Аль-Мухтасар · Тафсир · на тамильском
المؤمنون
Аль-Муминун
Верующие · Мекканская · 118 аятов
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்கள் தாம் விரும்பும் விஷயத்தைப் பெற்று பயப்படும் விஷயத்திலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றியடைந்துவிட்டார்கள்.
அவர்கள் தங்களின் தொழுகையில் பணிவானவர்கள். அதில் அவர்களின் உறுப்புகள் அமைதியாகவும்; உள்ளங்கள் வெளிச் சிந்தனைகளை விட்டும் நீங்கியதாகவும் உள்ளன.
23:3Страница 342
وَٱلَّذِينَ هُمۡ عَنِ ٱللَّغۡوِ مُعۡرِضُونَ ٣
которые отворачиваются от всего праздного,
அவர்கள் அசத்தியம், வீண்விளையாட்டு, பாவமான சொல் மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள்.
அவர்கள் தங்களின் ஆன்மாக்களை தீமைகளிலிருந்து தூய்மைப்படுத்தி ஸகாத்தை அளித்து தங்களின் செல்வங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வார்கள்.
23:5Страница 342
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ٥
которые оберегают свои половые органы от всех,
அவர்கள் விபச்சாரம், ஓரினச் சேர்க்கை ஆகிய அருவருப்பான செயல்களை விட்டும் தங்கள் வெட்கஸ்த்தலங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்கள் பரிசுத்தமுள்ள பக்குவமானவர்கள்.
23:6Страница 342
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ٦
кроме своих жен или невольниц, которыми овладели их десницы, за что они не заслуживают порицания,
ஆயினும் தங்களின் மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர. உடலுறவு, ஏனையவற்றின் மூலம் அவர்களை அனுபவிப்பதால் அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்.
23:7Страница 342
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ ٧
тогда как желающие сверх этого являются преступниками;
தங்களின் மனைவியர் மற்றும் தான் சொந்தமாக்கிய அடிமைப் பெண்களைத் தவிர்த்து யார் மற்ற வழிகளின் மூலம் இன்பத்தை நாடுவார்களோ அவர்கள்தாம் அனுபவிக்க அவன் அனுமதித்ததை மீறி தடைசெய்யப்பட்டதை செய்வதன் மூலம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்கள்.
23:8Страница 342
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ ٨
которые оберегают вверенное им на хранение и соблюдают договоры,
அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்ற அமானிதங்களையும் அவனுடைய அடியார்களிடமிருந்து பெற்ற அமானிதங்களையும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் பேணுவார்கள். அவற்றை வீணாக்கிவிட மாட்டார்கள். மாறாக முழுமையாக நிறைவேற்றுவார்கள்.
23:9Страница 342
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَوَٰتِهِمۡ يُحَافِظُونَ ٩
которые регулярно совершают намаз.
அவர்கள் தங்களின் தொழுகைகளை விட்டுவிட்டுத் தொழாமல் தொடர்ந்து தொழுதல், அவற்றின் ருக்ன்கள், கடமைகள், சுன்னத்தான காரியங்கள்
ஆகியவற்றோடு நேரத்திற்கு அவற்றை நிறைவேற்றுதல் ஆகியவற்றின் மூலம் தமது தொழுகைகளைப் பேணுதலாகக் கடைபிடிப்பார்கள்.
இந்த பண்புகளை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள்.
23:11Страница 342
ٱلَّذِينَ يَرِثُونَ ٱلۡفِرۡدَوۡسَ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ١١
которые унаследуют Фирдаус, в котором они пребудут вечно.
அவர்கள் உயர்ந்த சுவனத்திற்கு வாரிசாவார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதன் இன்பம் என்றும் முடிவடையாதது.
23:12Страница 342
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن سُلَٰلَةٖ مِّن طِينٖ ١٢
Воистину, Мы сотворили человека из эссенции глины.
நாம் மனிதர்களின் தந்தை ஆதமை களி மண்ணிலிருந்து படைத்தோம். அதன் மண் பூமியின் மண்ணோடு கலந்துவிட்ட நீரிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
23:13Страница 342
ثُمَّ جَعَلۡنَٰهُ نُطۡفَةٗ فِي قَرَارٖ مَّكِينٖ ١٣
Потом Мы поместили его каплей в надежном месте.
பின்னர் அவரது சந்ததியினரை பிறக்கும் வரை கருவறையில் தங்கும் விந்திலிருந்து படைத்தோம்.
23:14Страница 342
ثُمَّ خَلَقۡنَا ٱلنُّطۡفَةَ عَلَقَةٗ فَخَلَقۡنَا ٱلۡعَلَقَةَ مُضۡغَةٗ فَخَلَقۡنَا ٱلۡمُضۡغَةَ عِظَٰمٗا فَكَسَوۡنَا ٱلۡعِظَٰمَ لَحۡمٗا ثُمَّ أَنشَأۡنَٰهُ خَلۡقًا ءَاخَرَۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحۡسَنُ ٱلۡخَٰلِقِينَ ١٤
Потом Мы создали из капли сгусток крови, потом создали из сгустка крови разжеванный кусочек, потом создали из этого кусочка кости, и потом облекли кости мясом. Потом Мы вырастили его в другом творении. Благословен же Аллах, Наилучший из творцов!
பின்னர் கருவறையில் தங்கிய விந்தை சிவப்பு நிற இரத்தக்கட்டியாக ஆக்குகின்றோம். பின்னர் அந்த சிவப்பு நிற இரத்தக்கட்டியை மெல்லும் அளவு சதைத்துண்டாக ஆக்கி அந்த சதைத்துண்டை உறுதியான எலும்புகளாக ஆக்குகின்றோம். அந்த எலும்புகளின்மீது சதையைப் போர்த்துகின்றோம். பின்பு அதில் ஆன்மாவை ஊதி, அதற்கு உயிரளித்து அதனை வேறொரு படைப்பாக படைக்கின்றோம். மிகச்சிறந்த படைப்பாளனான அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவனாவான்.
பின்னர் -மனிதர்களே!- அந்த நிலைகளைக் கடந்த பிறகு உங்களின் தவணை நிறைவடைந்தவுடன் நிச்சயமாக நீங்கள் மரணிக்கிறீர்கள்.
23:16Страница 342
ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تُبۡعَثُونَ ١٦
А потом, в День воскресения, вы непременно будете воскрешены.
மரணித்த பிறகு நீங்கள் உலகில் செய்த செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக மறுமை நாளில் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்.
23:17Страница 342
وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلۡخَلۡقِ غَٰفِلِينَ ١٧
Воистину, Мы создали над вами семь небес одно над другим. Мы никогда не находились в неведении о творениях.
மனிதர்களே!- நாம் உங்களுக்கு மேலே அடுக்கடுக்காக ஏழு வானங்களை படைத்துள்ளோம். நம்முடைய படைப்புகளைவிட்டும் நாம் கவனமற்றவர்களாகவோ, மறந்தவர்களாகவோ இல்லை.
23:18Страница 343
وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَسۡكَنَّٰهُ فِي ٱلۡأَرۡضِۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابِۭ بِهِۦ لَقَٰدِرُونَ ١٨
Мы низвели с неба воду в меру и разместили ее на земле. Воистину, Мы способны увести ее.
நாம் மழையை, அழித்துவிடும் அளவு அதிகமாகவும் இறக்காமல் போதுமாகாத அளவுக்கு குறைத்தும் இறக்காமல் தேவையான அளவோடு வானத்திலிருந்து இறக்குகின்றோம். அதன் மூலம் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பயன்பெறும் விதத்தில் அதனை பூமியில் தேங்கச் செய்கின்றோம். நிச்சயமாக நீங்கள் பயனடைய முடியாதவாறு அவற்றைப் போக்குவதற்கும் நாம் ஆற்றல் பெற்றவர்களாகவும் உள்ளோம்.
23:19Страница 343
فَأَنشَأۡنَا لَكُم بِهِۦ جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ لَّكُمۡ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ ١٩
Посредством нее Мы вырастили для вас пальмовые сады и виноградники, где растет для вас много плодов, которые вы едите.
அந்த நீரைக்கொண்டு நாம் உங்களுக்கு பேரீச்சை, திராட்சை தோட்டங்களையும் ஏற்படுத்தினோம். அவற்றில் உங்களுக்கு அத்தி, மாதுளை, அப்பிள் போன்ற பலவிதமான வடிவங்களுடைய, நிறங்களுடைய பழங்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்.
23:20Страница 343
وَشَجَرَةٗ تَخۡرُجُ مِن طُورِ سَيۡنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهۡنِ وَصِبۡغٖ لِّلۡأٓكِلِينَ ٢٠
Мы вырастили дерево, которое растет на горе Синай и дает масло и приправу для вкушающих.
நாம் உங்களுக்காக ஆலிவ் மரத்தையும் ஏற்படுத்தினோம். அது தூர் சினாய் மலைப்பகுதியில் விளைகிறது. அதன் பழங்களிலிருந்து எடுக்கப்படும் தொட்டு சாப்பிடும் எண்ணெய்யையும் அது வெளிப்படுத்துகிறது.
23:21Страница 343
وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ ٢١
Воистину, домашняя скотина служит назиданием для вас. Мы поим вас тем, что находится у них в животах. Они приносят вам многочисленную пользу, и вы питаетесь ими.
நிச்சயமாக மனிதர்களே! (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை இருக்கின்றது. அவற்றின் மூலம் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் உங்கள்மீது பொழிந்த கருணையையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். இந்த கால்நடைகளில் வயிற்றிலிருந்து அருந்துவோருக்குச் சுவையான தூய்மையான பாலை நாம் புகட்டுகின்றோம். அவற்றில் உங்களுக்கு பயணித்தல், மயிர்கள், உரோமங்கள், தோல்கள் போன்ற இன்னும் ஏராளமான பயன்களும் இருக்கின்றன. அவற்றின் மாமிசத்தை நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்.
23:22Страница 343
وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ ٢٢
На них и на кораблях вы передвигаетесь.
நிலத்தில் ஒட்டகம் போன்ற கால்நடைகளும் நீரில் கப்பல்களும் உங்களை சுமந்து செல்கின்றன.
23:23Страница 343
وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ٢٣
Воистину, Мы направили Нуха (Ноя) к его народу, и он сказал: «О мой народ! Поклоняйтесь Аллаху, ибо нет у вас другого божества, кроме Него. Неужели вы не устрашитесь?».
நாம் நூஹை அவரது சமூகத்தின் பக்கம் அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்குமாறு அனுப்பினோம். அவர் கூறினார்: என் சமூகமே “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாருமில்லை. நீங்கள் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”
23:24Страница 343
فَقَالَ ٱلۡمَلَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيۡكُمۡ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ مَّا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ ٢٤
Но знатные люди из его народа, которые не уверовали, сказали: «Он - такой же человек, как и вы. Он лишь хочет возвыситься над вами. Если бы Аллах пожелал, то Он ниспослал бы ангелов. Мы не слышали о подобном от наших праотцев.
அவருடைய சமூகத்தில் அல்லாஹ்வை நிராகரித்த தலைவர்கள் தங்களைப் பின்பற்றிய பொதுமக்களிடம் கூறினார்கள்: “தன்னைத் தூதர் என்று கூறும் இவர் நிச்சயமாக உங்களைப் போன்ற மனிதர்தான். தலைமைத்துவத்தையும் உங்களை ஆட்சி செய்வதையுமே அவர் விரும்புகின்றார். அல்லாஹ் நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப நாடியிருந்தால் வானவர்களிலிருந்து தூதரை அனுப்பியிருப்பான். ஒரு மனிதரைத் தூதராக அனுப்ப மாட்டான். நம்முடைய முன்னோர்களிடம் இவர் கூறுவதைப் போன்ற எதனையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
23:25Страница 343
إِنۡ هُوَ إِلَّا رَجُلُۢ بِهِۦ جِنَّةٞ فَتَرَبَّصُواْ بِهِۦ حَتَّىٰ حِينٖ ٢٥
Он - не кто иной, как бесноватый муж, так что обождите с ним до поры до времени».
இவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரேயன்றி வேறில்லை. அவர் கூறுவது என்னவென்று அவருக்கே தெரியாது. மக்களுக்கு அவரது விடயம் தெளிவாகும்வரை காத்திருங்கள்.
23:26Страница 343
قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ ٢٦
Он сказал: «Господи! Помоги мне, ведь они сочли меня лжецом».
நூஹ் கூறினார்: “என் இறைவா! என்னை அவர்கள் பொய்ப்பித்ததனால் எனக்காக அவர்களைத் தண்டித்து அவர்களுக்கெதிராக எனக்கு உதவிபுரிவாயாக.”
23:27Страница 343
فَأَوۡحَيۡنَآ إِلَيۡهِ أَنِ ٱصۡنَعِ ٱلۡفُلۡكَ بِأَعۡيُنِنَا وَوَحۡيِنَا فَإِذَا جَآءَ أَمۡرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسۡلُكۡ فِيهَا مِن كُلّٖ زَوۡجَيۡنِ ٱثۡنَيۡنِ وَأَهۡلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيۡهِ ٱلۡقَوۡلُ مِنۡهُمۡۖ وَلَا تُخَٰطِبۡنِي فِي ٱلَّذِينَ ظَلَمُوٓاْ إِنَّهُم مُّغۡرَقُونَ ٢٧
Мы внушили ему откровение: «Сооруди ковчег у Нас на Глазах согласно Нашему откровению. А когда явится Наше веление, и вода забьет фонтаном из печи, то погрузи на него по паре всего живого, а также свою семью, кроме тех, о чьей гибели уже было ниспослано Мое веление. И не проси Меня за тех, которые поступали несправедливо. Они будут потоплены.
நம்முடைய கண்காணிப்பில் நாம் எவ்வாறு கட்ட வேண்டும் என நாம் கூறுவதுபோல் ஒரு கப்பலைக் கட்டுவீராக என்று நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். அவர்களை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்து, ரொட்டி சுடப்பயன்படும் அடுப்புகளிலிருந்து தண்ணீர் பலமான ஊற்றாக வெளிப்படும் போது, சந்ததிகள் நிலைப்பதற்காக எல்லா உயிரினங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியைக் கப்பலில் ஏற்றுவீராக. உமது குடும்பத்தையும் அதில் ஏற்றிக்கொள்வீராக! ஆனால் உமது மனைவி, மகன் போன்ற அழிவுக்குட்படுபவர்கள் என முன்பே அல்லாஹ்விடத்தில் தீர்மானமாகிவிட்டோரைத் தவிர. நிராகரிப்பினால் அநியாயம் இழைத்தவர்களுக்காக, அவர்களை அழிக்காமல் காப்பாற்றும்படி என்னிடம் உரையாடாதீர். நிச்சயமாக அவர்கள் -சந்தேகம் இல்லாமல்- வெள்ளப் பிரளயத்தில் மூழ்கி அழிபவர்களே.
23:28Страница 344
فَإِذَا ٱسۡتَوَيۡتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلۡفُلۡكِ فَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي نَجَّىٰنَا مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٢٨
А когда ты и те, кто с тобой, сядете в ковчег, скажи: «Хвала Аллаху, Который спас нас от несправедливых людей!»
நீரும் உம்முடன் உள்ள தப்பித்த நம்பிக்கையாளர்களும் கப்பலில் ஏறிவிட்டால் பின்வருமாறு கூறுவீராக: “நிராகரித்த இந்த சமூகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றி அவர்களை அழித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.”
23:29Страница 344
وَقُل رَّبِّ أَنزِلۡنِي مُنزَلٗا مُّبَارَكٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡمُنزِلِينَ ٢٩
Скажи также: «Господи! Приведи меня к благословенному месту, ведь Ты - Наилучший из расселяющих»».
“என் இறைவா! அருள் வளம் மிக்க இடத்தில் என்னை இறக்குவாயாக. நீயே மிகச்சிறந்த இடத்தை வழங்கக்கூடியவன்” என்றும் கூறுவீராக.
23:30Страница 344
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ وَإِن كُنَّا لَمُبۡتَلِينَ ٣٠
Воистину, в этом есть знамения. Воистину, Мы подвергаем испытанию.
நிச்சயமாக நூஹையும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றியதிலும் நிராகரிப்பாளர்களை அழித்ததிலும் நமது தூதர்களுக்கு உதவி செய்து அவர்களை மறுத்தவர்களை அழிப்பதற்கான நம்முடைய வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் மேலே கூறியவற்றில் இருக்கின்றன. நிராகரிப்பாளர்கள் யார் நம்பிக்கையாளர் யார்? மாறு செய்பவர் யார் வழிப்படுபவர் யார்? என்பது தெளிவாவதற்காக நாம் நூஹின் சமூகத்தின்பால் அவரை அனுப்பி அவர்களைச் சோதிக்கக்கூடியவர்களாக இருந்தோம்.
23:31Страница 344
ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ ٣١
Вслед за ними Мы сотворили другое поколение.
நாம் நூஹின் சமூகத்தை அழித்த பிறகு வேறொரு தலைமுறையை உருவாக்கினோம்.
23:32Страница 344
فَأَرۡسَلۡنَا فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ٣٢
Мы направили к ним посланника из них самих: «Поклоняйтесь Аллаху, ибо нет у вас другого божества, кроме Него. Неужели вы не устрашитесь?».
அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க நாம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் அனுப்பினோம். அவர் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?
23:33Страница 344
وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِ ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِلِقَآءِ ٱلۡأٓخِرَةِ وَأَتۡرَفۡنَٰهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يَأۡكُلُ مِمَّا تَأۡكُلُونَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُونَ ٣٣
Знатные люди из его народа, которые не уверовали и отрицали встречу в Последней жизни, которых Мы одарили щедрыми благами в мирской жизни, сказали: «Это - всего лишь человек, подобный вам. Он ест то, что вы едите, и пьет то, что вы пьете.
அவருடைய சமூகத்தில் அல்லாஹ்வை நிராகரித்த மறுமை நாளையும் அங்குள்ள நற்கூலியையும் தண்டனையையும் பொய்ப்பித்த, நாம் அவர்களுக்கு உலக வாழ்வில் வழங்கிய தாராளமான அருட்கொடைகளினால் வரம்பு மீறிய தலைவர்கள் தங்களைப் பின்பற்றிய பொதுமக்களிடம் கூறினார்கள்: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். நீங்கள் உண்ணுவதையே உண்ணுகிறார். நீங்கள் பருகுவதையே பருகுகிறார். உங்களின்பால் தூதராக அனுப்பப்படுவதற்கு உங்களை விட எந்த வகையிலும் அவர் சிறந்தவர் இல்லை.
23:34Страница 344
وَلَئِنۡ أَطَعۡتُم بَشَرٗا مِّثۡلَكُمۡ إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ ٣٤
Если вы станете повиноваться человеку, который подобен вам, то непременно окажетесь в убытке.
நீங்கள் உங்களைப் போன்ற ஒரு மனிதருக்குக் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே. ஏனெனில் உங்கள் தெய்வங்களை விட்டுவிட்டு, அவருக்கு வழிபடுவதனாலும் உங்களைவிட எந்த சிறப்பையும் பெறாத ஒருவரைப் பின்பற்றுவதனாலும் நீங்கள் பயனடையமுடியாது.
23:35Страница 344
أَيَعِدُكُمۡ أَنَّكُمۡ إِذَا مِتُّمۡ وَكُنتُمۡ تُرَابٗا وَعِظَٰمًا أَنَّكُم مُّخۡرَجُونَ ٣٥
Неужели он обещает вам, что вы будете воскрешены после того, как умрете и превратитесь в прах и кости?
தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர், நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப்போன பின்னரும் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து உயிரோடு வெளியாக்கப்பட்டே ஆவீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறாரா? இது சாத்தியம்தானா?
23:36Страница 344
۞ هَيۡهَاتَ هَيۡهَاتَ لِمَا تُوعَدُونَ ٣٦
Невероятно, невероятно то, что обещано вам!
உங்களுக்கு எச்சரிக்கப்படும், மரணித்து, மண்ணாகவும் எலும்புகளாவும் மக்கி மாறிய பின்னர் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து வெளிப்படுத்தப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும்.
23:37Страница 344
إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ ٣٧
Нет ничего, кроме нашей жизни в этом мире. Мы умираем и живем, и мы не будем воскрешены.
இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. மறுமை வாழ்க்கையும் இல்லை. நம்மில் உயிரோடு உள்ளவர்கள் மரணிப்பார்கள் மீண்டும் உயிர்பெற மாட்டார்கள். வேறு சிலர் பிறந்து வாழ்வார்கள். நாம் மரணித்த பிறகு மறுமை நாளில் விசாரணைக்காக வெளியேற்றப்படமாட்டோம்.
23:38Страница 344
إِنۡ هُوَ إِلَّا رَجُلٌ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗا وَمَا نَحۡنُ لَهُۥ بِمُؤۡمِنِينَ ٣٨
Он - всего лишь человек, который возвел навет на Аллаха, и мы не веруем в него».
‘நிச்சயமாக நான் உங்களின் பால் அனுப்பப்பட்ட தூதர்’ என்று கூறும் இவர் இக்கூற்றின் மூலம் அல்லாஹ்வின் மீது புனைந்து பொய் கூறும் ஒருவரே. நாங்கள் அவரை நம்புவோர்களல்ல.
23:39Страница 344
قَالَ رَبِّ ٱنصُرۡنِي بِمَا كَذَّبُونِ ٣٩
Он сказал: «Господи! Помоги мне, ведь они сочли меня лжецом!».
அந்த தூதர் கூறினார்: “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்ததனால் அவர்களிடமிருந்து எனக்காகப் பழிதீர்த்து அவர்களுக்கு எதிராக எனக்கு உதவி புரிவாயாக.”
23:40Страница 344
قَالَ عَمَّا قَلِيلٖ لَّيُصۡبِحُنَّ نَٰدِمِينَ ٤٠
Аллах сказал: «Очень скоро они будут раскаиваться».
அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கூறி பதிலளித்தான்: “நீர் கொண்டுவந்ததை மறுக்கும் இவர்கள் விரைவில் தமது நிராகரிப்பை எண்ணி வருத்தப்படத்தான் போகிறார்கள்.”
23:41Страница 344
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ بِٱلۡحَقِّ فَجَعَلۡنَٰهُمۡ غُثَآءٗۚ فَبُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٤١
Вопль поразил их по справедливости, и Мы обратили их в подобие сора, растворенного в потоке. Да сгинут люди несправедливые!
தமது பிடிவாதத்தினால் அவர்கள் தண்டனைக்கு உரியவர்களாகிவிட்டதால் பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அது வெள்ளத்தின் நுரைகளைப் போல அவர்களை அழிக்கப்பட்டவர்களாக ஆக்கிவிட்டது. அநியாயக்கார மக்களுக்கு அழிவு உண்டாகட்டும்.
23:42Страница 344
ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قُرُونًا ءَاخَرِينَ ٤٢
Вслед за ними Мы сотворили другие поколения.
அவர்களை அழித்த பிறகு லூத்தின் சமூகம், ஷுஐபின் சமூகம் மற்றும் யூனுஸின் சமூகத்தைப் போன்ற வேறு சமூகங்களை நாம் உருவாக்கினோம்.
23:43Страница 345
مَا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَـٔۡخِرُونَ ٤٣
Ни одна община не может опередить свой срок или отложить его.
மறுக்கும் இந்த சமூகங்களில் எந்த சமூகமும் தங்களுக்கு வரும் அழிவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட முந்தவும் முடியாது, அவர்கள் பலவகையான சாதனங்களைப் பெற்றிருந்தபோதிலும் பிந்தவும் முடியாது.
23:44Страница 345
ثُمَّ أَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَاۖ كُلَّ مَا جَآءَ أُمَّةٗ رَّسُولُهَا كَذَّبُوهُۖ فَأَتۡبَعۡنَا بَعۡضَهُم بَعۡضٗا وَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَۚ فَبُعۡدٗا لِّقَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ ٤٤
Потом Мы отправляли одного за другим Наших посланников. Каждый раз, когда к какому-либо народу приходил посланник, они нарекали его лжецом. Мы отправляли их одних за другими на погибель и сделали их предметом сказаний. Да сгинут люди неверующие!
பின்னர் நாம் நம் தூதர்களை ஒவ்வொருவராக தொடர்ந்து அனுப்பினோம். எந்தவொரு சமுதாயத்துக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர் வந்தபோதெல்லாம் அவரை அவர்கள் பொய்ப்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனவே நாம் அந்த சமூகங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவிட்டோம். அவர்களைப் பற்றிய மக்கள் பேசிக்கொள்வதைத் தவிர அவர்களின் எந்த ஒன்றும் எஞ்சவில்லை. தூதர்கள் தங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ளாத மக்களுக்கு அழிவு உண்டாகட்டும்.
23:45Страница 345
ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ ٤٥
Потом Мы отправили Мусу (Моисея) и его брата Харуна (Аарона) с Нашими знамениями и ясным доказательством
பின்னர் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் ஒன்பது சான்றுகளுடனும் தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம். (ஒன்பது சான்றுகள்: கைத்தடி, கை, வெட்டுக்கிளி, பேன்கள், தவளைகள், இரத்தம், வெள்ளம், பஞ்சம், விளைச்சல்களின் குறைபாடு என்பனவாகும்)
23:46Страница 345
إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمًا عَالِينَ ٤٦
к Фараону и его знати, но они возгордились, ведь они были людьми надменными.
அவர்கள் இருவரையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனின் சமூகத்தின் தலைவர்களின்பால் அனுப்பினோம். அவர்கள் கர்வம் கொண்டார்கள். அவர்கள் இருவரின்மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் மக்களின் மீது ஆதிக்கம், அநீதி என்பவற்றினால் மக்களை அடக்குமுறை செய்வோராக இருந்தார்கள்.
23:47Страница 345
فَقَالُوٓاْ أَنُؤۡمِنُ لِبَشَرَيۡنِ مِثۡلِنَا وَقَوۡمُهُمَا لَنَا عَٰبِدُونَ ٤٧
Они сказали: «Неужели мы уверуем в двух людей, которые подобны нам, тогда как их народ служит нам?».
அவர்கள் கூறினார்கள்: “எங்களை விட மேலதிகமான எந்தச் சிறப்பையும் பெறாத எங்களைப் போன்ற இரு மனிதர்களை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? அவ்விருவரின் சமூகமான இஸ்ரவேல் மக்களும் நமக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் பணிந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.”
23:48Страница 345
فَكَذَّبُوهُمَا فَكَانُواْ مِنَ ٱلۡمُهۡلَكِينَ ٤٨
Они сочли их обоих лжецами и обрекли себя на погибель.
அவர்கள் இருவரும் தங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததை அவர்கள் பொய்ப்பித்தார்கள். அவர்களின் அந்நிராகரிப்பின் காரணத்தினால் மூழ்கடித்து அழிக்கப்பட்டவர்களாகிவிட்டனர்.
23:49Страница 345
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ ٤٩
Воистину, Мы даровали Мусе (Моисею) Писание, чтобы они могли последовать прямым путем.
மூஸாவின் சமூகத்தார் சத்தியத்தின் பக்கம் நேர்வழிபெற்று அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நாம் அவருக்கு தவ்ராத்தை வழங்கினோம்.
23:50Страница 345
وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ ٥٠
Мы сделали сына Марьям (Марии) и его мать знамением и поселили их в укромном месте на холме, где протекал ручей.
ஈஸாவையும் அவரது தாய் மர்யமையும் நம்முடைய வல்லமையை அறிவிக்கும் சான்றாக ஆக்கினோம். அவள் தந்தையின்றி ஈஸாவை வயிற்றில் சுமந்தாள். நாம் பூமியின் உயரமான இடத்தில் அவர்கள் இருவரையும் ஒதுங்கவைத்தோம். அது வசிப்பதற்கு உகந்த தரைமட்டமான தொடராக ஓடும் நீருள்ள இடமாக இருந்தது.
23:51Страница 345
يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ٥١
О посланники! Вкушайте блага и поступайте праведно. Воистину, Мне известно о том, что вы совершаете.
தூதர்களே! நான் உங்களுக்கு அனுமதித்த தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். மார்க்கம் கூறும் நற்செயல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் நான் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் என்னைவிட்டு மறைவாக இல்லை.
23:52Страница 345
وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱتَّقُونِ ٥٢
Воистину, ваша религия - религия единая, а Я - ваш Господь. Бойтесь же Меня!
தூதர்களே!- உங்களின் மார்க்கம் இஸ்லாம் என்னும் ஒரே மார்க்கம்தான். நான் உங்களின் இறைவனாவேன். என்னைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. எனவே என் கட்டளைகளைச் செயல்படுத்தி நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சுங்கள்.
23:53Страница 345
فَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ زُبُرٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ ٥٣
Но они разорвали свою религию на части, и каждая секта радуется тому, что имеет.
அவர்களுக்குப் பின்னர் அவர்களைப் பின்பற்றியவர்கள் மார்க்கத்தில் கருத்துவேறுபட்டு தங்களிடையே பல பிரிவினர்களாகி விட்டார்கள். ஒவ்வொரு கூட்டமும் தான் பின்பற்றும் மார்க்கமே அல்லாஹ்வுக்குப் பிடித்தமான மார்க்கம் என்று திருப்திப்பட்டுக்கொள்கிறது. மற்றவர்களிடம் உள்ளவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии