Al-MukhtasarAl‑Inshiqaq · 84:1–25

Al-Mukhtasar · Tafsir · in Tamil

الإنشقاق

Al-Inshiqaq

The Sundering · Meccan · 25 ayahs

84:1Page 589

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١

When the sky has split [open]

வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது,

84:2Page 589

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢

And has listened [i.e., responded]1 to its Lord and was obligated [to do so]

அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்குப் பொருத்தமானதாகும்.

84:3Page 589

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ٣

And when the earth has been extended1

தோலை விரிப்பது போல் பூமியை அல்லாஹ் விரியச் செய்யும் போது

84:4Page 589

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤

And has cast out that within it1 and relinquished [it]

அது தன்னுள் இருக்குள் பொக்கிஷங்களையும் இறந்தவர்களையும் எறிந்துவிட்டு வெறுமையாகிவிடும்.

84:5Page 589

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥

And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so] –

அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்கு விதிக்கப்பட்டதாகும்.

84:6Page 589

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ٦

O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion1 and will meet it.2

மனிதனே! நிச்சயமாக நீ நற்செயலோ, தீயசெயலோ செய்யக்கூடியவன். அதற்காக அல்லாஹ் உனக்குக் கூலி வழங்குவதற்காக அதனை நீ மறுமை நாளில் காண்பாய்.

84:7Page 589

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧

Then as for he who is given his record in his right hand,

யாருடைய செயல்பதிவேடு அவரது வலக்கரத்தில் கொடுக்கப்படுமோ.

84:8Page 589

فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ٨

He will be judged with an easy account

அவரது செயல்களை குற்றம்பிடிக்காமல் அவருக்கு எடுத்துக்காட்டி அல்லாஹ் அவரை இலகுவான முறையில் விசாரணை செய்வான்.

84:9Page 589

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ٩

And return to his people in happiness.

அவர் தம் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக திரும்புவார்.

84:10Page 589

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠

But as for he who is given his record behind his back,

யாருடைய செயல்பதிவேடு அவரது முதுகுக்குப் பின்னால் இடக்கரத்தில் கொடுக்கப்படுமோ.

84:11Page 589

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ١١

He will cry out for destruction

அவர் தனக்குத் தானே அழிவைக் கூவி அழைப்பார்.

84:12Page 589

وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢

And [enter to] burn in a Blaze.

அவர் நரக நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.

84:13Page 589

إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣

Indeed, he had [once] been among his people in happiness;

நிச்சயமாக அவர் உலகில் தன் நிராகரிப்பு மற்றும் பாவங்கள் என்பவற்றில் ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக இருந்தார்.

84:14Page 589

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤

Indeed, he had thought he would never return [to Allāh].

நிச்சயமாக அவர் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெறமாட்டார் என்றே எண்ணியிருந்தார்.

84:15Page 589

بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ١٥

But yes! Indeed, his Lord was ever, of him, Seeing.

ஏனில்லை. நிச்சயமாக அல்லாஹ் அவரை முதன்முறையாகப் படைத்ததுபோன்றே மீண்டும் அவரை வாழ்வின் பக்கம் திருப்புவான். நிச்சயமாக அவரது இறைவன் அவரது நிலையைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. விரைவில் அவரது செயலுக்கேற்ப அவன் அவருக்குக் கூலி வழங்குவான்.

84:16Page 589

فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦

So I swear by the twilight glow

சூரியன் மறைந்த பிறகு அடிவானத்தில் தோன்றும் செந்நிறத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

84:17Page 589

وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧

And [by] the night and what it envelops

இரவின் மீதும் அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்.

84:18Page 589

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨

And [by] the moon when it becomes full

சந்திரன் மீதும் அது ஒன்று சேர்ந்து பூரண சந்திரனாக ஆவதின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்.

84:19Page 589

لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ١٩

[That] you will surely embark upon [i.e., experience] state after state.1

மனிதர்களே!- விந்திலிருந்து இரத்தக்கட்டியாக, இரத்தக்கட்டியிலிருந்து சதைத்துண்டாக, வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி, மரணத்திலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நோக்கி நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை நோக்கி நிச்சயம் ஏறிச்செல்வீர்கள்.

84:20Page 589

فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠

So what is [the matter] with them [that] they do not believe,

இந்த நிராகரிப்பாளர்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்வதில்லையே!

84:21Page 589

وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ٢١

And when the Qur’ān is recited to them, they do not prostrate [to Allāh]?

அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் தங்கள் இறைவனுக்காக சிரம்பணிவதுமில்லையே!

84:22Page 589

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢

But those who have disbelieved deny,

மாறாக நிராகரிப்பாளர்கள் தூதர் தங்களிடம் கொண்டுவந்ததை பொய்யாக்குகிறார்கள்.

84:23Page 589

وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣

And Allāh is most knowing of what they keep within themselves.

அவர்களின் உள்ளங்கள் சேர்த்து வைத்திருப்பதை அவன் அறிவான். அவர்கள் செய்யும் செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

84:24Page 589

فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤

So give them tidings of a painful punishment,

தூதரே!- அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்று அறிவித்துவிடுவீராக.

84:25Page 589

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ٢٥

Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted.

ஆயினும் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு சுவனம் என்னும் முடிவுறா நன்மை உண்டு.

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском