Al-MukhtasarAl‑A'raf · 7:197–206

Al-Mukhtasar · Tafsir · in Tamil

Al-A'raf 7:197–206

7:197Page 176

وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَكُمۡ وَلَآ أَنفُسَهُمۡ يَنصُرُونَ ١٩٧

And those you call upon besides Him are unable to help you, nor can they help themselves."

இணைவைப்பாளர்களே!- நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் உங்களுக்கு உதவி புரியவோ தமக்குத்தாமே உதவி புரியவோ சக்திபெற மாட்டா. அவை எதற்கும் இயலாதவையாகும். அல்லாஹ்வை விடுத்து எவ்வாறு நீங்கள் அவற்றை வணங்குகிறீர்கள்?

7:198Page 176

وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَسۡمَعُواْۖ وَتَرَىٰهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ وَهُمۡ لَا يُبۡصِرُونَ ١٩٨

And if you invite them to guidance, they do not hear; and you see them looking at you while they do not see.

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் சிலைகளை நீங்கள் நேர்வழியின் பக்கம் அழைத்தாலும் உங்களின் அழைப்பை அவை செவியுற மாட்டா. அவை உங்களைப் பார்ப்பது போல் தோன்றும். ஆனால் அவை பார்க்கமுடியாத திண்மப் பொருளாகும். அவர்கள் மனித தோற்றத்தில் அல்லது பிற விலங்குகளின் தோற்றத்தில் சிலைகளைச் செய்பவர்களாக இருந்தனர். அவற்றிற்கு கைகள், கால்கள், கண்கள் இருந்தன. ஆனால் அவை உயிரோ அசைவோ அற்ற திண்மப்பொருளாக இருந்தன.

7:199Page 176

خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ١٩٩

Take what is given freely,1 enjoin what is good, and turn away from the ignorant.

தூதரே!- மக்களிடமிருந்து அவர்கள் மனமுவந்து செய்பவற்றையும் அவர்களுக்கு இயலுமான பண்புகளையும் செயல்களையும் பொருந்திக்கொள்வீராக! அவர்களின் இயல்புக்கு முரணானவற்றை அவர்கள் மீது திணித்துவிடாதீர். அது அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி விடும். அழகிய சொல்லையும் செயலையும் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிடுவீராக. மூடர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்களின் மூடத்தனத்தால் அவர்களை எதிர்கொண்டு விடாதீர். உமக்குத் தீங்கிழைத்தவருக்கு நீரும் தீங்கிழைக்க வேண்டாம். உமக்குத் வழங்காதவருக்கு நீரும் வழங்காமல் இருக்க வேண்டாம்.

7:200Page 176

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ ٢٠٠

And if an evil suggestion comes to you from Satan, then seek refuge in Allāh. Indeed, He is Hearing and Knowing.

தூதரே!- ஷைத்தான் உமக்கு ஏதேனும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விட்டதாக நீர் உணர்ந்தால் அல்லது நன்மையான செயலை விட்டும் உம்மைத் தடுத்தால் அல்லாஹ்வின்பால் அடைக்கலம் பெற்றுக் கொள்வீராக. அவனைப் பற்றிக் கொள்வீராக. ஏனெனில் நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவன் பக்கம் நீர் அடைக்கலம் தேடுவதை அவன் நன்கறிந்தவன். அவன் ஷைத்தானிடமிருந்து உம்மைப் பாதுகாப்பான்.

7:201Page 176

إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ ٢٠١

Indeed, those who fear Allāh - when an impulse touches them from Satan, they remember [Him] and at once they have insight.

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டத்தால் பாதிக்கப்பட்டு பாவங்கள் புரிந்தால் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பாவிகளுக்கு அவன் வழங்கும் தண்டனையையும் கீழ்ப்படிந்தவர்களுக்கு அவன் வழங்கும் நற்கூலியையும் நினைவுகூர்வார்கள். தங்களின் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பி விடுவார்கள். எனவே அவர்கள் சத்தியத்தில் நிலைத்து, தாம் செய்தவற்றிலிருந்து விழிப்படைந்து தவிர்ந்து கொள்வார்கள்.

7:202Page 176

وَإِخۡوَٰنُهُمۡ يَمُدُّونَهُمۡ فِي ٱلۡغَيِّ ثُمَّ لَا يُقۡصِرُونَ ٢٠٢

But their brothers1 - they [i.e., the devils] increase them in error; then they do not stop short.

ஷைத்தான்களின் சகோதரர்களான பாவிகள் மற்றும் நிராகரிப்பாளர்களை, ஷைத்தான்கள் ஒவ்வொரு பாவம் பாவமாக செய்ய வைத்து மென்மேலும் வழிகெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஷைத்தானும் வழிகெடுப்பதை விட்டு விடுவதில்லை. மனிதர்களில் உள்ள பாவிகளும் ஷைதான்களுக்கு வழிப்பட்டு தீங்கிழைப்பதை விட்டு விடுவதில்லை.

7:203Page 176

وَإِذَا لَمۡ تَأۡتِهِم بِـَٔايَةٖ قَالُواْ لَوۡلَا ٱجۡتَبَيۡتَهَاۚ قُلۡ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَيَّ مِن رَّبِّيۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٢٠٣

And when you, [O Muḥammad], do not bring them a sign [i.e., miracle], they say, "Why have you not contrived it?" Say, "I only follow what is revealed to me from my Lord. This [Qur’ān] is enlightenment from your Lord and guidance and mercy for a people who believe."

தூதரே!- நீர் ஏதேனும் சான்றினைக் கொண்டு வந்தால் உம்மை பொய்யர் என்று கூறி அதனைப் புறக்கணித்து விடுகிறார்கள். நீர் சான்றினைக் கொண்டு வரவில்லையெனில், “உம் புறத்திலிருந்து ஏதேனும் ஒரு சான்றினை புனைந்து கொண்டுவர வேண்டாமா” என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் புறத்திலிருந்து சுயமாக என்னால் சான்றினைக் கொண்டுவர முடியாது. அல்லாஹ் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்தக் குர்ஆன் உங்களைப் படைத்து உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் அல்லாஹ்விடமிருந்து சான்றுகளையும் ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது. அது நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது. நம்பிக்கை கொள்ளாதவர்களோ வழிகேடர்களாகவும் துர்பாக்கியசாலிகளாகவும் இருக்கின்றார்கள்.

7:204Page 176

وَإِذَا قُرِئَ ٱلۡقُرۡءَانُ فَٱسۡتَمِعُواْ لَهُۥ وَأَنصِتُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ٢٠٤

So when the Qur’ān is recited, then listen to it and pay attention that you may receive mercy.

குர்ஆன் படித்துக் காட்டப்பட்டால் படிப்பதை செவிசாய்த்துக் கேளுங்கள். அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டும் பொருட்டு படிக்கப்படும் பொழுது பேசவோ வேறு பணிகளில் ஈடுபடவோ செய்யாதீர்கள்.

7:205Page 176

وَٱذۡكُر رَّبَّكَ فِي نَفۡسِكَ تَضَرُّعٗا وَخِيفَةٗ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَٰفِلِينَ ٢٠٥

And remember your Lord within yourself in humility and in fear without being apparent in speech - in the mornings and the evenings. And do not be among the heedless.

தூதரே!- உம் இறைவனான அல்லாஹ்வை பணிவுடனும் பயத்துடனும் நினைவுகூர்வீராக. உமது பிரார்த்தனையில் உயர்ந்த சப்தமின்றியும் தாழ்ந்த சப்தமின்றியும் நடுநிலையைக் கடைப்பிடிப்பீராக. சிறப்பான இரு நேரங்களான பகலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரார்த்தனை புரிவீராக. அல்லாஹ்வின் நினைவை விட்டும் அலட்சியமாக இருப்பவர்களில் ஒருவராகிவிடாதீர்.

7:206Page 176

إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسۡجُدُونَۤ۩ ٢٠٦

Indeed, those who are near your Lord [i.e., the angels] are not prevented by arrogance from His worship, and they exalt Him, and to Him they prostrate.

தூதரே!- உம் இறைவனிடம் உள்ள வானவர்கள் அவனை வணங்குவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை. மாறாக சளைக்காமல் அவனுக்கே அடிபணிகிறார்கள். அவர்கள் இரவும் பகலும் அவனுக்குப் பொருத்தமற்ற விஷயங்களை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகிறார்கள். அவனுக்கு மட்டுமே அவர்கள் சிரம்பணிகிறார்கள்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском