Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Кахф 18:32–70
18:32Страница 297
۞ وَٱضۡرِبۡ لَهُم مَّثَلٗا رَّجُلَيۡنِ جَعَلۡنَا لِأَحَدِهِمَا جَنَّتَيۡنِ مِنۡ أَعۡنَٰبٖ وَحَفَفۡنَٰهُمَا بِنَخۡلٖ وَجَعَلۡنَا بَيۡنَهُمَا زَرۡعٗا ٣٢
Приведи им притчу о двух мужах. Одному из них Мы устроили два виноградника, оградили их финиковыми пальмами и поместили между ними ниву.
தூதரே!- அவர்களுக்கு இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துக் கூறுவீராக: ஒருவர் நம்பிக்கையாளராகவும் மற்றொருவர் நிராகரிப்பாளராகவும் இருந்தார். நாம் நிராகரிப்பாளனுக்கு இரு திராட்சை தோட்டங்களை ஏற்படுத்தியிருந்தோம். இரு தோட்டங்களையும் சுற்றி பேரீச்சை மரங்கள் காணப்பட்டது. அவ்விரண்டிலும் காலியாக உள்ள பகுதிகளில் பயிர்களையும் முளைக்கச் செய்திருந்தோம்.
18:33Страница 297
كِلۡتَا ٱلۡجَنَّتَيۡنِ ءَاتَتۡ أُكُلَهَا وَلَمۡ تَظۡلِم مِّنۡهُ شَيۡـٔٗاۚ وَفَجَّرۡنَا خِلَٰلَهُمَا نَهَرٗا ٣٣
Оба сада приносили плоды, и ничто из них не пропадало, а между ними Мы проложили реку.
ஒவ்வொரு தோட்டமும் பேரீச்சை, திராட்சை, பயிர்கள் என எவ்வித குறையும் வைக்காமல் தன் விளைச்சல்களை நிறைவாகத் தந்துகொண்டிந்தன. அவையிரண்டிற்குமிடையில் இலகுவாக நீர் பாய்ச்சுவதற்காக நாம் ஒரு நதியையும் ஓடச் செய்தோம்.
18:34Страница 297
وَكَانَ لَهُۥ ثَمَرٞ فَقَالَ لِصَٰحِبِهِۦ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَنَا۠ أَكۡثَرُ مِنكَ مَالٗا وَأَعَزُّ نَفَرٗا ٣٤
У него были плоды (или богатство), и он сказал своему товарищу, беседуя с ним: «У меня больше имущества и помощников, чем у тебя».
இரு தோட்டங்களின் உரிமையானுக்கு வேறு சொத்துக்களும், பழங்களும் இருந்தன. அவன் நம்பிக்கைகொண்ட தன் தோழனிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது அவரிலே பாதிப்பை ஏற்படுத்து முகமாக பெருமையுடன் கூறினான்: “நான் உன்னைவிட பெரும் செல்வம் படைத்தவன், கண்ணியமானவன், ஆள்பலம் மிக்கவன்.”
18:35Страница 298
وَدَخَلَ جَنَّتَهُۥ وَهُوَ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ قَالَ مَآ أَظُنُّ أَن تَبِيدَ هَٰذِهِۦٓ أَبَدٗا ٣٥
Он вошел в свой сад, поступая несправедливо по отношению к себе, и сказал: «Я не думаю, что он когда-нибудь исчезнет.
அந்த நிராகரிப்பாளன் நம்பிக்கைகொண்ட தன் தோழனுடன் தோட்டத்திற்கு அதனைக் காண்பிப்பதற்காக வந்தான். அப்போது அவன் நிராகரிப்பால், தற்பெருமையால் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாக இருந்தான். அந்த நிராகரிப்பாளன் கூறினான்: “நீ காணும் இந்த தோட்டம் அழிந்துவிடும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் அது நிலைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்துள்ளேன்.
18:36Страница 298
وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيۡرٗا مِّنۡهَا مُنقَلَبٗا ٣٦
Я не думаю, что настанет Час. Если же меня возвратят к моему Господу, то по возвращении я обрету там нечто еще более прекрасное».
மறுமை ஏற்படும் என நான் எண்ணவில்லை. நிலையான வாழ்வு மாத்திரமே உண்டு. ஒருவேளை மறுமை நாள் நிகழ்ந்து மீண்டும் நான் உயிர்பெற்று எழுந்து என் இறைவனிடம் கொண்டுசெல்லப்பட்டாலும் அங்கு இதைவிட சிறந்த தோட்டத்தையே நான் பெறுவேன். ஏனெனில் இந்த உலகில் நான் செல்வந்தனாக இருப்பதால் (மறுமையில்) மீண்டும் உயிர்பெற்று எழுந்த பிறகு செல்வந்தனாகவே இருப்பேன்.”
18:37Страница 298
قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرۡتَ بِٱلَّذِي خَلَقَكَ مِن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ سَوَّىٰكَ رَجُلٗا ٣٧
Товарищ его, беседуя с ним, сказал: «Неужели ты не веруешь в Того, Кто сотворил тебя из земли, потом - из капли, а потом сделал тебя мужчиной?
நம்பிக்கை கொண்ட அவனுடைய தோழன் பேச்சை தொடர்ந்தவனாக அவனிடம் கூறினான்: “உன் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்து பின்னர் உன்னை விந்திலிருந்து படைத்து, பின்பு உன்னை ஆணாக மாற்றி, உன் உறுப்புகளைச் சீராக்கி, உன்னை முழுமையானவனாக ஆக்கியவனையா நீ நிராகரிக்கிறாய்? இவற்றையெல்லாம் செய்வதற்கு ஆற்றலுள்ளவன் உனக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்குஆற்றலுள்ளவன்.
18:38Страница 298
لَّٰكِنَّا۠ هُوَ ٱللَّهُ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِرَبِّيٓ أَحَدٗا ٣٨
Что же касается меня, то мой Господь - Аллах, и я никого не приобщаю в сотоварищи к моему Господу.
ஆனால் நான் நீ கூறுவதுபோல் நான் கூறமாட்டேன். என்னைப் பொருத்தவரை அல்லாஹ்தான் எனது இறைவன். அவனே நமக்கு அருட்கொடைகளை வழங்கி சிறப்பித்துள்ளான். அப்படிப்பட்ட இறைவனுக்கு வணக்கத்தில் நான் யாரையும் இணையாக்க மாட்டேன். என்று கூறுவேன்.
18:39Страница 298
وَلَوۡلَآ إِذۡ دَخَلۡتَ جَنَّتَكَ قُلۡتَ مَا شَآءَ ٱللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِٱللَّهِۚ إِن تَرَنِ أَنَا۠ أَقَلَّ مِنكَ مَالٗا وَوَلَدٗا ٣٩
Почему, войдя в свой сад, ты не сказал: «Так пожелал Аллах! Нет мощи, кроме как от Аллаха!» Ты считаешь, что у меня меньше богатства и детей, чем у тебя,
நீ உன் தோட்டத்தில் நுழைந்த போது, “எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே. அவனைத் தவிர வேறு எவருக்கும் எந்த சக்தியும் இல்லை” என்று கூறியிருக்கக் கூடாதா! அவனே தான் நாடியதைச் செய்கிறான். அவன் வல்லமை மிக்கவன். நான் உன்னைவிட வசதி குறைந்தவன், பிள்ளைகள் குறைந்தவன், என நீ கருதினாலும் கூட.
18:40Страница 298
فَعَسَىٰ رَبِّيٓ أَن يُؤۡتِيَنِ خَيۡرٗا مِّن جَنَّتِكَ وَيُرۡسِلَ عَلَيۡهَا حُسۡبَانٗا مِّنَ ٱلسَّمَآءِ فَتُصۡبِحَ صَعِيدٗا زَلَقًا ٤٠
а ведь мой Господь может даровать мне то, что лучше твоего сада, и наслать на него наказание с неба, и тогда он превратится в скользкую землю.
அல்லாஹ் உன் தோட்டத்தைவிட சிறந்த ஒன்றை எனக்கு வழங்குவதையும், உன் தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை அனுப்பி, அது கால்கள் வழுக்கும், எதுவும் முளையாத வெட்ட வெளியாகுவதையும் நான் எதிர்பார்த்துள்ளேன்.
18:41Страница 298
أَوۡ يُصۡبِحَ مَآؤُهَا غَوۡرٗا فَلَن تَسۡتَطِيعَ لَهُۥ طَلَبٗا ٤١
Или же воды его уйдут под землю, и ты не сможешь достать их».
அல்லது அதன் நீர் பூமியில் வற்றிவிடலாம். அதனால் எவ்வித சாதனத்தின் மூலமும் உன்னால் அதனை அடையமுடியாது போய்விடும். அதன் நீர் வற்றிவிட்டால் அது நிலைத்திருக்காது.
18:42Страница 298
وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصۡبَحَ يُقَلِّبُ كَفَّيۡهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُشۡرِكۡ بِرَبِّيٓ أَحَدٗا ٤٢
Его плоды погибли, и он стал ударять себя по рукам, сожалея о том, что он потратил на виноградник, ветви которого упали на трельяжи. Он сказал: «Лучше бы я никого не приобщал в сотоварищи к моему Господу!».
விசுவாசியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நிராகரிப்பாளனின் தோட்டத்தின் பழங்களை அழிவு சூழ்ந்துகொண்டது. அதனைக் கண்ட அவன் அதனைப் பராமரிப்பதற்காக செலவிட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு கைபிசைந்து நின்றான். திராட்சை மரத்தின் கிளைகள் அழிந்து அத்தோட்டம் அடியோடு வீழ்ந்து கிடந்தது. அவன் கூறினான்: “நான் என் இறைவனை மட்டுமே நம்பிக்கைகொண்டிருக்க வேண்டுமே! வணக்கத்தில் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!
18:43Страница 298
وَلَمۡ تَكُن لَّهُۥ فِئَةٞ يَنصُرُونَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَمَا كَانَ مُنتَصِرًا ٤٣
Не было у него людей, которые бы помогли ему вместо Аллаха, и он не мог помочь самому себе.
அந்த நிராகரிப்பாளனுக்கு அவன் மீது இறங்கிய வேதனையைத் தடுக்கக்கூடிய எந்தக் கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன்தான் தன் கூட்டத்தினரைக்கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தான். அவனாலும் அவனது தோட்டத்தை அல்லாஹ் அழிப்பதைத் தடுக்க முடியவில்லை.
18:44Страница 298
هُنَالِكَ ٱلۡوَلَٰيَةُ لِلَّهِ ٱلۡحَقِّۚ هُوَ خَيۡرٞ ثَوَابٗا وَخَيۡرٌ عُقۡبٗا ٤٤
В таких случаях оказать поддержку может только Истинный Аллах. У Него - лучшее вознаграждение и лучший исход.
இந்த இடத்தில் உதவி அல்லாஹ் ஒருவன் மட்டுமே செய்ய முடியும். அவன் நம்பிக்கைகொண்ட தன் நேசர்களுக்கு நன்மையளிப்பதில் சிறந்தவன். அவன் அவர்களுக்குப் பலமடங்கு நன்மைகளை வழங்குகிறான். சிறப்பான முடிவை வழங்குவதிலும் அவனே சிறந்தவன்.
18:45Страница 298
وَٱضۡرِبۡ لَهُم مَّثَلَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَآءٍ أَنزَلۡنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخۡتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلۡأَرۡضِ فَأَصۡبَحَ هَشِيمٗا تَذۡرُوهُ ٱلرِّيَٰحُۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقۡتَدِرًا ٤٥
Приведи им притчу о мирской жизни. Она подобна воде, которую Мы ниспосылаем с неба. Земные растения смешиваются с ней (или благодаря ней), а потом превращаются в сухие былинки, рассеиваемые ветром. Воистину, Аллах способен на всякую вещь.
தூதரே!- உலக இன்பங்களைக் கண்டு ஏமாறுபவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறுவீராக: அது அழிந்துவிடுவதிலும் விரைவாக தீர்ந்துவிடுவதிலும் மழை நீருக்கு ஒப்பானதாகும். நாம் அதனை வானத்திலிருந்து இறக்குகின்றோம். அந்த நீரின் மூலம் பூமியில் தாவரம் செழித்து வளர்கின்றது. பின்னர் அவை காற்றால் அடித்துச் செல்லப்படும் காய்ந்த சருகுகளாகி விடுகின்றன. அந்தப் பூமி பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். அவனுக்கு இயலாதது எதுவும் கிடையாது. அவன் தான் நாடியவற்றை உயிருடன் விட்டுவைக்கிறான். தான் நாடியவற்றை அழித்து விடுகிறான்.
18:46Страница 299
ٱلۡمَالُ وَٱلۡبَنُونَ زِينَةُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٌ أَمَلٗا ٤٦
Богатство и сыновья - украшение мирской жизни, однако нетленные благодеяния лучше по вознаграждению перед твоим Господом, и на них лучше возлагать надежды.
செல்வமும் பிள்ளைகளும் உலக வாழ்வின் அலங்காரங்கள்தாம். அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவழித்தாலே அன்றி மறுமையில் செல்வத்தால் எந்தப் பயனும் இல்லை. நல்ல வார்த்தைகளும், செயல்களுமே அல்லாஹ்விடத்தில் நன்மையைப் பெற்றுத்தருவதில் இந்த உலகிலுள்ள அனைத்து அலங்காரங்களையும் விடச் சிறந்ததாகும். அதுவே மனிதன் எதிர்பார்ப்பவற்றில் மிகச் சிறந்ததாகும். ஏனெனில் உலக அலங்காரங்கள் அழிந்துவிடக்கூடியவையே. அல்லாஹ்வுக்குப் பிடித்தமான சொற்கள் மற்றும் செயல்களின் கூலியே நிலைத்திருக்கக்கூடியவை.
18:47Страница 299
وَيَوۡمَ نُسَيِّرُ ٱلۡجِبَالَ وَتَرَى ٱلۡأَرۡضَ بَارِزَةٗ وَحَشَرۡنَٰهُمۡ فَلَمۡ نُغَادِرۡ مِنۡهُمۡ أَحَدٗا ٤٧
В тот день Мы заставим двигаться горы, и ты увидишь, что земля станет плоской. Мы соберем их всех и никого не упустим.
நாம் மலைகளை அதன் இடங்களிலிருந்து அகற்றிவிடும் நாளை நினைவு கூறுவீராக! பூமியிலுள்ள மலைகள், மரங்கள், கட்டிடங்கள் அனைத்தும் அழிந்துவிடுவதனால் அதனை வெட்ட வெளியாக நீர் காண்பீர். நாம் படைப்புகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டுவோம். அவர்களில் எவரையும் எழுப்பாமல் விட்டுவிட மாட்டோம்.
18:48Страница 299
وَعُرِضُواْ عَلَىٰ رَبِّكَ صَفّٗا لَّقَدۡ جِئۡتُمُونَا كَمَا خَلَقۡنَٰكُمۡ أَوَّلَ مَرَّةِۭۚ بَلۡ زَعَمۡتُمۡ أَلَّن نَّجۡعَلَ لَكُم مَّوۡعِدٗا ٤٨
Они предстанут перед твоим Господом рядами: «Вы пришли к Нам такими, какими Мы создали вас в первый раз. Но вы предполагали, что Мы не назначили встречи с вами».
மனிதர்கள் விசாரணைக்காக உம் இறைவனுக்கு முன்னால் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். அவர்களிடம் கூறப்படும்: “நாம் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே தனித்தனியாக செருப்புகளின்றி, நிர்வாணமாக விருத்தசேதனம் செய்யப்படாதோராக நம்மிடம் வந்துவிட்டீர்கள். மாறாக நாம் உங்களை மீண்டும் எழுப்ப மாட்டோம் என்றும் நாம் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக ஒரு இடத்தையும் காலத்தையும் ஏற்படுத்தமாட்டோம் என்றும் நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள்.
18:49Страница 299
وَوُضِعَ ٱلۡكِتَٰبُ فَتَرَى ٱلۡمُجۡرِمِينَ مُشۡفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَٰوَيۡلَتَنَا مَالِ هَٰذَا ٱلۡكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةً إِلَّآ أَحۡصَىٰهَاۚ وَوَجَدُواْ مَا عَمِلُواْ حَاضِرٗاۗ وَلَا يَظۡلِمُ رَبُّكَ أَحَدٗا ٤٩
Будет положена книга, и ты увидишь, как грешники будут трепещать от того, что в ней. Они скажут: «Горе нам! Что это за книга! В ней не упущен ни малый, ни великий грех - все подсчитано». Они обнаружат перед собой все, что совершили, и твой Господь ни с кем не поступит несправедливо.
அவர்களுக்கு முன்னால் செயல்பதிவேடு வைக்கப்படும். அவர்களில் சிலர் தம் வலது கையால் அதனை எடுப்பார்கள்; சிலர் தம் இடது கையால் அதனை எடுப்பார்கள். -மனிதனே!- நிராகரிப்பாளர்கள் தங்களைக்குறித்து அஞ்சியவர்களாக இருப்பதைக் காண்பாய். ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தி வைத்த நிராகரிப்பையும் பாவங்களையும் அறிந்துவைத்துள்ளார்கள். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே, சோதனையே! இந்த பதிவேட்டிற்கு என்னவாயிற்று? எங்களின் சிறிய, பெரிய செயல்கள் எதையும் இது பதிவுசெய்யாமல் விட்டுவைக்கவில்லையே!” அவர்கள் உலக வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் எழுதி பதியப்பட்டிருப்பதைக் காண்பார்கள். -தூதரே!- உம் இறைவன் யார்மீதும் அநீதி இழைக்க மாட்டான். பாவம் செய்யாமல் யாரையும் அவன் தண்டிக்க மாட்டான். அவன் தனக்குக் கட்டுப்பட்டவர்களின் கூலியை சிறிதும் குறைத்துவிட மாட்டான்.
18:50Страница 299
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ كَانَ مِنَ ٱلۡجِنِّ فَفَسَقَ عَنۡ أَمۡرِ رَبِّهِۦٓۗ أَفَتَتَّخِذُونَهُۥ وَذُرِّيَّتَهُۥٓ أَوۡلِيَآءَ مِن دُونِي وَهُمۡ لَكُمۡ عَدُوُّۢۚ بِئۡسَ لِلظَّٰلِمِينَ بَدَلٗا ٥٠
Вот сказали Мы ангелам: «Падите ниц перед Адамом!». Все они поклонились, кроме Иблиса. Он был одним из джиннов и ослушался воли своего Господа. Неужели вы признаете его и его потомков своими покровителями и помощниками вместо Меня, тогда как они являются вашими врагами? Плохая это замена для беззаконников!
தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் வானவர்களைச் சாராத ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த இப்லீஸ் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்துவிட்டான். அவன் தன் இறைவனுக்குக் கட்டுப்படாமல் நடந்தான். -மனிதர்களே!- என்னை விட்டுவிட்டு உங்களுக்குப் பகைவர்களாக இருக்கின்ற அவனையும் அவனுடைய சந்ததியையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டீர்களா? எவ்வாறு உங்களின் பகைவர்களை உங்களுக்குப் பாதுகாவர்களாக ஆக்கினீர்கள்? அல்லாஹ்வை பாதுகாவலனாக ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஷைத்தானை பாதுகாவலனாக ஏற்படுத்திக்கொண்ட அநியாயக்காரர்களின் செயல் மிகவும் கெட்டதாகும்.
18:51Страница 299
۞ مَّآ أَشۡهَدتُّهُمۡ خَلۡقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَا خَلۡقَ أَنفُسِهِمۡ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلۡمُضِلِّينَ عَضُدٗا ٥١
Я не сделал их свидетелями сотворения небес и земли и сотворения их самих. Я не беру в помощники тех, кто вводит других в заблуждение.
என்னை விடுத்து நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொண்ட இவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள்தாம். வானங்களையும் பூமியையும் படைத்தபோது நான் அவர்களை சாட்சியாக வைக்கவில்லை. மாறாக அப்போது அவர்கள் இருக்கவேயில்லை. அவர்களில் சிலரைப் படைத்தபோது சிலரை நான் சாட்சியாக வைக்கவில்லை. படைப்பதிலும் நிர்வகிப்பதிலும் நான் தனித்தவன். நான் வழிகெடுக்கும் மனித, ஜின் இனத்திலுள்ள ஷைத்தான்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொள்பவன் அல்ல. நான் உதவியாளர்களை விட்டும் தேவையற்றவன்.
18:52Страница 299
وَيَوۡمَ يَقُولُ نَادُواْ شُرَكَآءِيَ ٱلَّذِينَ زَعَمۡتُمۡ فَدَعَوۡهُمۡ فَلَمۡ يَسۡتَجِيبُواْ لَهُمۡ وَجَعَلۡنَا بَيۡنَهُم مَّوۡبِقٗا ٥٢
В тот день Он скажет: «Призовите Моих сотоварищей, о существовании которых вы предполагали». Они воззовут к ним, но те не ответят им. Мы воздвигнем между ними губительное место (преграду).
தூதரே!- அவர்களிடம் மறுமை நாளை நினைவு கூர்வீராக. அப்போது அல்லாஹ் இவ்வுலகில் தனக்கு இணை கற்பித்தவர்களிடம் கூறுவான்: “உங்களுக்கு உதவிசெய்வதற்காக எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்களை அழையுங்கள் என்று.” அவர்கள் தங்களின் இணைத்தெய்வங்களை அழைப்பார்கள். ஆனால் அவை அவர்களுக்குப் பதிலளிக்க மாட்டா. உதவியும் செய்யமாட்டா. வணங்கியவர்களுக்கும் வணங்கப்பட்டவர்களுக்குமிடையே நாம் அவர்கள் ஒன்று சேரும் அழிவிடத்தை ஏற்படுத்திவிடுவோம். அதுதான் நரக நெருப்பாகும்.
18:53Страница 299
وَرَءَا ٱلۡمُجۡرِمُونَ ٱلنَّارَ فَظَنُّوٓاْ أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمۡ يَجِدُواْ عَنۡهَا مَصۡرِفٗا ٥٣
Грешники увидят Огонь, и им станет ясно, что они будут брошены в него. Они не найдут от него спасения!
இணைவைப்பாளர்கள் நரகத்தைக் காண்பார்கள். எனவே தாங்கள் அதில் விழுபவர்களே என்பது அவர்களுக்கு உறுதியாகிவிடும். அவர்கள் அதனை விட்டும் திரும்பிச் செல்லும் இடத்தை பெற மாட்டார்கள்.
18:54Страница 300
وَلَقَدۡ صَرَّفۡنَا فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ لِلنَّاسِ مِن كُلِّ مَثَلٖۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ أَكۡثَرَ شَيۡءٖ جَدَلٗا ٥٤
Мы разъяснили людям в этом Коране любые притчи, но человек больше всего склонен препираться.
நாம் அவர்கள் அறிவுரை பெற்றுக்கொள்ளும்பொருட்டு முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்தக் குர்ஆனில் பல்வேறு வகையான உதாரணங்களை விளக்கியுள்ளோம். ஆயினும் மனிதன் -குறிப்பாக நிராகரிப்பவன்- அதிகமாக தவறான முறையில் தர்க்கம் செய்பவனாகவே உள்ளான்.
18:55Страница 300
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤۡمِنُوٓاْ إِذۡ جَآءَهُمُ ٱلۡهُدَىٰ وَيَسۡتَغۡفِرُواْ رَبَّهُمۡ إِلَّآ أَن تَأۡتِيَهُمۡ سُنَّةُ ٱلۡأَوَّلِينَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ قُبُلٗا ٥٥
Что же помешало людям уверовать, когда к ним явилось верное руководство, и попросить прощения у своего Господа, если не стремление к участи первых поколений и мучениям, которые предстанут перед ними лицом к лицу?
பிடிவாதம்கொண்ட நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்விடம் இருந்து முஹம்மது நபி கொண்டவந்ததன் மீது நம்பிக்கைகொள்வதற்கும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதற்கும் தடையாக இருப்பது விளக்கப்படுத்துவதில் உள்ள குறையல்ல. அவர்களுக்கு அல்குர்ஆனில் பல்வேறு உதாரணங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் தெளிவான ஆதாரங்களும் அவர்களிடம் வந்துள்ளன. முந்தைய சமூகங்களைப்போல தாங்களும் தண்டிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட தண்டனையை நேரடியாகக் கண்டுவிட வேண்டும் என்று அவர்கள் பிடிவாதத்தின் காரணமாக கோறுவதே அவர்களைத் தடுத்தது.
18:56Страница 300
وَمَا نُرۡسِلُ ٱلۡمُرۡسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَۚ وَيُجَٰدِلُ ٱلَّذِينَ كَفَرُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّۖ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَمَآ أُنذِرُواْ هُزُوٗا ٥٦
Мы отправляем посланников только добрыми вестниками и предостерегающими увещевателями. Однако неверующие препираются посредством лживых доводов, чтобы опровергнуть ими истину, и насмехаются над Моими знамениями и тем, от чего их предостерегают.
நாம் தூதர்களை நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவர்களாவும் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாவுமே அனுப்பி வைக்கின்றோம். உள்ளங்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரம் இருந்த போதிலும் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட சத்தியத்தை தங்களின் அசத்தியத்தால் முறியடித்துவிட வாதம் செய்கிறார்கள். அவர்கள் குர்ஆனையும் எச்சரிக்கைகளையும் நகைப்புக்குரியதாகவும் பரிகாசமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.
18:57Страница 300
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ فَأَعۡرَضَ عَنۡهَا وَنَسِيَ مَا قَدَّمَتۡ يَدَاهُۚ إِنَّا جَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۖ وَإِن تَدۡعُهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ فَلَن يَهۡتَدُوٓاْ إِذًا أَبَدٗا ٥٧
Кто может быть несправедливее того, кому напомнили о знамениях его Господа, а он отвернулся от них и забыл то, что совершили его руки? Мы накинули на их сердца покрывала, чтобы они не постигли его (Коран), а их уши поражены глухотой. Если даже ты призовешь их на прямой путь, они никогда не последуют прямым путем.
தன் இறைவனின் வசனங்களைக்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டபோது அதிலுள்ள தண்டனை பற்றிய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் படிப்பினை பெறாமல் புறக்கணித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அவன் இவ்வுலக வாழ்வில் சேர்த்துவைத்த பாவங்களையும் நிராகரிப்பையும் மறந்துவிட்டான். அவற்றிலிருந்து அவன் மீளவில்லை. இத்தகைய பண்புடையவர்களின் உள்ளங்களில், குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு ஒரு திரையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளில் அதனைக் கேட்க முடியாமல் ஒரு அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதனைச் செவிமடுக்கமாட்டார்கள். நீர் அவர்களை ஈமானின் பக்கம் அழைத்தாலும் அவர்களின் உள்ளங்களில் திரையும் செவிகளில் அடைப்பும் இருப்பதால் ஒருபோதும் உமது அழைப்பிற்குப் பதிலளிக்க மாட்டார்கள்.
18:58Страница 300
وَرَبُّكَ ٱلۡغَفُورُ ذُو ٱلرَّحۡمَةِۖ لَوۡ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُواْ لَعَجَّلَ لَهُمُ ٱلۡعَذَابَۚ بَل لَّهُم مَّوۡعِدٞ لَّن يَجِدُواْ مِن دُونِهِۦ مَوۡئِلٗا ٥٨
Твой Господь - Прощающий, Обладающий милосердием. Если бы Он стал наказывать их за то, что они приобрели, то ускорил бы их мучения, но для них назначен срок, и они не найдут от него спасения.
பொய்பிப்பவர்களுக்கு விரைவாக வேதனையளிக்கப்பட வேண்டும் என்று தூதர் எதிர்பார்க்காமலிருப்பதற்காக அவருக்கு அல்லாஹ் கூறுகிறான்: “-தூதரே!- உமது இறைவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அனைத்தையும் வியாபித்த கருணை உடையனாகவும் இருக்கின்றான். பாவிகள் பாவமன்னிப்புக் கோரும்பொருட்டு அவர்களுக்கு அவகாசம் அளிப்பதும் அவனது அருளே. அவன் இந்த புறக்கணிப்பாளர்களை தண்டிக்க விரும்பினால் இவ்வுலகிலேயே உடனுக்குடன் அவர்களைத் தண்டித்திருப்பான். ஆயினும் அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரும்பொருட்டு அவர்களை விட்டும் தண்டனையைத் தாமதப்படுத்துகிறான். மாறாக அவர்கள் மீளாவிட்டால் அவர்களது நிராகரிப்பு, புறக்கணிப்பு என்பவற்றுக்கு அவர்களுக்கு கூலி வழங்கப்படுவதற்கு குறிக்கப்பட்ட இடமும் காலமும் உண்டு. அவனைத் தவிர ஒதுங்குவதற்கு எந்தப் புகலிடத்தையும் அவர்கள் பெறவே முடியாது.
18:59Страница 300
وَتِلۡكَ ٱلۡقُرَىٰٓ أَهۡلَكۡنَٰهُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَعَلۡنَا لِمَهۡلِكِهِم مَّوۡعِدٗا ٥٩
Мы погубили эти города, когда они стали поступать несправедливо, и установили для их погибели срок.
ஹூத், ஸாலிஹ், ஷுஜப் ஆகியோரின் சமூகங்கள் வாழ்ந்த ஊர்களைப் போன்ற உங்களுக்கு நெருக்கமான நிராகரித்த அந்த ஊர்களில் உள்ளோரை, பாவங்கள் மற்றும் நிராகரிப்பின் மூலம் தமக்குத் தாமே அநியாயம் செய்தபோது அழித்துவிட்டோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் வைத்திருந்தோம்.
18:60Страница 300
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِفَتَىٰهُ لَآ أَبۡرَحُ حَتَّىٰٓ أَبۡلُغَ مَجۡمَعَ ٱلۡبَحۡرَيۡنِ أَوۡ أَمۡضِيَ حُقُبٗا ٦٠
Вот Муса (Моисей) сказал своему слуге: «Я не остановлюсь, пока не дойду до места слияния двух морей или пока не потрачу на путешествие долгие годы».
தூதரே!- மூஸா தம் பணியாளர் யூஷா இப்னு நூனிடம் கூறிய நேரத்தை நினைவு கூர்வீராக: “இரு கடல்களும் சங்கமிக்கும் இடத்தை அடையும்வரை நான் சென்றுகொண்டே இருப்பேன். அல்லது அந்த நல்லடியாரை சந்தித்து அவரிடமிருந்து கல்வி கற்பதற்காக நீண்ட காலம் சென்றுகொண்டே இருப்பேன்".
18:61Страница 300
فَلَمَّا بَلَغَا مَجۡمَعَ بَيۡنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ سَرَبٗا ٦١
Когда они дошли до места их слияния, они забыли свою рыбу, и она двинулась в путь по морю, словно по подземному ходу.
இருவரும் நடந்து சென்றார்கள். இரு கடல்களும் சங்கமிக்கும் இடத்தை அவர்கள் அடைந்தபோது இருவரும் கட்டுச்சாதனமாகக் கொண்டுவந்த மீனை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் அந்த மீனுக்கு உயிரளித்தான். அது கடலில் சுரங்கம் போன்ற ஒரு வழியை அமைத்துக் கொண்டது. அதில் நீர் ஒட்டவில்லை.
18:62Страница 301
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَىٰهُ ءَاتِنَا غَدَآءَنَا لَقَدۡ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبٗا ٦٢
Когда они прошли дальше, он сказал своему слуге: «Подавай наш обед, ведь мы утомились в пути».
அவர்கள் இருவரும் அந்த இடத்தைக் கடந்த போது மூஸா தம் பணியாளரிடம், “நம்முடைய மதிய உணவைக் கொண்டு வாரும். நம்முடைய இந்த பயணத்தில் நாம் மிகவும் களைப்படைந்து விட்டோம்” என்று கூறினார்.
18:63Страница 301
قَالَ أَرَءَيۡتَ إِذۡ أَوَيۡنَآ إِلَى ٱلصَّخۡرَةِ فَإِنِّي نَسِيتُ ٱلۡحُوتَ وَمَآ أَنسَىٰنِيهُ إِلَّا ٱلشَّيۡطَٰنُ أَنۡ أَذۡكُرَهُۥۚ وَٱتَّخَذَ سَبِيلَهُۥ فِي ٱلۡبَحۡرِ عَجَبٗا ٦٣
Он сказал: «Помнишь, как мы укрылись под скалой? Я забыл о рыбе, и только дьявол заставил меня не вспомнить о ней. Она же отправилась в путь по морю чудесным образом».
பணியாளர் கூறினார்: “நாம் பாறையின்பால் ஒதுங்கியபோது நடந்தது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக நான் மீனைக்குறித்து உங்களிடம் நினைவுகூர மறந்துவிட்டேன். நான் நினைவுகூர்வதைவிட்டும் ஷைத்தான்தான் என்னை மறக்கடிக்கச் செய்தான். அந்த மீன் உயிர்பெற்று கடலில் ஆச்சரியமான முறையில் தன் வழியை அமைத்துக் கொண்டது.”
18:64Страница 301
قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبۡغِۚ فَٱرۡتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصٗا ٦٤
Муса (Моисей) сказал: «Это - то, чего мы желали!» - и они вернулись назад по своим следам.
மூஸா தம் பணியாளரிடம் கூறினார்: “நாம் அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அதுதான் அந்த நல்லடியார் வசிக்கும் இடத்தின் அடையாளம். அவர்கள் வழிதவறிவிடாமல் இருக்க தங்களின் கால் பாத அடையாளங்களை பின்பற்றி திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்த பாறையை அடைந்தார்கள். அங்கிருந்து மீனின் நுழைவாயிலை நோக்கிச் சென்றார்கள்.
18:65Страница 301
فَوَجَدَا عَبۡدٗا مِّنۡ عِبَادِنَآ ءَاتَيۡنَٰهُ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَعَلَّمۡنَٰهُ مِن لَّدُنَّا عِلۡمٗا ٦٥
Они встретили одного из Наших рабов, которого Мы одарили милостью от Нас и обучили из того, что Нам известно.
மீனை இழந்த இடத்தை அவர்கள் அடைந்த போது அந்த இடத்தில் நம்முடைய நல்லடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். (அவருடைய பெயர் களிர் ஆகும்) நாம் அவருக்கு நம் புறத்திலிருந்து அருளை வழங்கி மக்களில் யாரும் அறியாத ஞானத்தை கற்றுக் கொடுத்திருந்தோம். அதனையே இச்சம்பவம் உள்ளடக்கியுள்ளது.
18:66Страница 301
قَالَ لَهُۥ مُوسَىٰ هَلۡ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدٗا ٦٦
Муса (Моисей) сказал ему (Хадиру): «Могу ли я последовать за тобой, чтобы ты научил меня о прямом пути тому, чему ты обучен?».
மூஸா மிகவும் பணிவாக, மென்மையாக அவரிடம் கூறினார்: “அல்லாஹ் உமக்குக் கற்றுக்கொடுத்த சத்தியத்திற்கு வழிகாட்டும் அறிவை நீர் எனக்குக் கற்றுத்தரும்பொருட்டு நான் உம்மைப் பின்தொடரலாமா?”
18:67Страница 301
قَالَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ٦٧
Он сказал: «У тебя не хватит терпения находиться рядом со мной.
அதற்கு களிர் கூறினார்: “என்னிடம் நீர் காணும் ஞானத்தைப் பார்த்துக்கொண்டு உம்மால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயமாக அது உம்முடன் இருக்கும் ஞானத்தோடு ஒத்துப்போவதில்லை.
18:68Страница 301
وَكَيۡفَ تَصۡبِرُ عَلَىٰ مَا لَمۡ تُحِطۡ بِهِۦ خُبۡرٗا ٦٨
Как ты сможешь терпеливо относиться к тому, что ты не объемлешь знанием?».
உமக்குச் சரியென்று புரியாத செயல்களைப் பார்த்துக்கொண்டு உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்? ஏனெனில் நிச்சயமாக அவற்றில் நீர் உமக்கு வழங்கப்பட்ட அறிவின்படியே தீர்ப்பளிப்பீர்.
18:69Страница 301
قَالَ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ صَابِرٗا وَلَآ أَعۡصِي لَكَ أَمۡرٗا ٦٩
Муса (Моисей) сказал: «Если Аллах пожелает, то ты увидишь, что я терпелив, и я не ослушаюсь твоего веления».
மூஸா கூறினார்: “அல்லாஹ் நாடினால் நான் காணும் உமது செயல்களில் நான் பொறுமையாளராகவும் உமக்குக் கட்டுப்பட்டு உறுதியாக இருப்பதை நீர் காண்பீர். நீர் கட்டளையிட்ட எந்தவொரு ஏவலுக்கும் உமக்கு நான் மாறு செய்யமாட்டேன்.”
18:70Страница 301
قَالَ فَإِنِ ٱتَّبَعۡتَنِي فَلَا تَسۡـَٔلۡنِي عَن شَيۡءٍ حَتَّىٰٓ أُحۡدِثَ لَكَ مِنۡهُ ذِكۡرٗا ٧٠
Он сказал: «Если ты последуешь за мной, то не спрашивай меня ни о чем, пока я сам не поведаю тебе об этом».
களிர் மூஸாவிடம் கூறினார்: “நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாக இருந்தால் நீர் காணும் என் செயல்களைக்குறித்து நானாக உம்மிடம் தெளிவுபடுத்தும் வரை எதுவும் என்னிடம் கேட்கக்கூடாது.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии