Аль-МухтасарАль‑Хаджж · 22:72–78

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Аль-Хаджж 22:72–78

22:72Страница 340

وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ تَعۡرِفُ فِي وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمُنكَرَۖ يَكَادُونَ يَسۡطُونَ بِٱلَّذِينَ يَتۡلُونَ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَاۗ قُلۡ أَفَأُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكُمُۚ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ٧٢

Когда им читают Наши ясные аяты, ты видишь на их лицах отрицание. Они готовы наброситься на тех, кто читает им Наши аяты. Скажи: «Не поведать ли вам о том, что хуже этого? Это - Огонь, который Аллах обещал тем, которые не уверовали. Как же скверно это место прибытия!».

குர்ஆனில் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால் அவற்றை செவியேற்கும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் முகங்களில் நீர் வெறுப்பைக் காண்பீர். கடும் கோபத்தினால் நம்முடைய வசனங்களை எடுத்துரைப்பவர்களை அவர்கள் தாக்கிவிட முனைகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களின் கோபத்தை, வெறுப்பைவிட மோசமான ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அது நிராகரிப்பாளர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள நரகமாகும். அவர்கள் செல்லும் அந்த இடம் மிகவும் தீயதாகும்.

22:73Страница 341

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٞ فَٱسۡتَمِعُواْ لَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخۡلُقُواْ ذُبَابٗا وَلَوِ ٱجۡتَمَعُواْ لَهُۥۖ وَإِن يَسۡلُبۡهُمُ ٱلذُّبَابُ شَيۡـٔٗا لَّا يَسۡتَنقِذُوهُ مِنۡهُۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلۡمَطۡلُوبُ ٧٣

О люди! Приводится притча, послушайте же ее. Воистину, те, кому вы поклоняетесь помимо Аллаха, не сотворят и мухи, даже если они объединятся для этого. Если же муха заберет у них что-нибудь, они не смогут отобрать у нее это. Слаб тот, кто добивается, и тот, от кого он добивается!

மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதை செவிசாய்த்துக் கேளுங்கள். அதைக்கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கக்கூடிய சிலைகளும் மற்றவைகளும் ஒரு சிறிய ஈயைக்கூட ஒருபோதும் படைக்க முடியாது. அந்த ஈயைப் படைப்பதற்கு அவையனைத்தும் ஒன்றுதிரண்டாலும் அவற்றால் அதனைப் படைக்க முடியாது. அந்த சிலைகளின் மீதிருக்கும் வாசனை திரவியம், அல்லது அது போன்ற ஏதேனும் ஒன்றை ஒரு ஈ பறித்துக் கொண்டாலும் அதனைக்கூட அவற்றால் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கவும் அது எடுத்துச் செல்பவற்றைப் பாதுகாக்கவும் இயலாமல் இருக்கும் போது அதனை விட பெரிய விடயங்களை அவற்றால் செய்ய முடியாது என்பது தெள்ளத் தெளிவு. அல்லாஹ்வை விடுத்து இந்த அளவு இயலாமையில் இருக்கின்ற அவற்றை ஏன் வணங்குகிறீர்கள்? ஈ எடுத்துச் செல்பவற்றைக் காத்துக்கொள்ள முடியாத தேடக்கூடிய வணங்கப்படும் இந்தச் சிலையும் பலவீனமானது. தேடப்படும் இந்த ஈயும் பலவீனமானது.

22:74Страница 341

مَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ٧٤

Они не ценили Аллаха должным образом, а ведь Аллах - Всесильный, Могущественный.

அவர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. எனவேதான் அவனுடன் இணைத்து அவனுடைய சில படைப்புகளையும் வணங்கினார்கள். நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையவன். அவனுடைய சக்தி, வல்லமையின் மூலமே, அவன் வானங்களையும் பூமியையும் அவற்றிலுள்ளதையும் படைத்துள்ளான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. இணைவைப்பாளர்கள் வணங்கும் சிலைகளோ பலவீனமானவையாக எதையும் படைக்காத இழிவானவையாக இருக்கின்றன.

22:75Страница 341

ٱللَّهُ يَصۡطَفِي مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلٗا وَمِنَ ٱلنَّاسِۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ٧٥

Аллах избирает среди ангелов и людей посланников. Воистину, Аллах - Слышащий, Видящий.

அல்லாஹ் வானவர்களிலிருந்தும் அவ்வாறே மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஜிப்ரீல் போன்ற சில வானவர்களை மனித இனத்திலுள்ள நபிமார்கள், இறைத்தூதர்களிடம் தூதர்களாக அனுப்புகிறான். மனித இனத்திலுள்ள இறைத்தூதர்களை மனிதர்களுக்குத் தூதர்களாக அனுப்புகிறான். நிச்சயமாக இணைவைப்பாளர்கள் தன் தூதர்களைக்குறித்துக் கூறுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன். தன் தூதுப்பணிக்காக தேர்ந்தெடுக்கக்கூடியவர்களை அவன் பார்க்கக்கூடியவன்.

22:76Страница 341

يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ٧٦

Он знает их прошлое и будущее, и к Аллаху возвращаются дела.

அவன் வானவர்களிலும் மனிதர்களிலும் உள்ள தன் தூதர்களை அவர்களைப் படைப்பதற்கு முன்னரும் அவர்கள் இறந்தபின்னரும் அறியக்கூடியவன். மறுமைநாளில் விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன. அந்நாளில் அவன் தன் அடியார்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்கள் செய்த செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

22:77Страница 341

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱرۡكَعُواْ وَٱسۡجُدُواْۤ وَٱعۡبُدُواْ رَبَّكُمۡ وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ۩ ٧٧

О те, которые уверовали! Кланяйтесь, падайте ниц, поклоняйтесь вашему Господу и творите добро, - быть может, вы преуспеете.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனது மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ் ஒருவனுக்காக உங்களின் தொழுகையில் ருகூவு செய்து சிரம்பணியுங்கள், தர்மம், உறவுகளைப் பேணுதல் போன்ற இன்னோரன்ன நன்மையான செயல்களைச் செய்யுங்கள். அதனால் நீங்கள் வெறுப்பதில் (நரகம்) இருந்து பாதுகாப்பு பெற்று, வேண்டியதை (சுவனம்) பெற்று வெற்றியடைவீர்கள்.

22:78Страница 341

وَجَٰهِدُواْ فِي ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦۚ هُوَ ٱجۡتَبَىٰكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِي ٱلدِّينِ مِنۡ حَرَجٖۚ مِّلَّةَ أَبِيكُمۡ إِبۡرَٰهِيمَۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلۡمُسۡلِمِينَ مِن قَبۡلُ وَفِي هَٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيۡكُمۡ وَتَكُونُواْ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِۚ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱعۡتَصِمُواْ بِٱللَّهِ هُوَ مَوۡلَىٰكُمۡۖ فَنِعۡمَ ٱلۡمَوۡلَىٰ وَنِعۡمَ ٱلنَّصِيرُ ٧٨

Усердствуйте на пути Аллаха надлежащим образом. Он избрал вас и не сделал для вас никакого затруднения в религии. Такова вера отца вашего Ибрахима (Авраама). Аллах нарек вас мусульманами до этого и здесь (в Коране), чтобы Посланник был свидетелем о вас, а вы были свидетелями о людях. Совершайте намаз, выплачивайте закят и крепко держитесь за Аллаха. Он - ваш Покровитель. Как же прекрасен этот Покровитель! Как же прекрасен этот Помощник!

அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய திருப்தியை நாடி ஜிஹாது செய்யுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களின் மார்க்கத்தை சிரமங்களோ, கடினங்களோ அற்ற இலகுவான மார்க்கமாக ஆக்கியுள்ளான். இந்த இலகுவான மார்க்கமே உங்களின் தந்தை இப்ராஹீமின் மார்க்கமாகும். அல்லாஹ் முந்தைய வேதங்களிலும் குர்ஆனிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டுள்ளான். நிச்சயமாக தூதர் தனக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று தூதர் உங்கள் மீது சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் முந்தைய சமூகங்களின் மீது அவர்களின் தூதர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே நீங்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றி, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கி, அல்லாஹ்வின் பக்கம் தஞ்சமடைந்து உங்களின் விவகாரங்களில் அவனையே சார்ந்திருங்கள். அவனை நேசிக்கும் நம்பிக்கையாளர்களுக்கு அவனே மிகச் சிறந்த பாதுகாவலனாகவும் தன்னிடம் உதவிதேடக்கூடியவர்களுக்கு மிகச்சிறந்த உதவியாளனாகவும் இருக்கின்றான். எனவே அவனையே பாதுகாவலனாக ஆக்கிக்கொள்ளுங்கள் அவன் உங்களை பாதுகாப்பான். அவனிடமே உதவிதேடுங்கள் அவன் உங்களுக்கு உதவி செய்வான்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English