Аль-Мухтасар · Тафсир · на тамильском
الإسراء
Аль-Исра
Ночной перенос · Мекканская · 111 аятов
17:1Страница 282
سُبۡحَٰنَ ٱلَّذِيٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلٗا مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِي بَٰرَكۡنَا حَوۡلَهُۥ لِنُرِيَهُۥ مِنۡ ءَايَٰتِنَآۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ١
Пречист Тот, Кто перенес ночью Своего раба, чтобы показать ему некоторые из Наших знамений, из Заповедной мечети в мечеть аль-Акса, окрестностям которой Мы даровали благословение. Воистину, Он - Слышащий, Видящий.
அல்லாஹ் தூய்மையானவன் மகத்தானவன். ஏனெனில் வேறு யாராலும் செய்வதற்கு ஆற்றலில்லாததை செய்வதற்கு அவன் ஆற்றலுள்ளவன். அவனே தன் அடியார் முஹம்மதை உடலோடும் ஆன்மாவோடும் விழித்த நிலையில் இரவின் ஒரு பகுதியில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பழங்களினாலும் பயிர்களினாலும் நபிமார்களின் இல்லங்களினாலும் நாம் அருள்செய்த பைத்துல் முகத்தஸை நோக்கி தன் வல்லமையை அறிவிக்கக்கூடிய சில சான்றுகளைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றான். நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். செவியேற்கப்படும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் பார்க்கக்கூடியவன். பார்க்கப்படக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
17:2Страница 282
وَءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُواْ مِن دُونِي وَكِيلٗا ٢
Мы даровали Мусе (Моисею) Писание и сделали его верным руководством для сынов Исраила (Израиля): «Не берите в покровители никого, кроме Меня!
நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாக ஆக்கினோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “என்னைத் தவிர யாரையும் உங்கள் விவகாரங்களை ஒப்படைக்கும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மாறாக என்னையே சார்ந்திருங்கள்.”
17:3Страница 282
ذُرِّيَّةَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوحٍۚ إِنَّهُۥ كَانَ عَبۡدٗا شَكُورٗا ٣
О потомки тех, кого Мы перенесли вместе с Нухом (Ноем)! Воистину, он был благодарным рабом».
நூஹுடன் வெள்ளத்திலிருந்து தப்புவதற்கு நாம் அருள்புரிந்தவர்களின் சந்ததியிலுள்ளவர்களே நீங்கள். எனவே இந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனை வழிப்பட்டு அவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த விஷயத்தில் நூஹைப் பின்பற்றுங்கள். நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றிசெலுத்தக்கூடியவராக இருந்தார்.
17:4Страница 282
وَقَضَيۡنَآ إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ فِي ٱلۡكِتَٰبِ لَتُفۡسِدُنَّ فِي ٱلۡأَرۡضِ مَرَّتَيۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوّٗا كَبِيرٗا ٤
Мы предопределили сынам Исраила (Израиля) в Писании: «Вы дважды будете бесчинствовать на земле и будете чрезмерно высокомерными».
நிச்சயமாக அவர்கள் பூமியில் பாவங்கள் மற்றும் கர்வத்தினால் இருமுறை குழப்பம் விளைவிப்பார்கள்; மக்களின் மீது ஆதிக்கம்கொண்டு எல்லை கடந்து அநீதி, அட்டூழியம் செய்வார்கள் என்று நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு தவ்ராத்தில் அறிவித்தோம்.
17:5Страница 282
فَإِذَا جَآءَ وَعۡدُ أُولَىٰهُمَا بَعَثۡنَا عَلَيۡكُمۡ عِبَادٗا لَّنَآ أُوْلِي بَأۡسٖ شَدِيدٖ فَجَاسُواْ خِلَٰلَ ٱلدِّيَارِۚ وَكَانَ وَعۡدٗا مَّفۡعُولٗا ٥
Когда настала пора первого из двух бесчинств, Мы наслали на вас Наших могущественных рабов, которые прошлись по землям. Так обещание было исполнено.
அவர்கள் மூலம் முதல் குழப்பம் நிகழ்ந்து விட்டால் நாம் பெரும் வலிமையான சில நம் அடியார்களை அவர்கள் மீது சாட்டிவிடுவோம். அவர்கள் இவர்களை கொன்று குவிப்பார்கள். ஓட ஓட விரட்டுவார்கள். நகரத்தின் மத்தியில் புகுந்து காண்பவற்றையெல்லாம் நாசம் செய்து அலைவார்கள். அவ்வாறு சந்தேகம் இல்லாமல் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
17:6Страница 282
ثُمَّ رَدَدۡنَا لَكُمُ ٱلۡكَرَّةَ عَلَيۡهِمۡ وَأَمۡدَدۡنَٰكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَجَعَلۡنَٰكُمۡ أَكۡثَرَ نَفِيرًا ٦
Затем Мы вновь даровали вам победу над ними. Мы поддержали вас богатством и сыновьями и сделали вас более многочисленными.
பின்னர் -இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பிய போது உங்கள் மீது சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை மீண்டும் வழங்கினோம். உங்களின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு பிள்ளைகள் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின்னரும் உங்களுக்கு செல்வங்களையும் பிள்ளைகளையும் வழங்கி உதவி செய்தோம். உங்களின் எதிரிகளைவிட உங்களைப் பெரும் எண்ணிக்கையினராக ஆக்கினோம்.
17:7Страница 282
إِنۡ أَحۡسَنتُمۡ أَحۡسَنتُمۡ لِأَنفُسِكُمۡۖ وَإِنۡ أَسَأۡتُمۡ فَلَهَاۚ فَإِذَا جَآءَ وَعۡدُ ٱلۡأٓخِرَةِ لِيَسُـُٔواْ وُجُوهَكُمۡ وَلِيَدۡخُلُواْ ٱلۡمَسۡجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٖ وَلِيُتَبِّرُواْ مَا عَلَوۡاْ تَتۡبِيرًا ٧
Мы сказали: «Если вы творите добро, то поступаете во благо себе. А если вы вершите зло, то поступаете во вред себе». Когда же наступил срок последнего обещания, Мы позволили вашим врагам опечалить ваши лица, войти в Иерусалимскую мечеть подобно тому, как они вошли туда в первый раз, и до основания разрушить все, что попадало им в руки.
இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் நன்மையான செயல்களைச் சிறந்த முறையில் நிறைவேற்றினால் அவற்றால் ஏற்படும் பலன் உங்களுக்குத்தான். உங்களின் செயல்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். நீங்கள் தீய செயல்களைச் செய்தால் அவற்றால் ஏற்படும் விளைவு உங்களைத்தான் பாதிக்கும். உங்களின் நற்செயல்கள் அவனுக்குப் பயனளிப்பதுமில்லை; உங்களின் தீய செயல்கள் அவனைப் பாதிப்பதுமில்லை. இரண்டாவது குழப்பம் நிகழ்ந்தால் உங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பல்வேறு இழிவுகளை அவர்கள் உங்களை அனுபவிக்கச் செய்து அவமானத்தை உங்கள் முகங்களில் வெளிப்படையாகத் தெரியச் செய்யவும் அவர்கள் முதன் முதலில் பைத்துல் முகத்தஸில் நுழைந்தவாறு மீண்டும் நுழைந்து அதனை நாசம் செய்யவும் அவர்களால் தாம் வெற்றிகொண்ட இடங்களையெல்லாம் அடியோடு அழித்துவிடவும் உங்களின் எதிரிகளை உங்கள் மீது சாட்டிவிடுவோம்.
17:8Страница 283
عَسَىٰ رَبُّكُمۡ أَن يَرۡحَمَكُمۡۚ وَإِنۡ عُدتُّمۡ عُدۡنَاۚ وَجَعَلۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ حَصِيرًا ٨
Быть может, ваш Господь помилует вас. Но если вы вернетесь к бесчинству, то Мы также вернемся к наказанию. Мы сделали Геенну местом заточения для неверующих.
இஸ்ராயீலின் மக்களே!- இவ்வளவு கடுமையான தண்டனைக்குப் பிறகும் நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பி உங்களின் செயல்களைச் சீர்படுத்திக் கொண்டால் அவன் உங்கள் மீது கருணை காட்டலாம். நீங்கள் மூன்றாவது முறையும் அல்லது அதற்குப் பிறகும் குழப்பத்தில் ஈடுபட்டால் நாம் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். நாம் அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக (தங்கும் இடமாக) ஆக்கியுள்ளோம். அவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது.
17:9Страница 283
إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَهۡدِي لِلَّتِي هِيَ أَقۡوَمُ وَيُبَشِّرُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرٗا كَبِيرٗا ٩
Воистину, этот Коран указывает на самый правильный путь и возвещает верующим, которые совершают праведные деяния, благую весть о том, что им уготована великая награда.
நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்தக் குர்ஆன் இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டுகிறது. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களுக்கு அவர்கள் சந்தோசப்படுமளவு அல்லாஹ்விடம் நிச்சயமாக மகத்தான கூலி உண்டு என்றும் கூறுகிறது.
17:10Страница 283
وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا ١٠
А тем, которые не веруют в Последнюю жизнь, Мы приготовили мучительные страдания.
நிச்சயமாக மறுமையில் நாம் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்ற அவர்களுக்கு கவலை ஏற்படுத்தும் செய்தியையும் மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களுக்கு அது கூறுகிறது.
17:11Страница 283
وَيَدۡعُ ٱلۡإِنسَٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلۡخَيۡرِۖ وَكَانَ ٱلۡإِنسَٰنُ عَجُولٗا ١١
Человек молит о зле подобно тому, как он молит о добре. Воистину, человек тороплив.
மனிதன் நன்மையைத் தேடி பிரார்த்தனை செய்வதுபோல அறியாமையினால் கோபத்தில் தனக்கெதிராக, தன் பிள்ளைகளுக்கும் செல்வங்களுக்கும் எதிராக கெடுதியைக்கொண்டு பிரார்த்தனை செய்கிறான். நாம் அவனுடைய பிரார்த்தனைக்கு பதிலளித்தால் அவன் அழிந்து விடுவான்; அவனுடைய பிள்ளைகளும் செல்வங்களும் அழிந்து விடும். மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். நிச்சயமாக தனக்கு தீங்கு தரக்கூடியதற்கு அவசரப்படுகிறான்.
17:12Страница 283
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ ءَايَتَيۡنِۖ فَمَحَوۡنَآ ءَايَةَ ٱلَّيۡلِ وَجَعَلۡنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبۡصِرَةٗ لِّتَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡ وَلِتَعۡلَمُواْ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلۡحِسَابَۚ وَكُلَّ شَيۡءٖ فَصَّلۡنَٰهُ تَفۡصِيلٗا ١٢
Мы сделали ночь и день двумя знамениями. Мы погрузили во мрак знамение ночи, а знамение дня сделали светящимся, чтобы вы стремились к милости вашего Господа, могли вести летоисчисление и знали счет. Всякой вещи Мы дали исчерпывающее разъяснение.
நாம் இரவையும் பகலையும், அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய இரு சான்றுகளாகப் படைத்துள்ளோம். ஏனெனில் அவற்றில் நீளமும் சுருக்கமும் வெப்பமும் குளிரும் மாறிமாறி வருகின்றன. மக்கள் ஓய்வெடுப்பதற்காகவும் உறங்குவதற்காகவும் இரவை இருட்டாகவும் அவர்கள் பார்ப்பதற்காக, தனது அருளினால் உங்களுக்காக நிர்ணயம் செய்த வாழ்வாதாரத்தை நீங்கள் தேடிப்பெற்றுக்கொள்வதற்காக பகலைப் பிரகாசமானதாகவும் அமைத்துள்ளோம். இன்னும் அந்த இரண்டும் மாறிமாறி வருவதைக்கொண்டு நீங்கள் வருடங்களின் எண்ணிக்கையையும் உங்களுக்கு தேவையான மாதங்கள், நாட்கள் மற்றும் நேரங்களை கணக்கிட்டு அறிந்துகொள்வதற்காகத்தான். விடயங்களைப் பிரிந்து விளங்கவும் அசத்தியவாதி யார் சத்தியவாதி யார் என்பது தெளிவாகவும் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரித்து விட்டோம்.
17:13Страница 283
وَكُلَّ إِنسَٰنٍ أَلۡزَمۡنَٰهُ طَٰٓئِرَهُۥ فِي عُنُقِهِۦۖ وَنُخۡرِجُ لَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ كِتَٰبٗا يَلۡقَىٰهُ مَنشُورًا ١٣
Каждому человеку Мы повесили на шею его деяния (сделали их неразлучными с ним). А в День воскресения Мы представим ему книгу, которую он увидит развернутой.
ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்களை கழுத்தில் மாலை ஒட்டியிருப்பது போன்று அவனுடனேயே சேர்த்து வைத்துள்ளோம். அவனிடம் விசாரணை செய்யப்படும் வரை அது அவனை விட்டு பிரியாது. நாம் மறுமை நாளில் அவன் செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்ட ஒரு புத்தகத்தை அவனிடம் காட்டுவோம். அவன் தனக்கு முன்னால் அது விரிக்கப்பட்டிருப்பதைக் காண்பான்.
17:14Страница 283
ٱقۡرَأۡ كِتَٰبَكَ كَفَىٰ بِنَفۡسِكَ ٱلۡيَوۡمَ عَلَيۡكَ حَسِيبٗا ١٤
Читай свою книгу! Сегодня достаточно того, что ты сам сосчитаешь свои деяния против самого себя.
நாம் அப்போது அவனுக்கு கூறுவோம்: -மனிதனே!- உன் புத்தகத்தைப் படித்துப் பார். உன் செயல்களைக் கணக்கிடும் பொறுப்பை நீயே ஏற்றுக்கொள். மறுமை நாளில் உன் செயல்களைக் கணக்கிடுவதற்கு நீயே போதுமானவன்.
17:15Страница 283
مَّنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبۡعَثَ رَسُولٗا ١٥
Кто следует прямым путем, тот поступает во благо себе. А кто впадает в заблуждение, тот поступает во вред себе. Ни одна душа не понесет чужого бремени. Мы никогда не наказывали людей, не отправив к ним посланника.
நம்பிக்கை கொள்ள நேர்வழி பெற்றவரது நேர்வழிக்கான கூலி அவருக்கே கிடைக்கும். வழிதவறியவரின் வழிகேட்டின் தண்டனையை அவரே பெறுவார். ஒருவரின் பாவங்களை மற்றவர் சுமக்க முடியாது. நாம் தூதர்களை அனுப்பி ஒரு சமூகத்தின் மீது ஆதாரத்தை நிலைநாட்டாதவரை அந்த மக்களைத் தண்டிக்க மாட்டோம்.
17:16Страница 283
وَإِذَآ أَرَدۡنَآ أَن نُّهۡلِكَ قَرۡيَةً أَمَرۡنَا مُتۡرَفِيهَا فَفَسَقُواْ فِيهَا فَحَقَّ عَلَيۡهَا ٱلۡقَوۡلُ فَدَمَّرۡنَٰهَا تَدۡمِيرٗا ١٦
Когда Мы хотели погубить какое-либо селение, то повелевали его изнеженным роскошью жителям покориться Аллаху. Когда же они предавались нечестию, то относительно него сбывалось Слово, и Мы уничтожали его полностью.
நாம் ஒரு ஊரை அங்குள்ளவர்கள் செய்த அநியாயத்தினால் அழிக்க விரும்பினால் அருட்கொடைகள் யாரை கர்வத்தில் ஆழ்த்திவிட்டதோ அவர்களைக் கீழ்ப்படியுமாறு கட்டளையிடுவோம். அவர்கள் அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் மாறாகச் செயற்படுவார்கள். அப்போது அவர்கள்மீது அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள் என்ற வாக்கு உறுதியாகிவிடும். எனவே நாம் அவர்களை அடியோடு அழித்து விடுவோம்.
17:17Страница 283
وَكَمۡ أَهۡلَكۡنَا مِنَ ٱلۡقُرُونِ مِنۢ بَعۡدِ نُوحٖۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا ١٧
Сколько же поколений мы погубили после Нуха (Ноя)! Достаточно того, что Аллах знает и видит грехи Своих рабов.
நூஹுக்குப் பின் நாம் அழித்த ஆத், ஸமூத் போன்ற எத்தனையோ பொய்பித்த சமூகங்கள் உள்ளன! -தூதரே!- தன் அடியார்களின் பாவங்களை அறிவதற்கும் பார்ப்பதற்கும் உம் இறைவன் போதுமானவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.
17:18Страница 284
مَّن كَانَ يُرِيدُ ٱلۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلۡنَا لَهُۥ جَهَنَّمَ يَصۡلَىٰهَا مَذۡمُومٗا مَّدۡحُورٗا ١٨
Если кто возжелает преходящей жизни, то Мы тотчас одарим тем, что пожелаем, того, кого пожелаем. А потом Мы предоставим ему Геенну, где он будет гореть презренным и отверженным.
யார் மறுமையின் மீது நம்பிக்கைகொள்ளாமல், அதனைப் பொருட்படுத்தாமல் நற்செயல்களின் மூலம் இவ்வுலகத்தை விரும்புகிறாரோ நாம் நாடிய இன்பங்களையே விரைவாக அவருக்கு வழங்கிடுவோம் அவர் விரும்பியதையல்ல. அதுவும் நாம் நாடியவர்களுக்கே வழங்குவோம். பின்னர் அவருக்காக நரகத்தை தயார்படுத்தியுள்ளோம். அவன் மறுமையை நிராகரித்து இவ்வுலகை தேர்ந்தெடுத்துக் கொண்டதைக் கண்டிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டு அதில் நுழைந்து, அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.
17:19Страница 284
وَمَنۡ أَرَادَ ٱلۡأٓخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعۡيَهَا وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ كَانَ سَعۡيُهُم مَّشۡكُورٗا ١٩
А если кто возлюбит Последнюю жизнь и устремится к ней надлежащим образом, будучи верующим, то его старания будут отблагодарены.
அல்லாஹ் நம்பிக்கை கொள்ளுமாறு கட்டளையிட்டவற்றை நம்பிக்கைகொண்டவராக நற்செயல்களின் மூலம் மறுமையின் நன்மையை யார் விரும்புவாரோ, அதற்காக முகஸ்துதியற்ற முயற்சி செய்வாரோ, அவ்வாறான பண்புகளைக்கொண்டு வர்ணிக்கப்பட்டவர்களின் முயற்சி அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றிற்கேற்ப அவர்களுக்கு அவன் கூலி வழங்குவான்.
17:20Страница 284
كُلّٗا نُّمِدُّ هَٰٓؤُلَآءِ وَهَٰٓؤُلَآءِ مِنۡ عَطَآءِ رَبِّكَۚ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحۡظُورًا ٢٠
Каждого из тех и других Мы наделяем дарами твоего Господа, и дары Его не являются запрещенными.
தூதரே!- நல்லவர், பாவி ஆகிய இந்த இரு பிரிவினருக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் துண்டிக்காமல் அதிகமாக வழங்குவோம். இவ்வுலகில் உம் இறைவனின் கொடை நல்லவர், பாவி என எவருக்கும் தடைசெய்யப்பட்டதாக இல்லை.
17:21Страница 284
ٱنظُرۡ كَيۡفَ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ وَلَلۡأٓخِرَةُ أَكۡبَرُ دَرَجَٰتٖ وَأَكۡبَرُ تَفۡضِيلٗا ٢١
Посмотри, как одним из них Мы отдали предпочтение перед другими. Но Последняя жизнь, несомненно, выше по достоинству и преимуществу.
தூதரே!- நாம் இவ்வுலகில் அவர்களில் சிலரை சிலரைவிட வாழ்வாதாரத்திலும் அந்தஸ்திலும் எவ்வாறு சிறப்பித்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. உலக வாழ்வை விட மறுமை, இன்பங்களின் படித்தரங்களின் ஏற்றத்தாழ்விலும், சிறப்பிலும் சிறந்ததாகும். எனவே நம்பிக்கையாளன் அதற்காக ஆசை கொள்ளட்டும்.
17:22Страница 284
لَّا تَجۡعَلۡ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَقۡعُدَ مَذۡمُومٗا مَّخۡذُولٗا ٢٢
Не поклоняйся наряду с Аллахом никакому другому богу, а не то сядешь униженным и покинутым.
அடியானே!- அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுளை ஏற்படுத்தி விடாதே. அவ்வாறு செய்தால் நீ அல்லாஹ்விடத்திலும் அவனுடைய நல்லடியார்களிடத்திலும் இழிவடைந்து உன்னை புகழக்கூடியவர் யாரும் இல்லாது அவனது உதவியை இழந்து எவ்வித உதவியாளரும் அற்றவனாகி விடுவாய்.
17:23Страница 284
۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنًاۚ إِمَّا يَبۡلُغَنَّ عِندَكَ ٱلۡكِبَرَ أَحَدُهُمَآ أَوۡ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفّٖ وَلَا تَنۡهَرۡهُمَا وَقُل لَّهُمَا قَوۡلٗا كَرِيمٗا ٢٣
Твой Господь предписал вам не поклоняться никому, кроме Него, и делать добро родителям. Если один из родителей или оба достигнут старости, то не говори им: «Тьфу!». - не кричи на них и обращайся к ним почтительно.
அடியானே! உன் இறைவன் உனக்குப் பின்வரும் விஷயங்களைக் கட்டளையிட்டுள்ளான்: “நீங்கள் அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. தாய், தந்தையருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக அவர்கள் முதுமையை அடைந்த பின்னர். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உன்னிடத்தில் இருக்கும் நிலையில் முதுமையை அடைந்துவிட்டால் “சீ” என்று அவர்களை உதாசீனப்படுத்தும் வார்த்தைகளைக் கூறிவிடக் கூடாது; அவர்களை விரட்டவோ வார்த்தைகளால் கடிந்து கொள்ளவோ கூடாது; அவர்களிடம் மென்மைகலந்த கண்ணியமான வார்த்தைகளைக் கூறு.
17:24Страница 284
وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ٢٤
Склони пред ними крыло смирения по милосердию своему и говори: «Господи! Помилуй их, ведь они растили меня ребенком».
அவர்களுடன் கருணையோடு பணிவாக நடந்துகொள். “என் இறைவா! அவர்கள் சிறுவயதில் என்னைப் பராமரித்ததற்காக அவர்கள் மீது கருணைகாட்டு” என்று பிரார்த்தனை செய்.
17:25Страница 284
رَّبُّكُمۡ أَعۡلَمُ بِمَا فِي نُفُوسِكُمۡۚ إِن تَكُونُواْ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلۡأَوَّٰبِينَ غَفُورٗا ٢٥
Ваш Господь лучше всех знает то, что в ваших душах. И если вы будете праведниками, то ведь Он прощает тех, кто обращается к Нему с раскаянием.
மனிதர்களே!- வணக்கத்திலும் நற்காரியங்களிலும் பெற்றோர் நலன் பேணுவதிலும் உங்களின் உள்ளங்களிலுள்ள மனத்தூய்மையை உங்களின் இறைவன் நன்கறிந்தவன். இவற்றில் உங்களின் எண்ணங்கள் சரியானதாக இருந்தால் நிச்சயமாக அவன் தன் பக்கம் திரும்பி பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். தனது இறைவனுக்குக் கட்டுப்படுவதில், தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்வதில் ஏற்பட்ட தவறுகளுக்காக யார் பாவமன்னிப்புத் தேடுவாறோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.
17:26Страница 284
وَءَاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرۡ تَبۡذِيرًا ٢٦
Отдавай должное родственнику, бедняку и путнику, но не расточай чрезмерно.
நம்பிக்கையாளனே!- உன் உறவினருக்கு செய்ய வேண்டிய சேர்ந்து வாழும் உரிமையை வழங்குவாயாக! தேவையுடைய ஏழைக்கும் பிரயாணத்தில் இடையில் சிக்கிக்கொண்டவனுக்கும் கொடுப்பாயாக. பாவமான காரியத்திலோ வீண்விரயமாகவோ உன் செல்வத்தை செலவழித்து விடாதே.
17:27Страница 284
إِنَّ ٱلۡمُبَذِّرِينَ كَانُوٓاْ إِخۡوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِرَبِّهِۦ كَفُورٗا ٢٧
Воистину, расточители - братья дьяволов, а ведь дьявол неблагодарен своему Господу.
நிச்சயமாக தமது செல்வங்களை பாவமான காரியங்களிலோ, வீண்விரயமாகவோ செலவு செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவர். வீண்விரயம் செய்யுமாறு அவனிடும் கட்டளையில் அவர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். பாவமான காரியத்தைத் தவிர வேறு எதையும் அவன் செய்ய மாட்டான். தன் இறைவன் வெறுக்கும் செயலைத் தவிர வேறு எதையும் அவன் ஏவமாட்டான்.
17:28Страница 285
وَإِمَّا تُعۡرِضَنَّ عَنۡهُمُ ٱبۡتِغَآءَ رَحۡمَةٖ مِّن رَّبِّكَ تَرۡجُوهَا فَقُل لَّهُمۡ قَوۡلٗا مَّيۡسُورٗا ٢٨
Если ты отворачиваешься от них (если у тебя нет средств на пожертвования, и ты отказываешь тем, кто имеет на них право), желая обрести милость Аллаха, на которую ты надеешься, то говори с ними любезно.
உன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் நீ அல்லாஹ்வின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குக் கொடுக்காமல் நீ தவிர்ந்துகொண்டால் அவர்களிடம் இதமான வார்த்தையைக் கூறு. உதாரணமாக, அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பிரார்த்தனை செய்வது அல்லது அல்லாஹ் தனக்கு செல்வத்தை வழங்கினால் தருவேன் என்று வாக்களிப்பது.
17:29Страница 285
وَلَا تَجۡعَلۡ يَدَكَ مَغۡلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبۡسُطۡهَا كُلَّ ٱلۡبَسۡطِ فَتَقۡعُدَ مَلُومٗا مَّحۡسُورًا ٢٩
Не позволяй своей руке быть прикованной к шее, и не раскрывай ее во всю длину (не будь скуп и расточителен), а не то сядешь порицаемым и опечаленным.
செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து விடாதே. வீண்விரயமும் செய்துவிடாதே. ஏனெனில் செலவளிக்காவிட்டால் உனது கஞ்சத்தனத்தினால் மக்களின் பழிப்புக்கு ஆளாவாய். உனது வீண்விரயத்தினால் செலவளிப்பதற்கு எதுவும் அற்றவனாக ஆகிவிடுவாய்.
17:30Страница 285
إِنَّ رَبَّكَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا ٣٠
Воистину, твой Господь увеличивает или ограничивает удел тому, кому пожелает. Он видит и знает Своих рабов.
நிச்சயமாக உன் இறைவன் உயர்ந்த ஒரு நோக்கத்தின்படி தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகிறான்; தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அவர்களிடம் இருந்து எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் நாடியவாறு அவர்களிடம் தன் கட்டளைகளைச் திருப்பி விடுகிறான்.
17:31Страница 285
وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُمۡ خَشۡيَةَ إِمۡلَٰقٖۖ نَّحۡنُ نَرۡزُقُهُمۡ وَإِيَّاكُمۡۚ إِنَّ قَتۡلَهُمۡ كَانَ خِطۡـٔٗا كَبِيرٗا ٣١
Не убивайте своих детей, опасаясь нищеты, ведь Мы обеспечиваем пропитанием их вместе с вами. Воистину, убивать детей - тяжкий грех.
உங்கள் பிள்ளைகளுக்கு செலவளிப்பதனால் எதிர்காலத்தில் வறுமை ஏற்படுமோ என அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்குவதற்கு நாமே பொறுப்பேற்றுள்ளோம். ஒரு பாவமும் செய்யாத, கொல்வதற்குரிய காரணம் எதுவும் இல்லாத அவர்களைக் கொல்வது பெரும் பாவமாக இருக்கின்றது.
17:32Страница 285
وَلَا تَقۡرَبُواْ ٱلزِّنَىٰٓۖ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَسَآءَ سَبِيلٗا ٣٢
Не приближайтесь к прелюбодеянию, ибо оно является мерзостью и скверным путем.
விபச்சாரத்தை விட்டும் அதனைத் தூண்டும் காரணிகளை விட்டும் விலகியிருங்கள். நிச்சயமாக அது மிகவும்அருவருப்பான காரியமாகவும் குடும்ப வம்சத்தை சிதைத்து இறைவேதனையைப் பெற்றுத்தரும் தீய வழியாகவும் இருக்கின்றது.
17:33Страница 285
وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۗ وَمَن قُتِلَ مَظۡلُومٗا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِيِّهِۦ سُلۡطَٰنٗا فَلَا يُسۡرِف فِّي ٱلۡقَتۡلِۖ إِنَّهُۥ كَانَ مَنصُورٗا ٣٣
Не убивайте душу, убивать которую Аллах запретил, если только у вас нет на это права. Если ктолибо убит несправедливо, то Мы уже предоставили его правопреемнику полную власть, но пусть он не излишествует в отмщении за убийство. Воистину, ему будет оказана помощь.
நம்பிக்கை அல்லது அபயமளித்தல் என்பவற்றின் மூலம் அல்லாஹ் பாதுகாத்த எந்த உயிரையும் கொன்றுவிடாதீர்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல், மணமான பிறகு விபச்சாரம் செய்தல், கொலைக் குற்றம் ஆகியவற்றினால் கொல்லப்படத் தகுதியானவர்களைத் தவிர. எவர் காரணமின்றி அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டாரோ அவருடைய வாரிசுகளுக்கு நாம் கொலையாளி மீது அதிகாரம் அளித்துள்ளோம். அவர்களுக்குப் பழிவாங்கும் உரிமையும், ஈட்டுத் தொகை பெற்றுக்கொண்டு அல்லது எதனையும் பெறாமலும் மன்னிக்கும் உரிமையும் உண்டு. கொலையாளியைச் சித்திரவதை செய்தல் அல்லது அவர் கொல்லாத ஒரு ஆயுதத்தால் கொலை செய்வது அல்லது கொலை செய்யாதவனைக் கொல்லுதல் போன்றவற்றைச் செய்து அல்லாஹ் அனுமதித்த எல்லையை மீறிவிட வேண்டாம். நிச்சயமாக அவர் உதவிசெய்யப்படுவார்.
17:34Страница 285
وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡـُٔولٗا ٣٤
Не приближайтесь к имуществу сироты, кроме как во благо ему, пока он не достигнет совершеннолетия. И будьте верны своим обещаниям, ибо за обещания вас призовут к ответу.
தந்தையை இழந்த குழந்தைகளின் சிந்தனையாற்றலும் பக்குவமும் முழுமையடையும் வரை அவர்களின் செல்வத்தை அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அதனை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வழிகளிலே அன்றி பயன்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையும் உங்களுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தத்தையை முறிக்காமல், குறைவின்றி நிறைவேற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி வழங்கியவரிடம் அதனை நிறைவேற்றினாயா அல்லது நிறைவேற்றவில்லையா ? என மறுமை நாளில் விசாரிப்பான். அவற்றை நிறைவேற்றியவர்களுக்கு அவன் நற்கூலி வழங்குவான். அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனை வழங்குவான்.
17:35Страница 285
وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ إِذَا كِلۡتُمۡ وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلٗا ٣٥
Наполняйте меру сполна, когда вы отпускаете мерой, и взвешивайте на точных весах. Так будет лучше и прекраснее по исходу (или по вознаграждению).
நீங்கள் மற்றவர்களுக்கு அளந்துகொடுத்தால் முழுமையாக அளந்துகொடுங்கள். அதனைக் குறைத்துவிடாதீர்கள். எதையும் குறைத்துவிடாத சரியான தராசைக் கொண்டு எடைபோடுங்கள். அளவையையும், நிறுவையையும் பரிபூரணமாக நிறைவேற்றுவது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை தரக்கூடியதுடன் அளவை நிறுவையில் குறை செய்து, மோசடி செய்வதை விட சிறந்த விளைவைத் தருவதுமாகும்.
17:36Страница 285
وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا ٣٦
Не следуй тому, чего ты не знаешь. Воистину, слух, зрение и сердце - все они будут призваны к ответу.
ஆதமின் மகனே!- உனக்கு அறிவில்லாத விஷயங்களைப் பின்பற்றாதே; யூகங்களையும் அனுமானங்களையும் பின்பற்றாதே. நிச்சயமாக மனிதனின் செவிப்புலன், பார்வை, உள்ளம் என ஒவ்வொரு உறுப்பையும் நன்மையிலா தீமையிலா பயன்படுத்தினான் என்று மனிதன் விசாரிக்கப்படுவான். அவன் அவற்றை நன்மையான விஷயங்களுக்காகப் பயன்படுத்தினால் அதற்காக அவன் கூலி வழங்கப்படுவான். தீமையான விஷயங்களுக்காகப் பயன்படுத்தினால் அதற்காகத் தண்டிக்கப்படுவான்.
17:37Страница 285
وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّكَ لَن تَخۡرِقَ ٱلۡأَرۡضَ وَلَن تَبۡلُغَ ٱلۡجِبَالَ طُولٗا ٣٧
Не ступай по земле горделиво, ведь ты не пробуришь землю и не достигнешь гор высотой!
பூமியில் ஆணவம்கொண்டு நடக்காதே. நிச்சயமாக நீ ஆணவம்கொண்டு நடந்தால் நீ நினைத்தவாறு பூமியைப் பிளந்துவிடவும் முடியாது, நீளத்திலும் உயரத்திலும் மலைகளிள் அளவுக்கு உன்னால் உயர்ந்து விடவும் முடியாது. பின் எதற்கு ஆணவம் கொள்கிறாய்?
17:38Страница 285
كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُۥ عِندَ رَبِّكَ مَكۡرُوهٗا ٣٨
Все это зло ненавистно твоему Господу.
மனிதனே!- மேற்குறிப்பிட்ட அனைத்திலுமுள்ள தீயவை உம் இறைவனிடம் தடுக்கப்பட்டவைகளாகும். அவற்றில் ஈடுபடுவோரை அவன் நேசிப்பதில்லை. மாறாக அவன் அவர்களை வெறுக்கிறான்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии