Аль-Мухтасар · Тафсир · на тамильском
Та Ха 20:112–135
20:112Страница 319
وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا يَخَافُ ظُلۡمٗا وَلَا هَضۡمٗا ١١٢
А тот, кто совершал праведные дела, будучи верующим, не будет бояться ни несправедливости, ни ущемления.
எவர் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிவாரோ அவர் அதற்கான கூலியை நிறைவாகப் பெறுவார். தான் செய்யாத பாவத்திற்காக தண்டிக்கப்பட்டோ, தன் நற்செயல்களுக்கான கூலி குறைக்கப்பட்டோ அநீதி இழைக்கப்படுவேன் என அவர் அஞ்ச மாட்டார்.
20:113Страница 319
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ قُرۡءَانًا عَرَبِيّٗا وَصَرَّفۡنَا فِيهِ مِنَ ٱلۡوَعِيدِ لَعَلَّهُمۡ يَتَّقُونَ أَوۡ يُحۡدِثُ لَهُمۡ ذِكۡرٗا ١١٣
Таким образом Мы ниспослали его в виде Корана на арабском языке и подробно разъяснили в нем Свои угрозы, чтобы они устрашились или чтобы это стало для них назиданием.
முந்தைய சமூகங்களின் சம்பவங்களை நாம் இறக்கியது போன்றே இந்த குர்ஆனையும் தெளிவான அரபி மொழியில் இறக்கியுள்ளோம். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லது குர்ஆன் அவர்களுக்கு அறிவுரையையும் படிப்பினையையும் வழங்க வேண்டும் என்பதற்காக எல்லா வகையான எச்சரிக்கைகளையும் பயமுறுத்தல்களையும் நாம் அதில் தெளிவுபடுத்தி விட்டோம்.
20:114Страница 320
فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۗ وَلَا تَعۡجَلۡ بِٱلۡقُرۡءَانِ مِن قَبۡلِ أَن يُقۡضَىٰٓ إِلَيۡكَ وَحۡيُهُۥۖ وَقُل رَّبِّ زِدۡنِي عِلۡمٗا ١١٤
Превыше всего Аллах, Истинный Царь! Не торопись читать Коран, пока ниспослание откровения тебе не будет завершено, и говори: «Господи! Приумножь мои знания».
அல்லாஹ் மிக உயர்ந்தவன். புனிதமானவன், மகத்துவமானவன். அனைத்துக்கும் உரிமையாளனான ஆட்சியாளன். அவன் உண்மையானவன். அவனுடைய வார்த்தையே உண்மையானது. இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் பண்புகளைவிட்டும் அவன் மிக உயர்ந்தவன். -தூதரே!- ஜிப்ரீல் உமக்குக் குர்ஆனை எடுத்துரைத்து முடிப்பதற்கு முன்னரே அவருடன் சேர்ந்து விரைவாக ஓதுவதற்கு முயற்சி செய்யாதீர். “இறைவா! நீ எனக்குக் கற்றுக் கொடுத்த கல்வியுடன் இன்னும் கல்வியை அதிகப்படுத்துவாயாக” என்று கூறுவீராக.
20:115Страница 320
وَلَقَدۡ عَهِدۡنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبۡلُ فَنَسِيَ وَلَمۡ نَجِدۡ لَهُۥ عَزۡمٗا ١١٥
Прежде Мы заключили завет с Адамом, но он забыл, и Мы не нашли у него твердой воли.
நாம் ஏற்கனவே, குறிப்பிட்ட அந்த மரத்திலிருந்து உண்ணக்கூடாது என்று ஆதமுக்கு வஸிய்யத் செய்து இருந்தோம். அதனைவிட்டும் தடுத்து அதன் விளைவையும் தெளிவுபடுத்தினோம். ஆதம் பொறுமையை மேற்கொள்ளாமல் வஸிய்யத்தை மறந்து அந்த மரத்திலிருந்து உண்டுவிட்டார். அவரிடம் நாம் நம் வஸிய்யத்தை பேணி நடக்கும் பலமான உறுதியைக் காணவில்லை.
20:116Страница 320
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ ١١٦
Вот сказали Мы ангелам: «Падите ниц перед Адамом!». Они пали ниц, и только Иблис отказался.
தூதரே!- ஆதமுக்கு முகமன் கூறும்பொருட்டு அவருக்குச் சிரம்பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். ஆனால் -அவர்களுடன் இருந்த அவர்கள் இனத்தைச் சாராத- இப்லீஸ் சிரம்பணியவில்லை. அவன் கர்வத்தினால் சிரம்பணிவதிலிருந்து தவிர்ந்துகொண்டான்.
20:117Страница 320
فَقُلۡنَا يَٰٓـَٔادَمُ إِنَّ هَٰذَا عَدُوّٞ لَّكَ وَلِزَوۡجِكَ فَلَا يُخۡرِجَنَّكُمَا مِنَ ٱلۡجَنَّةِ فَتَشۡقَىٰٓ ١١٧
Мы сказали: «О Адам! Это - враг тебе и твоей жене. Пусть же он не выведет вас из Рая, а не то ты станешь несчастным.
நாம் கூறினோம்: “ஆதமே! நிச்சயமாக ஷைத்தான் உமக்கும் உம் மனைவிக்கும் எதிரியாக இருக்கின்றான். எனவே அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தில் அவனுக்கு வழிப்படுவதன் மூலம் உம்மையும் உமது மனைவியையும் சுவனத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டாம். அப்போது நீர்தான் கஷ்டங்களையும் சிரமங்களையும் சுமக்க நேரிடும்.
20:118Страница 320
إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعۡرَىٰ ١١٨
В нем ты не будешь голодным и нагим.
நிச்சயமாக சுவனத்தில் உங்களுக்கு பசி ஏற்படாது உணவளிக்க வேண்டியதும் நிர்வாணமாகாமல் இருக்க ஆடையணிவிப்பதும் அல்லாஹ்வின் மீதுள்ள விடயமாகும்.
20:119Страница 320
وَأَنَّكَ لَا تَظۡمَؤُاْ فِيهَا وَلَا تَضۡحَىٰ ١١٩
В нем ты не будешь страдать от жажды и зноя».
தாகம் ஏற்படாமலிருக்க அவன் உங்களுக்கு நீர் புகட்டுவதும், உங்களை சூரிய வெப்பம் தாக்காது உங்களுக்கு நிழலளிப்பதும் அவனது பொறுப்பே.
20:120Страница 320
فَوَسۡوَسَ إِلَيۡهِ ٱلشَّيۡطَٰنُ قَالَ يَٰٓـَٔادَمُ هَلۡ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ ٱلۡخُلۡدِ وَمُلۡكٖ لَّا يَبۡلَىٰ ١٢٠
Но дьявол стал нашептывать ему и сказал: «О Адам! Показать ли тебе дерево вечности и непреходящей власти?».
ஷைத்தான் ஆதமுக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். அவரிடம் கூறினான்: “நான் உமக்கு ஒரு மரத்தைக் குறித்துக் கூறட்டுமா? அதிலிருந்து உண்பவர் மரணிக்கவே மாட்டார். என்றென்றும் உயிருடன் நிரந்தரமாக நிலைத்திருப்பார். என்றும் முடிவடையாத, துண்டிக்கப்படாத நிலையான உரிமையைப் பெறுவார்”
20:121Страница 320
فَأَكَلَا مِنۡهَا فَبَدَتۡ لَهُمَا سَوۡءَٰتُهُمَا وَطَفِقَا يَخۡصِفَانِ عَلَيۡهِمَا مِن وَرَقِ ٱلۡجَنَّةِۚ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ ١٢١
Они оба поели с него, и тогда им стали видны их срамные места. Они стали прилеплять на себе райские листья. Адам ослушался своего Господа и впал в заблуждение.
ஆதமும் ஹவ்வாவும் உண்பதற்குத் தடுக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து உண்டுவிட்டார்கள். எனவே மறைக்கப்பட்டிருந்த அவர்களின் மறைவிடங்கள் அவர்களுக்கு வெளிப்பட்டன. அவர்கள் சுவனத்தின் இலைகளைப் பறித்து அவற்றால் தனது மறைவிடங்களை மறைக்க ஆரம்பித்தார்கள். ஆதம் தம் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்தார். ஏனெனில் அந்த மரத்திலிருந்து உண்பதைத் தவிர்க்குமாறு அவன் இட்ட கட்டளையை அவர் எடுத்து நடக்காமல் அவர் தனக்கு ஆகுமாகாததை செய்துவிட்டார்.
20:122Страница 320
ثُمَّ ٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيۡهِ وَهَدَىٰ ١٢٢
Потом Господь избрал его, принял его покаяние и наставил на прямой путь.
பின்னர் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்து அவரது பாவமன்னிப்பை ஏற்றுக் கொண்டான். அவருக்கு நேரான வழியைக் காட்டினான்.
20:123Страница 320
قَالَ ٱهۡبِطَا مِنۡهَا جَمِيعَۢاۖ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ فَإِمَّا يَأۡتِيَنَّكُم مِّنِّي هُدٗى فَمَنِ ٱتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشۡقَىٰ ١٢٣
Он сказал: «Низвергнитесь отсюда вместе, и одни из вас будут врагами других. Если же к вам явится от Меня верное руководство, то всякий, кто последует Моему верному руководству, не окажется заблудшим и несчастным.
அல்லாஹ் ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் இப்லீசும் சுவனத்திலிருந்து இறங்கிவிடுங்கள். அவன் உங்களுக்கும் நீங்கள் அவனுக்கும் எதிரியாவீர்கள். என் புறத்திலிருந்து என் பாதையை தெளிவுபடுத்தக்கூடிய வழிகாட்டல் உங்களிடம் வந்தால் உங்களில் யார் அதனைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டு, அதனை விட்டும் நெறிபிறழமாட்டாரோ அவர் சத்தியத்தைவிட்டு வழிதவறவும் மாட்டார்; மறுமை நாளில் வேதனையை அனுபவிக்கும் துர்பாக்கியசாலியாகவும் ஆகமாட்டார். மாறாக அல்லாஹ் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
20:124Страница 320
وَمَنۡ أَعۡرَضَ عَن ذِكۡرِي فَإِنَّ لَهُۥ مَعِيشَةٗ ضَنكٗا وَنَحۡشُرُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَعۡمَىٰ ١٢٤
А кто отвернется от Моего Напоминания, того ожидает тяжкая жизнь, а в День воскресения Мы воскресим его слепым».
யார் என் உபதேசத்தை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு விடையளிக்காமல் புறக்கணித்தாரோ நிச்சயமாக அவருக்கு இவ்வுலகிலும் மண்ணறையிலும் நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. மறுமை நாளில் அவரை பார்வையையும் ஆதாரத்தையும் இழந்தவராக மஹ்ஷர் பெருவெளியை நோக்கி நாம் இழுத்துச் செல்வோம்.
20:125Страница 320
قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِيٓ أَعۡمَىٰ وَقَدۡ كُنتُ بَصِيرٗا ١٢٥
И скажет он: «Господи! Почему Ты воскресил меня слепым, если раньше я был зрячим?».
உபதேசத்தை புறக்கணித்தவன் கேட்பான்: “என் இறைவா! இன்று என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? நான் உலகில் பார்வையுடையவனாகத்தானே இருந்தேன்!
20:126Страница 321
قَالَ كَذَٰلِكَ أَتَتۡكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَاۖ وَكَذَٰلِكَ ٱلۡيَوۡمَ تُنسَىٰ ١٢٦
Аллах скажет: «Вот так! Наши знамения явились к тебе, но ты предал их забвению. Таким же образом сегодня ты сам будешь предан забвению».
அல்லாஹ் அவனுக்கு மறுப்புக் கூறுவான்: “நீ இவ்வாறே உலகில் செயற்பட்டாய். நம்முடைய சான்றுகள் உன்னிடத்தில் வந்தன. நீ அவற்றைப் புறக்கணித்து விட்டுவிட்டாய். எனவே நிச்சயமாக இன்றைய தினம் நீ வேதனையில் விட்டுவிடப்படுவாய்.
20:127Страница 321
وَكَذَٰلِكَ نَجۡزِي مَنۡ أَسۡرَفَ وَلَمۡ يُؤۡمِنۢ بِـَٔايَٰتِ رَبِّهِۦۚ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَشَدُّ وَأَبۡقَىٰٓ ١٢٧
Так Мы воздаем тем, кто излишествовал и не уверовал в знамения своего Господа. А мучения в Последней жизни будут еще более тяжкими и длительными.
தம் இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றுகளை நம்பாமல் புறக்கணித்து தடுக்கப்பட்டுள்ள இச்சைகளில் மூழ்கியிருப்போருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். அல்லாஹ் மறுமையில் வழங்கும் வேதனையோ இவ்வுலகிலும் மண்ணறையிலும் அவர்கள் அனுபவிக்கும் நெருக்கடி வாழ்வைவிட கடுமையானது, சக்தி வாய்ந்தது, நிலையானது.
20:128Страница 321
أَفَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ ١٢٨
Неужели их не привело на прямой путь то, что Мы погубили до них столько поколений, по жилищам которых они ходят? Воистину, в этом - знамения для обладающих разумом.
நாம் இந்த இணைவைப்பாளர்களுக்கு முன்னரே பல சமூகங்கள் அழிக்கப்பட்ட செய்தி இவர்களுக்கு தெரியாதா? அழிக்கப்பட்ட அந்த சமூகங்களின் வசிப்பிடங்களின் வழியேதான் இவர்கள் செல்கிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனையின் அடையாளங்களைக் காண்கிறார்கள். நிச்சயமாக அந்த அதிகமான சமூகங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளில் அறிவுடையோருக்குப் படிப்பினைகள் இருக்கின்றன.
20:129Страница 321
وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامٗا وَأَجَلٞ مُّسَمّٗى ١٢٩
Если бы не было прежде Слова от твоего Господа и если бы не назначенный срок, то оно (наказание) уже обязательно наступило бы.
தூதரே!- ஆதாரம் நிலைநாட்டப்படுவதற்கு முன்னரே உம் இறைவன் எவரையும் வேதனை செய்ய மாட்டான் என்ற உம் இறைவனின் வாக்கு முந்தியிராவிட்டால், அவன் அவர்களுக்கு குறிப்பிட்ட தவணையை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அவன் அவர்களை விரைவாகத் தண்டித்திருப்பான். ஏனெனில் அவர்கள் அதற்குத் தகுதியானவர்களே.
20:130Страница 321
فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ غُرُوبِهَاۖ وَمِنۡ ءَانَآيِٕ ٱلَّيۡلِ فَسَبِّحۡ وَأَطۡرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرۡضَىٰ ١٣٠
Посему будь терпелив к тому, что они говорят, и прославляй хвалой своего Господа перед восходом солнца и перед его закатом (совершай рассветный и послеполуденный намазы), славь его в течение ночи (совершай вечерний и ночные намазы), а также в начале и конце дня (совершай полуденный и закатный намазы). Быть может, ты останешься доволен.
தூதரே!- உம்மைப் பற்றி நிராகரிப்பவர்கள் கூறும் பொய்யான வர்ணனைகளைத் தாங்கிக்கொண்டு பெறுமையைக் கடைபிடிப்பீராக. அல்லாஹ்விடமிருந்து உமக்குத் திருப்தியளிக்கும் கூலியைப் பெறுவதற்காக சூரியன் உதிப்பதற்கு முன்னால் அதிகாலைத் தொழுகையிலும் அது மறைவதற்கு முன்னால் உள்ள அஸர் தொழுகையிலும் இரவுநேரத்தில் தொழும் தொழுகைகளான மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளிலும் ஒரு நாளின் முதற் பகுதியான சூரியன் உச்சியிலிருந்து சாயும் லுஹர் தொழுகையிலும் அதன் இரண்டாம் பகுதியின் முடிவின் பின்னரான மஃரிப் தொழுகையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.
20:131Страница 321
وَلَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ زَهۡرَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا لِنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَرِزۡقُ رَبِّكَ خَيۡرٞ وَأَبۡقَىٰ ١٣١
Не заглядывайся на то, чем Мы наделили некоторых из них (неверующих), чтобы подвергнуть их этим искушению. Это - блеск земной жизни, а удел твоего Господа лучше и долговечнее.
பொய்ப்பிப்பவர்களை சோதிப்பதற்காக நாம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உலகியல் வசதிகளின் வகைகளை ஏறெடுத்தும் பார்க்காதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்கு வழங்கியவை அனைத்தும் அழிந்து விடக்கூடியவையே. உம் இறைவன் உமக்கு வாக்களித்த நீர் பொருந்திக் கொள்ளும் நன்மையே அவன் அவர்களுக்கு உலகில் வழங்கியிருக்கும் அழியக்கூடிய வசதிகளைவிட சிறந்ததும் நிலையானதுமாகும். ஏனெனில் நிச்சயமாக அதுதான் என்றும் துண்டிக்கப்படாதது.
20:132Страница 321
وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ لَا نَسۡـَٔلُكَ رِزۡقٗاۖ نَّحۡنُ نَرۡزُقُكَۗ وَٱلۡعَٰقِبَةُ لِلتَّقۡوَىٰ ١٣٢
Вели своей семье совершать намаз и сам терпеливо совершай его. Мы не просим у тебя удела, ведь Мы Сами наделяем тебя уделом. А добрый исход - за богобоязненностью.
தூதரே!- உம் குடும்பத்தினரை தொழுகையை நிறைவேற்றுமாறு ஏவுவீராக. அதனை நிறைவேற்றுவதில் பொறுமையாக நிலைத்திருப்பீராக. நாம் உமக்காகவோ மற்றவர்களுக்காகவோ உம்மிடம் வாழ்வாதாரம் கேட்கவில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளிக்க பொறுப்பேற்றுள்ளோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழப்படக்கூடிய முடிவு கிடைக்கும்.
20:133Страница 321
وَقَالُواْ لَوۡلَا يَأۡتِينَا بِـَٔايَةٖ مِّن رَّبِّهِۦٓۚ أَوَلَمۡ تَأۡتِهِم بَيِّنَةُ مَا فِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ١٣٣
Они говорят: «Почему он не принес нам знамение от своего Господа?». Но разве не явилось к ним ясное знамение о том, что было в первых скрижалях?
தூதரைப் பார்த்து இந்த நிராகரிப்பாளர்கள், பொய்பிப்பவர்கள் கூறுகிறார்கள்: “முஹம்மது நிச்சயமாக அவர் தூதர் என்று நிரூபிக்கக்கூடிய ஏதேனும் சான்றினை அவரின் இறைவனிடம் இருந்து நம்மிடம் கொண்டுவர வேண்டாமா?” இதற்கு முன்னர் இறங்கிய இறைவேதங்களை உண்மைப்படுத்தக்கூடிய குர்ஆன் இந்த பொய்பிக்கக்கூடியவர்களிடம் வரவில்லையா என்ன?
20:134Страница 321
وَلَوۡ أَنَّآ أَهۡلَكۡنَٰهُم بِعَذَابٖ مِّن قَبۡلِهِۦ لَقَالُواْ رَبَّنَا لَوۡلَآ أَرۡسَلۡتَ إِلَيۡنَا رَسُولٗا فَنَتَّبِعَ ءَايَٰتِكَ مِن قَبۡلِ أَن نَّذِلَّ وَنَخۡزَىٰ ١٣٤
Если бы Мы погубили их от наказания до этого (пришествия Мухаммада и ниспослания Корана), то они сказали бы: «Господь наш! Почему Ты не отправил к нам посланника, чтобы мы последовали за Твоими знамениями до того, как оказались унижены и опозорены?».
நிச்சயமாக நாம் தூதரை அனுப்புவதற்கும் வேதத்தை இறக்குவதற்கும் முன்னரே தூதரை பொய்பிக்கும் இவர்களை இவர்களின் நிராகரிப்பினாலும் பிடிவாதத்தினாலும் ஏதேனும் வேதனையை இறக்கி அழித்து விட்டால் மறுமை நாளில் இவர்கள் இறைவனிடம் தங்களின் நிராகரிப்பிற்குச் சாக்குப்போக்காக, “-எங்களின் இறைவன்- உலகில் எங்களிடம் ஒரு தூதரை அனுப்பியிருக்கக்கூடாதா? அவ்வாறு அனுப்பியிருந்தால், உன் வேதனையால் கிடைக்கும் இந்த இழிவு ஏற்படமுன், அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவர் கொண்டுவந்த அத்தாட்சிகளைப் பின்பற்றியிருப்போமே!” என்று கூறுவார்கள்.
20:135Страница 321
قُلۡ كُلّٞ مُّتَرَبِّصٞ فَتَرَبَّصُواْۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ أَصۡحَٰبُ ٱلصِّرَٰطِ ٱلسَّوِيِّ وَمَنِ ٱهۡتَدَىٰ ١٣٥
Скажи: «Все ждут, и вы подождите. Вы узнаете, кто идет прямой дорогой и следует прямым путем».
தூதரே!- இந்த பொய்பிப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “எங்களிலும் உங்களிலும் உள்ள ஒவ்வொருவரும் அல்லாஹ் என்ன நிகழ்த்தப் போகின்றான் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கினர். எனவே நீங்கள் எதிர்பாருங்கள். நேரான வழியைப் பின்பற்றுபவர்கள், நேர்வழியை அடைந்தவர்கள் நீங்களா? அல்லது நாங்களா? என்பதை விரைவில் நீங்கள் -சந்தேகம் இல்லாது- அறிந்துகொள்வீர்கள்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии