Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Бакара 2:69–101
2:69Страница 10
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّٰظِرِينَ ٦٩
Они сказали: «Помолись за нас своему Господу, чтобы Он разъяснил нам, какой она масти». Он сказал: «Он говорит, что эта корова светло-желтого цвета. Она радует смотрящих на нее».
அவர்கள் தங்களின் தர்க்கத்தைத் தொடர்ந்தார்கள். மூசாவிடம், அதன் உண்மையான நிறத்தை எங்களுக்குத் தெளிவுபடுத்துமாறு உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக என்று கூறினார்கள். அதற்கு மூசா, அது பார்ப்பவர்கள் பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய கெட்டியான மஞ்சள்நிற பசுவாகும் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று கூறினார்.
2:70Страница 11
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ ٧٠
Они сказали: «Помолись за нас своему Господу, чтобы Он разъяснил нам, какова же она, ведь коровы кажутся нам похожими одна на другую. И если Аллах пожелает, то мы последуем прямым путем».
பிறகு அவர்கள் மீண்டும் வீம்பாகக் கேள்வி கேட்டார்கள், அதன் பண்புகளை இன்னும் தெளிவாக விளக்கும்படி உம் இறைவனிம் பிரார்த்தனை செய்வீராக. நீர் குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஏராளமான பசுக்கள் இருக்கின்றன. அவற்றிற்கு மத்தியில் நீர் குறிப்பிட்டதை எங்களால் நிர்ணயிக்க முடியவில்லை. அல்லாஹ் நாடினால் அறுக்க வேண்டிய பசுவை நாங்கள் பெறுவோம்.
2:71Страница 11
قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ ٧١
Он сказал: «Он говорит, что эта корова не приучена пахать землю или орошать ниву. Она здорова и не имеет отметин». Они сказали: «Теперь ты принес истину». Затем они зарезали ее, хотя были близки к тому, чтобы не сделать этого.
மூசா கூறினார், அது விவசாய வேலைகளுக்கோ, நீர் இறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, எவ்வித குறைகளுமற்ற ஆரோக்கியமான பசுவாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தைத் தவிரந்த வேறு எந்த நிறமும் அதில் இருக்கக்கூடாது. அப்போது அவர்கள் கூறினார்கள், இப்போதுதான் நிர்ணயிக்கத்தக்க சரியான பண்பை கூறியுள்ளீர். வீணான விவாதத்தினால் அறுக்காது போய்விடுவார்களோ என்றான பிறகு அதனை அறுத்தார்கள்.
2:72Страница 11
وَإِذۡ قَتَلۡتُمۡ نَفۡسٗا فَٱدَّٰرَٰءۡتُمۡ فِيهَاۖ وَٱللَّهُ مُخۡرِجٞ مَّا كُنتُمۡ تَكۡتُمُونَ ٧٢
Вот вы убили человека и стали препираться по этому поводу. Но Аллах выявляет то, что вы скрываете.
உங்களில் ஒருவரைக் கொன்றுவிட்டு நீங்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு ஒருவருக்கொருவர் பழிசுமத்தியதை நினைத்துப் பாருங்கள். அந்த அப்பாவியைக் கொன்றுவிட்டு நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.
2:73Страница 11
فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٧٣
Мы сказали: «Ударьте его (убитого) частью ее (коровы)». Так Аллах воскрешает мертвых и показывает вам Свои знамения, - быть может, вы уразумеете.
அறுக்குமாறு உத்தரவிடப்பட்ட பசுவின் ஒரு பகுதியைக் கொண்டு கொல்லப்பட்டவரை அடியுங்கள். அல்லாஹ் அவருக்கு உயிர்கொடுத்து, அவர் தன்னைக் கொன்றவரை அறிவிப்பார் என்று நாம் கூறினோம். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். அவர் கொன்றவரை அறிவித்தார். இந்த சடலத்திற்கு அல்லாஹ் உயிரளித்ததுபோன்றே மறுமைநாளில் இறந்தவர்களுக்கும் உயிரளிப்பான். நீங்கள் அறிந்துகொண்டு அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தனது ஆற்றலுக்கான சான்றுகளை அவன் உங்களுக்குக் காட்டுகின்றான்.
2:74Страница 11
ثُمَّ قَسَتۡ قُلُوبُكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ فَهِيَ كَٱلۡحِجَارَةِ أَوۡ أَشَدُّ قَسۡوَةٗۚ وَإِنَّ مِنَ ٱلۡحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنۡهُ ٱلۡأَنۡهَٰرُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَشَّقَّقُ فَيَخۡرُجُ مِنۡهُ ٱلۡمَآءُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَهۡبِطُ مِنۡ خَشۡيَةِ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ٧٤
После этого ваши сердца ожесточились и стали, как камни, или даже еще жестче. Воистину, среди камней есть такие, из которых бьют родники. Среди них есть такие, которые раскалываются и изливают воду. Среди них есть такие, которые падают от страха перед Аллахом. Аллах не находится в неведении о том, что вы совершаете.
இந்த பேரற்புதத்தை கண்ணால் கண்டபின்னரும் உங்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப்போன்று, மாறாக அவற்றைவிடவும் கடினமாகிவிட்டன. ஒரு போதும் அவை தனது நிலையிலிருந்து மாறவேமாட்டாது. பாறைகள்கூட மாற்றம் அடைகின்றன. அவற்றிலிருந்து ஆறுகள் பொங்கி ஓடுகின்றன. அவற்றுள் சில பிளந்து அவற்றிலிருந்து ஊற்று நீர் பீறிட்டு பூமியில் வழிந்தோடுகின்றது. அதன் மூலம் மனிதர்களும் விலங்குகளும் பயனடைகிறார்கள். அவற்றுள் சில அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் உயரமான மலையிலிருந்து உருண்டுவிடுகின்றன. உங்களின் உள்ளங்களோ இவ்வாறுகூட இல்லை. நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. மாறாக அவன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.
2:75Страница 11
۞ أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ ٧٥
Неужели вы надеетесь, что они поверят вам, если некоторые из них слышали Слово Аллаха и сознательно исказили его после того, как поняли его смысл?
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் யூதர்களைப் பற்றியும் அவர்களின் பிடிவாதத்தைப் பற்றியும் அறிந்தபிறகும் அவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நம்பிக்கைகொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா?. அவர்களிலுள்ள அறிஞர்களில் ஒரு பிரிவினர், தவ்ராத்தில் இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளை செவியேற்கிறார்கள். பிறகு அவற்றின் பொருளையும் விளக்கத்தையும் அறிந்துகொண்டே மாற்றுகிறார்கள். தமது குற்றத்தின் பாரதூரத்தையம் அவர்கள் அறிந்தேயுள்ளார்கள்.
2:76Страница 11
وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ قَالُوٓاْ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيۡكُمۡ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ ٧٦
Когда они встречали верующих, то говорили: «Мы уверовали». Когда же они оставались наедине друг с другом, то говорили: «Неужели вы расскажете им о том, что открыл вам Аллах, чтобы они могли препираться с вами посредством этого перед вашим Господом? Неужели вы не уразумеете этого?».
அவர்களின் முரண்பாடுகள் மற்றும் சூழ்ச்சிகளில் ஒன்று, அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் முஹம்மது நபியைக் குறித்தும் அவருடைய தூதுத்துவம் குறித்தும் தவ்ராத்தில் கூறப்பட்ட விஷயங்களை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் தங்களுக்குள் தனிமையில் சந்தித்துக் கொண்டால் இந்த உண்மையை ஒத்துக்கொண்டதற்காக ஒருவரையொருவர் பழித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் இவ்வாறு அவர்கள் உண்மையை ஒத்துக்கொள்வதை முஸ்லிம்கள் யூதர்களுக்கு எதிரான ஆதாரமாக முன்வைப்பார்கள்.
2:77Страница 12
أَوَلَا يَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ ٧٧
Неужели они не знают, что Аллаху ведомо все, что они скрывают и обнародуют?
அவர்கள் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் சொல்வதையும், செய்வதையும் அல்லாஹ் அறிவான். மேலும் அவற்றை தன் அடியார்களுக்கு வெளிப்படுத்தி தம்மை இழிவுபடுத்தியே தீருவான் என்பதை இந்த யூதா்கள் அறியாததைப் போன்று இந்தளவு கேடுகெட்ட விதமாக நடந்துகொள்கின்றனர்.
2:78Страница 12
وَمِنۡهُمۡ أُمِّيُّونَ لَا يَعۡلَمُونَ ٱلۡكِتَٰبَ إِلَّآ أَمَانِيَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ ٧٨
Среди них есть неграмотные люди, которые не знают Писания, а лишь верят пустым мечтам и делают предположения.
தவ்ராத்தை வாசிக்க மாத்திரமே தெரிந்த ஒரு பிரிவினரும் யூதா்களில் உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களின் பெரியோர்களிடமிருந்து பெற்ற பொய்களைத்தான் அல்லாஹ் இறக்கிய தவ்ராத் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
2:79Страница 12
فَوَيۡلٞ لِّلَّذِينَ يَكۡتُبُونَ ٱلۡكِتَٰبَ بِأَيۡدِيهِمۡ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنۡ عِندِ ٱللَّهِ لِيَشۡتَرُواْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَوَيۡلٞ لَّهُم مِّمَّا كَتَبَتۡ أَيۡدِيهِمۡ وَوَيۡلٞ لَّهُم مِّمَّا يَكۡسِبُونَ ٧٩
Горе тем, которые пишут Писание собственными руками, а затем говорят: «Это - от Аллаха», - чтобы купить за это ничтожную цену. Горе им за то, что написали их руки! Горе им за то, что они приобретают!
தங்களின் கைகளால் ஒரு நூலை எழுதிக்கொண்டு, பிறகு அபாண்டமாக, இது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமாகும் என்று கூறும் இவர்களுக்கு கடுமையான வேதனையும், அழிவும் காத்திருக்கிறது. சத்தியம் மற்றும் நேர்வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக இவ்வுலகில் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயம் பெறுவதற்காக இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கின்றனர். தங்களின் கைகளால் எழுதிய நூலை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வேதம் என்று அல்லாஹ்வின் மீதே பொய் கூறியதற்கும், அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த பணம், பதவிகளின் காரணமாகவும் அவர்களுக்கு அழிவும் கடுமையான வேதனையும் உண்டு.
2:80Страница 12
وَقَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَةٗۚ قُلۡ أَتَّخَذۡتُمۡ عِندَ ٱللَّهِ عَهۡدٗا فَلَن يُخۡلِفَ ٱللَّهُ عَهۡدَهُۥٓۖ أَمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ٨٠
Они говорят: «Огонь коснется нас лишь на считанные дни». Скажи: «Неужели вы заключили завет с Аллахом? А ведь Аллах никогда не изменит Своему обещанию! Или же вы наговариваете на Аллаха то, чего не знаете?».
சில நாட்கள் மாத்திரமே நரகில் நாம் நுழைந்து நரக நெருப்பு எம்மைத் தீண்டும் என அவர்கள் அபாண்டமாகவும் ஆணவத்துடனும் கூறினார்கள், தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: இவ்வாறு நீங்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி பெற்றுள்ளீர்களா? அப்படியென்றால் அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறாக செயல்பட மாட்டான். அல்லது அல்லாஹ்வின்மீது நீங்கள் அறியாத விஷயத்தை அபாண்டமாகவும் பொய்யாகவும் இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?.
2:81Страница 12
بَلَىٰۚ مَن كَسَبَ سَيِّئَةٗ وَأَحَٰطَتۡ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٨١
О нет! Те, которые приобрели зло и оказались окружены своим грехом, окажутся обитателями Огня. Они пребудут там вечно.
இவர்கள் நினைப்பது போலல்ல. யார் நிராகரித்து பாவங்கள் அவரை நாலாபுறத்தாலும் சூழ்ந்துகொள்கிறதோ அல்லாஹ் அவரை தண்டித்தே ஆகுவான். அவன் அவர்களை நரகத்தில் நிரந்தரமாகக் கிடத்தி தண்டனை அளித்திடுவான்.
2:82Страница 12
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٨٢
А те, которые уверовали и совершали праведные деяния, окажутся обитателями Рая. Они пребудут там вечно.
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலி சுவனத்தில் நுழைந்து அதில் நிரந்தரமாக தங்கியிருப்பதாகும்.
2:83Страница 12
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ لَا تَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَانٗا وَذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَقُولُواْ لِلنَّاسِ حُسۡنٗا وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيۡتُمۡ إِلَّا قَلِيلٗا مِّنكُمۡ وَأَنتُم مُّعۡرِضُونَ ٨٣
Вот Мы заключили с сынами Исраила (Израиля) завет о том, что вы не будете поклоняться никому, кроме Аллаха; будете делать добро родителям, а также родственникам, сиротам и беднякам; будете говорить людям прекрасное, совершать намаз и выплачивать закят. Но впоследствии вы отвернулись с отвращением, за исключением немногих.
இஸ்ராயீலின் மக்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது; தாய்தந்தையர், உறவினர், அநாதைகள், ஏழைகள், தேவையுடையவர்கள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது மக்களிடம் கடினமான வார்த்தைகைளைப் பிரயோகிக்காமல் நல்ல வார்த்தைகளைக்கொண்டு அவர்களோடு பேசுங்கள்; நான் ஏவியமுறைப்படி தொழுகையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை உரியவர்களுக்கு முழு மனதுடன் அளித்துவிடுங்கள் என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். ஆனால் அதன் பின்னரும் நீங்கள் அளித்த வாக்குறுதியை மீறி பின்வாங்கிச் சென்றீர்கள். உங்களில் யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றினார்கள்.
2:84Страница 13
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ لَا تَسۡفِكُونَ دِمَآءَكُمۡ وَلَا تُخۡرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمۡ ثُمَّ أَقۡرَرۡتُمۡ وَأَنتُمۡ تَشۡهَدُونَ ٨٤
Вот Я заключил с вами завет о том, что вы не будете проливать вашей крови и изгонять друг друга из ваших жилищ. Потом вы признали это, свидетельствуя об этом.
நீங்கள் ஒருவரையெருவர் கொல்லக்கூடாது; உங்களில் சிலர் சிலரை தங்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். இது குறித்து நாம் உங்களிடம் வாங்கிய வாக்குறுதிக்கு நீங்களே சாட்சிகளாக இருந்து ஒத்துக் கொண்டீர்கள்.
2:85Страница 13
ثُمَّ أَنتُمۡ هَٰٓؤُلَآءِ تَقۡتُلُونَ أَنفُسَكُمۡ وَتُخۡرِجُونَ فَرِيقٗا مِّنكُم مِّن دِيَٰرِهِمۡ تَظَٰهَرُونَ عَلَيۡهِم بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَإِن يَأۡتُوكُمۡ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمۡ وَهُوَ مُحَرَّمٌ عَلَيۡكُمۡ إِخۡرَاجُهُمۡۚ أَفَتُؤۡمِنُونَ بِبَعۡضِ ٱلۡكِتَٰبِ وَتَكۡفُرُونَ بِبَعۡضٖۚ فَمَا جَزَآءُ مَن يَفۡعَلُ ذَٰلِكَ مِنكُمۡ إِلَّا خِزۡيٞ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلۡعَذَابِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ٨٥
Но впоследствии именно вы стали убивать друг друга и изгонять некоторых из вас из жилищ, помогая одним против других в грехе и посягательстве. А если они приходят к вам пленными, то вы выкупаете их. А ведь вам было запрещено изгонять их. Неужели вы станете веровать в одну часть Писания и отвергать другую часть? Воздаянием тому, кто совершает подобное, будет позор в мирской жизни, а в День воскресения они будут подвергнуты еще более ужасным мучениям. Аллах не находится в неведении о том, что вы совершаете.
பிறகு நீங்களே இந்த வாக்குறுதிக்கு மாறாக நடந்தீர்கள். உங்களில் சிலர் சிலரைக் கொலைசெய்தீர்கள். எதிரிகளின் உதவியுடன் உங்களிலுள்ள ஒரு பிரிவினரை அநியாயமாக அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்கள் உங்கள் எதிரிகளிடம் கைதிகளாகப் பிடிப்பட்டால் பிணைத்தொகை கொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை ஊர்களிலிருந்து வெளியேற்றுவதே உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்ததே? கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தவ்ராத்தில் கூறப்பட்ட ஒருபகுதியை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கொலைசெய்யக்கூடாது, ஊரிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று தவ்ராத்தில் உள்ள மறுபகுதியை மறுக்கிறீர்களா? வேதத்தின் சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவருக்கு இவ்வுலகில் இழிவையும் கேவலத்தையும் தவிர வேறொன்றும் கிடைக்காது. மறுமையில் அவர்கள் கடுமையான வேதனையின் பக்கம் தள்ளப்படுவார்கள். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்ப உங்களுக்கு கூலியும் வழங்குவான்.
2:86Страница 13
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۖ فَلَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنصَرُونَ ٨٦
Они купили мирскую жизнь за Последнюю жизнь. Их мучения не будут облегчены, и им не будет оказана помощь.
இவர்கள்தாம் மறுமைக்குப் பகரமாக இவ்வுலகை வாங்கிக் கொண்டார்கள்; நிலையானதை விட்டுவிட்டு அழியக்கூடியதை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மறுமையில் இவர்களுக்கு அளிக்கப்படும் வேதனை குறைக்கப்படாது. அந்நாளில் இவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யாரும் இருக்க மாட்டார்கள்.
2:87Страница 13
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَقَفَّيۡنَا مِنۢ بَعۡدِهِۦ بِٱلرُّسُلِۖ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ أَفَكُلَّمَا جَآءَكُمۡ رَسُولُۢ بِمَا لَا تَهۡوَىٰٓ أَنفُسُكُمُ ٱسۡتَكۡبَرۡتُمۡ فَفَرِيقٗا كَذَّبۡتُمۡ وَفَرِيقٗا تَقۡتُلُونَ ٨٧
Мы даровали Мусе (Моисею) Писание и отправили вслед за ним череду посланников. Мы даровали Исе (Иисусу), сыну Марьям (Марии), ясные знамения и укрепили его Святым Духом (Джибрилем). Неужели каждый раз, когда посланник приносил вам то, что было вам не по душе, вы проявляли высокомерие, нарекали лжецами одних и убивали других?
நாம் மூஸாவுக்கு தவ்ராத்தை வழங்கினோம். அவருக்குப் பின்னால் பல தூதர்களை தொடர்ந்து வரச்செய்தோம். ஈசாவுக்கு, அவருடைய நம்பகத்தன்மையைத் தெளிவுபடுத்தக்கூடிய தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும், தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக அவரை பலப்படுத்தினோம். இஸ்ராயீலின் மக்களே! உங்கள் மனம் விரும்பாததை தூதர்கள் கொண்டுவந்த போதெல்லாம் சத்தியத்தையும் அல்லாஹ்வின் தூதர்களையும் எதிர்த்து ஆணவம் கொள்கிறீர்களா? அவர்களில் ஒருபிரிவினரை நிராகரித்து விட்டீர்கள்; ஒரு பிரிவினரை கொன்று விட்டீர்கள்?!
2:88Страница 13
وَقَالُواْ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَل لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَقَلِيلٗا مَّا يُؤۡمِنُونَ ٨٨
Они сказали: «Сердца наши покрыты завесой (или переполнены знаниями)». О нет, это Аллах проклял их за их неверие. Как же мала их вера!
எங்களுடைய உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் நீர் கூறும் எந்த விஷயமும் புரியப்போவதில்லை என்ற யூதர்களின் கூற்றே அவர்கள் முஹம்மதைப் பின்பற்றாமல் இருப்பதற்கான சான்றாகக் காணப்பட்டது. ஆனால் உண்மை நிலை அவர்கள் கூறும் காரணமல்ல. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அவன் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். எனவே அவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சிலவற்றைத் தவிர வேறு எதனையும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
2:89Страница 14
وَلَمَّا جَآءَهُمۡ كِتَٰبٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ وَكَانُواْ مِن قَبۡلُ يَسۡتَفۡتِحُونَ عَلَى ٱلَّذِينَ كَفَرُواْ فَلَمَّا جَآءَهُم مَّا عَرَفُواْ كَفَرُواْ بِهِۦۚ فَلَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٨٩
К ним явилось от Аллаха Писание, подтверждающее правдивость того, что было у них. Прежде они молили о победе над неверующими. Когда же к ним явилось то, что они узнали, они отказались уверовать в него. Да пребудет проклятие Аллаха над неверующими!
தவ்ராத்திலும் இன்ஜீலிலும் உள்ள சரியான, அடிப்படையான விஷயங்களை உண்மைப்படுத்தியதாக அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் அவர்களிடம் வந்தது, அவர்கள் அது இறக்கப்படுவதற்கு முன்னர், ஒரு நபி வரக்கூடிய காலம் நெருங்கிவிட்டது. அவர் வந்தவுடன் அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவரைப் பின்பற்றி நாங்கள் இணைவைப்பாளர்களை வென்றிடுவோம் என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் கூறிக்கொண்டிருந்த முஹம்மது நபியும் குர்ஆனும் அவர்களிடம் வந்தபோது, தாங்கள் எதிர்பார்த்தவர்தான் இவர் என்பதை தெளிவாக அறிந்தபின்னரும் அவரை மறுத்தார்கள். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.
2:90Страница 14
بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ ٩٠
Скверно то, что они купили за свои души, не уверовав в ниспосланное Аллахом и завидуя тому, что Аллах ниспосылает Свою милость тому из Своих рабов, кому пожелает. Они навлекли на себя гнев, один поверх другого. Неверующим уготованы унизительные мучения.
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதற்குப் பதிலாக அவர்கள் பெற்றுக்கொண்டது மோசமானது!. நபித்துவமும், குர்ஆனும் முஹம்மதுக்கு வழங்கப்பட்டது என்ற பொறாமையினாலும், அநியாயமாகவும் அல்லாஹ் இறக்கியவற்றையும், அவனது தூதர்களையும் நிராகரித்தார்கள். முஹம்மதை அவர்கள் நிராகரித்ததனாலும் அதற்கு முன் தவ்ராத்தை திரித்ததனாலும் அல்லாஹ்வின் இரட்டிப்பான கோபத்திற்கு உரியவர்களாகிவிட்டார்கள். முஹம்மதுடைய தூதுத்துவத்தை நிராகரிப்பவர்களுக்கு மறுமைநாளில் இழிவுதரும் வேதனை உண்டு.
2:91Страница 14
وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ نُؤۡمِنُ بِمَآ أُنزِلَ عَلَيۡنَا وَيَكۡفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا مَعَهُمۡۗ قُلۡ فَلِمَ تَقۡتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبۡلُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٩١
Когда им говорят: «Уверуйте в то, что ниспослал Аллах», - они отвечают: «Мы веруем в то, что было ниспослано нам». Они не веруют в то, что явилось впоследствии, хотя это является истиной, подтверждающей правдивость того, что есть у них. Скажи: «Почему же раньше вы убивали пророков Аллаха, если вы являетесь верующими?».
தன்னுடைய தூதரின்மீது அல்லாஹ் இறக்கிய சத்தியத்தையும் நேர்வழியையும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று யூதர்களிடம் கூறப்பட்டால், எங்களுடைய தூதர்களின்மீது இறக்கப்பட்டவற்றைத்தான் நம்பிக்கைகொள்வோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமுள்ள தவ்ராத்தை குர்ஆன் உண்மைப்படுத்திய பிறகும் அதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் தம்மீது இறக்கப்பட்ட தவ்ராத்தின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் குர்ஆனின்மீதும் நம்பிக்கைகொண்டிருப்பார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கேளும், உங்களிடம் அல்லாஹ்வின் தூதர்கள் இதற்கு முன் கொண்டுவந்த சத்தியத்தை நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கைகொண்டிருந்தால் பிறகு ஏன் அவர்களை கொலைசெய்தீர்கள்?.
2:92Страница 14
۞ وَلَقَدۡ جَآءَكُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ ٩٢
Муса (Моисей) явился к вам с ясными знамениями, но в его отсутствие вы стали поклоняться тельцу, будучи беззаконниками.
உங்களிடம் வந்த தூதர் மூசா தான் உண்மையாளரே என நிரூபிக்கும் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவ்வாறிருந்தும் அவர் தனது இறைவனைச் சந்திப்பதற்காக சென்ற சமயத்தில் காளைக்கன்றை வணங்கக்கூடிய தெய்வமாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவற்றை ஆக்கி அநியாயக்காரர்களாகி விட்டீர்கள். அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
2:93Страница 14
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱسۡمَعُواْۖ قَالُواْ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَأُشۡرِبُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡعِجۡلَ بِكُفۡرِهِمۡۚ قُلۡ بِئۡسَمَا يَأۡمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٩٣
Вот Мы заключили с вами завет и воздвигли над вами гору: «Крепко придерживайтесь того, что Мы даровали вам, и слушайте». Они сказали: «Слышали и ослушаемся». Их сердца впитали любовь к тельцу по причине их неверия. Скажи: «Скверно то, что велит вам ваша вера, если вы вообще являетесь верующими».
மூசாவைப் பின்பற்ற வேண்டும், அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களை அச்சமூட்டுவதற்காக உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், நாம் உங்களுக்கு வழங்கிய தவ்ராத்தை முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். கட்டுப்பட்டவாறு செவிசாயுங்கள். அவ்வாறு இல்லையெனில் நாம் உங்களின் மீது மலையை விழச்செய்துவிடுவோம்.எங்கள் செவிகளால் கேட்டு செயல்களால் மாறுசெய்தோம் என்று கூறினீர்கள். அவர்களின் நிராகரிப்பினால் காளைக்கன்று வழிபாடு அவர்களின் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. தூதரே! நீர் கூறும், நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடும் நிராகரிப்பு மோசமானது! ஏனெனில் உண்மையான ஈமானுடன் நிராகரிப்பு ஒருபோதும் கலந்திருக்காது.
2:94Страница 15
قُلۡ إِن كَانَتۡ لَكُمُ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةٗ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٩٤
Скажи: «Если Последняя обитель у Аллаха предназначена только для вас, а не для других людей, то пожелайте себе смерти, если вы говорите правду».
தூதரே! நீர் கூறும்: யூதர்களே, மறுமையில் சுவனம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது, மற்ற மக்கள் யாரும் அதில் நுழைய முடியாது என்ற உங்களது வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த அந்தஸ்தை விரைவாகப் பெறுவதற்காக மரணத்தை விரும்பித் தேடிச்செல்லுங்கள்; கஷ்டம்நிறைந்த இவ்வுலகின் சுமைகளிலிருந்து விடுபட்டுவிடுங்கள்.
2:95Страница 15
وَلَن يَتَمَنَّوۡهُ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ ٩٥
Однако они никогда не пожелают себе этого из-за того, что приготовили их руки. Аллах ведает о беззаконниках.
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, அவனுடைய வேதங்களை திரித்து தங்களின் வாழ்க்கையில் சேர்த்துவைத்த பாவங்களினால் அவர்கள் ஒருபோதும் மரணத்தை விரும்ப மாட்டார்கள். அவர்களிலும் ஏனையோரிலுமுள்ள அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
2:96Страница 15
وَلَتَجِدَنَّهُمۡ أَحۡرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٖ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُواْۚ يَوَدُّ أَحَدُهُمۡ لَوۡ يُعَمَّرُ أَلۡفَ سَنَةٖ وَمَا هُوَ بِمُزَحۡزِحِهِۦ مِنَ ٱلۡعَذَابِ أَن يُعَمَّرَۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ٩٦
Ты непременно убедишься, что они жаждут жизни больше всех людей, даже больше многобожников. Каждый из них желал бы прожить тысячу лет. Но даже долгая жизнь ничуть не отдалит их от мучений. Аллах видит то, что они совершают.
தூதரே! மனிதர்களிலே வாழ்வின் மீது அதிக பேராசையுடையவர்களாக யூதர்களைக் காண்பீர், அது மிகவும் இழிவானதாக இருந்தாலும் சரியே. மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொண்ட வேதக்காரர்களாக அவர்கள் இருந்தும், மறுமையின்மீதும் அங்கு கேள்விகணக்குக் கேட்கப்படுவதன்மீதும் நம்பிக்கைகொள்ளாத இணைவைப்பாளர்களைக் காட்டிலும் அவர்கள் அதிக பேராசையுடையவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.எவ்வளவு நீண்ட ஆயுளாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைத் தூரமாக்காது. அவன் அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.
2:97Страница 15
قُلۡ مَن كَانَ عَدُوّٗا لِّـجِبۡرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلۡبِكَ بِإِذۡنِ ٱللَّهِ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ٩٧
Скажи: «Кто является врагом Джибрилу (Гавриилу)?». Он низвел его (Коран) на твое сердце с соизволения Аллаха в подтверждение правдивости того, что было прежде, в качестве верного руководства и благой вести для верующих.
தூதரே! வானவர்களில் ஜிப்ரீல் எங்களின் எதிரியாவார் என்று கூறுபவர்களிடம் நீர் கூறுவீராக, அவர்தான் உமது உள்ளத்தில் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு குர்ஆனை இறக்கினார். அது தவ்ராத், இன்ஜீல் போன்ற முன்னுள்ள இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது; நன்மையின் பக்கம் வழிகாட்டுகிறது; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் அருட்கொடைகளை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுகிறது. இத்தகைய பண்புடைய ஜிப்ரீலை எதிரிகளாகக் கருதுபவர்கள் வழிகெட்டவர்களாவர்.
2:98Страница 15
مَن كَانَ عَدُوّٗا لِّلَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَرُسُلِهِۦ وَجِبۡرِيلَ وَمِيكَىٰلَ فَإِنَّ ٱللَّهَ عَدُوّٞ لِّلۡكَٰفِرِينَ ٩٨
Если кто враждует с Аллахом и Его ангелами, посланниками, Джибрилом (Гавриилом) и Микаилом (Михаилом), то ведь Аллах является врагом неверующих.
யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய வானவர்களுக்கும், தூதர்களுக்கும் ஜிப்ரீல், மீக்காயில் என்னும் நெருங்கிய இரு வானவர்களுக்கும் எதிரிகளாக இருக்கின்றார்களோ, நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கும் ஏனையவர்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கும் எதிரியாவான். யாருக்கு அல்லாஹ் எதிரியாக இருக்கின்றானோ அவர் வெளிப்படையான நஷ்டத்தில் வீழ்ந்துவிட்டார்.
2:99Страница 15
وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكَ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۖ وَمَا يَكۡفُرُ بِهَآ إِلَّا ٱلۡفَٰسِقُونَ ٩٩
Мы ниспосылали тебе ясные знамения, и не веруют в них только нечестивцы.
தூதரே! உமது தூதுத்துவத்தையும் வஹியையும் உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளை உம்மீது இறக்கியுள்ளோம். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள்தாம் அவை தெளிவாக இருந்தும் மறுப்பார்கள்.
2:100Страница 15
أَوَكُلَّمَا عَٰهَدُواْ عَهۡدٗا نَّبَذَهُۥ فَرِيقٞ مِّنۡهُمۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يُؤۡمِنُونَ ١٠٠
Неужели всякий раз, когда они заключают завет, часть из них отбрасывает его? Более того, большинство из них не веруют.
யூதர்களின் தீய குணங்களில் ஒன்று, அவர்கள் ஏதேனும் உடன்படிக்கை செய்யும்போதேல்லாம் அவர்களில் ஒருபிரிவினர் அதனை முறித்துவிடுகின்றனர். இந்த யூதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் இறக்கியதை உண்மையாகவே நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். ஏனெனில் உண்மையான ஈமான் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றத் தூண்டுகிறது.
2:101Страница 15
وَلَمَّا جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ ١٠١
Когда к ним пришел Посланник от Аллаха (Мухаммад), подтвердивший правдивость того, что было у них, некоторые из тех, кому было даровано Писание, отбросили Писание Аллаха за спины, словно они не знают истины.
தவ்ராத்தில் கூறப்பட்டபடி முஹம்மது அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு தூதராக அவர்களிடம் வந்தபோது அவர்களில் ஒரு பிரிவினர் தவ்ராத்தில் கூறப்பட்டதை புறக்கணித்துவிட்டார்கள். அதனை அலட்சியமாக தம் முதுகளுக்குப் பின்னால் தூக்கி எறிந்தார்கள். சத்தியத்திலிருந்து பயனடையாத, அதனைப் பொருட்படுத்தாத மூடர்களைப் போன்றவர்கள் இவர்கள்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии