Al-MukhtasarAl‑Mutaffifin · 83:1–36

Al-Mukhtasar · Tafsir · in Tamil

المطففين

Al-Mutaffifin

The Defrauding · Meccan · 36 ayahs

83:1Page 587

وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١

Woe to those who give less [than due],1

அளவில் மோசடி செய்வோருக்கு அழிவும் இழப்பும் உண்டாகட்டும்.

83:2Page 587

ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢

Who, when they take a measure from people, take in full.

அவர்கள் மற்றவர்களிடம் அளந்து வாங்கினால் பரிபூரணமாக குறைவின்றி தங்களின் உரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

83:3Page 587

وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣

But if they give by measure or by weight to them, they cause loss.

ஆனால் மக்களுக்கு அளந்து அல்லது நிறுத்து கொடுத்தால் அளவையையும் நிறுவையையும் குறைத்துவிடுகிறார்கள். நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த வேளையில் மதீனாவாசிகளின் நிலைமை இவ்வாறுதான் இருந்தது.

83:4Page 587

أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤

Do they not think that they will be resurrected

இந்த தீய செயலைச் செய்யும் இவர்கள் தங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளவில்லையா?

83:5Page 587

لِيَوۡمٍ عَظِيمٖ ٥

For a tremendous Day -

பயங்கரங்களையும் சோதனைகளையும் உள்ளடக்கிய அந்த மாபெரும் நாளில் விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும்.

83:6Page 587

يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦

The Day when mankind will stand before the Lord of the worlds?

அந்நாளில் மக்கள் அனைவரும் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு முன்னால் விசாரணைக்காக நிற்பார்கள்.

83:7Page 588

كـَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ٧

No! Indeed, the record of the wicked is in sijjeen.

மரணித்தவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள், முனாபிக்குகளான பாவிகளின் பதிவேடு பூமியின் அடியில் நஷ்டமடைந்ததாக இருக்கும்.

83:8Page 588

وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ٨

And what can make you know what is sijjeen?

தூதரே!- ஸிஜ்ஜீன் என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

83:9Page 588

كِتَٰبٞ مَّرۡقُومٞ ٩

It is [their destination1 recorded in] a register inscribed.

நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது.

83:10Page 588

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٠

Woe, that Day, to the deniers,

அந்நாளில் பொய்யாக்குபவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்.

83:11Page 588

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ١١

Who deny the Day of Recompense.

உலகில் தன் அடியார்கள் செய்த செயல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்கும் நாளை அவர்கள் மறுக்கிறார்கள்.

83:12Page 588

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢

And none deny it except every sinful transgressor.

அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடிய, அதிகம் பாவம் செய்யக்கூடிய ஒவ்வொருவருமே அந்த நாளை பொய்ப்பிக்கிறார்கள்.

83:13Page 588

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ١٣

When Our verses are recited to him, he says, "Legends of the former peoples."

அவனிடம் நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் “இவை முந்தைய சமூகங்களின் கட்டுக் கதைகள். இவை அல்லாஹ்விடமிருந்து வந்தவையல்ல” என்று கூறுகிறான்.

83:14Page 588

كـَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ١٤

No! Rather, the stain has covered their hearts of that which they were earning.1

இந்த நிராகரிப்பாளர்கள் எண்ணுவது போலல்ல விடயம். மாறாக அவர்கள் செய்த பாவங்கள் அவர்களின் அறிவை மூடிவிட்டது, மிகைத்துவிட்டது. எனவே அவர்களால் தங்களின் உள்ளங்களைக் கொண்டு சத்தியத்தை பார்க்கமுடியவில்லை.

83:15Page 588

كـَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ١٥

No! Indeed, from their Lord, that Day, they will be partitioned.1

நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனைப் பார்ப்பதைவிட்டும் தடுக்கப்படுவார்கள்.

83:16Page 588

ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦

Then indeed, they will [enter and] burn in Hellfire.

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.

83:17Page 588

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧

Then it will be said [to them], "This is what you used to deny."

பின்னர் மறுமை நாளில் அவர்களிடம் கண்டிக்கும் விதமாகக் கூறப்படும்: “நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனையைத்தான் உலகில் தூதர் உங்களிடம் கூறியபோது பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்.”

83:18Page 588

كـَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ١٨

No! Indeed, the record of the righteous is in ʿilliyyūn.

கேள்வி கணக்கோ, கூலி வழங்குவதோ கிடையாது என்று நீங்கள் எண்ணுவது போலல்ல விடயம். நிச்சயமாக கீழ்ப்படிந்தவர்களின் பதிவேடு இல்லியூனில் இருக்கும்.

83:19Page 588

وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩

And what can make you know what is ʿilliyyūn?

தூதரே!- இல்லியூன் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

83:20Page 588

كِتَٰبٞ مَّرۡقُومٞ ٢٠

It is [their destination1 recorded in] a register inscribed

நிச்சயமாக அது நீங்காத வகையில் பதிவுசெய்யப்பட்ட புத்தகமாகும். அதில் கூடுதலோ, குறைவோ இடம்பெறாது.

83:21Page 588

يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ٢١

Which is witnessed by those brought near [to Allāh].

ஒவ்வொரு வானத்திலுமுள்ள நெருக்கமான வானவர்கள் அந்த புத்தகத்தைக் கொண்டுவருவார்கள்.

83:22Page 588

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢

Indeed, the righteous will be in pleasure

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அதிகமாக கட்டுப்பட்டவர்கள் மறுமை நாளில் நிலையான அருட்கொடையில் இருப்பார்கள்.

83:23Page 588

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣

On adorned couches, observing.

அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீதமர்ந்து தங்கள் இறைவனின் பக்கமும் தங்கள் மனம் விரும்புவதன், சந்தோசப்படுவதன் பக்கமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

83:24Page 588

تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤

You will recognize in their faces the radiance of pleasure.

நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் முகங்களில் இன்பத்தின் அடையாளத்தையும் பொலிவையும் கண்டுகொள்வீர்.

83:25Page 588

يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ ٢٥

They will be given to drink [pure] wine1 [which was] sealed.

அவர்களின் பணியாளர்கள் அவர்களுக்கு முத்திரையிடப்பட்ட பாத்திரங்களிலிருந்து மதுவை புகட்டுவார்கள்.

83:26Page 588

خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ٢٦

The last of it1 is musk. So for this let the competitors compete.

அதிலிருந்து கஸ்தூரியின் மணம் இறுதிவரை பொங்கிவரும். கண்ணியமான இந்த கூலியைப் பெறுவதற்காகவே போட்டியிடுபவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களைச் செய்வதன் மூலமாகவும் அவனை கோபமூட்டும் செயல்களை விட்டுவிடுவதன் மூலமாகவும் போட்டியிட வேண்டும்.

83:27Page 588

وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ٢٧

And its mixture is of Tasneem,1

முத்திரையிடப்பட்ட இந்த பானம் தஸ்னீம் என்னும் ஊற்றோடு கலந்திருக்கும்.

83:28Page 588

عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ٢٨

A spring from which those near [to Allāh] drink.

அது உயர்ந்த சுவனத்தில் ஓடக்கூடிய ஒரு ஊற்றாகும். அதிலிருந்து அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் எவ்வித கலப்படமுமின்றி தூய்மையாக பருகுவார்கள். ஏனைய நம்பிக்கையாளர்கள் அதனை மற்றவற்றோடு கலந்து பருகுவார்கள்.

83:29Page 588

إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ٢٩

Indeed, those who committed crimes used to laugh at those who believed.

நிச்சயமாக தமது நிராகரிப்பினால் குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து பரிகாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

83:30Page 588

وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ٣٠

And when they passed by them, they would exchange derisive glances.

அவர்கள் நம்பிக்கையாளர்களை கடந்துசென்றால் அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து பரிகாசமாக கண்ணசைப்பார்கள்.

83:31Page 588

وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ٣١

And when they returned to their people, they would return jesting.

அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றால் தமது நிராகரிப்பு மற்றும் நம்பிக்கையாளர்களைப் பரிகாசம் செய்வதை நினைத்து மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புவார்கள்.

83:32Page 588

وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢

And when they saw them, they would say, "Indeed, those are truly lost."

அவர்கள் முஸ்லிம்களைக் கண்டபோது கூறினார்கள்: “நிச்சயமாக இவர்கள் தங்களின் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டுவிட்டதனால் சத்தியப் பாதையைவிட்டும் தவறிவிட்டார்கள்.”

83:33Page 588

وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ٣٣

But they had not been sent as guardians over them.

அவர்கள் இவ்வாறு கூறுவதற்கு அவர்களை ஒன்றும் அவர்களின் செயல்களைக் கண்காணிப்பவர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை.

83:34Page 588

فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ٣٤

So Today1 those who believed are laughing at the disbelievers,

உலகில் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரித்தது போன்று மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

83:35Page 589

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥

On adorned couches, observing.

அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் அமர்ந்தவாறு தங்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியுள்ள நிலையான அருட்கொடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

83:36Page 589

هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦

Have the disbelievers [not] been rewarded [this Day] for what they used to do?

நிராகரிப்பாளர்கள் உலகில் தாங்கள் செய்த செயல்களுக்கு இழிவுமிக்க வேதனையால் தண்டிக்கப்பட்டுவிட்டனர்.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском