Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аль-Хаджж 22:36–71
22:36Страница 336
وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٣٦
Жертвенных верблюдов Мы сделали для вас обрядовыми знамениями Аллаха. Они приносят вам пользу. Произносите же над ними имя Аллаха, когда они стоят рядами. Когда же они падут на свои бока, то ешьте от них и кормите тех, кто довольствуется малым, и тех, кто просит от нищеты. Так Мы подчинили их (верблюдов) вам, - быть может, вы будете благодарны.
இறையில்லத்திற்காக பலியிடப்படும் ஒட்டகங்களை, மாடுகளை நாம் மார்க்கத்தின் அடையாளங்களாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு உலக மற்றும் மார்க்கரீதியான நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே அதனை நிற்கவைத்து அது மிரண்டுவிடாமல் இருக்க இரு முன்னங்கால்களையும் கட்டியவாறு அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். -பலிகொடுப்பவர்களே!- அறுக்கப்பட்ட பின் அது விலாப்புறமாக விழுந்துவிட்டால் அதிலிருந்து உண்ணுங்கள்; அதிலிருந்து வழங்கப்பட வேண்டும் என தன்னை வெளிப்படுத்தும் ஏழைக்கும், கேட்காமல் பத்தினியாக இருக்கும் ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் அவற்றின்மீது ஏறி பயணம் செய்வதற்காக அவன் உங்களுக்கு அவற்றை வசப்படுத்தித் தந்தவாறே அல்லாஹ்வை நெருங்குவதற்காக அவற்றை அறுக்கும் போதும் உங்களுக்கும் பணியும் வகையில் வசப்படுத்தியுள்ளான். அவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தி அருள்புரிந்தமைக்கு நீங்கள் நன்றிசெலுத்தும்பொருட்டு அவ்வாறு செய்துள்ளான்.
22:37Страница 336
لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ ٣٧
Ни мясо, ни кровь их не доходят до Аллаха. До Него доходит лишь ваша богобоязненность. Так Он подчинил их вам, чтобы вы возвеличивали Аллаха за то, что Он наставил вас на прямой путь. Обрадуй же благой вестью творящих добро.
நீங்கள் பலிகொடுக்கும் பிராணிகளின் மாமிசமோ இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை, அவனிடத்தில் கொண்டு செல்லப்படுவதுமில்லை. மாறாக பலிப்பிராணிகளின் மூலம் அவனை நெருங்கி வழிப்படுவதில் உளத்தூய்மையோடு நடந்து அவற்றில் நீங்கள் கடைபிடிக்கும் இறையச்சமே அவனிடம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு சத்தியத்தின்பால் நேர்வழிகாட்டியதற்காக அவனைப் பெருமைப்படுத்தி அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு அவன் உங்களுக்கு அவற்றை வசப்படுத்தித் தந்துள்ளான். -தூதரே!- தங்கள் இறைவனை சிறந்த முறையில் வணங்கக்கூடியவர்களுக்கு, அவனது படைப்புகளுடன் நல்ல முறையில் நடந்துகொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
22:38Страница 336
۞ إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٖ كَفُورٍ ٣٨
Воистину, Аллах оберегает тех, кто уверовал. Воистину, Аллах не любит всяких неблагодарных изменников.
நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய எதிரிகளின் மூலம் ஏற்படும் தீங்குகளை தடுக்கிறான். நிச்சயமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளில் மோசடி செய்யக்கூடிய, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் அதனை மறுக்கக்கூடிய ஒவ்வொருவரையும் அவன் நேசிப்பதில்லை. மாறாக அவனை வெறுக்கின்றான்.
22:39Страница 337
أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصۡرِهِمۡ لَقَدِيرٌ ٣٩
Дозволено тем, против кого сражаются, сражаться, потому что с ними поступили несправедливо. Воистину, Аллах способен помочь им.
தமது எதிரிகளினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனால் தம்முடன் போர்தொடுக்கும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அனுமதியளித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் போரில்லாமல் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்ய ஆற்றலுடையவன்தான். ஆயினும் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதைக்கொண்டு நம்பிக்கையாளர்களைச் சோதிப்பதற்கு அவனது ஞானம் தீர்மானித்துள்ளது.
22:40Страница 337
ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِم بِغَيۡرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُواْ رَبُّنَا ٱللَّهُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّهُدِّمَتۡ صَوَٰمِعُ وَبِيَعٞ وَصَلَوَٰتٞ وَمَسَٰجِدُ يُذۡكَرُ فِيهَا ٱسۡمُ ٱللَّهِ كَثِيرٗاۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ٤٠
Они были несправедливо изгнаны из своих жилищ только за то, что говорили: «Наш Господь - Аллах». Если бы Аллах не позволил одним людям защищаться от других, то были бы разрушены кельи, церкви, синагоги и мечети, в которых премного поминают имя Аллаха. Аллах непременно помогает тому, кто помогает Ему. Воистину, Аллах - Всесильный, Могущественный.
“எங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று கூறியதற்காகவே அவர்கள் நிராகரிப்பாளர்களால் தங்களின் வீடுகளிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் தூதர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் எதிரிகளுக்கு எதிராக போரிடுவதைக் கடமையாக்காவிட்டால் அந்த எதிரிகள் வணக்கஸ்தலங்களின் மீது வரம்புமீறியிருப்பார்கள். துறவிகளின் மடங்களையும் கிருஸ்தவர்களின் தேவாலயங்களையும் யூதர்களின் வழிபாட்டுத்தலங்களையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரும் தொழுகைக்காக தயார் செய்யப்பட்ட அவர்களின் பள்ளிவாயில்களையும் தகர்த்திருப்பார்கள். தன் மார்க்கத்திற்கும் தூதருக்கும் உதவிபுரிபவர்களுக்கு அல்லாஹ் நிச்சயம் உதவிபுரிவான். நிச்சயமாக தன் மார்க்கத்திற்கு உதவிபுரிபவர்களுக்கு உதவிபுரிய அல்லாஹ் சக்தியுடையவன். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது.
22:41Страница 337
ٱلَّذِينَ إِن مَّكَّنَّٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ وَأَمَرُواْ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡاْ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَٰقِبَةُ ٱلۡأُمُورِ ٤١
Если Мы одарим их властью на земле, они будут совершать намаз, выплачивать закят, велеть совершать одобряемое и запрещать предосудительное. А исход всех дел - у Аллаха.
உதவிசெய்வதாக எம்மால் வாக்களிக்கபட்ட இவர்கள்தான் அவர்களின் எதிரிகளுக்கெதிராக நாம் வெற்றியை வழங்கி பூமியில் ஆட்சியதிகாரம் வழங்கினால் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவார்கள்; தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்குவார்கள்; மார்க்கம் ஏவிய விஷயங்களை ஏவுவார்கள்; தடுத்த தீமையான விஷயங்களைத் தடுப்பார்கள். நன்மையளிப்பது, தண்டனையளிப்பது என எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்விடமே உள்ளது.
22:42Страница 337
وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَثَمُودُ ٤٢
Если они сочтут тебя лжецом, то ведь еще раньше пророков считали лжецами народ Нуха (Ноя), адиты, самудяне,
தூதரே!- உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் நீர் பொறுமையாக இருப்பீராக. நீர் ஒன்றும் தனது சமூகத்தால் பொய்ப்பிக்கப்படும் முதலாவது தூதர் அல்ல. உம் சமூகத்திற்கு முன்னர் நூஹின் சமூகம் அவரையும், ஆத் சமூகம் ஹூதை, ஸமூத் சமூகம் சாலிஹை பொய்ப்பித்தனர்.
இப்ராஹீமின் சமூகம், லூத்தின் சமூகத்தினர் தங்களின் தூதர்களை நிராகரித்துள்ளார்கள்.
22:44Страница 337
وَأَصۡحَٰبُ مَدۡيَنَۖ وَكُذِّبَ مُوسَىٰۖ فَأَمۡلَيۡتُ لِلۡكَٰفِرِينَ ثُمَّ أَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ٤٤
и жители Мадьяна. Мусу (Моисея) тоже сочли лжецом. Я предоставил отсрочку неверующим, а затем схватил их. Каким же было Мое обличение!
மத்யன்வாசிகள் ஷுஐபை பொய்பித்தார்கள். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தவரும் மூஸாவை பொய்பித்தார்கள். நாம் அவர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் விட்டுப் பிடிப்பதற்காக அவர்களை விட்டு தண்டனையைத் தாமதப்படுத்தினோம். பின்னர் அவர்களை வேதனையால் பிடித்தேன். அவர்களுக்கு எதிராக எனது மறுப்பு எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்களின் நிராகரிப்பினால் அவர்களை நான் அழித்துவிட்டேன்.
22:45Страница 337
فَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا وَهِيَ ظَالِمَةٞ فَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئۡرٖ مُّعَطَّلَةٖ وَقَصۡرٖ مَّشِيدٍ ٤٥
Сколько селений, которые были несправедливы, Мы погубили, и теперь они разрушены до основания. Сколько заброшенных колодцев и воздвигнутых дворцов!
நிராகரிப்பினால் அநியாயம் செய்துகொண்டிருந்த நிலையில்- நாம் பூண்டோடு அழித்த எத்தனையோ ஊர்கள் உள்ளன. அவற்றின் வீடுகள் வசிக்க யாருமின்றி வெற்றிடமாக இடிந்து கிடக்கின்றன. எத்தனையோ கிணறுகள் அதனைப் பயன்படுத்துவோர் அழிக்கப்பட்டதனால் பாழடைந்து இருக்கின்றன. அலங்கரிக்கப்பட்ட எத்தனையோ உயரமான மாளிகைகள்! அவற்றினால் அங்கு வசித்தவர்களை வேதனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
22:46Страница 337
أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَتَكُونَ لَهُمۡ قُلُوبٞ يَعۡقِلُونَ بِهَآ أَوۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۖ فَإِنَّهَا لَا تَعۡمَى ٱلۡأَبۡصَٰرُ وَلَٰكِن تَعۡمَى ٱلۡقُلُوبُ ٱلَّتِي فِي ٱلصُّدُورِ ٤٦
Разве они не странствовали по земле, имея сердца, посредством которых они могли разуметь, и уши, посредством которых они могли слушать? Воистину, слепнут не глаза, а слепнут сердца, находящиеся в груди.
அந்த அழிக்கப்பட்ட ஊர்களின் அடையாளங்களைக் காண்பதற்காக, தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிக்கும் இவர்கள் பூமியில் பயணம் செய்ய வேண்டாமா? அவ்வாறு செய்தால் தங்களின் அறிவால் சிந்தித்து படிப்பினை பெறலாம். அறிவுரைபெற வேண்டி அவர்களின் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்க வேண்டாமா? நிச்சயமாக பார்வை குருடாகிப்போவது குருடல்ல. மாறாக அகப்பார்வை குருடாவதே அழிவை ஏற்படுத்தும் குருடாகும். அகப்பார்வையை இழந்தவரால் படிப்பினை பெறவோ, அறிவுரை பெறவோ முடியாது.
22:47Страница 338
وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَن يُخۡلِفَ ٱللَّهُ وَعۡدَهُۥۚ وَإِنَّ يَوۡمًا عِندَ رَبِّكَ كَأَلۡفِ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ ٤٧
Они торопят тебя с наказанием, но Аллах не нарушает Своего обещания, и день у твоего Господа равен тысяче лет по тому, как вы считаете.
தூதரே!- நிராகரிக்கும் உம் சமூகத்தினர் வேதனையைகொண்டு எச்சரிக்கப்படும் போது இவ்வுலக வேதனையை விரைவாகவும் மறுவுலக வேதனையை பிற்படுத்தியும் வேண்டுகிறார்கள். அல்லாஹ் தண்டிப்பதாகக் கூறிய வாக்குறுதிக்கு ஒருபோதும் மாறு செய்யமாட்டான். அவர்களுக்கு இறக்கப்பட்ட விரைவான வேதனையே பத்ர் உடைய நாளில் இறங்கியதாகும். மறுமையில் இடம்பெறும் வேதனையினால் அங்கு வேதனைக்குரிய ஒரு நாள் நீங்கள் உலகில் கணக்கிடும் ஆயிரம் வருடங்களைப் போன்றதாகும்.
22:48Страница 338
وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَمۡلَيۡتُ لَهَا وَهِيَ ظَالِمَةٞ ثُمَّ أَخَذۡتُهَا وَإِلَيَّ ٱلۡمَصِيرُ ٤٨
Скольким селениям, которые были несправедливы, Я предоставил отсрочку! Впоследствии Я схватил их, и ко Мне предстоит прибытие.
நிராகரிப்பினால் அநியாயம் இழைத்துக்கொண்டிருந்த போது தண்டிக்காமல் அவகாசம் வழங்கிய எத்தனையோ ஊர்கள் உள்ளன. அவர்களை விட்டுப் பிடிப்பதற்காக உடனடியாகத் தண்டிக்கவில்லை. பின்னர் அடியோடு அழிக்கும் வேதனையால் அவர்களைத் தண்டித்தேன். மறுமை நாளில் அவர்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டும். அவர்களின் நிராகரிப்பினால் அவர்களுக்கு நிரந்தரமான தண்டனையை அளிப்பேன்.
22:49Страница 338
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَآ أَنَا۠ لَكُمۡ نَذِيرٞ مُّبِينٞ ٤٩
Скажи: «О люди! Воистину, я для вас - предостерегающий и разъясняющий увещеватель».
மக்களே! எதைக் கொடுத்து நான் அனுப்பப்பட்டேனோ நிச்சயமாக அதை எடுத்துரைத்து தெளிவாக எச்சரிக்கை செய்பவனே” எனக் கூறுவீராக!
22:50Страница 338
فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٥٠
Тем, которые уверовали и совершали праведные деяния, уготованы прощение и щедрый удел.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தங்கள் இறைவனிடம் தாங்கள் செய்த பாவங்களுக்கான மன்னிப்பும் சுவனத்தில் என்றும் முடிவடையாத கண்ணியமான வாழ்வாதாரமும் உண்டு.
22:51Страница 338
وَٱلَّذِينَ سَعَوۡاْ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ٥١
Те же, которые старались ослабить Наши знамения, станут обитателями Огня.
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வேதனையில்லாமல் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் நம் சான்றுகளை பொய்ப்பிக்க முனைபவர்கள்தாம் நரகத்தின் தோழர்களாவர். ஒரு நண்பன் நண்பனுடன் சேர்ந்திருப்பதைப் போல் நரகத்துடன் சேர்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
22:52Страница 338
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٖ وَلَا نَبِيٍّ إِلَّآ إِذَا تَمَنَّىٰٓ أَلۡقَى ٱلشَّيۡطَٰنُ فِيٓ أُمۡنِيَّتِهِۦ فَيَنسَخُ ٱللَّهُ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ ثُمَّ يُحۡكِمُ ٱللَّهُ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ٥٢
Мы не отправляли до тебя такого посланника или пророка, чтобы дьявол не подбросил свое в его чтение, когда он читал откровение. Аллах уничтожает то, что подбрасывает дьявол. Потом Аллах утверждает Свои знамения, ведь Аллах - Знающий, Мудрый.
தூதரே!- உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரானாலும், நபியானாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதும்போது நிச்சயமாக ஷைத்தான் அவர் ஓதுவதில் வஹியென்று மக்களைக் குழுப்பும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான். அவன் ஏற்படுத்திய சந்தேகத்தை அல்லாஹ் நீக்கி தன் வசனங்களை அவன் உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் படைத்த படைப்புகளில், ஏற்படுத்திய விதிகளில் தனது திட்டமிடலில் அவன் ஞானம் மிக்கவன்.
22:53Страница 338
لِّيَجۡعَلَ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ فِتۡنَةٗ لِّلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡقَاسِيَةِ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ ٥٣
Он делает то, что подбрасывает дьявол, искушением для тех, чьи сердца поражены недугом и чьи сердца ожесточены. Воистину, беззаконники находятся в полном разладе с истиной.
அல்லாஹ் நயவஞ்சகர்களுக்கும், இறுகிப்போன இதயம்கொண்ட இணைவைப்பாளர்களுக்கும் சோதனையாக மாற்றவே தூதர் ஓதும்போது ஷைத்தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக நயவஞ்சகர்களிலும் இணைவைப்பாளர்களிலுமுள்ள அநியாயக்காரர்கள் அல்லாஹ், அவனுடைய தூதர் மீது விரோதத்தில் உள்ளார்கள். சத்தியம் மற்றும் நேர்வழியை விட்டும் தூரத்தில் உள்ளார்கள்.
22:54Страница 338
وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَيُؤۡمِنُواْ بِهِۦ فَتُخۡبِتَ لَهُۥ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٥٤
Пусть знают те, кому даровано знание, что это - истина от твоего Господа, чтобы они могли уверовать в него, а их сердца могли смиренно покориться ему. Воистину, Аллах наставляет верующих на прямой путь.
தூதரே!- அல்லாஹ் யாருக்கு கல்வியை வழங்கியுள்ளானோ அவர்கள், முஹம்மதின் மீது இறக்கப்பட்ட குர்ஆன் சத்தியமாகும், அது அல்லாஹ் அவர் மீது வஹியாக அறிவித்ததாகும் என்பதை உறுதியாக அறிந்துகொள்வதற்காகவேயாகும். அவர்கள் அவனை மென்மேலும் நம்பிக்கை கொண்டு, அவர்களின் உள்ளங்கள் அவனுக்கு அடிபணிந்து, அஞ்சுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் அவனை நம்பிக்கைகொண்டவர்களை அவர்களின் அடிபணிதலின் காரணமாக எவ்வித கோணலுமற்ற நேரான சத்தியப் பாதையைக் காட்டுகிறான்.
22:55Страница 338
وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي مِرۡيَةٖ مِّنۡهُ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةً أَوۡ يَأۡتِيَهُمۡ عَذَابُ يَوۡمٍ عَقِيمٍ ٥٥
А неверующие не перестанут сомневаться в нем, пока не нагрянет внезапно Час или пока не постигнут их мучения в бесплодный день.
அல்லாஹ்வை நிராகரித்து தூதரைப் பொய்யெரெனக் கூறியவர்கள், மறுமை நாள் தங்களிடம் திடீரென வரும் வரை அல்லது நன்மையோ, கருணையோ அற்ற வேதனையுடைய நாள் வரும்வரை உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் மீது சந்தேகத்திலேயே தொடர்ந்து நிலைத்திருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அது கியாமத் நாளாகும்.
22:56Страница 339
ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٖ لِّلَّهِ يَحۡكُمُ بَيۡنَهُمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ٥٦
Власть в тот день будет принадлежать Аллаху, и Он рассудит между ними. И тогда те, которые уверовали и совершали праведные деяния, окажутся в Садах блаженства.
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை அவர்களை வந்தடையும் அந்த மறுமை நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அங்கு அதில் அவனோடு சர்ச்சைப்படுபவர்கள் யாரும் இல்லை. அவன் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே தீர்ப்பளிப்பான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அளிப்பான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான பாக்கிய மிக்க சுவனங்கள் எனும் மகத்தான கூலி உண்டு.
22:57Страница 339
وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ٥٧
Тем же, которые не уверовали и считали ложью Наши знамения, уготованы унизительные мучения.
அல்லாஹ்வை நிராகரித்து தூதர் மீது இறக்கப்பட்ட அவனுடைய வசனங்களை பொய் எனக் கூறுபவர்களுக்கு இழிவுமிக்க வேதனை உண்டு. நரகத்தில் அந்த வேதனையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்.
22:58Страница 339
وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓاْ أَوۡ مَاتُواْ لَيَرۡزُقَنَّهُمُ ٱللَّهُ رِزۡقًا حَسَنٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ٥٨
Аллах непременно наделит прекрасным уделом тех, которые переселились на пути Аллаха, а затем были убиты или умерли. Воистину, Аллах - Наилучший из дарующих удел.
அல்லாஹ்வின் திருப்தியையும் மார்க்கத்தின் கண்ணியத்தையும் நாடி தங்களின் நாட்டையும் வீட்டையும் விட்டுவிட்டு புலம்பெயர்ந்து பின்னர் அவனுடைய பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் என்றும் முடிவுறாத அழகிய வாழ்வாதாரத்தை அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் வாழ்வாதாரம் அளிப்போரில் அவனே மிகச் சிறந்தவன்.
22:59Страница 339
لَيُدۡخِلَنَّهُم مُّدۡخَلٗا يَرۡضَوۡنَهُۥۚ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٞ ٥٩
Он непременно введет их во вход, которым они останутся довольны. Воистину, Аллах - Знающий, Выдержанный.
அவர்கள் திருப்தியடையும் சுவனம் என்னும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவனாகவும் அவர்களின் விஷயத்தில் சகிப்புத்தன்மை மிக்கவனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவர்களின் தவறுக்காக அவன் அவர்களை உடனுக்குடன் தண்டிக்கவில்லை.
22:60Страница 339
۞ ذَٰلِكَۖ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِيَ عَلَيۡهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ ٦٠
Вот так! Если кто-либо наказывает так, как он сам был наказан, после чего с ним поступают несправедливо, то Аллах непременно поможет ему. Воистину, Аллах - Снисходительный, Прощающий.
அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வது, அநியாயம் இழைத்தவர்களை அவர்கள் அநியாயம் இழைத்த அளவுக்கு பழிவாங்குவதற்கு அனுமதியளித்தது, அவ்வாறு செய்வது குற்றமாகாது ஆகிய மேற்கூறப்பட்டவைகள் அநியாயம் இழைத்தவன் மீண்டும் வரம்புமீறினால் நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு உதவிசெய்யக்கூடியவன். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாவங்களை விட்டுவிடக்கூடியவனாகவும் அவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.
22:61Страница 339
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ٦١
Это потому, что Аллах удлиняет день за счет ночи и удлиняет ночь за счет дня, а также потому, что Аллах - Слышащий, Видящий.
அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு அல்லாஹ் இவ்வாறு உதவிசெய்வது ஏனெனில் நிச்சயமாக அவன் தான் நாடியதைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் என்பதனாலாகும். அவனுடைய ஆற்றலில் உள்ளதே, இரவையும் பகலையும் ஒன்றைக் கூட்டியும் ஒன்றைக் குறைத்தும் ஒன்றில் ஒன்றை நுழையச் செய்வதாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
22:62Страница 339
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ ٦٢
Это потому, что Аллах есть Истина, а то, чему они поклоняются помимо Него, есть ложь, а также потому, что Аллах - Возвышенный, Большой.
அல்லாஹ் இரவைப் பகலில் நுழையச் செய்வதும் பகலை இரவில் நுழையச் செய்வதும் ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், அவனுடைய மார்க்கமும், அவன் அளித்த வாக்குறுதியும் அவன் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்வதும் உண்மையானது, அல்லாஹ்வை தவிர இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் அடிப்படையற்ற அசத்தியமாகும் என்பதினாலேயாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புகளை விட உள்ளமையாலும் மதிப்பாலும் ஆதிக்கத்தாலும் மிக உயர்ந்தவன்; மிகப் பெரியவன். பெருமையும் கண்ணியமும் மகத்துவமும் அவனுக்கே உரியது.
22:63Страница 339
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَتُصۡبِحُ ٱلۡأَرۡضُ مُخۡضَرَّةًۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٞ ٦٣
Неужели ты не видишь, как Аллах ниспосылает с неба воду, после чего земля зеленеет? Воистину, Аллах - Проницательный (или Добрый), Ведающий.
தூதரே!- நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்குகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மழை பெய்த பிறகு பூமி அதில் முளைக்கும் தாவரங்களால் பசுமையாகிவிடுகிறது. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுடன் மென்மையாளனாக உள்ளான். அதனால் தான் அவர்களுக்கு மழையைப் பொழிந்து பூமியைப் பசுமையாக்கினான். அவர்களின் நலன்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
22:64Страница 339
لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ٦٤
Ему принадлежит то, что на небесах, и то, что на земле. Воистину, Аллах - Богатый, Достохвальный.
வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அவனுக்கே உரியது. நிச்சயமாக அவன் எல்லா விதமான படைப்புகளை விட்டும் தேவையற்றவனாகவும் எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
22:65Страница 340
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ وَٱلۡفُلۡكَ تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦ وَيُمۡسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلۡأَرۡضِ إِلَّا بِإِذۡنِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ ٦٥
Разве ты не видишь, что Аллах подчинил вам все, что на земле, и корабли, которые плывут по морям по Его воле? Он удерживает небо, чтобы оно не упало на землю без Его соизволения. Воистину, Аллах сострадателен и милосерден к людям.
தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் உமக்கும் மனிதர்களுக்கும் பயன்பாட்டிற்காகவும் தேவைக்காகவும் பூமியிலுள்ள உயிரினங்கள், திண்மங்கள், ஆகியவற்றை வசப்படுத்தித் தந்துள்ளதை நீர் பார்க்கவில்லையா? அவன் கப்பலை உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். அது அவனுடைய கட்டளையால், வசப்படுத்தலால் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி கடலில் செல்கிறது. வானத்தை அவனுடைய அனுமதியுடன் தவிர பூமியின்மீது விழுந்து விடாமல் தடுத்து வைத்துள்ளான். அவன் அனுமதியளித்திருந்தால் அது பூமியின் மீது விழுந்திருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்கள் அநீதி இழைத்தபோதிலும் அவர்களுக்கு அவன் இவற்றையெல்லாம் வசப்படுத்தித் தந்துள்ளான்.
22:66Страница 340
وَهُوَ ٱلَّذِيٓ أَحۡيَاكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۗ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ ٦٦
Он - Тот, Кто дарует вам жизнь, затем умерщвляет вас, а затем вновь оживляет. А человек, воистину, неблагодарен.
அல்லாஹ்வே ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை உருவாக்கி உயிர்ப்பித்தான். பின்னர் உங்களின் வாழ்நாள் நிறைவடைந்துவிட்டால் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் நீங்கள் செய்த செயல்களை விசாரித்து அவற்றுக்கு கணக்குத் தீர்த்து கூலி வழங்கும் பொருட்டு நீங்கள் மரணித்தபிறகு உங்களை உயிர்கொடுத்து எழச்செய்வான். நிச்சயமாக மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை -நிச்சயமாக அவை வெளிரங்கமாக இருந்தும் கூட- அவனுடன் மற்றவர்களை வணங்கி அதிகம் மறுப்பவனாக இருக்கின்றான்.
22:67Страница 340
لِّكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكًا هُمۡ نَاسِكُوهُۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِي ٱلۡأَمۡرِۚ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ إِنَّكَ لَعَلَىٰ هُدٗى مُّسۡتَقِيمٖ ٦٧
Для каждой общины Мы установили обряды, которые они отправляют, и пусть они не спорят с тобой по этому поводу. Призывай же к своему Господу. Воистину, ты - на прямом пути.
ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் ஒரு ஷரீஅத்தை (வழிமுறையை) ஏற்படுத்தியுள்ளோம். தங்களின் ஷரீஅத்திற்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள். -தூதரே!- இணைவைப்பாளர்களும் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களும் உமக்கு வழங்கப்பட்ட ஷரீஅத்தைக்குறித்து உம்முடன் முரண்பட வேண்டாம். ஏனெனில் நீர்தான் அவர்களைவிட சத்தியத்தில் முதன்மையானவர். நிச்சயமாக அவர்கள் அசத்தியவாதிகள். அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தனித்துவமாக்குவதன் பக்கம் நீர் மக்களை அழைப்பீராக. நிச்சயமாக நீர் எவ்வித கோணலுமற்ற நேரான வழியில் இருக்கின்றீர்.
22:68Страница 340
وَإِن جَٰدَلُوكَ فَقُلِ ٱللَّهُ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ٦٨
Если же они станут препираться с тобой, то скажи: «Аллаху лучше знать о том, что вы совершаете.
ஆதாரம் தெளிவான பின்னரும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால், தவிர்ந்து கொண்டால் அவர்களிடம் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்து அவர்களின் விவகாரங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவீராக: “நீங்கள் செய்யக்கூடிய செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
22:69Страница 340
ٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ٦٩
Аллах рассудит между вами в День воскресения в том, в чем вы препирались между собой».
அல்லாஹ் தன் அடியார்களான நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே மறுமை நாளில் அவர்கள் உலகில் கருத்துவேறுபாடு கொண்டிருந்த மார்க்க விஷயங்களைக்குறித்து தீர்ப்பளிப்பான்.
22:70Страница 340
أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ذَٰلِكَ فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ٧٠
Разве ты не знаешь, что Аллаху известно то, что на небе и на земле? Воистину, это есть в Писании. Воистину, это для Аллаха легко.
தூதரே!- வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான் என்பது உமக்குத் தெரியாதா? அவையிரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நிச்சயமாக அவற்றைக்குறித்த அறிவு லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதிவுசெய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக அவை ஒவ்வொன்றையும் அறிவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.
22:71Страница 340
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَمَا لَيۡسَ لَهُم بِهِۦ عِلۡمٞۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ ٧١
Они поклоняются вместо Аллаха тому, о чем Он не ниспослал никакого довода, о чем у них нет никакого знания. Не будет у беззаконников помощников!
இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவ்வாறு வணங்க அல்லாஹ் தன் வேதங்களில் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அதற்கு அறிவுப்பூர்வமான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. தங்களின் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதே அவர்களுக்கிருக்கும் ஒரே ஆதாரம். அநியாயக்காரர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும் எந்த உதவியாளரும் இல்லை.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии