Аль-МухтасарТа Ха · 20:65–111

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Та Ха 20:65–111

20:65Страница 316

قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ ٦٥

Они сказали: «О Муса (Моисей)! Ты бросишь первым, или же нам бросать первыми?».

சூனியக்காரர்கள் மூஸாவிடம் கூறினார்கள்: “மூஸாவே! உம்மிடம் உள்ள சூனியத்தைச் செய்து நீர் ஆரம்பம் செய்வதா அல்லது அதனை நாம் ஆரம்பிப்பதா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வீராக.

20:66Страница 316

قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ ٦٦

Он сказал: «Нет, бросайте вы!». И тут ему представилось, что их веревки и посохи от их колдовства пришли в движение.

மூஸா கூறினார்: “இல்லை, உங்களிடமுள்ளதை நீங்களே முதலில் எறியுங்கள். அவர்கள் தங்களிடம் உள்ளதை எறிந்தார்கள். நிச்சயமாக அவர்கள் எறிந்த கயிறுகளும், கைத்தடிகளும் சூனியத்தினால் மூஸாவுக்கு விரைவாக நகரும் பாம்புகளாகத் தோற்றமளித்தன.

20:67Страница 316

فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةٗ مُّوسَىٰ ٦٧

Тогда он почувствовал в душе страх.

அவர்கள் செய்தவற்றால் ஏற்பட்ட அச்சத்தை மூஸா தனது மனதில் மறைத்துக்கொண்டார்.

20:68Страница 316

قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ ٦٨

Мы сказали: «Не бойся! Ты одержишь верх.

அல்லாஹ் மூஸாவிடம் அவரை அமைதிப்படுத்தியவாறு கூறினான்: “அவர்கள் ஏற்படுத்திய மாயத்தோற்றத்தைக் கண்டு பயந்துவிடாதீர். மூஸாவே! நிச்சயமாக நீர்தான் அவர்களை வென்று மேலோங்குபவர்.

20:69Страница 316

وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرٖۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ ٦٩

Брось то, что держишь в своей деснице, и оно проглотит содеянное ими. Воистину, содеянное ими - это козни колдуна, а колдун не преуспеет, куда бы он ни пришел».

உம்முடைய வலது கையிலுள்ள கைத்தடியை எறிவீராக. அது பாம்பாக மாறி அவர்கள் உருவாக்கிய சூனியங்கள் அனைத்தையும் விழுங்கிவிடும். அவர்கள் உருவாக்கியது சூனியச் சூழ்ச்சியே. சூனியக்காரன் எங்கிருந்தாலும் தனது நோக்கத்தில் வெற்றிபெற மாட்டான்.

20:70Страница 316

فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ ٧٠

Колдуны пали ниц и сказали: «Мы уверовали в Господа Харуна (Аарона) и Мусы (Моисея)!».

மூஸா தம் கைத்தடியை எறிந்தார். அது பாம்பாக மாறி அவர்கள் உருவாக்கிய சூனியங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டது. நிச்சயமாக மூஸா கொண்டு வந்தது சூனியமல்ல, நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதுதான் என்பதை அறிந்துகொண்ட சூனியக்காரர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: “நாங்கள், படைப்புகள் அனைத்திற்கும் இறைவனாவனான, மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டோம்.”

20:71Страница 316

قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَۖ فَلَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ فِي جُذُوعِ ٱلنَّخۡلِ وَلَتَعۡلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابٗا وَأَبۡقَىٰ ٧١

Фараон сказал: «Неужели вы поверили ему без моего соизволения? Воистину, он - старший из вас, который научил вас колдовству. Я отрублю вам руки и ноги накрест и распну вас на пальмовых стволах. Вот тогда вы узнаете, чье наказание суровее и долговечнее».

சூனியக்காரர்கள் நம்பிக்கைகொண்டதை ஃபிர்அவ்ன் மறுத்தவனாக, அவர்களை எச்சரித்தவனாகக் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவின் மீது நம்பிக்கைகொண்டு விட்டீர்களா? -சூனியக்காரர்களே- நிச்சயமாக மூஸாதான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களின் குரு. உங்களில் ஒவ்வொருவரின் மறுகால் மறுகையை வெட்டிவிடுவேன். பேரீச்சை மரத்தின் தண்டுகளில் நீங்கள் சாகும்வரை உங்களின் உடல்களை கட்டிவிடுவேன். மற்றவர்களுக்கு படிப்பினையாக நீங்கள் இருப்பீர்கள். நம்மில் யார் வேதனையளிப்பதில் கடுமையானவர்? யாருடைய வேதனை நிலையானது? என்பதில் நானா? அல்லது மூஸாவின் இறைவனா? என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

20:72Страница 316

قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ ٧٢

Они сказали: «Мы не отдадим тебе предпочтения перед ясными знамениями, которые явились нам, и перед нашим Творцом. Выноси же свой приговор! Воистину, ты выносишь приговор только в мирской жизни.

சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: -“ஃபிர்அவ்னே!- எம்மிடம் வந்த தெளிவான சான்றுகளைப் பின்பற்றுவதை விட உன்னைப் பின்பற்றுவதற்கு முன்னுரிமை வழங்க மாட்டோம். மேலும் நாங்கள் எங்களைப் படைத்த அல்லாஹ்வை விட உனக்கு முன்னுரிமை வழங்கமாட்டோம். உன்னால் செய்ய முடிந்ததைச் செய். அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் அன்றி எங்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. உன்னுடைய அதிகாரம் விரைவில் அழிந்துவிடும்.

20:73Страница 316

إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغۡفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكۡرَهۡتَنَا عَلَيۡهِ مِنَ ٱلسِّحۡرِۗ وَٱللَّهُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ٧٣

Воистину, мы уверовали в нашего Господа для того, чтобы Он простил нам наши грехи и колдовство, к которому ты нас принудил. Аллах лучше и долговечнее».

எங்களின் இறைவன் எங்களின் முந்தைய நிராகரிப்பு மற்றும் ஏனைய பாவங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி கற்கவும், ஈடுபடவும், மூஸாவுடன் போட்டியிடவும் செய்த சூனியத்தினால் ஏற்பட்ட பாவத்தையும் மன்னித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவன் மீது நம்பிக்கைகொண்டு விட்டோம். நீ எங்களுக்கு வாக்களித்ததைவிட கூலி வழங்குவதில் அல்லாஹ்வே சிறந்தவன். நீ எங்களை அச்சுறுத்திய வேதனையை விட அவனே நிலையான வேதனையளிக்கக்கூடியவன்.

20:74Страница 316

إِنَّهُۥ مَن يَأۡتِ رَبَّهُۥ مُجۡرِمٗا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ٧٤

Тому, кто явится к своему Господу, будучи грешником, уготована Геенна, в которой он не умрет и не будет жить.

நிச்சயமாக யார் மறுமை நாளில் தன் இறைவனை நிராகரித்தவராக வருவாரோ அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர் அதில் நுழைந்து, என்றென்றும் அதில் வீழ்ந்துகிடப்பார். அங்கு வேதனையிலிருந்து ஆறுதலடைய அவரால் சாகவும் முடியாது; நன்றாக உயிர்வாழவும் முடியாது.

20:75Страница 316

وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ ٧٥

А тем, кто явится к Нему, будучи верующим, совершив праведные деяния, уготованы высшие ступени -

யார் தன் இறைவனை நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல்கள் புரிந்தவராக மறுமை நாளில் வருவார்களோ அப்படிப்பட்ட மகத்தான பண்புகளைப் பெற்றவர்களுக்கே உயர்ந்த பதவிகளும், அந்தஸ்துகளும் இருக்கின்றன.

20:76Страница 316

جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ ٧٦

сады Эдема, в которых текут реки. Они пребудут там вечно. Таково воздаяние тем, кто очистился.

அவர்கள் தங்கும் நிலையான சுவனங்களே அந்த உயர்ந்த அந்தஸ்துகளாகும். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். மேற்கூறப்பட்ட கூலிகள் நிராகரிப்பு மற்றும் பாவங்களிலிருந்து தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்ட ஒவ்வொருவருக்குமான கூலியாகும்.

20:77Страница 317

وَلَقَدۡ أَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِي فَٱضۡرِبۡ لَهُمۡ طَرِيقٗا فِي ٱلۡبَحۡرِ يَبَسٗا لَّا تَخَٰفُ دَرَكٗا وَلَا تَخۡشَىٰ ٧٧

Мы внушили Мусе (Моисею) откровение: «Ночью отправляйся в путь с Моими рабами и проложи для них по морю сухую дорогу. Не бойся, что тебя настигнут, и не опасайся!».

நாம் மூஸாவிற்கு வஹி அறிவித்தோம்: “எகிப்திலிருந்து என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் யாரும் அறியாதவண்ணம் சென்றுவிடுவீராக. கைத்தடியால் கடலை அடித்த பிறகு அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைத்துக் கொள்வீராக. ஃபிர்அவ்ன் உங்களைப் பிடித்துவிடுவான் என்றோ கடலில் மூழ்கிவிடுவோம் என்றோ நீங்கள் அஞ்ச வேண்டாம்.”

20:78Страница 317

فَأَتۡبَعَهُمۡ فِرۡعَوۡنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلۡيَمِّ مَا غَشِيَهُمۡ ٧٨

Фараон со своим войском бросился преследовать их, но море накрыло их полностью.

ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலிலிருந்து மூட வேண்டிய ஏதோ ஒன்று- அதன் உண்மை நிலையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்- அவனது படையை மூடிவிட்டது. அவர்கள் அனைவரும் மூழ்கி அழிந்தார்கள். மூஸாவும் அவருடன் இருந்தவர்களும் தப்பித்தார்கள்.

20:79Страница 317

وَأَضَلَّ فِرۡعَوۡنُ قَوۡمَهُۥ وَمَا هَدَىٰ ٧٩

Фараон ввел в заблуждение свой народ и не повел его прямым путем.

ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினருக்கு நிராகரிப்பை அழகுபடுத்தியும், அசத்தியத்தைக் கொண்டு அவர்களை ஏமாற்றியும் அவர்களை வழிகெடுத்துவிட்டான். அவர்களுக்கு நேரான வழியை அவன் காட்டவில்லை.

20:80Страница 317

يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ قَدۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ عَدُوِّكُمۡ وَوَٰعَدۡنَٰكُمۡ جَانِبَ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنَ وَنَزَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰ ٨٠

О сыны Исраила (Израиля)! Мы спасли вас от вашего врага и дали вам обещание на правом склоне горы. Мы также ниспослали вам манну и перепелов.

ஃபிர்அவ்னையும் அவனுடைய படைகளையும் விட்டு இஸ்ராயீலின் மக்களை பாதுகாத்த பிறகு நாம் அவர்களிடம் கூறினோம்: “இஸ்ராயீலின் மக்களே! நாம் உங்களின் எதிரிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றியுள்ளோம். தூர் மலைக்கு பக்கத்தில் இருக்கின்ற பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து நாம் மூஸாவுடன் உரையாடுவோம் என்று உங்களுக்கு வாக்களித்துள்ளோம். நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது (மன்னு எனும்) தேன் போன்ற இனிப்புப் பானத்தையும் காடை போன்ற (சல்வா எனும்) நல்ல மாமிசமுடைய சிறு பறவையையும் உங்களுக்கு எங்களின் அருளாக இறக்கினோம்.

20:81Страница 317

كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَلَا تَطۡغَوۡاْ فِيهِ فَيَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبِيۖ وَمَن يَحۡلِلۡ عَلَيۡهِ غَضَبِي فَقَدۡ هَوَىٰ ٨١

Вкушайте блага, которыми Мы наделили вас, но не преступайте посредством их границы дозволенного, а не то на вас падет Мой гнев. А всякий, на кого падет Мой гнев, погибнет.

நாம் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட சுவையான உணவுகளை உண்ணுங்கள். உங்களுக்கு அனுமதித்தவற்றில் எல்லை மீறி தடைசெய்யப்பட்டவற்றின்பால் சென்று விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் என் கோபத்திற்குள்ளாகி விடுவீர்கள். எவர் என் கோபத்திற்கு உள்ளானாரோ அவர் ஈருலகிலும் அழிந்து துர்பாக்கியசாலியாகி விட்டார்.

20:82Страница 317

وَإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ ٨٢

Воистину, Я прощаю тех, кто раскаялся, уверовал, стал поступать праведно, а потом последовал прямым путем.

நிச்சயமாக என் பக்கம் மீண்டு, நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்து, பின்பு சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பவர்களை நிச்சயமாக நான் அதிகம் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றேன்.

20:83Страница 317

۞ وَمَآ أَعۡجَلَكَ عَن قَوۡمِكَ يَٰمُوسَىٰ ٨٣

Аллах сказал: «О Муса (Моисей)! Зачем ты поспешил оставить свой народ?».

மூஸாவே!- உம் சமூகத்தினரை பின்னால் விட்டுவிட்டு என் பக்கம் விரைவாக உம்மை வரவைத்தது எது?

20:84Страница 317

قَالَ هُمۡ أُوْلَآءِ عَلَىٰٓ أَثَرِي وَعَجِلۡتُ إِلَيۡكَ رَبِّ لِتَرۡضَىٰ ٨٤

Муса (Моисей) сказал: «Они находятся неподалеку и следуют по моим стопам, я же поторопился к Тебе, Господи, чтобы Ты остался доволен».

மூஸா கூறினார்: “அவர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். விரைவில் என்னை அடைந்துவிடுவார்கள். நீ என் விஷயத்தில் திருப்தியடைய வேண்டும் என்பதற்காகவே எனது சமூகத்தை முந்தி நான் உன் பக்கம் விரைந்து வந்துள்ளேன்.

20:85Страница 317

قَالَ فَإِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَكَ مِنۢ بَعۡدِكَ وَأَضَلَّهُمُ ٱلسَّامِرِيُّ ٨٥

Аллах сказал: «Мы подвергли твой народ искушению после того, как ты оставил их, и самаритянин ввел их в заблуждение».

அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நாம் நீர் உமக்குப் பின் விட்டுவிட்டு வந்த உம் சமூகத்தினரை காளைக்கன்றை வணங்குவதைக் கொண்டு சோதித்துள்ளோம். அதனை வணங்குமாறு சாமிரி அவர்களை அழைத்துள்ளான். அவன் அதன் மூலம் அவர்களை வழிகெடுத்துவிட்டான்.

20:86Страница 317

فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوۡمِهِۦ غَضۡبَٰنَ أَسِفٗاۚ قَالَ يَٰقَوۡمِ أَلَمۡ يَعِدۡكُمۡ رَبُّكُمۡ وَعۡدًا حَسَنًاۚ أَفَطَالَ عَلَيۡكُمُ ٱلۡعَهۡدُ أَمۡ أَرَدتُّمۡ أَن يَحِلَّ عَلَيۡكُمۡ غَضَبٞ مِّن رَّبِّكُمۡ فَأَخۡلَفۡتُم مَّوۡعِدِي ٨٦

Муса (Моисей) вернулся к своему народу разгневанный, опечаленный и сказал: «О мой народ! Разве ваш Господь не дал вам прекрасного обещания? Неужели этот срок оказался долгим для вас? Или же вам захотелось, чтобы на вас пал гнев вашего Господа, и потому вы нарушили данное мне обещание?».

தம் சமூகம் காளைக்கன்றை வணங்கியதனால் அவர்கள் மீது கவலைகொண்டு மூஸா கோபமாக அவர்களிடம் திரும்பிச் சென்றார். அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்: “என் சமூகமே! அல்லாஹ் உங்களுக்குத் தவ்ராத்தை இறக்கி, சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வேன் என்று உங்களுக்கு அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? நீங்கள் மறந்துவிடுமளவுக்கு உங்கள் மீது காலம் நீண்டுவிட்டதா என்ன? அல்லது உங்களின் இந்த செயலின் மூலம் இறைவனின் கோபம் ஏற்பட்டு அவனது வேதனை உங்கள் மீது இறங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நான் உங்களின் பக்கம் திரும்பி வரும் வரைக்கும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து உறுதியாக இருப்போம் என்று எனக்கு அளித்த வாக்குறுதிக்கு அதனால்தான் மாறுசெய்துவிட்டீர்களா?

20:87Страница 317

قَالُواْ مَآ أَخۡلَفۡنَا مَوۡعِدَكَ بِمَلۡكِنَا وَلَٰكِنَّا حُمِّلۡنَآ أَوۡزَارٗا مِّن زِينَةِ ٱلۡقَوۡمِ فَقَذَفۡنَٰهَا فَكَذَٰلِكَ أَلۡقَى ٱلسَّامِرِيُّ ٨٧

Они сказали: «Мы не нарушали данного тебе обещания по своей воле. Мы были нагружены тяжелыми украшениями того народа и бросили их в огонь, и самаритянин тоже бросил».

மூஸாவின் சமூகத்தார் கூறினார்கள்: “-மூஸாவே!- நாங்கள் உமக்கு அளித்த வாக்குறுதிக்கு விரும்பி மாறாகச் செயல்படவில்லை. மாறாக நாங்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். நாங்கள் ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடமிருந்து ஆபரணங்களையும், சுமைகளையும் சுமந்து வந்தோம். அவற்றிலிருந்து நாங்கள் விடுபடுவதற்காக அவற்றை ஒரு குழியில் எறிந்துவிட்டோம். நாங்கள் அவற்றை குழியில் எறிந்தவாறே சாமிரியும் தன்னிடமிருந்த ஜிப்ரீலின் குதிரையின் பாதத்தின் மண்ணை எறிந்தான்.

20:88Страница 318

فَأَخۡرَجَ لَهُمۡ عِجۡلٗا جَسَدٗا لَّهُۥ خُوَارٞ فَقَالُواْ هَٰذَآ إِلَٰهُكُمۡ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِيَ ٨٨

Он изготовил для них изваяние тельца, который мычал, и сказал: «Вот ваш бог и бог Мусы (Моисея), но он забыл его».

அந்த ஆபரணங்களிலிருந்து சாமிரி இஸ்ராயீலின் மக்களுக்காக உயிரற்ற ஒரு காளைக்கன்றின் உடலை உருவாக்கினான். அது பசு மாட்டைப் போல் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. சாமிரியின் செயலால் சோதனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “இதுதான் உங்களின் கடவுள், மூஸாவின் கடவுள். அவர் இதனை மறந்து இங்கே விட்டுச் சென்று விட்டார்.

20:89Страница 318

أَفَلَا يَرَوۡنَ أَلَّا يَرۡجِعُ إِلَيۡهِمۡ قَوۡلٗا وَلَا يَمۡلِكُ لَهُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا ٨٩

Неужели они не видели, что он не говорил им в ответ ни слова и не был способен навредить им или принести им пользу?

காளைக் கன்றால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அதனை வணங்கியவர்கள் அது அவர்களுடன் பேசவுமில்லை, அவர்களின் பேச்சுக்குப் பதிலளிக்கவுமில்லை, அவர்களையும் ஏனையவர்களையும் விட்டுத் தீங்கினை அகற்றவோ அவர்களுக்கோ ஏனையவர்களுக்கோ நன்மையை கொண்டுவரவோ சக்திபெறவுமில்லை என்பதைப் பார்க்கவில்லையா?

20:90Страница 318

وَلَقَدۡ قَالَ لَهُمۡ هَٰرُونُ مِن قَبۡلُ يَٰقَوۡمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحۡمَٰنُ فَٱتَّبِعُونِي وَأَطِيعُوٓاْ أَمۡرِي ٩٠

Харун (Аарон) сказал им до этого: «О мой народ! Вас искушают этим. Ваш Господь - Милостивый. Следуйте за мной и повинуйтесь моим велениям».

மூஸா திரும்பி வருவதற்கு முன்னால் ஹாரூன் அவர்களிடம் கூறினார்: “ஆபரணங்களிலிருந்து காளைக் கன்று உருவாக்கப்பட்டதும் அது எழுப்பும் சப்தமும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார்? நிராகரிப்பாளர்கள் யார்? என்று சோதிப்பதற்காகவே அன்றி வேறில்லை. -என் சமூகமே!- நிச்சயமாக கருணைக்குச் சொந்தக்காரனே உங்களின் இறைவனாவான். உங்களுக்கு கருணை காட்டுவதற்கு முன் உங்களுக்கு எவ்வித தீங்கிழைக்கவோ நன்மை பயக்கவோ கூட ஆற்றலற்றவனல்ல உங்கள் இறைவன். எனவே அவனை மட்டுமே வணங்குவதில் என்னைப் பின்பற்றுங்கள். அவனைத் தவிர மற்றவற்றை வணங்குவதை விட்டுவிட்டு எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்.”

20:91Страница 318

قَالُواْ لَن نَّبۡرَحَ عَلَيۡهِ عَٰكِفِينَ حَتَّىٰ يَرۡجِعَ إِلَيۡنَا مُوسَىٰ ٩١

Они сказали: «Мы не перестанем поклоняться ему, пока Муса (Моисей) не вернется к нам».

காளைக் கன்றை வணங்குவதனால் சோதனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “மூஸா நம்மிடம் திரும்பி வரும் வரை நாங்கள் காளைக் கன்று வணக்கத்தில் இருந்துகொண்டே இருப்போம்.”

20:92Страница 318

قَالَ يَٰهَٰرُونُ مَا مَنَعَكَ إِذۡ رَأَيۡتَهُمۡ ضَلُّوٓاْ ٩٢

Муса (Моисей) сказал: «О Харун (Аарон)! Когда ты увидел, что они впали в заблуждение, что помешало тебе

மூஸா தம் சகோதரர் ஹாரூனிடம் கூறினார்: “அவர்கள் அல்லாஹ்வை விடுத்து காளைக் கன்றை வணங்கி வழிதவறியதை நீர் பார்த்த போது ஏன் தடுக்கவில்லை?”

20:93Страница 318

أَلَّا تَتَّبِعَنِۖ أَفَعَصَيۡتَ أَمۡرِي ٩٣

последовать за мной? Неужели ты ослушался меня?».

அவர்களை விட்டு விட்டு என்னுடன் சேர்ந்துகொள்வதை விட்டும் எது உம்மைத் தடுத்தது?” நான் உம்மை அவர்களிடம் என் பிரதிநிதியாக நியமித்த போது என் கட்டளைக்கு மாறுசெய்து விட்டீரா?

20:94Страница 318

قَالَ يَبۡنَؤُمَّ لَا تَأۡخُذۡ بِلِحۡيَتِي وَلَا بِرَأۡسِيٓۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقۡتَ بَيۡنَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَمۡ تَرۡقُبۡ قَوۡلِي ٩٤

Харун (Аарон) сказал: «О сын моей матери! Не хватай меня за бороду и за голову. Я боялся, что ты скажешь: «Ты разобщил сынов Исраила (Израиля) и не выполнил моих наставлений»».

மூஸா ஹாரூனின் செயலைக் கண்டிக்கும் விதமாக அவரது தலை முடியையும், தாடியையும் பிடித்து இழுத்தபோது ஹாரூன் அவரிடம் அன்பாக கூறினார்: “என் தாடியையோ, தலை முடியையோ பிடித்து இழுக்காதீர். நிச்சயமாக நான் அவர்களிடம் இருந்ததற்கு தக்க காரணம் உள்ளது. ஏனெனில் நான் அவர்களை தனியே விட்டுவிட்டால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். அப்பொழுது “நீர் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர். அவர்கள் விஷயத்தில் என் அறிவுரையை பேணி நடக்கவில்லை” என்று நீர் என்னைப் பார்த்து கூறுவீர் என்று அஞ்சினேன்.

20:95Страница 318

قَالَ فَمَا خَطۡبُكَ يَٰسَٰمِرِيُّ ٩٥

Муса (Моисей) спросил: «А что ты скажешь, самаритянин?».

மூஸா சாமிரியிடம் கூறினார்: “சாமிரியே! உனது விடயம் என்ன? எது உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியது?”

20:96Страница 318

قَالَ بَصُرۡتُ بِمَا لَمۡ يَبۡصُرُواْ بِهِۦ فَقَبَضۡتُ قَبۡضَةٗ مِّنۡ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذۡتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتۡ لِي نَفۡسِي ٩٦

Тот сказал: «Я видел то, чего не видели они. Я взял пригоршню со следов посланца (коня Джибрила) и бросил ее. Моя душа соблазнила меня на это».

சாமிரி மூஸாவிடம் கூறினான்: “அவர்கள் காணாததை நான் கண்டேன். ஜிப்ரீலை ஒரு குதிரையின்மீது கண்டேன். அவருடைய குதிரையின் கால்தடத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்து அதனை காளைக் கன்றின் வடிவத்தில் உருக்கப்பட்ட ஆபரணத்தில் எறிந்தேன். அதிலிருந்து சப்தம் எழுப்பக்கூடிய காளைக் கன்றின் உடல் தோன்றியது. இவ்வாறு என் மனம் நான் செய்தவற்றை எனக்கு அழகுபடுத்திக் காட்டியது.

20:97Страница 318

قَالَ فَٱذۡهَبۡ فَإِنَّ لَكَ فِي ٱلۡحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَۖ وَإِنَّ لَكَ مَوۡعِدٗا لَّن تُخۡلَفَهُۥۖ وَٱنظُرۡ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِي ظَلۡتَ عَلَيۡهِ عَاكِفٗاۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِي ٱلۡيَمِّ نَسۡفًا ٩٧

Муса (Моисей) сказал: «Ступай! В этой жизни тебе придется говорить: «Я не касаюсь вас, а вы не касайтесь меня!». А затем наступит срок, которого тебе не удастся избежать. Смотри же на своего бога, которому ты предавался. Мы сожжем его и развеем его по морю.

மூஸா சாமிரியிடம் கூறினார்: “நீ சென்றுவிடு. இனி உயிருடன் இருக்கும்வரை “நிச்சயமாக நான் தீண்டவும் மாட்டேன். தீண்டப்படவும் மாட்டேன்” என்றுதான் கூற வேண்டும். நீ ஒதுக்கப்பட்டவனாகத்தான் வாழ்வாய். உனக்கு மறுமை நாளில் ஒருகுறிப்பிட்ட நேரம் உண்டு. அங்கு நீ விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாய். அல்லாஹ் ஒருபோதும் இந்த வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். உனது கடவுளாக நீ ஆக்கி, அல்லாஹ்வை விடுத்து எதனை வணங்கினாயோ அந்த காளைக் கன்றைப் பார். நாம் அது உருகும் வரை நெருப்பால் எரித்து அதன் எந்த அடையாளமும் எஞ்சியிருக்காதவாறு கடலில் வீசி விடுவோம்.

20:98Страница 318

إِنَّمَآ إِلَٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَسِعَ كُلَّ شَيۡءٍ عِلۡمٗا ٩٨

Вашим Богом является Аллах, кроме Которого нет иного божества. Он объемлет знанием всякую вещь».

மனிதர்களே!- நிச்சயமாக வணக்கத்திற்குரிய உங்களின் உண்மையான இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர வேறு உண்மையான இறைவன் இல்லை. அவன் எல்லாவற்றையும் அறிவால் சூழ்ந்தவன். எதனைப் பற்றிய அறிவும் அவனை விட்டு தப்பிவிடாது.

20:99Страница 319

كَذَٰلِكَ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ مَا قَدۡ سَبَقَۚ وَقَدۡ ءَاتَيۡنَٰكَ مِن لَّدُنَّا ذِكۡرٗا ٩٩

Вот так Мы рассказываем тебе вести о том, что было в прошлом. Мы уже даровали тебе Напоминание.

தூதரே!- மூஸா, ஃபிர்அவ்ன் மற்றும் அவ்விருவருடைய சமூகங்களை பற்றிய சம்பவங்களை நாம் உமக்குக் கூறியதுபோல உமக்கு ஆறுதலாக அமையும்பொருட்டு முந்தைய தூதர்கள் மற்றும் சமூகங்களின் செய்திகளையும் நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். நாம் உமக்கு நம்மிடமிருந்து அறிவுரை பெற்றுக்கொள்பவர்கள் அறிவுரை பெறக்கூடிய குர்ஆனை வழங்கியுள்ளோம்.

20:100Страница 319

مَّنۡ أَعۡرَضَ عَنۡهُ فَإِنَّهُۥ يَحۡمِلُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وِزۡرًا ١٠٠

Кто отвернется от него (Корана), тот понесет в День воскресения тяжелую ношу.

உம்மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ளாமல், அதிலுள்ளதன்படி செயல்படாமல் யார் புறக்கணிக்கிறாரோ அவர் மறுமை நாளில் பெரும் பாவங்களைச் சுமந்தவராகவும் வேதனைமிக்க தண்டனைக்கு உரியவராகவும் வருவார்.

20:101Страница 319

خَٰلِدِينَ فِيهِۖ وَسَآءَ لَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ حِمۡلٗا ١٠١

Они пребудут в таком состоянии вечно. Скверна будет их ноша в День воскресения!

அந்த வேதனையில் அவர் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார். அவர்கள் மறுமை நாளில் சுமக்கும் சுமை மிகவும் மோசமானது.

20:102Страница 319

يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ وَنَحۡشُرُ ٱلۡمُجۡرِمِينَ يَوۡمَئِذٖ زُرۡقٗا ١٠٢

В тот день подуют в Рог, и в тот день Мы соберем грешников синими (синеглазыми).

மீண்டும் எழுப்பப்படுவதற்காக வானவர் இரண்டாது முறையாக சூர் ஊதும் நாளில் நாம் நிராகரிப்பாளர்களை ஒன்றுதிரட்டுவோம். அப்போது அங்கு அவர்கள் சந்திக்கும் மறுமையின் பயங்கரத்தின் கடுமையினால் அவர்களின் நிறங்கள் மாறி கண்கள் நீலம் பூத்திருக்கும்.

20:103Страница 319

يَتَخَٰفَتُونَ بَيۡنَهُمۡ إِن لَّبِثۡتُمۡ إِلَّا عَشۡرٗا ١٠٣

Они будут переговариваться шепотом: «Вы пробыли там (в мирской жизни) всего десять дней!».

அவர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாகப் பின்வருமாறு பேசிக் கொள்வார்கள்: “நாம் மரணத்தின் பின் பத்து இரவுகள்தான் மண்ணறை வாழ்வில் தங்கியிருப்போம்.”

20:104Страница 319

نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَ إِذۡ يَقُولُ أَمۡثَلُهُمۡ طَرِيقَةً إِن لَّبِثۡتُمۡ إِلَّا يَوۡمٗا ١٠٤

Нам лучше знать, о чем они будут говорить. Самый примерный из них скажет: «Вы пробыли там (в мирской жизни) всего один день».

அவர்கள் தங்களிடையே இரகசியமாகப் பேசுவதை நாம் அறிவோம். அதில் எதுவும் நம்மை விட்டு தப்பி விடாது. அப்போது அவர்களில் அறிவில் சிறந்தவர் கூறுவார்: “நீங்கள் ஒருநாள்தான் மண்ணறையில் தங்கியிருந்தீர்கள். அதைவிட அதிகமாக அல்ல.”

20:105Страница 319

وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡجِبَالِ فَقُلۡ يَنسِفُهَا رَبِّي نَسۡفٗا ١٠٥

Они спрашивают тебя о горах. Скажи: «Мой Господь развеет их

தூதரே!- மறுமை நாளில் மலைகளின் நிலை என்னவாகும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் மலைகளைத் அதன் வேர்களிலிருந்து பிடுங்கி விடுவான். அவை புழுதியாகி விடும்.

20:106Страница 319

فَيَذَرُهَا قَاعٗا صَفۡصَفٗا ١٠٦

и оставит только гладкую равнину.

அவற்றைச் சுமந்திருக்கும் பூமியை கட்டடங்களோ, தாவரங்களோ அற்ற வெட்ட வெளியாக்கி விடுவான்.

20:107Страница 319

لَّا تَرَىٰ فِيهَا عِوَجٗا وَلَآ أَمۡتٗا ١٠٧

Не увидишь ты на ней ни углубления, ни возвышения».

அதனைப் பார்க்கக் கூடியவரே!- பூமி நன்கு வெட்ட வெளியாக இருப்பதனால் நீர் அதில் எவ்வித வளைவையோ, மேடு, பள்ளத்தையோ காண மாட்டீர்.

20:108Страница 319

يَوۡمَئِذٖ يَتَّبِعُونَ ٱلدَّاعِيَ لَا عِوَجَ لَهُۥۖ وَخَشَعَتِ ٱلۡأَصۡوَاتُ لِلرَّحۡمَٰنِ فَلَا تَسۡمَعُ إِلَّا هَمۡسٗا ١٠٨

В тот день они последуют за глашатаем, и им не удастся уклониться от этого. Их голоса перед Милостивым будут смиренны, и ты услышишь только тихие звуки.

அந்த நாளில் மனிதர்கள் அழைப்பாளரின் சப்தத்தைப் பின்தொடர்ந்து மஹ்ஷர் பெருவெளியை நோக்கிச் செல்வார்கள். அவரைப் பின்பற்றாமல் யாரும் இருந்துவிட முடியாது. அளவிலாக் கருணையாளனின் மீதுள்ள பயத்தால் சப்தங்களெல்லாம் அமைதியாகி விடும். அந்த நாளில் சிறுமுணுமுணுப்பைத்தவிர வேறு எந்த சப்தத்தையும் நீர் கேட்க முடியாது.

20:109Страница 319

يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا ١٠٩

В тот день заступничество не поможет никому, кроме тех, кому Милостивый позволит и чьими речами Он будет доволен.

அந்த மாபெரும் நாளில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளித்து அவர்களின் வார்த்தையை விரும்புவானோ அவர்களின் பரிந்துரையைத்தவிர வேறு யாருடைய பரிந்துரையும் பயனளிக்காது.

20:110Страница 319

يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يُحِيطُونَ بِهِۦ عِلۡمٗا ١١٠

Он знает их будущее и прошлое, но они не способны объять Его своим знанием.

மக்கள் எதிர்நோக்கவிருக்கும் மறுமையைப் பற்றியும் உலகில் அவர்கள் பின்னால் விட்டு வந்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிவான். அடியார்கள் அனைவரும் அல்லாஹ்வின் உள்ளமையையோ, பண்புகளையோ, சூழ்ந்தறிய முடியாது.

20:111Страница 319

۞ وَعَنَتِ ٱلۡوُجُوهُ لِلۡحَيِّ ٱلۡقَيُّومِۖ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمٗا ١١١

Лица смирятся перед Живым, Вседержителем, и разочарование постигнет тех, кто понесет бремя несправедливости.

அடியார்களின் முகங்கள் தாழ்ந்துவிடும். என்றும் மரணிக்காத நிலையானவனுக்காக அவைகள் பணிந்துவிடும். அவன் அடியார்களின் அனைத்து விவகாரங்களையும் நிர்வகித்து நடைமுறைப்படுத்துபவன். தம்மைத் தாமே அழிவில் ஆழ்த்தி, பாவங்களைச் சுமந்தோர் நஷ்டமடைந்துவிட்டார்கள்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English