Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Бакара 2:130–157
2:130Страница 20
وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ ١٣٠
Кто же отвернется от религии Ибрахима (Авраама), кроме глупца? Мы избрали его в мирской жизни, а в Последней жизни он будет в числе праведников.
மடமையினாலும் சத்தியத்தை விட்டு அசத்தியத்தை எடுத்து தவறான திட்டமிடலினாலும் தனக்குத்தானே அநியாயம் இழைத்துக்கொண்டவனையும் இழிவை ஏற்றுக்கொண்டவனையும் தவிர வேறு எவரும் இப்ராஹீமின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கங்களின் பக்கம் செல்லமாட்டான். நாம் இவ்வுலகில் இப்ராஹீமை தூதராகவும், உற்ற நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மறுமையில் அவர், இறைவன் விதித்த கடமைகளை நிறைவேற்றி, உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நல்லவர்களுடன் அவர் இருப்பார்.
2:131Страница 20
إِذۡ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسۡلِمۡۖ قَالَ أَسۡلَمۡتُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٣١
Вот сказал Господь Ибрахиму (Аврааму): «Покорись!». Он сказал: «Я покорился Господу миров».
அவர் அல்லாஹ்வுக்கு விரைந்து அடிபணிந்ததால் அவன் அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவன் அவரிடம் வணக்க வழிபாட்டை எனக்காக மாத்திரம் நிறைவேற்று. கட்டுப்பட்டு எனக்கு அடிபணி என்று கூறியபோது அடியார்களைப் படைத்து, வாழ்வாதாரம் வழங்குகின்ற, அவர்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற அல்லாஹ்வுக்கு நான் அடிபணிந்துவிட்டேன்என்று பதிலளித்தார்.
2:132Страница 20
وَوَصَّىٰ بِهَآ إِبۡرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَٰبَنِيَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ١٣٢
Ибрахим (Авраам) и Йакуб (Иаков) заповедали это своим сыновьям. Йакуб (Иаков) сказал: «О сыновья мои! Аллах избрал для вас религию. И умирайте не иначе, как будучи мусульманами».
அகிலங்களின் இறைவனுக்க நான் அடிபணிந்துவிட்டேன் என்ற இந்த வார்த்தையைத்தான் இப்ராஹீம் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இந்த வார்த்தையைத்தான் யஃகூபும் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் கூறினார்கள்,அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளான். எனவே மரணிக்கும்வரை இதனைப் பற்றிக் கொள்ளுங்கள். வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக இருங்கள்.
2:133Страница 20
أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ حَضَرَ يَعۡقُوبَ ٱلۡمَوۡتُ إِذۡ قَالَ لِبَنِيهِ مَا تَعۡبُدُونَ مِنۢ بَعۡدِيۖ قَالُواْ نَعۡبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ إِلَٰهٗا وَٰحِدٗا وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ١٣٣
Или же вы находились рядом, когда смерть явилась к Йакубу (Иакову)? Он сказал своим сыновьям: «Кому вы будете поклоняться после меня?». Они сказали: «Мы будем поклоняться твоему Богу и Богу твоих отцов - Ибрахима (Авраама), Исмаила (Измаила) и Исхака (Исаака), Единственному Богу. Ему одному мы покоряемся».
யஃகூபுக்கு மரணவேளை நெருங்கியபோது நீங்கள் அங்கே இருந்தீர்களா? அப்போது அவர் தம் பிள்ளைகளிடம் கேட்டார்,நான் மரணித்த பிறகு நீங்கள் யாரை வணங்குவீர்கள்? அதற்கு அவர்கள், உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அவனுக்கு யாரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு மட்டுமே அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்.
2:134Страница 20
تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ١٣٤
Этот народ уже миновал. Они получат то, что они заслужили, а вы получите то, что вы заслужили, и вы не будете спрошены о том, что они совершали.
அந்த சமூகம் உங்களுக்கு முன்னால் சென்ற சமூகங்களுடன் கடந்துவிட்டது. அவர்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த நன்மையும் தீமையும் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவரின் பாவத்திற்காக தண்டிக்கப்பட மாட்டார். மாறாக ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். உங்களின் செயல்களை விட்டுவிட்டு உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மற்றவர்களின் செயல்களைக் குறித்து ஆர்வம் காட்டாதீர்கள். அல்லாஹ்வின் கருணைக்குப் பின் ஒருவர் செய்த நற்செயல்தான் அவருக்குப் பயனளிக்கக்கூடியது.
2:135Страница 21
وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ١٣٥
Они сказали: «Обратитесь в иудаизм или христианство, и вы последуете прямым путем». Скажи: «Нет, в религию Ибрахима (Авраама), который был ханифом и не был одним из многобожников».
யூதர்கள் இந்த சமூகத்தைப் பார்த்துக் கூறுகிறார்கள், யூதர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழியை அடைந்துவிடுவீர்கள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள், கிருஸ்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழியை அடைந்துவிடுவீர்கள் என்று. தூதரே, நீர் அவர்களிடம் கூறும், தவறான மார்க்கங்களை விட்டு நீங்கி சத்தியத்தின் பக்கம் முழுமையாகச் சாய்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். அவர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவராக இருந்ததில்லை.
2:136Страница 21
قُولُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِيَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ١٣٦
Скажите: «Мы уверовали в Аллаха, а также в то, что было ниспослано нам и что было ниспослано Ибрахиму (Аврааму), Исмаилу (Измаилу), Исхаку (Исааку), Йакубу (Иакову) и коленам (двенадцати сыновьям Йакуба), что было даровано Мусе (Моисею) и Исе (Иисусу) и что было даровано пророкам их Господом. Мы не делаем различий между ними, и Ему одному мы покоряемся».
நம்பிக்கையாளர்களே, தவறான வாதம்புரியும் யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கூறுங்கள், நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு இறக்கிய குர்ஆனின் மீதும் நம்பிக்கைகொண்டோம். இப்ராஹீம், அவரது பிள்ளைகளான இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோருக்கு இறக்கப்பட்டதன் மீதும் யஅகூபின் சந்ததிகளில் தூதர்களாக வந்தவர்களுக்கு இறக்கப்பட்டதன்மீதும் அல்லாஹ் மூசாவுக்கு வழங்கிய தவ்ராத்தின்மீதும் ஈசாவுக்கு வழங்கிய இன்ஜீலின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அனைத்து இறைத்தூதர்கள் மீதும் இறக்கப்பட்ட வேதங்களின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவர்களில் சிலரை ஏற்று, சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்வோம். அவன் ஒருவனுக்கு மாத்திரமே நாங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.
2:137Страница 21
فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١٣٧
Если они уверуют в то, во что уверовали вы, то последуют прямым путем. Если же они отвернутся, то окажутся в разладе с истиной. Аллах избавит тебя от них, ибо Он - Слышащий, Знающий.
நீங்கள் நம்பிக்கைகொண்டது போன்று யூதர்களும், கிருஸ்தவர்களும் நம்பிக்கைகொண்டால் அவர்கள் அல்லாஹ் தேர்ந்தெடுத்த நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள் இறைத்தூதர்களை நிராகரித்தால் அல்லது அவர்களில் சிலரை நிராகரித்தால் அவர்கள் பகைமையிலும் முரண்பாட்டிலும் இருப்பவர்களாவர். தூதரே, நீர் கவலைகொள்ளாதீர். அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவர்களின் தீங்குகளிலிருந்து அவனே உம்மைப் பாதுகாப்பான்; அவர்களுக்கு எதிராக உமக்கு உதவிசெய்வான். அவர்கள் பேசும் விஷயங்களை அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்; அவர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
2:138Страница 21
صِبۡغَةَ ٱللَّهِ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ صِبۡغَةٗۖ وَنَحۡنُ لَهُۥ عَٰبِدُونَ ١٣٨
Скажи: «Такова религия Аллаха! А чья религия может быть лучше религии Аллаха? Ему одному мы поклоняемся».
அல்லாஹ் உங்களைப் படைத்த அவனுடைய இயற்கையான மார்க்கத்தில் வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நிலைத்திருங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட சிறந்த மார்க்கம் வேறு இல்லை. அது நன்மைகளைக் கொண்டுவரக்கூடிய, தீமைகளைத் தடுக்கக்கூடிய இயற்கை மார்க்கமாகும். நீங்கள் கூறுங்கள், நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றோம். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம் என்று.
2:139Страница 21
قُلۡ أَتُحَآجُّونَنَا فِي ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمۡ وَلَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ وَنَحۡنُ لَهُۥ مُخۡلِصُونَ ١٣٩
Скажи: «Неужели вы станете препираться с нами относительно Аллаха, тогда как Он является нашим Господом и вашим Господом. Нам достанутся наши деяния, а вам - ваши деяния, и мы искренни перед Ним».
தூதரே! நீர் கூறுவீராக, வேதக்காரர்களே, உங்களின் மார்க்கமும் வேதமும் எங்களைவிட முந்தியது என்பதால் நீங்கள்தாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எங்களைவிட நெருங்கியவர்கள் என்று கூறுகிறீர்களா? நிச்சயமாக இவை உங்களுக்குப் பயன்தராது. அல்லாஹ்தான் நம் அனைவரின் இறைவன். நீங்கள் மட்டும் அவனை சொந்தம் கொண்டாட முடியாது. எங்களுக்கு எங்களின் செயல்கள். அதைக்குறித்து நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். அதைக்குறித்து நாங்கள் கேட்கப்பட மாட்டோம். ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். நாங்கள் வணக்க வழிபாட்டையும் கீழ்ப்படிதலையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குகின்றோம். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம்.
2:140Страница 21
أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ١٤٠
Неужели вы скажете, что Ибрахим (Авраам), Исмаил (Измаил), Исхак (Исаак), Йакуб (Иаков) и колена (двенадцать сыновей Йакуба) были иудеями или христианами? Скажи: «Вы лучше знаете или же Аллах? Кто может быть несправедливее того, кто скрыл имеющееся у него от Аллаха свидетельство? Аллах не пребывает в неведении относительно того, что вы совершаете».
அல்லது வேதக்காரர்களே! இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு மற்றும் யஃகூபின் சந்ததிகளில் வந்த தூதர்கள் அனைவரும் யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? தூதரே! அவர்களிடம் நீர் கேளும், நீங்கள் நன்கறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று. அந்த தூதர்கள் இவர்கள் மார்க்கத்தில்தான் இருந்தார்கள் என்று இவர்கள் கூறினால் இவர்கள் பொய்கூறியவர்களாவர். ஏனெனில் தவ்ராத், இன்ஜீல் இறக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் வாழ்ந்து மரணித்துவிட்டார்களே!? எனவே இந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் பொய் கூறுகிறார்கள் என்பதும் அவர்கள் தங்களுக்கு இறக்கப்பட்ட சத்தியத்தை மறைத்தார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. வேதக்காரர்களைப்போன்று அல்லாஹ்விடமிருந்து அறிந்த சாட்சியத்தை மறைப்பவர்களைவிட அநியாயக்காரர்கள் வேறு யாருமில்லை. நீங்கள் செய்கின்ற செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.
2:141Страница 21
تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ ١٤١
Этот народ уже миновал. Они получат то, что они заслужили, а вы получите то, что вы заслужили, и вы не будете спрошены о том, что они совершали.
அது உங்களுக்கு முன்னர் கடந்துபோன சமூகம். அவர்கள் சேர்த்துவைத்த செயல்களின் பக்கம் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த செயல்கள் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவர் செய்த பாவத்தினால் தண்டிக்கப்பட மாட்டார். அவர் செய்த செயல்களே அவருக்குப் பயனளிக்கும். ஒவ்வொருவரும் தம்முடைய செயல்களுக்கேற்பத்தான் கூலி வழங்கப்படுவார்கள்.
2:142Страница 22
۞ سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ١٤٢
Глупые люди скажут: «Что заставило их отвернуться от киблы, к которой они поворачивались лицом прежде?». Скажи: «Восток и запад принадлежат Аллаху. Он наставляет, кого пожелает, на прямой путь».
யூதர்களில் அறிவீனர்களும் அவர்களைப் போன்று இருக்கும் நயவஞ்சகர்களும், ஏற்கனவே முஸ்லிம்கள் முன்னோக்கிக்கொண்டிருந்த பைதுல் மக்திஸ் திசையை விட்டுத் திருப்பியது எது? என்று கேட்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக, கிழக்கு, மேற்கு மற்றும் மற்ற திசைகள் அனைத்தின் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அவன் தான் நாடிய அடியார்களை தான் விரும்பிய திசையின் பக்கம் செலுத்துகிறான். தான் நாடிய அடியார்களுக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான்.
2:143Страница 22
وَكَذَٰلِكَ جَعَلۡنَٰكُمۡ أُمَّةٗ وَسَطٗا لِّتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيۡكُمۡ شَهِيدٗاۗ وَمَا جَعَلۡنَا ٱلۡقِبۡلَةَ ٱلَّتِي كُنتَ عَلَيۡهَآ إِلَّا لِنَعۡلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيۡهِۚ وَإِن كَانَتۡ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَٰنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ ١٤٣
Мы сделали вас общиной, придерживающейся середины, чтобы вы свидетельствовали обо всем человечестве, а Посланник свидетельствовал о вас самих. Мы назначили киблу, к которой ты поворачивался лицом прежде, только для того, чтобы отличить тех, кто последует за Посланником, от тех, кто повернется вспять. Это оказалось тяжело для всех, кроме тех, кого Аллах повел прямым путем. Аллах никогда не даст пропасть вашей вере. Воистину, Аллах сострадателен и милосерден к людям.
உங்களுக்காக நாம் விரும்பிய முன்னோக்கு திசையை (கிப்லா) ஆக்கியது போலவே உங்களையும் சிறந்த, நீதியுள்ள சமூகமாக, கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பொதுவிவகாரங்கள் ஆகிய விஷயங்களில் நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளோம். இது, தமது சமூகங்களுக்கு எடுத்துரைக்குமாறு தனது தூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள் என்று மறுமைநாளில் அவர்களுக்காக நீங்கள் சாட்சியாளர்களாய் திகழ வேண்டும் என்பதற்காகவும் முஹம்மது நபி அவருக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று உங்கள்மீது அவர் சாட்சியாளராக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். யார் அல்லாஹ் விதித்த கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவனுக்குக் கட்டுப்படுகிறார்கள் என்பதையும் யார் தம் மனஇச்சையைப் பின்பற்றி மார்க்கத்தை விட்டு திரும்பிச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வதற்காகத்தான், நீர் முன்னோக்கியிருந்த கிப்லாவான பைதுல் முகத்தஸை நாம் மாற்றினோம். அல்லாஹ்வையும் அவன் தன் அடியார்களுக்கு விதித்த சட்டங்கள் யாவும் உயர்ந்த மதிநுட்பமிக்கவை என்பதையும் நம்பிக்கைக்கொள்வதற்கு அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, முதல் கிப்லா மாற்றப்பட்ட சம்பவம் மிகவும் கடினமானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான். கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னால் நீங்கள் தொழுத தொழுகைகளும் அந்த நம்பிக்கையைச் சார்ந்ததே. நிச்சயமாக அவன் மக்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். அவன் அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்த மாட்டான்; அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்க மாட்டான்.
2:144Страница 22
قَدۡ نَرَىٰ تَقَلُّبَ وَجۡهِكَ فِي ٱلسَّمَآءِۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبۡلَةٗ تَرۡضَىٰهَاۚ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ ١٤٤
Мы видели, как ты обращал свое лицо к небу, и Мы обратим тебя к кибле, которой ты останешься доволен. Обрати же свое лицо в сторону Заповедной мечети. Где бы вы ни были, обращайте ваши лица в ее сторону. Воистину, те, которым даровано Писание, знают, что такова истина от их Господа. Аллах не пребывает в неведении относительно того, что они совершают.
தூதரே! நீர் விரும்பும் திசைக்கு கிப்லா மாற்றப்படும் வஹி இறங்குவதை எதிர்பார்த்தவராக உமது முகமும், பார்வையும் வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் இப்போது முன்னோக்கும் பைதுல் மக்திஸ் கிப்லாவிற்குப் பதிலாக நீர் விரும்பும் கிப்லாவான கஅபாவின் பக்கம் உம்மைத் திருப்பியே தீருவோம். எனவே உமது முகத்தை மக்காவில் அமைந்துள்ள கஅபாவின் பக்கம் திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே, நீங்கள் எங்கிருந்தாலும் தொழும்போது அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் கிப்லா மாற்றம் அவர்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட உண்மையே என்பதை அவர்களின் வேதத்தின் மூலம் நன்கறிவார்கள். சத்தியத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அதற்கு அவர்களுக்கு கூலியும் வழங்குவான்.
2:145Страница 22
وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ١٤٥
Какое бы знамение ты ни показал тем, кому было даровано Писание, они все равно не станут обращаться к твоей кибле, а ты не станешь обращаться к их кибле. Никто не станет обращаться к кибле других. А если ты станешь потакать их желаниям после того, как к тебе явилось знание, то тогда ты окажешься в числе беззаконников.
தூதரே! வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கிப்லா மாற்றம் உண்மையானது என்று கூறும் அனைத்துவிதமான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டுவந்தாலும் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் உமது கிப்லாவை முன்னோக்க மாட்டார்கள். அல்லாஹ் உம்மை அவர்களின் கிப்லாவை விட்டும் திருப்பிய பிறகு நீரும் அதனை முன்னோக்கக்கூடியவர் அல்ல. அவர்களில் சிலர் வேறு சிலரின் கிப்லாவை முன்னோக்கக்கூடியவர்களும் அல்ல. ஏனெனில் அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரை நிராகரிப்பாளர்களாகக் கருதுகின்றார்கள். சந்தேகமற்ற சரியான ஞானம் உம்மிடம் வந்தபிறகு கிப்லாவின் விஷயத்திலும் சட்டதிட்டங்களிலும் நீர் அவர்களின் மனவிருப்பங்களை பின்பற்றினால் - நேர்வழியை விட்டுவிட்டு மனஇச்சையை பின்பற்றியதனால் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். நபியவர்களை விளித்து கூறப்பட்ட இந்த விஷயம் அந்த மக்களைப் பின்பற்றுவதன் விபரீதத்தை எடுத்துரைப்பதற்காகத்தான். இல்லாவிட்டால் அல்லாஹ் தன் தூதரை அவ்வாறு பின்பற்றுவதிலிருந்து பாதுகாத்துள்ளான். இது நபியவர்களுக்குப் பின் அவர்களின் சமூகத்தை எச்சரிப்பதற்காகத்தான்.
2:146Страница 23
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ ١٤٦
Те, кому Мы даровали Писание, знают его (Мухаммада или Каабу), как знают своих сыновей. Однако часть их сознательно скрывает истину.
நம்மால் வேதம் வழங்கப்பட்ட யூத, கிருஸ்தவ அறிஞர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி அறிவதைப்போல் முஹம்மத் (ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் அடையாளங்களில் ஒன்றான கிப்லா மாற்றத்தைப் பற்றியும் முழுமையாக அறிவார்கள். இருந்தும் அவர்களில் ஒருபிரிவினர், அவர் கொண்டு வந்த சத்தியத்தை பொறாமையினால் மறைக்கிறார்கள். அறிந்துகொண்டே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
2:147Страница 23
ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُمۡتَرِينَ ١٤٧
Истина - от твоего Господа. Посему не будь в числе тех, кто сомневается.
தூதரே! இதுதான் உமது இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம்கொள்வோரில் ஒருவராகிவிடாதீர்.
2:148Страница 23
وَلِكُلّٖ وِجۡهَةٌ هُوَ مُوَلِّيهَاۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ أَيۡنَ مَا تَكُونُواْ يَأۡتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًاۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ١٤٨
У каждого есть сторона, куда он обращается лицом. Стремитесь же опередить друг друга в добрых делах. Где бы вы ни были, Аллах приведет всех вас вместе. Воистину, Аллах способен на всякую вещь.
ஒவ்வொரு சமூகத்திற்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒரு முன்னோக்கு திசை இருக்கின்றது. எனவே அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சட்டங்களும், கிப்லாவும் வெவ்வெறாக இருக்கின்றன. அவை அல்லாஹ்வின் சட்டங்களாக, கட்டளைகளாக இருக்கும்வரை அவர்களின் வெவ்வேறுதிசைகள் எந்தத் தீங்கையும் அளிக்காது. எனவே நம்பிக்கையாளர்களே, உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட நற்செயல்களை விரைந்து செய்யுங்கள். உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அவன் ஒவ்வொன்றின்மீதும் பேராற்றலுடையவன். உங்களை ஒன்று சேர்ப்பதும் கூலிவழங்குவதும் அவனால் முடியாத காரியமல்ல.
2:149Страница 23
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ١٤٩
Откуда бы ты ни вышел, обращай лицо в сторону Заповедной мечети. Воистину, такова истина от твоего Господа. Аллах не пребывает в неведении относительно того, что вы совершаете.
தூதரே! நீரும் உம்மைப் பின்பற்றுபவர்களும் எந்த இடத்திலிருந்து வெளியேறினாலும், எங்கிருந்தாலும் தொழவிரும்பினால் கஅபாவை முன்னோக்கிக் கொள்ளுங்கள். இது உம் இறைவன் உமக்கு அறிவித்த உண்மையாகும். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்பவே உங்களுக்கு கூலி வழங்குவான்.
2:150Страница 23
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيۡكُمۡ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِي وَلِأُتِمَّ نِعۡمَتِي عَلَيۡكُمۡ وَلَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ١٥٠
Откуда бы ты ни вышел, обращай лицо в сторону Заповедной мечети. Где бы вы ни оказались, обращайте ваши лица в ее сторону, чтобы у людей, если только они не беззаконники, не было довода против вас. Не бойтесь их, а бойтесь Меня, чтобы Я довел до конца Мою милость к вам. Быть может, вы последуете прямым путем.
தூதரே! நீர் எந்த இடத்திலிருந்து வெளியேறினாலும், தொழவிரும்பினால் கஅபாவை முன்னோக்கிக் கொள்வீராக. நம்பிக்கையாளர்களே! நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தொழவிரும்பினால் அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். இது ஏனெனில், அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மக்களிடம் உங்களுக்கு எதிராக வாதம் புரிய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அநியாயக்காரர்கள் தங்களின் பிடிவாதத்தில்தான் நிலைத்திருப்பார்கள். அவர்கள் அபத்தமான ஆதாரங்களைக் கொண்டும் உங்களுக்கு எதிராக வாதாடுவார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள். உங்கள் இறைவன் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றிலிருந்து விலகி அவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள். மற்ற சமூகங்களிலிருந்து உங்களை வேறுபடுத்தி, உங்கள்மீது அவன் பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும், மனிதர்களுக்கான மிகச் மிகச் சிறந்த கிப்லாவை உங்களுக்கு காட்டித்தருவதற்காகவுமே கஅபாவை முன்னோக்குமாறு அவன் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.
2:151Страница 23
كَمَآ أَرۡسَلۡنَا فِيكُمۡ رَسُولٗا مِّنكُمۡ يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمۡ وَيُعَلِّمُكُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ ١٥١
Таким же образом Я отправил к вам Посланника из вашей среды, который читает вам Наши аяты, очищает вас, обучает вас Писанию и мудрости, обучает вас тому, чего вы не знали.
அதுபோன்று இன்னுமொரு அருட்கொடையையும் நாம் உங்களுக்கு அளித்துள்ளோம். அது, உங்களிலிருந்தே ஒரு தூதரை உங்களிடம் அனுப்பியுள்ளோம். அவர் நம்முடைய வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்; நன்மையான விஷயங்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டி, தீமையான, இழிவான விஷயங்ளை விட்டும் உங்களைத் தடுத்து உங்களைத் தூய்மைப்படுத்துகின்றார்; குர்ஆனையும், சுன்னாவையும் உங்களுக்கு போதிக்கின்றார்; நீங்கள் அறியாத ஈருலக விஷயங்களையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
2:152Страница 23
فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ وَٱشۡكُرُواْ لِي وَلَا تَكۡفُرُونِ ١٥٢
Поминайте Меня, и Я буду помнить о вас. Благодарите Меня и не будьте неблагодарны Мне.
உங்களின் உள்ளத்தாலும் உடலுறுப்புக்களாலும் என்னை நினைவுகூருங்கள். உங்களைப் பாராட்டி, பாதுகாத்து நான் உங்களை நினைவுகூருவேன். செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். நான் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். அவற்றை மறுத்து, தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்காகப் பயன்படுத்தி நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்.
2:153Страница 23
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ ١٥٣
О те, которые уверовали! Обратитесь за помощью к терпению и намазу. Воистину, Аллах - с терпеливыми.
நம்பிக்கைகொண்டவர்களே! எனக்குக் கட்டுப்படுவதற்கும் எனது கட்டளைக்கு அடிபணிவதற்கும் பொறுமையைக் கொண்டும் தொழுகைகையைக் கொண்டும் உதவிதேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அவர்களுக்கு பாக்கியம் அளித்து உதவியும் புரிகின்றான்.
2:154Страница 24
وَلَا تَقُولُواْ لِمَن يُقۡتَلُ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتُۢۚ بَلۡ أَحۡيَآءٞ وَلَٰكِن لَّا تَشۡعُرُونَ ١٥٤
Не говорите о тех, кто погиб на пути Аллаха: «Мертвецы!». Напротив, они живы, но вы не ощущаете этого.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதில் கொல்லப்பட்டவர்களை மற்றவர்களைப்போன்று இறந்தவர்கள் என்று கூறாதீர்கள். அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் உயிருடன் உள்ளார்கள். ஆயினும் அவர்கள் வாழ்வதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் அது வஹியின் மூலமாகவே அன்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாத பிரத்யேகமான வாழ்க்கையாகும்.
2:155Страница 24
وَلَنَبۡلُوَنَّكُم بِشَيۡءٖ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصٖ مِّنَ ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَٰتِۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ ١٥٥
Мы непременно испытаем вас незначительным страхом, голодом, потерей имущества, людей и плодов. Обрадуй же терпеливых,
எதிரிகள் குறித்த பயம், உணவுப்பற்றாக்குறையால் ஏற்படும் பசி, அழிதல் அல்லது பெறுவதற்கு சிரமம் ஆகியவற்றால் செல்வம் குறைதல், பேரழிவுகளினால் அல்லது அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைதலினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பூமியில் விளையும் பழங்களின் பற்றாக்குறை ஆகிய பல்வேறு துன்பங்களால் நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம். தூதரே! இத்தகைய துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்பவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சி காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறுவீராக.
2:156Страница 24
ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةٞ قَالُوٓاْ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيۡهِ رَٰجِعُونَ ١٥٦
которые, когда их постигает беда, говорят: «Воистину, мы принадлежим Аллаху, и к Нему мы вернемся».
அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவன் நாடியவாறு நம்மை ஆட்சிசெய்கின்றான். மறுமையில் அவன் பக்கமே நாம் திரும்பக்கூடியவர்கள். அவன்தான் நம்மைப்படைத்தான்; பல்வேறு அருட்கொடைகளைக்கொண்டு நம்மைச் சிறப்பித்தான். அவன் பக்கமே நாம் திரும்ப வேண்டியுள்ளது” என்று கூறுவார்கள்.
2:157Страница 24
أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ صَلَوَٰتٞ مِّن رَّبِّهِمۡ وَرَحۡمَةٞۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُهۡتَدُونَ ١٥٧
Они удостаиваются благословения своего Господа и милости. Они следуют прямым путем.
இத்தகைய பண்புகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்களை அல்லாஹ் வானவர்களிடத்தில் புகழ்ந்து கூறுகிறான். அவர்கள்மீது அவனுடைய அருள் இறங்குகின்றது. அவர்கள்தாம் சத்தியத்தின் பக்கம் நேர்வழிபெற்றவர்கள்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии