Al-Mukhtasar · Tafsir · in Tamil
Al-Baqarah 2:187–212
2:187Page 29
أُحِلَّ لَكُمۡ لَيۡلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمۡۚ هُنَّ لِبَاسٞ لَّكُمۡ وَأَنتُمۡ لِبَاسٞ لَّهُنَّۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ كُنتُمۡ تَخۡتَانُونَ أَنفُسَكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡ وَعَفَا عَنكُمۡۖ فَٱلۡـَٰٔنَ بَٰشِرُوهُنَّ وَٱبۡتَغُواْ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمۡۚ وَكُلُواْ وَٱشۡرَبُواْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلۡخَيۡطُ ٱلۡأَبۡيَضُ مِنَ ٱلۡخَيۡطِ ٱلۡأَسۡوَدِ مِنَ ٱلۡفَجۡرِۖ ثُمَّ أَتِمُّواْ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيۡلِۚ وَلَا تُبَٰشِرُوهُنَّ وَأَنتُمۡ عَٰكِفُونَ فِي ٱلۡمَسَٰجِدِۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقۡرَبُوهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ ١٨٧
It has been made permissible for you the night preceding fasting to go to your wives [for sexual relations]. They are a clothing for you and you are a clothing1 for them. Allāh knows that you used to deceive yourselves,2 so He accepted your repentance and forgave you. So now, have relations with them and seek that which Allāh has decreed for you [i.e., offspring]. And eat and drink until the white thread of dawn becomes distinct to you from the black thread [of night]. Then complete the fast until the night [i.e., sunset]. And do not have relations with them as long as you are staying for worship in the mosques. These are the limits [set by] Allāh, so do not approach them. Thus does Allāh make clear His verses [i.e., ordinances] to the people that they may become righteous.
ஆரம்பத்தில் ஒருவர் நோன்பு இரவில் தூங்கி, ஃபஜ்ருக்கு முன் விழித்துவிட்டால் அவர் உண்ணவோ உடலுறவு கொள்ளவோ தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் அல்லாஹ் இந்த கட்டளையை ரத்துசெய்தான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நோன்பு இரவுகளில் உங்கள் மனைவியருடன் உறவுகொள்வதை உங்களுக்கு அல்லாஹ் அனுமதித்துவிட்டான். அவர்கள் உங்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒருவர் மற்றவரை விட்டும் தேவையற்றிருக்க முடியாது. அவன் உங்களுக்குத் தடுத்த செயலைக்கொண்டு உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டீர்கள் என்பதை அவன் அறிந்துகொண்டான். உங்கள்மீது கருணைகாட்டி, உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு இலகுவை ஏற்படுத்திவிட்டான். எனவே நீங்கள் உறவுகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்த குழந்தைகளைத் தேடிக்கொள்ளுங்கள். அதிகாலை தெளிவாக வெளிப்படும்வரை இரவில் நீங்கள் உண்ணலாம், பருகலாம். பஜ்ர் உதித்ததிலிருந்து சூரியன் மறையும்வரை நோன்பை முறிக்கக்கூடிய விஷயங்களை விட்டும் தவிர்ந்து நோன்பை நிறைவுபடுத்துங்கள். நீங்கள் பள்ளிவாயில்களில் (இஃதிகாஃபில்) தங்கியிருக்கும்போது மனைவியிருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்வது அதனை முறித்துவிடும். மேற்குறிப்பிட்ட இந்த சட்டங்கள் அனைத்தும் ஹலால், ஹராம் தொடர்பாக அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். எனவே அவற்றை ஒருபோதும் நெருங்கிவிடாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை நெருங்குபவர் தடைசெய்யப்பட்டவற்றில் விழுந்துவிட நேரிடலாம். மக்கள், அல்லாஹ் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக இச்சட்டங்களை நன்கு தெளிவுபடுத்துவதன் மூலம் அவன் தன் வசனங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
2:188Page 29
وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ وَتُدۡلُواْ بِهَآ إِلَى ٱلۡحُكَّامِ لِتَأۡكُلُواْ فَرِيقٗا مِّنۡ أَمۡوَٰلِ ٱلنَّاسِ بِٱلۡإِثۡمِ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ١٨٨
And do not consume one another's wealth unjustly or send it [in bribery] to the rulers in order that [they might aid] you [to] consume a portion of the wealth of the people in sin, while you know [it is unlawful].
திருட்டு, கொள்ளை, மோசடி போன்ற சட்டத்திற்குப் புறம்பான வழியில் நீங்கள் ஒருவர் மற்றவரின் செல்வத்தைப் பெறாதீர்கள். மக்களின் செல்வத்தை பாவமான முறையில் பிடுங்குவதற்காக அதிகாரிகளிடம் வாதாடாதீர்கள். இவையனைத்தையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தடைசெய்யப்பட்டது என அறிந்துகொண்டே பாவத்தில் ஈடுபடுவது மிகக் கேவலமானதும் பெரும் தண்டனைக்குரிய செயலுமாகும்.
2:189Page 29
۞ يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَهِلَّةِۖ قُلۡ هِيَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلۡحَجِّۗ وَلَيۡسَ ٱلۡبِرُّ بِأَن تَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنِ ٱتَّقَىٰۗ وَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِنۡ أَبۡوَٰبِهَاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ١٨٩
They ask you, [O Muḥammad], about the crescent moons. Say, "They are measurements of time for the people and for ḥajj [pilgrimage]." And it is not righteousness to enter houses from the back, but righteousness is [in] one who fears Allāh. And enter houses from their doors. And fear Allāh that you may succeed.
தூதரே! பிறை உருவாகுவதைப் பற்றியும் அதனுடைய நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக, :அது மக்களுக்கு காலங்காட்டியாகும். அதன்மூலம் அவர்கள் நோன்பு, ஹஜ் ஆகியவற்றின் மாதங்கள், ஸகாத்தின் வருடப் பூர்த்தி போன்ற தமது வணக்க வழிபாடுகளின் நேரங்களை அறிந்துகொள்கிறார்கள். மேலும் இழப்பீடு, கடன் தவணைகளை தீர்மானிப்பது போன்ற கொடுக்கல்வாங்கல்களின் நேரங்களையும் அதன் மூலம் அறிந்துகொள்கின்றனர். நீங்கள் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலகட்டத்தில் செய்துவந்ததுபோன்று ஹஜ் அல்லது உம்ரா செய்ய இஹ்ராமில் நுழைந்த பின் வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக நுழைவதில் நன்மை இல்லை. மாறாக உள்ரங்கத்திலும் வெளிரங்கத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்வதே உண்மையான நற்செயலாகும். வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே நுழைவதே உங்களுக்கு இலகுவானது. அல்லாஹ் உங்கள்மீது சிரமமான விஷயங்களை விதிக்கவில்லை. நற்செயல்களால் உங்களுக்கும் அல்லாஹ்வின் வேதனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் விரும்பும் விஷயங்களைப் பெற்று, அஞ்சும் விஷயங்களிலிருந்து தப்பித்து வெற்றியடையலாம்.
2:190Page 29
وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ١٩٠
Fight in the way of Allāh those who fight against you but do not transgress. Indeed, Allāh does not like transgressors.
அல்லாஹ்வின் பாதையை விட்டும் உங்களைத் தடுப்பதற்காக உங்களுடன் போரிடும் நிராகரிப்பாளர்களுடன் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக போரிடுங்கள். போர்க்களத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றோரைக் கொன்றோ இறந்தவர்களைச் சித்திரவதை செய்தோ வரம்புமீறிவிடாதீர்கள். அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.
2:191Page 30
وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡ وَأَخۡرِجُوهُم مِّنۡ حَيۡثُ أَخۡرَجُوكُمۡۚ وَٱلۡفِتۡنَةُ أَشَدُّ مِنَ ٱلۡقَتۡلِۚ وَلَا تُقَٰتِلُوهُمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمۡ فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمۡ فَٱقۡتُلُوهُمۡۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ ١٩١
And kill them [in battle] wherever you overtake them and expel them from wherever they have expelled you, and fitnah1 is worse than killing. And do not fight them at al-Masjid al-Ḥarām until they fight you there. But if they fight you, then kill them. Such is the recompense of the disbelievers.
அவர்களை சந்திக்கும் இடங்களில் கொல்லுங்கள். அவர்கள் உங்களை வெளியேற்றிய மக்காவிலிருந்து அவர்களையும் வெளியேற்றுங்கள். ஒரு நம்பிக்கையாளனை அவனுடைய மார்க்கத்தை விட்டுத் தடுத்து நிராகரிப்பின் பக்கம் கொண்டு செல்லும் குழப்பம் கொலையை விடக்கொடியது. மஸ்ஜிதுல் ஹராமை கண்ணியப்படுத்தும் பொருட்டு அங்கு அவர்களாகவே போரைத் தொடங்கும்வரை நீங்கள் போரைத் தொடங்காதீர்கள். அவர்கள் போரைத் தொடங்கிவிட்டால் அவர்களைக் கொல்லுங்கள். மஸ்ஜிதுல் ஹராமில் வரம்புமீறியதற்கு கொலையே நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும்.
2:192Page 30
فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ١٩٢
And if they cease, then indeed, Allāh is Forgiving and Merciful.
அவர்கள் உங்களுடன் போர் புரிதல், தங்களின் நிராகரிப்பு எக்பவற்றிலிருந்து விலகிவிட்டால் நீங்களும் விலகிக் கொள்ளுங்கள். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் முந்தைய பாவங்களின் காரணமாக அவர்களைத் தண்டிக்க மாட்டான். அவன் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.
2:193Page 30
وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِۖ فَإِنِ ٱنتَهَوۡاْ فَلَا عُدۡوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ ١٩٣
Fight them until there is no [more] fitnah and [until] religion [i.e., worship] is [acknowledged to be] for Allāh. But if they cease, then there is to be no aggression [i.e., assault] except against the oppressors.
நிராகரிப்பவர்கள், இணைவைப்பையும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும் நிராகரிப்பதையும் விட்டுவிடும்வரையும், அல்லாஹ்வுடைய மார்க்கம் மிகைக்கும் வரையும் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும், அவனை நிராகரிப்பதையும் விட்டுவிட்டால் நீங்களும் விலகிக் கொள்ளுங்கள்; அவர்களுடன் போரிடாதீர்கள். அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்து அவனை நிராகரிக்கும் அநியாயக்காரர்களைத்தவிர வேறு யாரிடமும் பகைமை இல்லை.
2:194Page 30
ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ١٩٤
[Battle in] the sacred month is for [aggression committed in] the sacred month,1 and for [all] violations is legal retribution. So whoever has assaulted you, then assault him in the same way that he has assaulted you. And fear Allāh and know that Allāh is with those who fear Him.
அல்லாஹ் உங்களுக்கு ஹரமில் நுழைவதற்கு அனுமதியளித்த ஏழாம் ஆண்டின் புனிதமான மாதம் இணைவைப்பாளர்கள் உங்களைத் தடுத்த ஆறாம் ஆண்டின் புனிதமான மாதத்திற்கு பகரமாகும். புனிதங்களிலும் - புனித மாதம், புனித நகரம், இஹ்ராம் போன்றவை - வரம்பு மீறியவர்களிடமிருந்து பழிவாங்கப்படுகிறது. யாரேனும் இவற்றில் உங்கள்மீது வரம்பு மீறினால் அவர்கள் உங்களுடன் நடந்துகொண்டவாறே நீங்களும் நடந்துகொள்ளுங்கள். வரம்புமீறி விடாதீர்கள். அல்லாஹ் அவன் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை நேசிக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றில் வரம்புமீறுவதில் அவனை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தன்னை அஞ்சக்கூடியவர்களுக்கு உதவுபவனாகவும், ஆதரவளிப்பவனாகவும் இருக்கின்றான்.
2:195Page 30
وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ١٩٥
And spend in the way of Allāh and do not throw [yourselves] with your [own] hands into destruction [by refraining]. And do good; indeed, Allāh loves the doers of good.
ஜிஹாத் மற்றும் அதுபோன்ற இறைவழிபாட்டில் செல்வங்களை செலவு செய்யுங்கள். ஜிஹாதையும் அவனுடைய பாதையில் செலவழிப்பதையும் விட்டுவிட்டோ உங்களின் அழிவுக்குக் காரணமானவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமோ உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களின் வணக்க வழிபாடு, கொடுக்கல் வாங்கல்கள், பண்புகள் ஆகியவற்றில் சிறந்தமுறையில் செயலாற்றுங்கள். எல்லா விவகாரங்களிலும் சிறந்தமுறையில் செயல்படுபவர்களேயே அல்லாஹ் நேசிக்கின்றான். அவன் அவர்களுக்கு மகத்தான நன்மைகளை வழங்குகிறான்; நேரான வழியைக் காட்டுகிறான்.
2:196Page 30
وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ١٩٦
And complete the ḥajj and ʿumrah for Allāh. But if you are prevented, then [offer] what can be obtained with ease of sacrificial animals. And do not shave your heads until the sacrificial animal has reached its place of slaughter. And whoever among you is ill or has an ailment of the head [making shaving necessary must offer] a ransom of fasting [three days] or charity1 or sacrifice.2 And when you are secure,3 then whoever performs ʿumrah [during the ḥajj months]4 followed by ḥajj [offers] what can be obtained with ease of sacrificial animals. And whoever cannot find [or afford such an animal] - then a fast of three days during ḥajj and of seven when you have returned [home]. Those are ten complete [days]. This is for those whose family is not in the area of al-Masjid al-Ḥarām. And fear Allāh and know that Allāh is severe in penalty.
அல்லாஹ்வின் திருப்திக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். நோயினாலோ எதிரிகளினாலோ நீங்கள் அவற்றை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களால் இயன்ற பலிப்பிராணிகளை அறுத்து உங்களின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். பலிப்பிராணி அறுக்கப்படும் இடத்தை அடையும்வரை தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யாதீர்கள். அது ஹரமை விட்டுத் தடுக்கப்பட்டால் தடுக்கப்பட்ட இடத்திலேயே அறுத்துக் கொள்ளுங்கள். அது தடுக்கப்படவில்லையெனில் ஹரமில் அறுக்கப்படும் நாளான துல்ஹஜ் பத்தாம் தினத்திலும் அதற்கு அடுத்த "அய்யாமுத் தஷ்ரீக்" என்னும் மூன்று நாட்களிலும் அறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளியாக அல்லது தலையில் பேன் போன்ற பூச்சிகளால் பாதிக்கப்பட்டு, உங்களின் தலைமுடியை மழித்துக் கொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் அதற்கான பரிகாரத்தை அளித்துவிடுங்கள். அதற்கான பரிகாரம், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஹரமில் உள்ள ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை அறுத்து ஹரமிலுள்ள ஏழைகளுக்கு அதனைப் பங்கிட வேண்டும். நீங்கள் அச்சமற்றவர்களாக இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் உம்ராவையும் நிறைவேற்றி அதே வருடம் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை இஹ்ராமின் மூலம் தடைசெய்யப்பட்டவற்றை அனுபவிக்க (தமத்துஃ முறையில் நிய்யத் வைக்க) விரும்பினால், ஒரு ஆட்டை அறுத்து அல்லது ஒட்டகத்திலோ, மாட்டிலோ ஏழு பங்கில் ஒருவராக இணைந்து உங்களால் இயன்றதைப் பலியிட்டுவிடுங்கள். உங்களால் பலிப்பிராணியை பெறமுடியவில்லையெனில் அதற்குப் பகரமாக ஹஜ்ஜின் கிரியைகளுக்குரிய காலத்தில் மூன்று நாட்களும், வீடுதிரும்பிய பிறகு ஏழுநாட்களும் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மொத்தம் முழுமையான பத்து நாட்களாகும். தமத்துஃ முறையில் நிய்யத் வைத்து பலிப்பிராணியை பலியிடுவது, முடியாதபட்சத்தில் நோன்பு நோற்பது என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லை மற்றும் அதன் அருகில் வசிக்காதவர்களுக்காகும். ஹரமிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு தமத்துஃ முறையில் ஹஜ் செய்வதற்கு எவ்விதத் தேவையுமில்லை. அவர்கள் அருகில் வசிப்பதால் வெறும் தவாப் மாத்திரம் போதுமானது. ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் விதித்த கட்டளைகளையும் வரம்புகளையும் பேணி அவனுக்கு அஞ்சுங்கள். தன்னுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
2:197Page 31
ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ١٩٧
Ḥajj is [during] well-known months,1 so whoever has made ḥajj obligatory upon himself therein [by entering the state of iḥrām], there is [to be for him] no sexual relations and no disobedience and no disputing during ḥajj. And whatever good you do - Allāh knows it. And take provisions, but indeed, the best provision is fear of Allāh. And fear Me, O you of understanding.
ஹஜ்ஜுடைய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அது ஷவ்வால் மாதத்தில் தொடங்கி துல்ஹஜ் பத்தில் நிறைவடைகிறது. யார் இந்த மாதங்களில் ஹஜ் செய்வதை தன்மீது கடமையாக்கி, நிய்யத் வைத்து அதில் நுழைந்துவிட்டாரோ அவர்மீது உடலுறவு கொள்வதோ அதற்கு முன்னோட்டமான செயல்களில் ஈடுபடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோன்று அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் பாவமான காரியங்களில் ஈடுபடுவதும் தடையாகும். ஏனெனில் இது புனிதமான காலமும் புனிதமான இடமுமாகும். கோபத்தையும் வெறுப்பையும் உண்டுபண்ணும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் செய்யக்கூடிய நற்செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். ஹஜ்ஜின் காலங்களில் உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். உங்கள் அனைத்துக் காரியங்களிலும் நீங்கள் செய்யும் ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது "தக்வா" என்னும் இறையச்சம்தான். அறிவுடையோரே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னையே அஞ்சிக் கொள்ளுங்கள்.
2:198Page 31
لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ فَٱذۡكُرُواْ ٱللَّهَ عِندَ ٱلۡمَشۡعَرِ ٱلۡحَرَامِۖ وَٱذۡكُرُوهُ كَمَا هَدَىٰكُمۡ وَإِن كُنتُم مِّن قَبۡلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ ١٩٨
There is no blame upon you for seeking bounty1 from your Lord [during ḥajj]. But when you depart from ʿArafāt, remember Allāh at al-Mashʿar al-Ḥarām.2 And remember Him, as He has guided you, for indeed, you were before that among those astray.
ஹஜ் செய்யும்போது வியாபாரத்தின் மூலமோ இன்னபிற விஷயங்களின் மூலமோ நீங்கள் ஹலாலான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அரஃபாவில் ஒன்றுகூடிய பிறகு பத்தாவது நாள் இரவு முஸ்தலிஃபாவை நோக்கி நீங்கள் சென்றால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். முஸ்தலிஃபாவிலுள்ள மஷ்அருல் ஹராமிற்கு பிரதான அடையாளங்கள், ஹஜ் வணக்கவழிபாடுகள் என்பவற்றுக்கு அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னர் நீங்கள் அவனுடைய மார்க்கத்தை அறியாது இருந்தீர்கள்.
2:199Page 31
ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ١٩٩
Then depart from the place from where [all] the people depart and ask forgiveness of Allāh. Indeed, Allāh is Forgiving and Merciful.
பின்னர் நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியோர் செய்வதைப்போல அரஃபாவிலிருந்து செல்லுங்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள் செய்ததைப்போன்று அங்கு தரிப்பதை விட்டு விடவேண்டாம். அல்லாஹ் விதித்ததை நிறைவேற்றியபோது உங்களிடம் நிகழ்ந்த குறைகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்கள் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
2:200Page 31
فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ ٢٠٠
And when you have completed your rites, remember Allāh like your [previous] remembrance of your fathers or with [much] greater remembrance. And among the people is he who says, "Our Lord, give us in this world," and he will have in the Hereafter no share.
ஹஜ்ஜின் கிரியைகளை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். உங்கள் முன்னோர்களைக் கொண்டு நீங்கள் பெருமை பேசுவதுபோல அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வைப் புகழுங்கள். நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அருட்கொடையும் அவன் அளித்ததுதான். மக்கள் பல்வேறு வகையினராக இருக்கின்றனர். அவர்களில் ஒரு வகையினர் இந்த உலகத்தின்மீது மட்டுமே நம்பிக்கைகொண்ட இணைவைக்கும் நிராகரிப்பாளர்கள். அவர்கள் ஆரோக்கியம், சொத்து, பிள்ளைப்பாக்கியம் ஆகிய இவ்வுலகின் இன்பங்களையும் அலங்காரத்தையுமே தங்கள் இறைவனிடம் கேட்கிறார்கள். அவர்கள் மறுமைநாளைப் புறக்கணித்து இவ்வுலகின்மீது மோகம் கொண்டதனால் மறுமையில் தன்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியவற்றில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.
2:201Page 31
وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ٢٠١
But among them is he who says, "Our Lord, give us in this world [that which is] good and in the Hereafter [that which is] good and protect us from the punishment of the Fire."
மனிதர்களில் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் இவ்வுலக இன்பத்தையும் அதில் நற்செயலையும் அதேபோன்று மறுமையில் நரக வேதனையிலிருந்து பாதுகாக்கப்பட்டு, சுவனத்தைப் பெற்று அடையும் வெற்றியையும் கேட்கிறார்கள்.
2:202Page 31
أُوْلَٰٓئِكَ لَهُمۡ نَصِيبٞ مِّمَّا كَسَبُواْۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ ٢٠٢
Those will have a share of what they have earned, and Allāh is swift in account.
இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையை வேண்டும் இவர்களுக்கு இவ்வுலகில் சம்பாதித்த நற்செயல்களுக்கான பெரும் கூலி உண்டு. செயல்களுக்குக் கணக்குத் தீர்ப்பதில் அவன் விரைவானவன்.
2:203Page 32
۞ وَٱذۡكُرُواْ ٱللَّهَ فِيٓ أَيَّامٖ مَّعۡدُودَٰتٖۚ فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ إِلَيۡهِ تُحۡشَرُونَ ٢٠٣
And remember Allāh during [specific] numbered days. Then whoever hastens [his departure] in two days - there is no sin upon him; and whoever delays [until the third] - there is no sin upon him - for him who fears Allāh. And fear Allāh and know that unto Him you will be gathered.
துல்ஹஜ் பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று ஆகிய நாட்களில் "அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்" ஆகிய திக்ருகளைக் கொண்டு அல்லாஹ்வை நினைவுகூருங்கள். யாரேனும் அவசரப்பட்டு பன்னிரண்டாவது நாளே கல்லெறிந்த பிறகு மினாவிலிருந்து வெளியேறிவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் அவரைவிட்டும் சட்டத்தை தளர்தியுள்ளான். எவர் பதிமூன்றாம் நாள்வரை தாமதித்துச் சென்றாரோ அவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அவர் பரிபூரணமானதைச் செய்துள்ளதோடு நபி (ஸல்) அவர்களது செயலையும் பின்பற்றியவராவார். இவையனைத்தும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் அல்லாஹ்வை அஞ்சி அவன் கட்டளையிட்டபடி நிறைவேற்றியவர்களுக்குத்தான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும், அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.
2:204Page 32
وَمِنَ ٱلنَّاسِ مَن يُعۡجِبُكَ قَوۡلُهُۥ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيُشۡهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِي قَلۡبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلۡخِصَامِ ٢٠٤
And of the people is he whose speech pleases you in worldly life, and he calls Allāh to witness as to what is in his heart, yet he is the fiercest of opponents.
தூதரே! மனிதர்களில் சில நயவஞ்சகர்கள் உள்ளனர். இவ்வுலகில் அவர்களின் பேச்சு உம்மை ஈர்த்துவிடும். அவர்கள் பேசும் தொனியைப் பார்த்து "அவர்கள் உண்மையாளர்கள், விசுவாசமானவர்கள்" என்று நீர் எண்ணலாம். அவர்கள் இதன்மூலம் தங்களையும், தங்கள் செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். தங்களின் உள்ளத்தில் ஈமானும் நன்மையும் உள்ளதாகக்கூறி அல்லாஹ்வையே அதற்கு சாட்சியாக்குவார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு கடும் பகைவர்களாவர்.
2:205Page 32
وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي ٱلۡأَرۡضِ لِيُفۡسِدَ فِيهَا وَيُهۡلِكَ ٱلۡحَرۡثَ وَٱلنَّسۡلَۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡفَسَادَ ٢٠٥
And when he goes away, he strives throughout the land to cause corruption therein and destroy crops and animals. And Allāh does not like corruption.
அவர்கள் உம்மை விட்டுச் சென்றுவிட்டால் பாவங்களைக் கொண்டு உலகில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். விளைநிலங்களை நாசப்படுத்தி, கால்நடைகளைக் கொலை செய்கிறார்கள். குழப்பத்தையும் குழப்பவாதிகளையும் அல்லாஹ் ஒருபோதும் விரும்ப மாட்டான்.
2:206Page 32
وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتۡهُ ٱلۡعِزَّةُ بِٱلۡإِثۡمِۚ فَحَسۡبُهُۥ جَهَنَّمُۖ وَلَبِئۡسَ ٱلۡمِهَادُ ٢٠٦
And when it is said to him, "Fear Allāh," pride in the sin takes hold of him. Sufficient for him is Hellfire, and how wretched is the resting place.
"அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்"என்று அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால், அகந்தையும் ஆணவமும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவிடாமல் அவனைத் தடுக்கின்றன. பாவத்திலே அவன் தொடர்ந்திருக்கிறான். நரகத்தில் நுழைவதே அவர்களுக்குப் போதுமான தண்டனையாகும். அது மிகவும் மோசமான தங்குமிடமாகும்.
2:207Page 32
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ ٢٠٧
And of the people is he who sells himself, seeking means to the approval of Allāh. And Allāh is Kind to [His] servants.
மனிதர்களில் நம்பிக்கைகொண்ட சிலர் தனது இறைவனுக்குக் கட்டுப்பட்டு, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்தவாறு, அவனுடைய திருப்தியைத் தேடியவாறு தம் உயிரை வழங்குகின்றார்கள். அல்லாஹ் தன் அடியார்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
2:208Page 32
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱدۡخُلُواْ فِي ٱلسِّلۡمِ كَآفَّةٗ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ٢٠٨
O you who have believed, enter into Islām completely [and perfectly] and do not follow the footsteps of Satan. Indeed, he is to you a clear enemy.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். வேதத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு சில பகுதிகளை நிராகரித்த வேதக்காரர்களைப்போன்று அதில் எதையும் விட்டுவிடாதீர்கள். ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.
2:209Page 32
فَإِن زَلَلۡتُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡكُمُ ٱلۡبَيِّنَٰتُ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ٢٠٩
But if you slip [i.e., deviate] after clear proofs have come to you, then know that Allāh is Exalted in Might and Wise.
சந்தேகமற்ற, தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்தபிறகும் நீங்கள் சத்தியத்தை விட்டு சறுகிவிட்டால் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தனது ஆற்றலில் யாவற்றையும் மிகைத்தவன்; தனது திட்டமிடலிலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன். எனவே அவனையே அஞ்சுங்கள், கண்ணியப்படுத்துங்கள்.
2:210Page 32
هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن يَأۡتِيَهُمُ ٱللَّهُ فِي ظُلَلٖ مِّنَ ٱلۡغَمَامِ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَقُضِيَ ٱلۡأَمۡرُۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ٢١٠
Do they await but that Allāh should come to them in covers of clouds and the angels [as well] and the matter is [then] decided? And to Allāh [all] matters are returned.
சத்தியப் பாதையை விட்டுவிட்டு ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றும் இவர்கள், மறுமைநாளில் அல்லாஹ் தன் கண்ணியத்திற்கேற்றபடி மேகத்தின் நிழல்களில் அவர்களிடையே தீர்ப்பு அளிப்பதற்காக வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அப்போது வானவர்கள் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களைச் சூழ்ந்துவிடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் கட்டளை அவர்களிடையே நிறைவேற்றப்படும். படைப்புகளின் விஷயங்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன.
2:211Page 33
سَلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ٢١١
Ask the Children of Israel how many a sign of evidence We have given them. And whoever exchanges the favor of Allāh [for disbelief] after it has come to him - then indeed, Allāh is severe in penalty.
தூதரே! இஸ்ராயீலின் மக்களைக் கண்டிக்கும்விதமாக அவர்களிடம் கேளும், :தூதர்களை உண்மைப்படுத்தக்கூடிய எத்தனையோ தெளிவான சான்றுகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றானே! நீங்கள் அவற்றை பொய் எனக்கூறி புறக்கணித்துவிட்டீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடையை தெளிவாக அறிந்தபின்னரும் அதனை நிராகரிப்பாக மாற்றுபவர்கள் அறிந்துகொள்ளட்டும், ;நிச்சயமாக அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களை கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதை.
2:212Page 33
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَيَسۡخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْۘ وَٱلَّذِينَ ٱتَّقَوۡاْ فَوۡقَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ٢١٢
Beautified for those who disbelieve is the life of this world, and they ridicule those who believe. But those who fear Allāh are above them on the Day of Resurrection. And Allāh gives provision to whom He wills without account.
அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையும் அதிலுள்ள அழியக்கூடிய இன்பங்களும் அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர்களை பரிகாசம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இந்த நிராகரிப்பாளர்களைவிட மறுமையில் உயர்ந்தநிலையில் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களை நிலையான சுவனங்களில் தங்கச் செய்வான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences