Al-Mukhtasar · Tafsir · in Tamil
Al-Baqarah 2:257–281
2:257Page 43
ٱللَّهُ وَلِيُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۖ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخۡرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِۗ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٢٥٧
Allāh is the Ally1 of those who believe. He brings them out from darknesses into the light. And those who disbelieve - their allies are ṭāghūt. They take them out of the light into darknesses.2 Those are the companions of the Fire; they will abide eternally therein.
தன்மீது நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் பொறுப்பெடுத்துக் கொள்கிறான். அவர்களுக்கு நன்மை செய்வதற்கான பாக்கியம் அளித்து, உதவியும் புரிகிறான். நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அறிவு மற்றும் ஈமானிய ஒளியின்பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ்வுக்கு இணையாக்கப்பட்டவர்களும் சிலைகளுமே பொறுப்பாளர்களாவர். அவர்கள் நிராகரிப்பை அலங்கரித்துக் காட்டி இவர்களை அறிவு மற்றும் ஈமானிய ஒளியிலிருந்து வெளியேற்றி அறியாமை மற்றும் நிராகரிப்பின் இருள்களுக்குள் கொண்டுசெல்கிறார்கள். இவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
2:258Page 43
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ٢٥٨
Have you not considered the one who argued with Abraham about his Lord [merely] because Allāh had given him kingship? When Abraham said, "My Lord is the one who gives life and causes death," he said, "I give life and cause death." Abraham said, "Indeed, Allāh brings up the sun from the east, so bring it up from the west." So the disbeliever was overwhelmed [by astonishment], and Allāh does not guide the wrongdoing people.
தூதரே! இப்ராஹீமிடம் இறைவனின் ௐரிறைக்கொள்கை குறித்து திமிராக தர்க்கம் செய்த பாவியை உமக்குத் தெரியுமா? இதற்கான காரணம், அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிருந்து அவன் வரம்புமீறியதே. இப்ராஹீம் அவனிடம் தம் இறைவனின் பண்புகளைக்குறித்து தெளிவுபடுத்தியவராகக் கூறினார்: என் இறைவன்தான் படைப்புகளுக்கு உயிரளிக்கிறான்; மரணமும் அளிக்கின்றான். அதற்கு அவன் திமிராகக் கூறினான்:நானும்தான் உயிர் கொடுக்கின்றேன்; மரணமும் அளிக்கின்றேன். சிலரை மன்னித்து உயிர்வாழ அனுமதிக்கின்றேன். சிலரைக் கொன்று மரணிக்கச் செய்கின்றேன்.அதற்கு இப்ராஹீம் இன்னுமொரு பெரும் வாதத்தை பின்வருமாறு முன்வைத்தார்: நான் வணங்கும் என் இறைவன் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டுவருகிறான். நீ சூரியனை மேற்கிலிருந்து கொண்டுவா பார்ப்போம். திமிர் பிடித்த பாவி திகைப்படைந்துவிட்டான். இந்த வாதத்தின் வலிமையினால் வாயடைத்துப்போனான். அநியாயக்காரர்களின் அநியாயத்தினாலும் வரம்புமீறலினாலும் அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு வழிகாட்டமாட்டான்.
2:259Page 43
أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٢٥٩
Or [consider such an example] as the one who passed by a township which had fallen into ruin. He said, "How will Allāh bring this to life after its death?" So Allāh caused him to die for a hundred years; then He revived him. He said, "How long have you remained?" He [the man] said, "I have remained a day or part of a day." He said, "Rather, you have remained one hundred years. Look at your food and your drink; it has not changed with time. And look at your donkey; and We will make you a sign for the people. And look at the bones [of this donkey] - how We raise them and then We cover them with flesh." And when it became clear to him, he said, "I know that Allāh is over all things competent."
அல்லது அழிந்துகிடந்த ஒரு ஊரை கடந்து சென்றவரை உமக்குத் தெரியுமா? அங்குள்ள கட்டிடங்கள் வீழ்ந்து வசிப்பவர்கள் அழிந்து அந்த ஊர் பாழடைந்து வெருச்சோடிக் கிடந்தது. அந்த மனிதர் ஆச்சரியமாகக் கேட்டார்: இந்த ஊரில் உள்ளவர்கள் இறந்தபிறகு அல்லாஹ் அவர்களை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?! அல்லாஹ் அவரை நூறுவருடங்கள்வரை மரணிக்கச் செய்தான். பின்னர் உயிர்கொடுத்து எழுப்பி அவரிடம் கேட்டான்: நீர் எவ்வளவு காலங்கள் இறந்தநிலையில் இருந்தீர்? அதற்கு அவர், ஒருநாள் அல்லது ஒருநாளின் சிலபகுதிவரை இருந்திருப்பேன் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்: நீர் நூறுஆண்டுகள்வரை இவ்வாறு இருந்தீர். உம்முடன் வைத்திருந்த உணவையும் பானத்தையும் பாரும். அவை மிக விரைவாக மாறும் தன்மையுடையவையாக இருந்தும் மாறாமல் அதே நிலையிலேயே இருக்கின்றன. உம்முடைய இறந்த கழுதையையும் பாரும். உயிர்கொடுத்து எழுப்புவதில் மக்களுக்கு அல்லாஹ்வின் ஆற்றலைக் காட்டும் ஒரு தெளிவான அத்தாட்சியாக உம்மை நாம் ஆக்கும் பொருட்டு சிதைந்து கிடக்கின்ற எலும்புகளையும் அவற்றை நாம் எவ்வாறு ஒன்றோடொன்று சேர்த்து அதன்மீது சதையைப்போர்த்தி அதற்கு உயிரளிக்கின்றோம் என்பதையும் பாரும் என்று கூறினான். அவர் அதனைப் பார்த்தபோது உண்மையைக் கண்டுகொண்டார்; அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொண்டார். அதனை ஒத்துக் கொண்டவராகக் கூறினார்: அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
2:260Page 44
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ٢٦٠
And [mention] when Abraham said, "My Lord, show me how You give life to the dead." [Allāh] said, "Have you not believed?" He said, "Yes, but [I ask] only that my heart may be satisfied." [Allāh] said, "Take four birds and commit them to yourself.1 Then [after slaughtering them] put on each hill a portion of them; then call them - they will come [flying] to you in haste. And know that Allāh is Exalted in Might and Wise."
தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம்: என் இறைவனே! நீ இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனது பார்வைக்குக் காட்டு என்று கேட்டதை நினைத்துப் பார்ப்பீராக. அதற்கு அவன், நீர் இந்த விஷயத்தை நம்பவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நம்புகிறேன். ஆயினும் என் மனதிருப்தியை இன்னும் அதிகரிக்கவே இவ்வாறு கேட்கிறேன் என்றார். அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: நான்கு பறவைகளை எடுத்துக் கொள்வீராக. அவற்றை உம்பக்கம் சேர்த்து துண்டுதுண்டாக அறுப்பீராக. பின்னர் உம்மைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொரு மலையிலும் அவற்றில் ஒரு பகுதியை வைப்பீராக. பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக, அவை உயிர்பெற்று உம்மிடம் விரைந்து வரும். இப்ராஹீமே! அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன் என்பதையும் தான் வழங்கும் கட்டளைகளில் ஞானம்மிக்கவன் என்பதையும் அறிந்துகொள்வீராக.
2:261Page 44
مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ٢٦١
The example of those who spend their wealth in the way of Allāh is like a seed [of grain] which grows seven spikes; in each spike is a hundred grains. And Allāh multiplies [His reward] for whom He wills. And Allāh is all-Encompassing and Knowing.
தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் நம்பிக்கையாளர்களின் நன்மைக்கு உதாரணம், ஒரு விதையைப் போன்றதாகும். விவசாயி அதனை நல்ல பூமியில் விதைக்கிறான். அது ஏழு கதிர்களை விளைவிக்கிறது. ஒவ்வொரு கதிரும் நூறு விதைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு நன்மைகளை கணக்கின்றி, பன்மடங்காக வழங்குகிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்தவன்.
2:262Page 44
ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى لَّهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٢٦٢
Those who spend their wealth in the way of Allāh and then do not follow up what they have spent with reminders [of it] or [other] injury will have their reward with their Lord, and there will be no fear concerning them, nor will they grieve.
இறைவழிபாட்டிலும் அவன் விரும்பும் காரியங்களிலும் தமது சொத்துக்களை, செலவுசெய்து, பின்னர் அதன் நன்மையை இழக்கச்செய்யும் வகையில் மக்களிடம் சொல்லிக்காட்டாதவர்களுக்கும் செயற்படாதவர்களுக்கும் அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலம் குறித்து அச்சப்படவும் மாட்டார்கள்; கடந்துபோனவற்றை நினைத்து கவலைகொள்ளவும் மாட்டார்கள்.
2:263Page 44
۞ قَوۡلٞ مَّعۡرُوفٞ وَمَغۡفِرَةٌ خَيۡرٞ مِّن صَدَقَةٖ يَتۡبَعُهَآ أَذٗىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٞ ٢٦٣
Kind speech and forgiveness are better than charity followed by injury. And Allāh is Free of need and Forbearing.
நம்பிக்கையாளனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கண்ணியமான வார்த்தையும் உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களை நீங்கள் மன்னித்தலும்; சொல்லிக்காட்டி தொல்லையளிக்கும் தர்மத்தை விடச் சிறந்ததாகும். அல்லாஹ் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன்; சகிப்புத்தன்மைமிக்கவன். உடனுக்குடன் அவன் அவர்களைத் தண்டிக்க மாட்டான்.
2:264Page 44
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِي يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَيۡهِ تُرَابٞ فَأَصَابَهُۥ وَابِلٞ فَتَرَكَهُۥ صَلۡدٗاۖ لَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّمَّا كَسَبُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ ٢٦٤
O you who have believed, do not invalidate your charities with reminders [of it] or injury as does one who spends his wealth [only] to be seen by the people and does not believe in Allāh and the Last Day. His example is like that of a [large] smooth stone upon which is dust and is hit by a downpour that leaves it bare. They are unable [to keep] anything of what they have earned. And Allāh does not guide the disbelieving people.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் செய்த தர்மங்களின் நன்மைகளை தர்மம் பெற்றவரிடம் சொல்லிக்காட்டியும், அவருக்கு தொல்லைகொடுத்தும் வீணாக்கிவிடாதீர்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக தன் செல்வங்களைச் செலவு செய்பவனைப்போன்றது. அவன் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளனாவான். அதற்கு உதாரணம் ஒரு வழுக்குப்பாறையில் இருக்கும் மண்ணைப்போன்றதாகும். அதன்மீது பெருமழை பெய்து பாறையில் இருந்த மண்ணை முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டது. இவ்வாறுதான் மக்களிடம் காட்டுவதற்காக செலவுசெய்பவர்களது நன்மைகளும் அடிபட்டுச்சென்றுவிடும். அல்லாஹ்விடம் எதனையும் பெறமாட்டார்கள். அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களுக்கு தான் விரும்பும் விஷயங்களின் பக்கமும் அவர்களுக்கு பயனுள்ளவற்றிற்கும் வழிகாட்ட மாட்டான்.
2:265Page 45
وَمَثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ وَتَثۡبِيتٗا مِّنۡ أَنفُسِهِمۡ كَمَثَلِ جَنَّةِۭ بِرَبۡوَةٍ أَصَابَهَا وَابِلٞ فَـَٔاتَتۡ أُكُلَهَا ضِعۡفَيۡنِ فَإِن لَّمۡ يُصِبۡهَا وَابِلٞ فَطَلّٞۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ٢٦٥
And the example of those who spend their wealth seeking means to the approval of Allāh and assuring [reward for] themselves is like a garden on high ground which is hit by a downpour - so it yields its fruits in double. And [even] if it is not hit by a downpour, then a drizzle [is sufficient]. And Allāh, of what you do, is Seeing.
அல்லாஹ்வின் திருப்தியை நாடியும் அவனுடைய வாக்குறுதியின் மீது திருப்தியடைந்தவர்களாகவும் வெறுப்பின்றி தங்கள் செல்வங்களை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் உயரமான வளமுள்ள இடத்தில் இருக்கும் தோட்டத்தைப் போன்றதாகும். அது நல்ல மழையைப் பெற்றதால் பலமடங்கு விளைச்சலைத் தந்தது. அது வளமான நிலம் என்பதால் நல்ல மழையைப் பெறாவிட்டாலும் அங்கு பெய்யக்கூடிய சிறுதூறலே அதற்குப் போதுமானதாகும். இவ்வாறே அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் செலவு செய்பவர்களின் தர்மங்களை அவன் ஏற்றுக்கொள்கிறான். அது குறைவாக இருந்தாலும் அதற்கு பன்மடங்கு கூலி வழங்குகிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உளத்தூய்மையுடையவர்கள் முகஸ்துதியுடையோர் ஆகிய எவரது நிலமையும் அவனைவிட்டு மறைவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.
2:266Page 45
أَيَوَدُّ أَحَدُكُمۡ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٞ مِّن نَّخِيلٖ وَأَعۡنَابٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلۡكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٞ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعۡصَارٞ فِيهِ نَارٞ فَٱحۡتَرَقَتۡۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَتَفَكَّرُونَ ٢٦٦
Would one of you like to have a garden of palm trees and grapevines underneath which rivers flow in which he has from every fruit? But he is afflicted with old age and has weak [i.e., immature] offspring, and it is hit by a whirlwind containing fire and is burned. Thus does Allāh make clear to you [His] verses that you might give thought.
நீங்கள் பின்வரும் விஷயத்தை விரும்புவீர்களா?: உங்களுக்குப் பேரீச்சைகளும் திராட்சைகளும் அடங்கிய ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் நடுவில் சுவையான நீர் ஓடுகிறது. அதில் எல்லா வகையான நல்ல கனிகளும் உங்களுக்குக் கிடைக்கின்றன. உங்களுக்கு வயதாகிவிடுகிறது. நீங்கள் வேலைசெய்ய முடியாத கிழவராகி விடுகிறீர்கள். இந்நிலையில் உங்களுக்கு வேலைசெய்ய முடியாத பலவீனமான சிறுகுழந்தைகளும் இருக்கின்றனர். உங்களின் முதுமை, குழந்தைகளின் பலவீனம் ஆகிய காரணங்களினால் அதன்பால் அதிக தேவையுடையவர்களாக நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் நெருப்பை உள்ளடக்கிய கடுமையான காற்று அந்தத் தோட்டத்தைத் தாக்கி அனைத்தையும் அழித்துவிடுகிறது. மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக தன் செல்வத்தை செலவுசெய்பவனின் நிலையும் இவ்வாறுதான் அமையும். நன்மையின் பக்கம் மிகவும் தேவையுள்ள மறுமைநாளில் அவன் அல்லாஹ்வை சந்திக்கும்போது எந்த நன்மையையும் பெறமாட்டான். இவ்வாறு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடியவற்றை நீங்கள் சிந்திக்கும்பொருட்டு தெளிவுபடுத்துகிறான்.
2:267Page 45
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ وَلَا تَيَمَّمُواْ ٱلۡخَبِيثَ مِنۡهُ تُنفِقُونَ وَلَسۡتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغۡمِضُواْ فِيهِۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٌ ٢٦٧
O you who have believed, spend from the good things which you have earned and from that which We have produced for you from the earth. And do not aim toward the defective therefrom, spending [from that] while you would not take it [yourself] except with closed eyes. And know that Allāh is Free of need and Praiseworthy.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் சம்பாதித்த தூய்மையான, ஹலாலான செல்வங்களிலிருந்தும், நாம் பூமியின் தாவரங்களிலிருந்து உங்களுக்காக வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் செலவு செய்யுங்கள். மட்டமான பொருள்களை செலவுசெய்ய எண்ணாதீர்கள். உங்களுக்கு அத்தகைய பொருள்கள் வழங்கப்பட்டால் முகம்சுளித்தவர்களாகத்தானே அவற்றை ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு விரும்பாததை எவ்வாறு நீங்கள் அல்லாஹ்வுக்கு விரும்புகிறீர்கள்? அறிந்துகொள்ளுங்கள், உங்களின் செலவீனங்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்; அவன் தன் உள்ளமையிலும் செயல்களிலும் புகழுக்குரியவன்.
2:268Page 45
ٱلشَّيۡطَٰنُ يَعِدُكُمُ ٱلۡفَقۡرَ وَيَأۡمُرُكُم بِٱلۡفَحۡشَآءِۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ٢٦٨
Satan threatens you with poverty and orders you to immorality, while Allāh promises you forgiveness from Him and bounty. And Allāh is all-Encompassing and Knowing.
ஷைத்தான் வறுமையைக்கொண்டு உங்களை அச்சுறுத்துகிறான்; கஞ்சத்தனம் செய்ய உங்களைத் தூண்டுகிறான்; பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட உங்களை அழைக்கிறான். உங்கள் பாவங்களை மன்னிப்பேன் என்றும் தாராளமாக அளிப்பேன் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; தன் அடியார்களின் நிலைமைகளை நன்கறிந்தவன்.
2:269Page 45
يُؤۡتِي ٱلۡحِكۡمَةَ مَن يَشَآءُۚ وَمَن يُؤۡتَ ٱلۡحِكۡمَةَ فَقَدۡ أُوتِيَ خَيۡرٗا كَثِيرٗاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ٢٦٩
He gives wisdom1 to whom He wills, and whoever has been given wisdom has certainly been given much good. And none will remember except those of understanding.
அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு சீரான சொல்லையும் சரியான செயலையும் வழங்குகிறான். யாருக்கு இது வழங்கப்பட்டதோ அவர் பெரும் நன்மைகளைப் பெற்றவராவார். அல்லாஹ்வின் ஒளியின் மூலம் பயன்பெற்று அவனது நேர்வழியையும் பெற்ற முழுமையான சிந்தனையுடையோரே அவனது வசனங்களைக் கொண்டு அறிவுரை பெற்றுக்கொள்வர்.
2:270Page 46
وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٍ ٢٧٠
And whatever you spend of expenditures or make of vows - indeed, Allāh knows of it. And for the wrongdoers there are no helpers.
அல்லாஹ்வின் திருப்தியை நாடி குறைவாகவோ நிறைவாகவோ நீங்கள் செலவுசெய்த செலவீனங்கள் அல்லது உங்கள் மீது கடமையில்லாத ஒரு வணக்கத்தை நீங்களாகவே உங்கள் மீது விதித்து நேர்ச்சை செய்தவைகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் வீணாகிவிடாது. அவன் உங்களுக்கு மிகச் சிறந்த கூலியை வழங்கிடுவான். தம்மீது கடமையானவற்றை வழங்காத அநியாயக்காரர்களுக்கும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களுக்கும் மறுமைநாளில் வேதனையிலிருந்து காக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
2:271Page 46
إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ٢٧١
If you disclose your charitable expenditures, they are good; but if you conceal them and give them to the poor, it is better for you, and He will remove from you some of your misdeeds [thereby]. And Allāh, of what you do, is [fully] Aware.
நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படுத்தினால் அதுவும் நல்லதுதான். நீங்கள் அவற்றை மறைமுகமாக ஏழைகளுக்கு வழங்கினால் அது வெளிப்படையாகச் செய்வதைக் காட்டிலும் சிறந்ததாகும். அதுதான் உளத்தூய்மைக்கு மிகவும் நெருக்கமானது. உளத்தூய்மையுடன் செய்யப்படும் தர்மங்கள் பாவங்களுக்குத் திரையாகவும் மன்னிப்பாகவும் அமைந்துவிடுகின்றன. அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
2:272Page 46
۞ لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ ٢٧٢
Not upon you, [O Muḥammad], is [responsibility for] their guidance, but Allāh guides whom He wills. And whatever good you [believers] spend is for yourselves, and you do not spend except seeking the face [i.e., approval] of Allāh. And whatever you spend of good1 - it will be fully repaid to you, and you will not be wronged.
தூதரே! அவர்களுக்கு நேர்வழிகாட்டி, அதற்கு அவர்களைப் பணிய வைப்பது உம்முடைய கடமையல்ல. சத்தியத்தை எடுத்துரைப்பதே உம்மீதுள்ள கடமையாகும். பாக்கியம் அளித்து நேர்வழிகாட்டுவது அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். நீங்கள் செய்த தர்மங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான் பயனளிக்கும். அல்லாஹ் அதனை விட்டும் தேவையற்றவன். நீங்கள் செய்யும் செலவுகள் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்கட்டும். அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் அவனது திருப்திக்காகவே செலவுசெய்வார்கள். சிறியதோ பெரியதோ நீங்கள் செய்த தர்மத்திற்கான கூலியை குறைவின்றி நிறைவாகப் பெறுவீர்கள். அல்லாஹ் எவர்மீதும் அநீதி இழைத்துவிட மாட்டான்.
2:273Page 46
لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡـَٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ٢٧٣
[Charity is] for the poor who have been restricted for the cause of Allāh, unable to move about in the land. An ignorant [person] would think them self-sufficient because of their restraint, but you will know them by their [characteristic] sign. They do not ask people persistently [or at all]. And whatever you spend of good - indeed, Allāh is Knowing of it.
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (போர்) செய்வதனால் வாழ்வாதாரம் தேடுவதற்கு பயணம் மேற்கொள்ளமுடியாத ஏழைகளுக்குச் செலவுசெய்யுங்கள். அவர்கள் மக்களிடம் கையேந்தாமல் தன்மானத்தோடு இருப்பதால் அறியாதவன் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணிவிடுவான். அவர்களது உடலிலும் உடையிலும் தென்படும் வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அவர்களைக் காண்பவர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மற்ற ஏழைகளைப்போல மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். செல்வம் மற்றும் அது அல்லாத எதை நீங்கள் செலவுசெய்தாலும் அல்லாஹ் அதனை நன்கறிந்தவன். அதற்காக அவன் உங்களுக்குப் பெரும் கூலியை வழங்கிடுவான்.
2:274Page 46
ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٢٧٤
Those who spend their wealth [in Allāh's way] by night and by day, secretly and publicly - they will have their reward with their Lord. And no fear will there be concerning them, nor will they grieve.
இரவிலும் பகலிலும், வெளிப்படையாகவும் மறைவாகவும் வெளிப்பகட்டிற்காக அன்றி அல்லாஹ்வின் திருப்திக்காக செலவு செய்பவர்களுக்கு மறுமைநாளில் அவர்களின் இறைவனிடம் நன்மை இருக்கின்றது. எதிர்காலத்தில் நிகழக்கூடியதை எண்ணி அவர்கள் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளும் கிருபையும் ஆகும்.
2:275Page 47
ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ فَمَن جَآءَهُۥ مَوۡعِظَةٞ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمۡرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنۡ عَادَ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٢٧٥
Those who consume interest1 cannot stand [on the Day of Resurrection] except as one stands who is being beaten by Satan into insanity. That is because they say, "Trade is [just] like interest." But Allāh has permitted trade and has forbidden interest. So whoever has received an admonition from his Lord and desists may have what is past, and his affair rests with Allāh. But whoever returns [to dealing in interest or usury] - those are the companions of the Fire; they will abide eternally therein.
வட்டி வியாபாரத்தில் ஈடுபடுவோர், அதனை வாங்கியோர் மறுமைநாளில் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் போல் தங்கள் மண்ணறைகளிலிருந்து எழுவார்கள். வலிப்பு நோய் உள்ளவர் விழுந்து எழுவதற்குத் தடுமாறுவது போல் தடுமாறியவராக தனது மண்ணறையிலிருந்து எழுவார். இதற்குக் காரணம், அவர்கள் வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதினார்கள்; அல்லாஹ் அனுமதித்த வியாபாரத்தின் இலாபத்திற்கும், அவன் தடுத்த வட்டிக்கும் இடையே அவர்கள் வேறுபாடு காட்டவில்லை.வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான். இரண்டும் செல்வத்தைப் பெருக்குவதுதானே என்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் இந்த ஒப்பீட்டை அல்லாஹ் மறுத்துரைத்து அவர்களை பொய்ப்பிக்கின்றான். வியாபாரத்தில் அடங்கியுள்ள பொதுவான பிரத்யேக நன்மையின் காரணமாக அவன் அதனை அனுமதிக்கப்பட்டதாகவும், வட்டியில் அடங்கியுள்ள - மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல், அநியாயம் போன்ற - தீங்குகளின் காரணமாக அதனைத் தடைசெய்யப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். வட்டி தடை என்பதாக தம் இறைவனிடமிருந்து அறிவுரைவந்த பின் அதனை விட்டும் தவிர்ந்து, அதிலிருந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரியவர் மீது முன்னர் வாங்கிய வட்டிக்காக எந்தக் குற்றமும் இல்லை. அது அவருக்கு ஆகுமானதே. எதிர்காலத்தில் அவர் செய்யும் செயல்களின் முடிவு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அல்லாஹ்விடமிருந்து தடைவந்து ஆதாரம் நிரூபனமாகிவிட்ட பிறகும் யாராவது மீண்டும் வட்டி வாங்கினால் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க தகுதியானவராகிவிட்டார். (இங்கு நிரந்தர நரகம் என்பது வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதி அதனை உண்பவர்களுக்குரியதாகும் அல்லது நிரந்தரம் என்பது நீண்ட காலத்தைக் குறிப்பதாகும். ஏனெனில் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் மட்டுமே நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.)
2:276Page 47
يَمۡحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰاْ وَيُرۡبِي ٱلصَّدَقَٰتِۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ٢٧٦
Allāh destroys interest and gives increase for charities. And Allāh does not like every sinning disbeliever.
வட்டியின் மூலம் உருவான செல்வத்தை அல்லாஹ் அழிக்கிறான். அழித்தல் என்பது வெளிரங்கமான பொருட்சேதத்தைக் கொண்டோ மறைமுகமான பரக்கத்தை நீக்குவது கொண்டோ ஏற்படலாம். தர்மங்களுக்கு பலமடங்கு நன்மைகளை அளிக்கிறான். அவற்றை பத்துமடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை அவன் அதிகரிக்கச் செய்கிறான். தர்மம் சய்வோரின் சொத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய, அவன் தடைசெய்ததை அனுமதிக்கப்பட்டதாகக் கருதக்கூடிய, பாவங்களில் உழலக்கூடிய பிடிவாதக்காரனை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
2:277Page 47
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٢٧٧
Indeed, those who believe and do righteous deeds and establish prayer and give zakāh will have their reward with their Lord, and there will be no fear concerning them, nor will they grieve.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி, நற்செயல்கள் புரிந்து, அல்லாஹ் விதித்தபடி தொழுகையை முழுமையாக நிறைவேற்றி, தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு அளிப்பவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை எண்ணி அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள்.
2:278Page 47
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ ٱلرِّبَوٰٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٢٧٨
O you who have believed, fear Allāh and give up what remains [due to you] of interest, if you should be believers.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் வட்டியைத் தடைசெய்திருப்பதையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மக்களிடம் எஞ்சியுள்ள உங்களது வட்டிப்பணத்தை எடுக்காது விட்டுவிடுங்கள்.
2:279Page 47
فَإِن لَّمۡ تَفۡعَلُواْ فَأۡذَنُواْ بِحَرۡبٖ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَإِن تُبۡتُمۡ فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَٰلِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ ٢٧٩
And if you do not, then be informed of a war [against you] from Allāh and His Messenger. But if you repent, you may have your principal - [thus] you do no wrong, nor are you wronged.
உங்களுக்குக் கட்டளையிட்டபடி நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போரை எதிர்பாருங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி, வட்டியை விட்டுவிட்டால் நீங்கள் அளித்த கடனின் அசல்மூலதனம் உங்களுக்குத்தான். உங்கள் அசல்மூலதனத்திற்கு அதிகமாகப் பெற்று எவர்மீதும் அநீதி இழைத்துவிடாதீர். வழங்கிய கடனைவிட குறைத்து உங்களுக்கு அநீதி இழைக்கப்படவும் மாட்டாது.
2:280Page 47
وَإِن كَانَ ذُو عُسۡرَةٖ فَنَظِرَةٌ إِلَىٰ مَيۡسَرَةٖۚ وَأَن تَصَدَّقُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٢٨٠
And if someone is in hardship, then [let there be] postponement until [a time of] ease. But if you give [from your right as] charity, then it is better for you, if you only knew.
உங்களிடம் கடன் வாங்கியவர் கடனை செலுத்த முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருந்தால் வசதி ஏற்படும் வரை அவருக்கு அவகாசம் அளியுங்கள். அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் சிறப்பினை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அவருடைய கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து அதை அவருக்குத் தர்மமாக ஆக்கிவிடுவதே உங்களுக்குச் சிறந்ததாகும்.
2:281Page 47
وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ٢٨١
And fear a Day when you will be returned to Allāh. Then every soul will be compensated for what it earned, and they will not be wronged [i.e., treated unjustly].
நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் திரும்பும் நாளின் வேதனையை அஞ்சுங்கள். அப்போது அவனுக்கு முன்னால் நிற்பீர்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்த நன்மை தீமை என்பவற்றுக்கான கூலி வழங்கப்படும். உங்களின் நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமையை விட அதிகமாக தண்டிக்கப்பட்டோ உங்கள்மீது அநீதி இழைக்கப்படாது.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences