Аль-Мухтасар · Тафсир · на тамильском
Марьям 19:50–98
19:50Страница 308
وَوَهَبۡنَا لَهُم مِّن رَّحۡمَتِنَا وَجَعَلۡنَا لَهُمۡ لِسَانَ صِدۡقٍ عَلِيّٗا ٥٠
Мы одарили их из Нашей милости и оставили о них правдивую молву.
நம் அருளால் அவர்களுக்கு தூதுத்துவத்துடன் ஏராளமான நன்மைகளையும் வழங்கினோம். அடியார்களின் நாவுகளில் அவர்களைப் பற்றிய தொடரான நற்புகழையும் ஏற்படுத்தினோம்.
19:51Страница 308
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مُوسَىٰٓۚ إِنَّهُۥ كَانَ مُخۡلَصٗا وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا ٥١
Помяни в Писании Мусу (Моисея). Воистину, он был избранником (или искренним) и был посланником и пророком.
தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மூஸாவின் செய்தியை குறித்து நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
19:52Страница 309
وَنَٰدَيۡنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنِ وَقَرَّبۡنَٰهُ نَجِيّٗا ٥٢
Мы подали ему глас с правой стороны горы и подозвали его поближе тихим голосом.
மூஸா (அலை) அவர்கள் இருந்த இடத்திற்கு வலது புறத்தில் இருந்த மலைப் பகுதியிலிருந்து நாம் அவரை அழைத்தோம். அவருடன் இரகசியமாகப் பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம். அங்கு அல்லாஹ் தன் பேச்சை மூசாவுக்கு செவியுறச் செய்தான்.
19:53Страница 309
وَوَهَبۡنَا لَهُۥ مِن رَّحۡمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيّٗا ٥٣
По милости Своей Мы сделали для него его брата Харуна (Аарона) пророком.
நாம் -அவர் மீது கொண்ட நம் கருணையினாலும் அருளினாலும்-, அவர் தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டதற்கேற்ப, அவரது சகோதரர் ஹாரூனையும் நபியாக ஆக்கினோம்.
19:54Страница 309
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِسۡمَٰعِيلَۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلۡوَعۡدِ وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا ٥٤
Помяни в Писании Исмаила (Измаила). Воистину, он был правдивым в обещаниях и был посланником и пророком.
தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இஸ்மாயீலின் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றினார். அவர் தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
19:55Страница 309
وَكَانَ يَأۡمُرُ أَهۡلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرۡضِيّٗا ٥٥
Он велел своей семье совершать намаз и выплачивать закят, а его Господь был доволен им.
அவர் தம் குடும்பத்தினரை தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் ஏவக்கூடியவராக இருந்தார். அவர் தம் இறைவனிடத்தில் பிரியத்திற்குரியவராக இருந்தார்.
19:56Страница 309
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِدۡرِيسَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيّٗا ٥٦
Помяни в Писании Идриса. Воистину, он был правдивейшим человеком и пророком.
தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இத்ரீஸ் அவர்களின் தகவலையும் நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் உண்மையாளராகவும், தம் இறைவனின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும் இருந்தார். அவர் அல்லாஹ்வின் நபிமார்களில் ஒருவராகவும் இருந்தார்.
நாம் அவருக்கு தூதுத்துவத்தை வழங்கி அவரது புகழை உயர்த்தினோம். எனவே அவர் உயர்ந்த அந்தஸ்துடையவராக இருந்தார்.
19:58Страница 309
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنۡ حَمَلۡنَا مَعَ نُوحٖ وَمِن ذُرِّيَّةِ إِبۡرَٰهِيمَ وَإِسۡرَٰٓءِيلَ وَمِمَّنۡ هَدَيۡنَا وَٱجۡتَبَيۡنَآۚ إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُ ٱلرَّحۡمَٰنِ خَرُّواْۤ سُجَّدٗاۤ وَبُكِيّٗا۩ ٥٨
Это - те, кого облагодетельствовал Аллах, из числа пророков, которые были потомками Адама и тех, кого Мы спасли вместе с Нухом (Ноем), и потомками Ибрахима (Авраама) и Исраила (Израиля), и из числа тех, кого Мы наставили на прямой путь и избрали. Когда им читали аяты Милостивого, они падали ниц и рыдали.
ஸகரிய்யா முதல் இத்ரீஸ் வரை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்கள் அனைவருக்கும் தூதுப்பணியை அளித்து அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிந்துள்ளான். அவர்கள் ஆதமின் சந்ததியிலும், நூஹுடன் நாம் கப்பலில் சுமந்து சென்றவர்களிலும், இப்ராஹீம் மற்றும் யஅகூபின் வழித்தோன்றல்களிலும், நாம் இஸ்லாத்தின்பால் நேர்வழி அளித்தவர்களிலும் உள்ளவர்களாவர். நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்து தூதர்களாக ஆக்கினோம். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதைச் செவியுற்றால் அவன் மீதுள்ள பயத்தால் அழுதவர்களாக, அவனுக்குச் சிரம்பணிபவர்களாக இருந்தார்கள்.
19:59Страница 309
۞ فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُواْ ٱلشَّهَوَٰتِۖ فَسَوۡفَ يَلۡقَوۡنَ غَيًّا ٥٩
После них пришли потомки, которые перестали совершать намаз и стали потакать желаниям. Все они понесут убыток (или будут испытывать тяготы; или понесут наказание за невежество; или встретят зло),
தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தூதர்களுக்குப் பிறகு தீய வழிகேடர்கள் வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். அதனை நிறைவேற்ற வேண்டிய முறைப்படி நிறைவேற்றவில்லை. விபச்சாரம் போன்ற தங்களின் மனம் ஆசை வைக்கும் பாவங்களில் ஈடுபட்டார்கள். விரைவில் அவர்கள் நரகத்தில் தீங்கினையும், ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள்.
19:60Страница 309
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ شَيۡـٔٗا ٦٠
кроме тех, которые раскаялись, уверовали и поступали праведно. Они войдут в Рай, и с ними нисколько не поступят несправедливо.
ஆயினும் தாம் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் மன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தவிர. இந்த பண்புகளைப் பெற்றவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர்கள் செய்த செயல்களின் நன்மைகள் எதுவும் குறைக்கப்படாது. அது குறைவாக இருந்தாலும் சரியே.
19:61Страница 309
جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدَ ٱلرَّحۡمَٰنُ عِبَادَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّهُۥ كَانَ وَعۡدُهُۥ مَأۡتِيّٗا ٦١
Это будут сады Эдема, обещанные Милостивым Его рабам, которые не видели их воочию. Воистину, обещание Его исполнится.
அளவிலாக் கருணையாளன் தன் நல்லடியார்களுக்கு அவர்களை நுழைவிப்பதாக, மறைவாக இருக்கும் போது வாக்களித்த, நிலையான, தங்குமிடமான சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள். அவர்கள் அவற்றைக் காணாமலே நம்பிக்கை கொண்டார்கள். சுவனத்தைத் தருவான் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி -மறைவாக இருந்தாலும்- அது சந்தேகம் இல்லாமல் நிறைவேறியே தீரும்.
19:62Страница 309
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا إِلَّا سَلَٰمٗاۖ وَلَهُمۡ رِزۡقُهُمۡ فِيهَا بُكۡرَةٗ وَعَشِيّٗا ٦٢
Они не услышат там празднословия, но услышат приветствие миром. Для них там приготовлен их удел утром и после полудня.
அவர்கள் அங்கு மோசமான பேச்சையோ, வீணான வார்த்தையையோ செவியுற மாட்டார்கள். மாறாக ஒருவருக்கொருவர் சலாம் கூறுவதையும் வானவர்கள் அவர்களுக்கு கூறும் சலாமையும்தான் செவியுறுவார்கள். அங்கு அவர்களுக்கு காலையிலும், மாலையிலும் அவர்கள் விரும்புகின்ற உணவு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
19:63Страница 309
تِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِي نُورِثُ مِنۡ عِبَادِنَا مَن كَانَ تَقِيّٗا ٦٣
Таков Рай, который Мы отдадим в наследство тем из Наших рабов, которые были богобоязненны.
இப்படிப்பட்ட தன்மைகளையுடைய சுவனத்தைத்தான் நம் கட்டளைகளைச் செயல்படுத்தி, நாம் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்திருக்கக்கூடிய நம் அடியார்களுக்கு நாம் சொந்தமாக்குகின்றோம்.
19:64Страница 309
وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمۡرِ رَبِّكَۖ لَهُۥ مَا بَيۡنَ أَيۡدِينَا وَمَا خَلۡفَنَا وَمَا بَيۡنَ ذَٰلِكَۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيّٗا ٦٤
Ангелы сказали: «Мы нисходим только по велению твоего Господа. Ему принадлежит то, что перед нами, и то, что позади нас, и то, что между ними. Господь твой не забывчив».
ஜிப்ரீலே!- முஹம்மதிடம் நீர் கூறும்: “நிச்சயமாக வானவர்கள் தாங்களாவே சுயமாக இறங்குவதில்லை. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இறங்குகிறார்கள். நாங்கள் முன்னோக்கும் மறுமையின் விஷயமும், பின்னால் விட்டுவிடும் உலகத்தின் விஷயமும், உலகம் மற்றும் மறுமைக்கு மத்தியில் இருப்பவையும் அல்லாஹ்வுக்கே உரியன. -தூதரே!- உம் இறைவன் எதையும் மறந்துவிடுபவன் அல்ல.
19:65Страница 310
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا ٦٥
Господь небес, земли и того, что между ними! Поклоняйся же Ему и будь стоек в поклонении Ему. Знаешь ли ты другого с таким именем (или подобного Ему)?
வானங்களையும், பூமியையும், அவையிரண்டிற்கு இடையிலுள்ளவற்றையும் படைத்தவனும், அவற்றின் அதிபதியும், அவற்றை நிர்வகிப்பவனுமாகிய அந்த இறைவனை மட்டுமே வணங்குவீராக. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனை வணங்குவதில் உறுதியாக நிலைத்திருப்பீராக. வணக்கத்திலே அவனுக்கு கூட்டு சேரக்கூடிய ஒப்பான, நிகரானவர் யாரும் இல்லை.
19:66Страница 310
وَيَقُولُ ٱلۡإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوۡفَ أُخۡرَجُ حَيًّا ٦٦
Человек говорит: «Неужели после того, как я умру, я выйду из могилы живым?».
மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளன் பரிகாசமாகக் கூறுகிறான்: “நான் இறந்துவிட்டால் என் கப்ரிலிருந்து மீண்டும் இரண்டாவது தடவையாக உயிர்கொடுத்து எழுப்பப்படுவேனா? நிச்சயமாக இது சாத்தியமற்றது.”
19:67Страница 310
أَوَلَا يَذۡكُرُ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡـٔٗا ٦٧
Разве человек не помнит, что еще раньше Мы создали его, хотя его вообще не было?
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவன், முன்னர் அவன் எதுவாகவும் இல்லாமல் இருந்த நிலையில் நாம் அவனைப் படைத்தோம் என்பதை நினைத்துப் பார்க்கவில்லையா? இரண்டாவதாகப் படைக்க முடியும் என்பதற்கு முதலில் படைத்ததை ஆதாரமாகக் கொள்ளமாட்டானா. நிச்சயமாக இரண்டாவதாகப் படைப்பது மிகவும் எளிதானது.
19:68Страница 310
فَوَرَبِّكَ لَنَحۡشُرَنَّهُمۡ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحۡضِرَنَّهُمۡ حَوۡلَ جَهَنَّمَ جِثِيّٗا ٦٨
Клянусь твоим Господом, Мы непременно соберем их и дьяволов, а затем поставим их вокруг Геенны на колени.
தூதரே!- உம் இறைவனின் மீது ஆணையாக, நிச்சயமாக அவர்களை கப்ருகளிலிருந்து, அவர்களை வழிகெடுத்த அவர்களின் ஷைத்தான்களோடு அவர்களை மஹ்ஸர் மைதானத்தில் வெளியேற்றி, பின்பு அவர்களை முழங்காளிட வைத்து இழிவுபடுத்தி நரகத்தின் வாயில்களை நோக்கி இழுத்துச் சென்றே தீருவோம்.
19:69Страница 310
ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمۡ أَشَدُّ عَلَى ٱلرَّحۡمَٰنِ عِتِيّٗا ٦٩
Потом Мы выведем из каждой общины того, кто больше других ослушался Милостивого.
பின்னர் வழிகெட்ட ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் பாவம் புரிவதில் தீவிரமாக இருந்த அவர்களது தலைவர்களை கடுமையாக இழுத்தெடுப்போம்.
19:70Страница 310
ثُمَّ لَنَحۡنُ أَعۡلَمُ بِٱلَّذِينَ هُمۡ أَوۡلَىٰ بِهَا صِلِيّٗا ٧٠
Нам лучше знать, кому более подобает гореть там (или кто более других заслуживает войти туда).
பின்பு நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பதற்குத் தகுதியானவர்களை நாம் நன்கறிவோம்.
19:71Страница 310
وَإِن مِّنكُمۡ إِلَّا وَارِدُهَاۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتۡمٗا مَّقۡضِيّٗا ٧١
Каждый из вас войдет туда. Таково окончательное решение твоего Господа.
மனிதர்களே!- உங்களிலுள்ள ஒவ்வொருவரும் நரகத்தின் மீதுள்ள அந்த பாதையை கடந்தே தீர வேண்டும். அவ்வாறு கடப்பது அல்லாஹ் ஏற்படுத்திய விதியாகும். அவனுடைய விதியை யாராலும் மாற்ற முடியாது.
19:72Страница 310
ثُمَّ نُنَجِّي ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّنَذَرُ ٱلظَّٰلِمِينَ فِيهَا جِثِيّٗا ٧٢
Потом Мы спасем богобоязненных, а беззаконников оставим там стоять на коленях.
இவ்வாறு பாதையை கடந்த பிறகு தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களை நாம் பாதுகாத்திடுவோம். அநியாயக்காரர்களை மண்டியிட்டவர்களாக அப்படியே விட்டு விடுவோம். அவர்களால் அதிலிருந்து தப்ப முடியாது.
19:73Страница 310
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَيُّ ٱلۡفَرِيقَيۡنِ خَيۡرٞ مَّقَامٗا وَأَحۡسَنُ نَدِيّٗا ٧٣
Когда им читают Наши ясные аяты, неверующие говорят верующим: «Какая из двух групп занимает более высокое положение и более достойное место?».
நம் தூதர் மீது இறக்கப்பட்ட தெளிவான நம் வசனங்கள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்: “இரு பிரிவினரில் யார் நல்ல வசிப்பிடத்தையும், தங்குமிடத்தையும் பெற்றுள்ளார்கள்? யாருடைய சபையும், கூட்டமும் சிறந்தது? எங்களின் கூட்டத்தினரா? அல்லது உங்களின் கூட்டத்தினரா?”
19:74Страница 310
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَحۡسَنُ أَثَٰثٗا وَرِءۡيٗا ٧٤
Сколько же поколений до них Мы погубили! Они превосходили их богатством (или утварью) и внешностью.
தம்மிடமுள்ள சடரீதியான முன்னேற்றத்தைக் கொண்டு பெருமையடிக்கும் இந்த நிராகரிப்பாளர்களுக்கு முன்னால் நாம் அழித்த எத்தனையோ சமூகங்கள் உள்ளன! அவர்கள் இவர்களைவிட அதிக செல்வமுடையவர்களாவும் பெறுமதியான ஆடை மற்றும் உடம்பு ஆகியவற்றால் அழகிய தோற்றமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
19:75Страница 310
قُلۡ مَن كَانَ فِي ٱلضَّلَٰلَةِ فَلۡيَمۡدُدۡ لَهُ ٱلرَّحۡمَٰنُ مَدًّاۚ حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ إِمَّا ٱلۡعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعۡلَمُونَ مَنۡ هُوَ شَرّٞ مَّكَانٗا وَأَضۡعَفُ جُندٗا ٧٥
Скажи: «Да продлит Милостивый жизнь заблудших до тех пор, пока они не увидят обещанные мучения или Час. Тогда они узнают, чье место хуже и чье воинство слабее».
தூதரே!- நீர் கூறுவீராக: “யார் வழிகேட்டில் தடுமாறித் திரிகிறாரோ அவர் மென்மேலும் வழிகெட வேண்டுமென்பதற்காக அளவிலாக் கருணையாளன் அவருக்கு அவகாசம் வழங்குவான். அவர்கள் இவ்வுலகில் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட விரைவான வேதனையையோ மறுமை நாளில் தாமதமான வேதனையையோ கண்ணால் காணும் போது தீய வசிப்பிடத்தையும் குறைவான உதவியாளர்களையும் பெற்றவர்கள் நம்பிக்கையாளர்களின் கூட்டமா? அல்லது அவர்களின் கூட்டமா? என்பதை அறிந்துகொள்வார்கள்.
19:76Страница 310
وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ هُدٗىۗ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٞ مَّرَدًّا ٧٦
Аллах увеличивает приверженность прямому пути тех, кто следует прямым путем. А нетленные благодеяния лучше перед твоим Господом по вознаграждению и по исходу.
அவர்கள் மென்மேலும் வழிகெட்டுச் செல்ல வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு அவன் அவகாசம் அளிப்பதுபோல நேர்வழிபெற்றவர்களின் நம்பிக்கையையும், கீழ்ப்படிதலையும் அவன் அதிகரிக்கச் செய்கிறான். -தூதரே!- நிரந்தர சந்தோசத்தின்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களே உம் இறைவனிடத்தில் பயனுள்ள கூலியையும், சிறந்த முடிவையும் பெற்றுத்தரக்கூடியதாகும்.
19:77Страница 311
أَفَرَءَيۡتَ ٱلَّذِي كَفَرَ بِـَٔايَٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالٗا وَوَلَدًا ٧٧
Видел ли ты того, кто не уверовал в Наши знамения и сказал: «Я непременно буду одарен богатством и детьми?».
தூதரே!- நம்முடைய சான்றுகளையும் மறுத்து, எச்சரிக்கைகளையும் நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? அவன் கூறுகிறான்: “நான் மரணித்து, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டாலும் ஏராளமான செல்வங்களும், பிள்ளைகளும் வழங்கப்படுவேன்.”
19:78Страница 311
أَطَّلَعَ ٱلۡغَيۡبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا ٧٨
Разве он знал сокровенное или заключил завет с Милостивым?
அவன் மறைவானவற்றை அறிந்து, அவன் கூறுவதை ஆதாரப்பூர்வமாகத்தான் கூறுகிறானா? அல்லது திடமாக தன்னை சுவனத்தில் நுழைத்துவிட வேண்டும், தனக்கு ஏராளமான செல்வங்களையும், பிள்ளைகளையும் வழங்க வேண்டும் என்று தன் இறைவனிடம் ஏதேனும் வாக்குறுதி பெற்றுள்ளானா?
19:79Страница 311
كـَلَّاۚ سَنَكۡتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلۡعَذَابِ مَدّٗا ٧٩
Нет! Мы запишем его слова и увеличим его мучения.
அவன் நினைப்பது போலல்ல விடயம். அவன் கூறுவதையும் செய்வதையும் நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். அவன் பொய் கூறுவதால் அவனுக்கு வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்துவோம்.
19:80Страница 311
وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأۡتِينَا فَرۡدٗا ٨٠
Мы унаследуем от него то, о чем он говорил, и он явится к Нам в одиночестве.
அவனை அழித்த பிறகு அவன் விட்டுச்சென்ற செல்வங்களுக்கும், பிள்ளைகளுக்கும் நாமே உரிமையாளர்களாவோம். அவன் அனுபவித்துக் கொண்டிருந்த பணமும், பதவியும் பறிக்கப்பட்டு, மறுமை நாளில் நம்மிடம் தனியாகவே வருவான்.
19:81Страница 311
وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لِّيَكُونُواْ لَهُمۡ عِزّٗا ٨١
Они стали поклоняться наряду с Аллахом другим богам, чтобы те одарили их могуществом.
தங்களுக்கு உதவுவார்கள் என்று இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
19:82Страница 311
كـَلَّاۚ سَيَكۡفُرُونَ بِعِبَادَتِهِمۡ وَيَكُونُونَ عَلَيۡهِمۡ ضِدًّا ٨٢
Но нет! Они отрекутся от поклонения им и станут их противниками.
அவர்கள் நினைப்பது போலல்ல விடயம். அல்லாஹ்வைவிடுத்து அவர்கள் வணங்கும் தெய்வங்கள், மறுமை நாளில் இணைவைப்பாளர்கள் தங்களை வணங்கியதையே மறுத்துவிடும். அவர்களை விட்டு நீங்கி அவர்களுக்கு எதிரிகளாகிவிடும்.
19:83Страница 311
أَلَمۡ تَرَ أَنَّآ أَرۡسَلۡنَا ٱلشَّيَٰطِينَ عَلَى ٱلۡكَٰفِرِينَ تَؤُزُّهُمۡ أَزّٗا ٨٣
Разве ты не видишь, что Мы послали к неверующим дьяволов, чтобы те подстрекали их?
தூதரே!- நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை அனுப்பி நிராகரிப்பாளர்களின் மீது அவர்களை ஆதிக்கம் கொள்ளச் செய்கிறோம். அவர்கள் இந்த நிராகரிப்பாளர்களை பாவங்கள் செய்வதன் பக்கமும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுப்பதன் பக்கமும் நன்கு தூண்டுகிறார்கள்.
19:84Страница 311
فَلَا تَعۡجَلۡ عَلَيۡهِمۡۖ إِنَّمَا نَعُدُّ لَهُمۡ عَدّٗا ٨٤
Посему не торопись с ними! Мы ведем для них счет.
தூதரே!- அல்லாஹ் அவர்களை விரைவாக அழிக்க வேண்டுமென அவனிடம் அவசரமாக கோரிக்கை வைக்க வேண்டாம். நாம் அவர்களின் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு அளிக்கப்பட்ட அவகாச நேரம் முடிந்தவுடன் நாம் அவர்களுக்குத் தகுந்த விதத்தில் அவர்களை தண்டிப்போம்.
19:85Страница 311
يَوۡمَ نَحۡشُرُ ٱلۡمُتَّقِينَ إِلَى ٱلرَّحۡمَٰنِ وَفۡدٗا ٨٥
В тот день Мы соберем благочестивых перед Милостивым почтенной делегацией,
தூதரே!- அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தி, விலக்கல்களைத் தவிர்ந்து அவனை அஞ்சியவர்களை கௌரவமாகவும், கண்ணியமாகவும் அவர்களின் இறைவனிடம் குழுவாக நாம் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக.
19:86Страница 311
وَنَسُوقُ ٱلۡمُجۡرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرۡدٗا ٨٦
а грешников погоним в Геенну, словно на водопой.
நிராகரிப்பாளர்களை தாகமுள்ளவர்களாக நரகத்தை நோக்கி இழுத்துச் செல்வோம்.
19:87Страница 311
لَّا يَمۡلِكُونَ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحۡمَٰنِ عَهۡدٗا ٨٧
Никто не обретет права заступничества, кроме тех, у кого был завет с Аллахом.
இந்த நிராகரிப்பாளர்கள் தங்களில் சிலருக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்றிருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு இவ்வுலகில் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் பெற்றவர்களைத் தவிர.
19:88Страница 311
وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗا ٨٨
Они говорят: «Милостивый взял Себе сына».
அல்லாஹ் தனக்கு ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று யூதர்களும் கிருஸ்தவர்களும் சில இணைவைப்பாளர்களும் கூறுகிறார்கள்.
இவ்வாறு கூறுபவர்களே!- நீங்கள் பெரும் ஒரு தவறை இழைத்துவிட்டீர்கள்.
19:90Страница 311
تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا ٩٠
Небо готово расколоться, земля готова разверзнуться, а горы готовы рассыпаться в прах от того,
இந்த தீய வார்த்தையினால் வானங்கள் வெடித்து விடலாம்; பூமி துண்டு துண்டாகி விடலாம்; மலைகள் இடிந்து விழலாம்.
இவையனைத்தும் அவர்கள் அளவிலாக் கருணையாளனுக்கு ஒரு மகனை இணைத்துக்கூறினார்கள் என்பதனால்தான். இவ்வாறு ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அவன் மிக மிக உயர்ந்தவன்.
19:92Страница 311
وَمَا يَنۢبَغِي لِلرَّحۡمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا ٩٢
Не подобает Милостивому иметь сына!
மகனை ஏற்படுத்திக் கொள்வது அளவிலாக் கருணையாளனுக்கு உகந்த விஷயமல்ல. எனெனில் அவன் அதனை விட்டும் பரிசுத்தமானவன்.
19:93Страница 311
إِن كُلُّ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ إِلَّآ ءَاتِي ٱلرَّحۡمَٰنِ عَبۡدٗا ٩٣
Каждый, кто на небесах и на земле, явится к Милостивому только в качестве раба.
நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியில் உள்ள வானவர்கள், மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் மறுமை நாளில் தங்கள் இறைவனிடம் பணிந்தவர்களாக வந்தே ஆக வேண்டும்.
அவன் அவர்கள் அனைவரையும் அறிவால் சூழ்ந்துள்ளான். அவர்களைக் கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்களில் எதுவும் அவனை விட்டு மறைவாக முடியாது.
19:95Страница 311
وَكُلُّهُمۡ ءَاتِيهِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَرۡدًا ٩٥
Каждый из них явится к Нему в День воскресения в одиночестве.
எந்த உதவியாளனும், சொத்துக்களும் இன்றி அவர்களில் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்கள்.
19:96Страница 312
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَيَجۡعَلُ لَهُمُ ٱلرَّحۡمَٰنُ وُدّٗا ٩٦
Тех, которые уверовали и совершали праведные деяния, Милостивый одарит любовью.
நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு விருப்பமான நற்செயல்களில் ஈடுபட்டவர்களை தானும் நேசித்து, தனது அடியார்களுக்கும் அவர்களை நேசிக்கச் செய்து அவர்கள் மீது அன்பை ஏற்படுத்துவான்.
19:97Страница 312
فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلۡمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوۡمٗا لُّدّٗا ٩٧
Мы облегчили его (Коран) на твоем языке для того, чтобы ты обрадовал им богобоязненных людей и предостерег им злостных спорщиков.
தூதரே!- நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை உமது மொழியில் இறக்கி இலகுபடுத்தியுள்ளோம். அது, என் கட்டளைகளைச் செயல்படுத்தி நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சக்கூடியவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்காகவும் சத்தியத்திற்குக் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளுவதிலும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய கடும் பகையான கூட்டத்தை நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.
19:98Страница 312
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا ٩٨
Сколько поколений до них Мы подвергли гибели! Разве ты ощущаешь присутствие кого-нибудь из них или слышишь их шепот?
உம் சமூகத்திற்கு முன்னர் நாம் அழித்த சமூகங்கள் எவ்வளவோ உள்ளன. இன்று அவர்களில் யாரையாவது நீர் உணர்கிறீரா? அல்லது அவர்களின் ஏதேனும் சத்தத்தையேனும் செவியுறுகிறீரா? அல்லாஹ் அனுமதிக்கும் போது அவர்களுக்கு நேர்ந்தது மற்றவர்களுக்கும் நேரும்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии