Al-MukhtasarAl‑A'raf · 7:1–37

Al-Mukhtasar · Tafsir · in Tamil

الأعراف

Al-A'raf

The Heights · Meccan · 206 ayahs

7:1Page 151

الٓمٓصٓ ١

Alif, Lām, Meem, Ṣād.1

பார்க்க அல்பகரா என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனம்.

7:2Page 151

كِتَٰبٌ أُنزِلَ إِلَيۡكَ فَلَا يَكُن فِي صَدۡرِكَ حَرَجٞ مِّنۡهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ٢

[This is] a Book revealed to you, [O Muḥammad] - so let there not be in your breast distress therefrom - that you may warn thereby and as a reminder to the believers.

தூதரே! கண்ணியமிக்க குர்ஆன் அல்லாஹ் உம்மீது இறக்கிய வேதமாகும். எனவே உமது நெஞ்சில் அது குறித்து இறுக்கமோ சந்தேகமோ ஏற்பட்டு விட வேண்டாம். நீர் மக்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் ஆதாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுவதற்காகவும் இதனை அல்லாஹ் உம்மீது இறக்கியுள்ளான். ஏனெனில் நம்பிக்கையாளர்கள்தாம் நினைவூட்டலைக் கொண்டு பயனடைவார்கள்.

7:3Page 151

ٱتَّبِعُواْ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۗ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ٣

Follow, [O mankind], what has been revealed to you from your Lord and do not follow other than Him any allies. Little do you remember.

மனிதர்களே! உங்கள் இறைவன் உங்கள் மீது இறக்கிய வேதத்தையும் தூதரின் வழிமுறையையும் பின்பற்றுங்கள். ஷைத்தான்கள் அல்லது தீய பாதிரிகள் ஆகியோரில் நீங்கள் நண்பர்களாகக் கருதுவோரின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவர்களது மன இச்சைகள் கூறுவதற்காக அல்லாஹ் இறக்கியதை விட்டு விட்டு அவர்களை நேசம் கொள்கிறீர்கள். நீங்கள் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் சத்தியத்தை விட்டு விட்டு மற்றவற்றிற்கு முன்னுரிமை அளித்திருக்க மாட்டீர்கள்; உங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டிருப்பீர்கள்; அதனைத் தவிர மற்றவற்றை விட்டிருப்பீர்கள்.

7:4Page 151

وَكَم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا فَجَآءَهَا بَأۡسُنَا بَيَٰتًا أَوۡ هُمۡ قَآئِلُونَ ٤

And how many cities have We destroyed, and Our punishment came to them at night or while they were sleeping at noon.

நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உறுதியாக நிலைத்திருந்த எவ்வளவோ ஊர்களை நம் வேதனையால் அழித்திருக்கின்றோம். அவர்கள் இரவிலோ பகலிலோ அலட்சியத்தில் ஆழ்ந்திருந்த போது கடுமையான நம்முடைய வேதனை அவர்கள் மீது இறங்கியது. அவர்களால் வேதனையை விட்டும் தங்களைக் காத்துக் கொள்ளவும் முடியவில்லை; அவர்களின் பொய்யான தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றவில்லை.

7:5Page 151

فَمَا كَانَ دَعۡوَىٰهُمۡ إِذۡ جَآءَهُم بَأۡسُنَآ إِلَّآ أَن قَالُوٓاْ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ٥

And their declaration when Our punishment came to them was only that they said, "Indeed, we were wrongdoers!"

வேதனை இறங்கிய பிறகு அல்லாஹ்வை நிராகரித்த தங்களின் அக்கிரமத்தை ஒத்துக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

7:6Page 151

فَلَنَسۡـَٔلَنَّ ٱلَّذِينَ أُرۡسِلَ إِلَيۡهِمۡ وَلَنَسۡـَٔلَنَّ ٱلۡمُرۡسَلِينَ ٦

Then We will surely question those to whom [a message] was sent, and We will surely question the messengers.

மறுமை நாளில், எந்தெந்த சமூகங்களின்பால் தூதர்களை அனுப்பினோமோ அவர்களிடம், ‘தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்?’ என்று நிச்சயம் விசாரிப்போம். தூதர்கள் தங்களின் தூதை நிறைவேற்றினார்களா? அவர்களது சமூகங்கள் அவர்களுக்கு என்ன பதிலளித்தன என்று தூதர்களிடமும் விசாரித்தே தீருவோம்.

7:7Page 151

فَلَنَقُصَّنَّ عَلَيۡهِم بِعِلۡمٖۖ وَمَا كُنَّا غَآئِبِينَ ٧

Then We will surely relate [their deeds] to them with knowledge, and We were not [at all] absent.

படைப்புகள் அனைவரும், நமது அறிவுடனே இவ்வுலகில் செய்த செயல்கள் குறித்து நாம் அவர்களிடம் எடுத்துரைப்போம். அவர்களின் செயல்கள் அனைத்தையும் நாம் நன்கறிந்தவர்களாக இருந்தோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை. எந்த நேரத்திலும் நாம் அவர்களை விட்டு மறைந்தும் இருக்கவில்லை.

7:8Page 151

وَٱلۡوَزۡنُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّۚ فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٨

And the weighing [of deeds] that Day will be the truth. So those whose scales are heavy - it is they who will be the successful.

மறுமை நாளில் செயல்கள் அனைத்தும் எவ்வித அநீதியுமின்றி நீதியுடன் எடைபோடப்படும். எவர்களது நன்மையின் எடைத்தட்டு தீமையின் எடைத்தட்டை விட கனமாகி விடுமோ அவர்கள்தாம் விரும்பியதைப் பெற்று பயத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாவர்.

7:9Page 151

وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُم بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَظۡلِمُونَ ٩

And those whose scales are light - they are the ones who will lose themselves for what injustice they were doing toward Our verses.

எவர்களது தீமையின் எடைத்தட்டு நன்மையின் எடைத்தட்டைவிட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தன் காரணமாக மறுமை நாளில் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தி இழப்படைபவார்கள்.

7:10Page 151

وَلَقَدۡ مَكَّنَّٰكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَۗ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ١٠

And We have certainly established you upon the earth and made for you therein ways of livelihood. Little are you grateful.

ஆதமின் மக்களே! நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் நீங்கள் வாழ்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினோம். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது உங்கள் மீது கடமையாயிருந்தது. ஆனாலும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்தினீர்கள்.

7:11Page 151

وَلَقَدۡ خَلَقۡنَٰكُمۡ ثُمَّ صَوَّرۡنَٰكُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ لَمۡ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ ١١

And We have certainly created you, [O mankind], and given you [human] form. Then We said to the angels, "Prostrate to Adam"; so they prostrated, except for Iblees.1 He was not of those who prostrated.

மனிதர்களே! நாம் உங்களின் தந்தை ஆதமைப் படைத்தோம். பின்னர் அவருக்கு அழகிய தோற்றமும் வடிவமும் கொடுத்தோம். பின்னர் அவரைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு அவருக்கு சிரம்பணியுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர. அவன் கர்வம் மற்றும் பிடிவாதம் காரணமாக சிரம்பணிய மறுத்தான்.

7:12Page 152

قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسۡجُدَ إِذۡ أَمَرۡتُكَۖ قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ١٢

[Allāh] said, "What prevented you from prostrating when I commanded you?" [Satan] said, "I am better than him. You created me from fire and created him from clay [i.e., earth]."

அல்லாஹ் இப்லீஸைக் கண்டித்தவாறு கேட்டான்: “என் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிவதிலிருந்து எது உன்னைத் தடுத்தது?” இப்லீஸ் தன் இறைவனிடம் பின்வருமாறு பதில் கூறினான்: “நான் அவரைவிடச் சிறந்தவன் என்பதே என்னைத் தடுத்தது. நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய். அவரையோ மண்ணிலிருந்துதான் படைத்தாய். நெருப்பு மண்ணைவிடச் சிறந்தது.”

7:13Page 152

قَالَ فَٱهۡبِطۡ مِنۡهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخۡرُجۡ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ ١٣

[Allāh] said, "Descend from it [i.e., Paradise], for it is not for you to be arrogant therein. So get out; indeed, you are of the debased."

அல்லாஹ் அவனிடம் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து இறங்கிவிடு. இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமையில்லை. ஏனெனில் இது தூய்மையானவர்கள் வசிக்கும் இடமாகும். இங்கு வசிப்பதற்கு உனக்கு அனுமதியில்லை. இப்லீஸே! நீ ஆதமை விடச் சிறந்தவன் என்று உன்னை நினைத்தாலும் நிச்சயமாக நீ இழிவுற்ற அற்பர்களில் ஆகிவிட்டாய்.”

7:14Page 152

قَالَ أَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ١٤

[Satan] said, "Reprieve me until the Day they are resurrected."

இப்லீஸ் கேட்டான்: “மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு. நான் மனிதர்களில் என்னால் வழிகெடுக்க முடிந்தவர்களை வழிகெடுத்துவிடுவேன்.“

7:15Page 152

قَالَ إِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ١٥

[Allāh] said, "Indeed, you are of those reprieved."

அதற்கு அல்லாஹ் கூறினான்: “இப்லீஸே, முதல் சூர் ஊதப்படும் தினம் மரணம் விதிக்கப்பட்டுள்ள அவகாசம் வழங்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன். அப்போது படைப்புகள் அனைத்தும் மரணித்து அல்லாஹ் மாத்திரமே எஞ்சியருப்பான்.”

7:16Page 152

قَالَ فَبِمَآ أَغۡوَيۡتَنِي لَأَقۡعُدَنَّ لَهُمۡ صِرَٰطَكَ ٱلۡمُسۡتَقِيمَ ١٦

[Satan] said, "Because You have put me in error, I will surely sit in wait for them [i.e., mankind] on Your straight path.

இப்லீஸ் கூறினான்: “உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நான் ஆதமுக்கு சிரம்பணிய மறுத்ததனால் நீ என்னை வழிகெடுத்துவிட்ட காரணத்தால் ஆதமுடைய மக்களை வழிகெடுப்பதற்காக உன்னுடைய நேரான வழியின் மீது அமர்ந்து கொள்வேன். அவர்களது தந்தை ஆதமுக்கு சிரம்பணியாமல் நான் வழிகெட்டது போன்று அவர்களையும் நேரான பாதையை விட்டும் திசைதிருப்பி வழிகெடுத்தே தீருவேன்.”

7:17Page 152

ثُمَّ لَأٓتِيَنَّهُم مِّنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ وَعَنۡ أَيۡمَٰنِهِمۡ وَعَن شَمَآئِلِهِمۡۖ وَلَا تَجِدُ أَكۡثَرَهُمۡ شَٰكِرِينَ ١٧

Then I will come to them from before them and from behind them and on their right and on their left, and You will not find most of them grateful [to You]."

“எல்லா புறங்களிலிருந்தும் அவர்களிடம் நான் வருவேன். அவர்களை மறுமையின் மீது பற்றற்றவர்களாக்கி உலகத்தின் மீது மோகம் கொள்ள வைப்பேன். அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டுபண்ணுவேன். அவர்களின் மனஇச்சைகளை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுவேன். நன்றி மறக்குமாறு நான் அவர்களுக்குக் கூறுவதனால் அவர்களில் பெரும்பாலோரை உனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களாக நீ காணமாட்டாய்.”

7:18Page 152

قَالَ ٱخۡرُجۡ مِنۡهَا مَذۡءُومٗا مَّدۡحُورٗاۖ لَّمَن تَبِعَكَ مِنۡهُمۡ لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكُمۡ أَجۡمَعِينَ ١٨

[Allāh] said, "Depart from it [i.e., Paradise], reproached and expelled. Whoever follows you among them - I will surely fill Hell with you, all together."

அல்லாஹ் அவனிடம் கூறினான்: “என் அருளிலிருந்து விரட்டப்பட்டவனாக, இழிவடைந்தவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேறி விடு. மறுமையில் உன்னையும் உன்னைப் பின்பற்றி உனக்கு வழிப்பட்டு தனது இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்வோரையும் கொண்டு நரகத்தை நான் நிரப்புவேன்.”

7:19Page 152

وَيَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ فَكُلَا مِنۡ حَيۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ ١٩

And "O Adam, dwell, you and your wife, in Paradise and eat from wherever you will but do not approach this tree, lest you be among the wrongdoers."

அல்லாஹ் ஆதமிடம் கூறினான்: “ஆதமே! நீரும் உம் மனைவி ஹவ்வாவும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கு தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியவற்றை உண்ணுங்கள். இந்த மரத்திலிருந்து (அவர்களுக்கு ஒரு மரத்தை அல்லாஹ் குறிப்பிட்டான்.) மட்டும் உண்டுவிடாதீர்கள். நான் தடுத்ததற்குப் பிறகும் நீங்கள் அதிலிருந்து உண்டு விட்டால் என் வரம்புகளை மீறியவர்களாகி விடுவீர்கள்.

7:20Page 152

فَوَسۡوَسَ لَهُمَا ٱلشَّيۡطَٰنُ لِيُبۡدِيَ لَهُمَا مَا وُۥرِيَ عَنۡهُمَا مِن سَوۡءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنۡ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيۡنِ أَوۡ تَكُونَا مِنَ ٱلۡخَٰلِدِينَ ٢٠

But Satan whispered to them to make apparent to them that which was concealed from them of their private parts. He said, "Your Lord did not forbid you this tree except that you become angels or become of the immortal."

அவர்களிருவரை விட்டும் மறைக்கப்பட்டுள்ள அவர்களின் வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக இப்லீஸ் அவர்கள் இருவருக்கும் ஊசலாட்ட வார்த்தையை உண்டாக்கினான். அவர்கள் இருவரிடமும் கூறினான்: “நீங்கள் இருவரும் வானவர்களாவதையும் சுவனத்தில் நிரந்தரமாக இருப்பவர்களாக ஆகிவிடுவிடுவதையும் விரும்பாததனால்தான் இந்த மரத்திலிருந்து உண்பதை விட்டும் உங்களை அல்லாஹ் தடுத்துள்ளான்.”

7:21Page 152

وَقَاسَمَهُمَآ إِنِّي لَكُمَا لَمِنَ ٱلنَّٰصِحِينَ ٢١

And he swore [by Allāh] to them, "Indeed, I am to you from among the sincere advisors."

அவன் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினான்: “நிச்சயமாக நான் உங்கள் இருவருக்கும் வழங்கிய ஆலோசனையில் விசுவாசம் மிக்கவனாவேன்.”

7:22Page 152

فَدَلَّىٰهُمَا بِغُرُورٖۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمۡ أَنۡهَكُمَا عَن تِلۡكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمَا عَدُوّٞ مُّبِينٞ ٢٢

So he made them fall, through deception. And when they tasted of the tree, their private parts became apparent to them, and they began to fasten together over themselves from the leaves of Paradise. And their Lord called to them, "Did I not forbid you from that tree and tell you that Satan is to you a clear enemy?"

ஏமாற்றி அவர்களின் உயர்ந்த இடத்திலிருந்து அவர்களை இறக்கினான். தடுக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து அவர்கள் உண்டபோது அவர்கள் இருவருடைய வெட்கத்தலங்களும் வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைக்க முயற்சித்தார்கள். அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இந்த மரத்திலிருந்து உண்ணக் கூடாது என்று நான் உங்களைத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். எனவே அவன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?

7:23Page 153

قَالَا رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ٢٣

They said, "Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers."

ஆதமும் ஹவ்வாவும் பிரார்த்தித்தார்கள்: “எமது இறைவா! குறிப்பிட்ட மரத்திலிருந்து உண்ண வேண்டாம் என நீ தடுத்ததைச் செய்து, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் மீது கருணை காட்டவில்லையெனில் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உள்ள எமது பங்கைத் தவறவிட்டு நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்.”

7:24Page 153

قَالَ ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ٢٤

[Allāh] said, "Descend, being to one another enemies. And for you on the earth is a place of settlement and enjoyment [i.e., provision] for a time."

ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் இப்லீசுக்கும் அல்லாஹ் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடம் உண்டு. குறிப்பிட்ட தவணைவரை அதிலுள்ளவற்றை அனுபவிக்கவும் முடியும்.”

7:25Page 153

قَالَ فِيهَا تَحۡيَوۡنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنۡهَا تُخۡرَجُونَ ٢٥

He said, "Therein you will live, and therein you will die, and from it you will be brought forth."

ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் அல்லாஹ் கூறினான்: “இப்பூமியிலே அல்லாஹ் நிர்ணயித்த தவணை வரை நீங்கள் வாழ்வீர்கள். இங்குதான் மரணிப்பீர்கள், அடக்கம் செய்யப்படுவீர்கள். உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்தே நீங்கள் மீண்டும் எழுப்பபடுவீர்கள்.

7:26Page 153

يَٰبَنِيٓ ءَادَمَ قَدۡ أَنزَلۡنَا عَلَيۡكُمۡ لِبَاسٗا يُوَٰرِي سَوۡءَٰتِكُمۡ وَرِيشٗاۖ وَلِبَاسُ ٱلتَّقۡوَىٰ ذَٰلِكَ خَيۡرٞۚ ذَٰلِكَ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ ٢٦

O children of Adam, We have bestowed upon you clothing to conceal your private parts and as adornment. But the clothing of righteousness - that is best. That is from the signs of Allāh that perhaps they will remember.

ஆதமுடைய மக்களே! உங்களின் வெட்கத்தலங்களை மறைப்பதற்கு அத்தியவசியமான ஆடைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம். மக்களிடத்தில் உங்களை அழகுபடுத்தும் பரிபூரணமான ஆடைகளையும் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நீங்கள் கடைப்பிடிக்கும் தக்வா என்னும் ஆடையே வெளிரங்கமான இந்த ஆடையை விட மிகச் சிறந்ததாகும். மேற்குறிப்பிட்ட இந்த ஆடை அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவையாகும். இது, அவன் உங்கள் மீது புரிந்த அருட்கொடைகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நீங்கள் நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

7:27Page 153

يَٰبَنِيٓ ءَادَمَ لَا يَفۡتِنَنَّكُمُ ٱلشَّيۡطَٰنُ كَمَآ أَخۡرَجَ أَبَوَيۡكُم مِّنَ ٱلۡجَنَّةِ يَنزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوۡءَٰتِهِمَآۚ إِنَّهُۥ يَرَىٰكُمۡ هُوَ وَقَبِيلُهُۥ مِنۡ حَيۡثُ لَا تَرَوۡنَهُمۡۗ إِنَّا جَعَلۡنَا ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ٢٧

O children of Adam, let not Satan tempt you as he removed your parents from Paradise, stripping them of their clothing1 to show them their private parts. Indeed, he sees you, he and his tribe, from where you do not see them. Indeed, We have made the devils allies to those who do not believe.

ஆதமுடைய மக்களே! பாவங்களை அலங்கரித்துக் காட்டி வெட்கத்தலங்களை மறைக்கும் வெளிரங்கமான ஆடையையோ தக்வா எனும் ஆடையையோ விட்டுவிடுமாறு ஷைத்தான் பாவத்தை உங்களுக்கு அலங்கரித்து ஏமாற்றிவிட வேண்டாம். தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்பதை அலங்கரித்துக் காட்டி உங்களின் தந்தையையும் தாயையும் அவன் ஏமாற்றி அதன் விளைவாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. ஷைத்தானும் அவனுடைய சந்ததிகளும் உங்களைப் பார்க்கிறார்கள். உங்களால் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவனிடமிருந்தும் அவனுடைய சந்ததிகளிடமிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நாம் ஷைத்தானை நேசர்களாக ஆக்கியுள்ளோம். நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்கள் மீது அவன் ஆதிக்கம் செலுத்த முடியாது.

7:28Page 153

وَإِذَا فَعَلُواْ فَٰحِشَةٗ قَالُواْ وَجَدۡنَا عَلَيۡهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَاۗ قُلۡ إِنَّ ٱللَّهَ لَا يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٢٨

And when they commit an immorality, they say, "We found our fathers doing it, and Allāh has ordered us to do it." Say, "Indeed, Allāh does not order immorality. Do you say about Allāh that which you do not know?"

இணைவைப்பாளர்கள் இணைவைப்பு, நிர்வாணமாக கஃபாவை வலம் வருதல் போன்ற ஏதேனும் மிக மோசமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, தங்கள் முன்னோர்களும் இவ்வாறே செய்து கொண்டிருந்ததாகவும், அல்லாஹ்தான் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான் என்றும் காரணம் கூறுகின்றனர். முஹம்மதே! நீர் அவர்களுக்கு மறுப்பாகக் கூறுவீராக: “அல்லாஹ் பாவங்கள் புரியும்படி ஏவமாட்டான். மாறாக பாவங்கள் புரிவதைத் தடுக்கிறான். அவ்வாறிருக்கும் போது அவன்தான் பாவங்களை ஏவினான் என எவ்வாறு கூறலாம்? இணைவைப்பாளர்களே! நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?”

7:29Page 153

قُلۡ أَمَرَ رَبِّي بِٱلۡقِسۡطِۖ وَأَقِيمُواْ وُجُوهَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۚ كَمَا بَدَأَكُمۡ تَعُودُونَ ٢٩

Say, [O Muḥammad], "My Lord has ordered justice and that you direct yourselves [to the Qiblah] at every place [or time] of prostration, and invoke Him, sincere to Him in religion." Just as He originated you, you will return [to life] -

முஹம்மதே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நீதியாக நடக்கும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். மானக்கேடானவற்றையும் தீயவற்றையும் அவன் கட்டளையிடுவதில்லை. பொதுவாகவும் குறிப்பாக பள்ளிவாயில்களிலும் அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை உரித்தாக்க வேண்டும், அவனிடம் மட்டுமே கீழ்ப்படிந்து பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஆரம்பத்தில் இல்லாததிலிருந்து உங்களைப் படைத்தது போன்று மீண்டும் உயிரோடு உங்களைக் கொண்டுவருவான். உங்களை ஆரம்பத்தில் படைத்தவன் உங்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஆற்றலுடையவன்.

7:30Page 153

فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيۡهِمُ ٱلضَّلَٰلَةُۚ إِنَّهُمُ ٱتَّخَذُواْ ٱلشَّيَٰطِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ ٣٠

A group [of you] He guided, and a group deserved [to be in] error. Indeed, they [i.e., the latter] had taken the devils as allies instead of Allāh while they thought that they were guided.

அல்லாஹ் மனிதர்களை இரு பிரிவினராக ஆக்கியுள்ளான். அவர்களில் ஒரு பிரிவினருக்கு நேர்வழிகாட்டி நேர்வழிக்கான வழிகளையும் அவர்களுக்கு இலகுபடுத்தி தடைகளையும் அகற்றியுள்ளான். மற்றொரு பிரிவினர் மீது நேர்வழியை விட்டும் வழிகேடு உறுதியாகிவிட்டது. அதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை நேசர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறியாமையினால் அந்த ஷைத்தான்களுக்குக் கட்டுப்பட்டார்கள். தாங்கள் நேர்வழியில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

7:31Page 154

۞ يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ ٣١

O children of Adam, take your adornment [i.e., wear your clothing] at every masjid,1 and eat and drink, but be not excessive. Indeed, He likes not those who commit excess.

ஆதமுடைய மக்களே! உங்களின் மறைவிடங்களை மறைத்து, உங்களை அழகுபடுத்தும் தூய்மையான ஆடையை தொழுகையின்போதும் தவாபின் போதும் அணிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனுமதித்த தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள், பருகுங்கள். அவற்றில் நடுநிலையை மீறாதீர்கள். அனுமதிக்கப்பட்டதை மீறி தடைசெய்யப்பட்டதற்கு சென்றுவிடாதீர்கள். நிச்சயமாக நடுநிலையைப் பேணாமல் வரம்புமீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை.

7:32Page 154

قُلۡ مَنۡ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِيٓ أَخۡرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزۡقِۚ قُلۡ هِيَ لِلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا خَالِصَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ٣٢

Say, "Who has forbidden the adornment of [i.e., from] Allāh which He has produced for His servants and the good [lawful] things of provision?" Say, "They are for those who believed during the life of this world, exclusively [for them] on the Day of Resurrection." Thus do We detail the verses for a people who know.

தூதரே! அல்லாஹ் அனுமதித்த ஆடையையும் தூய்மையான உணவுகளையும் தடைசெய்யும் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “உங்களை அழகுபடுத்தக்கூடிய ஆடையை உங்களுக்குத் தடைசெய்தது யார்? அவன் வழங்கிய தூய்மையான உணவுகளையும் பானங்களையும் பிற பொருள்களையும் உங்களுக்குத் தடைசெய்தது யார்? தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூய்மையான இந்த பொருள்கள் இவ்வுலகில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கியவையாகும். இவ்வுலகில் நம்பிக்கையாளர்களைத் தவிர மற்றவர்களும் அதில் பங்கு பெற்றாலும் மறுமை நாளில் இவை நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உரியவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு அவற்றில் எந்தப் பங்கும் கிடைக்காது. ஏனெனில் சுவனம் நிராகரிப்பாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விளக்கத்தின் மூலம் நாம் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகின்றோம். அவர்கள்தாம் இவற்றைக் கொண்டு பயனடைவார்கள்.

7:33Page 154

قُلۡ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَ وَٱلۡإِثۡمَ وَٱلۡبَغۡيَ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَأَن تُشۡرِكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٣٣

Say, "My Lord has only forbidden immoralities - what is apparent of them and what is concealed - and sin,1 and oppression without right, and that you associate with Allāh that for which He has not sent down authority, and that you say about Allāh that which you do not know."

தூதரே! அல்லாஹ் அனுமதித்ததைத் தடைசெய்யும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது வெளிப்படையான மறைமுகமான மானக்கேடானவற்றைத் தடைசெய்துள்ளான். அவை அருவருப்பான பாவங்களாகும். அனைத்துப் பாவங்களையும் மக்களின் உயிர்களிலும் செல்வங்களிலும் மானங்களிலும் வரம்புமீறுவதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குவதையும் அவன் தடைசெய்துள்ளான். அதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவனுடைய பெயர்களில், பண்புகளில், செயல்களில் மார்க்கத்தில் அறிவின்றி அவன் மீது அவதூறு கூறுவதையும் அவன் தடைசெய்துள்ளான்.

7:34Page 154

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٞۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَأۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ٣٤

And for every nation is a [specified] term. So when their time has come, they will not remain behind an hour, nor will they precede [it].

ஒவ்வொரு தலைமுறையின் காலக்கெடுவும் காலம் குறிப்பிடப்பட்டதாகும். நிர்ணயிக்கப்பட்ட அவர்களின் தவணை வந்துவிட்டால் அதளை விட்டும் சிறிதளவேனும் பிந்தவோ முந்தவோ மாட்டார்கள்.

7:35Page 154

يَٰبَنِيٓ ءَادَمَ إِمَّا يَأۡتِيَنَّكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَقُصُّونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِي فَمَنِ ٱتَّقَىٰ وَأَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٣٥

O children of Adam, if there come to you messengers from among you relating to you My verses [i.e., scriptures and laws], then whoever fears Allāh and reforms - there will be no fear concerning them, nor will they grieve.

ஆதமுடைய மக்களே! உங்களின் சமூகங்களிலிருந்து என் தூதர்கள் உங்களிடம் வந்து நான் அவர்களுக்கு இறக்கிய எனது வேதத்தை உங்களுக்கு ஓதிக் காட்டினால் நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்படுங்கள்; அவர்கள் கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் அச்சம்கொள்ள மாட்டார்கள். தவறிவிட்ட உலக பாக்கியங்களை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்

7:36Page 154

وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٣٦

But the ones who deny Our verses and are arrogant toward them - those are the companions of the Fire; they will abide therein eternally.

நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரிப்பவர்கள், கர்வத்தினால் தங்களின் தூதர்கள் கொண்டுவந்ததன்படி செயல்பட மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.

7:37Page 154

فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ أُوْلَٰٓئِكَ يَنَالُهُمۡ نَصِيبُهُم مِّنَ ٱلۡكِتَٰبِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمۡ رُسُلُنَا يَتَوَفَّوۡنَهُمۡ قَالُوٓاْ أَيۡنَ مَا كُنتُمۡ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ ٣٧

And who is more unjust than one who invents about Allāh a lie or denies His verses? Those will attain their portion of the decree1 until, when Our messengers [i.e., angels] come to them to take them in death, they will say, "Where are those you used to invoke besides Allāh?" They will say, "They have departed from us," and will bear witness against themselves that they were disbelievers.

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து அல்லது குறை கூறி அல்லது அவன் கூறாததைக் கூறி அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது நேரான வழியைக் காட்டும் அவனுடைய வசனங்களை மறுப்பவனைவிட அக்கிரமக்காரன் வேறு யாருமில்லை. இந்த பண்புகளை உடையவர்கள், இவ்வுலக இன்பங்களில் லவ்ஹுல் மஃபூல் என்னும் ஏட்டில் தமக்கு எழுதப்பட்ட பங்கான நன்மை தீமையைப் பெறுவார்கள். இறுதியில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் அவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வரும் போது அவர்களைக் கண்டித்தவாறு அவர்களிடம் கேட்பார்கள், “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்கே? உங்களுக்குப் பயனளிப்பதற்காக அவற்றை அழையுங்கள்.” இணைவைப்பாளர்கள் வானவர்களிடம் கூறுவார்கள், “நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்களைவிட்டும் காணாமல் போய்விட்டன. அவை எங்கே இருக்கின்றன? என்று எங்களுக்குத் தெரியாது. தாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் ஏற்றுக் கொள்வது அவருக்கு எதிரான ஆதாரமாகவே அமையும். அது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском