Al-MukhtasarAl‑A'raf · 7:69–100

Al-Mukhtasar · Tafsir · in Tamil

Al-A'raf 7:69–100

7:69Page 159

أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ قَوۡمِ نُوحٖ وَزَادَكُمۡ فِي ٱلۡخَلۡقِ بَصۜۡطَةٗۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ٦٩

Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you? And remember when He made you successors after the people of Noah and increased you in stature extensively. So remember the favors of Allāh that you might succeed."

வானவர் இனத்தையோ ஜின் இனத்தையோ சாராத உங்கள் இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் வாயிலாக உங்களை எச்சரிப்பதற்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வந்துள்ளது உங்களை ஆச்சரியமூட்டுகிறதா? பூமியில் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தியதற்கும், தமது நிராகரிப்பினால் அழிந்துபோன நூஹ் நபியின் சமூகத்திற்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கியதற்கும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு உடல் பலத்தையும் வலிமையையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து தப்பித்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த விசாலமான அருட்கொடைகளை நினைவுகூருங்கள்.

7:70Page 159

قَالُوٓاْ أَجِئۡتَنَا لِنَعۡبُدَ ٱللَّهَ وَحۡدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٧٠

They said, "Have you come to us that we should worship Allāh alone and leave what our fathers have worshipped? Then bring us what you promise us,1 if you should be of the truthful."

அவருடைய சமூகத்தார் அவரிம் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டுவிட வேண்டும் என்று கூறுவதற்காகவா எங்களிடம் வந்துள்ளீர்? உமது வாதத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நேரும் என நீர் எச்சரிக்கும் வேதனையைக் கொண்டுவாரும்.”

7:71Page 159

قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ٧١

[Hūd] said, "Already have defilement and anger fallen upon you from your Lord. Do you dispute with me concerning [mere] names you have named them,1 you and your fathers, for which Allāh has not sent down any authority? Then wait; indeed, I am with you among those who wait."

ஹூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் வேதனையையும் கோபத்தையும் நீங்கள் உங்கள் மீது கடமையாக்கிக் கொண்டீர்கள். அது சந்தேகமில்லாமல் நிச்சயம் உங்களை அடைந்தே தீரும். எவ்வித யதார்த்தமும் இன்றி நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக பெயர்சூட்டிக்கொண்ட சிலைகளுக்காகவா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவைகளுக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்பதற்கு ஆதாரம் கூறும் வகையில் அல்லாஹ் எந்தவொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் அவசரப்படும் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது நிகழ்ந்தே தீரும்.

7:72Page 159

فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ وَمَا كَانُواْ مُؤۡمِنِينَ ٧٢

So We saved him and those with him by mercy from Us. And We eliminated those who denied Our signs, and they were not [at all] believers.

ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் நாம் காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்தவர்களை அடியோடு அழித்துவிட்டோம். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவில்லை. மாறாக நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள். வேதனைக்குத் தகுதியாகிவிட்டார்கள்.

7:73Page 159

وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٌ أَلِيمٞ ٧٣

And to the Thamūd [We sent] their brother Ṣāliḥ. He said, "O my people, worship Allāh; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. This is the she-camel of Allāh [sent] to you as a sign. So leave her to eat within Allāh's land and do not touch her with harm, lest there seize you a painful punishment.

நாம் ஸமூத் சமூகத்திற்கு அவர்களது சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதன்பால் அவர்களை அழைத்தார். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரமும் உங்களிடம் வந்துள்ளது. அது பாறையிலிருந்து வெளியான பெண் ஒட்டகமாகும். அது நீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது. உங்களுக்கும் குடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் உண்டு. அதனை அல்லாஹ்வின் பூமியில் மேய விடுங்கள். அதனைப் பராமரிப்பதில் உங்கள் மீது எந்தப் பொறுப்பும் இல்லை. அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள். தீங்கிழைத்தால் அதன் காரணமாக வேதனை மிக்க தண்டனை உங்களை அடையும்.

7:74Page 160

وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ عَادٖ وَبَوَّأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورٗا وَتَنۡحِتُونَ ٱلۡجِبَالَ بُيُوتٗاۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ٧٤

And remember when He made you successors after the ʿAad and settled you in the land, [and] you take for yourselves palaces from its plains and carve from the mountains, homes. Then remember the favors of Allāh and do not commit abuse on the earth, spreading corruption."

ஆத் சமூகம் பொய் கூறி, நிராகரிப்பில் நிலைத்திருந்ததால் அவர்களை அழித்த பிறகு அவர்களுக்குப் பின் நீங்கள் தோன்றியுள்ளீர்கள். உங்களது இடத்தில் உங்களை வாழவைத்து, அதில் நீங்கள் அனுபவித்துக்கொண்டு, உங்களது தேவைகளை அடைந்துகொள்வோராக உங்களை ஆக்கி உங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருளை நினைத்துப்பாருங்கள். பூமியின் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத் திரிவதை விட்டுவிடுங்கள். அது இறைவனை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிடுவதாகும்.

7:75Page 160

قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِمَنۡ ءَامَنَ مِنۡهُمۡ أَتَعۡلَمُونَ أَنَّ صَٰلِحٗا مُّرۡسَلٞ مِّن رَّبِّهِۦۚ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلَ بِهِۦ مُؤۡمِنُونَ ٧٥

Said the eminent ones who were arrogant among his people to those who were oppressed - to those who believed among them, "Do you [actually] know that Ṣāliḥ is sent from his Lord?" They said, "Indeed we, in that with which he was sent, are believers."

அவரது சமூகத்தில் கர்வம் கொண்ட தலைவர்களும் பெரியவர்களும் தாங்கள் பலவீனர்களாகக் கருதிய நம்பிக்கையாளர்களிடம் கேட்டார்கள்: “நம்பிக்கையாளர்களே! ஸாலிஹ் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை உண்மையாகவே நீங்கள் அறிவீர்களா?” பலவீனமாக கருதப்பட்ட நம்பிக்கையாளர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் எதைக் கொண்டு எங்களிடம் அனுப்பப்பட்டாரோ அதை நாங்கள்உண்மைப்படுத்துகிறோம், ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் அடிபணிகிறோம். அதன் சட்டங்களின்படி செயல்படுவோம்.”

7:76Page 160

قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا بِٱلَّذِيٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ ٧٦

Said those who were arrogant, "Indeed we, in that which you have believed, are disbelievers."

அவரது சமூகத்தில் கர்வம் கொண்டவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏற்றுக் கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். ஒருபோதும் அதன்மீது நம்பிக்கை கொள்ளவோ அதன்படி செயல்படவோ மாட்டோம்.”

7:77Page 160

فَعَقَرُواْ ٱلنَّاقَةَ وَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ وَقَالُواْ يَٰصَٰلِحُ ٱئۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ ٧٧

So they hamstrung the she-camel and were insolent toward the command of their Lord and said, "O Ṣāliḥ, bring us what you promise us, if you should be of the messengers."

எந்த ஒட்டகத்துக்கு அவர்கள் எத்தீங்கும் இழைத்துவிடக் கூடாது என அவர் அவர்களைத் தடைசெய்தாரோ அதனை, அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் கர்வம் கொண்டு அறுத்து விட்டார்கள். பரிகாசமாகவும் ஸாலிஹ் எச்சரிக்கும் விஷயம் சாத்தியமற்றது என்று கருதியும் அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் எச்சரித்த வேதனை மிக்க தண்டனையை எங்களிடம் கொண்டுவாரும்.”

7:78Page 160

فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ ٧٨

So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone.

நிராகரிப்பாளர்கள் அவசரமாக விரும்பிய வேதனை அவர்களிடம் வந்தது. கடுமையான பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. பூமியில் முகங்குப்புற வீழ்ந்து கிடப்பவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களில் எவரும் அதிலிருந்து தப்ப முடியவில்லை.

7:79Page 160

فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَالَةَ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ ٧٩

And he [i.e., Ṣāliḥ] turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the message of my Lord and advised you, but you do not like advisors."

தனது சமூகம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கையிழந்த பிறகு ஸாலிஹ் அவர்களைப் புறக்கணித்துவிட்டார். அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டதை நான் எடுத்துரைத்துவிட்டேன். உங்களுக்கு அச்சமூட்டி, ஆர்வமூட்டி அறிவுரை கூறிவிட்டேன். ஆயினும் நன்மையின்பால் ஆர்வமூட்டி தீமையை விட்டுத் தடுப்பதில் ஆர்வமுள்ள நலம் விரும்பிகளை நீங்கள் விரும்புவதில்லை.”

7:80Page 160

وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ ٨٠

And [We had sent] Lot when he said to his people, "Do you commit such immorality as no one has preceded you with from among the worlds [i.e., peoples]?

லூத் தனது சமூகத்தைக் கண்டித்தவராகக் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக: “ஓரினச் சேர்க்கை என்னும் அருவருப்பான காரியத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? நீங்கள் புதிதாகஉருவாக்கியுள்ள இந்தக் காரியத்தில் உங்களுக்கு முன் எவரும் ஈடுபடவில்லை.

7:81Page 160

إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ شَهۡوَةٗ مِّن دُونِ ٱلنِّسَآءِۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ ٨١

Indeed, you approach men with desire, instead of women. Rather, you are a transgressing people."

உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்வதற்காக உங்களுக்காக படைக்கப்பட்ட பெண்களை விடுத்து ஆண்களிடம் செல்கிறீர்கள். அறிவுக்கும் இயல்புக்கும் மார்க்கத்திற்கும் மாற்றமான காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். உங்களது இச்செயலில் பகுத்தறிவு, கேட்டறிவு, மனித இயல்பு ஆகிய எதனையும் பின்பற்றவில்லை. மனித வரம்பை மீறி ஆரோக்கியமான சிந்தனை, நல் இயல்பை விட்டும் நெறிபிறழ்ந்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிவிட்டீர்கள்.

7:82Page 161

وَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوهُم مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ ٨٢

But the answer of his people was only that they said, "Evict them from your city! Indeed, they are men who keep themselves pure."

அருவருப்பான இந்த காரியத்தை விட்டும் அவர் தம் சமூகத்தினரைத் தடுத்த போது சத்தியத்தைப் புறக்கணித்தவர்களாகக் கூறினார்கள்: “லூத்தையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நம்முடைய இந்த செயலை விட்டும் அவர்கள் பரிசுத்தமானவர்களாம். எனவே நம்மிடையே தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.”

7:83Page 161

فَأَنجَيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ ٨٣

So We saved him and his family, except for his wife; she was of those who remained [with the evildoers].

இரவு நேரத்தில் வேதனை நிகழும் ஊரிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டு அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம். ஆனால் அவருடைய மனைவியைத் தவிர. அவளும் தனது சமூகத்துடன் எஞ்சியிருந்தாள். வேதனை அவளையும் சூழ்ந்துகொண்டது. எனவே அவர்களைத் தாக்கிய வேதனை இவளையும் தாக்கியது.

7:84Page 161

وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ ٨٤

And We rained upon them a rain [of stones]. Then see how was the end of the criminals.

நாம் அவர்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்தோம். களி மண்ணாலான கற்களைக் கொண்டு அவர்களை எறிந்தோம். அந்த ஊரை தலைகீழாக்கிவிட்டோம். தூதரே! குற்றவாளிகளான லூத்தின் சமூகத்தினரின் முடிவு என்னவாயிற்று? என்பதை சிந்தித்துப் பாரும். அழிவும் நிரந்தர இழிவுமே அவர்களுக்கு நேர்ந்த கதியாகும்.

7:85Page 161

وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ فَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ بَعۡدَ إِصۡلَٰحِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٨٥

And to [the people of] Madyan [We sent] their brother Shuʿayb. He said, "O my people, worship Allāh; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. So fulfill the measure and weight and do not deprive people of their due and cause not corruption upon the earth after its reformation. That is better for you, if you should be believers.

மத்யன் சமூகத்தாரிடம் அவர்களது சகோதரர் ஸுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் தெளிவான ஆதாரம் அல்லாஹ்விடமிருந்து உங்களிடம் வந்துள்ளது. அளவையும் நிறுவையையும் நிறைவாக்கி மக்களின் உரிமைகளை முழுமையாக அவர்களுக்கு வழங்கிவிடுங்கள். குறையுடைய பொருட்களை மக்களுக்கு வழங்கி அதில் குறைத்து அல்லது அவர்களை ஏமாற்றி குறை செய்து விடாதீர்கள். தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்திய பிறகு நிராகரிப்பைக் கொண்டும் பாவங்களைக் கொண்டும் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால் மேற்கூறப்பட்டவை அனைத்தும் உங்களுக்குச் சிறந்ததும் பயனளிக்கக்கூடியதுமாகும். ஏனெனில் அல்லாஹ் தடுத்துள்ளான் என்பதற்காக விலகி பாவங்களை விட்டு விடுவதும், ஏவப்பட்டதைச் செய்து அல்லாஹ்வை நெருங்குவதும் அதில் உள்ளது.

7:86Page 161

وَلَا تَقۡعُدُواْ بِكُلِّ صِرَٰطٖ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِهِۦ وَتَبۡغُونَهَا عِوَجٗاۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ كُنتُمۡ قَلِيلٗا فَكَثَّرَكُمۡۖ وَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ٨٦

And do not sit on every path, threatening and averting from the way of Allāh those who believe in Him, seeking to make it [seem] deviant. And remember when you were few and He increased you. And see how was the end of the corrupters.

மக்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோணலை ஏற்படுத்த நாடியவர்களாக நேர்வழியை விரும்புபவர்களை மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காகவும் அவர்களைப் பயமுறுத்தியவாறு, வழிகளில் அமராதீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் குறைவான எண்ணிக்கையினராக இருந்தீர்கள். அவனே உங்களை அதிகப்படுத்தினான். உங்களுக்கு முன்னர் பூமியில் குழப்பம் செய்தோரின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அழிவும் நாசமுமே அவர்களுக்கு நேர்ந்த கதியாகும்.

7:87Page 161

وَإِن كَانَ طَآئِفَةٞ مِّنكُمۡ ءَامَنُواْ بِٱلَّذِيٓ أُرۡسِلۡتُ بِهِۦ وَطَآئِفَةٞ لَّمۡ يُؤۡمِنُواْ فَٱصۡبِرُواْ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُ بَيۡنَنَاۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ ٨٧

And if there should be a group among you who has believed in that with which I have been sent and a group that has not believed, then be patient until Allāh judges between us. And He is the best of judges."

உங்களில் ஒரு கூட்டத்தினர் என் இறைவனிடமிருந்து நான் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தியும் மற்றொரு கூட்டத்தினர் அதனை உண்மைப்படுத்தவில்லையென்றால். நிராகரிப்பாளர்களே! இரு பிரிவினருக்கும் அல்லாஹ் என்ன தீர்ப்பை அளிக்கப் போகின்றான் என்பதை எதிர்பாருங்கள். அவனே தீர்ப்புக் கூறுவதில் சிறந்தவனும் மிகவும் நீதமானவனுமாவான்.

7:88Page 162

۞ قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ مِن قَوۡمِهِۦ لَنُخۡرِجَنَّكَ يَٰشُعَيۡبُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَكَ مِن قَرۡيَتِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۚ قَالَ أَوَلَوۡ كُنَّا كَٰرِهِينَ ٨٨

Said the eminent ones who were arrogant among his people, "We will surely evict you, O Shuʿayb, and those who have believed with you from our city, or you must return to our religion." He said, "Even if we were unwilling?

ஷு ஐபின் சமூகத்தில் கர்வம் கொண்ட பெரியவர்களும் தலைவர்களும் கூறினார்கள்: “ ஷு ஐபே! உம்மையும், உம்மை உண்மைப்படுத்தியவர்களையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றிவிடுவோம் அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்.” ஷு ஐப் சிந்தித்து ஆச்சரியப்பட்டவராகக் கூறினார்: “நீங்கள் பின்பற்றும் மார்க்கம் அசத்தியமானது என்பதை அறிந்து அதனை நாங்கள் வெறுத்த போதிலும் உங்களின் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுவதா?.”

7:89Page 162

قَدِ ٱفۡتَرَيۡنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنۡ عُدۡنَا فِي مِلَّتِكُم بَعۡدَ إِذۡ نَجَّىٰنَا ٱللَّهُ مِنۡهَاۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَاۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَاۚ رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ ٨٩

We would have invented against Allāh a lie if we returned to your religion after Allāh had saved us from it. And it is not for us to return to it except that Allāh, our Lord, should will. Our Lord has encompassed all things in knowledge. Upon Allāh we have relied. Our Lord, decide between us and our people in truth, and You are the best of those who give decision."

நீங்கள் இருக்கும் இணைவைப்பையும் நிராகரிப்பையும் விட்டு அல்லாஹ் தன் அருளால் எங்களைக் காப்பாற்றிய பிறகு நாம் அவற்றை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனான அல்லாஹ் நாடினாலே தவிர உங்களுடைய மார்க்கத்தின்பால் திரும்புவது எங்களுக்கு உகந்ததல்ல. அனைத்தும் அவனுடைய நாட்டத்துக்கு உட்பட்டதாகும். எங்கள் இறைவன் தன் அறிவால் அனைத்தையும் சூழ்ந்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறையாது. நேரான வழியில் அவன் எங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காகவும் நரகத்தின் வழிகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பதற்காகவும் அவனையே நாங்கள் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவா! எங்களுக்கும் சத்தியத்தை நிராகரித்த எங்கள் சமூகத்திற்குமிடையே தீர்ப்பளிப்பாயாக. அநியாயக்காரர்களுக்கு எதிராக சத்தியத்தைப் பின்பற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவாயாக. எங்கள் இறைவா! நீயே மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கக்கூடியவன்.

7:90Page 162

وَقَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ لَئِنِ ٱتَّبَعۡتُمۡ شُعَيۡبًا إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ ٩٠

Said the eminent ones who disbelieved among his people, "If you should follow Shuʿayb, indeed, you would then be losers."

அவரது சமூகத்தில் ஏகத்துவ அழைப்பை மறுத்து நிராகரிக்கும் தலைவர்களும் பெரியவர்களும் ஸுஐபையும் அவரது மார்க்கத்தையும் விட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர்களாகக் கூறினார்கள்: “எங்கள் சமூகமே! நீங்கள் உங்களினதும் உங்கள் முன்னோர்களினதும் மார்க்கத்தை விட்டுவிட்டு ஸுஐபின் மார்க்கத்தைப் பின்பற்றினால் நிச்சயம் அழிவுக்குள்ளானவர்களே.”

7:91Page 162

فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ ٩١

So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone.

கடுமையான பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. தங்கள் வீடுகளில் முகங்குப்புற வீழ்ந்தவர்களாகவும் அசைவற்ற சடங்களாகவும் செத்து மடிந்தார்கள்.

7:92Page 162

ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَاۚ ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَانُواْ هُمُ ٱلۡخَٰسِرِينَ ٩٢

Those who denied Shuʿayb - it was as though they had never resided there. Those who denied Shuʿayb - it was they who were the losers.

ஸுஐபை நிராகரித்தவர்கள் அனைவரும் அழிந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்காதவர்களைப் போல, எதையும் அனுபவிக்காதவர்களைப் போல ஆகிவிட்டார்கள். ஸுஐபை நிராகரித்தவர்களே நஷ்டவாளிகளாகினர். ஏனெனில் அவர்கள் தங்களையும் தங்களுக்குச் சொந்தமானதையும் இழந்துவிட்டார்கள்.பொய்கூறும் இந்த நிராகரிப்பாளர்கள் கூறுவது போல் அவரது சமூகத்தின் நம்பிக்கையாளர்கள் நஷ்டவாளிகளாகி விடவில்லை.

7:93Page 162

فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡۖ فَكَيۡفَ ءَاسَىٰ عَلَىٰ قَوۡمٖ كَٰفِرِينَ ٩٣

And he [i.e., Shuʿayb] turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the messages of my Lord and advised you, so how could I grieve for a disbelieving people?"

அவர்கள் அழிந்த போது அவர்களின் தூதர் ஸுஐப் அவர்களை விட்டுச் சென்றவராகக் கூறினார்: “என் சமூகமே! என் இறைவன் உங்களுக்கு எடுத்துரைக்குமாறு எனக்குக் கட்டளையிட்டதை நான் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். நான் உங்களுக்கு அறிவுரை வழங்கினேன். ஆனால் நீங்கள் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. என் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்படவில்லை. அல்லாஹ்வை நிராகரித்து அந்த நிராகரிப்பில் நிலைத்திருக்கும் ஒரு சமூகத்தின் மீது நான் எவ்வாறு கவலை கொள்வேன்?”

7:94Page 162

وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّبِيٍّ إِلَّآ أَخَذۡنَآ أَهۡلَهَا بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَضَّرَّعُونَ ٩٤

And We sent to no city a prophet [who was denied] except that We seized its people with poverty and hardship that they might humble themselves [to Allāh].

நாம் எந்த ஊருக்கு தூதர்களை அனுப்பினாலும் அங்குள்ளவர்கள் நிராகரித்தால் அவர்கள் நிராகரிப்பையும் கர்வத்தையும் விட்டு விட்டு அல்லாஹ்வுக்கு அடிபணியும் பொருட்டு வறுமையாலும், நோயாலும், கஷ்டத்தாலும் அவர்களைப் பிடிப்போம். மறுக்கும் சமூகங்களின் விடயத்தில் அல்லாஹ்வின் நியதியைக் குறிப்பிடுவதன் மூலம் குறைஷிகளுக்கும் நிராகரிக்கும்,பொய்ப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இதுவாகும்.

7:95Page 162

ثُمَّ بَدَّلۡنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلۡحَسَنَةَ حَتَّىٰ عَفَواْ وَّقَالُواْ قَدۡ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذۡنَٰهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ٩٥

Then We exchanged in place of the bad [condition], good, until they increased [and prospered] and said, "Our fathers [also] were touched with hardship and ease."1 So We seized them suddenly while they did not perceive.2

பின்னர் கஷ்டம் நோய் ஆகியவற்றைக் கொண்டு அவர்களைத் தண்டித்த பிறகு அவர்களுக்கு நன்மையையும், விசாலத்தையையும், அமைதியையும் வழங்குகிறோம். எந்த அளவுக்கெனில் அவர்களும் பல்கிப் பெருகி அவர்களது சொத்துக்களும் அதிகரித்துவிடுகின்றன. அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட இன்பங்களும் துன்பங்களும் நமது முன்னோர்களுக்கு இதற்கு முன் நிகழ்ந்த ஒரு வழமையான நிகழ்வுதான்.” தங்களுக்குக் கிடைத்த தண்டனையின் மூலம் படிப்பினையே நாடப்பட்டது என்பதையும் வழங்கப்பட்ட அருட்கொடையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பிடிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் வேதனையை உணராமலும் அதனை எதிர்பார்க்காமலும் இருந்த சமயத்தில் திடீரென வேதனையால் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.

7:96Page 163

وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡقُرَىٰٓ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَفَتَحۡنَا عَلَيۡهِم بَرَكَٰتٖ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِن كَذَّبُواْ فَأَخَذۡنَٰهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ٩٦

And if only the people of the cities had believed and feared Allāh, We would have opened [i.e., bestowed] upon them blessings from the heaven and the earth; but they denied [the messengers], so We seized them for what they were earning.1

நாம் எந்த ஊர்வாசிகளிடம் நம் தூதர்களை அனுப்பினோமோ அவர்கள் தங்களின் தூதர்கள் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தியிருந்தால், அல்லாஹ்வை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனை அஞ்சியிருந்தால் நன்மையின் வாயில்களையும் நாலாபுறத்தாலும் அவர்களுக்காகத் திறந்து விட்டிருப்போம். ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவுமில்லை; தக்வாவைக் கடைப்பிடிக்கவுமில்லை. மாறாக தூதர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்களின் காரணமாக திடீரென்று அவர்களை வேதனையால் பிடித்துக் கொண்டோம்.

7:97Page 163

أَفَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا بَيَٰتٗا وَهُمۡ نَآئِمُونَ ٩٧

Then, did the people of the cities feel secure from Our punishment coming to them at night while they were asleep?

நிராகரித்த ஊர்வாசிகள் இரவில், நிம்மதியாக அவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?

7:98Page 163

أَوَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا ضُحٗى وَهُمۡ يَلۡعَبُونَ ٩٨

Or did the people of the cities feel secure from Our punishment coming to them in the morning while they were at play?1

அல்லது பகலில், நண்பகல் வேளையில் தங்களின் உலக காரியங்களில் மெய் மறந்து இருக்கும் போது நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?

7:99Page 163

أَفَأَمِنُواْ مَكۡرَ ٱللَّهِۚ فَلَا يَأۡمَنُ مَكۡرَ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡخَٰسِرُونَ ٩٩

Then, did they feel secure from the plan of Allāh? But no one feels secure from the plan of Allāh except the losing people.

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அவகாசத்தையும் பலம், தாராளமான வசதிகள் என அருட்கொடைகளை வழங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைப் பிடித்ததையும் சிந்தித்துப் பாருங்கள். நிராகரித்த அந்த ஊர்வாசிகள் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் மறைமுகமான திட்டத்தை விட்டும் அச்சமற்றுள்ளனரா என்ன? அழியக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் அச்சமற்று இருப்பார்கள். நேர்வழிபெற்றவர்களோ அவனுடைய சூழ்ச்சியைக் குறித்து அஞ்சுவார்கள். தங்களுக்குக் கிடைத்த அருட்கொடைகளைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். தங்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

7:100Page 163

أَوَلَمۡ يَهۡدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ أَهۡلِهَآ أَن لَّوۡ نَشَآءُ أَصَبۡنَٰهُم بِذُنُوبِهِمۡۚ وَنَطۡبَعُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ ١٠٠

Has it not become clear to those who inherited the earth after its [previous] people that if We willed, We could afflict them for their sins? But We seal over their hearts so they do not hear.1

தங்களின் பாவங்களின் காரணமாக அழிக்கப்பட்ட முந்தைய சமூகத்தினருக்குப் பிறகு பூமியில் வழித்தோன்றல்களாக வந்து அவர்களுக்கு நிகழ்ந்ததைக் கொண்டு படிப்பினை பெறாமல் அவர்கள் செய்தவற்றையே செய்யும் இவர்களுக்கு, அல்லாஹ் தன் வழிமுறைப்படி தான் நாடினால் அவர்களின் பாவங்களினால் அவர்களை அழித்தது போன்று இவர்களின் பாவங்களினால் இவர்களையும் அழித்துவிடுவோம் என்பது புரியவில்லையா?, அறிவுரையிலிருந்து பயனடையவோ ஞாபகமூட்டல் பலனிளக்கவோ முடியாதவாறு அவர்களின் உள்ளங்களின் மீது அவன் முத்திரையிட்டுவிடுவான்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском