Al-MukhtasarAn‑Nur · 24:35–63

Al-Mukhtasar · Tafsir · in Tamil

An-Nur 24:35–63

24:35Page 354

۞ ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ مَثَلُ نُورِهِۦ كَمِشۡكَوٰةٖ فِيهَا مِصۡبَاحٌۖ ٱلۡمِصۡبَاحُ فِي زُجَاجَةٍۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوۡكَبٞ دُرِّيّٞ يُوقَدُ مِن شَجَرَةٖ مُّبَٰرَكَةٖ زَيۡتُونَةٖ لَّا شَرۡقِيَّةٖ وَلَا غَرۡبِيَّةٖ يَكَادُ زَيۡتُهَا يُضِيٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٞۚ نُّورٌ عَلَىٰ نُورٖۚ يَهۡدِي ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُۚ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَٰلَ لِلنَّاسِۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٣٥

Allāh is the Light1 of the heavens and the earth. The example of His light2 is like a niche within which is a lamp;3 the lamp is within glass, the glass as if it were a pearly [white] star lit from [the oil of] a blessed olive tree, neither of the east nor of the west, whose oil would almost glow even if untouched by fire. Light upon light. Allāh guides to His light whom He wills. And Allāh presents examples for the people, and Allāh is Knowing of all things.

அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாகவும் அவையிரண்டில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கின்றான். நம்பிக்கையாளின் உள்ளத்தில் அவனுடைய ஒளிக்கு உதாரணம் சுவரில் காணப்படும் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும். அவ்விளக்கு பிரகாசமான ஒரு கண்ணாடியில் உள்ளது. அது முத்தைப் போன்று மின்னக்கூடிய நட்சத்திரத்தைப் போன்றது. அவ்விளக்கு வளம்மிக்க சைத்தூன் மரத்திலுள்ள எண்ணெய்யால் எரிக்கப்படுகிறது. அந்த மரத்தை காலையிலோ மாலையிலோ சூரியனைவிட்டு எதுவும் மறைக்காது. அந்த எண்ணெயில் நெருப்பு சேராவிட்டாலும் அதன் தூய்மையினால் அது மின்னுகிறது. எனவே நெருப்பு சேர்ந்தால் எவ்வாறு மின்னும்? கண்ணாடி ஒளியின் மீது விளக்கின் ஒளி. இவ்வாறுதான் நேர்வழி என்னும் ஒளியால் பிரகாசமடைந்த நம்பிக்கையாளனின் உள்ளமும். அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு குர்ஆனைப் பின்பற்றும் பாக்கியத்தை அளிக்கிறான். அல்லாஹ் விஷயங்களை அதுபோன்ற உதாரணங்களைக்கொண்டு தெளிவுபடுத்துகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

24:36Page 354

فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ ٣٦

[Such niches are] in houses [i.e., mosques] which Allāh has ordered to be raised and that His name be mentioned [i.e., praised] therein; exalting Him within them in the morning and the evenings1

இந்த விளக்கு பள்ளிவாயில்களில் எரிக்கப்படுகிறது. அவற்றின் அந்தஸ்தை, கட்டிடத்தை உயர்த்துமாறும் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தொழுது, தொழுகை, பாங்கு, இறைநினைவு ஆகியவற்றைக் கொண்டு அவனின் பெயரை நினைவுகூருமாறும் அவன் கட்டளையிட்டுள்ளான்.

24:37Page 355

رِجَالٞ لَّا تُلۡهِيهِمۡ تِجَٰرَةٞ وَلَا بَيۡعٌ عَن ذِكۡرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ يَخَافُونَ يَوۡمٗا تَتَقَلَّبُ فِيهِ ٱلۡقُلُوبُ وَٱلۡأَبۡصَٰرُ ٣٧

[Are] men whom neither commerce nor sale distracts from the remembrance of Allāh and performance of prayer and giving of zakāh. They fear a Day in which the hearts and eyes will [fearfully] turn about -

அந்த மனிதர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும், தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுவதை விட்டும், ஸகாத்தை உரியவர்களுக்கு கொடுப்பதை விட்டும் அவர்களைத் பராக்காக்கிவிடாது. அவர்கள் மறுமை நாளை அஞ்சுவார்கள். அந்த நாளில் உள்ளங்கள் வேதனையில் இருந்து தப்பும் எதிர்பார்ப்பு சிக்கிவிடுவோம் என்ற அச்சம் ஆகியவற்றுக்கிடையில் தடுமாறிக் கொண்டிருக்கும். பார்வைகள் எங்கு செல்லும் என பிரண்டுகொண்டிருக்கும்.

24:38Page 355

لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ٣٨

That Allāh may reward them [according to] the best of what they did and increase them from His bounty. And Allāh gives provision to whom He wills without account [i.e., limit].

அவர்கள் செயல்பட்டதெல்லாம் அவர்கள் செய்த செயல்களுக்கு அல்லாஹ் சிறந்த கூலியை வழங்க வேண்டும் என்பதற்காகவும் தன் அருளால் அவன் அவர்களுக்கு இன்னும் அதிகமான கூலி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் தான் நாடியோருக்கு அவர்களின் செயல்களுக்கேற்ப கணக்கின்றி வழங்குகிறான். மாறாக அவர்கள் செய்தவற்றுக்குப் பலமடங்கு கூலியை வழங்குகிறான்.

24:39Page 355

وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَعۡمَٰلُهُمۡ كَسَرَابِۭ بِقِيعَةٖ يَحۡسَبُهُ ٱلظَّمۡـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمۡ يَجِدۡهُ شَيۡـٔٗا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ ٣٩

But those who disbelieved - their deeds are like a mirage in a lowland which a thirsty one thinks is water until, when he comes to it, he finds it is nothing but finds Allāh before him, and He will pay him in full his due; and Allāh is swift in account.

அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் செய்த செயல்களுக்கு எவ்வித கூலியும் இல்லை. அவை பூமியின் சமதரையில் காணப்படும் கானல் நீரைப் போன்றதாகும். தாகித்தவன் அதனை தண்ணீர் என்று எண்ணுகிறான். அதன் அருகில் வரும்போது எதையும் அவன் காண மாட்டான். இவ்வாறே நிராகரிப்பாளன் தான் செய்த செயல்கள் தனக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகிறான். ஆனால் இறந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டால் எதையும் அவன் பெற மாட்டான். தனக்கு முன்னால் அல்லாஹ்வையே காண்பான். அல்லாஹ் அவன் செய்த செயல்களுக்கு முழுமையாக கூலி வழங்கிடுவான். அல்லாஹ் விசாரணை செய்வதில் விரைவானவன்.

24:40Page 355

أَوۡ كَظُلُمَٰتٖ فِي بَحۡرٖ لُّجِّيّٖ يَغۡشَىٰهُ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ سَحَابٞۚ ظُلُمَٰتُۢ بَعۡضُهَا فَوۡقَ بَعۡضٍ إِذَآ أَخۡرَجَ يَدَهُۥ لَمۡ يَكَدۡ يَرَىٰهَاۗ وَمَن لَّمۡ يَجۡعَلِ ٱللَّهُ لَهُۥ نُورٗا فَمَا لَهُۥ مِن نُّورٍ ٤٠

Or [they are] like darknesses within an unfathomable sea which is covered by waves, upon which are waves, over which are clouds - darknesses, some of them upon others. When one puts out his hand [therein], he can hardly see it. And he to whom Allāh has not granted light - for him there is no light.

அல்லது அவனுடைய செயல்கள் ஆழ்கடலின் இருள்களைப் போன்றதாகும். அதற்கு மேல் அலை இருக்கிறது. அதற்கு மேல் அடுக்கடுக்காக அலைகள் இருக்கின்றன. அதற்கு மேல் மேகம் வழிகாட்டும் நட்சத்திரங்களை மறைக்கிறது. அடுக்கடுக்கான இருள்கள். ஒருவன் இந்த இருள்களில் தன் கையை வெளியே நீட்டினால் காரிருளின் காரணமாக அவனால் எதையும் பார்க்க முடியாது. இவ்வாறே நிராகரிப்பாளனை அறியாமை, சந்தேகம், தடுமாற்றம், உள்ளத்தில் முத்திரை போன்ற இருள்கள் அடுக்கடுக்காக சூழ்ந்துள்ளன. அல்லாஹ் யாருக்கு வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் தன் வேதத்தைப் பற்றிய அறிவையும் வழங்கவில்லையோ அவருக்கு நேர்வழியை பெற வழிகாட்டக்கூடியவனோ, பிரகாசம் பெறத்தக்க வேதமோ கிடையாது.

24:41Page 355

أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱلطَّيۡرُ صَٰٓفَّٰتٖۖ كُلّٞ قَدۡ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسۡبِيحَهُۥۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ ٤١

Do you not see that Allāh is exalted by whomever is within the heavens and the earth and [by] the birds with wings spread [in flight]? Each [of them] has known his [means of] prayer and exalting [Him], and Allāh is Knowing of what they do.

தூதரே!- நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்பினங்களும் காற்றில் இறக்கைகளை விரித்தவாறு பறவைகளும் அல்லாஹ்வைப் புகழ்கின்றன என்பதை நீர் அறியமாட்டீரா? இந்த படைப்பினங்கள் அனைத்திலும் மனிதனைப் போன்று தொழுபவர்களின் தொழுகையையும் பறவை போன்று புகழ்பவையின் புகழையும் அல்லாஹ் அறிந்துள்ளான். அவர்கள் செய்யக்கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்களின் செயல்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

24:42Page 355

وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ ٤٢

And to Allāh belongs the dominion of the heavens and the earth, and to Allāh is the destination.

வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. மறுமையில் விசாரணைக்காகவும் கூலிக்காகவும் அனைவரும் அவன் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும்.

24:43Page 355

أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُزۡجِي سَحَابٗا ثُمَّ يُؤَلِّفُ بَيۡنَهُۥ ثُمَّ يَجۡعَلُهُۥ رُكَامٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٖ فِيهَا مِنۢ بَرَدٖ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصۡرِفُهُۥ عَن مَّن يَشَآءُۖ يَكَادُ سَنَا بَرۡقِهِۦ يَذۡهَبُ بِٱلۡأَبۡصَٰرِ ٤٣

Do you not see that Allāh drives clouds? Then He brings them together; then He makes them into a mass, and you see the rain emerge from within it. And He sends down from the sky, mountains [of clouds] within which is hail, and He strikes with it whom He wills and averts it from whom He wills. The flash of its lightning almost takes away the eyesight.

தூதரே!- நீர் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ்தான் மேகங்களை இழுத்து வந்து பின்னர் அவற்றின் சில பகுதிகளை ஒன்றோடொன்று சேர்த்து அடுக்கடுக்காக குவியலாக்குகின்றான். மேகத்திலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். அவன் வானத்திலிருந்து, பலத்தால் மலைபோன்ற கனமான மேகத்திலிருந்து சிறுகற்கலைப் போன்ற ஆலங்கட்டிகளைப் பொழியச்செய்கிறான். அந்த குளிர்ந்த ஆலங்கட்டிகளை தான் நாடிய அடியார்களின்மீது விழச் செய்கிறான். தான் நாடிய அடியார்களை விட்டும் திருப்பி விடுகிறான். மேகத்திலிருந்து வரக்கூடிய மின்னலின் கடும் வெளிச்சம் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது.

24:44Page 356

يُقَلِّبُ ٱللَّهُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ ٤٤

Allāh alternates the night and the day. Indeed in that is a lesson for those who have vision.

அல்லாஹ் இரவையும் பகலையும் நீளமாகவும் சுருக்கமாகவும் மாறிமாறி வரச்செய்கிறான். நிச்சயமாக மேற்கூறப்பட்ட அத்தாட்சிகளான இறைத்தன்மைக்கான ஆதாரங்களில் அகப் பார்வையுடையோருக்கு அல்லாஹ்வின் வல்லமையை, அவனின் தனித்துவத்தை எடுத்துரைக்கக்கூடிய படிப்பினை உண்டு.

24:45Page 356

وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٖ مِّن مَّآءٖۖ فَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ بَطۡنِهِۦ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ رِجۡلَيۡنِ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰٓ أَرۡبَعٖۚ يَخۡلُقُ ٱللَّهُ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٤٥

Allāh has created every [living] creature from water. And of them are those that move on their bellies, and of them are those that walk on two legs, and of them are those that walk on four. Allāh creates what He wills. Indeed, Allāh is over all things competent.

அல்லாஹ் பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்கள் அனைத்தையும் விந்திலிருந்து படைத்துள்ளான். அவற்றில் சில பாம்பைப் போன்று தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. அவ்வற்றில் சில, மனிதர்கள், பறவைகளைப் போன்று தம் இரு கால்களால் நடந்து செல்கின்றன. அவற்றில் சில கால்நடைகளைப் போன்று நான்கு கால்களால் செல்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட, குறிப்பிடப்படாதவைகளில் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல.

24:46Page 356

لَّقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖۚ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٤٦

We have certainly sent down distinct verses. And Allāh guides whom He wills to a straight path.

நாம் முஹம்மதின் மீது சந்தேகமற்ற தெளிவான சத்திய வழிக்கு வழிகாட்டும் வசனங்களை இறக்கியுள்ளோம். அல்லாஹ் தான் நாடியோருக்குக் கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான். அந்த வழி சுவனத்தின்பால் கொண்டு சேர்க்கும்.

24:47Page 356

وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعۡنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ ٤٧

But they [i.e., the hypocrites] say, "We have believed in Allāh and in the Messenger, and we obey"; then a party of them turns away after that. And those are not believers.

நயவஞ்சகர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் மீதும் தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டோம்; அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டோம்.” பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீதும் தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு அவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறிய பிறகும் அவனுடைய பாதையில் போரிடுதல், ஏனைய விடயங்களில் அவ்விருவருக்கும் கட்டுப்பட மறுக்கிறார்கள். புறக்கணிக்கும் இவர்கள் நிச்சயமாக தங்களை நம்பிக்கையாளர்கள் என்று வாதிட்டாலும் உண்மையில் நம்பிக்கையாளர்கள் இல்லை.

24:48Page 356

وَإِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ إِذَا فَرِيقٞ مِّنۡهُم مُّعۡرِضُونَ ٤٨

And when they are called to [the words of] Allāh and His Messenger to judge between them, at once a party of them turns aside [in refusal].

இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் பக்கமும், அவர்களிடையே பிணங்கிக்கொண்ட விஷயங்களில் தூதர் தீர்ப்பு வழங்குவதற்காக, தூதரின் பக்கமும் அழைக்கப்பட்டால், தமது நயவஞ்சகத்தின் காரணமாக அவருடைய தீர்ப்பை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.

24:49Page 356

وَإِن يَكُن لَّهُمُ ٱلۡحَقُّ يَأۡتُوٓاْ إِلَيۡهِ مُذۡعِنِينَ ٤٩

But if the right is theirs, they come to him in prompt obedience.

நிச்சயமாக தங்களின் பக்கம் நியாயம் இருப்பதையும், தூதர் நிச்சயமாக தமக்குச் சார்பாகத் தீர்ப்பு சொல்வார் என்பதையும் அறிந்தால் அவருக்குக் கட்டுப்பட்டவர்களாக, பணிந்தவர்களாக அவரிடம் விரைந்தோடி வருகிறார்கள்.

24:50Page 356

أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ٱرۡتَابُوٓاْ أَمۡ يَخَافُونَ أَن يَحِيفَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَرَسُولُهُۥۚ بَلۡ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ٥٠

Is there disease in their hearts? Or have they doubted? Or do they fear that Allāh will be unjust to them, or His Messenger? Rather, it is they who are the wrongdoers [i.e., the unjust].

இவர்களின் உள்ளங்களில் நோய் குடிகொண்டிருக்கிறதா? அல்லது அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதில் சந்தேகம் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தீர்ப்புக் கூறுவதில் தங்களுக்கு அநியாயம் செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்களா? மேற்கூறப்பட்ட எவற்றுக்காகவும் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. மாறாக அவரது தீர்ப்பை அவர்கள் புறக்கணித்து அதில் பிடிவாதம் கொண்டதனால் ஏற்பட்ட அவர்களின் உள நோயே அதற்குக் காரணமாகும்.

24:51Page 356

إِنَّمَا كَانَ قَوۡلَ ٱلۡمُؤۡمِنِينَ إِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ أَن يَقُولُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٥١

The only statement of the [true] believers when they are called to Allāh and His Messenger to judge between them is that they say, "We hear and we obey." And those are the successful.

நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் தங்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் பக்கமும், தூதரின் பக்கமும் அழைக்கப்பட்டால், “நாங்கள் அவரின் வார்த்தையை செவியுற்றோம், அவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தோம்” என்றே கூறுவார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.

24:52Page 356

وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخۡشَ ٱللَّهَ وَيَتَّقۡهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ ٥٢

And whoever obeys Allāh and His Messenger and fears Allāh and is conscious of Him - it is those who are the attainers.

யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு, அவ்விருவரின் தீர்ப்புக்கும் கட்டுப்படுவார்களோ பாவத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவதைப் பயந்து, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவனுடைய வேதனையை அஞ்சுகிறார்களோ அவர்கள் மாத்திரம்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்கள்.

24:53Page 356

۞ وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِنۡ أَمَرۡتَهُمۡ لَيَخۡرُجُنَّۖ قُل لَّا تُقۡسِمُواْۖ طَاعَةٞ مَّعۡرُوفَةٌۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ٥٣

And they swear by Allāh their strongest oaths that if you ordered them, they would go forth [in Allāh's cause]. Say, "Do not swear. [Such] obedience is known.1 Indeed, Allāh is [fully] Aware of that which you do."

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது தம்மால் முடிந்தளவு கடும் உறுதியான முறையில் சத்தியமிட்டுக் கூறுகிறார்கள்: “நீங்கள் போருக்காக புறப்படும்படி கட்டளையிட்டால் நிச்சயம் நாங்கள் புறப்படுவோம், என்று.” -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “சத்தியம் செய்யாதீர்கள். உங்களின் பொய்யும், நீங்கள் எண்ணும் கட்டுப்படுதலும் அனைவரும் அறிந்ததுதான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் எவ்வளவுதான் மறைத்தாலும் நீங்கள் செய்யக்கூடிய எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

24:54Page 357

قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡهِ مَا حُمِّلَ وَعَلَيۡكُم مَّا حُمِّلۡتُمۡۖ وَإِن تُطِيعُوهُ تَهۡتَدُواْۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ٥٤

Say, "Obey Allāh and obey the Messenger; but if you turn away - then upon him is only that [duty] with which he has been charged, and upon you is that with which you have been charged. And if you obey him, you will be [rightly] guided. And there is not upon the Messenger except the [responsibility for] clear notification."

தூதரே!- இந்த நயவஞ்சகர்களிடம் நீர் கூறுவீராக: “வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். அவ்விருவருக்கும் கட்டுப்படுமாறு உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நீங்கள் புறக்கணித்துவிட்டால் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக எடுத்துரைப்பதே தூதர் மீதுள்ள பொறுப்பாகும். அவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் கொண்டுவந்ததன் மீது செயல்படுவது உங்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவர் தடுத்துள்ளதிலிருந்து விலகி நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் சத்தியத்தை அடைந்துவிடுவீர்கள். தெளிவாக எடுத்துரைப்பதே தூதர் மீதுள்ள கடமையாகும். உங்களைக் கட்டாயப்படுத்தி நேர்வழிக்கு சுமந்து கொண்டுவருவது அவருடைய கடமையல்ல.

24:55Page 357

وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَيَسۡتَخۡلِفَنَّهُمۡ فِي ٱلۡأَرۡضِ كَمَا ٱسۡتَخۡلَفَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَلَيُمَكِّنَنَّ لَهُمۡ دِينَهُمُ ٱلَّذِي ٱرۡتَضَىٰ لَهُمۡ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعۡدِ خَوۡفِهِمۡ أَمۡنٗاۚ يَعۡبُدُونَنِي لَا يُشۡرِكُونَ بِي شَيۡـٔٗاۚ وَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ٥٥

Allāh has promised those who have believed among you and done righteous deeds that He will surely grant them succession [to authority] upon the earth just as He granted it to those before them and that He will surely establish for them [therein] their religion which He has preferred for them and that He will surely substitute for them, after their fear, security, [for] they worship Me, not associating anything with Me. But whoever disbelieves1 after that - then those are the defiantly disobedient.

உங்களில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு அவன் பின்வருமாறு வாக்களிக்கிறான்: “அவன் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு உதவிபுரிந்து அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நம்பிக்கையாளர்களை பிரதிநிதிகளாக ஆக்கியது போன்று அவர்களையும் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்குவான். அவன் ஏற்றுக்கொண்ட அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தை மேலோங்கியதாகவும் நிலைபெற்றதாகவும் ஆக்குவான். அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பிறகு அவர்களை அமைதியானவர்களாக மாற்றுவான்.” அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு யாரையும் இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் இந்த அருட்கொடைகளுக்கு யார் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள்.

24:56Page 357

وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ٥٦

And establish prayer and give zakāh and obey the Messenger - that you may receive mercy.

தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குங்கள். தூதர் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ள காரியங்களை செயல்படுத்தி அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவருக்குக் கட்டுப்படுங்கள். அதனால் அல்லாஹ்வின் கருணையைப் பெறுவீர்கள்.

24:57Page 357

لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۚ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَلَبِئۡسَ ٱلۡمَصِيرُ ٥٧

Never think that the disbelievers are causing failure [to Allāh] upon the earth. Their refuge will be the Fire - and how wretched the destination.

தூதரே!- அல்லாஹ்வை நிராகரித்தவர்களை நான் தண்டிக்க விரும்பினால் அவர்கள் என்னிடமிருந்து தப்பி விடுவார்கள் என்று நீர் ஒருபோதும் எண்ணிவிடாதீர். மறுமை நாளில் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். நரகில் அவர்கள் தங்கும் இடம் மிகவும் மோசமான தங்குமிடமாகும்.

24:58Page 357

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِيَسۡتَـٔۡذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ وَٱلَّذِينَ لَمۡ يَبۡلُغُواْ ٱلۡحُلُمَ مِنكُمۡ ثَلَٰثَ مَرَّٰتٖۚ مِّن قَبۡلِ صَلَوٰةِ ٱلۡفَجۡرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعۡدِ صَلَوٰةِ ٱلۡعِشَآءِۚ ثَلَٰثُ عَوۡرَٰتٖ لَّكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ وَلَا عَلَيۡهِمۡ جُنَاحُۢ بَعۡدَهُنَّۚ طَوَّٰفُونَ عَلَيۡكُم بَعۡضُكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ٥٨

O you who have believed, let those whom your right hands possess and those who have not [yet] reached puberty among you ask permission of you [before entering] at three times: before the dawn prayer and when you put aside your clothing [for rest] at noon and after the night prayer. [These are] three times of privacy1 for you. There is no blame upon you nor upon them beyond these [periods], for they continually circulate among you - some of you, among others. Thus does Allāh make clear to you the verses [i.e., His ordinances]; and Allāh is Knowing and Wise.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களின் ஆண், பெண் அடிமைகளும், பருவமடையாத சுதந்திரமான சிறுவர்களும் உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் அனுமதி பெற வேண்டும். அவை: அதிகாலைத் தொழுகைக்கு முன்னர் நீங்கள் உங்கள் தூங்கும் ஆடைகளை கழற்றி எனைய நேரத்தில் அணியும் ஆடைகளை மாற்றும்போது, பகல் நேரத்தில் முற்பகல் தூக்கம் போடுவதற்காக நீங்கள் உங்கள் ஆடைகளைக் களையும் போது, இஷா தொழுகைக்குப் பிறகுள்ள நேரம். ஏனெனில் நிச்சயமாக அது உறங்கும் நேரம், எனைய நேர ஆடைகளை களைந்து உறங்கும் ஆடை அணிதல் போன்றவற்றுக்கான நேரமாகும். இந்த மூன்று நேரங்களும் உங்களுக்கு மறைவான நேரங்களாகும். உங்களின் அனுமதியின்றி யாரும் உங்களிடம் வரக்கூடாது. இந்த மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் உங்களிடம் வருவதில் உங்களுக்கும் அவர்களுக்கும் எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் எப்போதும் ஒருவரையொருவர் சுற்றிவருபவர்கள். எனவே எல்லா நேரங்களிலுமே அனுமதியின்றி நுழைய முடியாது என அவர்களைத் தடுப்பது சிரமமான ஒன்றாகும். அனுமதி கோருதல் பற்றிய சட்டங்களை அல்லாஹ் தெளிவுபடுத்தியவாறே மார்க்க சட்டங்களை அறிவிக்கக்கூடிய வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை அறிந்தவனாவான். அவர்களுக்கு அவன் விதிக்கும் சட்டங்களில் அவன் ஞானமுள்ளவன்.

24:59Page 358

وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَـٔۡذِنُواْ كَمَا ٱسۡتَـٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ٥٩

And when the children among you reach puberty, let them ask permission [at all times] as those before them have done. Thus does Allāh make clear to you His verses; and Allāh is Knowing and Wise.

உங்கள் குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களும் வீடுகளில் நுழையும்போது முன்பு பெரியவர்களுக்கு கூறப்பட்டது போன்று எப்பொழுதும் அனுமதி கோர வேண்டும். அல்லாஹ் அனுமதி கோரும் சட்டங்களைத் தெளிவுபடுத்தியது போன்றே தன் வசனங்களையும் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அவன் தன் அடியார்களின் நலன்களை நன்கறிந்தவன். அவன் அவர்களுக்கு வழங்கும் சட்டங்களில் ஞானம் மிக்கவனாக இருக்கின்றான்.

24:60Page 358

وَٱلۡقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا يَرۡجُونَ نِكَاحٗا فَلَيۡسَ عَلَيۡهِنَّ جُنَاحٌ أَن يَضَعۡنَ ثِيَابَهُنَّ غَيۡرَ مُتَبَرِّجَٰتِۭ بِزِينَةٖۖ وَأَن يَسۡتَعۡفِفۡنَ خَيۡرٞ لَّهُنَّۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ٦٠

And women of post-menstrual age who have no desire for marriage - there is no blame upon them for putting aside their outer garments [but] not displaying adornment. But to modestly refrain [from that] is better for them. And Allāh is Hearing and Knowing.

திருமணத்தில் ஆர்வமில்லாத, கர்ப்பிணியாக முடியாத, மாதவிடாய் நின்றுவிட்ட மூதாட்டிகள் தங்களின் மறைக்குமாறு ஏவப்பட்ட மறைவான அலங்காரத்தை வெளிப்படுத்தாமல் மேலாடை முகத்திரை போன்ற சில ஆடைகளைக் களைந்து விடுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. இவ்வாறு சில ஆடைகளைக் களைவதைக்காட்டிலும் மறைப்பது, பக்குவத்திற்காக அவற்றை அணிந்துகொள்வதே அவர்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

24:61Page 358

لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞ وَلَا عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَن تَأۡكُلُواْ مِنۢ بُيُوتِكُمۡ أَوۡ بُيُوتِ ءَابَآئِكُمۡ أَوۡ بُيُوتِ أُمَّهَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ إِخۡوَٰنِكُمۡ أَوۡ بُيُوتِ أَخَوَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَعۡمَٰمِكُمۡ أَوۡ بُيُوتِ عَمَّٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَخۡوَٰلِكُمۡ أَوۡ بُيُوتِ خَٰلَٰتِكُمۡ أَوۡ مَا مَلَكۡتُم مَّفَاتِحَهُۥٓ أَوۡ صَدِيقِكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَأۡكُلُواْ جَمِيعًا أَوۡ أَشۡتَاتٗاۚ فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٦١

There is not upon the blind [any] constraint nor upon the lame constraint nor upon the ill constraint nor upon yourselves when you eat from your [own] houses or the houses of your fathers or the houses of your mothers or the houses of your brothers or the houses of your sisters or the houses of your father's brothers or the houses of your father's sisters or the houses of your mother's brothers or the houses of your mother's sisters or [from houses] whose keys you possess or [from the house] of your friend. There is no blame upon you whether you eat together or separately. But when you enter houses, give greetings of peace1 upon each other - a greeting from Allāh, blessed and good. Thus does Allāh make clear to you the verses [of ordinance] that you may understand.

பார்வையற்றவர், முடவர், நோயாளி ஆகியோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் போன்ற தங்களால் நிறைவேற்ற முடியாத கடமைகளை விட்டுவிட்டால் அவர்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் உங்களின் வீடுகளிலோ உங்கள் பிள்ளைகளின் வீடுகளிலோ உங்கள் தந்தையர், அன்னையர், சகோதரர்கள், சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், உங்கள் அன்னையரின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோரின் வீடுகளிலோ தோட்டக் காவல்காரன் போன்ற பாதுகாக்குமாறு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வீடுகளிலோ உண்பதில் எவ்விதக் குற்றமுமில்லை. உங்கள் நண்பர்களின் வீடுகளில் உண்பதிலும் எவ்விதக் குற்றமுமில்லை. ஏனெனில் பொதுவாக அவனது மனம் அதனை விரும்பும். நீங்கள் ஒன்றுசேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ உண்பதிலும் உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் மேற்குறிப்பிட்ட வீடுகளிலோ, பிற வீடுகளிலோ நுழையும் போது அங்குள்ளவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தி நிலவட்டும்” என்று சலாம் - முகமன் கூறுங்கள். நீங்கள் அங்கு யாரையும் பெறவில்லையெனில் “எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்” என்று உங்களுக்கு நீங்களே சலாம் கூறிக்கொள்ளுங்கள். இது உங்களிடையே அன்பும் பிரியமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமிருந்து, அவன் உங்களுக்கு விதித்த அருள்வளமிக்க பிரார்த்தனையாகும். கேட்பவரின் மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் தூய பிரார்த்தனையாகும். நீங்கள் விளங்கிக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்திலே முன்னால் தெளிவுபடுத்தியது போல் அவன் வசனங்களை தெளிவுபடுத்துகிறான்.

24:62Page 359

إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُواْ مَعَهُۥ عَلَىٰٓ أَمۡرٖ جَامِعٖ لَّمۡ يَذۡهَبُواْ حَتَّىٰ يَسۡتَـٔۡذِنُوهُۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَـٔۡذِنُونَكَ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ فَإِذَا ٱسۡتَـٔۡذَنُوكَ لِبَعۡضِ شَأۡنِهِمۡ فَأۡذَن لِّمَن شِئۡتَ مِنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمُ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٦٢

The believers are only those who believe in Allāh and His Messenger and, when they are [meeting] with him for a matter of common interest, do not depart until they have asked his permission. Indeed, those who ask your permission, [O Muḥammad] - those are the ones who believe in Allāh and His Messenger. So when they ask your permission due to something of their affairs, then give permission to whom you will among them and ask forgiveness for them of Allāh. Indeed, Allāh is Forgiving and Merciful.

நிச்சயமாக அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களே உண்மையான நம்பிக்கையாளர்களாவர். அவர்கள் தூதருடன் முஸ்லிம்களின் நலன் சம்பந்தப்பட்ட ஏதேனும் காரியத்தில் ஒன்று சேர்ந்து இருந்தால் அவரிடம் போகும் போது அனுமதி பெறாமல் திரும்ப மாட்டார்கள். -தூதரே!- உம்முடைய சபையிலிருந்து வெளியேறும் போது உம் அனுமதி பெற்று திரும்புபவர்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களாவர். அவர்கள் தங்களின் சில முக்கியமான விஷயத்திற்காக உம்மிடம் அனுமதி கோரினால் அவர்களில் நீர் நாடியோருக்கு அனுமதியளித்து விடுவீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

24:63Page 359

لَّا تَجۡعَلُواْ دُعَآءَ ٱلرَّسُولِ بَيۡنَكُمۡ كَدُعَآءِ بَعۡضِكُم بَعۡضٗاۚ قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمۡ لِوَاذٗاۚ فَلۡيَحۡذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنۡ أَمۡرِهِۦٓ أَن تُصِيبَهُمۡ فِتۡنَةٌ أَوۡ يُصِيبَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ٦٣

Do not make [your] calling of the Messenger among yourselves as the call of one of you to another. Already Allāh knows those of you who slip away, concealed by others. So let those beware who dissent from his [i.e., the Prophet's] order,1 lest fitnah2 strike them or a painful punishment.

நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் தூதரைக் கண்ணியப்படுத்துங்கள். நீங்கள் அவரை அழைக்கும்போது உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப்போல முஹம்மதே அல்லது அப்துல்லாஹ்வின் மகனே, என்று பெயர்கூறி அழைக்காதீர்கள். மாறாக “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் நபியே!” என்று அழையுங்கள். அவர் ஏதேனும் பொதுக்காரியத்திற்காக உங்களை அழைத்தால் அவரின் அழைப்பை மற்றவர்களின் அழைப்பைப்போல் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்.மாறாக உடனே அதற்குப் பதிலளியுங்கள். உங்களில் தூதரின் அனுமதியின்றி இரகசியமாகச் சென்றுவிடுவோரை அல்லாஹ் அறிவான். இறைத்தூதரின் கட்டளைக்கு மாறுசெய்பவர்கள், அல்லாஹ்விடமிருந்து தமக்கு ஏதேனும் சோதனை ஏற்படுவதை விட்டும் அல்லது அவர்களால் பொறுமை கொள்ள முடியாத வேதனைமிக்க தண்டனை ஏற்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருக்கட்டும்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском