Al-Mukhtasar · Tafsir · in Tamil
Al-Mu'minun 23:106–118
23:106Page 349
قَالُواْ رَبَّنَا غَلَبَتۡ عَلَيۡنَا شِقۡوَتُنَا وَكُنَّا قَوۡمٗا ضَآلِّينَ ١٠٦
They will say, "Our Lord, our wretchedness overcame us, and we were a people astray.
அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ முன்னரே அறிந்த எங்களின் துர்பாக்கியம் எங்களை மிகைத்துவிட்டது. நாங்கள் சத்தியத்தைவிட்டு வழிதவறியவர்களாக இருந்தோம்.
23:107Page 349
رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡهَا فَإِنۡ عُدۡنَا فَإِنَّا ظَٰلِمُونَ ١٠٧
Our Lord, remove us from it, and if we were to return [to evil], we would indeed be wrongdoers."
எங்கள் இறைவா! நரகத்திலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக. நாங்கள் இருந்த நிராகரிப்பின் பக்கமும், வழிகேட்டின் பக்கமும் மீண்டும் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் எங்கள் மீதே அநீதி இழைத்தவர்களாவோம். எங்களுக்கான காரணமும் அறுபட்டுவிடும்.”
23:108Page 349
قَالَ ٱخۡسَـُٔواْ فِيهَا وَلَا تُكَلِّمُونِ ١٠٨
He will say, "Remain despised therein and do not speak to Me.
அல்லாஹ் கூறுவான்: “இழிவடைந்தவர்களாக நரகத்திலேயே தங்கியிருங்கள். என்னிடம் பேசாதீர்கள்.”
23:109Page 349
إِنَّهُۥ كَانَ فَرِيقٞ مِّنۡ عِبَادِي يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ١٠٩
Indeed, there was a party of My servants who said, 'Our Lord, we have believed, so forgive us and have mercy upon us, and You are the best of the merciful.'
நிச்சயமாக என்மீது நம்பிக்கைகொண்ட என் அடியார்களில் ஒரு பிரிவினர் கூறினார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் மீது உன் கருணையை காட்டுவாயாக. நீயே மிகச் சிறந்த கருணையாளனாவாய்.”
23:110Page 349
فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِي وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ ١١٠
But you took them in mockery to the point that they made you forget My remembrance, and you used to laugh at them.
தங்கள் இறைவனை அழைக்கும் இந்த நம்பிக்கையாளர்களை நீங்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். அவர்களைக் கேலி செய்தீர்கள். எந்த அளவுக்கெனில் அவர்களைக் கேலி செய்வதில் ஈடுபடுவது உங்களை அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் மறக்கடித்துவிட்டது. நீங்கள் அவர்களைப் பரிகாசம் செய்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
23:111Page 349
إِنِّي جَزَيۡتُهُمُ ٱلۡيَوۡمَ بِمَا صَبَرُوٓاْ أَنَّهُمۡ هُمُ ٱلۡفَآئِزُونَ ١١١
Indeed, I have rewarded them this Day for their patient endurance - that they are the attainers [of success]."
நிச்சயமாக நான் மறுமை நாளில் இந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும், உங்கள் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்திலும், பொறுமையாக இருந்ததனால் சுவனத்தைப் பரிசாக அளித்தேன்.
23:112Page 349
قَٰلَ كَمۡ لَبِثۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ عَدَدَ سِنِينَ ١١٢
[Allāh] will say, "How long did you remain on earth in number of years?"
அவன் கேட்பான்: “பூமியில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தீர்கள்? அதில் எவ்வளவு நேரங்களை வீணாக்கினீர்கள்?”
23:113Page 349
قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ ١١٣
They will say, "We remained a day or part of a day; ask those who enumerate."
அவர்கள் பதிலாக கூறுவார்கள்: “நாங்கள் ஒருநாளோ அல்லது ஒருநாளின் ஒருபகுதியோ தங்கியிருப்போம். நாட்களையும், மாதங்களையும் கணக்கிடுவோரிடம் கேட்பாயாக.”
23:114Page 349
قَٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ ١١٤
He will say, "You stayed not but a little - if only you had known.
அவன் கூறுவான்: “நீங்கள் உலகில் குறைவான காலமே தங்கியிருந்தீர்கள். தங்கியிருக்கும் காலத்தை நீங்கள் அறிந்திருந்தால் வழிப்படுவதில் பொறுமையாக இருப்பது உங்களுக்கு இலகுவாக இருந்திருக்கும்.
23:115Page 349
أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ ١١٥
Then did you think that We created you uselessly and that to Us you would not be returned?"
மனிதர்களே!- உங்களை நாம் நோக்கமின்றி வீணாகப் படைத்துள்ளோம், கால்நடைகளைப் போல உங்களுக்கும் கூலியோ, தண்டனையோ வழங்கப்படாது என்றும் நீங்கள் மறுமை நாளில் விசாரணைக்காக, கூலி கொடுக்கப்படுவதற்காக நம்மிடம் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?
23:116Page 349
فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ ١١٦
So exalted is Allāh, the Sovereign,1 the Truth;2 there is no deity except Him, Lord of the Noble Throne.
தான் படைத்தவற்றில் தான் விரும்பியவாறு ஆட்சி செலுத்தும் உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக தூய்மையானவன். அவனுடைய வாக்குறுதியும், வார்த்தையும் உண்மையானது. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி. அது படைப்புகளில் மகத்தானது. படைப்புகளில் மிகவும் மகத்தானதிற்கு அதிபதியாக இருப்பவனே படைப்புகள் அனைத்திற்கும் அதிபதியுமாவான்.
23:117Page 349
وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ ١١٧
And whoever invokes besides Allāh another deity for which he has no proof - then his account is only with his Lord. Indeed, the disbelievers will not succeed.
யார் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குத் தகுதியானது என்பதற்கு எந்த ஆதாரமும் அற்ற வேறு கடவுளையும் அழைப்பாரோ (அல்லாஹ்வைத் தவிரவுள்ள வணங்கப்படும் அனைத்தின் நிலையும் இதுவே) நிச்சயமாக அவருடைய தீய செயலுக்கான தண்டனை அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அவரை வேதனையால் தண்டிப்பான். பயப்படுவதில் (நரகம்) இருந்து தப்பித்து எதிர்பார்ப்பதை (சுவனத்தை) பெற்று நிராகரிப்பாளர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.
23:118Page 349
وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ١١٨
And, [O Muḥammad], say, "My Lord, forgive and have mercy, and You are the best of the merciful."
தூதுரே!- நீர் கூறுவீராக: “என் இறைவா! என் பாவங்களை மன்னிப்பாயாக. என்மீது உன் கருணையை காட்டுவாயாக. நீயே பாவிகளுக்கு கருணை புரிந்து அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வதில் மிகச் சிறந்தவனாவாய்.”
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences