Аль-МухтасарЮсуф · 12:76–109

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Юсуф 12:76–109

12:76Страница 244

فَبَدَأَ بِأَوۡعِيَتِهِمۡ قَبۡلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسۡتَخۡرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِۚ كَذَٰلِكَ كِدۡنَا لِيُوسُفَۖ مَا كَانَ لِيَأۡخُذَ أَخَاهُ فِي دِينِ ٱلۡمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ وَفَوۡقَ كُلِّ ذِي عِلۡمٍ عَلِيمٞ ٧٦

Он начал с их мешков до того, как обыскал мешок своего брата, а затем вытащил чашу из мешка своего брата. Мы научили Йусуфа этой хитрости, ибо по законам царя он не мог задержать своего брата, если бы того не захотел Аллах. Мы возносим по степеням тех, кого пожелаем, и выше любого обладающего знанием есть более знающий.

அவர்களின் பொதிகளை சோதனையிட யூஸுஃபிடம் அவர்களை திருப்பி அழைத்துச் சென்றனர். தந்திரத்தை மறைப்பதற்காக அவர் தம் உடன் பிறந்த சகோதரனின் பொதியை விட்டு விட்டு தனது மற்ற சகோதரர்களின் பொதிகளைச் சோதனையிட ஆரம்பித்தார். பின்னர் தம் உடன் பிறந்த சகோதரனின் பொதியை சோதனையிட்டு அதிலிருந்து அரசனின் அளவுக் குவளையை கண்டெடுத்தார். இவ்வாறு யூஸுஃபிற்காக தந்திரம் செய்து அவருடைய சகோதரனின் பொதியில் அளவுக் குவளையை வைத்ததைப் போல, திருடியவரை அடிமையாக்கும் அவர்கள் நாட்டுத் தண்டனை மூலம் தனது சகோதரர்களைத் தண்டிக்க அவருக்கு நாம் மேலும் ஒரு திட்டம் தீட்டினோம். அடித்து அபராதம் விதித்து திருடனைத் தண்டிக்கும் அரசரின் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த விடயம் கைக்கூடியிருக்காது. அல்லாஹ் வேறொரு திட்டத்தை நாடினாலே தவிர. அதற்கு அவன் பேராற்றலுடையவன். நாம் யூஸுஃபின் அந்தஸ்தை உயர்த்தியதைப் போன்று நம் அடியார்களில் நாம் நாடியவர்களின் அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு அறிவாளிக்கும் மேல் அவரை விட அறிந்தவர் உண்டு. எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் அறிவு அனைவரின் அறிவையும் விட மேலானதாகும்.

12:77Страница 244

۞ قَالُوٓاْ إِن يَسۡرِقۡ فَقَدۡ سَرَقَ أَخٞ لَّهُۥ مِن قَبۡلُۚ فَأَسَرَّهَا يُوسُفُ فِي نَفۡسِهِۦ وَلَمۡ يُبۡدِهَا لَهُمۡۚ قَالَ أَنتُمۡ شَرّٞ مَّكَانٗاۖ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَصِفُونَ ٧٧

Они сказали: «Если он украл, то ведь еще раньше воровал его брат». Йусуф (Иосиф) утаил это в своей душе и не открылся им, а только подумал: «Ваше положение еще более отвратительно, и Аллаху лучше знать о том, что вы измышляете».

யூஸுஃபின் சகோதரர்கள் கூறினார்கள்: “இவர் திருடியிருந்தால், எந்த ஆச்சரியமும் இல்லை. இவருக்கு முன்னால் இவருடைய சொந்த சகோதரரும் திருடியிருக்கத்தான் செய்கிறார்.” இவ்வாறு அவர்கள் யூஸுஃபைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அவர்களின் இந்த வார்த்தையால் ஏற்பட்ட வலியை யூஸுஃப் மறைத்துக் கொண்டார். அதை அவர்களிடம் வெளிப்படுத்தவில்லை. தம் மனதுக்குள்ளாக இவ்வாறு கூறிக்கொண்டார்: “உங்களிடமுள்ள பொறாமையும் இதற்கு முன் நீங்கள் செய்த தீய செயலுமே இந்த இடத்தில் கெட்டதாகும். உங்களிடம் இருந்து வெளியாகும் இந்த அவதூறை அல்லாஹ் நன்கறிந்தவன்.

12:78Страница 244

قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبٗا شَيۡخٗا كَبِيرٗا فَخُذۡ أَحَدَنَا مَكَانَهُۥٓۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ ٧٨

Они сказали: «О повелитель! Его отец - многолетний старик. Задержи вместо него кого-либо из нас. Мы видим, что ты - один из творящих добро».

யூஸுஃபின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறினார்கள்: “அரசரே! அவருக்கு அவரை மிகவும் நேசிக்கும் தள்ளாத வயதிலுள்ள தந்தை இருக்கிறார். அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை பிடித்துக் கொள்ளுங்கள். எங்களுடனும், மற்றவர்களுடனும் நீர் சிறந்த முறையிலேயே நடந்து கொள்பவராகவே நிச்சயமாக நாம் காண்கிறோம். எனவே அவ்வாறு செய்து எங்களுக்கு நன்மை செய்யுங்கள்.”

12:79Страница 245

قَالَ مَعَاذَ ٱللَّهِ أَن نَّأۡخُذَ إِلَّا مَن وَجَدۡنَا مَتَٰعَنَا عِندَهُۥٓ إِنَّآ إِذٗا لَّظَٰلِمُونَ ٧٩

Он сказал: «Упаси нас Аллах задержать кого-нибудь вместо того, у которого мы нашли нашу вещь. Поступив так, мы стали бы одними из беззаконников».

யூஸுஃப் கூறினார்: “அநியாயக்காரன் செய்த குற்றத்திற்காக குற்றமற்றவரைத் தண்டிக்கும் வகையில் தனது பொதியிலே அரசனின் அளவுக் குவளையை திருடாத ஒருவரை நாம் பிடித்து வைத்துக்கொள்வதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக! நாங்கள் அவ்வாறு செய்தால் குற்றவாளியை விட்டு விட்டு நிரபராதியைத் தண்டித்த அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.

12:80Страница 245

فَلَمَّا ٱسۡتَيۡـَٔسُواْ مِنۡهُ خَلَصُواْ نَجِيّٗاۖ قَالَ كَبِيرُهُمۡ أَلَمۡ تَعۡلَمُوٓاْ أَنَّ أَبَاكُمۡ قَدۡ أَخَذَ عَلَيۡكُم مَّوۡثِقٗا مِّنَ ٱللَّهِ وَمِن قَبۡلُ مَا فَرَّطتُمۡ فِي يُوسُفَۖ فَلَنۡ أَبۡرَحَ ٱلۡأَرۡضَ حَتَّىٰ يَأۡذَنَ لِيٓ أَبِيٓ أَوۡ يَحۡكُمَ ٱللَّهُ لِيۖ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ ٨٠

Отчаявшись, они уединились для совета, и старший из них сказал: «Помните ли вы о том, что отец заставил нас поклясться Аллахом и что раньше вы неправедно поступили с Йусуфом (Иосифом)? Я ни за что не покину этой страны, пока отец не разрешит мне или пока Аллах не примет Свое решение относительно меня. Воистину, Он - Наилучший из судий.

தமது வேண்டுகோளுக்கு யூஸுஃப் அளித்த பதிலால் அவர்கள் நம்பிக்கையிழந்த போது ஆலோசனை செய்வதற்காக மக்களை விட்டும் தனியே கூடினார்கள். அவர்களில் மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தை உங்களால் தவிரக்க முடியாத ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர தம் மகனை திரும்ப அழைத்து வரும்படி உங்களிடம் பெற்ற உறுதியான வாக்குறுதியை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இதற்கு முன்னர் யூஸுஃபின் விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவறிழைத்துள்ளீர்கள். என் தந்தை எனக்கு திரும்புமாறு அனுமதியளிக்கும் வரை அல்லது என் சகோதரனை விடுவிக்க அல்லாஹ் முடிவு செய்யும் வரை நான் எகிப்தை விட்டுச் செல்லமாட்டேன். அல்லாஹ் மிகச் சிறந்த முறையில் தீர்ப்பளிக்கக்கூடியவன். அவன் உண்மையாகவும் நீதியாகவும் தீர்ப்பளிக்கின்றான்.

12:81Страница 245

ٱرۡجِعُوٓاْ إِلَىٰٓ أَبِيكُمۡ فَقُولُواْ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبۡنَكَ سَرَقَ وَمَا شَهِدۡنَآ إِلَّا بِمَا عَلِمۡنَا وَمَا كُنَّا لِلۡغَيۡبِ حَٰفِظِينَ ٨١

Возвращайтесь к отцу и скажите: "Отец наш! Твой сын украл. Мы свидетельствуем только о том, что знаем, и не ведаем о сокровенном.

மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தையிடம் திரும்பிச் சென்று அவரிடம் கூறுங்கள்: “உங்களின் மகன் திருடிவிட்டான். அதற்குத் தண்டனையாக எகிப்தின் அரசன் அவரை அடிமையாக்கி விட்டான். அவரது பொதியில் இருந்து எடுப்பதை நாங்கள் கண்ணால் கண்டு அறிந்ததைத்தான் கூறுகிறோம். அவர் திருடுவார் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை, அவ்வாறு அறிந்திருந்தால் அவரைத் திரும்ப அழைத்து வருவோம் என்று உங்களிடம் வாக்குறுதி அளித்திருக்க மாட்டோம்.”

12:82Страница 245

وَسۡـَٔلِ ٱلۡقَرۡيَةَ ٱلَّتِي كُنَّا فِيهَا وَٱلۡعِيرَ ٱلَّتِيٓ أَقۡبَلۡنَا فِيهَاۖ وَإِنَّا لَصَٰدِقُونَ ٨٢

Спроси жителей селения, в котором мы были, и караванщиков, с которыми мы вернулись. Воистину, мы говорим правду"».

எங்களின் தந்தையே!- நாங்கள் உண்மைதான் கூறுகிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காக நாம் இருந்த எகிப்து மக்களிடம் கேளுங்கள். எங்களுடன் வந்த பயணக் கூட்டத்தினரிடமும் கேளுங்கள். நாங்கள் கூறியதையே அவர்களும் கூறுவார்கள். அவர் திருடியதாக நாங்கள் கூறுவதில் நாங்கள் உண்மையாளர்களே.

12:83Страница 245

قَالَ بَلۡ سَوَّلَتۡ لَكُمۡ أَنفُسُكُمۡ أَمۡرٗاۖ فَصَبۡرٞ جَمِيلٌۖ عَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَنِي بِهِمۡ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ٨٣

Он сказал: «О нет! Это ваши души ввели вас в соблазн, и лучше проявить терпение. Возможно, Аллах возвратит мне всех вместе. Воистину, Он - Знающий, Мудрый».

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “அவர் திருடிவிட்டார் என்று நீங்கள் கூறுவது உண்மையல்ல. யூஸுஃபின் விஷயத்தில் சூழ்ச்சி செய்ததைப் போலவே இவரின் விஷயத்திலும் சூழ்ச்சி செய்வதை உங்களின் மனம் உங்களுக்கு அழகாக்கிக் காட்டி விட்டது. நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேன். அல்லாஹ்விடமே என் கவலைகளை முறையிடுவேன். யூஸுஃப், அவருடைய சகோதரன் மற்றும் மூத்த சகோதரன் என அவர்கள் அனைவரையும் அவன் என்னிடம் கொண்டுவரக்கூடும். அவன் என் நிலையை நன்கறிந்தவன். எனது விடயத்தில் அவன் செய்யும் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.

12:84Страница 245

وَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبۡيَضَّتۡ عَيۡنَاهُ مِنَ ٱلۡحُزۡنِ فَهُوَ كَظِيمٞ ٨٤

Он отвернулся от них и сказал: «Как жаль Йусуфа (Иосифа)!». И его глаза покрылись бельмами от печали, которую он сдерживал.

அவர் அவர்களைப் புறக்கணித்து தூரமாகிச் சென்று, கூறினார்: “அந்தோ! யூஸுபின் மீது எனது கவலை எவ்வளவு கடுமையானது. அவர் அதிகமாக அழுததனால் அவர் கண்களின் கருவிழி வெண்மையாகி விட்டது. அவர் துக்கத்தாலும் கவலையாலும் நிரம்பியிருந்தார். மக்களை விட்டும் தம் கவலையை மறைத்துக் கொண்டிருந்தார்.

12:85Страница 245

قَالُواْ تَٱللَّهِ تَفۡتَؤُاْ تَذۡكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوۡ تَكُونَ مِنَ ٱلۡهَٰلِكِينَ ٨٥

Они сказали: «Клянемся Аллахом, ты не перестанешь поминать Йусуфа (Иосифа), пока не ослабеешь или не умрешь».

யூஸுஃபின் சகோதரர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்கள்: -“எங்கள் தந்தையே!- அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களின் நோய் கடினமாகும் வரை அல்லது உண்மையாக நீர் அழிந்து விடும் வரை நீங்கள் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.

12:86Страница 245

قَالَ إِنَّمَآ أَشۡكُواْ بَثِّي وَحُزۡنِيٓ إِلَى ٱللَّهِ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٨٦

Он сказал: «Мои жалобы и печаль обращены только к Аллаху, и я узнаю от Аллаха то, чего вы не знаете.

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “எனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் கவலையையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகின்றேன். நீங்கள் அறியாத அல்லாஹ்வின் அருளையும் உபகாரத்தையும் நிர்ப்பந்தத்தில் உள்ளவனுக்கு பதிலளிப்பதையும் துன்பத்தில் அகப்பட்டவருக்கு கூலி வழங்குவதையும் நான் அறிவேன்.

12:87Страница 246

يَٰبَنِيَّ ٱذۡهَبُواْ فَتَحَسَّسُواْ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَاْيۡـَٔسُواْ مِن رَّوۡحِ ٱللَّهِۖ إِنَّهُۥ لَا يَاْيۡـَٔسُ مِن رَّوۡحِ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡكَٰفِرُونَ ٨٧

О сыновья мои! Ступайте и разыщите Йусуфа (Иосифа) и его брата и не теряйте надежды на милость Аллаха, ибо отчаиваются в милости Аллаха только люди неверующие».

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் பற்றிய செய்தியை அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் தன் அடியார்களின் துன்பத்தைப் போக்குவான் என்பதில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிராகரித்த மக்கள் மட்டுமே அல்லாஹ் துன்பங்களைப் போக்கி விடுதலையளிப்பான் என்பதில் நம்பிக்கை இழப்பார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையை, அவன் தன் அடியார்களுக்கு வழங்கும் மறைவான அருட்கொடைகளை அறிய மாட்டார்கள்.

12:88Страница 246

فَلَمَّا دَخَلُواْ عَلَيۡهِ قَالُواْ يَٰٓأَيُّهَا ٱلۡعَزِيزُ مَسَّنَا وَأَهۡلَنَا ٱلضُّرُّ وَجِئۡنَا بِبِضَٰعَةٖ مُّزۡجَىٰةٖ فَأَوۡفِ لَنَا ٱلۡكَيۡلَ وَتَصَدَّقۡ عَلَيۡنَآۖ إِنَّ ٱللَّهَ يَجۡزِي ٱلۡمُتَصَدِّقِينَ ٨٨

Войдя к нему, они сказали: «О повелитель! Нас и наш род поразила беда. Мы прибыли с небольшим товаром. Отмерь нам меру сполна и окажи нам милость. Воистину, Аллах вознаграждает творящих добро».

தமது தந்தையின் கட்டளையின் படி அவர்கள் செயற்பட்டு, யூஸுஃபையும் அவரது சகோதரரரையும் தேடிச் சென்றனர். அவர்கள் யூஸுஃபிடம் வந்த போது கூறினார்கள்: “வறுமையும் கஷ்டமும் எங்களைப் பாதித்துள்ளது. நாங்கள் அற்ப பொருளையே கொண்டுவந்துள்ளோம். இதற்கு முன்னர் எங்களுக்கு நிறைவாக தானியங்கள் தந்தவாறு இப்பொழுதும் நிறைவாக தானியங்கள் தாருங்கள். அதிகப்படியாக தர்மமும் செய்யுங்கள். அல்லது எங்களின் அற்ப பொருள்களைக் கண்டுகொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்யக்கூடியவர்களுக்கு அழகிய முறையில் கூலி வழங்குகின்றான்.

12:89Страница 246

قَالَ هَلۡ عَلِمۡتُم مَّا فَعَلۡتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذۡ أَنتُمۡ جَٰهِلُونَ ٨٩

Он сказал: «Поняли ли вы, как вы поступили с Йусуфом (Иосифом) и его братом, когда были невежественны?».

அவர்களின் பேச்சைக் கேட்ட யூஸுஃபின் உள்ளம் அவர்கள் மீது கொண்ட கருணையால் உருகிவிட்டது. தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் கேட்டார்: “யூஸுஃபுடனும் அவருடைய சகோதரருடனும் நீங்கள் எவ்வாறு நடந்துகொண்டீர்கள் என்பதை அறிந்தேயுள்ளீர்கள். அப்போது நீங்கள் செய்த செயலின் விளைவைக் குறித்து அறியாதவர்களாக இருந்தீர்கள்.”

12:90Страница 246

قَالُوٓاْ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِيۖ قَدۡ مَنَّ ٱللَّهُ عَلَيۡنَآۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصۡبِرۡ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ ٩٠

Они сказали: «Неужели ты - Йусуф (Иосиф)?». Он сказал: «Я - Йусуф, а это - мой брат. Аллах облагодетельствовал нас. Воистину, если кто богобоязнен и терпелив, то ведь Аллах не теряет вознаграждения творящих добро».

அவர்கள் திடுக்கிட்டார்கள். “நீர்தான் யூஸுஃபா” என்று கேட்டார்கள். யூஸுஃப் அவர்களிடம் கூறினார்: “ஆம். நான்தான் யூஸுஃப். என்னுடன் இருக்கும் இவர் என் சொந்த சகோதரர். நாங்கள் இருந்த நிலையிலிருந்து எங்களை விடுவித்து, எங்களின் அந்தஸ்தை உயர்த்தி அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக அவருடைய செயல் நன்மையான செயலாகும். நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்காக அதனைப் பாதுகாக்கிறான்.

12:91Страница 246

قَالُواْ تَٱللَّهِ لَقَدۡ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيۡنَا وَإِن كُنَّا لَخَٰطِـِٔينَ ٩١

Они сказали: «Клянемся Аллахом! Аллах предпочел тебя нам. Мы же были грешниками».

அவருடைய சகோதரர்கள் தாங்கள் அவருடன் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களை விட உமக்குப் பரிபூரணமான பண்புகளை வழங்கி உம்மை சிறப்பித்துள்ளான். நாங்கள் உம்முடன் நடந்து கொண்ட விதத்தில் தவறிழைத்த அநியாயக்காரர்களாக இருந்தோம்.”

12:92Страница 246

قَالَ لَا تَثۡرِيبَ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَۖ يَغۡفِرُ ٱللَّهُ لَكُمۡۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ ٩٢

Он сказал: «Сегодня я не стану укорять вас. Да простит вас Аллах, ибо Он - Милосерднейший из милосердных.

யூஸுஃப் அவர்கள் கூறிய காரணங்களை ஏற்றுக்கொண்டார். அவர் கூறினார்: “இன்றைய தினம் உங்களைத் தண்டிக்கவோ கண்டிக்கவோ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்விடம் உங்களுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். அவன் கருணையாளர்களுக்கெல்லாம் மாபெரும் கருணையாளனாக இருக்கின்றான்.

12:93Страница 246

ٱذۡهَبُواْ بِقَمِيصِي هَٰذَا فَأَلۡقُوهُ عَلَىٰ وَجۡهِ أَبِي يَأۡتِ بَصِيرٗا وَأۡتُونِي بِأَهۡلِكُمۡ أَجۡمَعِينَ ٩٣

Ступайте с моей рубахой и накиньте ее на лицо моего отца, и тогда он прозреет, а потом привезите ко мне всю свою семью».

தம் தந்தையின் பார்வைக்கு ஏற்பட்ட நிலமையை அவர்கள் அவரிடம் கூறிய போது அவர் அவர்களிடம் தன் சட்டையைக் கொடுத்துக் கூறினார்: “எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் போடுங்கள். அவருடைய பார்வை திரும்பி விடும். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.”

12:94Страница 246

وَلَمَّا فَصَلَتِ ٱلۡعِيرُ قَالَ أَبُوهُمۡ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَۖ لَوۡلَآ أَن تُفَنِّدُونِ ٩٤

Как только караван покинул Египет, их отец сказал: «Воистину, я чувствую запах Йусуфа (Иосифа), если только вы не считаете меня выжившим из ума стариком».

பயணக் குழு எகிப்திலிருந்து புறப்பட்டு ஊர் எல்லையைத் தாண்டியதும் தன் பிள்ளைகளிடமும் ஊரில் தன் அருகில் இருந்தோரிடமும் யஃகூப் கூறினார்: “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை உணர்கிறேன். “தான் அறியாததைக் கூறும் புத்தியையிழந்த கிழவர்” என்று கூறி நீங்கள் என்னை மடையனாக்கி புத்தியிழந்தவர் என்பீர்கள்.

12:95Страница 246

قَالُواْ تَٱللَّهِ إِنَّكَ لَفِي ضَلَٰلِكَ ٱلۡقَدِيمِ ٩٥

Они сказали: «Клянемся Аллахом, ты пребываешь в своем старом заблуждении».

அவரைச் சுற்றியிருந்த அவரது பிள்ளைகள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களிடம் யூஸுஃபுக்குள்ள மதிப்பினாலும் மீண்டும் அவரைக் காணமுடியும் என்ற எண்ணத்தாலும் உங்களின் முன்னைய மாயையிலேயே இருக்கின்றீர்கள்.”

12:96Страница 247

فَلَمَّآ أَن جَآءَ ٱلۡبَشِيرُ أَلۡقَىٰهُ عَلَىٰ وَجۡهِهِۦ فَٱرۡتَدَّ بَصِيرٗاۖ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٩٦

Когда же прибыл добрый вестник, накинул рубаху на его лицо и тот прозрел, он сказал: «Разве я не говорил вам, что мне известно от Аллаха то, чего вы не знаете?».

யஃகூபுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலைக் கூறுபவர் வந்த போது யூஸுஃபின் சட்டையை யஃகூபின் முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வையுடையவராகி விட்டார். அப்போது அவர் தன் பிள்ளைகளிடம் கூறினார்: “நான் அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் குறித்து நீங்கள் அறியாததையெல்லாம் நன்கு அறிவேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?”

12:97Страница 247

قَالُواْ يَٰٓأَبَانَا ٱسۡتَغۡفِرۡ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَٰطِـِٔينَ ٩٧

Они сказали: «Отец наш! Попроси прощения нашим грехам. Воистину, мы были грешниками».

அவருடைய மகன்கள் அவரிடம் யூஸுஃபின் விஷயத்திலும் அவருடைய சகோதரரின் விஷயத்திலும் தாங்கள் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “எங்களின் தந்தையே! எங்களின் முந்தைய பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக நாங்கள் யூஸுஃப் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரரின் விஷயத்தில் தவறிழைத்த குற்றவாளிகளாக இருந்தோம்.”

12:98Страница 247

قَالَ سَوۡفَ أَسۡتَغۡفِرُ لَكُمۡ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٩٨

Он сказал: «Я попрошу моего Господа простить вас, ведь Он - Прощающий, Милосердный».

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களுடன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

12:99Страница 247

فَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَبَوَيۡهِ وَقَالَ ٱدۡخُلُواْ مِصۡرَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ ٩٩

Когда они вошли к Йусуфу (Иосифу), он прижал к себе родителей и сказал: «Входите в Египет без опаски, если этого пожелает Аллах».

யஃகூபும் அவருடைய குடும்பத்தினரும் தங்களின் நாட்டிலிருந்து எகிப்திலிருக்கும் யூஸுஃபை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் அவரிடம் நுழைந்த போது தன் தாய் தந்தையரை தன் பக்கம் அணைத்துக் கொண்டார். தன்னுடைய சகோதரர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கூறினார்: “அல்லாஹ் நாட்டத்தால் எகிப்தில் பாதுகாப்புப் பெற்றவர்களாக நுழையுங்கள். இங்கு உங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

12:100Страница 247

وَرَفَعَ أَبَوَيۡهِ عَلَى ٱلۡعَرۡشِ وَخَرُّواْ لَهُۥ سُجَّدٗاۖ وَقَالَ يَٰٓأَبَتِ هَٰذَا تَأۡوِيلُ رُءۡيَٰيَ مِن قَبۡلُ قَدۡ جَعَلَهَا رَبِّي حَقّٗاۖ وَقَدۡ أَحۡسَنَ بِيٓ إِذۡ أَخۡرَجَنِي مِنَ ٱلسِّجۡنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلۡبَدۡوِ مِنۢ بَعۡدِ أَن نَّزَغَ ٱلشَّيۡطَٰنُ بَيۡنِي وَبَيۡنَ إِخۡوَتِيٓۚ إِنَّ رَبِّي لَطِيفٞ لِّمَا يَشَآءُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ ١٠٠

Он поднял своих родителей на трон, и они вместе с братьями пали ниц перед ним. Он сказал: «Отец мой! Это - толкование моего давнего сна. Господь мой сделал его явью. Он облагодетельствовал меня, освободив из темницы, и привел вас из пустыни после того, как дьявол посеял вражду между мною и моими братьями. Воистину, мой Господь добр, к кому пожелает. Воистину, Он - Знающий, Мудрый.

தன் பெற்றோரை தான் அமரும் சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டார். அவருடைய பெற்றோரும் பதினொரு சகோதரர்களும் அவருக்கு சிரம்பணிந்து வாழ்த்துக் கூறினார்கள். அது வணக்கத்திற்கான ஸுஜூத் அல்ல கௌரவிப்புக்கான ஸுஜூத். கனவில் நிகழ்ந்தது போன்று அல்லாஹ்வின் கட்டளை நிகழும் பொருட்டே இவ்வாறு நடந்தது. இதனால்தான் யூஸுஃப் தன் தந்தையிடம் கூறினார்: “நீங்கள் எனக்கு சிரம்பணிந்து தெரிவிக்கும் இந்த வாழ்த்துதான் நான் இதற்கு முன்னால் கண்டு உங்களிடம் கூறிய கனவின் விளக்கம். அதனை நிகழச் செய்து என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். என் இறைவன் என்னை சிறையிலிருந்து வெளியேற்றிய போதும் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் குறுக்கிட்ட பின்னரும் உங்களைக் கிராமத்திலிருந்து இங்கு கொண்டுவந்தன் மூலம் அல்லாஹ் என்மீது உபகாரம் புரிந்துள்ளான். என் இறைவன் தான் நாடுவதை நிகழ்த்துவதில் நுட்பமானவன். அவன் தன் அடியார்களின் நிலைமைகளை நன்கறிந்தவன்; தன் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.

12:101Страница 247

۞ رَبِّ قَدۡ ءَاتَيۡتَنِي مِنَ ٱلۡمُلۡكِ وَعَلَّمۡتَنِي مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَنتَ وَلِيِّۦ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ تَوَفَّنِي مُسۡلِمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ١٠١

Господи! Ты даровал мне власть и научил толковать сновидения. Творец небес и земли! Ты - мой Покровитель в этом мире и в Последней жизни. Умертви меня мусульманином и присоедини меня к праведникам».

பின்னர் யூஸுஃப் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நீ எனக்கு எகிப்தின் அரசாட்சியை வழங்கினாய். கனவுகளின் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தாய். வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! இவ்வுலகிலும் மறுவுலகிலும் என்னுடைய எல்லா விவகாரங்களுக்கும் நீயே பொறுப்பாளியாவாய். எனது தவணை நிறைவடைந்து என் உயிரைக் கைப்பற்றும் போது என்னை முஸ்லிமாகவே உனக்குக் கட்டுப்பட்டவனாகவே கைப்பற்றுவாயாக. ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தில் இருக்கும் எனது மூதாதையர்களிலும் ஏனையோர்களிலும் உள்ள நல்லோர்களான தூதர்களுடன் என்னைச் சேர்த்தருள்வாயாக.”

12:102Страница 247

ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۖ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ أَجۡمَعُوٓاْ أَمۡرَهُمۡ وَهُمۡ يَمۡكُرُونَ ١٠٢

Все это - часть повествований о сокровенном, которые Мы ниспосылаем тебе в откровении. Ты не был с ними, когда они вместе принимали решение и строили козни.

தூதரே!- மேற்கூறப்பட்ட யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாற்றை நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கின்றோம். அது குறித்து நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். ஏனெனில் யூஸுஃபின் சகோதரர்கள் அவரைக் கிணற்றில் போட நாடிய போதும் அவர்கள் தந்திரத்தைத் திட்டமிட்ட போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. ஆயினும் நாம் அதனை உமக்கு வஹி மூலம் அறிவித்தோம்.

12:103Страница 247

وَمَآ أَكۡثَرُ ٱلنَّاسِ وَلَوۡ حَرَصۡتَ بِمُؤۡمِنِينَ ١٠٣

Большая часть людей не уверует, даже если ты страстно будешь желать этого.

தூதரே!- நீர் உம்மால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தாலும் மக்களில் பெரும்பாலானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அதற்காக நீர் வருத்தப்படாதீர்.

12:104Страница 248

وَمَا تَسۡـَٔلُهُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ١٠٤

Ты не просишь у них вознаграждения за это, ведь это - только Напоминание для миров.

தூதரே!- அவர்கள் விளங்கியிருந்தால் உம்மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஏனெனில் நீர் குர்ஆனுக்கோ அவர்களை அழைக்கும் விஷயத்திற்கோ அவர்களிடம் எந்தக் கூலியையும் எதிர்பார்க்கவில்லை. குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அறிவுரையேயாகும்.

12:105Страница 248

وَكَأَيِّن مِّنۡ ءَايَةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ يَمُرُّونَ عَلَيۡهَا وَهُمۡ عَنۡهَا مُعۡرِضُونَ ١٠٥

Как же много на небесах и на земле знамений, мимо которых они проходят и отворачиваются.

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றைக் குறித்து கவனம் செலுத்தாமலும் சிந்திக்காமலும் அவற்றைப் புறக்கணித்தவாறு அவர்கள் கடந்து சென்று விடுகிறார்கள். அவற்றை பற்றி அவர்கள் திரும்பி பார்ப்பதும் கிடையாது.

12:106Страница 248

وَمَا يُؤۡمِنُ أَكۡثَرُهُم بِٱللَّهِ إِلَّا وَهُم مُّشۡرِكُونَ ١٠٦

Большая часть их верует в Аллаха, приобщая к Нему сотоварищей.

அல்லாஹ்தான் படைப்பாளன், வாழ்வாதாரம் அளிப்பவன், உயிர்பிப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதை மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொண்டாலும் அவர்கள் அல்லாஹ்வுடன் இணைத்து வேறு சிலைகளை வணங்குகின்றனர். அவனுக்கு பிள்ளை உண்டு என வாதிடுகின்றனர்.

12:107Страница 248

أَفَأَمِنُوٓاْ أَن تَأۡتِيَهُمۡ غَٰشِيَةٞ مِّنۡ عَذَابِ ٱللَّهِ أَوۡ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ١٠٧

Неужели они не опасаются того, что покрывало наказания Аллаха окутает их или что Час настанет внезапно, когда они об этом и думать не будут?

இந்த இணைவைப்பாளர்கள் தம்மால் தடுக்க முடியாத தம்மை வியாபிக்கும் அல்லாஹ்வின் தண்டனை இவ்வுலகில் தங்களைத் தாக்கிவிடக் கூடும் என்பது குறித்து அச்சமற்று இருக்கிறார்களா? அல்லது மறுமை வருவதை உணர்ந்து அதற்குத் தயாராகுவதற்குக் கூட வாய்ப்புக் கிடைக்காமல், மறுமை நாள் அவர்களிடம் திடீரென வந்து விடுவதை அச்சமற்று இருக்கிறார்களா?. அதனால் தானா அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை?!

12:108Страница 248

قُلۡ هَٰذِهِۦ سَبِيلِيٓ أَدۡعُوٓاْ إِلَى ٱللَّهِۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِيۖ وَسُبۡحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ١٠٨

Скажи: «Таков мой путь. Я и мои последователи призываем к Аллаху согласно убеждению. Пречист Аллах, и я не являюсь одним из многобожников».

தூதரே!- நீர் அழைக்கக் கூடியவரிடம் கூறுவீராக: “இது எனது வழி. இதன் பக்கம் தெளிவான ஆதாரத்துடன் நானும் என் வழிகாட்டுதலையும், வழிமுறையையும் பின்பற்றியவர்களும் மக்களை அழைக்கின்றோம். அவனது கண்ணியத்துக்குப் பொருத்தமற்ற அல்லது அவனது பூரணத்தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தும் அவனோடு இணைக்கப்பட்ட அனைத்தை விட்டும் நான் பரிசுத்தப்படுத்துகின்றேன். நான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குபவன் அல்ல. மாறாக நான் அவனை மட்டுமே ஒருமைப்படுத்தி வணங்கக்கூடியவன் ஆவேன்.

12:109Страница 248

وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِم مِّنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰٓۗ أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۗ وَلَدَارُ ٱلۡأٓخِرَةِ خَيۡرٞ لِّلَّذِينَ ٱتَّقَوۡاْۚ أَفَلَا تَعۡقِلُونَ ١٠٩

До тебя Мы направляли посланниками только мужей из селений, которым мы внушали откровение. Разве они не странствовали по земле и не видели, каким был конец тех, которые жили до них? Воистину, обитель в Последней жизни лучше для богобоязненных. Неужели они не разумеют?

தூதரே!- உமக்கு முன் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். வானவர்களை அல்ல. உமக்கு வஹி அறிவித்தவாறே அவர்களுக்கு வஹி அறிவித்தோம். அவர்கள் நகரவாசிகளாக இருந்தார்கள். நாட்டுப்புறத்தவர்களாக அல்ல. அவர்களின் சமூகங்கள் அவர்களை நிராகரித்ததனால் நாம் அந்த சமூகங்களை அழித்து விட்டோம். உம்மை நிராகரிப்பவர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் படிப்பினை பெறவில்லையா? இவ்வுலகில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையின் இன்பங்களே சிறந்ததாகும். இதுதான் சிறந்தது என்பதை புரிந்து கொள்ளவில்லையா? எனவே அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி -அவற்றில் மிகப் பெரியது ஈமான் கொள்வது- அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவற்றில் மிகப் பெரியது அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது, இறைவனை அஞ்சுங்கள்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English