Al-Mukhtasar · Tafsir · in Tamil
الحاقة
Al-Haqqah
The Reality · Meccan · 52 ayahs
அனைவர் மீதும் நிகழக் கூடிய மீண்டும் எழுப்பும் தருணத்தை அல்லாஹ் நினைவு கூருகிறான்.
பின்னர் “நிகழக்கூடியது என்றால் என்ன?” என்ற இந்தக் கேள்வியின் மூலம் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றான்.
69:3Page 566
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ٣
And what can make you know what is the Inevitable Reality?
உண்மையில் இவ்வாறு நிகழுக்கூடியது என்ன? என்பதைக் குறித்து உமக்கு அறிவித்தது எது?
69:4Page 566
كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ٤
Thamūd and ʿAad denied the Striking Calamity [i.e., the Resurrection].
ஸாலிஹ் நபியின் சமூகமான ஸமூதும் ஹூதின் சமூகமான ஆதும் தன் பயங்கரத்தால் மக்களை திடுக்கிடச் செய்யும் மறுமை நாளை பொய்ப்பித்தார்கள்.
69:5Page 566
فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ٥
So as for Thamūd, they were destroyed by the overpowering [blast].
அல்லாஹ் ஸமூத் சமூகத்தை பயங்கரமான, பெரும் சப்தத்தைக் கொண்டு அழித்தான்.
69:6Page 566
وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ ٦
And as for ʿAad, they were destroyed by a screaming,1 violent wind
அவன் ஆத் சமூகத்தை கடும் குளிர் காற்றினால் அழித்தான்.
69:7Page 566
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ ٧
Which He [i.e., Allāh] imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees.
அவன் ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் அவர்கள்மீது அக்காற்றை வீசச் செய்தான். அது அவர்கள் அனைவரையும் அடியுடன் அழித்தது. அவர்கள் பூமியில் அடியோடு விழுந்துவிட்ட பழைய இத்துப் போன பேரீச்சம் மரத்தின் அடிப்பகுதியைப் போன்று தங்களின் வீடுகளில் செத்துமடிந்தவர்களாக கிடந்திருப்பதை நீர் கண்டிருப்பீர்.
அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைக்குப் பிறகு அவர்களில் யாரேனும் எஞ்சியிருப்பதாக உமக்குத் தென்படுகிறார்களா?
69:9Page 567
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ٩
And there came Pharaoh and those before him and the overturned cities1 with sin.
ஃபிர்அவ்னும் அவனுக்கு முன் வந்த சமூகங்களும் தலைகீழாகப் புரட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஊரான லூத்தின் சமூகமும் தவறான காரியங்களான இணைவைப்பு, பாவங்களில் ஈடுபட்டார்கள்.
69:10Page 567
فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً ١٠
And they disobeyed the messenger of their Lord, so He seized them with a seizure exceeding [in severity].
அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின்பால் அனுப்பப்பட்ட தூதருக்கு மாறுசெய்து பொய்ப்பித்தார்கள்; ஆகவே அவர்களின் அழிவுக்கு மேலதிகமாகவும் அல்லாஹ் அவர்களை பிடித்தான்.
69:11Page 567
إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ ١١
Indeed, when the water overflowed, We carried you [i.e., your ancestors] in the sailing ship1
தண்ணீர் எல்லை மீறி உயர்ந்த போது நீங்கள் யாரின் முதுகந்தண்டில் இருந்தீர்களோ அவர்களை, நம் கட்டளையின் பேரில் நூஹ் செய்த ஓடக்கூடிய கப்பலில் ஏற்றினோம். அது உங்களை சுமந்து செல்லக்கூடியதாக இருந்தது.
69:12Page 567
لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ ١٢
That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it.
கப்பலையும் அதன் சம்பவத்தையும் நிராகரிப்பாளர்களை அழித்து, நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றியமைக்கான சான்றாக அமையும் அறிவுரையாக ஆக்குவதற்காகவும் கேட்பவற்றைப் பாதுகாக்கும் செவிகள் அதனை நினைவில் வைத்துக்கொள்வதற்காகவும்தான் இவ்வாறு செய்தோம்.
69:13Page 567
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ ١٣
Then when the Horn is blown with one blast
சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவர் இரண்டாவது முறையாக சூர் ஊதும்போது,
69:14Page 567
وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ ١٤
And the earth and the mountains are lifted and leveled with one blow [i.e., stroke] -
பூமியும் மலைகளும் உயர்த்தப்பட்டு ஒரே தடவையில் அவையிரண்டும் மோதி தூள்தூளாகிவிடும் போது வானம், பூமியின் பகுதிகள் சிதறி விடும்.
69:15Page 567
فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١٥
Then on that Day, the Occurrence [i.e., Resurrection] will occur,
இவையனைத்தும் நிகழும் நாளில் மறுமை நாள் நிகழ்ந்துவிடும்.
69:16Page 567
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ ١٦
And the heaven will split [open], for that Day it is infirm.1
அந்நாளில் வானவர்கள் வானத்திலிருந்து இறங்குவதனால் வானம் பிளந்துவிடும். உறுதியாக இருந்த அது அந்நாளில் பலவீனமடைந்து விடும்.
69:17Page 567
وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ ١٧
And the angels are at its edges. And there will bear the Throne of your Lord above them, that Day, eight [of them].
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்த மாபெரும் அந்நாளில் உம் இறைவனின் அர்ஷை நெருங்கிய எட்டு வானவர்கள் சுமந்து கொண்டிருப்பார்கள்.
69:18Page 567
يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ ١٨
That Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed.1
மனிதர்களே!- அந்த நாளில் நீங்கள் அல்லாஹ்வுக்கு முன் நிறுத்தப்படுவீர்கள். உங்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்காது. மாறாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருப்பான்.
69:19Page 567
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩
So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record!
யாருடைய செயல்பதிவேடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர் மகிழ்ச்சியுடன் கூறுவார்: “இதோ என் செயல்பதிவேட்டை எடுத்துக் கொண்டு படியுங்கள்.
69:20Page 567
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ٢٠
Indeed, I was certain that I would be meeting my account."
நிச்சயமாக நான் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு அவனை சந்தித்து கூலி வழங்கப்படுவேன் என்பதை உலகில் நான் உறுதியாக அறிந்திருந்தேன்.”
அவர் நிலையான அருட்கொடைகளைக் காண்பதால், திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
உயர்ந்த அந்தஸ்தையும் இடத்தையும் உடைய சுவனத்தில் இருப்பார்.
அதன் பழங்கள் பறிப்பதற்கு ஏதுவாக அருகிலிருக்கும்.
69:24Page 567
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ٢٤
[They will be told], "Eat and drink in satisfaction for what you put forth1 in the days past."
அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு கூறப்படும்: “நீங்கள் உலகில் கடந்த காலங்களில் செய்த நற்செயல்களின் காரணமாக உண்ணுங்கள், பருகுங்கள். அதில் எவ்வித பாதிப்பும் இருக்கமாட்டாது.
69:25Page 567
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ٢٥
But as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record
யாருடைய செயல்பதிவேடு அவரது இடக்கையில் கொடுக்கப்படுமோ அவர் கடுமையாக வருந்தி கூறுவார்: “அந்தோ! என் வேதனைக்குக் காரணமான நான் செய்த தீய செயல்களின் செயல்பதிவேடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்கக்கூடாதா!
நான் என் விசாரணையைக் குறித்து எதுவும் அறியாமல் இருந்துவிட்டேனே!
69:27Page 567
يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ٢٧
I wish it [i.e., my death] had been the decisive one.1
நான் மரணித்த அந்த மரணமே முடிவான மரணமாக இருந்திருக்க வேண்டுமே! அதன் பின்பு நான் மீண்டும் எழுப்பப்படாமலே இருந்திருக்க வேண்டுமே!
அல்லாஹ்வின் தண்டனையின் எந்த ஒன்றை விட்டும் என் செல்வங்கள் என்னை பாதுகாக்கவில்லையே!
நான் நம்பிக்கொண்டிருந்த ஆதாரமான பலமும் பதவியும் என்னைவிட்டும் மறைந்துவிட்டனவே!
அப்போது கூறப்படும்: “-வானவர்களே!- அவனைப் பிடியுங்கள். அவனது கையைக் கழுத்தோடு கட்டுங்கள்.
பின்னர் அவனை நரகத்தில் நுழைத்துவிடுங்கள், அதன் வெப்பத்தை அவன் அனுபவிப்பதற்காக.
69:32Page 567
ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ ٣٢
Then into a chain whose length is seventy cubits insert him."
பின்னர் எழுபது முளம் நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்.”
69:33Page 567
إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ٣٣
Indeed, he did not used to believe in Allāh, the Most Great,
நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளாதவனாக இருந்தான்.
69:34Page 567
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣٤
Nor did he encourage the feeding of the poor.
மற்றவர்களை ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டாதவனாக இருந்தான்.
69:35Page 568
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ٣٥
So there is not for him here this Day any devoted friend
மறுமை நாளில் அவனை வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடிய எந்த நெருங்கிய உறவினரும் இருக்க மாட்டார்.
69:36Page 568
وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ٣٦
Nor any food except from the discharge of wounds;
நரகவாசிகளின் உடல்களிலிருந்து வெளிப்படும் சீழ்சலங்களைத் தவிர அவனுக்கு உண்ணக்கூடிய வேறு எந்த உணவும் இல்லை.
பாவிகள்தாம் அந்த உணவை உண்பார்கள்.
நீங்கள் பார்க்கக்கூடியதைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.
நீங்கள் பார்க்காததைக்கொண்டும் அவன் சத்தியம் செய்துள்ளான்.
69:40Page 568
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ٤٠
[That] indeed, it [i.e., the Qur’ān] is the word of a noble Messenger.
நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ்வின் வாக்காகும். கண்ணியமிக்க அவனுடைய தூதர் அதனை மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
69:41Page 568
وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ ٤١
And it is not the word of a poet; little do you believe.
அது ஒரு கவிஞரின் சொல்லல்ல. ஏனெனில் அது கவிதை வடிவில் இல்லை. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கைகொள்கிறீர்கள்.
69:42Page 568
وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ٤٢
Nor the word of a soothsayer; little do you remember.
அது ஒரு சோதிடரின் சொல்லல்ல. சோதிட வார்த்தை குர்ஆனுக்கு முற்றிலும் மாறான ஒரு விடயமாகும். நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.
ஆயினும் அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
69:44Page 568
وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ٤٤
And if he [i.e., Muḥammad] had made up about Us some [false] sayings,
முஹம்மது நாம் கூறாதவற்றை நம்மீது புனைந்து கூறியிருந்தால்
நாம் அவரைத் தண்டித்திருப்போம். தம் வல்லமையால், பலத்தால் அவரது (வலக்கையைப்) பிடித்திருப்போம்.
பின்னர் அவரது இதயத்திற்குச் செல்லும் நரம்பைத் துண்டித்திருப்போம்.
69:47Page 568
فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ٤٧
And there is no one of you who could prevent [Us] from him.
அவரை விட்டும் உங்களில் யாராலும் நம்மைத் தடுக்க முடியாது. எனவே உங்களுக்காக நம்மீது அவர் புனைந்துகூறுவது சாத்தியமற்றதாகும்.
69:48Page 568
وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ ٤٨
And indeed, it [i.e., the Qur’ān] is a reminder for the righteous.
நிச்சயமாக குர்ஆன் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அறிவுரையாக இருக்கின்றது.
69:49Page 568
وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ٤٩
And indeed, We know that among you are deniers.
நிச்சயமாக உங்களில் இக்குர்ஆனைபொய்ப்பிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
69:50Page 568
وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٥٠
And indeed, it will be [a cause of] regret upon the disbelievers.
நிச்சயமாக குர்ஆனை பொய்ப்பிப்பது மறுமை நாளில் மாபெரும் கைசேதமாகும்.
நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்த சந்தேகமற்ற உறுதியான சத்தியமாகும்.
தூதரே!- உம் இறைவனுக்குப் பொருத்தமில்லாதவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துவீராக. மகத்தான உம் இறைவனின் பெயரை நினைவுகூர்வீராக.
Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences