Al-Mukhtasar · Tafsir · in Tamil
Al-Isra 17:74–111
17:74Page 289
وَلَوۡلَآ أَن ثَبَّتۡنَٰكَ لَقَدۡ كِدتَّ تَرۡكَنُ إِلَيۡهِمۡ شَيۡـٔٗا قَلِيلًا ٧٤
And if We had not strengthened you, you would have almost inclined to them a little.
நாம் உம்மை சத்தியத்தில் உறுதிப்படுத்தி உம்மீது அருள் செய்திருக்காவிட்டால், அவர்களின் பலமான தந்திரத்தினாலும் அவர்கள் நம்பிக்கை கொள்வதில் உமக்கிருந்த அதீத ஆர்வத்தினாலும் அவர்கள் உமக்குக் கூறிய ஆலோசனைகளில் நீர் அவர்களை சரிகண்டு அவர்களின்பால் சிறிதளவேனும் சாய்ந்திருப்பீர். ஆயினும் நாம் உம்மை அவர்களின் பக்கம் ஈர்க்கப்படுவதிலிருந்து காப்பாற்றினோம்.
17:75Page 289
إِذٗا لَّأَذَقۡنَٰكَ ضِعۡفَ ٱلۡحَيَوٰةِ وَضِعۡفَ ٱلۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيۡنَا نَصِيرٗا ٧٥
Then [if you had], We would have made you taste double [punishment in] life and double [after] death. Then you would not find for yourself against Us a helper.
அவர்கள் உமக்குக் கூறிய ஆலோசனையின்படி நீர் அவர்களின்பால் சாய்ந்திருந்தால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இருமடங்கு வேதனையால் நாம் உம்மைத் தண்டித்திருப்போம். பின்னர் எங்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்யக்கூடிய உதவியாளரையோ வேதனையிலிருந்து உம்மைக் காப்பாற்றக்கூடியவரையோ நீர் பெற்றுக்கொள்ள மாட்டீர்.
17:76Page 290
وَإِن كَادُواْ لَيَسۡتَفِزُّونَكَ مِنَ ٱلۡأَرۡضِ لِيُخۡرِجُوكَ مِنۡهَاۖ وَإِذٗا لَّا يَلۡبَثُونَ خِلَٰفَكَ إِلَّا قَلِيلٗا ٧٦
And indeed, they were about to provoke [i.e., drive] you from the land [i.e., Makkah] to evict you therefrom. And then [when they do], they will not remain [there] after you, except for a little.1
நிராகரிப்பாளர்கள் உம்மை மக்காவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக தங்களின் பகைமையால் உம்மைத் துன்புறுத்த முயன்றார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் நீர் புலம்பெயரும் வரை உம்மை அவர்கள் வெளியேற்றாமல் அவர்களை அவன் தடுத்தான். அவர்கள் உம்மை வெளியேற்றியிருந்தால் உமக்குப் பின்னர் சிறிது காலமே அன்றி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.
17:77Page 290
سُنَّةَ مَن قَدۡ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِن رُّسُلِنَاۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِيلًا ٧٧
[That is Our] established way for those We had sent before you of Our messengers; and you will not find in Our way any alteration.
உமக்குப் பின்னர் அவர்கள் சிறிது காலமே தங்கியிருப்பார்கள் என்ற தீர்ப்பு உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள் விஷயத்திலும் நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் வழிமுறையாகும். அது, ஒரு சமூகம் தம் தூதரை வெளியேற்றினால் அவர்களிடையே அல்லாஹ் வேதனையை இறக்குவான் என்பதாகும். -தூதரே!- நம்முடைய வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். மாறாக அதனை நிலையானதாகக் காண்பீர்.
17:78Page 290
أَقِمِ ٱلصَّلَوٰةَ لِدُلُوكِ ٱلشَّمۡسِ إِلَىٰ غَسَقِ ٱلَّيۡلِ وَقُرۡءَانَ ٱلۡفَجۡرِۖ إِنَّ قُرۡءَانَ ٱلۡفَجۡرِ كَانَ مَشۡهُودٗا ٧٨
Establish prayer at the decline of the sun [from its meridian] until the darkness of the night1 and [also] the Qur’ān [i.e., recitation] of dawn.2 Indeed, the recitation of dawn is ever witnessed.
சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்ததிலிருந்து ளுஹ்ர், அஸ்ர் இரவின் இருள் வரை இதில் மஃரிப், இஷா தொழுகையை பரிபூரணமான முறையில் அதற்குரிய நேரங்களில் நிலைநாட்டுவீராக. ஃபஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகையையும் நிறைவேற்றுவீராக. அதில் (குர்ஆன்) ஓதுவதை அதிகப்படுத்துவீராக. ஃபஜ்ர் தொழுகையில் இரவின் வானவர்களும் பகலின் வானவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
17:79Page 290
وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا ٧٩
And from [part of] the night, pray1 with it [i.e., recitation of the Qur’ān] as additional [worship] for you; it is expected that2 your Lord will resurrect you to a praised station.3
தூதரே!- மறுமை நாளின் மக்களுக்கு ஏற்படும் அமளிதுமளிகளிலிருந்து விடுதலைக்காக அவர்களுக்கு பரிந்துரை செய்பவராக உம்மை உமது இறைவன் எழுப்புவதை எதிர்ப்பார்த்தவராக இரவின் ஒரு பகுதியில் எழுந்து தொழுவீராக. அதனால் உமது அந்தஸ்துகள் அதிகம் உயரும். முன்னோர்களும் பின்னோர்களும் புகழக்கூடிய மகத்தான பரிந்துரை செய்யும் பெரும் பாக்கியம் உமக்குக் கிடைக்கும்.
17:80Page 290
وَقُل رَّبِّ أَدۡخِلۡنِي مُدۡخَلَ صِدۡقٖ وَأَخۡرِجۡنِي مُخۡرَجَ صِدۡقٖ وَٱجۡعَل لِّي مِن لَّدُنكَ سُلۡطَٰنٗا نَّصِيرٗا ٨٠
And say, "My Lord, cause me to enter a sound entrance1 and to exit a sound exit2 and grant me from Yourself a supporting authority."
தூதரே!- நீர் கூறுவீராக: இறைவா “நான் நுழையுமிடம், வெளியேறுமிடம் அனைத்தையும் உனக்கு வழிபடுவதிலும், உன் திருப்பொருத்தத்திலும் ஆக்கிவிடுவாயாக. என் எதிரிக்கு எதிராக எனக்கு உதவி செய்யும் தெளிவான ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு வழங்குவாயாக.
17:81Page 290
وَقُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَزَهَقَ ٱلۡبَٰطِلُۚ إِنَّ ٱلۡبَٰطِلَ كَانَ زَهُوقٗا ٨١
And say, "Truth has come, and falsehood has departed. Indeed is falsehood, [by nature], ever bound to depart."
தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இஸ்லாம் வந்துவிட்டது. தான் உதவுவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறி விட்டது. நிராகரிப்பும் இணைவைப்பும் அழிந்து விட்டன. நிச்சயம் அசத்தியம் சத்தியத்திற்கு முன்னால் நிற்க முடியாமல் அழிந்துவிடக் கூடியதே.”
17:82Page 290
وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَآءٞ وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ وَلَا يَزِيدُ ٱلظَّٰلِمِينَ إِلَّا خَسَارٗا ٨٢
And We send down of the Qur’ān that which is healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss.
அறியாமை, நிராகரிப்பு, சந்தேகம் ஆகியவற்றிலிருந்து உள்ளங்களுக்கு நிவாரணியை நாம் குர்ஆனில் இறக்குகின்றோம். அதனைக் கொண்டு ஒதிப்பார்த்தால் உடல் ரீதியான நோய்களுக்கும் அதில் நிவாரணி உண்டு. அது நம்பிக்கைகொண்டு, அதன்படி செயல்படும் நம்பிக்கையாளர்களுக்கு அதில் அருளும் உண்டு. இந்தக் குர்ஆன் நிராகரிப்பாளர்களுக்கு அழிவைத்தான் அதிகப்படுத்தும். ஏனெனில் நிச்சயமாக அதனைச் செவியுறுவதே அவர்களுக்குக் கோபமூட்டுகிறது. அது அவர்கள் பொய்பிப்பதையும் புறக்கணிப்பதையும் அதிகப்படுத்துகிறது.
17:83Page 290
وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ كَانَ يَـُٔوسٗا ٨٣
And when We bestow favor upon man [i.e., the disbeliever], he turns away and distances himself; and when evil touches him, he is ever despairing.
நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் அருட்கொடை வழங்கினால் அவன் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தாமல், அவனுக்குக் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறான். கர்வத்தினால் தூரவிலகிச் செல்கிறான். அவனுக்கு நோயோ, வறுமையோ அல்லது வேறு ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரேயடியாக நம்பிக்கையிழந்து விடுகிறான்.
17:84Page 290
قُلۡ كُلّٞ يَعۡمَلُ عَلَىٰ شَاكِلَتِهِۦ فَرَبُّكُمۡ أَعۡلَمُ بِمَنۡ هُوَ أَهۡدَىٰ سَبِيلٗا ٨٤
Say, "Each works according to his manner, but your Lord is most knowing of who is best guided in way."
தூதரே!- நீர் கூறுவீராக: “ஒவ்வொருவரும் நேர்வழி மற்றும் வழிகேட்டில் தம் நிலையை ஒத்த வழிமுறைப்படியே செயல்படுகிறார்கள். சத்தியத்தின்பால் நேரான வழியை அடைந்தவர்கள் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கறிவான்.
17:85Page 290
وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلرُّوحِۖ قُلِ ٱلرُّوحُ مِنۡ أَمۡرِ رَبِّي وَمَآ أُوتِيتُم مِّنَ ٱلۡعِلۡمِ إِلَّا قَلِيلٗا ٨٥
And they ask you, [O Muḥammad], about the soul. Say, "The soul is of the affair [i.e., concern] of my Lord. And you [i.e., mankind] have not been given of knowledge except a little."
தூதரே!- வேதக்காரர்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் ஆன்மாவின் உண்மை நிலையைக்குறித்து உம்மிடம் வினவுகிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “ஆன்மாவின் உண்மை நிலை குறித்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அல்லாஹ்வின் அறிவுடன் ஒப்பிடுகையில் உங்களுக்கும் படைப்புகள் அனைத்திற்கும் சிறிதளவேதான் அறிவு வழங்கப்பட்டுள்ளது.
17:86Page 290
وَلَئِن شِئۡنَا لَنَذۡهَبَنَّ بِٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِۦ عَلَيۡنَا وَكِيلًا ٨٦
And if We willed, We could surely do away with that which We revealed to you. Then you would not find for yourself concerning it an advocate against Us.
தூதரே!- நாம் உமக்கு இறக்கிய வஹியை உள்ளங்களிலிருந்தும் ஏடுகளிலிருந்தும் அழித்து நாம் நீக்க விரும்பினால் அதனை நீக்கிவிடுவோம். பின்னர் உமக்கு உதவிசெய்யக்கூடிய, அதனைத் திரும்பப் பெற்றுத் தரும் யாரையும் நீர் பெற்றுக்கொள்ளமாட்டீர்.
17:87Page 291
إِلَّا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّ فَضۡلَهُۥ كَانَ عَلَيۡكَ كَبِيرٗا ٨٧
Except [We have left it with you] as a mercy from your Lord. Indeed, His favor upon you has ever been great.
ஆயினும் உம் இறைவனின் அருளால் நாம் அதனை நீக்கவில்லை. நாம் அதனைப் பாதுகாப்பாக விட்டுவிட்டோம். நிச்சயமாக உம் இறைவன் உம்மை இறுதித் தூதராக ஆக்கி, உம்மீது குர்ஆனை இறக்கி பேரருள் புரிந்துள்ளான்.
17:88Page 291
قُل لَّئِنِ ٱجۡتَمَعَتِ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَىٰٓ أَن يَأۡتُواْ بِمِثۡلِ هَٰذَا ٱلۡقُرۡءَانِ لَا يَأۡتُونَ بِمِثۡلِهِۦ وَلَوۡ كَانَ بَعۡضُهُمۡ لِبَعۡضٖ ظَهِيرٗا ٨٨
Say, "If mankind and the jinn gathered in order to produce the like of this Qur’ān, they could not produce the like of it, even if they were to each other assistants."
தூதரே!- நீர் கூறுவீராக: “உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனைப் போன்று அதன் இலக்கிய நயத்தில், அழகிய அமைப்பில், தரத்தில் ஒன்றைக் கொண்டுவருவதற்கு மனிதர்கள், ஜின்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்தாலும் அவர்களால் ஒருபோதும் கொண்டுவர முடியாது.
17:89Page 291
وَلَقَدۡ صَرَّفۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا ٨٩
And We have certainly diversified for the people in this Qur’ān from every [kind of] example, but most of the people refused except disbelief.
அவர்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக ஏவல்களையும், விலக்கல்களையும், சம்பவங்களையும், படிப்பினைக்குரிய அறிவுரைகளையும் விதம்விதமாக நாம் மக்களுக்கு இந்த குர்ஆனில் தெளிவுபடுத்தி விட்டோம். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் இந்தக் குர்ஆனை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள்.
17:90Page 291
وَقَالُواْ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ تَفۡجُرَ لَنَا مِنَ ٱلۡأَرۡضِ يَنۢبُوعًا ٩٠
And they say, "We will not believe you until you break open for us from the ground a spring
இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காக மக்காவின் பூமியிலிருந்து வற்றாத ஓடும் நீருற்றை வெளிப்படுத்தும்வரை நாங்கள் உம்மை நம்ப மாட்டோம்.
17:91Page 291
أَوۡ تَكُونَ لَكَ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَعِنَبٖ فَتُفَجِّرَ ٱلۡأَنۡهَٰرَ خِلَٰلَهَا تَفۡجِيرًا ٩١
Or [until] you have a garden of palm trees and grapes and make rivers gush forth within them in force [and abundance]
அல்லது பேரீத்தம்பழம், திராட்சை தோட்டம் உமக்கு இருக்க வேண்டும். அவற்றில் ஆறுகள் நன்றாக ஓட வேண்டும்.
17:92Page 291
أَوۡ تُسۡقِطَ ٱلسَّمَآءَ كَمَا زَعَمۡتَ عَلَيۡنَا كِسَفًا أَوۡ تَأۡتِيَ بِٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ قَبِيلًا ٩٢
Or you make the heaven fall upon us in fragments as you have claimed or you bring Allāh and the angels before [us]
அல்லது நீர் கூறுவதுபோல- வானத்தை வேதனையின் ஒரு பகுதியாக எங்கள்மீது விழச் செய்ய வேண்டும். அல்லது நீர் கூறுவது உண்மையே என உமக்காக சாட்சி கூற அல்லாஹ்வையும் வானவர்களையும் எங்கள் கண்முன்னால் கொண்டுவர வேண்டும்.
17:93Page 291
أَوۡ يَكُونَ لَكَ بَيۡتٞ مِّن زُخۡرُفٍ أَوۡ تَرۡقَىٰ فِي ٱلسَّمَآءِ وَلَن نُّؤۡمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيۡنَا كِتَٰبٗا نَّقۡرَؤُهُۥۗ قُلۡ سُبۡحَانَ رَبِّي هَلۡ كُنتُ إِلَّا بَشَرٗا رَّسُولٗا ٩٣
Or you have a house of ornament [i.e., gold] or you ascend into the sky. And [even then], we will not believe in your ascension until you bring down to us a book we may read." Say, "Exalted is my Lord! Was I ever but a human messenger?"
அல்லது உமக்கு தங்கத்தால் அல்லது அது போன்ற வேறொன்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது நீர் வானத்தில் ஏற வேண்டும். நீர் வானத்தில் ஏறினால் மட்டும் போதாது. அங்கு சென்று அல்லாஹ்விடமிருந்து ஒரு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அதில் நீர் அவனுடைய தூதர் என்று எழுதப்பட்டிருப்பதை நாங்கள் படிக்க வேண்டும். அதுவரை நிச்சயமாக உம்மை ஒருபோதும் தூதர் என நம்ப மாட்டோம். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் பரிசுத்தமானவன். மற்ற தூதர்களைப்போல நானும் ஒரு மனித தூதரே. எதையும் கொண்டுவர நான் சக்திபெற மாட்டேன். பிறகு எப்படி நீங்கள் கூறியதையெல்லாம் என்னால் கொண்டுவர முடியும்?
17:94Page 291
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَبَعَثَ ٱللَّهُ بَشَرٗا رَّسُولٗا ٩٤
And what prevented the people from believing when guidance came to them except that they said, "Has Allāh sent a human messenger?"
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு தூதர் கொண்டுவந்ததன்படி செயல்படுவதைவிட்டும் நிராகரிப்பாளர்களைத் தடுப்பது தூதர் மனித இனத்திலிருந்து வந்துள்ளார் என்பதே. “அல்லாஹ் ஒரு மனிதரையா எங்களுக்குத் தூதராக அனுப்பினான்?” என்று அவர்கள் மறுத்தவாறு கூறினார்கள்.
17:95Page 291
قُل لَّوۡ كَانَ فِي ٱلۡأَرۡضِ مَلَٰٓئِكَةٞ يَمۡشُونَ مُطۡمَئِنِّينَ لَنَزَّلۡنَا عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ مَلَكٗا رَّسُولٗا ٩٥
Say, "If there were upon the earth angels walking securely,1 We would have sent down to them from the heaven an angel [as a] messenger."
தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்புக் கூறுவீராக: “பூமியில் வானவர்கள் வாழ்ந்து உங்களைப்போன்று நிம்மதியாக அதில் நடந்து செல்பவர்களாக இருந்தால் நாம் அவர்களின்பால் வானவர்களைத் தூதர்களாக அனுப்பியிருப்போம். நிச்சயமாக அப்போதுதான் அவரால் தன் தூதை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நாம் அவர்களின்பால் மனித இனத்தைச் சார்ந்த ஒருவரை தூதராக அனுப்புவது அறிவுபூர்வமானதல்ல. அதுபோன்றுதான் உங்களின் நிலைமையும்.
17:96Page 291
قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا ٩٦
Say, "Sufficient is Allāh as Witness between me and you. Indeed He is ever, concerning His servants, Aware and Seeing."
தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கும் உங்களுக்கு எத்திவைக்குமாறு கூறப்பட்ட தூதை நான் எடுத்துரைத்துவிட்டேன் என்பற்கு, எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் நிலைகளை சூழ்ந்தவனாக இருக்கின்றான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் உள்ளங்களில் மறைத்துவைத்திருக்கும் அனைத்தையும் அவன் பார்க்கக்கூடியவன்.
17:97Page 292
وَمَن يَهۡدِ ٱللَّهُ فَهُوَ ٱلۡمُهۡتَدِۖ وَمَن يُضۡلِلۡ فَلَن تَجِدَ لَهُمۡ أَوۡلِيَآءَ مِن دُونِهِۦۖ وَنَحۡشُرُهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَلَىٰ وُجُوهِهِمۡ عُمۡيٗا وَبُكۡمٗا وَصُمّٗاۖ مَّأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ كُلَّمَا خَبَتۡ زِدۡنَٰهُمۡ سَعِيرٗا ٩٧
And whoever Allāh guides - he is the [rightly] guided; and whoever He sends astray1 - you will never find for them protectors besides Him, and We will gather them on the Day of Resurrection [fallen] on their faces - blind, dumb and deaf. Their refuge is Hell; every time it subsides, We increase [for] them blazing fire.
யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவர். -தூதரே!- யாரை அல்லாஹ் கைவிட்டு, வழிகெடுத்துவிடுவானோ அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டும், அவர்களை விட்டும் தீங்கினை அகற்றும், அவர்களுக்கு நன்மையளிக்கும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். நாம் மறுமை நாளில் அவர்களை ஒன்றுதிரட்டுவோம். அவர்கள் முகங்குப்புற இழுத்து வரப்படுவார்கள். அவர்களால் பார்க்கவோ பேசவோ கேட்கவோ முடியாது. அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதன் நெருப்பு தணியும் போதெல்லாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்வோம்.
17:98Page 292
ذَٰلِكَ جَزَآؤُهُم بِأَنَّهُمۡ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا وَقَالُوٓاْ أَءِذَا كُنَّا عِظَٰمٗا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ خَلۡقٗا جَدِيدًا ٩٨
That is their recompense because they disbelieved in Our verses and said, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected [in] a new creation?"
அவர்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, நம்முடைய தூதர் மீது இறக்கப்பட்ட வசனங்களை நிராகரித்ததனாலும் “நாம் இறந்து எலும்புகளாக, மண்ணோடு மண்ணாக துண்டு துண்டாக மக்கிப் போய்விட்டாலும் மீண்டும் புதிய படைப்பாக உயிர்கொடுத்து எழுப்பப்டுவோமோ?” என்று கூறியதனாலும் நாம் அவர்களுக்கு வழங்கும் தண்டனையாகும்.
17:99Page 292
۞ أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۡ وَجَعَلَ لَهُمۡ أَجَلٗا لَّا رَيۡبَ فِيهِ فَأَبَى ٱلظَّٰلِمُونَ إِلَّا كُفُورٗا ٩٩
Do they not see that Allāh, who created the heavens and earth, is [the one] Able to create the likes of them? And He has appointed for them a term, about which there is no doubt. But the wrongdoers refuse except disbelief.
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்கள், பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் இவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அறியவில்லையா? மிகப் பெரும் படைப்புகளைப் படைக்க சக்திபெற்றவன் அவற்றைவிட சிறிய படைப்புகளைப் படைப்பதற்கு சக்தியுள்ளவனே. அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு குறிப்பிட்ட தவணையை ஏற்படுத்தியுள்ளான். அந்த தவணை வந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்துவிடும். அவன் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஒரு தவணையை ஏற்படுத்தியுள்ளான். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. மீண்டும் எழுப்பப்படுவதற்குரிய தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இணைவைப்பாளர்கள் மறுக்கிறார்கள்.
17:100Page 292
قُل لَّوۡ أَنتُمۡ تَمۡلِكُونَ خَزَآئِنَ رَحۡمَةِ رَبِّيٓ إِذٗا لَّأَمۡسَكۡتُمۡ خَشۡيَةَ ٱلۡإِنفَاقِۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ قَتُورٗا ١٠٠
Say [to them], "If you possessed the depositories of the mercy of my Lord, then you would withhold out of fear of spending." And ever has man been stingy.
தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நீங்கள் என்றும் முடிவடையாத என் இறைவனின் அருட்களஞ்சியங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தால் அது காலியாகிவிடும் என்ற பயத்தால் நீங்கள் ஏழைகளாகிவிடக் கூடாது என்பதற்காக அதிலிருந்து செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வீர்கள். நிச்சயமாக மனிதன் கஞ்சத்தனம் செய்பவனாகவே இருக்கின்றான். நம்பிக்கையாளனைத் தவிர. ஏனெனில் அவன் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து செலவு செய்கின்றான்.
17:101Page 292
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ تِسۡعَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ فَسۡـَٔلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِذۡ جَآءَهُمۡ فَقَالَ لَهُۥ فِرۡعَوۡنُ إِنِّي لَأَظُنُّكَ يَٰمُوسَىٰ مَسۡحُورٗا ١٠١
And We had certainly given Moses nine evident signs, so ask the Children of Israel [about] when he came to them and Pharaoh said to him, "Indeed I think, O Moses, that you are affected by magic."
நாம் மூஸாவுக்கு அவருக்காக சாட்சி கூறக்கூடிய ஒன்பது தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவை: கைத்தடி, கை, பஞ்சம், விளைச்சல்களில் குறைபாடு, வெள்ளம், வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் (என்பவையாகும்). -தூதரே!- யூதர்களிடம், அவர்களின் முன்னோர்களிடம் மூஸா கொண்டுவந்த அச்சான்றுகளைக் குறித்து கேட்பீராக. ஃபிர்அவ்ன் அவரிடம் கூறினான்: “-மூசாவே!- நீர் அபூர்வமான விஷயங்களைக் கொண்டு வருவதனால் நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று எண்ணுகிறேன்.”
17:102Page 292
قَالَ لَقَدۡ عَلِمۡتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ بَصَآئِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَٰفِرۡعَوۡنُ مَثۡبُورٗا ١٠٢
[Moses] said, "You have already known that none has sent down these [signs] except the Lord of the heavens and the earth as evidence, and indeed I think,1 O Pharaoh, that you are destroyed."
மூஸா அவனிடம் பதிலளித்தவராக கூறினார்: “-ஃபிர்அவ்னே!- இந்த சான்றுகளை எல்லாம் வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே தன் வல்லமையையும் தன் தூதரின் நம்பகத்தன்மையையும் அறிவிப்பதற்காக இறக்கியுள்ளான் என்பதை நீ உறுதியாக அறிவாய். ஆயினும் நீ மறுக்கிறாய். -ஃபிர்அவ்னே!- நிச்சயமாக நீ அழியக்கூடியவன் என்பதை நிச்சயமாக நான் அறிவேன்.
17:103Page 292
فَأَرَادَ أَن يَسۡتَفِزَّهُم مِّنَ ٱلۡأَرۡضِ فَأَغۡرَقۡنَٰهُ وَمَن مَّعَهُۥ جَمِيعٗا ١٠٣
So he intended to drive them from the land, but We drowned him and those with him all together.
ஃபிர்அவ்ன் மூஸாவையும் அவருடைய சமூகத்தினரையும் எகிப்தைவிட்டு வெளியேற்றி தண்டிக்க நாடினான். நாம் அவனையும் அவனுடனிருந்த அவனது படையினர் அனைவரையும் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.
17:104Page 292
وَقُلۡنَا مِنۢ بَعۡدِهِۦ لِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱسۡكُنُواْ ٱلۡأَرۡضَ فَإِذَا جَآءَ وَعۡدُ ٱلۡأٓخِرَةِ جِئۡنَا بِكُمۡ لَفِيفٗا ١٠٤
And We said after him [i.e., Pharaoh] to the Children of Israel, "Dwell in the land, and when there comes the promise [i.e., appointment] of the Hereafter, We will bring you forth in [one] gathering."
ஃபிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் நாம் அழித்த பிறகு இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம்: “ஷாம் தேசத்தில் குடியிருங்கள். மறுமை நாள் வந்துவிட்டால் உங்கள் அனைவரையும் விசாரணைக்காக நாம் மஹ்ஷர் பெருவெளியில் கொண்டுவருவோம்.
17:105Page 293
وَبِٱلۡحَقِّ أَنزَلۡنَٰهُ وَبِٱلۡحَقِّ نَزَلَۗ وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا ١٠٥
And with the truth We have sent it [i.e., the Qur’ān] down, and with the truth it has descended. And We have not sent you, [O Muḥammad], except as a bringer of good tidings and a warner.
சத்தியத்தைக்கொண்டே நாம் இந்தக் குர்ஆனை முஹம்மதின் மீது இறக்கியுள்ளோம். அது எவ்வித திரிபு, மாற்றமுமின்றி சத்தியத்தைக்கொண்டே இறங்கியது. -தூதரே!- நாம் உம்மை இறையச்சமுடையோருக்கு சுவனத்தைக்கொண்டு நற்செய்தி கூறக்கூடியவராகவும் நிராகரிப்பாளர்களையும் பாவிகளையும் நரகத்தை விட்டும் எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.
17:106Page 293
وَقُرۡءَانٗا فَرَقۡنَٰهُ لِتَقۡرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكۡثٖ وَنَزَّلۡنَٰهُ تَنزِيلٗا ١٠٦
And [it is] a Qur’ān which We have separated [by intervals] that you might recite it to the people over a prolonged period. And We have sent it down progressively.
நீர் மக்களுக்கு குர்ஆனை சிறிது சிறிதாக ஓதி எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக நாம் அதனை பகுதி பகுதியாக இறக்கி தெளிவாக்கியுள்ளோம். ஏனெனில் அதுதான் புரிந்துகொள்வதற்கு ஏற்றது. நாம் அதனை சந்தர்ப்பங்கள், சூழ்நிலைக்கேற்ப பகுதிபகுதியாக இறக்கியுள்ளோம்.
17:107Page 293
قُلۡ ءَامِنُواْ بِهِۦٓ أَوۡ لَا تُؤۡمِنُوٓاْۚ إِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهِۦٓ إِذَا يُتۡلَىٰ عَلَيۡهِمۡ يَخِرُّونَۤ لِلۡأَذۡقَانِۤ سُجَّدٗاۤ ١٠٧
Say, "Believe in it or do not believe." Indeed, those who were given knowledge before it1 - when it is recited to them, they fall upon their faces in prostration,
தூதரே!- நீர் கூறுவீராக: “நீங்கள் அவனை நம்பிக்கைகொள்ளுங்கள். உங்களின் நம்பிக்கையினால் அவனுக்கு எதுவும் அதிகமாகிவிடப்போவதில்லை. அல்லது நம்பிக்கைகொள்ளாமல் இருங்கள். உங்கள் நிராகரிப்பினால் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. முந்தைய இறைவேதங்களைப் படித்தவர்களும் வஹியையும் தூதுத்துவத்தையும் அறிந்தவர்களும் அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் நன்றிசெலுத்தும் விதமாக அல்லாஹ்வுக்கு சிரம்பணிகிறார்கள்.
17:108Page 293
وَيَقُولُونَ سُبۡحَٰنَ رَبِّنَآ إِن كَانَ وَعۡدُ رَبِّنَا لَمَفۡعُولٗا ١٠٨
And they say, "Exalted is our Lord! Indeed, the promise of our Lord has been fulfilled."
தங்களின் சிரம்பணிதலில், “எங்கள் இறைவன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதைவிட்டும் தூய்மையானவன். முஹம்மதை தூதராக அனுப்புவேன் என்று அவன் வாக்களித்தது நிறைவேறி விட்டது. நிச்சயமாக எங்கள் இறைவனின் இந்த வாக்குறுதியும் ஏனைய வாக்குறுதிகளும் சந்தேகமின்றி நிறைவேறியே தீரும்” என்று கூறுகிறார்கள்.
17:109Page 293
وَيَخِرُّونَ لِلۡأَذۡقَانِ يَبۡكُونَ وَيَزِيدُهُمۡ خُشُوعٗا۩ ١٠٩
And they fall upon their faces weeping, and it [i.e., the Qur’ān] increases them in humble submission.
அவர்கள் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதவாறு முகங்குப்புற அவனுக்கு சிரம்பணிகிறார்கள். குர்ஆனை அவர்கள் செவியேற்பதால், அதிலுள்ளவற்றை அவர்கள் சிந்திப்பதால் அல்லாஹ்வின் மீதுள்ள அவர்களின் அச்சமும், பணிவும் அதிகரிக்கின்றன.
17:110Page 293
قُلِ ٱدۡعُواْ ٱللَّهَ أَوِ ٱدۡعُواْ ٱلرَّحۡمَٰنَۖ أَيّٗا مَّا تَدۡعُواْ فَلَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ وَلَا تَجۡهَرۡ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتۡ بِهَا وَٱبۡتَغِ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلٗا ١١٠
Say, "Call upon Allāh or call upon the Most Merciful [ar-Raḥmān]. Whichever [name] you call - to Him belong the best names." And do not recite [too] loudly in your prayer or [too] quietly but seek between that an [intermediate] way.
தூதரே!- “அல்லாஹ்வே, ரஹ்மானே” என்று நீர் பிரார்த்தனை செய்வதை எதிர்ப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ், ரஹ்மான் இரண்டும் அவனுடைய பெயர்கள்தாம். அவையிரண்டில் எதைக்கொண்டும் அல்லது அவனுடைய மற்ற பெயர்களைக் கொண்டும் அவனை அழையுங்கள். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. இந்த இரண்டும் அவனுடைய பெயர்களில் உள்ளவைதாம். நீங்கள் அவற்றைக் கொண்டோ மற்ற அவனுடைய அழகிய பெயர்களைக்கொண்டோ அவனை அழையுங்கள். நீர் இணைவைப்பாளர்கள் கேட்குமளவுக்கு தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர். நம்பிக்கையாளர்கள் செவியுறாதவாறு மெதுவாகவும் ஓதாதீர். இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான ஒரு வழியைக் கடைப்பிடிப்பீராக.
17:111Page 293
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي لَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَلَمۡ يَكُن لَّهُۥ وَلِيّٞ مِّنَ ٱلذُّلِّۖ وَكَبِّرۡهُ تَكۡبِيرَۢا ١١١
And say, "Praise to Allāh, who has not taken a son and has had no partner in [His] dominion and has no [need of a] protector out of weakness; and glorify Him with [great] glorification."
தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். புகழின் அனைத்து வகைகளுக்கும் அவன் தகுதியானவன். அவன் மகனையோ, இணையையோ விட்டும் தூய்மையானவன். அவனது ஆட்சியதிகாரத்தில் அவனுக்கு எந்த இணையும் இல்லை. அவனுக்கு இழிவு ஏற்படாது. யாருடைய உதவியும் அவனுக்குத் தேவைப்படாது. அவனை அதிகமாக மகத்துவப்படுத்துங்கள். அவனுக்கு மகனையோ ஆட்சியில் பங்காளியையோ உதவியாளனையோ ஏற்படுத்தி விடாதீர்கள்.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences