Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Бакара 2:282–286
2:282Страница 48
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَدَايَنتُم بِدَيۡنٍ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى فَٱكۡتُبُوهُۚ وَلۡيَكۡتُب بَّيۡنَكُمۡ كَاتِبُۢ بِٱلۡعَدۡلِۚ وَلَا يَأۡبَ كَاتِبٌ أَن يَكۡتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُۚ فَلۡيَكۡتُبۡ وَلۡيُمۡلِلِ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبۡخَسۡ مِنۡهُ شَيۡـٔٗاۚ فَإِن كَانَ ٱلَّذِي عَلَيۡهِ ٱلۡحَقُّ سَفِيهًا أَوۡ ضَعِيفًا أَوۡ لَا يَسۡتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلۡيُمۡلِلۡ وَلِيُّهُۥ بِٱلۡعَدۡلِۚ وَٱسۡتَشۡهِدُواْ شَهِيدَيۡنِ مِن رِّجَالِكُمۡۖ فَإِن لَّمۡ يَكُونَا رَجُلَيۡنِ فَرَجُلٞ وَٱمۡرَأَتَانِ مِمَّن تَرۡضَوۡنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحۡدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحۡدَىٰهُمَا ٱلۡأُخۡرَىٰۚ وَلَا يَأۡبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُواْۚ وَلَا تَسۡـَٔمُوٓاْ أَن تَكۡتُبُوهُ صَغِيرًا أَوۡ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦۚ ذَٰلِكُمۡ أَقۡسَطُ عِندَ ٱللَّهِ وَأَقۡوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدۡنَىٰٓ أَلَّا تَرۡتَابُوٓاْ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةٗ تُدِيرُونَهَا بَيۡنَكُمۡ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَلَّا تَكۡتُبُوهَاۗ وَأَشۡهِدُوٓاْ إِذَا تَبَايَعۡتُمۡۚ وَلَا يُضَآرَّ كَاتِبٞ وَلَا شَهِيدٞۚ وَإِن تَفۡعَلُواْ فَإِنَّهُۥ فُسُوقُۢ بِكُمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَۖ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٢٨٢
О те, которые уверовали! Если вы заключаете договор о долге на определенный срок, то записывайте его, и пусть писарь записывает его справедливо. Писарь не должен отказываться записать его так, как его научил Аллах. Пусть он пишет, и пусть берущий взаймы диктует и страшится Аллаха, своего Господа, и ничего не убавляет из него. А если берущий взаймы слабоумен, немощен или не способен диктовать самостоятельно, пусть его доверенное лицо диктует по справедливости. В качестве свидетелей призовите двух мужчин из вашего числа. Если не будет двух мужчин, то одного мужчину и двух женщин, которых вы согласны признать свидетелями, и если одна из них ошибется, то другая напомнит ей. Свидетели не должны отказываться, если их приглашают. Не тяготитесь записать договор, будь он большим или малым, вплоть до указания его срока. Так будет справедливее перед Аллахом, убедительнее для свидетельства и лучше для избежания сомнений. Но если вы заключаете наличную сделку и расплачиваетесь друг с другом на месте, то на вас не будет греха, если вы не запишите ее. Но призывайте свидетелей, если вы заключаете торговый договор, и не причиняйте вреда писарю и свидетелю. Если же вы поступите так, то совершите грех. Бойтесь Аллаха - Аллах обучает вас. Аллах ведает о всякой вещи.
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களில் ஒருவர் மற்றவருக்கு தவணை வழங்கி கடனளித்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களில் எழுதுபவர் மார்க்கத்தின்படி உண்மையாகவும் நியாயமாகவும் எழுதிக் கொள்ளட்டும். எழுதக்கூடியவர் அல்லாஹ் கற்றுத் தந்தவாறு நியாயமாக எழுதுவதை தவிர்ந்துகொள்ள வேண்டாம். கடனாளி சொல்வதை இவர் எழுதட்டும். அப்பொழுதுதான் அவர் அங்கீகரித்ததாக ஆகும். அவரும் தம் இறைவனை அஞ்சி கடனாக அளிக்கப்பட்ட பொருளின் வகையிலோ அளவிலோ அமைப்பிலோ எந்தக் குறைவும் செய்துவிட வேண்டாம். கடனாளி விவகாரங்களை நிர்வகிக்கத் தெரியாதவராகவோ சிறுவயது அல்லது மனப்பிறழ்வின் காரணமாக பலவீனராகவோ ஊமையாகவோ இருந்தால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நியாயமாக வாசகம் சொல்லட்டும். நியாயமாக சாட்சிசொல்லக்கூடிய இரு அறிவுள்ள ஆண் சாட்சிகளை தேடிக்கொள்ளுங்கள். இரு ஆண் சாட்சிகளை நீங்கள் பெறவில்லையெனில் ஒரு ஆண் சாட்சியையும் நம்பகப்பூர்வமான இரு பெண் சாட்சிகளையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களில் ஒருத்தி மறந்துவிட்டால் இன்னொருத்தி நினைவூட்டுவாள். கடனுக்கு சாட்சியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டால் சாட்சிகள் மறுக்க வேண்டாம். சாட்சி கூறுமாறு வேண்டப்பட்டால் சாட்சிபகர்வது அவர்கள் மீது கடமையாகும். கடன் சிறியதோ பெரியதோ அதனை குறித்த தவணை வரை எழுதி வைப்பதைவிட்டும் நீங்கள் சடைந்து விடாதீர்கள். கடனை எழுதி வைத்துக் கொள்வதே அல்லாஹ்வின் மார்க்கத்தில் நியாயமானதும் நேர்த்தியான சாட்சியத்துக்கு வழிவகுப்பதுமாகும்; கடனின் வகை, அளவு, காலம் போன்றவற்றைக் குறித்து ஏற்படும் சந்தேகங்களைப் போக்குவதற்கு மிகவும் ஏற்றது. ஆயினும் உங்களிடையே உடனடியாக நடைபெறும் வியாபாரமாக இருந்தாலே தவிர. அவசியமில்லை என்பதனால் அதனை எழுதிக் கொள்ளாமல் இருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்து வேறுபாட்டிற்கான காரணிகளை நீக்குவதற்கு அவன் சாட்சிகளை ஏற்படுத்துவதை விதித்துள்ளான். எனவே சாட்சி கூறக்கூடியவர்களோ எழுதக்கூடியவர்களோ ஒருபோதும் துன்புறுத்தப்படக்கூடாது. அவ்வாறு அவர்கள் துன்புறுத்தப்படுவது பாவமாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் பலனளிப்பவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருகின்றான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
2:283Страница 49
۞ وَإِن كُنتُمۡ عَلَىٰ سَفَرٖ وَلَمۡ تَجِدُواْ كَاتِبٗا فَرِهَٰنٞ مَّقۡبُوضَةٞۖ فَإِنۡ أَمِنَ بَعۡضُكُم بَعۡضٗا فَلۡيُؤَدِّ ٱلَّذِي ٱؤۡتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥۗ وَلَا تَكۡتُمُواْ ٱلشَّهَٰدَةَۚ وَمَن يَكۡتُمۡهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٞ قَلۡبُهُۥۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ٢٨٣
Если вы окажетесь в поездке и не найдете писаря, то назначьте залог, который можно получить в руки. Но если один из вас доверяет другому, то пусть тот, кому доверено, вернет доверенное ему и убоится Аллаха, своего Господа. Не скрывайте свидетельства. А у тех, кто скрывает его, сердце поражено грехом. Аллаху известно о том, что вы совершаете.
நீங்கள் பயணத்தில் இருந்து கடன் பத்திரத்தை உங்களுக்காக எழுதக்கூடியவரைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில் கடனாளி கடனளிப்பவருக்கு அடமானமாக எதையாவது கொடுக்கட்டும். கடனை நிறைவேற்றும் வரை அவருக்கு அது உத்தரவாதமாக அமையும். நீங்கள் ஒருவர் மற்றவரை நம்பினால் எழுதவோ சாட்சியோ அடமானமோ தேவையில்லை. அச்சமயத்தில் கடனைப் பெற்றவரின் பொறுப்பில் அமானிதமாக அது இருக்கும். அதனை முழுமையாக நிறைவேற்றுவது அவர் மீது கடமையாகிவிடுகிறது. இந்த அமானிதத்தில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதிலிருந்து எதையும் மறுத்துவிட வேண்டாம். அவ்வாறு மறுத்தால் சாட்சியாளர்கள் சாட்சியத்தை மறைக்காது அதனை நிறைவேற்றிவிட வேண்டும். சாட்சியை மறைப்பவரின் உள்ளம் பாவியின் உள்ளமாகும். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
2:284Страница 49
لِّلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَإِن تُبۡدُواْ مَا فِيٓ أَنفُسِكُمۡ أَوۡ تُخۡفُوهُ يُحَاسِبۡكُم بِهِ ٱللَّهُۖ فَيَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ٢٨٤
Аллаху принадлежит то, что на небесах, и то, что на земле. Обнаружите ли вы то, что в ваших душах, или утаите, Аллах предъявит вам счет за это. Он прощает, кого пожелает, и причиняет мучения, кому пожелает. Аллах способен на всякую вещь.
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மாத்திரமே அவற்றைப் படைத்துப் பரிபாளிக்கிறான். நீங்கள் உங்கள் உள்ளத்திலுள்ளதை வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அதனை அல்லாஹ் நன்கறிவான். அதற்கேற்பவே அவன் உங்களிடம் விசாரணை செய்வான். அதன் பிறகு தன் அருளால் தான் நாடியவர்களை மன்னிக்கிறான். தன் நீதியால் தான் நாடியவர்களைத் தண்டிக்கிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.
2:285Страница 49
ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ ٢٨٥
Посланник и верующие уверовали в то, что ниспослано ему от Господа. Все они уверовали в Аллаха, Его ангелов, Его Писания и Его посланников. Они говорят: «Мы не делаем различий между Его посланниками». Они говорят: «Слушаем и повинуемся! Твоего прощения мы просим, Господь наш, и к Тебе предстоит прибытие».
தூதர் முஹம்மது தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்ட அனைத்தையும் நம்புகிறார். அவ்வாறே நம்பிக்கையாளர்களும் நம்புகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வின்மீதும் வானவர்கள் அனைவரின்மீதும் தூதர்களுக்கு இறக்கப்பட்ட அனைத்து வேதங்களின் மீதும் அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: நீ எங்களுக்குக் கட்டளையிட்டதையும், தடுத்ததையும் நாங்கள் செவியேற்றோம். உனது கட்டளைகளைச் செயல்படுத்தி, நீ தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டோம். அல்லாஹ்வே, எங்களை மன்னித்து விடுவாயாக. நாங்கள் அனைவரும் எங்களின் அனைத்து விவகாரங்களிலும் உன் பக்கமே திரும்ப வேண்டும்.
2:286Страница 49
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ٢٨٦
Аллах не возлагает на человека сверх его возможностей. Ему достанется то, что он приобрел, и против него будет то, что он приобрел. Господь наш! Не наказывай нас, если мы позабыли или ошиблись. Господь наш! Не возлагай на нас бремя, которое Ты возложил на наших предшественников. Господь наш! Не обременяй нас тем, что нам не под силу. Будь снисходителен к нам! Прости нас и помилуй! Ты - наш Покровитель. Помоги же нам одержать верх над неверующими людьми.
அல்லாஹ் எவருக்கும் அவர் சுமக்க முடியும் அளவே பொறுப்புகளைச் சாட்டுவான். ஏனெனில் அல்லாஹ்வின் மார்க்கம் இலகுவானது. அதில் எந்தக் கடினமும் இல்லை. எவர் நன்மையான செயலைச் செய்வாரோ அவருக்கு அவர் செய்தவற்றுக்கான கூலி எவ்விதக் குறைவுமின்றி உண்டு. எவர் தீமையைச் சம்பாதிப்பாரோ அவர் சம்பாதித்தவற்றுக்கான தண்டனை அவருக்கே நிடைக்கும். அதனை வேறு எவரும் சுமக்க மாட்டார். தூதரும் நம்பிக்கையாளர்களும் கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் சொலல்லிலோ செயலிலோ நாங்கள் மறந்துவிட்டாலோ அறியாமல் தவறிழைத்துவிட்டாலோ எங்களைத் தண்டித்துவிடாதே. எங்கள் இறைவா! அநியாயம் செய்ததனால் நீ தண்டித்த எங்களுக்கு முன் வாழ்ந்த யூதர்கள் போன்றோர் மீது நீ சுமத்தியதுபோன்று எங்கள்மீதும் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திவிடாதே. எமக்குச் சிரமமான சுமக்க முடியாத ஏவல்களையும் விலக்கல்களையும் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாயாக. எங்களை மன்னித்துவிடுவாயாக. எங்கள்மீது கருணை காட்டுவாயாக. நீதான் எங்களின் பொறுப்பாளன், உதவியாளன். உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии