Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Исра 17:39–73
17:39Страница 286
ذَٰلِكَ مِمَّآ أَوۡحَىٰٓ إِلَيۡكَ رَبُّكَ مِنَ ٱلۡحِكۡمَةِۗ وَلَا تَجۡعَلۡ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتُلۡقَىٰ فِي جَهَنَّمَ مَلُومٗا مَّدۡحُورًا ٣٩
Такова часть мудрости, которая внушена тебе в откровении от твоего Господа. Не поклоняйся наряду с Аллахом никакому другому богу, а не то будешь брошен в Геенну порицаемым и отверженным.
நாம் தெளிவுபடுத்திய மேற்கூறிய கட்டளைகளும், விலக்கல்களும், சட்டங்களும் உன் இறைவன் வஹியாக உமக்கு அறிவித்த ஞானத்தில் உள்ளதாகும். -மனிதனே!- அல்லாஹ்வுடன் வேறு ஒரு இறைவனை ஏற்படுத்திவிடாதே. அவ்வாறு செய்தால் மக்களாலும் உன் மனதாலும் பழிக்கப்பட்டவானாக, எல்லாவகையான நன்மைகளை விட்டும் தூரமாக்கப்பட்டவானாக மறுமை நாளில் நரகத்தில் எறியப்பட்டு விடுவாய்.
17:40Страница 286
أَفَأَصۡفَىٰكُمۡ رَبُّكُم بِٱلۡبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ إِنَٰثًاۚ إِنَّكُمۡ لَتَقُولُونَ قَوۡلًا عَظِيمٗا ٤٠
Неужели ваш Господь почтил вас сыновьями, а Себе взял дочерей из числа ангелов? Воистину, вы говорите ужасные слова.
வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்று அழைப்பவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை அளித்துவிட்டு வானவர்களை தனக்கு பெண்மக்களாக ஏற்படுத்திக் கொண்டானா? நீங்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறியது மாத்திரமின்றி நிராகரிப்பில் அதிகரித்துச் சென்று அவனுக்கு பெண்பிள்ளைகளே உண்டு என வாதிட்டு அவன் மீது மிகவும் மோசமான அவதூறைக் கூறியுள்ளீர்கள்.
17:41Страница 286
وَلَقَدۡ صَرَّفۡنَا فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ لِيَذَّكَّرُواْ وَمَا يَزِيدُهُمۡ إِلَّا نُفُورٗا ٤١
Мы дали разъяснения в этом Коране, чтобы они помянули наставление, но это лишь увеличивает их отвращение.
மக்கள் படிப்பினை பெற்று, தங்களுக்குப் பயனளிக்கும் விஷயங்களில் ஈடுபட்டு தீங்கிழைக்கும் விஷயங்களை விட்டுவிடுவதற்காக நாம் இந்தக் குர்ஆனிலே சட்டங்களையும் அறிவுரைகளையும் உதாரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்நிலையிலும் இயல்பு சிதைந்துவிட்ட அவர்களில் சிலர் அதன் மூலம் சத்தியத்தை விட்டு இன்னுமின்னும் தூரமாகியும், வெறுப்புற்றும் செல்கின்றனர்.
17:42Страница 286
قُل لَّوۡ كَانَ مَعَهُۥٓ ءَالِهَةٞ كَمَا يَقُولُونَ إِذٗا لَّٱبۡتَغَوۡاْ إِلَىٰ ذِي ٱلۡعَرۡشِ سَبِيلٗا ٤٢
Скажи: «Если бы, как они говорят, наряду с Ним существовали другие боги, то они непременно попытались бы добраться до Господа Трона».
தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் இட்டுக்கட்டிக் பொய் கூறுவதுபோல அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களும் இருந்திருந்தால் அவனது ஆட்சியில் அவனை மிகைத்து, சண்டைபிடிக்க அவை அர்ஷ் உடைய அல்லாஹ்வை நோக்கிச் செல்லக்கூடிய வழியை தேடியிருக்கும்.
17:43Страница 286
سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوّٗا كَبِيرٗا ٤٣
Пречист Он и премного выше того, что они говорят.
இணைவைப்பாளர்களின் வர்ணனைகளை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். அவர்கள் கூறுவதை விட்டும் அவன் மிக மிக உயர்ந்தவன்.
17:44Страница 286
تُسَبِّحُ لَهُ ٱلسَّمَٰوَٰتُ ٱلسَّبۡعُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ وَإِن مِّن شَيۡءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمۡدِهِۦ وَلَٰكِن لَّا تَفۡقَهُونَ تَسۡبِيحَهُمۡۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا ٤٤
Его славят семь небес, земля и те, кто на них. Нет ничего, что не прославляло бы Его хвалой, но вы не понимаете их славословия. Воистину, Он - Выдержанный, Прощающий.
வானங்களும் பூமியும் அவையிரண்டிலுமுள்ள படைப்புகளும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவற்றிலுள்ள அனைத்தும் அவனது தூய்மையைப் பறைசாற்றுவதுடன் அவனைப் புகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் அவை எவ்வாறு அவனது தூய்மையைப் பறைசாற்றுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள். உங்களின் மொழியில் அவனைப் புகழ்பவர்களைத்தான் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாக இருக்கின்றான். உடனுக்குடன் தண்டித்துவிட
மாட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
17:45Страница 286
وَإِذَا قَرَأۡتَ ٱلۡقُرۡءَانَ جَعَلۡنَا بَيۡنَكَ وَبَيۡنَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ حِجَابٗا مَّسۡتُورٗا ٤٥
Когда ты прочел Коран, Мы воздвигли между тобой и теми, кто не верит в Последнюю жизнь, невидимую завесу.
தூதரே!- நீர் குர்ஆனைப் படித்து, அதிலுள்ள எச்சரிக்கைகளையும், அறிவுரைகளையும் அவர்கள் செவியுற்றால், உமக்கும் மறுமை நாளை நம்பாதவர்களுக்குமிடையே அல்குர்ஆனைப் புரிந்துகொள்ளத் தடையாக நாம் ஒரு திரையை ஏற்படுத்திவிடுகின்றோம். இது அவர்களது புறக்கணிப்புக்கான தண்டனையாகும்.
17:46Страница 286
وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِذَا ذَكَرۡتَ رَبَّكَ فِي ٱلۡقُرۡءَانِ وَحۡدَهُۥ وَلَّوۡاْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِمۡ نُفُورٗا ٤٦
Мы набросили на их сердца покрывала, дабы они не могли понять его (Коран), и лишили их уши слуха. Когда ты поминаешь в Коране своего Единственного Господа, они отворачиваются, испытывая к этому отвращение.
குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் நாம் திரைகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளிலும் ஒரு அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் அதிலிருந்து பயனடையும் வகையில் செவியுற முடியாது. நீர் குர்ஆனில் அவர்களால் தெய்வமாகக் கருதப்படுபவற்றை குறிப்பிடாமல் அல்லாஹ் ஒருவனை மட்டுமே குறிப்பிட்டால் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஏகத்துவத்தை வழங்க மறுத்து ஒதுங்கித் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.
17:47Страница 286
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَسۡتَمِعُونَ بِهِۦٓ إِذۡ يَسۡتَمِعُونَ إِلَيۡكَ وَإِذۡ هُمۡ نَجۡوَىٰٓ إِذۡ يَقُولُ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا ٤٧
Мы лучше знаем, что именно они слушают, когда слушают тебя. А когда они совещаются втайне, то беззаконники говорят: «Вы следуете всего лишь за околдованным человеком».
அவர்களது தலைவர்கள் எவ்வாறு குர்ஆனை காதுகொடுத்துக் கேட்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் இதன் மூலம் நேர்வழியில் செல்வதை விரும்பவில்லை. மாறாக அவர்கள் நீர் குர்ஆன் ஓதும் போது பரிகாசத்திலும் வீணானவற்றிலும் ஈடுபடவே முனைகின்றனர். -“மக்களே!- நீங்கள் சூனியம் செய்யப்பட்ட, அறிவு குழம்பிய ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்று நிராகரிப்பினால் தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்டவர்கள் கூறி ஒருவருக்கொருவர் இரகசியமாக பேசி அல்குர்ஆனைப் பொய்ப்பிப்பதிலும் அதனை விட்டும் தடுப்பதிலும் ஈடுபடுவதை நாம் நன்கறிந்துள்ளோம்.
17:48Страница 286
ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَالَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا ٤٨
Посмотри, какие притчи они приводят тебе. Они впали в заблуждение и не могут найти дорогу.
தூதரே!- அவர்கள் உம்மை எவ்வாறெல்லாம் பல்வேறுபட்ட இழிவான பண்புகளால் சித்தரிக்கிறார்கள்? என்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கு, சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்கள் சத்தியத்திலிருந்து விலகி தடுமாறிவிட்டனர். எனவே நேரான வழியை அவர்கள் பெறவில்லை.
17:49Страница 286
وَقَالُوٓاْ أَءِذَا كُنَّا عِظَٰمٗا وَرُفَٰتًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ خَلۡقٗا جَدِيدٗا ٤٩
Они скажут: «Неужели после того, как от нас останутся кости и частички, мы будем воскрешены в новом творении?».
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்தவாறு இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் இறந்து எலும்புகளாக, எமது உடல்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்டாலும் மீண்டும் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? நிச்சயமாக இது சாத்தியமற்றது.
17:50Страница 287
۞ قُلۡ كُونُواْ حِجَارَةً أَوۡ حَدِيدًا ٥٠
Скажи: «Даже если вы станете камнями, или железом,
தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: -“இணைவைப்பாளர்களே!- உங்களால் இயன்றால் கடினமான கல்லாக அல்லது பலமான இரும்பாக ஆகிவிடுங்கள். உங்களால் ஒருபோதும் அவ்வாறு ஆகமுடியாது.
17:51Страница 287
أَوۡ خَلۡقٗا مِّمَّا يَكۡبُرُ فِي صُدُورِكُمۡۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَاۖ قُلِ ٱلَّذِي فَطَرَكُمۡ أَوَّلَ مَرَّةٖۚ فَسَيُنۡغِضُونَ إِلَيۡكَ رُءُوسَهُمۡ وَيَقُولُونَ مَتَىٰ هُوَۖ قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبٗا ٥١
или другим творением, которое представляется могучим в ваших сердцах». Они скажут: «Кто же нас возвратит?». Скажи: «Тот, Кто сотворил вас в первый раз». Но они покачают головами и скажут: «Когда же это произойдет?». Скажи: «Быть может, это произойдет очень скоро!».
அல்லது அவையிரண்டையும்விட நீங்கள் உங்கள் உள்ளங்களில் பெரிதாகக் கருதும் வேறொரு படைப்பாக ஆகிவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே, நீங்கள் இருந்தவாறே மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான். பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “நாம் இறந்த பின் எங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புபவன் யார்?” நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களை முன்மாதிரியின்றி முதன் முறையாகப் படைத்தானே அவன்தான் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். உன்னுடைய பதிலில் இருந்து அவர்கள் தூரமானவர்களாக பரிகாசமாக தம் தலையை அசைத்தவாறு கூறுவார்கள்: “எப்போது இந்த மீண்டும் எழுப்பும் நிகழ்வு நடைபெறும் என்று.” நீர் அவர்களுக்கு கூறுவீராக: “அது அண்மையில் இருக்கலாம் என்று.” ஏனெனில் வர இருப்பவை அனைத்தும் அண்மையிலே உள்ளன.
17:52Страница 287
يَوۡمَ يَدۡعُوكُمۡ فَتَسۡتَجِيبُونَ بِحَمۡدِهِۦ وَتَظُنُّونَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗا ٥٢
В тот день Он призовет вас, и вы ответите Ему похвалой и предположите, что пробыли на земле совсем недолго.
மஹ்ஷர் பெருவெளியில் அவன் உங்களை அழைக்கும் நாளில் அவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். நீங்கள் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனைப் புகழ்ந்தவாறே அவனுக்குப் பதிலளிப்பீர்கள். நிச்சயமாக நீங்கள் பூமியில் குறைந்த காலமே தங்கியிருந்ததாக உங்களுக்குத் தோன்றும்.
17:53Страница 287
وَقُل لِّعِبَادِي يَقُولُواْ ٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ يَنزَغُ بَيۡنَهُمۡۚ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلۡإِنسَٰنِ عَدُوّٗا مُّبِينٗا ٥٣
Скажи Моим рабам, чтобы они говорили наилучшие слова, ибо дьявол вносит между ними раздор. Воистину, дьявол для человека - явный враг.
தூதரே!- என்மீது நம்பிக்கைகொண்ட என் அடியார்களிடம் கூறுவீராக: “அவர்கள் உரையாடும் போது நல்ல வார்த்தையையே பேசட்டும். வெறுப்பூட்டும் தீய வார்த்தையை விட்டும் தவிர்ந்து கொள்ளட்டும். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் அதனைப் பயன்படுத்தி அவர்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கையை நாசப்படுத்தி விடுவான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாக இருக்கின்றான். எனவே அவன் விஷயத்தில் மனிதன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”
17:54Страница 287
رَّبُّكُمۡ أَعۡلَمُ بِكُمۡۖ إِن يَشَأۡ يَرۡحَمۡكُمۡ أَوۡ إِن يَشَأۡ يُعَذِّبۡكُمۡۚ وَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ وَكِيلٗا ٥٤
Вашему Господу лучше знать вас. Если Он пожелает, то смилостивится над вами, а если пожелает, то подвергнет вас мучениям. Мы не посылали тебя их попечителем и хранителем.
மனிதர்களே!- உங்களின் இறைவன் உங்களைக்குறித்து நன்கறிந்தவன். உங்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் நாடினால் உங்கள் மீது அருள் புரிந்து நம்பிக்கையின் பக்கமும் நற்செயல்களின் பக்கமும் உங்களுக்கு வழிகாட்டுவான். அவன் நாடினால் உங்களைக் கைவிட்டு, நிராகரித்த நிலையிலேயே உங்களை மரணிக்கச் செய்து உங்களை தண்டிப்பான். -தூதரே!- அவர்களை நம்பிக்கைகொள்ளும்படி நிர்ப்பந்திக்கக்கூடியவராக, நிராகரிப்பை விட்டும் தடுக்கக்கூடியவராக, அவர்களின் செயல்களைக் கணக்கிடக்கூடியவராக நாம் உம்மை அனுப்பவில்லை. நிச்சயமாக நீர் அல்லாஹ்விடமிருந்து எத்திவைக்குமாறு இட்ட கட்டளைகளை எடுத்துரைக்கக்கூடியவர் மட்டுமே ஆவீர்.
17:55Страница 287
وَرَبُّكَ أَعۡلَمُ بِمَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ ٱلنَّبِيِّـۧنَ عَلَىٰ بَعۡضٖۖ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا ٥٥
Твоему Господу лучше знать тех, кто на небесах и на земле. Одним пророкам Мы отдали предпочтение над другими. А Давуду (Давиду) Мы даровали Забур (Псалтирь).
தூதரே!- வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அனைவரையும் அவர்களின் நிலைகளையும் அவர்களுக்குத் தகுந்தவைகளையும் அவன் நன்கறிந்தவன். அதிகமாக பின்பற்றுபவர்களை ஏற்படுத்துவதன் மூலமும் வேதங்களை இறக்குவதன் மூலமும் நாம் தூதர்களில் சிலரை சிலரைவிட சிறப்பித்துள்ளோம். நாம் தாவூதுக்கு சபூர் என்னும் வேதத்தை வழங்கினோம்.
17:56Страница 287
قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِهِۦ فَلَا يَمۡلِكُونَ كَشۡفَ ٱلضُّرِّ عَنكُمۡ وَلَا تَحۡوِيلًا ٥٦
Скажи: «Взывайте к тем, кого вы считаете богами наряду с Ним. Они не властны отвратить от вас беду или перенести ее на другого».
தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: -“இணைவைப்பாளர்களே!- உங்கள் மீது தீங்கு இறங்கினால் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் கடவுள்களாக எண்ணுகின்ற தெய்வங்களை அழையுங்கள். அவை தமது இயலாமையினால் உங்களை விட்டும் தீங்கை அகற்றவோ அதனை மற்றவர்களுக்கு இடம்பெயரச் செய்யவோ சக்திபெற மாட்டா. இயலாதவர்கள் இறைவனாக இருக்க முடியாது.
17:57Страница 287
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَدۡعُونَ يَبۡتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلۡوَسِيلَةَ أَيُّهُمۡ أَقۡرَبُ وَيَرۡجُونَ رَحۡمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُورٗا ٥٧
Те, к кому они взывают с мольбой, сами ищут близости к своему Господу, пытаясь опередить других. Они надеются на Его милость и страшатся мучений от Него. Воистину, мучений от твоего Господа надлежит остерегаться.
இவர்கள் அழைக்கும் வானவர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்களும் கூட தம்மை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் நற்செயல்களைத் தேடுகிறார்கள். அவனுக்குக் கட்டுப்படுவதில் யார் நெருக்கமானவர் என ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். அவனது அருளை எதிர்பார்த்து அவனுடைய தண்டனையைக் குறித்து அஞ்சுகிறார்கள். -தூதரே!- நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை எச்சரிக்கையாக இருக்கவேண்டியவற்றில் உள்ளதாகும்.
17:58Страница 287
وَإِن مِّن قَرۡيَةٍ إِلَّا نَحۡنُ مُهۡلِكُوهَا قَبۡلَ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ أَوۡ مُعَذِّبُوهَا عَذَابٗا شَدِيدٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا ٥٨
Нет такого поселения, которое Мы не разрушим перед наступлением Дня воскресения или не подвергнем тяжким мучениям. Так было предначертано в Писании.
நிராகரிப்பில் ஈடுபடும் மக்களைக்கொண்ட எந்த ஒரு ஊராக நகராக இருந்தாலும் நிராகரிப்பின் காரணமாக அவ்வூருக்கு இவ்வுலகில் தண்டனையை இறக்கியே தீருவோம் அல்லது கொலை அல்லது வேறு விதமான கடுமையான தண்டனையினால் சோதிப்போம். இவ்வாறு அவர்களை தண்டித்து அவர்களை அழிப்பது லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் எழுதப்பட்டுள்ள இறை நியதியாகும்.
17:59Страница 288
وَمَا مَنَعَنَآ أَن نُّرۡسِلَ بِٱلۡأٓيَٰتِ إِلَّآ أَن كَذَّبَ بِهَا ٱلۡأَوَّلُونَۚ وَءَاتَيۡنَا ثَمُودَ ٱلنَّاقَةَ مُبۡصِرَةٗ فَظَلَمُواْ بِهَاۚ وَمَا نُرۡسِلُ بِٱلۡأٓيَٰتِ إِلَّا تَخۡوِيفٗا ٥٩
Мы не отправили знамения только потому, что прежние поколения не уверовали в них. Мы даровали самудянам верблюдицу как наглядное знамение, но они поступили с ней несправедливо. Мы ниспосылаем Наши знамения только для устрашения.
தூதரை உண்மைப்படுத்த இணைவைப்பாளர்கள் கோரும் இறந்தவர்களை உயிர்ப்பித்தல் போன்ற பௌதீக சான்றுகளை நாம் இறக்காமல் இருப்பது, நாம் முந்தைய சமூகங்களின் மீது அவற்றை இறக்கியும் அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரித்து விட்டார்கள் என்பதானால்தான். நாம் ஸமூத் சமூகத்திற்கு பெண் ஒட்டகம் என்னும் மிகப் பெரும், தெளிவான சான்றை இறக்கினோம். அவர்கள் அதனை நிராகரித்தார்கள். நாம் அவர்களை உடனடியாகத் தண்டித்தோம். நாம் தூதர்களுக்கு சான்றுகளைக் கொடுத்து அனுப்புவது அவர்களது சமூகத்தை அச்சுறுத்துவதற்கே. அவர்கள் அதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாமல்லவா.
17:60Страница 288
وَإِذۡ قُلۡنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِٱلنَّاسِۚ وَمَا جَعَلۡنَا ٱلرُّءۡيَا ٱلَّتِيٓ أَرَيۡنَٰكَ إِلَّا فِتۡنَةٗ لِّلنَّاسِ وَٱلشَّجَرَةَ ٱلۡمَلۡعُونَةَ فِي ٱلۡقُرۡءَانِۚ وَنُخَوِّفُهُمۡ فَمَا يَزِيدُهُمۡ إِلَّا طُغۡيَٰنٗا كَبِيرٗا ٦٠
Вот Мы сказали тебе: «Воистину, твой Господь объемлет людей». Мы сделали показанное тебе видение и дерево, проклятое в Коране, искушением для людей. Мы устрашаем их, но это лишь увеличивает их великую непокорность.
தூதரே!- நாம் உம்மிடம் கூறியதை நினைவு கூர்வீராக: “உம் இறைவன் தன் வல்லமையால் மக்கள் அனைவரையும் சூழ்ந்துள்ளான். அவர்கள் அவனுடைய பிடியில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மைப் பாதுகாப்பான். எனவே உமக்குக் கட்டளையிடப்பட்டதை எடுத்துரைத்து விடுவீராக. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது நிராகரிக்கிறார்களா? என்பதைச் சோதிப்பதற்கே இராப்பயணத்தில் நீர் கண்டவற்றை உமக்குக் காட்டினோம். நிச்சயமாக நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் என்று நாம் குர்ஆனில் கூறிய ஸக்கூம் என்னும் மரத்தையும் அவர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். அவர்கள் இந்த இரண்டு அத்தாட்சிகளையும் நம்பவில்லையெனில் மற்றவற்றை நம்ப மாட்டார்கள். நாம் சான்றுகளை இறக்கி அவர்களை அச்சமூட்டுகின்றோம். ஆனால் அத்தாட்சிகளை இறக்கி அச்சுறுத்தினாலும் அவர்கள் மென்மேலும் நிராகரிப்பிலும் வழிகேட்டில் பிடிவாதமாகவுமே உள்ளனர்.
17:61Страница 288
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ قَالَ ءَأَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِينٗا ٦١
Вот Мы сказали ангелам: «Падите ниц перед Адамом!». Они пали ниц, и только Иблис сказал: «Неужели я паду ниц перед тем, кого Ты создал из глины?».
தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக (வணங்கும் விதமாக அல்லாமல்) அவருக்கு சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் கர்வத்தினால் சிரம்பணிய மறுத்துவிட்டான். “நீ மண்ணால் படைத்த மனிதனுக்கு நான் சிரம்பணிவதா? என்னை நீ நெருப்பால் படைத்துள்ளாய். நான் அவனைவிட சிறந்தவன்” என்று கூறினான்.
17:62Страница 288
قَالَ أَرَءَيۡتَكَ هَٰذَا ٱلَّذِي كَرَّمۡتَ عَلَيَّ لَئِنۡ أَخَّرۡتَنِ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَأَحۡتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلٗا ٦٢
Иблис сказал: «Посмотри на того, кому Ты отдал предпочтение предо мною. Если ты дашь мне отсрочку до Последнего дня, то я покорю его потомство, за исключением немногих».
இப்லீஸ் தன் இறைவனிடம் கூறினான்: “நீ எனக்கு சிரம்பணியுமாறு கட்டளையிட்டு கௌரவித்த இந்தப் படைப்பை நீ பார்த்தாயா? இந்த உலக வாழ்வின் இறுதிவரை உயிருடன் என்னை வாழவைத்தால், அவரது சந்ததியினரை கவர்ந்திழுத்து நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்வேன். அவர்களில் நீ பாதுகாத்த சிலரைத் தவிர. அவர்களே உனது தூய்மையான அடியார்கள்.”
17:63Страница 288
قَالَ ٱذۡهَبۡ فَمَن تَبِعَكَ مِنۡهُمۡ فَإِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمۡ جَزَآءٗ مَّوۡفُورٗا ٦٣
Аллах сказал: «Ступай! И если кто последует за тобой, то Геенна будет для вас воздаянием, полным воздаянием.
அவனது இறைவன் அவனிடம் கூறினான்: “நீயும் அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களும் சென்றுவிடவும். நரகமே உனக்கும் அவர்களுக்குமுரிய கூலியாகும். அது உங்களது செயல்களுக்குரிய பரிபூரணமான கூலியாகும்.
17:64Страница 288
وَٱسۡتَفۡزِزۡ مَنِ ٱسۡتَطَعۡتَ مِنۡهُم بِصَوۡتِكَ وَأَجۡلِبۡ عَلَيۡهِم بِخَيۡلِكَ وَرَجِلِكَ وَشَارِكۡهُمۡ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِ وَعِدۡهُمۡۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا ٦٤
Возбуждай своим голосом, кого сможешь, пускай в ход против них свою конницу и пехоту, дели с ними их богатства и детей и давай им обещания. Воистину, обещания дьявола - всего лишь обольщение.
பாவத்துக்கு அழைக்கும் உன் குரலால் அவர்களில் உன்னால் ஏமாற்ற முடிந்தவர்களை ஏமாற்றிக்கொள். உனக்குக் கட்டுப்படுமாறு அழைப்பு விடுக்கும் உன் குதிரைப்படைகளையும் காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவி உன்பக்கம் அவர்களை ஈர்த்துக்கொள். மார்க்கத்திற்கு முரணான கொடுக்கல் வாங்கல்களை அவர்களுக்கு அலங்கரித்து அவர்களுடைய செல்வங்களில் கூட்டுச்சேர்ந்து கொள். தம்முடைய பிள்ளையல்லாதவர்களைப் பொய்யாக தமது பிள்ளையெ வாதிட வைத்தும், விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெறச் செய்வதன் மூலமும் அல்லாஹ் அல்லாதவருக்கு அவர்களை அடிமைப்படுத்தி பெயர் வைப்பதன் மூலமும் அவர்களின் பிள்ளைகளிலும் பங்கெடுத்துக் கொள். பொய்யான வாக்குறுதிகளையும் தவறான ஆசைகளையும் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டு. ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதி அவர்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளே அன்றி வேறில்லை.
17:65Страница 288
إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٞۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلٗا ٦٥
Воистину, ты не властен над Моими рабами. Довольно того, что твой Господь является их Попечителем и Хранителем».
இப்லீஸே!- என் மீது நம்பிக்கைகொண்டு எனக்குக் கட்டுப்பட்ட, அமல் செய்த அடியார்கள் மீது உன் ஆதிக்கம் செல்லுபடியாகாது.” ஏனெனில் அல்லாஹ் அவர்களை விட்டும் உனது தீங்கை தடுத்து விடுகிறான். தம்முடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
17:66Страница 288
رَّبُّكُمُ ٱلَّذِي يُزۡجِي لَكُمُ ٱلۡفُلۡكَ فِي ٱلۡبَحۡرِ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ بِكُمۡ رَحِيمٗا ٦٦
Ваш Господь ведет для вас по морю корабли, дабы вы могли снискать Его милость. Воистину, Он милосерден к вам.
மனிதர்களே!- நீங்கள் வியாபாரத்தினால் கிடைக்கும் இலாபம் மற்றும் இன்னபிற விஷயங்களின் மூலம் இறைவனின் வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அவனே கடலில் உங்களுக்காக கப்பல்களைச் ஓடச்செய்கிறான். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகுந்த கருணையாளனாக இருப்பதனால்தான் இந்த சாதனங்களையெல்லாம் உங்களுக்கு இலகுபடுத்தித் தந்துள்ளான்.
17:67Страница 289
وَإِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فِي ٱلۡبَحۡرِ ضَلَّ مَن تَدۡعُونَ إِلَّآ إِيَّاهُۖ فَلَمَّا نَجَّىٰكُمۡ إِلَى ٱلۡبَرِّ أَعۡرَضۡتُمۡۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ كَفُورًا ٦٧
Когда беда постигает вас в море, вас покидают все, к кому вы взывали, кроме Него. Когда же Он спасает вас и выводит на сушу, вы отворачиваетесь. Воистину, человек неблагодарен.
இணைவைப்பாளர்களே!- கடலில் உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டு, அதனால் அழிந்து விடுவீர்கள் என்று நீங்கள் அஞ்சும் போது அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எல்லாம் உங்களின் சிந்தனையை விட்டு அகன்று விடுகின்றன. நீங்கள் அப்போது அல்லாஹ்விடம் மட்டுமே நினைத்து அவனிடம் உதவி கோருகிறீர்கள். அவன் உங்களுக்கு உதவி செய்து, நீங்கள் அஞ்சும் விஷயத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கரைசேர்த்து விட்டால் நீங்கள் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை மாத்திரமே அழைத்துப் பிரார்த்திப்பதையும் புறக்கணித்து, உங்களின் சிலைகளின்பால் திரும்பி விடுகிறீர்கள். மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மிகவும் அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
17:68Страница 289
أَفَأَمِنتُمۡ أَن يَخۡسِفَ بِكُمۡ جَانِبَ ٱلۡبَرِّ أَوۡ يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗا ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ وَكِيلًا ٦٨
Неужели вы не опасаетесь того, что Он может заставить часть суши поглотить вас или низринуть на вас ураган с камнями? Ведь тогда вы не найдете себе попечителя и хранителя!
இணைவைப்பாளர்களே!- அவன் உங்களைக் காப்பாற்றி கரைசேர்த்த போது எங்களை அதில் புதையச் செய்திடுவான் என்பதைக் குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? அல்லது லூத்துடைய சமூகத்தனரின் மீது கல்மழையைப் பொழியச் செய்தது போன்று உங்கள் மீதும் கல்மழையைப் பொழியச் செய்திடுவான் என்பதைக் குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களைப் பாதுகாக்கக் கூடிய பாதுகாவலரையோ அழிவிலிருந்து உங்களை தடுத்து உதவி செய்யக் கூடியவரையோ நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்.
17:69Страница 289
أَمۡ أَمِنتُمۡ أَن يُعِيدَكُمۡ فِيهِ تَارَةً أُخۡرَىٰ فَيُرۡسِلَ عَلَيۡكُمۡ قَاصِفٗا مِّنَ ٱلرِّيحِ فَيُغۡرِقَكُم بِمَا كَفَرۡتُمۡ ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ عَلَيۡنَا بِهِۦ تَبِيعٗا ٦٩
Или же вы уверены в том, что Он не вернет вас в море еще раз, чтобы наслать на вас ураганный ветер и потопить вас за неверие? Ведь тогда никто не станет мстить Нам за вас!
அல்லது முதலில் உங்களைப் பாதுகாத்த அல்லாஹ்வின் அருளை நீங்கள் நிராகரித்து நடந்துகொண்டதனால் உங்களை அவன் மீண்டும் கடலுக்கு திரும்பச்செய்து கடும் காற்றை அனுப்பி உங்களை மூழ்கடித்துவிடலாம் என்பதைக்குறித்து அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் நாம் உங்களுக்குச் செய்ததைக் குறித்து நம்மிடம் உங்களுக்குச் சார்பாக கேள்விகேட்பவர் எவரையும் நீங்கள் பெறமாட்டீர்கள்.
17:70Страница 289
۞ وَلَقَدۡ كَرَّمۡنَا بَنِيٓ ءَادَمَ وَحَمَلۡنَٰهُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَىٰ كَثِيرٖ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِيلٗا ٧٠
Мы почтили сынов Адама и позволяем им передвигаться по суше и морю. Мы наделили их благами и даровали им явное превосходство над многими другими тварями.
நாம் ஆதமின் மக்களை பகுத்தறிவின் மூலமும், வானவர்களை அவர்களின் தந்தைக்கு சிரம்பணிய வைத்தது போன்ற ஏனையவற்றைக்கொண்டும் சிறப்பித்துள்ளோம். தரைமார்க்கமாக அவர்களை ஏந்திச் செல்லும் விலங்குகளையும், வாகனங்களையும் கடலில் அவர்களைச் சுமந்து செல்லும் கப்பல்களையும் அவர்களுக்காக நாம் வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். தூய்மையான உணவு, பானம், திருமணஉறவு போன்றனவற்றை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எங்களுடைய படைப்பினங்களில் அதிகமானவற்றை விடவும் நாம் அவர்களை அதிகமாகச் சிறப்பித்துள்ளோம். எனவே அவர்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளுக்கு அவர்கள் நன்றிசெலுத்த வேண்டும்.
17:71Страница 289
يَوۡمَ نَدۡعُواْ كُلَّ أُنَاسِۭ بِإِمَٰمِهِمۡۖ فَمَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَأُوْلَٰٓئِكَ يَقۡرَءُونَ كِتَٰبَهُمۡ وَلَا يُظۡلَمُونَ فَتِيلٗا ٧١
В тот день Мы созовем всех людей вместе с их предводителями. Тогда те, кому книга будет вручена в правую руку, прочтут ее, и к ним не будет проявлено несправедливости даже величиной с финиковую плеву.
தூதரே!- நாம் ஒவ்வொரு கூட்டத்தினரையும் அவர்கள் உலகில் பின்பற்றிய அதனது தலைவருடன் அழைக்கும் நாளை நினைவுகூர்வீராக. யாருடைய செயல்பதிவேடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுமோ அவர்கள் தங்களின் செயல்பதிவேடுகளை மகிழ்ச்சியாகப் படிப்பார்கள். அவர்கள் செய்த நன்மைகளில் எதையும் அவர்கள் குறைவாகப் பெற மாட்டார்கள். அது பேரீச்சம் பழத்தின் கொட்டையின் மீதுள்ள தோலின் அளவு சிறிதாக இருந்தாலும் சரியே.
17:72Страница 289
وَمَن كَانَ فِي هَٰذِهِۦٓ أَعۡمَىٰ فَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ أَعۡمَىٰ وَأَضَلُّ سَبِيلٗا ٧٢
А кто слеп в этом мире, тот будет также слеп в Последней жизни и окажется еще более заблудшим.
இந்த உலகத்தில் சத்தியத்தை ஏற்காமல், அதற்குக் கட்டுப்படாமல் குருட்டு இதயத்தோடு வாழ்ந்தவர் மறுமை நாளில் அதைவிடக் கடும் குருடராக இருப்பார். அவரால் சுவனத்தின் வழியைப் பெறமுடியாது. நேர்வழியை விட்டும் அவர் மிகவும் வழிகெட்டவராக இருப்பார். செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
17:73Страница 289
وَإِن كَادُواْ لَيَفۡتِنُونَكَ عَنِ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ لِتَفۡتَرِيَ عَلَيۡنَا غَيۡرَهُۥۖ وَإِذٗا لَّٱتَّخَذُوكَ خَلِيلٗا ٧٣
Они чуть было не отклонили тебя от того, что Мы дали тебе в откровении, дабы ты выдумал про Нас нечто другое. Вот тогда ты стал бы их возлюбленным.
தூதரே!- நீர் இணைவைப்பாளர்களின் மனஇச்சைக்கேற்ப நம்மீது வேறொன்றை புனைந்து கூற வேண்டும் என்பதற்காக நாம் உமக்கு வஹியாக அறிவித்த குர்ஆனைவிட்டும் உம்மை திசைதிருப்ப முயன்றார்கள். அவர்கள் விரும்பியதை நீர் செய்திருந்தால் உம்மை பிரியத்திற்குரியவராக தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии