Аль-МухтасарАль‑Кахф · 18:71–110

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Аль-Кахф 18:71–110

18:71Страница 301

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا رَكِبَا فِي ٱلسَّفِينَةِ خَرَقَهَاۖ قَالَ أَخَرَقۡتَهَا لِتُغۡرِقَ أَهۡلَهَا لَقَدۡ جِئۡتَ شَيۡـًٔا إِمۡرٗا ٧١

Они вдвоем двинулись в путь. Когда же они сели на корабль, он сделал в нем пробоину. Он сказал: «Ты сделал пробоину, чтобы потопить людей на нем? Ты совершил тяжкий поступок!».

அவர்கள் இருவரும் அதில் ஒன்றுபட்டபோது கடற்கரைக்குச் சென்று ஒரு கப்பலைக் கண்டார்கள். களிருக்கு இருந்த மரியாதையால் இருவரும் எந்தக் கூலியும் அளிக்காமல் அதில் ஏறிக் கொண்டார்கள். அப்போது களிர் கப்பலின் ஒரு பலகையை கழற்றி அதில் துளையிட்டுவிட்டார். மூஸா அவரிடம் கூறினார்: “நம்மிடம் எந்தக் கூலியும் வாங்காமல் நம்மை ஏற்றிய இவர்களின் கப்பலை அதிலுள்ளவர்களை மூழ்கடித்துவிட துளையிடுகின்றீரா? நீர் ஆச்சரியமான காரியத்தை செய்துவிட்டீர்.”

18:72Страница 301

قَالَ أَلَمۡ أَقُلۡ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ٧٢

Он сказал: «Разве я не говорил, что ты не сможешь сохранять терпение рядом со мной?».

களிர் கூறினார்: “நான்தான் கூறினேனே, என்னிடம் நீர் காணுவதில் நிச்சயமாக உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என்று.”

18:73Страница 301

قَالَ لَا تُؤَاخِذۡنِي بِمَا نَسِيتُ وَلَا تُرۡهِقۡنِي مِنۡ أَمۡرِي عُسۡرٗا ٧٣

Муса (Моисей) сказал: «Не наказывай меня за то, что я позабыл, и не возлагай на меня тяжелое бремя».

மூஸா களிரிடம் கூறினார்: “நான் உமக்கு அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டதற்காக என்னை குற்றம் பிடிக்காதீர். உமது சகவாசத்தைச் சிரமப்படுத்தி எனக்கு நெருக்கடி ஏற்படுத்தாதீர்.”

18:74Страница 301

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَٰمٗا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلۡتَ نَفۡسٗا زَكِيَّةَۢ بِغَيۡرِ نَفۡسٖ لَّقَدۡ جِئۡتَ شَيۡـٔٗا نُّكۡرٗا ٧٤

Они продолжили путь, пока не встретили мальчика, и он убил его. Он сказал: «Неужели ты убил невинного человека, который никого не убивал?! Ты совершил предосудительный поступок!».

இருவரும் கப்பலில் இருந்து இறங்கி கடற்கரையோரமாக நடந்துசென்றார்கள். அப்போது பருவமடையாத ஒரு சிறுவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். களிர் அவனைப் பிடித்துக் கொன்றுவிட்டார். மூஸா அவரிடம் கூறினார்: “ஒரு பாவமும் அறியாத பருவமடையாத தூய்மையான சிறுவனைக் கொன்று விட்டீரே? நீர் தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்.

18:75Страница 302

۞ قَالَ أَلَمۡ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسۡتَطِيعَ مَعِيَ صَبۡرٗا ٧٥

Он сказал: «Разве я не говорил тебе, что ты не сможешь сохранять терпение рядом со мной?».

களிர் மூஸாவிடம் கூறினார்: “நான் செய்யும் செயல்களைப் பார்த்துக் கொண்டு நிச்சயமாக உம்மால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் உம்மிடம் கூறியே உள்ளேன்”

18:76Страница 302

قَالَ إِن سَأَلۡتُكَ عَن شَيۡءِۭ بَعۡدَهَا فَلَا تُصَٰحِبۡنِيۖ قَدۡ بَلَغۡتَ مِن لَّدُنِّي عُذۡرٗا ٧٦

Муса (Моисей) сказал: «Если я спрошу тебя о чем-либо после этого, то не продолжай путь вместе со мной. Твой поступок по отношению ко мне уже оправдан».

மூஸா கூறினார்: “இதற்குப் பிறகும் நான் உம்மிடம் ஏதேனும் விஷயத்தைக்குறித்துக் கேட்டால் என்னைப் பிரிந்துவிடவும். ஏனெனில் நான் உமது கட்டளைக்கு இரு முறைகள் மாற்றம் செய்துள்ளதனால் நீர் என்னுடனான தொடர்பை விட்டுவிடுவதற்கு தக்க காரணத்தைப் பெற்றுள்ளீர்.”

18:77Страница 302

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهۡلَ قَرۡيَةٍ ٱسۡتَطۡعَمَآ أَهۡلَهَا فَأَبَوۡاْ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارٗا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥۖ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَيۡهِ أَجۡرٗا ٧٧

Они продолжили путь, пока не пришли к жителям одного селения. Они попросили его жителей накормить их, но те отказались принять их гостями. Они увидели там стену, которая хотела обрушиться, и он выпрямил ее. Муса (Моисей) сказал: «При желании ты получил бы за это вознаграждение».

அவர்களிருவரும் நடந்துசென்றனர். ஓர் ஊரை அடைந்ததும் அவ்வூர்வாசிகளிடம் உணவு கேட்டார்கள். அவர்கள், இருவருக்கும் உணவளித்து, விருந்தினர் உரிமையை நிறைவேற்ற மறுத்துவிட்டனர். அங்கு இடிந்துவிழுவதற்குத் தயாராக இருந்த ஒரு சரிந்த சுவரைக் கண்டார்கள். களிர் அந்த சுவரைச் சரிசெய்து நிறுத்தினார். அப்போது மூஸா, “அவர்கள் நமக்கு விருந்தளிக்க மறுத்த பிறகு, நமது உணவுத் தேவைக்காக, அதனை சீர்செய்வதற்கு ஏதாவது கூலியைப் பெற நீர் விரும்பியிருந்தால் அதனை நீர் எடுத்திருக்கலாமே!” என்றார்.

18:78Страница 302

قَالَ هَٰذَا فِرَاقُ بَيۡنِي وَبَيۡنِكَۚ سَأُنَبِّئُكَ بِتَأۡوِيلِ مَا لَمۡ تَسۡتَطِع عَّلَيۡهِ صَبۡرًا ٧٨

Он сказал: «Здесь я с тобой расстанусь, но я поведаю тебе толкование того, к чему ты не смог отнестись с терпением.

அதற்கு களிர் மூஸாவிடம் கூறினார்: “இச்சுவரை சரிசெய்ததற்கு நான் கூலி பெறாததற்கு நீர் செய்த இந்த ஆட்சேபனையே உமக்கும் எனக்குமுள்ள பிரிவாகும். உம்மால் பார்த்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள முடியாத என் செயல்களுக்கான விளக்கத்தை நான் உமக்கு தற்போது வழங்குகின்றேன்.

18:79Страница 302

أَمَّا ٱلسَّفِينَةُ فَكَانَتۡ لِمَسَٰكِينَ يَعۡمَلُونَ فِي ٱلۡبَحۡرِ فَأَرَدتُّ أَنۡ أَعِيبَهَا وَكَانَ وَرَآءَهُم مَّلِكٞ يَأۡخُذُ كُلَّ سَفِينَةٍ غَصۡبٗا ٧٩

Что касается корабля, то он принадлежал беднякам, которые трудились в море. Я захотел повредить его, потому что перед ними находился царь, который силой отнимал все неповрежденные корабли.

நான் துளையிட்டுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த கப்பலின் விவகாரம் என்னவென்றால், அது கடலில் வேலைசெய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது. அவர்களால் அதனை பாதுகாக்க முடியாது. நான் அதிலே ஏதேனும் செய்து அதனைக் குறையுடைய கப்பலாக ஆக்க நாடினேன். ஏனெனில் அவர்களுக்கு முன்னால் குறையுடைய கப்பல்களை விட்டுவிட்டு நல்ல கப்பல்களை அவர்களிடம் இருந்து நிர்பந்தமாக அபகரித்துக் கொள்ளும் ஓர் அரசன் உள்ளான்.

18:80Страница 302

وَأَمَّا ٱلۡغُلَٰمُ فَكَانَ أَبَوَاهُ مُؤۡمِنَيۡنِ فَخَشِينَآ أَن يُرۡهِقَهُمَا طُغۡيَٰنٗا وَكُفۡرٗا ٨٠

Что касается мальчика, то его родители являются верующими, и мы опасались, что он будет притеснять их по причине своего беззакония и неверия.

நான் கொன்றுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த சிறுவனின் விவகாரம் என்னவென்றால், அந்த சிறுவனின் தாய், தந்தையர் நம்பிக்கையாளர்களாக இருந்தார்கள். அவனோ பின்னாளில் நிராகரிப்பாளனாக வருவான் என்பதை அல்லாஹ் அறிந்திருந்தான். அவர்களுக்கு அவன் மீதுள்ள அதீத அன்பின் காரணமாகவோ, தேவையின் காரணமாகவோ அவர்களை அவன் நிராகரிப்பில் தள்ளிவிடுவானோ என்று நாம் அஞ்சினோம்.

18:81Страница 302

فَأَرَدۡنَآ أَن يُبۡدِلَهُمَا رَبُّهُمَا خَيۡرٗا مِّنۡهُ زَكَوٰةٗ وَأَقۡرَبَ رُحۡمٗا ٨١

Мы захотели, чтобы Господь их даровал им вместо него того, кто будет чище и милосерднее к своим близким.

ஆகவே அல்லாஹ் அவர்களுக்கு அவனைவிட சிறந்த மார்க்க பக்தியுள்ள, நல்ல, பாவங்களிலிருந்து தூய்மையான, அவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடிய பிள்ளையை மாற்றாக அளிக்க வேண்டும் என்று நாம் நாடினோம்.

18:82Страница 302

وَأَمَّا ٱلۡجِدَارُ فَكَانَ لِغُلَٰمَيۡنِ يَتِيمَيۡنِ فِي ٱلۡمَدِينَةِ وَكَانَ تَحۡتَهُۥ كَنزٞ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَٰلِحٗا فَأَرَادَ رَبُّكَ أَن يَبۡلُغَآ أَشُدَّهُمَا وَيَسۡتَخۡرِجَا كَنزَهُمَا رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ وَمَا فَعَلۡتُهُۥ عَنۡ أَمۡرِيۚ ذَٰلِكَ تَأۡوِيلُ مَا لَمۡ تَسۡطِع عَّلَيۡهِ صَبۡرٗا ٨٢

Что же касается стены, то она принадлежит двум осиротевшим мальчикам из города. Под ней находится их клад. Их отец был праведником, и твой Господь пожелал, чтобы они достигли зрелого возраста и извлекли свой клад по милости твоего Господа. Я не поступал по своему усмотрению. Вот толкование того, к чему ты не смог отнестись с терпением».

நான் சரிசெய்ததற்காக ஆட்சேபனை செய்த சுவரின் விவகாரம் என்னவென்றால், அது நாம் சென்ற ஊரில் தந்தையை இழந்த இரு அநாதைச் சிறுவர்களுக்கு உரியது. அவர்களின் தந்தை அந்த சுவருக்குக் கீழே அவர்களுக்காக செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளார். அவர்களின் தந்தை நல்லவராக இருந்தார். -மூஸாவே!- அவர்கள் பக்குவ வயதை அடைந்து பெரியவர்களானதும் புதைக்கப்பட்ட செல்வத்தை அதற்குக் கீழிருந்து எடுக்க வேண்டும் என்று உம் இறைவன் நாடினான். தற்போது அந்த சுவர் விழுந்துவிட்டால் அந்த செல்வம் வெளிப்பட்டு வீணாகிவிடும். அவர்கள் மீதுள்ள கருணையால் உம் இறைவன் செய்த ஏற்பாடே இதுவாகும். நான் சுயமாக எதையும் செய்யவில்லை. இதுதான் உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களுக்கான விளக்கமாகும்.

18:83Страница 302

وَيَسۡـَٔلُونَكَ عَن ذِي ٱلۡقَرۡنَيۡنِۖ قُلۡ سَأَتۡلُواْ عَلَيۡكُم مِّنۡهُ ذِكۡرًا ٨٣

Они спрашивают тебя о Зуль Карнейне. Скажи: «Я прочту вам поучительный рассказ о нем».

தூதரே!- உம்மை சோதிக்கும்பொருட்டு இணைவைப்பாளர்களும், யூதர்களும் துல்கர்னைனைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவருடைய வரலாற்றில் நீங்கள் படிப்பினை பெறத்தக்க ஒரு பகுதியை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

18:84Страница 303

إِنَّا مَكَّنَّا لَهُۥ فِي ٱلۡأَرۡضِ وَءَاتَيۡنَٰهُ مِن كُلِّ شَيۡءٖ سَبَبٗا ٨٤

Воистину, Мы наделили его властью на земле и одарили его всякими возможностями.

நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் அதிகாரம் வழங்கினோம். அவர் தம் நோக்கத்தை அடைவதற்கான அனைத்து வழிகளையும் அவருக்கு வழங்கினோம்.

18:85Страница 303

فَأَتۡبَعَ سَبَبًا ٨٥

Он отправился в путь.

நாம் அவருக்கு வழங்கிய சாதனங்களையும் வழிமுறைகளையும் பெற்றுக் கொண்டு தம் நோக்கத்தை அடைவதற்காக மேற்கு நோக்கிச் சென்றார்.

18:86Страница 303

حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَغۡرِبَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَغۡرُبُ فِي عَيۡنٍ حَمِئَةٖ وَوَجَدَ عِندَهَا قَوۡمٗاۖ قُلۡنَا يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِمَّآ أَن تُعَذِّبَ وَإِمَّآ أَن تَتَّخِذَ فِيهِمۡ حُسۡنٗا ٨٦

Когда он прибыл туда, где закатывается солнце, он обнаружил, что оно закатывается в мутный (или горячий) источник. Около него он нашел народ. Мы сказали: «О Зуль Карнейн! Либо ты накажешь их, либо сделаешь им добро».

அவர் பூமியில் சென்றார். கண் பார்வைக்கு சூரியன் மறையும் திசையில் பூமியின் இறுதிப் பகுதியை அடைந்தபோது களிமண்ணாலான சூடான ஊற்றில் சூரியன் மறைவதைப்போல் கண்டார். சூரியன் மறையும் திசையில் நிராகரிக்கும் ஒரு சமூகத்தைக் கண்டார். நாம் அவருக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி கூறினோம்: “துல்கர்னைனே! நீர் விரும்பினால் கொலை செய்தோ வேறு வழியிலோ இவர்களைத் தண்டிக்கலாம். அல்லது விரும்பினால் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளலாம்.”

18:87Страница 303

قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوۡفَ نُعَذِّبُهُۥ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِۦ فَيُعَذِّبُهُۥ عَذَابٗا نُّكۡرٗا ٨٧

Он сказал: «Того, кто поступает несправедливо, мы накажем, а потом его возвратят к его Господу, и Он подвергнет его тяжким мучениям.

துல்கர்னைன் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அல்லாஹ்வை வணங்குமாறு நாம் அவரை அழைத்த பின்பும் அதில் உறுதியாக நிலைத்திருப்பவர்களை நாம் இவ்வுலகில் கொலைசெய்து தண்டிப்போம். பின்னர் அவர்கள் மறுமை நாளில் தம் இறைவனிடம் வருவார்கள். அவன் அவர்களை மிகவும் மோசமாக தண்டிப்பான்.

18:88Страница 303

وَأَمَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَلَهُۥ جَزَآءً ٱلۡحُسۡنَىٰۖ وَسَنَقُولُ لَهُۥ مِنۡ أَمۡرِنَا يُسۡرٗا ٨٨

Тому же, кто уверовал и поступает праведно, будет наилучшее воздаяние, и мы скажем ему наши легкие повеления».

அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு சுவனம் இருக்கின்றது. இது அவருடைய நம்பிக்கைக்கும் நற்செயலுக்கும் இறைவன் வழங்கும் கூலியாகும். நாம் நம் கட்டளையில் மென்மையான, இலகுவானதையே அவருக்குக் கூறுவோம்.

18:89Страница 303

ثُمَّ أَتۡبَعَ سَبَبًا ٨٩

Потом он отправился в путь дальше.

பின்னர் அவர் வேறொரு வழியைப் பின்பற்றி சூரியன் உதிக்கும் திசையை நோக்கிச் சென்றார்.

18:90Страница 303

حَتَّىٰٓ إِذَا بَلَغَ مَطۡلِعَ ٱلشَّمۡسِ وَجَدَهَا تَطۡلُعُ عَلَىٰ قَوۡمٖ لَّمۡ نَجۡعَل لَّهُم مِّن دُونِهَا سِتۡرٗا ٩٠

Когда он прибыл туда, где восходит солнце, он обнаружил, что оно восходит над людьми, которым Мы не установили от него никакого прикрытия.

அவர் சூரியன் உதிக்கும் இடம் கண்ணுக்கு தெரியும் வரை சென்றுகொண்டேயிருந்தார். அங்கு சூரியன் சில சமூகங்களின் மீது உதித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். நாம் சூரியனிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக வீடுகளையோ மர நிழல்களையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.

18:91Страница 303

كَذَٰلِكَۖ وَقَدۡ أَحَطۡنَا بِمَا لَدَيۡهِ خُبۡرٗا ٩١

Вот так! Мы объяли знанием все, что происходило с ним.

அவ்வாறுதான் துல்கர்னைனின் விடயமாகும். அவரிடம் இருக்கும் பலம், அதிகாரம் ஆகியவற்றைக் குறித்த விளக்கமான தகவல்களையும் நாம் முழுமையாக அறிந்துள்ளோம்.

18:92Страница 303

ثُمَّ أَتۡبَعَ سَبَبًا ٩٢

Потом он отправился в путь дальше.

பின்னர், முன்னர் சென்ற இரு பாதைகளையும் தவிர்த்து கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட வேறொரு பாதையில் சென்றார்.

18:93Страница 303

حَتَّىٰٓ إِذَا بَلَغَ بَيۡنَ ٱلسَّدَّيۡنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوۡمٗا لَّا يَكَادُونَ يَفۡقَهُونَ قَوۡلٗا ٩٣

Когда он достиг двух горных преград, он обнаружил перед ними людей, которые почти не понимали речи.

இரு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியை அடைந்தார். அங்கு மற்றவர்களின் பேச்சை புரிந்துகொள்ளாத ஒரு சமூகத்தைக் கண்டார்.

18:94Страница 303

قَالُواْ يَٰذَا ٱلۡقَرۡنَيۡنِ إِنَّ يَأۡجُوجَ وَمَأۡجُوجَ مُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ فَهَلۡ نَجۡعَلُ لَكَ خَرۡجًا عَلَىٰٓ أَن تَجۡعَلَ بَيۡنَنَا وَبَيۡنَهُمۡ سَدّٗا ٩٤

Они сказали: «О Зуль Карнейн! Йаджудж и Маджудж (Гог и Магог) распространяют на земле нечестие. Быть может, мы уплатим тебе дань, чтобы ты установил между нами и ними преграду?».

அவர்கள் கூறினார்கள்: “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜ், மஃஜுஜ் என்னும் கூட்டத்தினர் (இவர்கள் ஆதமுடைய சந்ததியில் தோன்றிய மிகப் பெரும் இரு கூட்டத்தினர்) கொலை செய்தல் மற்றும் பல்வேறு வகையில் பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களாக இருக்கின்றார்கள். உம்மால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் உமக்கு ஒரு தொகையை வழங்கட்டுமா?

18:95Страница 303

قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيۡرٞ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجۡعَلۡ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُمۡ رَدۡمًا ٩٥

Он сказал: «То, чем наделил меня мой Господь, лучше этого. Помогите мне силой, и я установлю между вами и ними преграду.

துல்கர்னைன் கூறினார்: “என் இறைவன் எனக்கு அளித்த ஆட்சியும், அதிகாரமும் நீங்கள் எனக்கு வழங்கும் செல்வத்தைவிட சிறந்தது. மனிதர்களையும் கருவிகளையும் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை ஏற்படுத்துகிறேன்.

18:96Страница 303

ءَاتُونِي زُبَرَ ٱلۡحَدِيدِۖ حَتَّىٰٓ إِذَا سَاوَىٰ بَيۡنَ ٱلصَّدَفَيۡنِ قَالَ ٱنفُخُواْۖ حَتَّىٰٓ إِذَا جَعَلَهُۥ نَارٗا قَالَ ءَاتُونِيٓ أُفۡرِغۡ عَلَيۡهِ قِطۡرٗا ٩٦

Подайте мне куски железа». Заполнив пространство между двумя склонами, он сказал: «Раздувайте!». Когда они стали красными, словно огонь, он сказал: «Принесите мне расплавленную медь, чтобы я вылил ее на него».

இரும்புப் பாளங்களைக் கொண்டுவாருங்கள். அவர்கள் அவற்றைக் கொண்டுவந்தார்கள். அவர் அவற்றை இரு மலைகளுக்கிடையே வைத்து கட்டிக்கொண்டேயிருந்தார். இரு மலைகளுக்கு நேராக அக்கட்டிடம் வந்தபோது பணியாளர்களிடம் கூறினார்: “இந்தப் இரும்புப் பாளங்களில் நெருப்பை மூட்டுங்கள். இரும்பு சிவப்பு நிறத்தை அடைந்ததும் “செம்பைக்கொண்டு வாருங்கள். அதனை இதன்மீது ஊற்றுகிறேன்” என்றார்.

18:97Страница 303

فَمَا ٱسۡطَٰعُوٓاْ أَن يَظۡهَرُوهُ وَمَا ٱسۡتَطَٰعُواْ لَهُۥ نَقۡبٗا ٩٧

Они (племена Йаджудж и Маджудж) не смогли забраться на нее и не смогли пробить в ней дыру.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரால் அதன் உயரத்தின் காரணமாக அதன்மீது ஏறவும் முடியவில்லை. அதன் உறுதியின் காரணமாக கீழிருந்து அதனைத் துளையிடவும் முடியவில்லை.

18:98Страница 304

قَالَ هَٰذَا رَحۡمَةٞ مِّن رَّبِّيۖ فَإِذَا جَآءَ وَعۡدُ رَبِّي جَعَلَهُۥ دَكَّآءَۖ وَكَانَ وَعۡدُ رَبِّي حَقّٗا ٩٨

Он сказал: «Это - милость от моего Господа! Когда же исполнится обещание моего Господа, Он сровняет ее с землей. Обещание моего Господа является истиной».

துல்கர்னைன் கூறினார்: “இந்தத் தடுப்பு என் இறைவனின் கருணையாகும். இது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கும் அவர்கள் பூமியில் குழப்பம் விழைவிப்பதற்கும் மத்தியில் தடையாக இருக்கின்றது. அதிலிருந்து அவர்களை தடுக்கிறது. மறுமை நாளுக்கு முன்னர் அவர்கள் வெளியாவதற்கு என் இறைவன் குறித்த நேரம் வந்துவிட்டால் அது பூமியோடு தரைமட்டமாகிவிடும். (அந்த மதில்) தரைமட்டமாகி யஃஜுஜ், மஃஜுஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். இதில் எந்த மாறுபாடும் இல்லை.

18:99Страница 304

۞ وَتَرَكۡنَا بَعۡضَهُمۡ يَوۡمَئِذٖ يَمُوجُ فِي بَعۡضٖۖ وَنُفِخَ فِي ٱلصُّورِ فَجَمَعۡنَٰهُمۡ جَمۡعٗا ٩٩

В тот день Мы позволим им (племенам Йаджудж и Маджудж) хлынуть друг на друга. И затрубят в Рог, и Мы соберем их (творения) всех вместе.

இறுதிக் காலத்தில் சில படைப்பினங்களை இன்னும் சிலருடன் கலந்ததாக நாம் ஆக்கிவிடுவோம். சூர் ஊதப்படும். விசாரிப்பதற்காகவும், கூலி வழங்கவும் நாம் படைப்பினங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.

18:100Страница 304

وَعَرَضۡنَا جَهَنَّمَ يَوۡمَئِذٖ لِّلۡكَٰفِرِينَ عَرۡضًا ١٠٠

В тот день Мы ясно покажем Геенну неверующим,

நிராகரிப்பாளர்கள் நரகை களங்கம் இல்லாமல் நேரடியாகப் காண்பதற்காக நரகத்தை அவர்களுக்கு நாம் தெளிவாக வெளிப்படுத்துவோம்.

18:101Страница 304

ٱلَّذِينَ كَانَتۡ أَعۡيُنُهُمۡ فِي غِطَآءٍ عَن ذِكۡرِي وَكَانُواْ لَا يَسۡتَطِيعُونَ سَمۡعًا ١٠١

на глазах которых было покрывало, отделяющее их от поминания Меня, и которые не могли слышать.

உலகில் அல்லாஹ்வின் நினைவை விட்டும் குருடர்களாக இருந்த நிராகரிப்பாளர்களுக்காக அதனை வெளிப்படுத்துவோம். அதனை விட்டும் தடுக்கும் திரை அவர்களது கண்களில் காணப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்க சக்திபெற்றவர்களாக இருக்கவில்லை.

18:102Страница 304

أَفَحَسِبَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن يَتَّخِذُواْ عِبَادِي مِن دُونِيٓ أَوۡلِيَآءَۚ إِنَّآ أَعۡتَدۡنَا جَهَنَّمَ لِلۡكَٰفِرِينَ نُزُلٗا ١٠٢

Неужели неверующие полагали, что они сделают Моих рабов своими покровителями и помощниками вместо Меня? Воистину, Мы приготовили Геенну обителью для неверующих.

அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் என்னைவிடுத்து, என் அடியார்களான தூதர்களையும், வானவர்களையும், ஷைத்தான்களையும் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கிக்கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? நாம் நிராகரிப்பாளர்களுக்காக நரகத்தை தங்குமிடமாக தயார்படுத்தியுள்ளோம்.

18:103Страница 304

قُلۡ هَلۡ نُنَبِّئُكُم بِٱلۡأَخۡسَرِينَ أَعۡمَٰلًا ١٠٣

Скажи: «Не сообщить ли вам о тех, чьи деяния принесут наибольший убыток?

தூதரே!- நீர் கேட்பீராக: -மக்களே- “தனது செயல்களினால் மக்களில் அதிக இழப்பிற்குரியவர் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”

18:104Страница 304

ٱلَّذِينَ ضَلَّ سَعۡيُهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ يَحۡسَبُونَ أَنَّهُمۡ يُحۡسِنُونَ صُنۡعًا ١٠٤

О тех, чьи усилия заблудились в мирской жизни, хотя они думали, что поступают хорошо?

அவர்கள் மறுமை நாளில் இவ்வுலகில் செய்த தங்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுவதைக் காண்பார்கள். தமது நடவடிக்கையில் அவர்கள் நல்லவர்களே எனவும் தமது செயல்களினால் பயன்பெறலாம் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையோ அதற்கு மாற்றமாகும்.

18:105Страница 304

أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَلِقَآئِهِۦ فَحَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فَلَا نُقِيمُ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَزۡنٗا ١٠٥

Это - те, кто не уверовал в знамения своего Господа и во встречу с Ним. Тщетны будут их деяния, и в День воскресения Мы не отпустим им никакого веса (не придадим им никакого значения; или не поместим на чашу их добрых деяний ни одного праведного поступка)».

அவர்கள்தாம் தங்களின் இறைவன் ஒருவனே என்று அறிவிக்கக்கூடிய அவனுடைய சான்றுகளையும் மறுமையில் அவனை சந்திப்பதையும் நிராகரித்தார்கள். அவர்கள் அவற்றை நிராகரித்ததனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது.

18:106Страница 304

ذَٰلِكَ جَزَآؤُهُمۡ جَهَنَّمُ بِمَا كَفَرُواْ وَٱتَّخَذُوٓاْ ءَايَٰتِي وَرُسُلِي هُزُوًا ١٠٦

Геенна будет им воздаянием за то, что они не уверовали и насмехались над Моими знамениями и Моими посланниками.

அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நான் இறக்கிய வசனங்களையும் எனது தூதர்களையும் பரிகாசமாக எடுத்துக் கொண்டதனால் அவர்களுக்காக தயார்செய்யப்பட்டுள்ள கூலி நரகமே.

18:107Страница 304

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَانَتۡ لَهُمۡ جَنَّٰتُ ٱلۡفِرۡدَوۡسِ نُزُلًا ١٠٧

Воистину, обителью тех, которые уверовали и совершали праведные деяния, будут сады Фирдауса.

நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு அவர்களைக் கௌரவிக்கும் விதமாக உயர்ந்த சுவனங்களை தங்குமிடமாகப் பெறுவார்கள்.

18:108Страница 304

خَٰلِدِينَ فِيهَا لَا يَبۡغُونَ عَنۡهَا حِوَلٗا ١٠٨

Они пребудут в них вечно и не пожелают для себя перемен.

அவர்கள் என்றென்றும் அங்கு தங்கியிருப்பார்கள். அவர்கள் அங்கிருந்து மாறுவதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் நிச்சயமாக அதற்கு ஈடான கூலியே கிடையாது.

18:109Страница 304

قُل لَّوۡ كَانَ ٱلۡبَحۡرُ مِدَادٗا لِّكَلِمَٰتِ رَبِّي لَنَفِدَ ٱلۡبَحۡرُ قَبۡلَ أَن تَنفَدَ كَلِمَٰتُ رَبِّي وَلَوۡ جِئۡنَا بِمِثۡلِهِۦ مَدَدٗا ١٠٩

Скажи: «Если бы море стало чернилами для слов моего Господа, то море иссякло бы до того, как иссякли бы Слова моего Господа, даже если бы Мы принесли в помощь ему такое же море».

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவனின் வார்த்தைகள் ஏராளமானவை. அவனுடைய வார்த்தைகளை எழுதுவதற்கு கடலிலுள்ள நீர் அனைத்தும் மையாக இருந்தாலும் அவனுடைய வார்த்தைகள் முடிவடைவதற்கு முன்னரே கடலில் நீர் தீர்ந்துவிடும், அதனுடன் வேறு கடல்களையும் சேர்த்துக் கொண்டால் அவையும் தீரந்துவிடும்.”

18:110Страница 304

قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا ١١٠

Скажи: «Воистину, я - такой же человек, как и вы. Мне внушено откровение о том, что ваш Бог - Бог Единственный. Тот, кто надеется на встречу со своим Господом, пусть совершает праведные деяния и никому не поклоняется наряду со своим Господом».

தூதரே!- நீர் கூறுவீராக: “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக “உண்மையாக வணக்கத்திற்குரிய உங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை” என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது. எனவே தம் இறைவனின் சந்திப்பைக் குறித்து அஞ்சுபவர் அவனுடைய மார்க்கத்தின்படி அமல் புரியட்டும், அதிலே தனது இறைவனின் மீது உளத்தூய்மையோடு இருக்கட்டும். வணக்க வழிபாட்டில் தன் இறைவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிட வேண்டாம்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English