Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Бакара 2:233–256
2:233Страница 37
۞ وَٱلۡوَٰلِدَٰتُ يُرۡضِعۡنَ أَوۡلَٰدَهُنَّ حَوۡلَيۡنِ كَامِلَيۡنِۖ لِمَنۡ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَۚ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ لَا تُكَلَّفُ نَفۡسٌ إِلَّا وُسۡعَهَاۚ لَا تُضَآرَّ وَٰلِدَةُۢ بِوَلَدِهَا وَلَا مَوۡلُودٞ لَّهُۥ بِوَلَدِهِۦۚ وَعَلَى ٱلۡوَارِثِ مِثۡلُ ذَٰلِكَۗ فَإِنۡ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٖ مِّنۡهُمَا وَتَشَاوُرٖ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَاۗ وَإِنۡ أَرَدتُّمۡ أَن تَسۡتَرۡضِعُوٓاْ أَوۡلَٰدَكُمۡ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِذَا سَلَّمۡتُم مَّآ ءَاتَيۡتُم بِٱلۡمَعۡرُوفِۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ٢٣٣
Матери должны кормить своих детей грудью два полных года, если они хотят довести кормление грудью до конца. А тот, у кого родился ребенок, должен обеспечивать питание и одежду матери на разумных условиях. Ни на одного человека не возлагается сверх его возможностей. Нельзя причинять вред матери за ее ребенка, а также отцу за его ребенка. Такие же обязанности возлагаются на наследника отца. Если они пожелают отнять ребенка от груди по взаимному согласию и совету, то не совершат греха. И если вы пожелаете нанять кормилицу для ваших детей, то не совершите греха, если вы заплатите ей на разумных условиях. Бойтесь Аллаха и знайте, что Аллах видит то, что вы совершаете.
தாய்மார்கள் இரண்டு வருடம் முழுமையாக தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டும். இது பால்குடியை முழுமையாக நிறைவேற்ற விரும்புவர்களுக்கானது. விவாகரத்துச் செய்யப்பட்ட தாய்மார்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற தேவைகளுக்கு ஷரீஅத்திற்கு முரணில்லாத மக்களிடையே இருக்கும் வழக்கத்தின்படி தந்தையரே பொறுப்பெடுக்க வேண்டும். யார்மீதும் அல்லாஹ் அவரது சக்திக்குமீறி பொறுப்பு சாட்ட மாட்டான். தாய்தந்தையரில் யாரும் குழந்தையை மற்றவருக்குத் தீங்கிழைப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது. குழந்தையின் தந்தை இறந்து, அதற்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் குழந்தையின் சொத்துக்கு வாரிசாக அமையக்கூடியவர் தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டும். இரண்டுவருடம் நிறைவடைவதற்கு முன்னரே குழந்தையின் நலனை கருத்தில்கொண்டு ஒருவருக்கொருவர் ஆலோசித்து குழந்தைக்குப் பால்குடியை நிறுத்த தாய்தந்தையர் விரும்பினால் அவர்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. உங்கள் குழந்தைக்கு செவிலித்தாய்மார்களை வைத்து பாலூட்ட விரும்பினாலும் - அவர்களுக்கு அளிக்க வேண்டியதை குறைவின்றி, தாமதமின்றி முறையாக அளித்துவிட்டால் - உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள் !உங்களின் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் சேர்த்துவைத்த செயல்களின் அடிப்படையிலேயே அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
2:234Страница 38
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ٢٣٤
Если кто-либо из вас скончается и оставит после себя жен, то они должны выжидать четыре месяца и десять дней. Когда же они дождутся истечения положенного им срока, то на вас не будет греха, если они распорядятся собой разумным образом. Аллах ведает о том, что вы совершаете.
உங்களில் மரணமடைகின்றவர்களின் மனைவியர் கர்ப்பம் தரிக்காமல் இருந்தால் நான்கு மாதங்களும், பத்துநாட்களும் கட்டாயமாக காத்திருக்க வேண்டும். அந்த காலஇடைவெளியில் அவள் கணவனின் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது; தன்னை அலங்கரித்துக்கொள்ளவோ மணமுடித்துக்கொள்ளவோ கூடாது. அந்தத் தவணையை நிறைவுசெய்துவிட்டால், அவர்கள் மீது தடைசெய்யப்பட்டிருந்தவற்றை மார்க்கவரையறைக்குட்பட்டு செய்தால் பொறுப்பாளர்களே! உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். வெளிப்படையான, அந்தரங்கமான உங்களுடைய செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.
2:235Страница 38
وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا عَرَّضۡتُم بِهِۦ مِنۡ خِطۡبَةِ ٱلنِّسَآءِ أَوۡ أَكۡنَنتُمۡ فِيٓ أَنفُسِكُمۡۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمۡ سَتَذۡكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُواْ قَوۡلٗا مَّعۡرُوفٗاۚ وَلَا تَعۡزِمُواْ عُقۡدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡكِتَٰبُ أَجَلَهُۥۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِيٓ أَنفُسِكُمۡ فَٱحۡذَرُوهُۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ ٢٣٥
На вас не будет греха, если вы намекнете о сватовстве к женщинам или утаите это в душе. Аллах знает, что вы будете вспоминать о них. Не давайте им тайных обещаний и говорите только достойные слова. Не принимайте решение вступить в брак, пока не истечет предписанный срок. Знайте, что Аллаху известно о том, что в ваших душах. Остерегайтесь Его и знайте, что Аллах - Прощающий, Выдержанный.
கணவனை இழந்தோ விவாகரத்து செய்யப்பட்டோ இத்தாவில் காத்திருக்கும் பெண்களிடம் நேரிடையாக அல்லாமல் சாடைமாடையாக உங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதிலோ (உதாரணமாக, உன்னுடைய தவணை முடிந்துவிட்டால் எனக்குத் தகவல் தெரிவி) உங்கள் உள்ளத்தில் அந்தப் பெண்களை மணமுடிக்க வேண்டும் என்று ஆசைகொள்வதிலோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்களின் மீது உங்களுக்குள்ள கடுமையான விருப்பத்தினால் அவர்களை நீங்கள் நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் வெளிப்படையாக இன்றி சாடையாக உங்களது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு அனுமதித்துள்ளான். அவ்வாறின்றி இத்தாவில் காத்திருக்கும்போது அவர்களிடம் இரகசியமாக வாக்களிக்கவும் வேண்டாம்; திருமண ஒப்பந்தம் செய்யவும் வேண்டாம். அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆசைகளையும் அவன் அறிவான்.எனவே எச்சரிக்கையாக இருங்கள். அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டுவிடாதீர்கள். அறிந்துகொள்ளுங்கள், தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன்; அவன் சகிப்புத்தன்மைமிக்கவன்; அவசரப்பட்டு தண்டித்துவிட மாட்டான்.
2:236Страница 38
لَّا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوهُنَّ أَوۡ تَفۡرِضُواْ لَهُنَّ فَرِيضَةٗۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلۡمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلۡمُقۡتِرِ قَدَرُهُۥ مَتَٰعَۢا بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُحۡسِنِينَ ٢٣٦
На вас не будет греха, если вы разведетесь с женами, не коснувшись их и не установив для них обязательное вознаграждение (брачный дар). Одарите их разумным образом, и пусть богатый поступит по мере своих возможностей, а бедный - по мере своих. Такова обязанность творящих добро.
நீங்கள் மணமுடித்துக்கொண்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதற்கும் மணக்கொடையை நிர்ணயிப்பதற்கும் முன்னரே அவர்களை விவாகரத்து செய்வது தவறல்ல. இந்த நிலமையில் அவர்களுக்கு நீங்கள் மணக்கொடை அளிப்பதும் அவசியமற்றது. ஆனால் உங்களின் வசதிக்கேற்ப அவர்கள் பயன்பெற்று மனதை தேற்றிக்கொள்ளும் அளவு பொருளைஅவர்களுக்கு அளித்துவிட வேண்டும். இவ்வாறு வழங்குவது தமது நடவடிக்கைகளில் நல்லோர்கள் மீது அவசியமாகும்.
2:237Страница 38
وَإِن طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَهُنَّ فَرِيضَةٗ فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ إِلَّآ أَن يَعۡفُونَ أَوۡ يَعۡفُوَاْ ٱلَّذِي بِيَدِهِۦ عُقۡدَةُ ٱلنِّكَاحِۚ وَأَن تَعۡفُوٓاْ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۚ وَلَا تَنسَوُاْ ٱلۡفَضۡلَ بَيۡنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ٢٣٧
Если же вы разведетесь с ними до того, как коснулись их, но после того, как установили обязательное вознаграждение (брачный дар), то отдайте им половину его, если только они не простят или не простит тот, в чьих руках брачное соглашение. Если вы простите, то это будет ближе к богобоязненности. Не забывайте оказывать милость друг к другу. Воистину, Аллах видит то, что вы совершаете.
நீங்கள் மணக்கொடையை நிர்ணயித்து மணமுடித்துக் கொண்ட பெண்களுடன் உடலுறவுகொள்வதற்கு முன்னரே அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் நிர்ணயித்துக்கொண்ட மணக்கொடையில் பாதியை வழங்குவது உங்கள்மீது கடமையாகும். விரும்பினால் அந்தப் பெண்கள் -தெளிவுள்ளவர்களாக இருந்தால்- விட்டுக்கொடுத்துவிடலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட முழுத்தொகையையும் ஆண்கள் வழங்கிவிடலாம். நீங்கள் உங்களிடையே உரிமைகளில் விட்டுக்கொடுத்துக்கொள்வதுதான் இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமானது. மக்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்வதை, உரிமைகளில் விட்டுக்கொடுப்பதை விட்டுவிடாதீர்கள். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதற்காக நற்காரியங்களில் முழுமூச்சுடன் செயல்படுங்கள்.
2:238Страница 39
حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ ٢٣٨
Оберегайте намазы, и особенно, средний (послеполуденный) намаз. И стойте перед Аллахом смиренно.
அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகைகளை முழுமையாக பேணிக்கொள்ளுங்கள். நடுத்தொழுகையான அசர் தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள். உங்களுடைய தொழுகையில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக, அவனை அஞ்சியவர்களாக நில்லுங்கள்.
2:239Страница 39
فَإِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا أَوۡ رُكۡبَانٗاۖ فَإِذَآ أَمِنتُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ ٢٣٩
Если вы испытываете страх, то молитесь на ходу или верхом. Когда же вы окажетесь в безопасности, то поминайте Аллаха так, как Он научил вас тому, чего вы не знали.
எதிரிகள் மற்றும் பிற விஷயங்களால் உங்களுக்கு அச்சமேற்பட்டு உங்களால் தொழுகையை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லையெனில் நடந்தவாறு அல்லது ஒட்டகம், குதிரை போன்றவற்றில் பயணித்தவாறு அல்லது இயலுமான ஏதாவது முறையில் தொழுதுகொள்ளுங்கள். அச்சம் நீங்கிவிட்டால் தொழுகை உட்பட அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்தவாறு அவனை நினைவுகூருங்கள். நீங்கள் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத்தந்ததற்காகவும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.
2:240Страница 39
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا وَصِيَّةٗ لِّأَزۡوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلۡحَوۡلِ غَيۡرَ إِخۡرَاجٖۚ فَإِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِي مَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ مِن مَّعۡرُوفٖۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ ٢٤٠
Если кто-либо из вас скончается и оставит после себя жен, то они должны завещать, чтобы их обеспечивали в течение одного года и не прогоняли. Если же они сами уйдут, то на вас не будет греха за то, что они распорядятся собой разумным образом. Аллах - Могущественный, Мудрый.
உங்களில் மனைவியரை விட்டுவிட்டு மரணமடைபவர்கள், ஒருவருடம்வரை முழுமையாக அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற செலவீனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மரணசாசனம் செய்யட்டும். அந்தப் பெண்ணின் துக்கத்தைத் துடைக்குமுகமாகவும் இறந்தவரின் உயிலை நிறைவேற்றுவதற்காகவும் அவரது வாரிசுகள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக்கூடாது. அந்தப் பெண்கள் தாமாகவே வெளியேறி தங்களை அலங்கரித்துக் கொண்டால் அவர்கள்மீதோ உங்கள்மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் ஏற்படுத்திய விதிகளில், திட்டமிடலில், சட்டமியற்றுவதில் ஞானம்மிக்கவன். (குர்ஆன் விரிவுரையாளர்களில் பெரும்பாலோர் இந்த வசனத்தில் கூறப்பட்ட கட்டளை மேற்குறிப்பிட்ட 234வது வசனத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றே கருதுகிறார்கள்)
2:241Страница 39
وَلِلۡمُطَلَّقَٰتِ مَتَٰعُۢ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ ٢٤١
Разведенных жен полагается обеспечивать разумным образом. Такова обязанность богобоязненных.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு அவர்களது துவண்டுபோயிருக்கும் உள்ளங்களை தேற்றும்விதமாக உணவு, உடை போன்ற செலவீனங்கள் கணவர்களின் வசதிக்கேற்ப நல்லமுறையில் வழங்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து அவனை அஞ்சுபவர்கள் மீது இது கடமையாகும்.
2:242Страница 39
كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٢٤٢
Так Аллах разъясняет вам Свои знамения, - быть может, вы уразумеете.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் விளங்கி அவற்றின் அடிப்படையில் செயல்படும் பொருட்டும், இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மைகளைப் பெறும் பொருட்டும் இதுபோன்ற அவனுடைய சட்டங்களையும் வரம்புகளையும் உள்ளடக்கிய தெளிவான வசனங்களைக்கொண்டு அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
2:243Страница 39
۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِمۡ وَهُمۡ أُلُوفٌ حَذَرَ ٱلۡمَوۡتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُواْ ثُمَّ أَحۡيَٰهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ ٢٤٣
Разве ты не знаешь о тех, которые покинули свои жилища, опасаясь смерти, хотя их были тысячи? Аллах сказал им: «Умрите!». Затем Он оживил их. Воистину, Аллах милостив к людям, однако большинство людей неблагодарны.
தூதரே! தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களின் செய்தி உமக்குத் தெரியாதா? கொள்ளை நோயினாலோ பிற விஷயங்களினாலோ மரணத்திற்கு அஞ்சிய அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அவர்கள் இஸ்ராயீன் மக்களைச் சேர்ந்த ஒரு பிரிவினர். அல்லாஹ் அவர்களிடம்: "மரணமடையுங்கள்" என்று கூறினான். எனவே அவர்கள் மரணமடைந்தார்கள். பின்னர் அதிகாரம் அனைத்தும் தன் கைவசமே உள்ளது என்பதையும் அவர்கள் தங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக அவன் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது பேரருள் புரிபவன். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதில்லை.
2:244Страница 39
وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ٢٤٤
Сражайтесь на пути Аллаха и знайте, что Аллах - Слышащий, Знающий.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! அவனுடைய மார்க்கத்திற்கு உதவிசெய்வதற்காக, அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய எதிரிகளுடன் போரிடுங்கள். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் பேசக்கூடியதை அவன் செவியேற்பவன்; உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன்; அவற்றிற்கேற்பவே அவன் உங்களுக்குக் கூலி வழங்குகிறான்.
2:245Страница 39
مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ وَٱللَّهُ يَقۡبِضُ وَيَبۡصُۜطُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٢٤٥
Если кто-либо одолжит Аллаху прекрасный заем, то Он увеличит его многократно. Аллах удерживает и щедро одаряет, и к Нему вы будете возвращены.
தன் செல்வத்தை நல்லெண்ணத்துடனும், தூய உள்ளத்துடனும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்து கடனளிப்பவரின் செயலைச் செய்பவர் யார்? அல்லாஹ் அவருக்குப் பன்மடங்காக்கித் தருவான். வாழ்வாதாரத்திலும் ஆரோக்கியத்திலும், இன்னபிற விஷயங்களிலும் அல்லாஹ்வே நெருக்கடியையும் விசாலத்தையும் ஏற்படுத்துகிறான். மறுமையில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கிடுவான்.
2:246Страница 40
أَلَمۡ تَرَ إِلَى ٱلۡمَلَإِ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰٓ إِذۡ قَالُواْ لِنَبِيّٖ لَّهُمُ ٱبۡعَثۡ لَنَا مَلِكٗا نُّقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِۖ قَالَ هَلۡ عَسَيۡتُمۡ إِن كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ أَلَّا تُقَٰتِلُواْۖ قَالُواْ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَدۡ أُخۡرِجۡنَا مِن دِيَٰرِنَا وَأَبۡنَآئِنَاۖ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ تَوَلَّوۡاْ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ٢٤٦
Не знаешь ли ты о знати сынов Исраила (Израиля), живших после Мусы (Моисея)? Они сказали своему пророку: «Назначь для нас царя, чтобы мы сражались на пути Аллаха». Он сказал: «Может ли быть, что если вам будет предписано сражаться, вы не станете сражаться?». Они сказали: «Отчего же нам не сражаться на пути Аллаха, если мы изгнаны из наших жилищ и разлучены с нашими детьми?». Когда же им было предписано сражаться, они отвернулись, за исключением немногих. Аллах ведает о беззаконниках.
தூதரே! இஸ்ராயீலின் மக்களில் மூசாவின் காலத்திற்குப்பின் வாழ்ந்த கண்ணியமானவர்களின் செய்தி உமது அறிவுக்கு எட்டவில்லையா? அவர்கள் தங்களின் தூதரிடம் கூறினார்கள்: எங்களுக்காக ஒரு அரசனை ஏற்படுத்துங்கள். நாங்கள் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம். அதற்கு அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்கள்மீது போரை கடமையாக்கி, நீங்கள் அவனுடைய பாதையில் போரிடாமல் இருக்கலாம் அல்லவா? அவருடைய எண்ணத்தை மறுத்தவர்களாகக் கூறினார்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான காரணிகள் அனைத்தையும் நாங்கள் பெற்றிருந்தும் எது அவனுடைய பாதையில் போரிடுவதை விட்டும் எங்களைத் தடுக்கும்? எங்களின் எதிரிகள் எங்களின் நாட்டை விட்டு எங்களை வெளியேற்றியுள்ளார்கள்; எங்களின் பிள்ளைகளைக் கைதிகளாகப் பிடித்துள்ளார்கள். எங்களின் நாட்டையும் பிள்ளைகளையும் மீட்டுவதற்காக நாங்கள் போரிடுவோம். அல்லாஹ் அவர்கள்மீது போரைக் கடமையாக்கியபோது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது புறக்கணித்துவிட்டார்கள். அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை முறித்து அவனுடைய கட்டளைகளைப் புறக்கணித்த அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கான தண்டனையை அவன் அவர்களுக்கு வழங்கிடுவான்.
2:247Страница 40
وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ٱللَّهَ قَدۡ بَعَثَ لَكُمۡ طَالُوتَ مَلِكٗاۚ قَالُوٓاْ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ أَحَقُّ بِٱلۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةٗ مِّنَ ٱلۡمَالِۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰهُ عَلَيۡكُمۡ وَزَادَهُۥ بَسۡطَةٗ فِي ٱلۡعِلۡمِ وَٱلۡجِسۡمِۖ وَٱللَّهُ يُؤۡتِي مُلۡكَهُۥ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ٢٤٧
Их пророк сказал им: «Аллах назначил вам царем Талута (Саула)». Они сказали: «Как он может стать нашим царем, если мы более достойны править, чем он, и он лишен достатка в имуществе?». Он сказал: «Аллах предпочел его вам и щедро одарил его знаниями и статью. Аллах дарует Свое царство, кому пожелает. Аллах - Объемлющий, Знающий».
அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்களுக்கு தாலூத்தை அரசராக நியமித்துள்ளான். நீங்கள் அவருடைய தலைமையில் போர்புரிய வேண்டும். அவர்களின் தலைவர்கள் இதனை ஆட்சேபித்தவர்களாகக் கூறினார்கள்: அவர் எப்படி எங்களை ஆட்சிசெலுத்த முடியும்? அவரைவிட நாங்கள்தாம் அரசாட்சிக்குத் தகுதியானவர்கள். அவர் அரச வாரிசுகளில் உள்ளவராகவும் இல்லை; ஆட்சிசெய்யும் அளவு பெருஞ்செல்வம் படைத்தவராகவும் இல்லையே!. அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களைவிட அவருக்கு விசாலமான கல்வியையும் உடல்பலத்தையும் வழங்கியிருக்கிறான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தன் அருளால், அறிவால் ஆட்சியதிகாரத்தை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமான அருளாளன். தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். தன் படைப்புகளில் அதற்குத் தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.
2:248Страница 40
وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ءَايَةَ مُلۡكِهِۦٓ أَن يَأۡتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٞ مِّن رَّبِّكُمۡ وَبَقِيَّةٞ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَٰرُونَ تَحۡمِلُهُ ٱلۡمَلَٰٓئِكَةُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٢٤٨
Их пророк сказал им: «Знамением его царствия станет то, что к вам явится сундук с умиротворением от вашего Господа. В нем будет то, что осталось после семьи Мусы (Моисея) и семьи Харуна (Аарона). Его принесут ангелы. Это будет знамением для вас, если только вы являетесь верующими».
அவர்களின் தூதர் கூறினார்: அவர்தான் உங்களுக்கு அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம், இஸ்ராயீலின் மக்கள் புனிதமாக கருதிவந்த, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்டியை அல்லாஹ் உங்களுக்குத் திரும்பத் தருவதாகும். அதில் நிம்மதியும் மூசா மற்றும் ஹாரூனின் வழிவந்தவர்கள் விட்டுச் சென்ற தடி, சில ஏடுகள் போன்றவையும் இருக்கும். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் தெளிவான சான்று இருக்கின்றது.
2:249Страница 41
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلۡجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبۡتَلِيكُم بِنَهَرٖ فَمَن شَرِبَ مِنۡهُ فَلَيۡسَ مِنِّي وَمَن لَّمۡ يَطۡعَمۡهُ فَإِنَّهُۥ مِنِّيٓ إِلَّا مَنِ ٱغۡتَرَفَ غُرۡفَةَۢ بِيَدِهِۦۚ فَشَرِبُواْ مِنۡهُ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ قَالُواْ لَا طَاقَةَ لَنَا ٱلۡيَوۡمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ ٱللَّهِ كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ ٢٤٩
Когда Талут (Саул) отправился в путь с войском, он сказал: «Аллах подвергнет вас испытанию рекой. Кто напьется из нее, тот не будет со мной. А кто не отведает ее, тот будет со мной. Но это не относится к тем, кто зачерпнет пригоршню воды». Напились из нее все, за исключением немногих из них. Когда же он и уверовавшие вместе с ним перебрались через реку, они сказали: «Сегодня мы не справимся с Джалутом (Голиафом) и его войском». Но те, которые были убеждены в том, что встретятся с Аллахом, сказали: «Сколько малочисленных отрядов победило многочисленные отряды по воле Аллаха!». Ведь Аллах - с терпеливыми.
தாலூத் படைகளுடன் ஊரைவிட்டுக் புறப்பட்டபோது அவர்களிடம் கூறினார்: அல்லாஹ் ஒரு ஆற்றைக்கொண்டு உங்களைச் சோதிப்பான். அதிலிருந்து நீரை அருந்துபவர் என் வழிமுறையைச் சார்ந்தவர் அல்ல. அவர் என்னுடன் சேர்ந்து போரிடக்கூடாது. அதிலிருந்து யார் நீர் அருந்தவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர்; போரில் என்னுடன் பங்குகொள்வார். ஆயினும் நிர்ப்பந்தத்தில் ஒரு பிடி அளவுக்கு நீர் அருந்திக் கொள்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. கடுமையான தாகம் இருந்தபோதும் அவர்களில் அருந்தாது பொறுமையாக இருந்த சிலரைத்தவிர படையினர் அனைவரும் அதிலிருந்து நீர் அருந்திவிட்டனர். தாலூத்தும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அந்த ஆற்றைக் கடந்தபோது அவர்களில் சிலர் கூறினார்கள்: இன்று ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் போரிட எங்களிடம் சக்தி இல்லை. அப்போது மறுமைநாளில் அல்லாஹ்வை உறுதியாகச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட, குறைந்த எண்ணிக்கையுடைய எத்தனையோ சிறுகூட்டங்கள் அல்லாஹ்வை நிராகரித்த பெரும் எண்ணிக்கையுடைய கூட்டங்களை அவனுடைய அனுமதிகொண்டு அவனுடைய உதவியால் வென்றிருக்கின்றன. அல்லாஹ்வின் உதவி ஈமானைக்கொண்டே கிடைக்குமே அன்றி அதிக எண்ணிக்கையைக் கொண்டு அல்ல. அல்லாஹ் தன் அடியார்களில் பொறுமையாளர்களுக்கு ஆதரவளிப்பவனாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கின்றான்.
2:250Страница 41
وَلَمَّا بَرَزُواْ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُواْ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ٢٥٠
Когда они показались перед Джалутом (Голиафом) и его войском, то сказали: «Господь наш! Пролей на нас терпение, укрепи наши стопы и помоги нам одержать победу над неверующими людьми».
ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் இவர்கள் வெளிப்பட்டபோது பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்: எங்கள் இறைவா! எங்கள் உள்ளத்தில் பொறுமையைப் பொழிவாயாக. எதிரியிடம் தோற்று புறங்காட்டி ஓடிவிடாத அளவுக்கு எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. உன் ஆற்றலையும் ஆதரவையும் கொண்டு உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.
2:251Страница 41
فَهَزَمُوهُم بِإِذۡنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّفَسَدَتِ ٱلۡأَرۡضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ ٢٥١
Они разгромили их по воле Аллаха. Давуд (Давид) убил Джалута (Голиафа), и Аллах даровал ему царство и мудрость и научил его тому, чему пожелал. Если бы Аллах не сдерживал одних людей посредством других, то земля пришла бы в расстройство. Однако Аллах милостив к мирам.
அல்லாஹ்வின் அனுமதிகொண்டு தாலூத்தின் படைகள் ஜாலூத்தின் படைகளைத் தோற்கடித்தது. தாவூத் ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினான். தான் நாடிய பல்வேறு கலைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தான். இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நன்மைதரக்கூடிய விஷயங்களை அவருக்கு ஒன்றுசேர்த்து வழங்கினான். மக்களில் சிலர் செய்யும் குழப்பத்தை சிலரைக் கொண்டு தடுக்கும் வழிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தவில்லையெனில் குழப்பவாதிகளின் ஆதிக்கத்தால் பூமி சீர்குலைந்துபோயிருக்கும். ஆயினும் அல்லாஹ் படைப்புகள் அனைத்தின்மீதும் பேரருள்புரிபவனாக இருக்கின்றான்.
2:252Страница 41
تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۚ وَإِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ٢٥٢
Таковы аяты Аллаха. Мы читаем их тебе истинно, и ты - один из посланников.
தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய நாம் உமக்கு எடுத்துரைக்கும் வசனங்கள் தெளிவான அல்லாஹ்வின் வசனங்களாகும். நிச்சயமாக நீர் அகிலங்களின் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவராவீர்.
2:253Страница 42
۞ تِلۡكَ ٱلرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۘ مِّنۡهُم مَّن كَلَّمَ ٱللَّهُۖ وَرَفَعَ بَعۡضَهُمۡ دَرَجَٰتٖۚ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخۡتَلَفُواْ فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ وَمِنۡهُم مَّن كَفَرَۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلُواْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ ٢٥٣
Таковы посланники. Одним из них Мы отдали предпочтение перед другими. Среди них были такие, с которыми говорил Аллах, а некоторых из них Аллах возвысил до степеней. Мы даровали Исе (Иисусу), сыну Марьям (Марии), ясные знамения и поддержали его Святым Духом (Джибрилем). Если бы Аллах пожелал, то следующие за ними поколения не сражались бы друг с другом после того, как к ним явились ясные знамения. Однако они разошлись во мнениях, одни из них уверовали, а другие не уверовали. Если бы Аллах пожелал, то они не сражались бы друг с другом, но Аллах вершит то, что пожелает.
நாம் உமக்கு எடுத்துக்கூறிய இந்தத் தூதர்களில் சிலரை வஹியிலும் பின்பற்றும் மக்களிலும், அந்தஸ்திலும் சிலரைவிட மேன்மைப்படுத்தியுள்ளோம். அவர்களில் மூசா போன்ற சிலருடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். அவர்களில் சிலருக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளான், உதாரணமாக, முஹம்மது நபிக்கு. அல்லாஹ் அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் இறுதித் தூதராக அனுப்பினான். அவர்களின் சமூகம் மற்ற எல்லா சமூகங்களைவிடவும் சிறப்பிக்கப்பட்டது. நாம் மர்யமின் மகன் ஈசாவுக்கு அவருடைய தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான அற்புதங்களை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். அவர் அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு ஜிப்ரீலைக்கொண்டு நாம் அவரைப் பலப்படுத்தினோம். அல்லாஹ் நாடியிருந்தால்; தூதர்களுக்குப்பின் வந்தவர்கள், தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள்; பிளவுபட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டார்கள்; சிலர் அவனை நிராகரித்தார்கள். அவர்கள் சண்டையிடக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவன் தான் நாடியதைச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் கருணையால் ஈமானின் பக்கம் வழிகாட்டுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியுடன், அறிவுடன் வழிதவறச் செய்கிறான்.
2:254Страница 42
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خُلَّةٞ وَلَا شَفَٰعَةٞۗ وَٱلۡكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ ٢٥٤
О те, которые уверовали! Делайте пожертвования из того, чем Мы наделили вас, до наступления дня, когда не будет ни торговли, ни дружбы, ни заступничества. А неверующие являются беззаконниками.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மறுமைநாள் வருவதற்கு முன்னரே நாம் உங்களுக்கு வழங்கிய ஹலாலான செல்வங்களிலிருந்து செலவுசெய்யுங்கள். அந்நாளில் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியவற்றை சம்பாதிக்கக்கூடிய வியாபாரத்தையோ கடினமான சூழ்நிலைகளில் உதவக்கூடிய நட்பையோ தீங்கிலிருந்து காத்து நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய பரிந்துரையையோ பெறமுடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்கள்தாம் தமது நிராகரிப்பின் காரணமாக உண்மையில் அநியாயக்காரர்களாக உள்ளனர்.
2:255Страница 42
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةٞ وَلَا نَوۡمٞۚ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَيۡءٖ مِّنۡ عِلۡمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ ٢٥٥
Аллах - нет божества, кроме Него, Живого, Вседержителя. Им не овладевают ни дремота, ни сон. Ему принадлежит то, что на небесах, и то, что на земле. Кто станет заступаться перед Ним без Его дозволения? Он знает их будущее и прошлое. Они постигают из Его знания только то, что Он пожелает. Его Престол (Подножие Трона) объемлет небеса и землю, и не тяготит Его оберегание их. Он - Возвышенный, Великий.
அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவனாவான். அவனைத்தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் யாரும் இல்லை. அவன் மரணமோ குறைகளோ அற்ற, முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். படைப்புகள் அனைத்தும் அவன் மூலமே உருவாகின. எல்லா சூழ்நிலைகளிலும் அவனிடம் தேவையுடையவையாக இருக்கின்றன. பரிபூரண வாழ்வுடையவன் என்பதனால் சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ அவனைப் பீடிக்காது. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே சொந்தம். அவனுடைய அனுமதி,பொருத்தம் பெற்றே தவிர அவனிடம் யாரும் பரிந்துரை செய்ய முடியாது. கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும் எதிர்காலத்தில் நிகழப்போகின்ற அனைத்தையும் அவன் அறிவான். அவனுடைய அறிவிலிருந்து யாரும் எதையும் அறிந்துகொள்ள முடியாது. ஆயினும் அவன் தான் நாடியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றைத்தவிர. அவனுடைய குர்ஸீ - அவன் கால்வைக்கும் இடம் -விசாலமும் பிரமாண்டமும் மிக்க வானங்களையும் பூமியையும்விட விசாலமானது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்குக் கடினமானதல்ல. அவன் தன் உள்ளமை, அந்தஸ்து, ஆதிக்கம் செலுத்துதல் ஆகியவற்றில் மிக உயர்ந்தவன். தன் ஆட்சியதிகாரத்தில் மிகப்பெரியவன்.
2:256Страница 42
لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشۡدُ مِنَ ٱلۡغَيِّۚ فَمَن يَكۡفُرۡ بِٱلطَّٰغُوتِ وَيُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ٢٥٦
Нет принуждения в религии. Прямой путь уже отличился от заблуждения. Кто не верует в тагута, а верует в Аллаха, тот ухватился за самую надежную рукоять, которая никогда не сломается. Аллах - Слышащий, Знающий.
இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைவதற்கு யாருக்கும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அது தெளிவான சத்தியமாகும். எனவே எவரையும் வற்புறுத்தி அதில் நுழைவிக்க வேண்டிய அவசியமில்லை. நேர்வழியிலிருந்து வழிகேடு தெளிவாகிவிட்டது. எவர் அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, அவற்றிலிருந்து முழுமையாக நீங்கி அல்லாஹ் ஒருவன்மீது நம்பிக்கைகொண்டாரோ அவர் மறுமைநாளில் வெற்றியைத் தரக்கூடிய, என்றும் அறுபடாத மார்க்கத்தின் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் தன் அடியார்கள் பேசக்கூடியதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலிவழங்குவான்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии