Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Бакара 2:102–129
2:102Страница 16
وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةٞ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ١٠٢
Они последовали за тем, что читали дьяволы в царстве Сулеймана (Соломона). Сулейман (Соломон) не был неверующим. Неверующими были дьяволы, и они обучали людей колдовству, а также тому, что было ниспослано двум ангелам в Вавилоне - Харуту и Маруту. Но они (ангелы) никого не обучали, не сказав: «Воистину, мы являемся искушением, не становись же неверующим». Они обучались у них тому, как разлучать мужа с женой, но никому не могли причинить вред без соизволения Аллаха. Они обучались тому, что приносило им вред и не приносило им пользы. Они знали, что тому, кто приобрел это, нет доли в Последней жизни. Скверно то, что они купили за свои души! Если бы они только знали!
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டுவிட்ட அவர்கள் அதற்குப் பதிலாக, இறைத்தூதர் சுலைமானுக்கு எதிராக ஷைத்தான்கள் இட்டுக்கட்டியவற்றைப் பின்பற்றினார்கள். அந்த ஷைத்தான்கள், சுலைமான் சூனியத்தின் மூலம் ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று புனைந்து கூறினார்கள். யூதர்கள் கூறுவதுபோல சூனியம் செய்து சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆனால் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். அவர்கள் சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதர்களைப் பரிசோதிக்கும் நோக்கில் ஈராக்கிலுள்ள பாபில் நகரத்தில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்ட சூனியத்தையும் ஷைத்தான்கள்தான் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த இரு வானவர்களும் யாருக்காவது சூனியத்தைக் கற்றுக்கொடுக்க நேர்ந்தால், நாங்கள் மக்களுக்கு சோதனையாகவே இருக்கின்றோம். எனவே சூனியத்தைக் கற்பதின்மூலம் நிராகரித்து விடாதீர்கள் என்று அவருக்கு எச்சரிக்கை செய்துவிடுவார்கள். அவர்களின் அறிவுரையை ஏற்காதவர்கள் அவர்களிடமிருந்து சூனியத்தைக் கற்றுக்கொண்டார்கள். கணவனுக்கும் மனைவிக்குமிடையே வெறுப்பை ஏற்படுத்தி அவர்களைப் பிளவுபடுத்தும் சூனியத்தின் ஒரு வகையே. அல்லாஹ்வின் அனுமதியின்றி இந்த சூனியக்காரர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. தங்களுக்குப் பயனளிக்காத, தீங்கிழைக்கும் விஷயத்தையே அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் வேதத்திற்குப் பகரமாக சூனியத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை யூதர்கள் நன்கறிந்திருந்தார்கள். அல்லாஹ்வின் வஹிக்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட சூனியம் எவ்வளவு மோசமானது! தங்களுக்குப் பயனளிக்கக்கூடியதை இவர்கள் அறிந்திருந்தால் இழிவான இந்த வழிகெட்ட செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.
2:103Страница 16
وَلَوۡ أَنَّهُمۡ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَمَثُوبَةٞ مِّنۡ عِندِ ٱللَّهِ خَيۡرٞۚ لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ ١٠٣
Если бы они уверовали в Аллаха и были богобоязненны, то вознаграждение от Аллаха было бы лучше для них. Если бы они только знали!
யூதர்கள் அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, அவனுக்கு வழிப்பட்டு, தடுத்தவற்றை விட்டும் விலகி அவனை அஞ்சியிருந்தால் அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கும் நன்மை அவர்கள் இப்போது இருப்பதைவிடச் சிறந்ததாக இருந்திருக்கும். தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விஷயத்தை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!.
2:104Страница 16
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرۡنَا وَٱسۡمَعُواْۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٞ ١٠٤
О те, которые уверовали! Не говорите Пророку: «Заботься о нас», а говорите: «Присматривай за нами» и слушайте. А неверующим уготованы мучительные страдания.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேசும்படி அறிவுரை வழங்குகிறான்: நம்பிக்கையாளர்களே,எங்களைக் கவனியுங்கள் என்று பொருளுடைய "ராயினா "என்ற வார்த்தையைக் கூறாதீர்கள். ஏனெனில் யூதர்கள் இந்த வார்த்தையைத் திரித்து, முட்டாள் என்ற தவறான பொருளை மனதில் வைத்து நபியவர்களை அழைக்கின்றனர். எனவே அல்லாஹ் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறான். அதற்குப் பதிலாக "உன்ளுர்னா" என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு தன் அடியார்களுக்குக் கட்டளையிடுகிறான். இது எங்களைக் கவனியுங்கள் என்ற ஒரே பொருளையே தருவதுடன் ராஇனா என்பதைப் போன்று தவறான பொருளில் இதனைப் பயன்படுத்தவும் முடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
2:105Страница 16
مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَلَا ٱلۡمُشۡرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيۡكُم مِّنۡ خَيۡرٖ مِّن رَّبِّكُمۡۚ وَٱللَّهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ١٠٥
Неверующие из людей Писания и многобожники не хотят, чтобы вам ниспосылалось благо от вашего Господа. Аллах же отмечает Своей милостью, кого пожелает. Аллах обладает великой милостью.
அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய இவர்கள் - வேதக்காரர்களாக இருந்தாலும் சரி, இணைவைப்பாளர்களாக இருந்தாலும் சரியே - உங்களுக்கு இறைவனிடமிருந்து சிறியதோ பெரியதோ எவ்வித நன்மையும் இறங்குவதை விரும்பமாட்டார்கள். தூதுத்துவம், வஹி, ஈமான் ஆகிய அருட்கொடைகளை தான் நாடிய அடியார்களுக்கே அல்லாஹ் வழங்குகிறான். அவன்தான் மாபெரும் அருளாளன். படைப்புகள் அவனிடமிருந்தே நன்மைகளைப் பெற முடியும். தூதர்களை அனுப்புவதும் வேதங்களை இறக்குவதும் அவனுடைய அருளில் உள்ளவையே.
2:106Страница 17
۞ مَا نَنسَخۡ مِنۡ ءَايَةٍ أَوۡ نُنسِهَا نَأۡتِ بِخَيۡرٖ مِّنۡهَآ أَوۡ مِثۡلِهَآۗ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ١٠٦
Когда Мы отменяем или заставляем забыть один аят, то приводим тот, который лучше его, или равный ему. Разве ты не знаешь, что Аллах способен на всякую вещь?
அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்: குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தின் சட்டத்தை அல்லாஹ் நீக்கினால் அல்லது அதன் வார்த்தையை நீக்கி மக்கள் அதனை மறந்தால் அதைவிட பயனுள்ள ஒன்றை அல்லது அதைப்போன்ற ஒன்றை உடனடியாகவோ தாமதமாகவோ அவன் கொண்டுவருவான். இது அல்லாஹ்வின் அறிவு, ஞானத்தைக் கொண்டே நடைபெறக்கூடியதாகும். தூதரே! அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவன் தான் நாடியதைச் செய்கிறான் என்பதை நீர் நன்கறிவீர்.
2:107Страница 17
أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ١٠٧
Разве ты не знаешь, что Аллаху принадлежит власть над небесами и землей, и что нет у вас, кроме Аллаха, ни покровителя, ни помощника?
அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியின் அரசன். அவன் தான் நாடியதை தன் அடியார்களுக்கு கட்டளையாக இடுகின்றான்; தான் நாடியவற்றை விட்டும் அவர்களைத் தடுக்கிறான்; மார்க்கத்தின் தான் நாடியதை நிலைத்திருக்கச் செய்கிறான்; தான் நாடியதை நீக்கிவிடுகிறான். அல்லாஹ்வைத்தவிர உங்களின் விஷயங்களுக்குப் பொறுப்பேற்பக்கூடியவர் வேறு யாரும் இல்லை. அவனைத்தவிர உங்களுக்கு தீங்கைத் தடுக்கும் வேறு உதவியாளனும் இல்லை. அவனே அவை எல்லாவற்றிற்கும் பொறுப்பாளன், அவற்றின் மீது ஆற்றல்மிக்கவன் என்பதையும் தூதரே நீர் அறிவீர்.
2:108Страница 17
أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ١٠٨
Или же вы хотите попросить вашего Посланника, как прежде они (сыны Исраила) попросили Мусу (Моисея)? Кто сменил веру на неверие, тот уже сбился с прямого пути.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் உங்கள் தூதரிடம் இதற்கு முன்னர் மூசாவின் சமூகம் கேட்டதுபோன்று ஆட்சேபிக்கும் தொனியில் கேள்வி கேட்காதீர்கள். “அவர்கள் தங்கள் தூதரிடம் ‘அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டு’ என்று கேட்டார்கள். (4:153) எவர் ஈமானை நிராகரிப்பாக மாற்றிக் கொண்டாரோ அவர் நேரான வழியை விட்டும் தவறிவிட்டார்.
2:109Страница 17
وَدَّ كَثِيرٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يَرُدُّونَكُم مِّنۢ بَعۡدِ إِيمَٰنِكُمۡ كُفَّارًا حَسَدٗا مِّنۡ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡحَقُّۖ فَٱعۡفُواْ وَٱصۡفَحُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ١٠٩
После того как прояснилась им истина, многие из людей Писания из зависти своей хотели бы отвратить вас от веры, когда вы уже приняли ее. Простите их и будьте великодушны, пока Аллах не явится со Своим повелением. Воистину, Аллах способен на всякую вещь.
வேதக்காரர்களில் பெரும்பாலோர் அவர்களுக்குள் இருக்கும் பொறாமையினால், நீங்கள் முன்னர் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்ததுபோன்று ஈமான் கொண்டபிறகும் நிராகரிப்பாளர்களாகி விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தத் தூதர் கொண்டு வந்தது அல்லாஹ்விடமிருந்துள்ள உண்மையாகும் என்பதை அறிந்தபிறகே அவர்கள் இவ்வாறு ஆசைகொள்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே, அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிக்கும்வரை, அவர்களின் செற்பாடுகளை மன்னித்துவிடுங்கள். அவர்களின் அறியாமை தீய எண்ணம் என்பவற்றைப் பொருட்படுத்தாதீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவர்களால் அவனை வெல்லமுடியாது. அல்லாஹ்வின் தீர்ப்பு வந்துவிட்டது, எனவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஜிஸ்யாவை அளித்துவிட வேண்டும் அல்லது போரிட வேண்டும்.
2:110Страница 17
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ١١٠
Совершайте намаз и выплачивайте закят. Все то доброе, что вы предварите для себя, вы найдете у Аллаха. Воистину, Аллах видит то, что вы совершаете.
தொழுகையை அதன் நிபந்தனைகளோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து தகுதியானவர்களுக்கு ஸகாத்தை வழங்குங்கள். உங்களது வாழ்வில் நீங்கள் நற்செயல்கள் செய்து இறப்பதற்கு முன்னால் உங்களின் சேமிப்புக்காக முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளுக்கான கூலியை மறுமையில் உங்கள் இறைவனிடம் பெறுவீர்கள். அதனடிப்படையில் அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் ஒவ்வொருவருக்கும் அவரது செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
2:111Страница 17
وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١١١
Они сказали: «Не войдет в Рай никто, кроме иудеев или христиан». Таковы их мечты. Скажи: «Приведите ваше доказательство, если вы говорите правду».
யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும், சொர்க்கம் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறுகிறார்கள். யூதர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று யூதர்கள் கூறுகிறார்கள். கிருஸ்தவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவை அவர்களின் தவறான ஆசைகளும் ஊகங்களே. தூதரே, நீர் அவர்களிடம் “உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” எனக் கேட்பீராக.
2:112Страница 17
بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَلَهُۥٓ أَجۡرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ١١٢
О нет! Кто покорит свой лик Аллаху, совершая добро, тот получит награду от своего Господа. Они не познают страха и не будут опечалены.
அல்லாஹ்வுக்காக வேண்டி என்ற உளத்தூய்மையுடன் அவனுடைய தூதர் கொண்டு வந்துள்ளதைப் பின்பற்றி தனது வணக்கத்தை சீரான முறையில் செய்பவர்கள்தாம் சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய மக்கள் எந்த கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. அவர்களின் இறைவன் அவர்களுக்கான கூலியை வழங்கிடுவான். மறுமையில் அவர்கள் அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்தவற்றிற்காகவும் கவலைகொள்ள மாட்டார்கள். இத்தகைய பண்புகள் முஹம்மது நபியின் வருகைக்குப்பின் முஸ்லிம்களிடம் மாத்திரமே காணப்படும்.
2:113Страница 18
وَقَالَتِ ٱلۡيَهُودُ لَيۡسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَيۡءٖ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيۡسَتِ ٱلۡيَهُودُ عَلَىٰ شَيۡءٖ وَهُمۡ يَتۡلُونَ ٱلۡكِتَٰبَۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ مِثۡلَ قَوۡلِهِمۡۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ١١٣
Иудеи сказали: «Христиане не следуют прямым путем». А христиане сказали: «Иудеи не следуют прямым путем». Все они читают Писание, но слова невежественных людей похожи на их слова. В День воскресения Аллах рассудит их в том, в чем они расходились во мнениях.
‘கிருஸ்தவர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘யூதர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் தாம் நிராகரித்தவை உண்மையானவையே என்பதையும், தூதர்கள் அனைவரையும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதையும் தமது வேதத்தில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயல், தூதர்கள் அனைவரையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தையும் நிராகரித்த, எதுவும் அறியாத இணைவைப்பாளர்களின் செயலை ஒத்திருக்கிறது. கருத்துவேறுபட்ட இவர்கள் அனைவரிடையே மறுமைநாளில் தன் அடியார்களுக்கு அறிவித்த நீதியைக்கொண்டு அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அல்லாஹ் இறக்கிய அனைத்தின்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் எந்த வெற்றியும் இல்லை என்பதே அந்த நீதியாகும்.
2:114Страница 18
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ وَسَعَىٰ فِي خَرَابِهَآۚ أُوْلَٰٓئِكَ مَا كَانَ لَهُمۡ أَن يَدۡخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ ١١٤
Кто может быть несправедливее того, кто запрещает в мечетях Аллаха поминать имя Его и стремится разрушить их? Им следовало бы входить туда только с чувством страха. Позор им в мирской жизни и великие мучения в Последней жизни.
பள்ளிவாயில்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுப்பவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யாருமில்லை. அவன் அங்கு தொழுவதை, அல்லாஹ்வை நினைவுகூருவதை, குர்ஆன் ஓதுவதைத் தடுக்கிறான். அவற்றை இடிப்பதன் மூலமோ அவற்றில் நடைபெறும் வணக்க வழிபாட்டைத் தடுப்பதன் மூலமோ அவற்றைப் பாழாக்க முயல்கிறான். பாழாக்க முயலும் இவர்களுக்கு அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் மக்களை அவனுடைய பள்ளிவாயில்களை விட்டுத் தடுத்ததனாலும் பயந்தவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்குத் தகுதி இல்லை. இவ்வுலகில் இவர்கள் நம்பிக்கையாளர்களால் இழிவுபடுத்தப்படுவார்கள். அல்லாஹ்வின் பள்ளிவாயில்களை விட்டு மக்களைத் தடுத்ததனால் மறுமையில் பெரும் வேதனையும் உண்டு.
2:115Страница 18
وَلِلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ فَأَيۡنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجۡهُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٞ ١١٥
Аллаху принадлежат восток и запад. Куда бы вы ни повернулись, там будет Лик Аллаха. Воистину, Аллах - Объемлющий, Знающий.
கிழக்கு, மேற்கு மற்றும் அவையிரண்டிற்கு இடைப்பட்டவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் தான் நாடியவற்றைக் கொண்டு அடியார்களை ஏவுகிறான். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வையே நோக்குகிறீர்கள். அவன் உங்களை பைத்துல் முகத்தஸை நோக்கும்படியோ கஅபாவை நோக்கும்படியோ ஏவினால், அல்லது நீங்கள் முன்னோக்கும் திசையில் தவறிறைத்தால் அல்லது அதனை முன்னோக்குவது உங்களுக்குக் கடினமாக இருந்தால் அதனால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் திசைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். தன் அருளாலும் இலகுபடுத்தலாலும் படைப்புகளுடன் விசாலத்தன்மையுடன் நடப்பவன். அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவன் நன்கறிந்தவன்.
2:116Страница 18
وَقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ بَل لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ ١١٦
Они сказали: «Аллах взял Себе сына». Пречист Он! Напротив, Ему принадлежит то, что на небесах и земле. Ему одному все покоряются.
யூதர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள், “அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக்கொண்டான் என்று.” இதனை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். அவன் படைப்புகளை விட்டும் தேவையற்றவன். தேவையுடையவர்கள்தாம் மகனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மாறாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அவனது அடிமைகளே, அவனுக்குக் கட்டுப்பட்டவைகள்தாம். தான் நாடியவாறு அவற்றை நடத்துகிறான்.
2:117Страница 18
بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ١١٧
Он - Первосоздатель небес и земли. Когда Он принимает решение, то стоит Ему сказать: «Будь!», как это сбывается.
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவற்றில் உள்ளவற்றையும் முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தவன். அவன் ஏதேனும் ஒரு விஷயத்தை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். அது அவன் நாடியவாறு ஆகிவிடுகிறது. அவனுடைய கட்டளையைத் தடுப்பவர் யாருமில்லை.
2:118Страница 18
وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ ١١٨
Те, которые лишены знания, говорят: «Почему Аллах не говорит с нами? Почему знамение не приходит к нам?». Такие же слова произносили их предшественники. Их сердца похожи. Мы уже разъяснили знамения людям убежденным!
வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் அறியாதவர்கள் சத்தியத்தை எதிர்த்தவர்களாகக் கூறுகிறார்கள், “அல்லாஹ் ஏன் எங்களுடன் நேரடியாகப் பேசவில்லை? அல்லது எமக்கென பிரத்யேகமானதொரு புலன் ரீதியான அற்புதத்தை ஏன் எங்களுக்குத் தரவில்லை?.” இதற்கு முன்னர் தம் தூதர்களை நிராகரித்த சமூகமும் இவ்வாறே கூறியது. அவர்களின் காலங்களும் இடங்களும் வெவ்வேறாக இருந்தாலும் இவர்களின் உள்ளங்களும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்து முரண்பட்டோரின் உள்ளங்களும் நிராகரிப்பு, பிடிவாதம், அத்துமீறல் போன்றவற்றில் ஒன்றுபட்டுவிட்டன. தமக்குச் சத்தியம் தெரியும்போது அதன் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோருக்கு சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். எந்தச் சந்தேகமும் அவர்களை அண்டவில்லை; பிடிவாதம் அவர்களைத் தடுக்கவில்லை.
2:119Страница 18
إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۖ وَلَا تُسۡـَٔلُ عَنۡ أَصۡحَٰبِ ٱلۡجَحِيمِ ١١٩
Мы отправили тебя с истиной добрым вестником и предостерегающим увещевателем, и ты не будешь спрошен об обитателях Ада.
தூதரே! அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு சுவனம் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் அவனை நிராகரித்தவர்களுக்கு நரகம் உண்டு என்று எச்சரிப்பதற்காகவும் சந்தேகமற்ற இந்த மார்க்கத்தைக் கொண்டு நாம் உம்மை அனுப்பியுள்ளோம். தெளிவாக எடுத்துரைப்பதுதான் உம்மீதுள்ள கடமையாகும். உம்மீது நம்பிக்கைகொள்ளாத நரகவாசிகளைக் குறித்து அல்லாஹ் உம்மிடம் கேட்க மாட்டான்.
2:120Страница 19
وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۗ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَ ٱلَّذِي جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ ١٢٠
Иудеи и христиане не будут довольны тобой, пока ты не станешь придерживаться их религии. Скажи: «Путь Аллаха - это прямой путь». Если же ты станешь потакать их желаниям после того, как к тебе явилось знание, то Аллах не будет тебе ни Покровителем, ни Помощником.
அல்லாஹ் தன் தூதரை விளித்து அவருக்குப் பின்வருமாறு எச்சரிக்கிறான்: நீர் இஸ்லாத்தை விட்டுவிட்டு அவர்களது கொள்கையை பின்பற்றும் வரை யூதர்களோ, கிருஸ்தவர்களோ உம்மைக் குறித்து திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வேதமும் அவனது தெளிவும்தான் உண்மையான நேர்வழியாகும். மாறாக அவர்களிருக்கும் அசத்தியமல்ல. தெளிவான சத்தியம் உம்மிடம் வந்தபிறகு உம்மிடமிருந்தோ, உம்மைப் பின்பற்றியவர்களிடமிருந்தோ இவ்வாறு நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியையும் நீர் பெறமாட்டீர். இது சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியவாதிகளோடு சேர்ந்துவிடுவதால் ஏற்படும் ஆபத்தை தெளிவுபடுத்துகிறது.
2:121Страница 19
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَتۡلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۗ وَمَن يَكۡفُرۡ بِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ١٢١
Те, кому Мы даровали Писание и кто читает его надлежащим образом, действительно веруют в него. А те, которые не уверуют в него, непременно окажутся в убытке.
வேதக்காரர்களில் ஒரு பிரிவினர் தங்களிடமுள்ள வேதத்தின்படி உண்மையாகவே செயல்பட்டு வருவதாக குர்ஆன் கூறுகிறது. அவர்கள் முஹம்மது நபி உண்மையனவர் எனக் குறிப்பிடும் அடையாளங்களை தங்கள் வேதங்களில் காண்கிறார்கள். எனவேதான் விரைந்து அவரை நம்பிக்கை கொள்கிறார்கள். மற்றொரு பிரிவினர் அவற்றை நிராகரிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
2:122Страница 19
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ١٢٢
О сыны Исраила (Израиля)! Помните о милости, которую Я оказал вам, а также о том, что Я возвысил вас над мирами.
இஸ்ராயீலின் மக்களே, நான் உங்கள்மீது பொழிந்த உலக மற்றும் மார்க்கரீதியான அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் ஆட்சியதிகாரம் மற்றும் தூதுத்துவத்தைக் கொண்டு உங்களை சிறப்பித்தோம்.
2:123Страница 19
وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ ١٢٣
Страшитесь дня, когда ни один человек не принесет пользы другому и когда нельзя будет откупиться, когда ничем не поможет заступничество и когда им не будет оказана поддержка.
அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த நாளில் எந்த உயிரும் பிற உயிருக்கு எதுவும் பயனளிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிணைத்தொகையும் எந்த மதிப்புமிக்கவரின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹ்வைத்தவிர உதவிசெய்யக்கூடிய வேறு உதவியாளனும் அங்கு இருக்கமாட்டார்கள்.
2:124Страница 19
۞ وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ فَأَتَمَّهُنَّۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامٗاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِيۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِي ٱلظَّٰلِمِينَ ١٢٤
Вот испытал Господь Ибрахима (Авраама) повелениями, и тот выполнил их. Он сказал: «Я сделаю тебя предводителем людей». Ибрахим (Авраам) сказал: «И из моего потомства». Аллах сказал: «Мой завет не коснется беззаконников».
அல்லாஹ் இப்ராஹீமுக்கு பல சட்ட திட்டங்களைக் கட்டளையிட்டு சோதித்ததையும் நினைவுகூருங்கள். அவர் அவற்றை சிறந்தமுறையில் நிறைவேற்றிக்காட்டினார். அல்லாஹ் தன்னுடைய தூதர் இப்ராஹீமிடம், நான் உம்மை செயல்களிலும், நற்குணங்களிலும், மக்கள் பின்பற்றத்தகுந்த முன்மாதிரியாக ஆக்கப்போகின்றேன் என்று கூறியபோது, என் சந்ததிகளிலிருந்தும் மக்கள் பின்பற்றத்தகுந்த வழிகாட்டிகளை ஆக்கு என்று வேண்டினார். அதற்கு அல்லாஹ், மார்க்கத் தலைமைத்துவத்திற்கு நான் உமக்களித்த உறுதிமொழி உமது சந்ததிகளில் அநியாயக்காரர்களுக்குக் கிடைக்காது என்று கூறினான்.
2:125Страница 19
وَإِذۡ جَعَلۡنَا ٱلۡبَيۡتَ مَثَابَةٗ لِّلنَّاسِ وَأَمۡنٗا وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِـۧمَ مُصَلّٗىۖ وَعَهِدۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ أَن طَهِّرَا بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ ١٢٥
Вот Мы сделали Дом (Каабу) пристанищем для людей и безопасным местом. Сделайте же место Ибрахима (Авраама) местом моления. Мы повелели Ибрахиму (Аврааму) и Исмаилу (Измаилу) очистить Мой Дом (Каабу) для совершающих обход, пребывающих, кланяющихся и падающих ниц.
அல்லாஹ், புனிதமான கஅபாவை மக்கள் திரும்பத் திரும்ப வரும் இடமாகவும் ஆக்கியதையும் நினைவுகூருங்கள். அவர்களது உள்ளங்கள் எப்பொழுதும் அதனுடன் தொடர்புடையதாகவே உள்ளன. அவர்கள் அதை விட்டுச் சென்றாலும் அதன்பக்கம் திரும்புவார்கள். அதை அமைதிக்குரிய இடமாகவும் ஆக்கினோம். அங்கு அவர்கள் தாக்கப்படமாட்டார்கள். நாம் மக்களிடம் கூறினோம், கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம் நின்ற கல்லை தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள். கஅபாவை சிலைகள் மற்றும் அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தி அங்கு தவாப், இஃதிகாப், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடுவோருக்கு அதனை தயார்படுத்துமாறு இப்ராஹீமிடமும் அவருடைய மகன் இஸ்மாயீலிடமும் நாம் அறிவுறுத்தினோம்.
2:126Страница 19
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ ٱجۡعَلۡ هَٰذَا بَلَدًا ءَامِنٗا وَٱرۡزُقۡ أَهۡلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنۡ ءَامَنَ مِنۡهُم بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلٗا ثُمَّ أَضۡطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ١٢٦
Вот сказал Ибрахим (Авраам): «Господи! Сделай этот город безопасным и надели плодами его жителей, которые уверовали в Аллаха и в Последний день». Он сказал: «А неверующим Я позволю пользоваться благами недолгое время, а затем заставлю их страдать в Огне. Как же скверно это место прибытия!».
தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது கூறியதை நினைவுகூருவீராக: என் இறைவனே, மக்காவை அமைதியான நகரமாக ஆக்குவாயாக. அங்கு யாருக்கும் தீங்கிழைக்கப்படக்கூடாது. அங்கு வசிப்பவர்களுக்கு பலவகையான பழங்களிலிருந்து உணவு வழங்குவாயாக. உன்மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மாத்திரம் உணவுகளை அளிப்பாயாக. அதற்கு அல்லாஹ் கூறினான்,அவர்களில் நிராகரிப்பவர்களுக்கும் உலகில் சிறிது அனுபவிக்கச்செய்வேன். பின்னர் மறுமைநாளில் அவர்களை நரக வேதனையின் பக்கம் தள்ளுவேன். மறுமைநாளில் அவர்கள் திரும்பக்கூடிய இடம் மிகவும் கெட்டதாகும்.
2:127Страница 20
وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١٢٧
Вот Ибрахим (Авраам) и Исмаил (Измаил) подняли основание Дома (Каабы): «Господь наш! Прими от нас! Воистину, Ты - Слышащий, Знающий.
தூதரே! இப்ராஹீமும் இஸ்மாயீலும் கஅபாவின் அத்திவாரங்களை எழுப்பிக் கொண்டிருந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் மிகுந்த பணிவோடு, எங்கள் இறைவனே, எங்களிடமிருந்து இந்த கஃபாவை நிர்மாணித்தல் உட்பட எங்கள் செயல்களை ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவனாகவும், எங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய் என்று பிரார்த்தனை செய்தார்கள்.
2:128Страница 20
رَبَّنَا وَٱجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةٗ مُّسۡلِمَةٗ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبۡ عَلَيۡنَآۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ١٢٨
Господь наш! Сделай нас покорившимися Тебе, а из нашего потомства - общину, покорившуюся Тебе. Покажи нам обряды поклонения и прими наше покаяние. Воистину, Ты - Принимающий покаяние, Милосердный.
எங்கள் இறைவனே, உனக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களாக எங்களை ஆக்குவாயாக. நாங்கள் உனக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம். எங்களின் சந்ததியிலிருந்து உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவாயாக. உன்னை வணங்கும் முறையை எமக்கு கற்றுத்தருவாயாக!. எங்களின் பாவங்களையும், வணக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளையும், மன்னித்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றாய். அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய்.
2:129Страница 20
رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيهِمۡۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ١٢٩
Господь наш! Пошли к ним посланника из них самих, который прочтет им Твои аяты, научит их Писанию и мудрости и очистит их. Воистину, Ты - Могущественный, Мудрый».
எங்கள் இறைவனே, இஸ்மாயீலின் சந்ததியிலிருந்து அவர்களில் ஒரு தூதரை அவர்களிடையே அனுப்புவாயாக. அவர் நீ இறக்கிய வசனங்களை எடுத்துரைக்க வேண்டும்; குர்ஆனையும் சுன்னாவையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; அவர்களை ஷிர்க்கிலிருந்தும் இழிவான விஷயங்களிலிருந்தும் தூய்மைப்படுத்த வேண்டும். நிச்சயமாக நீ யாவற்றிலும் வலிமைமிக்கவனாகவும், மிகைத்தவனாகவும் உன்னுடைய கட்டளைகளில், செயல்களில் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றாய்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии