Аль-МухтасарАль‑Анбия · 21:93–112

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Аль-Анбия 21:93–112

21:93Страница 330

وَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡۖ كُلٌّ إِلَيۡنَا رَٰجِعُونَ ٩٣

Они впали в противоречия, но все они вернутся к Нам.

மக்கள் பலவாறாகப் பிரிந்து விட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவர்களாகவும் சிலர் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் சிலர் அவனை நிராகரிப்பவர்களாகவும் சிலர் நம்பிக்கையாளர்களாகவும் ஆகிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.

21:94Страница 330

فَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا كُفۡرَانَ لِسَعۡيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ ٩٤

Устремления того, кто совершал праведные деяния, будучи верующим, не будут отвергнуты. Воистину, Мы записываем их для него.

அவர்களில் யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களின் நற்செயல் ஒருபோதும் நிராகரிக்கப்படாது. மாறாக அல்லாஹ் அவனுக்கு நன்றி செலுத்தி அவனுடைய நன்மைகளை பன்மடங்காக்கிக் கொடுப்பான். மறுமை நாளில் தம் செயல்பதிவேட்டை பெற்றுக்கொண்டு அவர் மகிழ்ச்சியடைவார்.

21:95Страница 330

وَحَرَٰمٌ عَلَىٰ قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآ أَنَّهُمۡ لَا يَرۡجِعُونَ ٩٥

Запрет лежит на селениях, которые Мы погубили, и они не вернутся,

நிராகரிப்பின் காரணமாக நாம் அழித்த ஊர்மக்கள் பாவமன்னிப்புக் கோரி அது ஏற்றுக்கொள்ளப்பட இவ்வுலகிற்குத் திரும்பிவருவது சாத்தியமற்றதாகும்.

21:96Страница 330

حَتَّىٰٓ إِذَا فُتِحَتۡ يَأۡجُوجُ وَمَأۡجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٖ يَنسِلُونَ ٩٦

пока Йаджудж и Маджудж (Гог и Магог) не будут выпущены и не устремятся вниз с каждой возвышенности.

யஃஜுஜ், மஃஜுஜ் என்ற சமூகத்தவர்கள் அடைக்கப்பட்டுள்ள தடுப்பு திறக்கப்படும்வரை ஒருபோதும் திரும்பிவர மாட்டார்கள். அப்போது அவர்கள் பூமியின் உயரமான ஒவ்வொரு பகுதியிலிருந்தும் விரைவாக வெளிப்படுவார்கள்.

21:97Страница 330

وَٱقۡتَرَبَ ٱلۡوَعۡدُ ٱلۡحَقُّ فَإِذَا هِيَ شَٰخِصَةٌ أَبۡصَٰرُ ٱلَّذِينَ كَفَرُواْ يَٰوَيۡلَنَا قَدۡ كُنَّا فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا بَلۡ كُنَّا ظَٰلِمِينَ ٩٧

Приблизится истинное обещание, и тогда закатятся взоры неверующих. Они скажут: «О горе нам! Мы беспечно относились к этому. Более того, мы были беззаконниками».

அவர்கள் வெளிப்படுவதன்மூலம் மறுமை நாள் நெருங்கிவிடும். அதன் பயங்கரங்களும் துன்பங்களும் வெளிப்பட்டுவிடும். அதன் பயங்கரத்தால் நிராகரிப்பாளர்களின் பார்வைகள் அப்படியே திறந்த நிலையில் இருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! நாங்கள் மாபெரும் இந்த நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாமல் உலகில் வீணாக, அலட்சியமாக இருந்தோமே! அது மாத்தரமின்றி நாங்கள் நிராகரித்தும் பாவங்களில் ஈடுபட்டும் அநியாயக்காரர்களாகவல்வா இருந்தோம்!”

21:98Страница 330

إِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمۡ لَهَا وَٰرِدُونَ ٩٨

Вы и те, чему вы поклоняетесь вместо Аллаха, являетесь растопкой для Геенны, в которую вы войдете.

இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கிய சிலைகளும் தம்மை வணங்கியதை ஏற்றுக்கொண்ட மனிதர்கள் மற்றும் ஜின்களும் நரகத்தின் எரிபொருள்களாக இருப்பீர்கள். நீங்களும் உங்களின் தெய்வங்களும் அந்த நரகத்தில் நுழைவீர்கள்.

21:99Страница 330

لَوۡ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةٗ مَّا وَرَدُوهَاۖ وَكُلّٞ فِيهَا خَٰلِدُونَ ٩٩

Если бы они были богами, то не вошли бы туда. Но все они останутся там навечно.

வணங்கப்படுகின்ற இவை உண்மையான தெய்வங்களாக இருந்திருந்தால் தம்மை வணங்கியவர்களுடன் நரகத்தில் நுழைந்திருக்காது. வணங்கியவர்கள், வணங்கப்பட்டவை என அனைவரும் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.

21:100Страница 330

لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَهُمۡ فِيهَا لَا يَسۡمَعُونَ ١٠٠

Там они будут стенать при выдохе, но ничего не услышат.

அங்கு அவர்கள் -அனுபவிக்கும் துன்பங்களால்- பெரும் மூச்சு உண்டு. அவர்களுக்கு நிகழ்ந்திருக்கும் பயங்கரத்தின் கடுமையினால் எந்த சப்தத்தையும் நரகில் செவியுற மாட்டார்கள்.

21:101Страница 330

إِنَّ ٱلَّذِينَ سَبَقَتۡ لَهُم مِّنَّا ٱلۡحُسۡنَىٰٓ أُوْلَٰٓئِكَ عَنۡهَا مُبۡعَدُونَ ١٠١

А те, кому Мы изначально определили наилучшее, будут отдалены от нее.

(நிச்சயமாக வணங்கப்பட்ட வானவர்களும் ஈஸாவும் நரகத்தில் நுழைவார்கள் என்று இணைவைப்பாளர்கள் கூறியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக ஈஸாவைப்போன்று அல்லாஹ் யாரை நற்பேறு பெற்றவர்கள் என்று முன்னரே அவனுடைய அறிவில் முடிவு செய்யப்பட்டவர்கள் நரகத்திலிருந்து தூரமாக்கப்படுவார்கள்.”

21:102Страница 331

لَا يَسۡمَعُونَ حَسِيسَهَاۖ وَهُمۡ فِي مَا ٱشۡتَهَتۡ أَنفُسُهُمۡ خَٰلِدُونَ ١٠٢

Они не услышат даже малейшего ее звука и вечно пребудут среди того, что возжелали их души.

அவர்கள் நரகத்தின் சத்தத்தை செவியுற மாட்டார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் இன்பங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அவர்களின் இன்பம் ஒரு போதும் முடிவடையாது.

21:103Страница 331

لَا يَحۡزُنُهُمُ ٱلۡفَزَعُ ٱلۡأَكۡبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوۡمُكُمُ ٱلَّذِي كُنتُمۡ تُوعَدُونَ ١٠٣

Их не опечалит величайший испуг, а ангелы встретят их словами: «Вот ваш день, который был вам обещан!».

நரகவாசிகளை நெருப்பு மூடிக்கொள்ளும் போதுள்ள பெரும் பயங்கரம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. “இதுதான் நீங்கள் உலகில் வாக்களிக்கப்பட்ட நாள். நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வானவர்கள் அவர்களை வாழ்த்துக்கூறி வரவேற்பார்கள்.

21:104Страница 331

يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ ١٠٤

В тот день Мы свернем небо, как сворачивают свитки для книг. Мы воссоздадим творения подобно тому, как начали творить их в первый раз. Так было обещано Нами. Воистину, Мы сделаем это.

நாம் பதிவேடுகளை சுருட்டுவதுபோன்று வானத்தை அதிலுள்ளவற்றுடன் சுருட்டும் நாளில் படைப்புகள் அனைத்தையும் அவை ஆரம்பத்தில் படைக்கப்பட்டவாறே ஒன்றுதிரட்டுவோம். இது நாம் அளித்த வாக்குறுதியாகும். நாம் ஒருபோதும் அதற்கு மாறுசெய்ய மாட்டோம். நிச்சயமாக நாம் அளித்த வாக்குறுதிய நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

21:105Страница 331

وَلَقَدۡ كَتَبۡنَا فِي ٱلزَّبُورِ مِنۢ بَعۡدِ ٱلذِّكۡرِ أَنَّ ٱلۡأَرۡضَ يَرِثُهَا عِبَادِيَ ٱلصَّٰلِحُونَ ١٠٥

Мы уже записали в Писаниях после того, как это было записано в Напоминании (Хранимой скрижали), что землю унаследуют Мои праведные рабы.

நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே எழுதிய பிறகு தூதர்களுக்கு இறக்கிய வேதங்களிலும் பின்வருமாறு எழுதினோம்: “நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய அவனுடைய நல்லடியார்கள்தாம் பூமிக்கு சொந்தக்காரர்களாவர். அவர்கள்தாம் முஹம்மதின் சமூகத்தார்கள்.”

21:106Страница 331

إِنَّ فِي هَٰذَا لَبَلَٰغٗا لِّقَوۡمٍ عَٰبِدِينَ ١٠٦

Воистину, в этом - послание для тех, кто поклоняется.

நிச்சயமாக நாம் இறக்கிய அறிவுரையில் தங்கள் இறைவனை அவன் விதித்ததன் படி வணங்கக்கூடிய மக்களுக்கு நலவும், போதுமானளவு வழிகாட்டலும் இருக்கின்றது. அவர்கள்தாம் அதனைக்கொண்டு பயனடையக்கூடியவர்களாவர்.

21:107Страница 331

وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ ١٠٧

Мы отправили тебя только в качестве милости к мирам.

முஹம்மதே!- படைப்புகள் அனைத்திற்கும் அருட்கொடையாகவே நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அةதனால்தான் நீர் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்கும் அவர்களை இறைவேதனையிலிருந்து காப்பதற்கும் பேராசை கொண்டவராக காணப்படுகின்றீர்.

21:108Страница 331

قُلۡ إِنَّمَا يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ ١٠٨

Скажи: «Мне внушено в откровении, что ваш Бог - Бог Единственный. Не станете ли вы мусульманами?».

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் எனக்குப் பின்வருமாறுதான் வஹி அறிவித்துள்ளான்: “நிச்சயமாக வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ். எனவே அவனை நம்பிக்கைகொள்வதற்கும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுவதற்கும் கட்டுப்படுங்கள்.”

21:109Страница 331

فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ ءَاذَنتُكُمۡ عَلَىٰ سَوَآءٖۖ وَإِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٌ أَم بَعِيدٞ مَّا تُوعَدُونَ ١٠٩

Если они отвернутся, то скажи: «Я предупреждаю всех вас в равной мере, и я не знаю, рано или поздно настанет то, что вам обещано.

தூதரே!- நீர் கொண்டுவந்ததை அவர்கள் புறக்கணித்தால் அவர்களிடம் நீர் கூறிவிடுவீராக: “நிச்சயமாக எனக்கும் உங்களுக்கும் இடைப்பட்ட சமனான விஷயத்தை நான் தெளிவாக எனக்கும் உங்களுக்கும் அறிவித்துவிட்டேன். அல்லாஹ் எச்சரித்த வேதனை உங்கள் மீது எப்போது இறங்கும்? என்பதை நான் அறியமாட்டேன்.

21:110Страница 331

إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ مِنَ ٱلۡقَوۡلِ وَيَعۡلَمُ مَا تَكۡتُمُونَ ١١٠

Воистину, Он ведает о словах, которые произносят вслух, и ведает о том, что вы утаиваете.

நிச்சயமாக நீங்கள் வெளிப்படையாகக் கூறுவதையும் இரகசியமாகக் கூறுவதையும் அல்லாஹ் அறிவான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.

21:111Страница 331

وَإِنۡ أَدۡرِي لَعَلَّهُۥ فِتۡنَةٞ لَّكُمۡ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ١١١

Я не знаю, может быть, это - искушение для вас или же возможность пользоваться благами до определенного времени».

உங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவது உங்களுக்குச் சோதனையாகவும் விட்டுப்பிடிப்பதாகவும் நீங்கள் உங்களின் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் பிடிவாதமாக இருப்பதற்காக அவனுடைய அறிவின்படி குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அனுபவிப்பதற்காகவும் இருக்கலாம் என்பதை நான் அறிய மாட்டேன்.

21:112Страница 331

قَٰلَ رَبِّ ٱحۡكُم بِٱلۡحَقِّۗ وَرَبُّنَا ٱلرَّحۡمَٰنُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ ١١٢

Пророк сказал: «Господи! Рассуди по справедливости. У нашего Милостивого Господа надо просить помощи против того, что вы приписываете».

அல்லாஹ்வின் தூதுர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! எங்களுக்கும் நிராகரிப்பில் நிலைத்திருக்கும் எங்கள் சமூகத்திற்குமிடையே உண்மையான முறையில் தீர்ப்பு வழங்குவாயாக. நீங்கள் கூறும் பொய்யான, நிராகரிப்பான வார்த்தைகளுக்காக அருளாளனான எங்கள் இறைவனிடமே நாங்கள் உதவிதேடுகிறோம்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English