Al-MukhtasarAl‑Qiyamah · 75:1–40

Al-Mukhtasar · Tafsir · in Tamil

القيامة

Al-Qiyamah

The Resurrection · Meccan · 40 ayahs

75:1Page 577

لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ١

I swear by the Day of Resurrection

படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு முன்னால் மனிதர்கள் அனைவரும் எழுந்து நிற்கும் மறுமை நாளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

75:2Page 577

وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ ٢

And I swear by the reproaching soul1 [to the certainty of resurrection].

நற்செயல்கள் புரிவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, தீய செயல் புரிந்தாலோ அதற்காக தன்னை நிந்திக்கும் தூய்மையான ஆன்மாவைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான். இந்த இரண்டு விஷயங்களையும் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்து மனிதர்கள் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்று கூறுகிறான்.

75:3Page 577

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ ٣

Does man think that We will not assemble his bones?

நாம் மனிதன் இறந்தபிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்காக அவனது எலும்புகளை ஒன்றுசேர்க்க மாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?

75:4Page 577

بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ ٤

Yes. [We are] Able [even] to proportion his fingertips.

அவ்வாறன்று. அவனது விரல்களின் நுனிகளைக்கூட முன்னர் இருந்தவாறே செவ்வையான படைப்பாக ஒன்றுசேர்ப்பதற்கு சக்தி பெற்றவர்களாவோம்.

75:5Page 577

بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ ٥

But man desires to continue in sin.1

மாறாக மனிதன் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்து தொடர்ந்து எவ்வித தடையுமின்றி எதிர்காலத்தில் பாவங்கள் புரிந்துகொண்டே செல்லலாம் என்று விரும்புகிறான்.

75:6Page 577

يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ ٦

He asks, "When is the Day of Resurrection?"

மறுமை நாள் நிகழ்வதை சாத்தியமற்றதாகக் கருதி ‘அது எப்போது நிகழும்’ என்று கேட்கிறான்.

75:7Page 577

فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ ٧

So when vision is dazzled

தான் பொய்ப்பித்ததை அவன் காணும் வேளையில் பார்வை தடுமாறி அதிர்ச்சியடையும் போது.

75:8Page 577

وَخَسَفَ ٱلۡقَمَرُ ٨

And the moon darkens

சந்திரனின் ஒளி இல்லாமலாகிவிடும்.

75:9Page 577

وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ٩

And the sun and the moon are joined,

சூரியனும் சந்திரனும் ஒன்றிணைந்துவிடும்.

75:10Page 577

يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ ١٠

Man will say on that Day, "Where is the [place of] escape?"

அந்நாளில் பாவியான மனிதன் “எங்கே தப்பிச் செல்வது” என்று கேட்பான்.

75:11Page 577

كـَلَّا لَا وَزَرَ ١١

No! There is no refuge.

அந்த நாளில் எங்கும் தப்ப முடியாது. பாவி ஒதுங்குவதற்கு எந்த அடைக்கலமும் இருக்காது. பாதுகாப்புப் பெற எதுவும் இருக்காது.

75:12Page 577

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ ١٢

To your Lord, that Day, is the [place of] permanence.

தூதரே!- அந்த நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் உம் இறைவனின் பக்கமே திரும்ப வேண்டும்.

75:13Page 577

يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ١٣

Man will be informed that Day of what he sent ahead1 and kept back.2

அந்நாளில் மனிதன் தான் செய்த செயல்களைக் குறித்தும் செய்யாமல் விட்டுவிட்டவற்றைக் குறித்தும் அறிவிக்கப்படுவான்.

75:14Page 577

بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ ١٤

Rather, man, against himself, will be a witness,1

மாறாக மனிதன் தனக்கு எதிராக சாட்சி கூறக்கூடியவனாக இருக்கின்றான். அவன் சம்பாதித்த பாவங்கள் குறித்து அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.

75:15Page 577

وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ١٥

Even if he presents his excuses.

அவன் தான் எத்தீங்கும் இழைக்கவில்லை என பல காரணங்களைக் கூறி தனக்காக வாதாடினாலும் அவை அவனுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

75:16Page 577

لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ ١٦

Move not your tongue with it, [O Muḥammad], to hasten with it [i.e., recitation of the Qur’ān].

தூதரே!- உமக்கு ஒதிக்காட்டப்படும் வசனங்கள் விடுபட்டுவிடுமோ என்ற அச்சத்தில் விரைவாக உம் நாவை அசைக்காதீர்.

75:17Page 577

إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ١٧

Indeed, upon Us is its collection [in your heart] and [to make possible] its recitation.

உம் உள்ளத்தில் அதனை ஒன்று சேர்த்து உம் நாவால் அதனை ஓதி உறுதிபெறச் செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள பொறுப்பாகும்.

75:18Page 577

فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ ١٨

So when We have recited it [through Gabriel], then follow its recitation.

எமது தூதர் ஜிப்ரீல் உம்மிடம் அதனை ஓதிக்காட்டும் போது அவரது ஓதலை செவிமடுத்துக் கேட்பீராக!

75:19Page 577

ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ١٩

Then upon Us is its clarification [to you].

பின்னர் அதனை உமக்கு தெளிவுபடுத்துவதும் நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.

75:20Page 578

كـَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ٢٠

No! But you [i.e., mankind] love the immediate

ஒருபோதும் இல்லை. நீங்கள் வாதிடுவதுபோல மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது சாத்தியமற்ற விடயமல்ல. ஆரம்பத்தில் உங்களைப் படைத்தவன் நீங்கள் இறந்தபிறகு நிச்சயமாக மீண்டும் உங்களைப் படைக்கும் ஆற்றலுடையவன் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். மாறாக விரைவாக அழிந்துவிடும் உலக வாழ்க்கையின்மீது நீங்கள் கொண்ட மோகமே நீங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிப்பதற்கான காரணமாகும்.

75:21Page 578

وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ ٢١

And leave [i.e., neglect] the Hereafter.

அல்லாஹ் உங்களுக்கு ஏவிய வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு அவன் உங்களைத் தடுத்த காரியங்களை விட்டும் தவிர்ந்து நடக்கும்படி சொல்லும் மறுமை வாழ்வை நீங்கள் விட்டதுமாகும்.

75:22Page 578

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ ٢٢

[Some] faces, that Day, will be radiant,

அந்நாளில் சீதேவிகள், நம்பிக்கையாளர்களின் முகங்கள் பொலிவாக இருக்கும்.

75:23Page 578

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ ٢٣

Looking at their Lord.1

அவர்கள் தம் இறைவனைப் பார்த்து அதன் மூலம் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள்.

75:24Page 578

وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ ٢٤

And [some] faces, that Day, will be contorted,

அந்நாளில் மூதேவிகள், நிராகரிப்பாளர்களின் முகங்கள் கடுகடுத்ததாக இருக்கும்.

75:25Page 578

تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ ٢٥

Expecting that there will be done to them [something] backbreaking.

பெரும் தண்டனையும் நோவினைமிக்க வேதனையும் தங்கள் மீது இறங்கப்போகிறது என்பதை அவர்கள் உறுதியாக அறிந்துகொள்வார்கள்.

75:26Page 578

كـَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ ٢٦

No! When it [i.e., the soul] has reached the collar bones1

தாங்கள் இறந்துவிட்டால் வேதனை செய்யப்பட மாட்டோம் என்று இணைவைப்பாளர்கள் எண்ணுவது போலல்ல விடயம். அவர்களில் யாருக்கேனும் உயிர் நெஞ்சின் மேற்பகுதியை அடைந்துவிட்டால்

75:27Page 578

وَقِيلَ مَنۡۜ رَاقٖ ٢٧

And it is said, "Who will cure [him]?"

மக்களில் சிலர் சிலரிடம் கூறுவார்கள்: “இவர் குணமடையும்பொருட்டு இவருக்கு மந்திரிப்பவர் யார்?”

75:28Page 578

وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ٢٨

And he [i.e., the dying one] is certain that it is the [time of] separation

மரண வலியில் இருப்பவர் அப்போது தாம் உலகை விட்டுப் பிரிந்து மரணிக்கப் போகின்றோம் என்பதை உறுதியாக அறிந்துகொள்வார்.

75:29Page 578

وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ٢٩

And the leg is wound about the leg,1

உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை தொடங்கும் தருவாயில் துன்பங்கள் ஒன்றுசேர்ந்துவிடும்.

75:30Page 578

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ٣٠

To your Lord, that Day, will be the procession.1

இது நடந்துவிட்டால் இறந்தவர் தன் இறைவனின்பால் இழுத்துச் செல்லப்படுவார்.

75:31Page 578

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣١

And he [i.e., the disbeliever] had not believed, nor had he prayed.

நிராகரிப்பாளன் தூதர் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தவுமில்லை; அல்லாஹ்வுக்காக தொழவுமில்லை.

75:32Page 578

وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ٣٢

But [instead], he denied and turned away.

ஆனால் தூதர் கொண்டுவந்ததை பொய்யெனக் கூறி அதனைப் புறக்கணித்தான்.

75:33Page 578

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ ٣٣

And then he went to his people, swaggering [in pride].

பின்னர் இந்த நிராகரிப்பாளன் கர்வத்துடன் நடந்தவாறே தன் குடும்பத்தை நோக்கிச் செல்கிறான்.

75:34Page 578

أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ٣٤

Woe to you, and woe!

எனவே அல்லாஹ் நிராகரிப்பாளனுக்கு அவனது வேதனை அவனை நெருங்கிவிட்டதாக எச்சரித்தான்.

75:35Page 578

ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ ٣٥

Then woe to you, and woe!

பின்னர் மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக அதே வசனத்தை திரும்பக் கூறினான். அவன் கூறுகிறான்: (பின்னரும், அழிவு உனக்கு நெருக்கமாகிவிட்டது, நெருக்கமாகிவிட்டது).

75:36Page 578

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى ٣٦

Does man think that he will be left neglected?1

அல்லாஹ் மனிதனுக்கு எந்த சட்டதிட்டத்தையும் கட்டளையிடாமல் அவனை அப்படியே விட்டுவிடுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?

75:37Page 578

أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ ٣٧

Had he not been a sperm from semen emitted?

இந்த மனிதன் ஒருநாள் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்தாக இருக்கவில்லையா?

75:38Page 578

ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ ٣٨

Then he was a clinging clot, and [Allāh] created [his form] and proportioned [him]

அவ்வாறு இருந்ததன் பின் அவன் உறைந்த இரத்தக்கட்டியாகி விடுகிறான். பின்னர் அல்லாஹ் அவனைப் படைத்தான். அவனது படைப்பை செம்மையாக ஆக்கினான்.

75:39Page 578

فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣٩

And made of him two mates, the male and the female.

அவனுடைய இனத்திலிருந்தே அவன் ஆண், பெண் என்ற இரு வகையினரை ஏற்படுத்தவில்லையா?

75:40Page 578

أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ ٤٠

Is not that [Creator] Able to give life to the dead?

இவ்வாறு மனிதனை விந்து மற்றும் அட்டையிலிருந்து படைத்தவன் அவன் இறந்தபிறகு விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் அவனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றல் பெற்றவன் இல்லையா? ஏனில்லை. நிச்சயமாக அவன் அதற்கு ஆற்றலுடையவன்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском