செய்யும் அநியாயத்தினாலும் நிராகரிப்பினாலும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பதாயிருந்தால் பூமியின் மீது நடமாடும் எந்த மனிதனையும் உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும் அல்லாஹ் தான் அறிந்த குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். அல்லாஹ் அறிந்து வைத்திருந்த அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தவணை வந்து விட்டால் அவர்கள் சிறு நேரம் கூட முந்தவோ, பிந்தவோ மாட்டார்கள்.
16:62Page 273
وَيَجۡعَلُونَ لِلَّهِ مَا يَكۡرَهُونَۚ وَتَصِفُ أَلۡسِنَتُهُمُ ٱلۡكَذِبَ أَنَّ لَهُمُ ٱلۡحُسۡنَىٰۚ لَا جَرَمَ أَنَّ لَهُمُ ٱلنَّارَ وَأَنَّهُم مُّفۡرَطُونَ ٦٢
And they attribute to Allāh that which they dislike [i.e., daughters], and their tongues assert the lie that they will have the best [from Him]. Assuredly, they will have the Fire, and they will be [therein] neglected.1
அவர்கள் தம்முடன் இணைக்க வெறுக்கும் பெண் மக்களை அவர்கள் அல்லாஹ்வுக்கு இருப்பதாகக் கூறுகின்றார்கள். அல்லாஹ்விடத்தில் தமக்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யுரைக்கின்றன. அவர்கள் கூறுவது போல் உண்மையாகவே அவர்கள் எழுப்பப்படும் விடயம் உண்மையென்றால் நிச்சயமாக அவர்கள் நரகம்தான் செல்வார்கள். அங்கு அவர்கள் விட்டு விடப்படுவார்கள். அவர்களால் ஒரு போதும் அங்கிருந்து வெளியேற முடியாது.
16:63Page 273
تَٱللَّهِ لَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَهُوَ وَلِيُّهُمُ ٱلۡيَوۡمَ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ٦٣
By Allāh, We did certainly send [messengers] to nations before you, but Satan made their deeds attractive to them. And he is their [i.e., the disbelievers] ally today [as well], and they will have a painful punishment.
தூதரே!- அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் உமக்கு முன்னரும் சமூகங்களின்பால் தூதர்களை அனுப்பினோம். ஷைத்தான் அந்த மக்களின் இணைவைப்பு, நிராகரிப்பு, பாவங்கள் ஆகிய தீய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். மறுமையில் அவர்களது உதவியாளராக அவனையே நினைத்துக் கொண்டுள்ளனர். எனவே அவனிடமே அவர்கள் உதவி தேடட்டும். மேலும் அவர்களுக்கு மறுமையில் வேதனை மிக்க தண்டனை உண்டு.
16:64Page 273
وَمَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِي ٱخۡتَلَفُواْ فِيهِ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٦٤
And We have not revealed to you the Book, [O Muḥammad], except for you to make clear to them that wherein they have differed and as guidance and mercy for a people who believe.
தூதரே!- ஓரிறைக் கொள்கை, மறுமை நாள், மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் ஆகிய மக்கள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களைக் குறித்து நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் உம்மீது குர்ஆனை இறக்கியுள்ளோம். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் அல்குர்ஆன் கொண்டு வந்துள்ளதன் மீதும் நம்பிக்கை கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு அது வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் சத்தியத்தைக் கொண்டு பயனடையக் கூடியவர்களாவர்.
16:65Page 274
وَٱللَّهُ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ ٦٥
And Allāh has sent down rain from the sky and given life thereby to the earth after its lifelessness. Indeed in that is a sign for a people who listen.
அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் காய்ந்த, வறண்ட பூமியில் தாவரங்களை வெளிப்படுத்தி அதனை உயிர்ப்பிக்கிறான் செழிப்பாக்குகிறான். அவன் வானத்திலிருந்து மழையை இறக்குவதிலும் அதன் மூலம் வறண்ட பூமியில் தாவரங்களை முளையச் செய்வதிலும் அல்லாஹ்வின் வசனங்களை செவியேற்று சிந்திக்கக் கூடியவர்களுக்கு அவனுடைய வல்லமையை எடுத்துரைக்கும் தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
16:66Page 274
وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهِۦ مِنۢ بَيۡنِ فَرۡثٖ وَدَمٖ لَّبَنًا خَالِصٗا سَآئِغٗا لِّلشَّٰرِبِينَ ٦٦
And indeed, for you in grazing livestock is a lesson. We give you drink from what is in their bellies - between excretion and blood - pure milk, palatable to drinkers.
மக்களே!- உங்களுக்கு ஆடு, மாடு ஒட்டகம் போன்ற கால்நடைகளில், படிப்பினை பெறுபவர்களுக்கு, படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் உடம்பிலுள்ள இரத்தத்திற்கும் மத்தியிலிருந்து வெளியேறும் பாலை அதன் மடியினூடாக நாம் உங்களுக்குப் புகட்டுகின்றோம். அவ்வாறிருந்தும் அருந்துவோருக்கு நல்ல, சுவையான, தூய்மையான சுத்தமான பாலாக வெளிவருகின்றது.
16:67Page 274
وَمِن ثَمَرَٰتِ ٱلنَّخِيلِ وَٱلۡأَعۡنَٰبِ تَتَّخِذُونَ مِنۡهُ سَكَرٗا وَرِزۡقًا حَسَنًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ٦٧
And from the fruits of the palm trees and grapevines you take intoxicant and good provision.1 Indeed in that is a sign for a people who reason.
நாம் உங்களுக்கு உணவாக வழங்கும் பேரீச்சம் பழம் மற்றும் திராட்சை பழங்களிலும் உங்களுக்குப் படிப்பினை இருக்கின்றது. நீங்கள் அவற்றிலிருந்து அறிவை மழுங்கடிக்கும் போதைப் பொருளையும் பெறுகிறீர்கள். அது நல்லதல்ல. மேலும் அதிலிருந்து பேரீத்தம் பழம், காய்ந்த முந்திரி, வினாக்கிரி, பேரீத்தம்பானி போன்ற உங்களுக்குப் பயனுள்ள நல்ல ஆகாரத்தையும் நீங்கள் பெறுகிறீர்கள். நிச்சயமாக இதில் அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் அடியார்களுக்குப் புரிந்த அருட்கொடைகளையும் அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன. அவர்கள்தாம் படிப்பினை பெறுவார்கள்.
16:68Page 274
وَأَوۡحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحۡلِ أَنِ ٱتَّخِذِي مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعۡرِشُونَ ٦٨
And your Lord inspired to the bee, "Take for yourself among the mountains, houses [i.e., hives], and among the trees and [in] that which they construct.
தூதரே!- உம் இறைவன் தேனீக்களுக்கு உள்ளுதிப்பை ஏற்படுத்தி பின்வருமாறு வழிகாட்டினான்: “நீ மலைகளிலும், மரங்களிலும் மக்கள் கட்டும் கட்டங்களிலும், கூரைகளிலும் உன் கூடுகளை அமைத்துக் கொள்.
16:69Page 274
ثُمَّ كُلِي مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسۡلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلٗاۚ يَخۡرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ فِيهِ شِفَآءٞ لِّلنَّاسِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ٦٩
Then eat from all the fruits1 and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. Indeed in that is a sign for a people who give thought.
பின்னர் நீ விரும்பும் விளைச்சல்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள். உன் இறைவன் உனக்குக் காட்டிய வசப்படுத்தப்பட்ட பாதைகளில் செல். அந்த தேனீக்களின் வயிறுகளிலிருந்து பல்வேறு நிறங்களுடைய தேன் வெளிப்படைகிறது. அதிலே வெள்ளை, மஞ்சள், மற்றும் ஏனைய நிறங்களும் உண்டு. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கின்றது. அதன் மூலம் நோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர். தேனீக்கு அதனை உதிப்பாக்குவதிலும் அதன் வயிற்றிலிருந்து வெளிப்படும் தேனிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையையும் அவனது படைப்பினங்களின் காரியங்களை நிர்வகிப்பதை அறிவிக்கக்கூடிய அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள்தாம் படிப்பினை பெறக்கூடியவர்களாவர்.
16:70Page 274
وَٱللَّهُ خَلَقَكُمۡ ثُمَّ يَتَوَفَّىٰكُمۡۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡ لَا يَعۡلَمَ بَعۡدَ عِلۡمٖ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٞ قَدِيرٞ ٧٠
And Allāh created you; then He will take you in death. And among you is he who is reversed to the most decrepit [old] age so that he will not know, after [having had] knowledge, a thing. Indeed, Allāh is Knowing and Competent.
அல்லாஹ் உங்களை முன்மாதிரியின்றி படைத்தான். பின்னர் உங்களின் தவணைகள் முடிந்து விட்டால் உங்களை மரணிக்கச் செய்கிறான். தாம் அறிந்துகொண்ட எதையும் அறிந்துகொள்ள முடியாதவாறு வாழ்வில் மிக மோசமான பருவமான தள்ளாத வயது வரை தள்ளப்படுபவரும் உங்களில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். அடியார்களின் செயல்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் வல்லமையுடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது.
16:71Page 274
وَٱللَّهُ فَضَّلَ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖ فِي ٱلرِّزۡقِۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُواْ بِرَآدِّي رِزۡقِهِمۡ عَلَىٰ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَهُمۡ فِيهِ سَوَآءٌۚ أَفَبِنِعۡمَةِ ٱللَّهِ يَجۡحَدُونَ ٧١
And Allāh has favored some of you over others in provision. But those who were favored [i.e., given more] would not hand over their provision to those whom their right hands possess [i.e., slaves] so they would be equal to them therein.1 Then is it the favor of Allāh they reject?
அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்தில் சிலரைவிட சிலரை சிறப்பித்துள்ளான். உங்களில் ஏழை, பணக்காரன், தலைவன், தொண்டன் ஆகியவர்களை ஏற்படுத்தியுள்ளான். யாருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தில் சிறப்பை வழங்கியுள்ளானோ அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதை தங்களின் அடிமைகளுக்கு அளித்து அவர்களையும் உரிமையில் சமமானவர்களாக ஆக்குவதில்லை. எனவே தங்களின் அடிமைகள் தங்களுக்கு இணையானவர்களாக இருப்பதை அவர்கள் விரும்பாத போது, எவ்வாறு அல்லாஹ்வின் அடிமைகள் அவனுக்கு இணையாக இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? இது எவ்வளவு பெரும் அநியாயம்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறுப்பதற்கு இதை விட என்ன உள்ளது?!
16:72Page 274
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا وَجَعَلَ لَكُم مِّنۡ أَزۡوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةٗ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَتِ ٱللَّهِ هُمۡ يَكۡفُرُونَ ٧٢
And Allāh has made for you from yourselves mates and has made for you from your mates sons and grandchildren and has provided for you from the good things. Then in falsehood do they believe and in the favor of Allāh they disbelieve?
மக்களே- அல்லாஹ் உங்கள் இனத்திலிருந்தே துணைகளை உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அவர்களைக் கொண்டு நீங்கள் நிம்மதியடைகிறீர்கள். உங்கள் மனைவியரிலிருந்து குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் வழங்கினான். தூய்மையான உணவுப் பொருள்களில் -மாமிசம், தானியங்கள், பழங்கள் போன்ற- நல்லவற்றை உங்களுக்கு வழங்கியுள்ளான். எண்ணிமுடிக்க முடியாத அல்லாஹ்வின் அதிகமான அருட்கொடைகளை நிராகரித்து, அவனை மாத்திரமே நம்பிக்கை கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தாது, தவறான சிலைகளையா, விக்கிரகங்களையுமா அவர்கள் நம்பிக்கைகொள்கின்றனர்?
16:73Page 275
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَهُمۡ رِزۡقٗا مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ شَيۡـٔٗا وَلَا يَسۡتَطِيعُونَ ٧٣
And they worship besides Allāh that which does not possess for them [the power of] provision from the heavens and the earth at all, and [in fact], they are unable.
இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவை வானங்களிலிருந்தோ பூமியிலிருந்தோ அவர்களுக்கு உணவளிக்க சக்திபெற மாட்டாது. அவை உயிரும் அறிவுமற்ற ஜடப்பொருள்களாக இருப்பதால் அவற்றுக்கு அவை சொந்தமும் கிடையாது.
16:74Page 275
فَلَا تَضۡرِبُواْ لِلَّهِ ٱلۡأَمۡثَالَۚ إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ٧٤
So do not assert similarities to Allāh.1 Indeed, Allāh knows and you do not know.
மனிதர்களே!- பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்திபெறாத இந்த சிலைகளை அல்லாஹ்வுக்கு மாதிரிகளாக ஆக்காதீர்கள். வணங்குவதில் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குவதற்கு அவனுக்கு எந்த மாதிரியும் இல்லை. தன்னுடைய பரிபூரணமான, கண்ணியமான பண்புகளை அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அவற்றை அறிய மாட்டீர்கள். எனவேதான் அவனுக்கு இணைவைப்பதிலும் உங்கள் சிலைகளுக்கு அவன் ஒப்பானவன் எனச் சித்தரிப்பதிலும் ஈடுபடுகிறீர்கள்.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences