Al-MukhtasarAl‑Anbya · 21:46–92

Al-Mukhtasar · Tafsir · in Tamil

Al-Anbya 21:46–92

21:46Page 326

وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ٤٦

And if [as much as] a whiff of the punishment of your Lord should touch them, they would surely say, "O woe to us! Indeed, we have been wrongdoers."

தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களை உம் இறைவனுடைய வேதனையின் ஒரு பகுதி தீண்டிவிட்டால், “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி, முஹம்மது நபி கொண்டுவந்ததை பொய்ப்பித்து அக்கிரமக்காரர்களாக இருந்தோமே” என்று அந்த நேரத்தில் கூறுவார்கள்.

21:47Page 326

وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ ٤٧

And We place the scales of justice for the Day of Resurrection, so no soul will be treated unjustly at all. And if there is [even] the weight of a mustard seed,1 We will bring it forth. And sufficient are We as accountant.

நாம் மறுமையில் மனிதர்களின் செயல்களை எடைபோடுவதற்காக நியாயமான தராசுகளை நிறுவுவோம். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ எவர் மீதும் அநீதி இழைக்கப்படாது. ஒருவரின் எடை மிகவும் குறைவானதாக கடுகளவு செயல் போன்று இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். எங்களது அடியார்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நாமே போதுமானவர்களாவோம்.

21:48Page 326

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ ٤٨

And We had already given Moses and Aaron the criterion and a light and a reminder1 for the righteous

மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் தவ்ராத்தை வழங்கினோம். அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் அதனை நம்பிக்கைகொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும் தங்கள் இறைவனை அஞ்சியவர்களுக்கு நினைவூட்டலாகவும் இருந்தது.

21:49Page 326

ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشۡفِقُونَ ٤٩

Who fear their Lord unseen,1 while they are of the Hour apprehensive.

காணாமலேயே தாம் நம்பிக்கை கொண்டுள்ள இறைவனின் வேதனையை அஞ்சியவர்கள் மறுமையைக்குறித்து அச்சத்தோடு உள்ளனர்.

21:50Page 326

وَهَٰذَا ذِكۡرٞ مُّبَارَكٌ أَنزَلۡنَٰهُۚ أَفَأَنتُمۡ لَهُۥ مُنكِرُونَ ٥٠

And this [Qur’ān] is a blessed message which We have sent down. Then are you with it unacquainted?1

முஹம்மது மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அறிவுரை பெற விரும்பக்கூடியவர்களுக்கு உபதேசமாகவம் அறிவுரையாகவும் அதிக பலன்களையும் நன்மைகளையும் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இருந்தும் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அதன்படி செயல்படாமல் மறுக்கிறீர்களா?

21:51Page 326

۞ وَلَقَدۡ ءَاتَيۡنَآ إِبۡرَٰهِيمَ رُشۡدَهُۥ مِن قَبۡلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ ٥١

And We had certainly given Abraham his sound judgement before,1 and We were of him well-Knowing

நாம் இப்ராஹீமுக்கு சிறு வயதிலேயே அவருடைய சமூகத்திற்கு எதிராக ஆதாரத்தை வழங்கினோம். நாம் அவரைக்குறித்து நன்கறிந்தவர்களாக இருந்தோம். எனவேதான் நமது அறிவின் பிரகாரம் அவரது சமூகத்துக்கு எதிராக அவருக்குத் தகுதியான சான்றை வழங்கினோம்.

21:52Page 326

إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِيٓ أَنتُمۡ لَهَا عَٰكِفُونَ ٥٢

When he said to his father and his people, "What are these statues to which you are devoted?"

இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “உங்கள் கைகளால் செய்துகொண்டு நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்த சிலைகள்தான் என்ன?”

21:53Page 326

قَالُواْ وَجَدۡنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ ٥٣

They said, "We found our fathers worshippers of them."

அவருடைய சமூகத்தார் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களை இவற்றை வணங்குபவர்களாகவே கண்டோம். அவர்களைப் பின்பற்றி நாங்களும் இவற்றை வணங்குகிறோம்.”

21:54Page 326

قَالَ لَقَدۡ كُنتُمۡ أَنتُمۡ وَءَابَآؤُكُمۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٥٤

He said, "You were certainly, you and your fathers, in manifest error."

இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கூறினார்: -“பின்பற்றுபவர்களான- நீங்களும் பின்பற்றப்படும் உங்கள் முன்னோர்களும் தெளிவான சத்தியத்தை விட்டுவிட்டு தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.”

21:55Page 326

قَالُوٓاْ أَجِئۡتَنَا بِٱلۡحَقِّ أَمۡ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ ٥٥

They said, "Have you come to us with truth, or are you of those who jest?"

அவருடைய சமூகத்தார் கேட்டார்கள்: “நீர் எங்களிடம் கூறும் போது உண்மையாகத்தான் கூறுகிறீரா? அல்லது நீர் நகைச் சுவையாகக் கூறுகிறீரா?”

21:56Page 326

قَالَ بَل رَّبُّكُمۡ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلَّذِي فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ ٥٦

He said, "[No], rather, your Lord is the Lord of the heavens and the earth who created them, and I, to that, am of those who testify.

இப்ராஹீம் கூறினார்: “நான் கூறுவது வேடிக்கையல்ல உண்மையே. வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன். வானங்களையும் பூமியையும் படைத்துப் பராமரிப்பவனே உங்களின் இறைவன் என்று நிச்சயமாக நான் சாட்சி கூறுகின்றேன். உங்களின் சிலைகளுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.

21:57Page 326

وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصۡنَٰمَكُم بَعۡدَ أَن تُوَلُّواْ مُدۡبِرِينَ ٥٧

And [I swear] by Allāh, I will surely plan against your idols after you have turned and gone away."

அவருடைய சமூகத்தினருக்குக் கேட்டுவிடாமல் இப்ராஹீம் கூறினார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் உங்களின் சிலைகளை விட்டு விட்டு உங்கள் பண்டிகைக்குச் சென்ற பிறகு நீங்கள் விரும்பாததை (உங்களின் சிலைகளுக்கு நான் திட்டம் தீட்டுவேன்).”

21:58Page 327

فَجَعَلَهُمۡ جُذَٰذًا إِلَّا كَبِيرٗا لَّهُمۡ لَعَلَّهُمۡ إِلَيۡهِ يَرۡجِعُونَ ٥٨

So he made them into fragments, except a large one among them, that they might return to it [and question].

இப்ராஹீம் அவர்களது சிலைகளை சிறிய துண்டுகளாக ஆகுமளவு உடைத்துவிட்டார், பெரிய சிலையை மாத்திரம் விட்டுவிட்டார். அவர்கள் அதனிடம் திரும்பி வந்து அவற்றை உடைத்தவனைக் குறித்து கேட்க வேண்டும் என்பதற்காக.

21:59Page 327

قَالُواْ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ ٥٩

They said, "Who has done this to our gods? Indeed, he is of the wrongdoers."

அவர்கள் திரும்பி வந்து, தங்களின் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களில் சிலர் சிலரிடம் கேட்டார்கள்: “நம்முடைய தெய்வங்களை உடைத்தது யார்? நிச்சயமாக நம்முடைய சிலைகளை உடைத்தவன் அநியாயக்காரனாகத்தான் இருப்பான். அவன் கண்ணியம், புனிதம் என்பவற்றுக்குத் தகுதியானதை இழிவுபடுத்திவிட்டான்.

21:60Page 327

قَالُواْ سَمِعۡنَا فَتٗى يَذۡكُرُهُمۡ يُقَالُ لَهُۥٓ إِبۡرَٰهِيمُ ٦٠

They said, "We heard a young man mention them who is called Abraham."

அவர்களில் சிலர் கூறினார்கள்: “ஒரு இளைஞரைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம், அவர் இந்த சிலைகளைக் குறைகூறிக் கொண்டிருந்தார். அவருக்கு இப்ராஹீம் என்று சொல்லப்படும். அவர்தான் இந்த சிலைகளை உடைத்திருக்கலாம்.”

21:61Page 327

قَالُواْ فَأۡتُواْ بِهِۦ عَلَىٰٓ أَعۡيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَشۡهَدُونَ ٦١

They said, "Then bring him before the eyes of the people that they may testify."1

அவர்களின் தலைவர்கள் கூறினார்கள்: “தான் செய்ததை இப்ராஹீம் ஒத்துக்கொள்வதை அனைவரும் பார்ப்பதற்காக அவரை மக்கள் முன்னிலையில் அழைத்து வாருங்கள். அவ்வாறு அவரே ஏற்றுக்கொள்வது அவருக்கெதிரான, உங்களுக்குச் சார்பான ஆதாரமாகிவிடலாம்.”

21:62Page 327

قَالُوٓاْ ءَأَنتَ فَعَلۡتَ هَٰذَا بِـَٔالِهَتِنَا يَٰٓإِبۡرَٰهِيمُ ٦٢

They said, "Have you done this to our gods, O Abraham?"

அவர்கள் இப்ராஹீமை அழைத்து வந்து, அவரிடம் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீயா எங்களுடைய சிலைகளுக்கு இந்த மோசமான செயலைச் செய்தாய்?”

21:63Page 327

قَالَ بَلۡ فَعَلَهُۥ كَبِيرُهُمۡ هَٰذَا فَسۡـَٔلُوهُمۡ إِن كَانُواْ يَنطِقُونَ ٦٣

He said, "Rather, this - the largest of them - did it, so ask them, if they should [be able to] speak."

இப்ராஹீம் அந்த சிலைகளின் இயலாமையை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அவர்களைப் பரிகாசம் செய்தவராகக் கூறினார்: “நான் இவ்வாறு செய்யவில்லை. மாறாக அவற்றில் பெரிய சிலைதான் இவ்வாறு செய்தது. உங்கள் சிலைகள் பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேட்டுப் பாருங்கள்.”

21:64Page 327

فَرَجَعُوٓاْ إِلَىٰٓ أَنفُسِهِمۡ فَقَالُوٓاْ إِنَّكُمۡ أَنتُمُ ٱلظَّٰلِمُونَ ٦٤

So they returned to [blaming] themselves and said [to each other], "Indeed, you are the wrongdoers."

அவர்கள் தமக்குள் திரும்பி சிந்தித்தார்கள். நிச்சயமாக அவர்களின் சிலைகள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்றவை, அல்லாஹ்வை விடுத்து அந்த சிலைகளை வணங்கிய அவர்கள் அநியாயக்காரர்களே என்பதை அறிந்துகொண்டார்கள்.

21:65Page 327

ثُمَّ نُكِسُواْ عَلَىٰ رُءُوسِهِمۡ لَقَدۡ عَلِمۡتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ ٦٥

Then they reversed themselves,1 [saying], "You have already known that these do not speak!"

பின்னர் மீண்டும் மறுப்பு, பிடிவாதமாகக் கூறினார்கள்: “-இப்ராஹீமே!- நிச்சயமாக இந்த சிலைகள் பேசாது என்பதை நீ உறுதியாக அறிவாய். பிறகு எப்படி அவற்றிடம் கேட்கும்படி எங்களை ஏவுகிறாய்.” அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக மாற்ற நாடினார்கள். ஆனால் அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகிவிட்டது.

21:66Page 327

قَالَ أَفَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمۡ شَيۡـٔٗا وَلَا يَضُرُّكُمۡ ٦٦

He said, "Then do you worship instead of Allāh that which does not benefit you at all or harm you?

இப்ராஹீம் அவர்களைக் கண்டித்துக் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து உங்களுக்குப் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இந்த சிலைகளையா வணங்குகிறீர்கள். அவை தம்மை விட்டும் தீங்கைத் தடுக்கவோ, தமக்குப் பயனளிக்கவோ சக்தியற்றவை.

21:67Page 327

أُفّٖ لَّكُمۡ وَلِمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِۚ أَفَلَا تَعۡقِلُونَ ٦٧

Uff1 to you and to what you worship instead of Allāh. Then will you not use reason?"

உங்களுக்கும் அல்லாஹ்வை விடுத்து பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற நீங்கள் வணங்கும் இந்த சிலைகளுக்கும் கேடுதான் உண்டாகும். இதை நீங்கள் விளங்கிக்கொண்டு, அவற்றை வணங்குவதை விட்டுவிட மாட்டீர்களா?

21:68Page 327

قَالُواْ حَرِّقُوهُ وَٱنصُرُوٓاْ ءَالِهَتَكُمۡ إِن كُنتُمۡ فَٰعِلِينَ ٦٨

They said, "Burn him and support your gods - if you are to act."

ஆதாரத்தைக்கொண்டு அவரை எதிர்கொள்ள முடியாததால் அதிகாரத்தின்பால் அவர்கள் அடைக்கலம் தேடினார்கள். அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அவருக்கு கடுமையாக தண்டனை வழங்குவோராக இருந்தால் அவர் உடைத்த உங்கள் சிலைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு இப்ராஹீமை நெருப்பால் எரித்துவிடுங்கள்.”

21:69Page 327

قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ٦٩

We [i.e., Allāh] said, "O fire, be coolness and safety upon Abraham."

நெருப்பை மூட்டி அதில் அவரைப் போட்டார்கள். நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு.” அது அவ்வாறே ஆகியது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.”

21:70Page 327

وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ ٧٠

And they intended for him a plan [i.e., harm], but We made them the greatest losers.

அவரை நெருப்பில் போட்டு பொசுக்கிவிட இப்ராஹீமின் சமூகம் சூழ்ச்சி செய்தார்கள். நாம் அவர்களின் சூழ்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கி, அவர்களை அடக்கி, அழித்துவிட்டோம்.

21:71Page 327

وَنَجَّيۡنَٰهُ وَلُوطًا إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا لِلۡعَٰلَمِينَ ٧١

And We delivered him and Lot to the land which We had blessed for the worlds [i.e., peoples].

நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றினோம். நாம் தூதர்களை அனுப்பி, படைப்பினங்களுக்கு பல நலவுகளை வழங்கி, அருள்செய்த ஷாம் தேசத்தின்பால் அவர்கள் இருவரையும் கொண்டு சேர்த்தோம்.

21:72Page 327

وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ ٧٢

And We gave him Isaac and Jacob in addition, and all [of them] We made righteous.

இப்ராஹீம் தம் இறைவனிடம் தனக்கு ஒரு மகனை அளிக்கும்படி பிரார்த்தனை செய்தபோது நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இப்ராஹீம், அவரது இரு மகன்கள் இஸ்ஹாக், யஃகூபு என ஒவ்வொருவரையும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த நல்லவர்களாக ஆக்கினோம்.

21:73Page 328

وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِمۡ فِعۡلَ ٱلۡخَيۡرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِۖ وَكَانُواْ لَنَا عَٰبِدِينَ ٧٣

And We made them leaders guiding by Our command. And We inspired to them the doing of good deeds, establishment of prayer, and giving of zakāh; and they were worshippers of Us.

நாம் அவர்களை தலைவர்களாக ஆக்கினோம். மக்கள் அவர்கள் மூலம் நலவில் வழிகாட்டலைப் பெறுகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குமாறு அவனுடைய அனுமதியுடன் மக்களை அழைக்கின்றனர். நாம் அவர்களுக்கு, “நற்செயல்களைச் செய்யுங்கள்; தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை வழங்குங்கள் என்று வஹி அறிவித்தோம். அவர்கள் நமக்கு அடிபணிந்தவர்களாக இருந்தார்கள்.

21:74Page 328

وَلُوطًا ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗا وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَت تَّعۡمَلُ ٱلۡخَبَٰٓئِثَۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَٰسِقِينَ ٧٤

And to Lot We gave judgement and knowledge, and We saved him from the city that was committing wicked deeds. Indeed, they were a people of evil, defiantly disobedient.

நாம் லூத்திற்கு பிரச்சினைகளுக்குரியவர்களிடையே தீர்ப்பு வழங்கும் திறமையையும் மார்க்க அறிவையும் வழங்கினோம். மானக்கேடான காரியத்தை செய்துவந்த சதூம் என்ற அந்த ஊர்மக்களின் மீது இறங்கிய வேதனையிலிருந்து நாம் அவரைப் பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு அடிபணியாமல் குழப்பம் செய்யும் மக்களாக இருந்தார்கள்.

21:75Page 328

وَأَدۡخَلۡنَٰهُ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ٧٥

And We admitted him into Our mercy. Indeed, he was of the righteous.

அவருடைய சமூகத்தைத் தாக்கிய வேதனையிலிருந்து அவரைக் காப்பாற்றி நம் அருளில் அவரைப் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர் நம் கட்டளையைச் செயல்படுத்தும், நாம் தடுத்தவற்றிலிருந்து விலகியிருக்கும் நல்லவர்களில் ஒருவராக இருந்தார்.

21:76Page 328

وَنُوحًا إِذۡ نَادَىٰ مِن قَبۡلُ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ٧٦

And [mention] Noah, when he called [to Allāh]1 before [that time], so We responded to him and saved him and his family from the great affliction [i.e., the flood].

தூதரே!- நூஹின் சம்பவத்தை நினைவு கூர்வீராக. இப்ராஹீமுக்கும் லூத்திற்கும் முன்னர் அவர் அல்லாஹ்வை அழைத்தார். நாம் அவர் வேண்டியதை அளித்து அவருக்குப் பதிலளித்தோம். அவரையும் நம்பிக்கைகொண்ட அவருடைய குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.

21:77Page 328

وَنَصَرۡنَٰهُ مِنَ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ ٧٧

And We aided [i.e., saved] him from the people who denied Our signs. Indeed, they were a people of evil, so We drowned them, all together.

நாம் அவரை வலுப்படுத்தும் விதமாக வழங்கிய அவருடைய நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய சான்றுகளை நிராகரித்த அவரது சமூகத்தின் சூழ்ச்சியிலிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம். நிச்சயமாக அவர்கள் குழப்பம் விளைக்கும் தீய மக்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.

21:78Page 328

وَدَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ إِذۡ يَحۡكُمَانِ فِي ٱلۡحَرۡثِ إِذۡ نَفَشَتۡ فِيهِ غَنَمُ ٱلۡقَوۡمِ وَكُنَّا لِحُكۡمِهِمۡ شَٰهِدِينَ ٧٨

And [mention] David and Solomon, when they judged concerning the field - when the sheep of a people overran it [at night],1 and We were witness to their judgement.

தூதரே!- தாவூதையும் அவருடைய மகன் சுலைமானையும் நினைவு கூர்வீராக. அவர்கள் தங்களிடம் வந்த இரு வழக்காளிகளின் விஷயத்தில் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழக்காளிகளில் ஒருவருடைய ஆடுகள் இரவில் மற்றவரின்பயிரில் புகுந்து அதனை நாசமாக்கிவிட்டன. தாவூதும் சுலைமானும் தீர்ப்பளிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களின் தீர்ப்பில் எதுவும் நம்மைவிட்டு மறைவாக இல்லை.

21:79Page 328

فَفَهَّمۡنَٰهَا سُلَيۡمَٰنَۚ وَكُلًّا ءَاتَيۡنَا حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَسَخَّرۡنَا مَعَ دَاوُۥدَ ٱلۡجِبَالَ يُسَبِّحۡنَ وَٱلطَّيۡرَۚ وَكُنَّا فَٰعِلِينَ ٧٩

And We gave understanding of it [i.e., the case] to Solomon, and to each [of them] We gave judgement and knowledge. And We subjected the mountains to exalt [Us], along with David and [also] the birds. And We were doing [that].1

நாம் தாவூதை விட அவருடைய மகன் சுலைமானுக்கு அந்த வழக்கைப் புரிய வைத்தோம். நாம் இருவருக்கும் நபித்துவத்தையும் மார்க்க சட்டதிட்டங்களின் அறிவையும் வழங்கியிருந்தோம். நாம் சுலைமானுக்கு மட்டும் சிறப்பினை வழங்கவில்லை. தாவூதுக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்தன. நாம் அவருக்குப் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். நாமே அந்த விளக்கத்தையும், தீர்ப்பு வழங்குவதையும், அறிவையும், வசப்படுத்தலையும் வழங்குவோராயிருந்தோம்.

21:80Page 328

وَعَلَّمۡنَٰهُ صَنۡعَةَ لَبُوسٖ لَّكُمۡ لِتُحۡصِنَكُم مِّنۢ بَأۡسِكُمۡۖ فَهَلۡ أَنتُمۡ شَٰكِرُونَ ٨٠

And We taught him the fashioning of coats of armor to protect you from your [enemy in] battle. So will you then be grateful?

உங்கள் உடலை ஆயுதம் பதம்பார்க்காமல் இருக்க நாம் சுலைமானை விடுத்து தாவூதுக்கு போர்க்கவசங்கள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தோம். -மனிதர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த இந்த அருட்கொடைக்கு நீங்கள் நன்றிசெலுத்துவீர்களா?

21:81Page 328

وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةٗ تَجۡرِي بِأَمۡرِهِۦٓ إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۚ وَكُنَّا بِكُلِّ شَيۡءٍ عَٰلِمِينَ ٨١

And to Solomon [We subjected] the wind, blowing forcefully, proceeding by his command toward the land which We had blessed. And We are ever, of all things, Knowing.

நாம் சுலைமானுக்கு வேகமாக வீசக்கூடிய காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவரது கட்டளைப்படி நாம் அருள்செய்திருந்த ஷாம் தேசத்திற்குச் செல்லும். அங்கு நபிமார்களை அனுப்பி பல நலவுகளை ஏற்படுத்தி அதில் அபிவிருத்தி செய்திருந்தோம். நாம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவர்களாக இருக்கின்றோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை.

21:82Page 329

وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعۡمَلُونَ عَمَلٗا دُونَ ذَٰلِكَۖ وَكُنَّا لَهُمۡ حَٰفِظِينَ ٨٢

And of the devils [i.e., jinn] were those who dived for him and did work other than that. And We were of them a guardian.1

கடலில் மூழ்கி முத்து போன்றனவற்றை கண்டெடுக்கும், கட்டட நிர்மாணம் போன்ற ஏனைய வேலைகளில் ஈடுபடும் ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். நாம் அவர்களின் எண்ணிக்கையையும், செயல்பாடுகளையும் கண்காணிப்போராக இருந்தோம். அவற்றில் எதுவும் நம்மைவிட்டு தப்பிவிடாது.

21:83Page 329

۞ وَأَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ٨٣

And [mention] Job, when he called to his Lord, "Indeed, adversity has touched me, and You are the most merciful of the merciful."

தூதரே!- அய்யூபின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. துன்பம் அவரைத் தாக்கியபோது அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நான் நோயால் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தையும் இழந்து விட்டேன். நீ அனைவருக்கும் மிகச் சிறந்த கருணையாளனாக இருக்கின்றாய். எனவே எனக்கு ஏற்பட்ட துன்பத்தை என்னை விட்டும் திருப்பி விடுவாயாக.”

21:84Page 329

فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَكَشَفۡنَا مَا بِهِۦ مِن ضُرّٖۖ وَءَاتَيۡنَٰهُ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَذِكۡرَىٰ لِلۡعَٰبِدِينَ ٨٤

So We responded to him and removed what afflicted him of adversity. And We gave him [back] his family and the like thereof with them as mercy from Us and a reminder for the worshippers [of Allāh].

நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்தோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவர் இழந்த அவருடைய குடும்பத்தையும், பிள்ளைகளையும் அவருக்கு வழங்கினோம். அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். இவையனைத்தையும் நம்மிடமிருந்துள்ள கருணையாகவும், அய்யூபைப் போன்று பொறுமையாக இருப்பதற்காக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வணங்கும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டலாகவும் நாம் செய்தோம்.

21:85Page 329

وَإِسۡمَٰعِيلَ وَإِدۡرِيسَ وَذَا ٱلۡكِفۡلِۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰبِرِينَ ٨٥

And [mention] Ishmael and Idrees and Dhul-Kifl; all were of the patient.

தூதரே!- இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல் ஆகியோரை நினைவு கூர்வீராக. அவர்களில் ஒவ்வொருவரும் துன்பங்களிலும் அல்லாஹ் அவர்கள் மீது சுமத்திய கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள்.

21:86Page 329

وَأَدۡخَلۡنَٰهُمۡ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ ٨٦

And We admitted them into Our mercy. Indeed, they were of the righteous.

நாம் அவர்களை நம் அருளில் பிரவேசிக்கச் செய்து நபிமார்களாக ஆக்கினோம். அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனுக்கு வழிப்பட்டு நற்செயல் புரிந்த, அந்தரங்கத்திலும், வெளிப்படையிலும் தங்களை சீர்படுத்திக் கொண்ட அல்லாஹ்வின் நல்லடியார்களாக இருந்தார்கள்.

21:87Page 329

وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبٗا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَيۡهِ فَنَادَىٰ فِي ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبۡحَٰنَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ ٨٧

And [mention] the man of the fish [i.e., Jonah], when he went off in anger1 and thought that We would not decree [anything] upon him.2 And he called out within the darknesses,3 "There is no deity except You; exalted are You. Indeed, I have been of the wrongdoers."

தூதரே!- மீனுடையவரான யூனுஸையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் அனுமதி பெறாமல் தம் சமூகம் பாவத்தில் பிடிவாதமாக இருந்ததனால் அவர்கள் மீது கோபம்கொண்டு சென்றுவிட்டார். அவர் சென்றுவிட்டதற்காக நாம் அவரைத் தண்டித்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தமாட்டோம் என்று நிச்சயமாக அவர் எண்ணிக் கொண்டார். மீன் அவரை விழுங்கிய போது கடும் நெருக்கடியாலும், சிறையாலும் அவர் சோதிக்கப்பட்டார். அவர் தம் பாவத்தை ஒத்துக்கொண்டவராக, மன்னிப்புக்கோரி, மீனின் வயிறு, கடல், இரவு ஆகிய இருள்களில் இருந்தவாறு பிரார்த்தனை செய்தார். அவர் கூறினார்: “உன்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.”

21:88Page 329

فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَٰلِكَ نُـۨجِي ٱلۡمُؤۡمِنِينَ ٨٨

So We responded to him and saved him from the distress. And thus do We save the believers.

நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து இருள்களிலிருந்தும், மீன் வயிற்றிலிருந்தும் அவரை வெளியேற்றி கடும் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். நாம் யூனுஸை துன்பத்திலிருந்து காப்பாற்றியது போன்றே துன்பத்தில் அகப்பட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுகின்றோம்.

21:89Page 329

وَزَكَرِيَّآ إِذۡ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرۡنِي فَرۡدٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡوَٰرِثِينَ ٨٩

And [mention] Zechariah, when he called to his Lord, "My Lord, do not leave me alone [with no heir], while You are the best of inheritors."

தூதரே!- ஸகரிய்யாவையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “இறைவா எனக்கு வாரிசின்றி என்னைத் தனியாக விட்டுவிடாதே. நீயே நிலைத்திருப்பவர்களில் மிகச் சிறந்தவன். எனவே எனக்குப் பிறகு நிலைத்து இருக்கக்கூடிய ஒரு பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.”

21:90Page 329

فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَوَهَبۡنَا لَهُۥ يَحۡيَىٰ وَأَصۡلَحۡنَا لَهُۥ زَوۡجَهُۥٓۚ إِنَّهُمۡ كَانُواْ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَيَدۡعُونَنَا رَغَبٗا وَرَهَبٗاۖ وَكَانُواْ لَنَا خَٰشِعِينَ ٩٠

So We responded to him, and We gave to him John, and amended for him his wife. Indeed, they used to hasten to good deeds and supplicate1 Us in hope and fear, and they were to Us humbly submissive.

நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவருக்கு யஹ்யா என்னும் மகனை வழங்கினோம். அவருடைய மனைவியையும் சரிப்படுத்தினோம். குழந்தைப்பேறு அற்ற அவருடைய மனைவி அதிகம் குழந்தைகள் பெறக்கூடியவளாக ஆகிவிட்டாள். நிச்சயமாக ஸகரிய்யா, அவருடைய மனைவி, மகன் அனைவரும் நற்செயல்களின்பால் விரையக்கூடியவர்களாக, நம்மிடம் கூலியை எதிர்பார்த்தும், நம்மிடம் உள்ள தண்டனையை அஞ்சியும் நம்மை அழைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் நமக்குப் பணிந்து நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

21:91Page 330

وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ ٩١

And [mention] the one who guarded her chastity [i.e., Mary], so We blew into her [garment] through Our angel [i.e., Gabriel], and We made her and her son a sign for the worlds.

தூதரே!- விபச்சாரத்திலிருந்து தன் கற்பைப் பாதுகாத்துக்கொண்ட மர்யமின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. அல்லாஹ் அவளிடம் வானவரை அனுப்பி அவளுக்குள் தன் ஆன்மாவை ஊதினான். அவள் ஈஸாவை சுமந்தாள். அவரைத் தந்தையின்றிப் படைத்ததனால் அவளும் அவளுடைய மகன் ஈஸாவும் அல்லாஹ்வின் வல்லமைக்கும் அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் மக்களுக்கு சான்றாக இருந்தார்கள்.

21:92Page 330

إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱعۡبُدُونِ ٩٢

Indeed this, your religion, is one religion,1 and I am your Lord, so worship Me.

மனிதர்களே!- உங்களின் இந்த மார்க்கம் ஒரே மார்க்கம்தான். ஓரிறைக் கொள்கையான இஸ்லாம் என்னும் மார்க்கமே அது. நானே உங்களின் இறைவன். எனவே வணக்க வழிபாட்டை எனக்கு மட்டுமே நிறைவேற்றுங்கள்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском