Al-Mukhtasar · Tafsir · in Tamil
Al-Baqarah 2:158–186
2:158Page 24
۞ إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ١٥٨
Indeed, aṣ-Ṣafā and al-Marwah are among the symbols1 of Allāh. So whoever makes ḥajj [pilgrimage] to the House or performs ʿumrah - there is no blame upon him for walking between them.2 And whoever volunteers good - then indeed, Allāh is Appreciative3 and Knowing.
கஅபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஸஃபா,மர்வா என்ற இரு மலைகளும் மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். யார் ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடுகிறாரோ அவர் அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதில் (சயீ செய்தல்) எந்தக் குற்றமும் இல்லை. இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் மக்கள் அவ்விரண்டிற்குமிடையே "சயீ" செய்துவந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றபிறகு அவ்வாறு செய்வதில் முஸ்லிம்களில் சிலருக்கு ஏற்பட்ட தயக்கத்தை அகற்றுவதற்காகவே அது தவறில்லை, அவையிரண்டும் ஹஜ்ஜின் வணக்கங்களில் உள்ளவைதான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். எவர் அல்லாஹ் கடமையாக்காத உபரியான வணக்கங்களில் அவனுக்காக ஈடுபடுவாரோ அவரிடமிருந்து அவற்றை அவன் ஏற்றுக்கொள்வான், அவருக்குத் தகுந்த வெகுமதியும் அளித்திடுவான். நற்செயல் புரிபவர்களையும், கூலி பெறுவதற்கு தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.
2:159Page 24
إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلۡنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلۡهُدَىٰ مِنۢ بَعۡدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِي ٱلۡكِتَٰبِ أُوْلَٰٓئِكَ يَلۡعَنُهُمُ ٱللَّهُ وَيَلۡعَنُهُمُ ٱللَّٰعِنُونَ ١٥٩
Indeed, those who conceal what We sent down of clear proofs and guidance after We made it clear for the people in the Scripture - those are cursed by Allāh and cursed by those who curse,1
யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும், அவர் கொண்டுவந்தவற்றையும், உண்மைப்படுத்தக்கூடிய தமது வேதங்களில் நாம் இறக்கிய தெளிவான சான்றுகளை மறைப்பவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டான். வானவர்கள், தூதர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்குமாறு பிரார்த்தனை செய்கிறார்கள்.
2:160Page 24
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ١٦٠
Except for those who repent and correct themselves and make evident [what they concealed]. Those - I will accept their repentance, and I am the Accepting of Repentance,1 the Merciful.
ஆயினும் தெளிவான சான்றுகளை மறைத்ததற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, தங்களின் வெளிப்படையான, அந்தரங்கமான செயல்களைச் சீர்படுத்தி, மறைத்த சத்தியத்தையும், நேர்வழியையும் தெளிவுபடுத்தியவர்களைத்தவிர. இவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்வேன். நான் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.
2:161Page 24
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ ١٦١
Indeed, those who disbelieve and die while they are disbelievers - upon them will be the curse of Allāh and of the angels and the people, all together,
அல்லாஹ்வை நிராகரித்து, நிராகரித்த நிலையிலேயே பாவமன்னிப்புக் கோராமல் மரணித்தும் விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் சபித்து தன் அருளிலிருந்து தூரமாக்கிவிடுகிறான். வானவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்குமாறு பிரார்த்தனை செய்கிறார்கள்.
2:162Page 24
خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ ١٦٢
Abiding eternally therein. The punishment will not be lightened for them, nor will they be reprieved.
இந்த சாபத்தில் அவர்கள் நிலைத்திருப்பார்கள். மறுமைநாளில் ஒரு நாள்கூட அவர்களை விட்டும் வேதனை குறைக்கப்படாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
2:163Page 24
وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ ١٦٣
And your god is one God. There is no deity [worthy of worship] except Him, the Entirely Merciful, the Especially Merciful.
மனிதர்களே! வணக்கத்திற்குரிய உங்கள் இறைவன் ஒருவனே. அவன் தன்னிலும் தனது பண்புகளிலும் தனித்தவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அவன் அளவிலாக் கருணையாளன்; தனது அடியார்களுக்கு கருணைகாட்டுபவன். அவன் அவர்களுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை அளித்திருக்கிறான்.
2:164Page 25
إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ١٦٤
Indeed, in the creation of the heavens and the earth, and the alternation of the night and the day, and the [great] ships which sail through the sea with that which benefits people, and what Allāh has sent down from the heavens of rain, giving life thereby to the earth after its lifelessness and dispersing therein every [kind of] moving creature, and [His] directing of the winds and the clouds controlled between the heaven and earth are signs for a people who use reason.
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், அவற்றிலுள்ள அபுர்வ படைப்புக்களிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய உணவுப்பொருட்கள், வியாபாரப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை சுமந்துகொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கி, விளையும் பயிா்கள் மூலம் பூமியை உயிர்ப்பிக்கும் நீரிலும், இந்த உலகத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய உயிரினங்களிலும், ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு அவன் காற்றை வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்படுத்தப்பட்டுள்ள மேகங்களிலும் ஆதாரங்களைப் புரிந்துகொள்ளும் மக்களுக்கு, அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
2:165Page 25
وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادٗا يُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَشَدُّ حُبّٗا لِّلَّهِۗ وَلَوۡ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِذۡ يَرَوۡنَ ٱلۡعَذَابَ أَنَّ ٱلۡقُوَّةَ لِلَّهِ جَمِيعٗا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعَذَابِ ١٦٥
And [yet], among the people are those who take other than Allāh as equals [to Him]. They love them as they [should] love Allāh. But those who believe are stronger in love for Allāh. And if only they who have wronged would consider [that] when they see the punishment, [they will be certain] that all power belongs to Allāh and that Allāh is severe in punishment.
தெளிவான இந்த சான்றுகள் இருந்தும் மனிதர்களில் சிலர் அல்லாஹ்வுக்கு இணையான தெய்வங்களை ஏற்படுத்தி அல்லாஹ்வை நேசிப்பதுபோல் அந்த தெய்வங்களையும் நேசிக்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்கள் இவர்கள் தமது தெய்வங்களை நேசிப்பதை விட அல்லாஹ்வை அதிகமாக நேசிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவதில்லை. மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் அவனையே நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களோ மகிழ்ச்சியில் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட தெய்வங்களை நேசிக்கிறார்கள்; துன்பத்தில் அல்லாஹ்வையே அழைக்கிறார்கள். இணைவைத்து, தீயகாரியங்கள் செய்து அநியாயக்காரர்களான இவர்கள் மறுமையில் வேதனையைக் காணும்போது வல்லமை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். அவர்கள் இந்த வேதனையை முன்னரே பார்த்திருந்தால் ஒருபோதும் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியிருக்க மாட்டார்கள்.
2:166Page 25
إِذۡ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُواْ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ وَرَأَوُاْ ٱلۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِهِمُ ٱلۡأَسۡبَابُ ١٦٦
[And they should consider that] when those who have been followed disassociate themselves from those who followed [them], and they [all] see the punishment, and cut off from them are the ties [of relationship],
இது மறுமைநாளின் பயங்கரத்தையும் கடுமையையும் காணும் பின்பற்றப்பட்ட தலைவர்கள் தம்மைப் பின்பற்றிய பலவீனர்களை விட்டும் விலகிக்கொள்ளும் சந்தர்ப்பத்திலே நிகழும். தப்புவதற்கான அனைத்து வழிகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.
2:167Page 25
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ ١٦٧
Those who followed will say, "If only we had another turn [at worldly life] so we could disassociate ourselves from them as they have disassociated themselves from us." Thus will Allāh show them their deeds as regrets upon them. And they are never to emerge from the Fire.
பின்பற்றியவர்கள், பலவீனமானவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டும் எமது தலைவர்கள் விலகிக்கொண்டதைப்போல் நாங்களும் அவா்களை விட்டு விலகுவதற்கு உலகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கக்கூடாதா? மறுமையில் அல்லாஹ் அவர்களுக்கு கடுமையான வேதனையைக் காட்டியதுபோல், அசத்தியத்தில் இருந்த தலைவர்களைப் பின்பற்றியதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கவலைகளாக, கைசேதங்களாக அனுபவிக்கச்செய்வான். அவர்கள் நரகத்திலிருந்து ஒருபோதும் வெளியேற முடியாது.
2:168Page 25
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ ١٦٨
O mankind, eat from whatever is on earth [that is] lawful and good and do not follow the footsteps of Satan. Indeed, he is to you a clear enemy.
மனிதர்களே! பூமியிலுள்ள விலங்குகள், தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதிக்கப்பட்ட, அசுத்தமற்ற தூய்மையானவைகளை உண்ணுங்கள். உங்களைத் தந்திரமாகத் தன்பக்கம் ஈர்க்கும் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். தனக்கு தீங்கிழைக்க, தனக்குத் தீங்கிழைக்கவும் தன்னை வழிகெடுக்கவும் நினைக்கின்ற தன் எதிரியைப் பின்பற்றுவது ஒரு அறிவாளிக்கு உகந்ததல்ல.
2:169Page 25
إِنَّمَا يَأۡمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلۡفَحۡشَآءِ وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ١٦٩
He only orders you to evil and immorality and to say about Allāh what you do not know.
அவன் மானக்கேடான, பெரும் பாவங்களைச் செய்யுமாறும் அல்லாஹ்விடமிருந்தோ அவனது தூதர்களிடமிருந்தோ கிடைத்த அறிவின்றி கொள்கையிலும், சட்டங்களிலும் அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுமாறும் உங்களைத் தூண்டுகிறான்.
2:170Page 26
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَآ أَلۡفَيۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡقِلُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ ١٧٠
And when it is said to them, "Follow what Allāh has revealed," they say, "Rather, we will follow that which we found our fathers doing." Even though their fathers understood nothing, nor were they guided?
இந்த நிராகரிப்பாளர்களிடம்:அல்லாஹ் இறக்கிய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால், "எங்கள் முன்னோர்களின் கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும்தான் பின்பற்றுவோம்" என்று பிடிவாதத்துடன் கூறுகிறார்கள். அந்த முன்னோர்கள் நேர்வழியைக் குறித்து எதுவும் அறியாதவர்களாகவும், அல்லாஹ் விரும்பும் சத்தியத்தை அடைய முடியாதவர்களாகவும் இருந்தாலும் அவர்களைப் பின்பற்றுவார்களா என்ன?
2:171Page 26
وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ ١٧١
The example of those who disbelieve is like that of one who shouts at what hears nothing but calls and cries [i.e., cattle or sheep] - deaf, dumb and blind, so they do not understand.
நிராகரிப்பாளர்கள் தங்களின் முன்னோர்களைப் பின்பற்றுவதற்கான உதாரணம், தனது கால்நடையைக் கத்திக்கத்தி அழைக்கும் இடையனைப் போன்றது. அவை அவனுடைய சப்தத்தை செவியுறுகின்றன. ஆனால் அவனுடைய பேச்சை புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சத்தியத்தை செவியுற்று அதைக்கொண்டு பயனடைய முடியாத செவிடர்கள். உண்மையைப் பேச முடியாத ஊமைகள். அதனைக் காணமுடியாத குருடர்கள். எனவே நீர் அழைக்கும் நேர்வழியை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
2:172Page 26
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَٱشۡكُرُواْ لِلَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ١٧٢
O you who have believed, eat from the good [i.e., lawful] things which We have provided for you and be grateful to Allāh if it is [indeed] Him that you worship.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, ஆகுமாக்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நன்றி செலுத்துங்கள். நீங்கள் உண்மையாகவே அவனை மட்டுமே வணங்கி, அவனுக்கு யாரையும் இணையாக்காமல் இருந்தால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றை விட்டு விலகியிருப்பதும் அவனுக்கு நன்றி செலுத்துவதில் உள்ளவைதாம்.
2:173Page 26
إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيۡرِ ٱللَّهِۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ١٧٣
He has only forbidden to you dead animals,1 blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allāh. But whoever is forced [by necessity], neither desiring [it] nor transgressing [its limit], there is no sin upon him. Indeed, Allāh is Forgiving and Merciful.
அல்லாஹ் உங்கள்மீது பின்வரும் உணவுப்பொருட்களைத் தடைசெய்துள்ளான்: "இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்கூறி அறுக்கப்பட்டது."யாரேனும் நிர்பந்தத்தினால் - விரும்பாமலும், தேவையான அளவைத் தாண்டாமலும் - இவ்வகையான பொருள்களை உண்டுவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நிர்ப்பந்தமான சமயங்களில் தடைசெய்யப்பட்டவற்றை உண்பதை மன்னித்துவிடுவதும் அவனுடைய கருணையின் வெளிப்பாடுதான்.
2:174Page 26
إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ١٧٤
Indeed, they who conceal what Allāh has sent down of the Book and exchange it for a small price - those consume not into their bellies except the Fire. And Allāh will not speak to them on the Day of Resurrection, nor will He purify them. And they will have a painful punishment.
யூதர்களும் கிருஸ்தவர்களும் செய்வது போன்று அல்லாஹ் இறக்கிய வேதங்களையும் அவற்றில் உள்ள சத்தியம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து உள்ளவற்றையும் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயங்களுக்காக மறைப்போர் உண்மையில் அவர்கள் நரக வேதனைக்கு காரணமாக அமையக்கூடியவற்றைத்தான் தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமைநாளில் அவர்கள் விரும்பும் விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்; மாறாக கவலையூட்டும் விதமாகவே பேசுவான். அவர்களைத் தூய்மைப்படுத்தவோ பாராட்டவோ மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனைதான் உண்டு.
2:175Page 26
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ وَٱلۡعَذَابَ بِٱلۡمَغۡفِرَةِۚ فَمَآ أَصۡبَرَهُمۡ عَلَى ٱلنَّارِ ١٧٥
Those are the ones who have exchanged guidance for error and forgiveness for punishment. How patient they are for [i.e., in pursuit of] the Fire!
மக்களுக்குத் தேவையான கல்வியை மறைக்கக்கூடிய இவர்கள் உண்மையான கல்வியை மறைத்தபோது, நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் அல்லாஹ்வின் மன்னிப்பிற்குப் பதிலாக அவனுடைய தண்டனையையும் வாங்கிக் கொண்டார்கள். அவர்களை நரகத்தில் தள்ளுவதற்கு காரணமான விஷயங்களில் ஈடுபடுவதை எவ்வளவு அருமையாக சகித்துக் கொள்கிறார்கள்!? தம்மால் சகித்துக்கொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் வேதனையை அவர்கள் பொருட்படுத்தவில்லைபோலும்.
2:176Page 26
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِي ٱلۡكِتَٰبِ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ ١٧٦
That is [deserved by them] because Allāh has sent down the Book in truth. And indeed, those who differ over the Book are in extreme dissension.
இந்த வேதனை நேர்வழியையும் கல்வியையும் மறைத்தனால் ஏற்பட்ட விளைவாகும். ஏனெனில் மறைக்கப்படாமல் தெளிவுபடுத்தப்படுவதற்காகவே வேதங்களை உண்மையாகவே அல்லாஹ் இறக்கியருளியுள்ளான். இறைவேதங்களில் கருத்துவேறுபாடு கொண்டு, அவற்றில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு சிலவற்றை மறைத்தவர்கள் சத்தியத்தை விட்டு தூரமாகச் சென்றுவிட்டார்கள்.
2:177Page 27
۞ لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ ١٧٧
Righteousness is not that you turn your faces toward the east or the west, but [true] righteousness is [in] one who believes in Allāh, the Last Day, the angels, the Book, and the prophets and gives wealth, in spite of love for it, to relatives, orphans, the needy, the traveler, those who ask [for help], and for freeing slaves; [and who] establishes prayer and gives zakāh; [those who] fulfill their promise when they promise; and [those who] are patient in poverty and hardship and during battle. Those are the ones who have been true, and it is those who are the righteous.
கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ வெறுமனே முன்னோக்குவதும் அதில் முரண்பட்டுக்கொள்வதும் அல்லாஹ்வுக்குப் பிடித்தமான நன்மை அல்ல. உண்மையில் நன்மை என்பது, ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் வானவர்கள் அனைவரின் மீதும் இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தின்மீதும், பாகுபாடின்றி தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கைகொள்வதும், செல்வத்தின்மீது மோகம் இருந்தும் அதை உறவினர்களுக்காக, அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, குடும்பத்தையும் நாட்டையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக, மக்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட வறியவர்களுக்காக, அடிமைகளையும் கைதிகளையும் விடுதலை செய்வதற்காக செலவு செய்வதும், அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகையை முழுமையாகக் கடைப்பிடிப்பதும், கடமையாக்கப்பட்ட ஸகாத்தை வழங்குவதும், வாக்குறுதி அளித்தால் அதை முழுமையாக நிறைவேற்றுவதும், வறுமை, நோய் போன்றவற்றை சகித்துக்கொள்வதும், போர் உக்கிரமடையும் போது விரண்டோடாமல் பொறுமையாக இருப்பதும் ஆகும். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள்தாம் தங்களுடைய ஈமானிலும் செயல்பாடுகளிலும் அல்லாஹ்வுக்கு உண்மையாக இருப்பவர்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள்.
2:178Page 27
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِصَاصُ فِي ٱلۡقَتۡلَىۖ ٱلۡحُرُّ بِٱلۡحُرِّ وَٱلۡعَبۡدُ بِٱلۡعَبۡدِ وَٱلۡأُنثَىٰ بِٱلۡأُنثَىٰۚ فَمَنۡ عُفِيَ لَهُۥ مِنۡ أَخِيهِ شَيۡءٞ فَٱتِّبَاعُۢ بِٱلۡمَعۡرُوفِ وَأَدَآءٌ إِلَيۡهِ بِإِحۡسَٰنٖۗ ذَٰلِكَ تَخۡفِيفٞ مِّن رَّبِّكُمۡ وَرَحۡمَةٞۗ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ ١٧٨
O you who have believed, prescribed for you is legal retribution for those murdered - the free for the free, the slave for the slave, and the female for the female.1 But whoever overlooks from his brother [i.e., the killer] anything,2 then there should be a suitable follow-up and payment to him [i.e., the deceased's heir or legal representative] with good conduct. This is an alleviation from your Lord and a mercy. But whoever transgresses after that3 will have a painful punishment.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! வேண்டுமென்றே, அநியாயமாக மற்றவர்களை கொலை செய்யக்கூடியவர்கள் விஷயத்தில் கொலையாளியின் குற்றத்திற்குப் பகரமாக அவனும் கொல்லப்பட வேண்டும் என்று உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவன் சுதந்திரமானவனுக்குப் பகரமாக கொல்லப்படுவான், அடிமை அடிமைக்குப் பகரமாக கொல்லப்படுவான், பெண் பெண்ணுக்குப் பகரமாக கொல்லப்படுவாள். கொலைசெய்யப்பட்டவர் இறப்பதற்கு முன்னால் கொன்றவனை மன்னித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டவரின் பொறுப்பாளர் ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு அவனை மன்னித்துவிட்டால் - மன்னிப்பவர் ஈட்டுத் தொகையைப் பெறுவதில் சொல்லிக்காட்டாது நோவினை செய்யாது நல்லமுறையில் நடந்துகொள்ளட்டும். கொன்றவனும் தாமதமின்றி சிறந்தமுறையில் ஈட்டுத்தொகையை அளித்துவிடட்டும். இந்த மன்னிப்பும், ஈட்டுத்தொகையும் இறைவன் உங்களுக்கு அளித்த சலுகையும் இந்த சமூகத்தின்மீது பொழிந்து கருணையுமாகும். மன்னித்து, ஈட்டுத்தொகையும் பெற்றுவிட்டு கொன்றவன்மீது யாரேனும் வரம்புமீறினால் அவருக்கு அல்லாஹ்விடமிருந்து வேதனைமிக்க தண்டனை உண்டு.
2:179Page 27
وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ١٧٩
And there is for you in legal retribution [saving of] life, O you [people] of understanding, that you may become righteous.1
அல்லாஹ் உங்களுக்கு விதித்த இந்த பழிவாங்குதலில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது. அதனால் உங்களது உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உங்களுக்கு மத்தியில் நிகழும் அநியாயங்கள் தடுக்கப்படும். அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, அவனது கட்டளையின்படி செயல்படும், அவனை அஞ்சும் அறிவாளிகள் இந்த விஷயத்தை உணர்ந்துகொள்வார்கள்.
2:180Page 27
كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ ١٨٠
Prescribed for you when death approaches [any] one of you if he leaves wealth [is that he should make] a bequest for the parents and near relatives according to what is acceptable - a duty upon the righteous.1
நீங்கள் மரண வேளையை நெருங்கிவிட்டால், நீங்கள் ஏராளமான செல்வங்களை விட்டுச் செல்பவர்களாக இருந்தால் தாய்தந்தையருக்கும், உறவினருக்கும் - இறைவன் விதித்தபடி - மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமின்றி உயில் எழுதிவிடுங்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள்மீது கட்டாயக் கடமையாகும். இது வாரிசுரிமை தொடர்பாக வசனங்கள் இறங்குவதற்கு முன்னுள்ள சட்டமாகும். வாரிசுரிமை தொடர்பான வசனங்கள் இறங்கிய பிறகு யார் எந்தளவு அனந்தரம் பெறுவார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.
2:181Page 27
فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ١٨١
Then whoever alters it [i.e., the bequest] after he has heard it - the sin is only upon those who have altered it. Indeed, Allāh is Hearing and Knowing.
இந்த உயிலை தெளிவாக அறிந்தபின்னர் கூட்டிக் குறைப்பதன் மூலமோ தடுப்பதன் மூலமோ யாராவது மாற்றிவிட்டால் அந்த பாவம் மாற்றியவரையே சாரும். உயில் உரிமையாளர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ், அடியார்கள் பேசுவதை செவியேற்பவனாகவும் அவர்களின் செயல்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவர்களது எந்தவோரு விடயமும் அவனை விட்டும் தப்பமுடியாது.
2:182Page 28
فَمَنۡ خَافَ مِن مُّوصٖ جَنَفًا أَوۡ إِثۡمٗا فَأَصۡلَحَ بَيۡنَهُمۡ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ١٨٢
But if one fears from the bequeather [some] error or sin and corrects that which is between them [i.e., the concerned parties], there is no sin upon him. Indeed, Allāh is Forgiving and Merciful.
உயில் எழுதுபவர் அநியாயமாக அல்லது பக்கச்சார்போடு எழுதிவிடுவார் என அஞ்சுபவர் உயில் எழுதுபவருக்கு அவர் அறிவுரை வழங்கி சீர்திருத்தம் செய்வதும் குற்றமல்ல. உயில் விடயத்தில்; கருத்துவேறுபட்டுள்ளவர்களுக்கு மத்தியில் அவர் சீர்திருத்தம் செய்வதும் குற்றமல்ல. அவர் செய்த சமாதான முயற்சிக்காக அவர் கூலிகொடுக்கப்படுவார். அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிப்பவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
2:183Page 28
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ١٨٣
O you who have believed, decreed upon you is fasting as it was decreed upon those before you that you may become righteous -
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப்போல உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்குமிடையே நற்செயல்களால் தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த நற்செயல்களில் மிகச் சிறந்தது நோன்பாகும்.
2:184Page 28
أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ١٨٤
[Fasting for] a limited number of days. So whoever among you is ill or on a journey [during them] - then an equal number of other days [are to be made up]. And upon those who are able [to fast, but with hardship] - a ransom [as substitute] of feeding a poor person [each day]. And whoever volunteers good [i.e., excess] - it is better for him. But to fast is best for you, if you only knew.
வருடத்தில் சில நாட்களே உங்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ, பயணம் செய்யக்கூடியவராகவோ இருந்தால் அந்த நாட்களில் நோன்பு நோற்காமல் மற்ற நாட்களில் விட்டவற்றை கணக்கிட்டு நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்க சக்திபெற்றவர் நோன்பு நோற்கவில்லையெனில் அதற்குரிய பரிகாரத்தை அளித்துவிடட்டும். அது நோன்பை விடுகின்ற ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்தலாகும். நீங்கள் நோன்பின் சிறப்புகளை அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்காமல் பரிகாரம் வழங்குவதை விட நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இது அல்லாஹ் முதல் கட்டமாக நோன்பை விதியாக்கிய நேரத்தில் இருந்த சட்டமாகும். அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம், விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு அதற்குப் பகரமாக உணவளிக்கலாம். பின்னர் அல்லாஹ் வயதுவந்த சக்தியுள்ள அனைவரின்மீதும் நோன்பு நோற்பதை கடமையாக்கினான்.
2:185Page 28
شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ وَلِتُكۡمِلُواْ ٱلۡعِدَّةَ وَلِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ١٨٥
The month of Ramaḍān [is that] in which was revealed the Qur’ān, a guidance for the people and clear proofs of guidance and criterion. So whoever sights [the crescent of] the month,1 let him fast it; and whoever is ill or on a journey - then an equal number of other days. Allāh intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allāh for that [to] which He has guided you; and perhaps you will be grateful.
ரமலான் மாதத்தில் "லைலத்துல் கத்ர்" என்றும் கண்ணியமிக்க இரவில்தான் முஹம்மது நபியின்மீது குர்ஆன் இறங்கத் தொடங்கியது. அல்லாஹ் அதனை மக்களுக்கு வழிகாட்டியாக இறக்கினான். அதில் நேர்வழி மற்றும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்தல் ஆகிய தெளிவான ஆதாரங்களும், உள்ளன. எனவே ரமலான் மாதத்தை அடைபவர் பயணத்தில் அல்லாமல், ஆரோக்கியமாக இருந்தால் அவர்மீது நோன்பு நோற்பது கடமையாகும். உங்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ பயணியாகவோ இருப்பவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தன்னுடைய சட்டங்களின்மூலம் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். இது ஏனெனில், நீங்கள் நோன்பு மாதத்தின் எண்ணிக்கையை நிறைவுபடுத்துவதற்காகவும், அதன் முடிவில் வருகின்ற பெருநாளில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கவும் அதனை முழுமைப்படுத்தவும் உதவியமைக்காக அவனைத் தக்பீர் கூறி புகழ்வதற்காகவும் அவன் விரும்பும் மார்க்கத்தின்பால் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும்தான்.
2:186Page 28
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ ١٨٦
And when My servants ask you, [O Muḥammad], concerning Me - indeed I am near. I respond to the invocation of the supplicant when he calls upon Me. So let them respond to Me [by obedience] and believe in Me that they may be [rightly] guided.
தூதரே! என் அடியார்கள் என்னை நெருங்குவது குறித்தும், நான் அவர்களின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பது குறித்தும் உம்மிடம் வினவினால் - நான் அவர்களுக்குச் சமீபமாக, அவர்களின் நிலையை நன்கறிந்தவனாக, அவர்களின் பிரார்த்தனையை செவியேற்பவனாக இருக்கின்றேன். அவர்களுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை; அவர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. அழைப்பவரின் அழைப்புக்கு, அவர் என்னை உளத்தூய்மையுடன் அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படட்டும்; தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கட்டும். இதுதான் நான் அவர்களுக்குப் பதிலளிப்பதற்கான பயனுள்ள வழிமுறை. இதனால் அவர்கள் தங்களின் உலக மற்றும் மார்க்க விவகாரங்களில் நேரான பாதையில் சென்றிடலாம்.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences