Al-MukhtasarAl‑Baqarah · 2:34–68

Al-Mukhtasar · Tafsir · in Tamil

Al-Baqarah 2:34–68

2:34Page 6

وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ٣٤

And [mention] when We said to the angels, "Prostrate before Adam"; so they prostrated, except for Iblees.1 He refused and was arrogant and became of the disbelievers.

ஆதமுக்கும் கண்ணியமளிக்கும் விதமாக சிரம்பணியுங்கள் என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டதை தெளிவுபடுத்துகின்றான். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை விரைந்து நிறைவேற்றினார்கள். ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸைத் தவிர. கர்வத்தினால் ஆதமுக்கு சிரம்பணிய வேண்டுமென்ற அல்லாஹ்வின் கட்டளையை ஆட்சேபித்து அவன் சிரம்பணிய மறுத்தான். அதனால் அவன் அல்லாஹ்வை நிராகரித்தவர்களில் ஒருவனாகிவிட்டான்.

2:35Page 6

وَقُلۡنَا يَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ وَكُلَا مِنۡهَا رَغَدًا حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ ٣٥

And We said, "O Adam, dwell, you and your wife, in Paradise and eat therefrom in [ease and] abundance from wherever you will. But do not approach this tree, lest you be among the wrongdoers."

நாம் கூறினோம்: ஆதமே, நீரும் உம் மனைவி ஹவ்வாவும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கிருந்து நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் நான் தடுத்த இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். என்னுடைய கட்டளையை மீறி நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்.

2:36Page 6

فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ٣٦

But Satan caused them to slip out of it and removed them from that [condition] in which they had been. And We said, "Go down, [all of you], as enemies to one another, and you will have upon the earth a place of settlement and provision for a time."

ஷைத்தான் அவ்விருவருக்கும் தொடர்ந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, தடைசெய்யப்பட்ட அந்த விஷயத்தை அலங்கரித்துக் காட்டினான். எந்த அளவுக்கெனில், அல்லாஹ் அவர்களுக்குத் தடைசெய்த மரத்திலிருந்து உண்டு பாவத்தில் வீழ்ந்துவிட்டார்கள். அதற்குத் தண்டனையாக அவ்விருவரும் இருந்த சொர்க்கத்திலிருந்து அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அப்போது அவர்களிடமும் ஷைத்தானிடமும் பின்வருமாறு கூறினான்: பூமியில் இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து மறுமை நிகழ முன் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கையும் உண்டு. அதிலுள்ள வளங்களை அனுபவித்துக்கொள்ளவும் முடியும்.

2:37Page 6

فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٖ فَتَابَ عَلَيۡهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ٣٧

Then Adam received from his Lord [some] words,1 and He accepted his repentance. Indeed, it is He who is the Accepting of Repentance,2 the Merciful.

உள்ளுதிப்பின் மூலம் அல்லாஹ் ஆதமுக்குக் கற்றுத்தந்த பிரார்த்தனையைக் கொண்டு ஆதம் அவனிடம் பிரார்த்தனை செய்தார். அதுதான் பின்வரும் பிரார்த்தனையாகும். எங்கள் இறைவா, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, எங்கள்மீது கருணை காட்டவில்லையெனில் நாங்கள் இழப்படைந்தவர்களாகி விடுவோம். (7:23) அல்லாஹ் அவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்தான். அல்லாஹ், தன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவனாக, அவர்களின் விஷயத்தில் கருணைமிக்கவனாக இருக்கின்றான்.

2:38Page 7

قُلۡنَا ٱهۡبِطُواْ مِنۡهَا جَمِيعٗاۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٣٨

We said, "Go down from it, all of you. And when guidance comes to you from Me, whoever follows My guidance - there will be no fear concerning them, nor will they grieve.

நாம் அவர்களிடம் கூறினோம்: நீங்கள் அனைவரும் சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். என் தூதர்களின் மூலமாக உங்களிடம் வழிகாட்டுதல் வரும்போது, யார் என் தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டு, அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்கள் மறுமையில் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்த விஷயங்களை எண்ணி கவலைப்படவும் மாட்டார்கள்.

2:39Page 7

وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٣٩

And those who disbelieve and deny Our signs - those will be companions of the Fire; they will abide therein eternally."

நிராகரித்து நம்முடைய வசனங்களை பொய் எனக்கூறி மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் வெளியேற முடியாது.

2:40Page 7

يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَوۡفُواْ بِعَهۡدِيٓ أُوفِ بِعَهۡدِكُمۡ وَإِيَّٰيَ فَٱرۡهَبُونِ ٤٠

O Children of Israel, remember My favor which I have bestowed upon you and fulfill My covenant [upon you] that I will fulfill your covenant [from Me], and be afraid of [only] Me.

அல்லாஹ்வின் தூதர் யஅகூபின் மக்களே! அல்லாஹ் தொடர்ந்து உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவற்றிற்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை பேணிக்கொள்ளுங்கள். அது என்மீதும் என்னுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு என்னுடைய மார்க்கத்தின்படி செயல்படுவதாகும். நீங்கள் உங்களின் வாக்குறுதியை நிறைவேற்றினால் இவ்வுலகில் நிம்மதியான வாழ்வையும் மறுவுலகில் சிறந்த கூலியையும் தருவேன் என்று நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். எனக்கு மட்டுமே அஞ்சுங்கள். என்னிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து விடாதீர்கள்.

2:41Page 7

وَءَامِنُواْ بِمَآ أَنزَلۡتُ مُصَدِّقٗا لِّمَا مَعَكُمۡ وَلَا تَكُونُوٓاْ أَوَّلَ كَافِرِۭ بِهِۦۖ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗا وَإِيَّٰيَ فَٱتَّقُونِ ٤١

And believe in what I have sent down confirming that which is [already] with you, and be not the first to disbelieve in it. And do not exchange My signs for a small price, and fear [only] Me.

முஹம்மது மீது நான் இறக்கிய குர்ஆனின்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அது தவ்ராத் திரிக்கப்படுவதற்கு முன்னர் அதிலிருந்த அல்லாஹ்வின் ஏகத்துவம் மற்றும் முஹம்மதின் தூதுத்துவம் குறித்து கூறப்பட்ட விஷயங்களை உண்மைப்படுத்துகிறது. அதனை நிராகரிக்கும் முதல் கூட்டமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். நான் இறக்கிய வசனங்களை பதவி, பட்டம் போன்ற அற்ப ஆதாயத்திற்காக விற்றுவிடாதீர்கள். என் கோபத்தையும், தண்டனையையும் அஞ்சிக் கொள்ளுங்கள்.

2:42Page 7

وَلَا تَلۡبِسُواْ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُواْ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ٤٢

And do not mix the truth with falsehood or conceal the truth while you know [it].

என் தூதர்களுக்கு நான் இறக்கிய சத்தியத்தை உங்களின் புனைந்துகூறும் பொய்களோடு கலந்துவிடாதீர்கள். உங்களின் வேதங்களில் முஹம்மதின் பண்புகளைக் குறித்து வந்துள்ள விஷயங்களை உறுதியாக அறிந்துகொண்டே அவற்றை மறைத்துவிடாதீர்கள்.

2:43Page 7

وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ ٤٣

And establish prayer and give zakāh1 and bow with those who bow [in worship and obedience].

தொழுகையை அதன் ருகுன்களோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஜகாத்தை அளியுங்கள். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த முஹம்மதுடைய சமூகத்தினரோடு சேர்ந்து நீங்களும் அவனுக்குக் கீழ்ப்படியுங்கள்.

2:44Page 7

۞ أَتَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبِرِّ وَتَنسَوۡنَ أَنفُسَكُمۡ وَأَنتُمۡ تَتۡلُونَ ٱلۡكِتَٰبَۚ أَفَلَا تَعۡقِلُونَ ٤٤

Do you order righteousness of the people and forget1 yourselves while you recite the Scripture? Then will you not reason?

உங்களை நீங்கள் மறந்துவிட்டு மற்றவர்களை ஈமான் கொள்ளும்படியும், நற்செயல் புரியும்படியும் ஏவுவது எவ்வளவு மோசமானது! நீங்கள் தவ்ராத்தை படித்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு அதில்தானே கூறப்பட்டுள்ளது!? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா என்ன?

2:45Page 7

وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ ٤٥

And seek help through patience and prayer; and indeed, it is difficult except for the humbly submissive [to Allāh]

மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கி வைத்து அவனுடன் இணைக்கும் தொழுகையைக் கொண்டும் உதவிதேடுங்கள். அவன் உங்களுக்கு உதவிசெய்வான்; உங்களைப் பாதுகாப்பான்; உங்களைப் பீடித்திருக்கும் துன்பத்தையும் போக்குவான். நிச்சயமாக தொழுகை, தங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு மிகவும் பாரமானது.

2:46Page 7

ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ رَبِّهِمۡ وَأَنَّهُمۡ إِلَيۡهِ رَٰجِعُونَ ٤٦

Who are certain that they will meet their Lord and that they will return to Him.

ஏனெனில் அவர்கள்தாம், மறுமைநாளில் தங்கள் இறைவனை சந்தித்தே தீர வேண்டும், தங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக அறிந்தவர்கள்.

2:47Page 7

يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ٤٧

O Children of Israel, remember My favor that I have bestowed upon you and that I preferred you over the worlds [i.e., peoples].

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்கள்மீது பொழிந்த மார்க்க மற்றும் உலகியல்ரீதியான அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் மற்ற எல்லா மக்களைவிடவும் தூதுத்துவம் மற்றும் அரசாட்சியைக் கொண்டு உங்களை சிறப்பித்ததை நினைத்துப் பாருங்கள்.

2:48Page 7

وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا شَفَٰعَةٞ وَلَا يُؤۡخَذُ مِنۡهَا عَدۡلٞ وَلَا هُمۡ يُنصَرُونَ ٤٨

And fear a Day when no soul will suffice for another soul1 at all, nor will intercession be accepted from it, nor will compensation be taken from it, nor will they be aided.

நான் கட்டளையிட்டவற்றை செயல்படுத்தி, தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாளில் எவரும் மற்றவருக்கு எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது. எவரிடமிருந்து தீங்கை அகற்றுதல் அல்லது நன்மையைக் பெற்றுக்கொள்வதற்கான எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஆயினும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தவிர. ஒருவர் பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொண்டு வந்தாலும் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது. அந்நாளில் அவர்களுக்கு எந்தவொரு உதவியாளரும் கிடையாது. பரிந்துரையாளரோ ஈட்டுத்தொகையோ உதவியாளரோ பயனளிக்காத போது எங்கே ஓடமுடியும்?

2:49Page 8

وَإِذۡ نَجَّيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ ٤٩

And [recall] when We saved you [i.e., your forefathers] from the people of Pharaoh, who afflicted you with the worst torment, slaughtering your [newborn] sons and keeping your females alive. And in that was a great trial from your Lord.

இஸ்ராயீலின் மக்களே! ஃபிர்அவ்னைப் பின்பற்றியவர்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களை பல்வேறு வேதனைகளில் ஆழ்த்தியிருந்தார்கள். உங்கள் ஆண்மக்கள் எவரையும் விட்டுவைக்கமால் கொன்று கொண்டிருந்தார்கள். உங்களை மென்மேலும் இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக தமக்குச் சேவை புரிய உங்களின் பெண்மக்களை உயிருடன் விட்டுவந்தார்கள். ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனைப் பின்பற்றியவர்களிடமிருந்தும் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியமை, நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா என்பதற்கான உங்கள் இறைவனின் பெரும் பரீட்சையாகும்.

2:50Page 8

وَإِذۡ فَرَقۡنَا بِكُمُ ٱلۡبَحۡرَ فَأَنجَيۡنَٰكُمۡ وَأَغۡرَقۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ وَأَنتُمۡ تَنظُرُونَ ٥٠

And [recall] when We parted the sea for you and saved you and drowned the people of Pharaoh while you were looking on.

நாம் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்களுக்காக கடலைப் பிளந்து அதில் நீங்கள் செல்லும் காய்ந்த பாதையை உருவாக்கினோம். உங்களைக் காப்பாற்றி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களின் கண்முன்னால் ஃபிர்அவ்னையும் அவனைப் பின்பற்றியவர்களையும் மூழ்கடித்தோம்.

2:51Page 8

وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ ٥١

And [recall] when We made an appointment with Moses for forty nights. Then you took [for worship] the calf after him [i.e., his departure], while you were wrongdoers.

நாம் மூசாவுக்கு, ஒளி மற்றும் நேர்வழியை உள்ளடக்கிய தவ்ராத்தை அருளுவதற்காக நாற்பது இரவுகளை வாக்களித்ததையும் நினைத்துப் பாருங்கள். இருந்தும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளேயே நீங்கள் காளைக்கன்றைக் கடவுளாக்கிக் கொண்டீர்கள். இந்த செயலின் மூலம் நீங்கள் அக்கிரமக்காரர்களாக இருந்தீர்கள்.

2:52Page 8

ثُمَّ عَفَوۡنَا عَنكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٥٢

Then We forgave you after that so perhaps you would be grateful.

பிறகு நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதனால் நாம் உங்களை மன்னித்துவிட்டோம். நீங்கள் அல்லாஹ்வை நல்லமுறையில் வழிபட்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து நன்றிசெலுத்துவதற்காக நாம் உங்களைத் தண்டிக்கவில்லை.

2:53Page 8

وَإِذۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَٱلۡفُرۡقَانَ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ٥٣

And [recall] when We gave Moses the Scripture and criterion1 that perhaps you would be guided.

பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பாருங்கள், நீங்கள் நேர்வழியை அடையும் பொருட்டு நாம் மூசாவுக்கு தவ்ராத்தை வழங்கினோம். அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடியதாகவும், நேர்வழியையும் வழிகேட்டையும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது.

2:54Page 8

وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ٥٤

And [recall] when Moses said to his people, "O my people, indeed you have wronged yourselves by your taking of the calf [for worship]. So repent to your Creator and kill yourselves [i.e., the guilty among you]. That is best for [all of] you in the sight of your Creator." Then He accepted your repentance; indeed, He is the Accepting of Repentance, the Merciful.

பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பாருங்கள், காலைக் கன்று வணக்கதிலிருந்து பாவமன்னிப்புக் கோருவதற்கு அல்லாஹ் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினான், உங்களைப் பார்த்து மூஸா (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார் நீங்கள் காளைக்கன்றை வணங்கி உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொண்டதனால், உங்களில் சிலர் சிலரைக் கொன்று உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பக்கமே திரும்புங்கள். இவ்வாறு பாவமன்னிப்புக் கோருவது நிரந்தர நரகில் இட்டுச்செல்லும் நிராகரிப்பைத் தொடர்வதை விடச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் அவ்வாறு செய்தீர்கள். அவன் உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவன் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தன் அடியார்கள் விஷயத்தில் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.

2:55Page 8

وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ ٥٥

And [recall] when you said, "O Moses, we will never believe you until we see Allāh outright"; so the thunderbolt took you while you were looking on.

பின்வரும் சம்பவத்தையும் நினைத்துப் பாருங்கள், உங்களின் முன்னோர்கள் மூசாவிடம், நாங்கள் அல்லாஹ்வை கண்ணால் காணும்வரை நம்ப மாட்டோம் என்று துணிந்து கூறியபோது நெருப்பு உங்களைத் தாக்கியது. உங்களில் சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது உங்களைப் பொசுக்கிவிட்டது.

2:56Page 8

ثُمَّ بَعَثۡنَٰكُم مِّنۢ بَعۡدِ مَوۡتِكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٥٦

Then We revived you after your death that perhaps you would be grateful.

பிறகு அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, நீங்கள் இறந்த பின்னரும் நாம் உங்களுக்கு உயிர் கொடுத்தோம்.

2:57Page 8

وَظَلَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡغَمَامَ وَأَنزَلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ٥٧

And We shaded you with clouds and sent down to you manna and quails, [saying], "Eat from the good things with which We have provided you." And they wronged Us not - but they were [only] wronging themselves.

நாம் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, பூமியில் நீங்கள் தடுமாறித் திரிந்தபோது சூரிய வெப்பத்திலிருந்து உங்களைக்காக்க மேகத்தை உங்கள்மீது நிழலிடச் செய்தோம். உங்கள்மீது தேனைப்போன்று இனிப்பான பானமான "மன்னு" வையும் காடையை ஒத்த தூய்மையான இறைச்சியைக்கொண்ட "சல்வா" என்னும் பறவையையும் இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள் என்று நாம் உங்களிடம் கூறினோம். இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டதன் மூலம் அவர்கள் நமக்கு எந்தக் குறையையும் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக தமக்குக் கிடைக்கவிருந்த கூலியை இழந்து தம்மை தண்டனைக்குற்படுத்திக் கொண்டதன் மூலம் தமக்குத்தாமே அநியாயம் இழைத்துக்கொண்டனர்.

2:58Page 9

وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ ٥٨

And [recall] when We said, "Enter this city [i.e., Jerusalem] and eat from it wherever you will in [ease and] abundance, and enter the gate bowing humbly1 and say, 'Relieve us of our burdens [i.e., sins].' We will [then] forgive your sins for you, and We will increase the doers of good [in goodness and reward]."

பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப்பாருங்கள்: நாம் உங்களிடம் கூறினோம், பைத்துல் முகத்திஸில் நுழைந்துவிடுங்கள். அங்கு நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து தூய்மையான உணவுகளை தாராளமாக உண்ணுங்கள். அங்கு நுழையும்போது அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக, எங்கள் இறைவனே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக என்று கூறியவாறு நுழையுங்கள். நாம் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வோம். நன்மைகள் புரிந்தவர்களுக்கு மேலதிகமாக நன்மைகளையும் வழங்குவோம்.

2:59Page 9

فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَنزَلۡنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ٥٩

But those who wronged changed [those words] to a statement other than that which had been said to them, so We sent down upon those who wronged a punishment [i.e., plague] from the sky because they were defiantly disobeying.

அவர்களில் அக்கிரமக்காரர்கள் செய்ய வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் மாற்றிவிட்டார்கள். தங்களின் பிட்டத்தால் தவழ்ந்தவாறு, முடியில் ஒரு தானியம் என்று பரிகாசமாக திரித்துக்கூறியவாறு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் மார்க்கத்தின் வரம்பை மீறி கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டதால் அநியாயக்காரர்களான அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை அவன் இறக்கினான்.

2:60Page 9

۞ وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۖ كُلُواْ وَٱشۡرَبُواْ مِن رِّزۡقِ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ٦٠

And [recall] when Moses prayed for water for his people, so We said, "Strike with your staff the stone." And there gushed forth from it twelve springs, and every people [i.e., tribe] knew its watering place. "Eat and drink from the provision of Allāh, and do not commit abuse on the earth, spreading corruption."

நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். கடுமையான தாகத்தால் பாதிக்கப்பட்டீர்கள். மூசா தன் இறைவனிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தார். நாம் அவரது கைத்தடியால் ஒரு பாறையில் அடிக்கும்படி கட்டளையிட்டோம். அவர் அடித்தபோது உங்களுடைய குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி எழுந்தன. உங்களிடையே பிரச்சனை மூண்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு குலத்திற்கும் அவர்களுக்குரிய அருந்தும் பகுதியைத் தெளிவுபடுத்தினோம். உங்களிடம் கூறினோம், உங்களுடைய எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைத்த அல்லாஹ்வின் உணவுகளை உண்ணுங்கள், பருகுங்கள். பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரியாதீர்கள்.

2:61Page 9

وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نَّصۡبِرَ عَلَىٰ طَعَامٖ وَٰحِدٖ فَٱدۡعُ لَنَا رَبَّكَ يُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ مِنۢ بَقۡلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَاۖ قَالَ أَتَسۡتَبۡدِلُونَ ٱلَّذِي هُوَ أَدۡنَىٰ بِٱلَّذِي هُوَ خَيۡرٌۚ ٱهۡبِطُواْ مِصۡرٗا فَإِنَّ لَكُم مَّا سَأَلۡتُمۡۗ وَضُرِبَتۡ عَلَيۡهِمُ ٱلذِّلَّةُ وَٱلۡمَسۡكَنَةُ وَبَآءُو بِغَضَبٖ مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانُواْ يَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقۡتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ ٦١

And [recall] when you said, "O Moses, we can never endure one [kind of] food. So call upon your Lord to bring forth for us from the earth its green herbs and its cucumbers and its garlic and its lentils and its onions." [Moses] said, "Would you exchange what is better for what is less? Go into [any] settlement and indeed, you will have what you have asked." And they were covered with humiliation and poverty and returned with anger from Allāh [upon them]. That was because they [repeatedly] disbelieved in the signs of Allāh and killed the prophets without right. That was because they disobeyed and were [habitually] transgressing.

மேலும் உங்கள் இறைவனது அருட்கொடைக்கு நன்றிகெட்டமுறையில் நடந்துகொண்ட சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் உங்களுக்கு இறக்கிய மன்னு, சல்வா என்னும் உணவுகள் உங்களுக்கு சலித்துப்போய், மாறாத ஒரே வகையான உணவுகளை எங்களால் சகிக்க முடியாது என்று கூறினீர்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை வெளியாக்கித் தருமாறு மூஸாவிடம் வேண்டினீர்கள். அதற்கு மூஸா உங்களைக் கண்டித்தவாறு, எவ்வித முயற்சியுமின்றி உங்களுக்குக் கிடைக்கின்ற மன்னு, சல்வா என்னும் சிறந்த உணவுகளுக்குப் பதிலாக அற்பப் பொருளையா வேண்டுகிறீர்கள்? இந்த பூமியிலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு ஊருக்குச் செல்லுங்கள். அதன் வயல்களிலும், கடைவீதிகளிலும் நீங்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வீர்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தேர்ந்தேடுத்ததை புறக்கணித்துவிட்டு தங்களுடைய மன இச்சைகளை அவர்கள் பின்பற்றியதனால் இழிவும் வறுமையும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்து அவனுடைய சான்றுகளை நிராகரித்து அவனுடைய தூதர்களை அநியாயமாக கொலை செய்ததனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். இவையனைத்தும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்து அவன் விதித்த வரம்புகளை மீறியதனால் ஏற்பட்ட விளைவுகளேயாகும்.

2:62Page 10

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلنَّصَٰرَىٰ وَٱلصَّٰبِـِٔينَ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٦٢

Indeed, those who believed and those who were Jews or Christians or Sabeans [before Prophet Muḥammad (ﷺ)] - those [among them] who believed in Allāh and the Last Day and did righteousness - will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve1.

இந்த சமூகத்தில் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள், அது போன்று முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னுள்ள சமூகத்தில் நம்பிக்கை கொண்ட யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபீயீன்கள் (அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்ட ஒரு நபியின் சமூகம்) ஆகியோருக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. மறுமையில் அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உலகில் இழந்துவிட்ட விஷயங்களுக்காகவும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

2:63Page 10

وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ٦٣

And [recall] when We took your covenant, [O Children of Israel, to abide by the Torah] and We raised over you the mount, [saying], "Take what We have given you with determination and remember what is in it that perhaps you may become righteous."

அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று உறுதியான வாக்குறுதியை நாம் உங்களிடம் வாங்கியதை நினைவுகூருங்கள். இந்த வாக்குறுதியை நீங்கள் மீறாமல் இருப்பதற்காக, உங்களை எச்சரிக்கும் பொருட்டு உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் உங்களுக்கு இறக்கிய தவ்ராத்தை அலட்சியமின்றி, முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வேதனையை விட்டு தப்பித்துக்கொள்ளும் பொருட்டு அதனைப் பேணிக்கொள்ளுங்கள், அதிலுள்ளவற்றை சிந்தித்துப் பாருங்கள், அவற்றை செய்வதன் மூலமாக அல்லாஹ்வின் வேதனையை விட்டும் உங்களைக் காத்துக்கொள்ளலாம் என்று உங்களுக்கு கட்டளையிட்டோம்.

2:64Page 10

ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ ٦٤

Then you turned away after that. And if not for the favor of Allāh upon you and His mercy, you would have been among the losers.

உறுதியான வாக்குறுதி அளித்த பின்னரும் நீங்கள் புறக்கணித்து, அதற்கு மாறாகச் செயல்பட்டீர்கள். அல்லாஹ், உங்கள்மீது கருணைகாட்டி உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உங்களை மன்னித்து அருள்புரியவில்லையெனில் நீங்கள் புறக்கணித்து மாறுசெய்ததனால் நஷ்டமடைந்தவர்களாகி இருப்பீர்கள்.

2:65Page 10

وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ ٦٥

And you had already known about those who transgressed among you concerning the sabbath, and We said to them, "Be apes, despised."

உங்களின் முன்னோர்களைப்பற்றி நீங்கள் நன்கறிந்துள்ளீர்கள். அவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தும் வரம்புமீறினார்கள். தந்திரமாக சனிக்கிழமைக்கு முன்னரே வலையை விரித்து ஞாயிற்றுக்கிழமை வலையில் அகப்பட்ட மீன்களை எடுத்தார்கள். அல்லாஹ் அவர்களின் இந்தத் தந்திரத்திற்குத் தண்டனையாக அவர்களை இழிவுற்ற குரங்குகளாக உருமாற்றினான்.

2:66Page 10

فَجَعَلۡنَٰهَا نَكَٰلٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهَا وَمَا خَلۡفَهَا وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ٦٦

And We made it a deterrent punishment for those who were present and those who succeeded [them] and a lesson for those who fear Allāh.

இவர்களைப் போன்று செயற்பட்டு அது போன்ற தண்டனையைப் பெறாமலிருப்பதற்காக இந்த ஊரை அருகிலுள்ள ஊர்வாசிகளுக்கும் பின்னால் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாக ஆக்கினோம். அல்லாஹ்வின் தண்டனையையும் தனது வரம்புகளை மீறுவோரைப் பழி தீர்ப்பதையும் அஞ்சக்கூடியவர்களுக்கு நினைவூட்டலாகவும் நாம் இதனை ஆக்கினோம்.

2:67Page 10

وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تَذۡبَحُواْ بَقَرَةٗۖ قَالُوٓاْ أَتَتَّخِذُنَا هُزُوٗاۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ ٦٧

And [recall] when Moses said to his people, "Indeed, Allāh commands you to slaughter a cow." They said, "Do you take us in ridicule?" He said, "I seek refuge in Allāh from being among the ignorant."

மூசாவுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நடைபெற்ற உரையாடலை நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் ஒரு பசுவை அறுக்குமாறு உங்களுக்குக் கட்டளையிடுகிறான் என்று மூசா அவர்களிடம் கூறியபோது, அல்லாஹ்வின் கட்டளையை விரைந்து செயல்படுத்தாமல், எங்களை நீர் கேலி செய்கிறீரா என்று வீம்பாகக் கேட்டார்கள். அதற்கு மூசா, அல்லாஹ்வின் மீது பொய் கூறி மக்களைப் பரிகாசம் செய்பவனாக நான் ஆவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்றார்.

2:68Page 10

قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا فَارِضٞ وَلَا بِكۡرٌ عَوَانُۢ بَيۡنَ ذَٰلِكَۖ فَٱفۡعَلُواْ مَا تُؤۡمَرُونَ ٦٨

They said, "Call upon your Lord to make clear to us what it is." [Moses] said, "[Allāh] says, 'It is a cow which is neither old nor virgin, but median between that,' so do what you are commanded."

அல்லாஹ் அறுக்குமாறு கட்டளையிட்ட அந்தப் பசு எப்படிப்பட்டது? என்று கேட்டு உம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு மூசா,அது கிழடாகவோ, கன்றாகவோ அல்லாமல் நடுத்தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் இறைவனின் கட்டளையை விரைந்து செயல்படுத்துங்கள் என்று கூறினார்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском