Al-MukhtasarAl‑Infitar · 82:1–19

Al-Mukhtasar · Tafsir · in Tamil

الإنفطار

Al-Infitar

The Cleaving · Meccan · 19 ayahs

82:1Page 587

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١

When the sky breaks apart

வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது.

82:2Page 587

وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢

And when the stars fall, scattering,

நட்சத்திரங்கள் உதிர்ந்து சிதறும்போது.

82:3Page 587

وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣

And when the seas are erupted

கடல்களில் சில சிலவற்றின் மீது திறந்துவிடப்பட்டு ஒன்றோடொன்று கலந்துவிடும் போது.

82:4Page 587

وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤

And when the [contents of] graves are scattered [i.e., exposed],

இறந்தவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்காக அடக்கஸ்தலங்களின் மண் புரட்டப்படும்போது.

82:5Page 587

عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥

A soul will [then] know what it has put forth and kept back.

அச்சமயத்தில் ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களையும் செய்யாமல் விட்டுவிட்டவற்றையும் அறிந்துகொள்வார்கள்.

82:6Page 587

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦

O mankind, what has deceived you concerning your Lord, the Generous,

இறைவனை நிராகரித்த மனிதனே! உன் இறைவன் தன் கிருபையினால் உடனுக்குடன் உன்னைத் தண்டிக்காமல் அவகாசம் அளித்த போது அவனது கட்டளைக்கு மாறாகச் செயல்பட எது உன்னைத் தூண்டியது?

82:7Page 587

ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧

Who created you, proportioned you, and balanced you?

அவன்தான் ஒன்றுமில்லாமல் இருந்த உன்னைப் படைத்தான். நேர்த்தியான உறுப்புகளை அளித்து உன்னைச் சீராக்கினான்.

82:8Page 587

فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨

In whatever form He willed has He assembled you.

அவன் உன்னைப் படைக்க நாடிய வடிவத்தில் படைத்தான். அவன் உன்னைக் கழுதையின் வடிவத்திலோ, குரங்கின் வடிவத்திலோ, நாயின் வடிவத்திலோ, இன்னபிற விலங்குகளின் வடிவத்திலோ படைக்காமல் உன் மீது அருள்புரிந்தான்.

82:9Page 587

كـَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩

No! But you deny the Recompense.

ஏமாளிகளே!- விடயம் நீங்கள் எண்ணுவது போலல்ல. மாறாக நீங்கள் கூலி வழங்கப்படும் நாளை பொய்ப்பித்து, அதற்காக செயல்படுவதில்லை.

82:10Page 587

وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠

And indeed, [appointed] over you are keepers,1

நிச்சயமாக உங்களின் செயல்களைக் கண்காணிக்கும் வானவர்கள் உங்களின் மீது இருக்கிறார்கள்.

82:11Page 587

كِرَامٗا كَٰتِبِينَ ١١

Noble and recording;

அவர்கள் அல்லாஹ்விடத்தில் கண்ணியம் வாய்ந்தவர்கள்; உங்களின் செயல்களை பதிவுசெய்யும் பதிவாளர்கள்.

82:12Page 587

يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢

They know whatever you do.

நீங்கள் செய்யும் செயல்களை அவர்கள் அறிவார்கள். அவற்றைப் பதிவுசெய்கிறார்கள்.

82:13Page 587

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ١٣

Indeed, the righteous will be in pleasure,

நிச்சயமாக அதிகமாக வணக்க வழிபாடுகள், நற்செயல் புரிபவர்கள் மறுமை நாளில் நிலையான அருட்கொடையில் இருப்பார்கள்.

82:14Page 587

وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤

And indeed, the wicked will be in Hellfire.

நிச்சயமாக பாவிகள் அவர்கள் மீது கொழுந்து விட்டெரியும் நரகத்தில் இருப்பார்கள்.

82:15Page 587

يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥

They will [enter to] burn therein on the Day of Recompense,

கூலி வழங்கப்படும் நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள். அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.

82:16Page 587

وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦

And never therefrom will they be absent.

அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.

82:17Page 587

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧

And what can make you know what is the Day of Recompense?

தூதரே!- தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

82:18Page 587

ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨

Then, what can make you know what is the Day of Recompense?

பின்னரும் தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

82:19Page 587

يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ١٩

It is the Day when a soul will not possess for another soul [power to do] a thing; and the command, that Day, is [entirely] with Allāh.

அந்நாளில் ஒருவர் மற்றவருக்குப் பயனளிக்க முடியாது. அந்நாளில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமே இருக்கும். வேறு யாரிடமுமல்ல. அவன் தான் நாடியவாறு செயல்படுவான்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском