Аль-МухтасарАль‑Муминун · 23:54–105

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Аль-Муминун 23:54–105

23:54Страница 345

فَذَرۡهُمۡ فِي غَمۡرَتِهِمۡ حَتَّىٰ حِينٍ ٥٤

Оставь же их в их невежестве (или слепоте и растерянности) до определенного времени.

தூதரே!- அவர்கள் மீது வேதனை இறங்கும் நேரம் வரை அவர்களை அறியாமையிலும் தடுமாற்றத்திலும் விட்டுவிடுவீராக.

23:55Страница 345

أَيَحۡسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٖ وَبَنِينَ ٥٥

Неужели они думают, что Мы поддерживаем их богатством и сыновьями,

தங்களிடம் உள்ளதைக்கொண்டு பூரிப்படையும் இந்த கூட்டத்தினர் இவ்வுலக வாழ்வில் நாம் அவர்களுக்கு அளித்த செல்வங்களும் பிள்ளைகளும் தமக்குக் கிடைக்கவேண்டிய நன்மை விரைவாக வழங்கப்பட்டுவிட்டது என்று எண்ணுகிறார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம். நாம் அவர்களுக்கு அவகாசம் அளித்து, அவர்களை விட்டுப்பிடிக்கும் பொருட்டே நாம் அவர்களுக்கு இவற்றையெல்லாம் அளிக்கின்றோம். ஆனாலும் அவர்களால் அதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

23:56Страница 345

نُسَارِعُ لَهُمۡ فِي ٱلۡخَيۡرَٰتِۚ بَل لَّا يَشۡعُرُونَ ٥٦

потому что спешим одарить их благами? О нет! Однако они не ощущают этого!

தங்களிடம் உள்ளதைக்கொண்டு பூரிப்படையும் இந்த கூட்டத்தினர் இவ்வுலக வாழ்வில் நாம் அவர்களுக்கு அளித்த செல்வங்களும் பிள்ளைகளும் தங்களுக்குக் கிடைத்த விரைவான நன்மை என்று எண்ணுகிறார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல. நாம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கும் பொருட்டு, அவர்களைப் படிப்படியாக தண்டிக்கும் பொருட்டே நாம் அவர்களுக்கு இவற்றையெல்லாம் அளிக்கின்றோம். ஆனாலும் அவர்களால் அதனை உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

23:57Страница 345

إِنَّ ٱلَّذِينَ هُم مِّنۡ خَشۡيَةِ رَبِّهِم مُّشۡفِقُونَ ٥٧

Воистину, те, которые трепещут от страха перед своим Господом,

நிச்சயமாக யார் நம்பிக்கைகொண்டு, நல்லுபகாரம் செய்து கொண்டும் தங்கள் இறைவனை அஞ்சுகிறார்களோ,

23:58Страница 345

وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ ٥٨

которые веруют в знамения своего Господа,

யார் அவனது வேதத்தின் வசனங்களை நம்புகிறார்களோ,

23:59Страница 345

وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمۡ لَا يُشۡرِكُونَ ٥٩

которые не приобщают к своему Господу сотоварищей,

யார் தங்கள் இறைவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குகிறார்களோ,

23:60Страница 346

وَٱلَّذِينَ يُؤۡتُونَ مَآ ءَاتَواْ وَّقُلُوبُهُمۡ وَجِلَةٌ أَنَّهُمۡ إِلَىٰ رَبِّهِمۡ رَٰجِعُونَ ٦٠

которые раздают милостыню, тогда как их сердца страшатся того, что им суждено вернуться к своему Господу, -

மறுமை நாளில் அவனிடம் திரும்பும் போது தங்களின் தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டானோ என்று அஞ்சிய நிலமையில், யார் நன்மையான காரியங்களில் முயற்சி செய்து, நன்மையான செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்குகிறார்களோ,

23:61Страница 346

أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ ٦١

все они спешат вершить добрые дела и опережают в этом других.

மகத்தான இந்த பண்புகளை உடையவர்கள்தாம் நற்செயல்களின்பால் விரைகிறார்கள். அவர்களே அவற்றுக்கு முந்தக்கூடியவர்கள். இதனால்தான் மற்றவர்களை முந்திவிட்டார்கள்.

23:62Страница 346

وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ٦٢

Мы не возлагаем на человека сверх его возможностей. У Нас есть Писание, которое глаголет истину, и с ними не поступят несправедливо.

நாம் எந்த ஒரு மனிதனுக்கும் அவனால் செய்ய முடிந்த செயல்களையே பொறுப்பாக சாட்டுகிறோம். நம்மிடம் ஒரு புத்தகம் உள்ளது. அதில் அனைவரின் செயல்களையும் பதிவுசெய்து வைத்துள்ளோம். அது சந்தேகமற்ற சத்தியத்தைக்கொண்டு பேசும். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் மீது அநீதி இழைக்கப்படாது.

23:63Страница 346

بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ ٦٣

Однако их сердца слепы к этому (Корану). А наряду с этим они совершают менее тяжкие злодеяния.

மாறாக நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் சத்தியத்தைக்கொண்டு பேசும் இந்த புத்தகத்தை விட்டும் அவர்கள் மீது இறங்கிய வேதத்தை விட்டும் அலட்சியமாக இருக்கின்றன. அவர்களுக்கு அவர்களின் நிராகரிப்புத் தவிர்ந்த வேறு செயல்களும் இருக்கின்றன.

23:64Страница 346

حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡـَٔرُونَ ٦٤

А когда Мы подвергнем наказанию изнеженных роскошью среди них, они завопят громким голосом.

இறுதியில் உலகில் சொகுசாக வாழ்ந்தோரை மறுமை நாளில் நாம் வேதனையால் தண்டிக்கும்போது அவர்கள் சத்தமாக அபயக்குரல் எழுப்புவார்கள்.

23:65Страница 346

لَا تَجۡـَٔرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ ٦٥

Не вопите сегодня! Воистину, Мы не окажем вам помощи.

அல்லாஹ்வின் அருளைவிட்டு நிராசையடையச் செய்யும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் சப்தமிடவோ, அபயக்குரல் எழுப்பவோ வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் எந்த உதவியாளரும் உங்களுக்குக் கிடையாது.

23:66Страница 346

قَدۡ كَانَتۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ تَنكِصُونَ ٦٦

Вам читали Мои аяты, но вы пятились от них,

உலகில் இறைவேத வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. அதனைக் கேட்கும் போது அதன் மீதுள்ள வெறுப்பினால் அவற்றைப் புறக்கணித்து திரும்பிச் செல்வோராக இருந்தீர்கள்.

23:67Страница 346

مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ ٦٧

возгордившись ею (Каабой) и произнося скверные речи по ночам.

நாங்கள் ஹரமைச் சேர்ந்தவர்கள்’ என்று எண்ணி மக்களிடம் கர்வம்கொண்டுதான் இவ்வாறெல்லாம் செய்தீர்கள். நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. ஏனெனில் நிச்சயமாக இறையச்சமுடையவர்கள்தாம் ஹரமைச் சார்ந்தவர்களாவர். அதைச் சுற்றி இருந்துகொண்டு தீய வார்த்தைகளால் இரவில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அதனைப் புனிதப்படுத்துவதில்லை.

23:68Страница 346

أَفَلَمۡ يَدَّبَّرُواْ ٱلۡقَوۡلَ أَمۡ جَآءَهُم مَّا لَمۡ يَأۡتِ ءَابَآءَهُمُ ٱلۡأَوَّلِينَ ٦٨

Неужели они не задумываются над Словом? Или же к ним явилось то, что не приходило к их праотцам?

இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ் இறக்கிய குர்ஆனை நம்பிக்கைகொண்டு அதன்படி செயல்படுவதற்காக அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துவிட்டதா? அதனால் அவர்கள் அதனைப் புறக்கணித்து பொய்ப்பிக்கிறார்களா?

23:69Страница 346

أَمۡ لَمۡ يَعۡرِفُواْ رَسُولَهُمۡ فَهُمۡ لَهُۥ مُنكِرُونَ ٦٩

Или же они не узнали своего Посланника и принялись отвергать его?

அல்லது அல்லாஹ் அவர்களின்பால் அனுப்பிய முஹம்மதை அறியாததால் அவரை அவர்கள் நிராகரிக்கிறார்களா? அவர்கள் அவரையும் அவரது நம்பகத்தன்மையையும் அமானிதத்தையும் நன்கறிவார்கள்.

23:70Страница 346

أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ ٧٠

Или же они говорят, что он - бесноватый? Напротив, он принес им истину, но большинство из них не любят ее.

மாறாக அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அவர்கள் பொய் கூறுகிறார்கள். மாறாக அவர் நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து சந்தேகமற்ற சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் தங்களிடமுள்ள பொறாமையினாலும், அசத்தியத்திலுள்ள பிடிவாதத்தினாலும் சத்தியத்தை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள்.

23:71Страница 346

وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ ٧١

А если бы истина зависела от их желаний, то сгинули бы небеса, земля и те, кто на них. Мы даровали им их Напоминание (Коран), однако они отвернулись от своего Напоминания.

அவர்களின் மனங்கள் விரும்புவதற்கு ஏற்ப அல்லாஹ் காரியங்களை நிகழ்த்தி திட்டமிட்டால் வானங்களும் பூமியும் அதில் உள்ளவைகளும் சீர்குழைந்துவிடும். ஏனெனில் அவர்களுக்கு பின்விளைவுகளைப் பற்றியோ திட்டமிடலில் நல்லது கெட்டதைப் பற்றியோ தெரியாது.எனவே அவர்களுக்கு கண்ணியமும் மதிப்பும் பொதிந்த அல் குரானை வழங்கியுள்ளோம். ஆனால் அவர்களோ அதனை புறக்கணித்தவர்களாக உள்ளனர் .

23:72Страница 346

أَمۡ تَسۡـَٔلُهُمۡ خَرۡجٗا فَخَرَاجُ رَبِّكَ خَيۡرٞۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ٧٢

Разве ты просишь у них вознаграждения? Воздаяние твоего Господа лучше, и Он - Наилучший из дарующих удел.

தூதரே!- நீர் அவர்களிடம் கொண்டுவந்த தூதுப்பணிக்காக அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்டு, அதனால் அவர்கள் உமது அழைப்பை நிராகரிக்கிறார்களா? இவ்வாறு நீர் கேட்கவில்லை. உம் இறைவன் உமக்கு வழங்கும் கூலி இவர்கள், இவர்கள் அல்லாத ஏனையவர்களின் கூலியைவிடச் சிறந்ததாகும். அவனே வாழ்வாதாரம் வழங்குவோரில் மிகச்சிறந்தவன்.

23:73Страница 346

وَإِنَّكَ لَتَدۡعُوهُمۡ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٧٣

Воистину, ты призываешь их на прямой путь.

தூதரே!- நிச்சயமாக நீர் இவர்களையும், மற்றவர்களையும் கோணலற்ற நேரான வழியின் பக்கம் அழைக்கின்றீர். அது இஸ்லாம் என்னும் வழியாகும்.

23:74Страница 346

وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ ٧٤

А те, которые не веруют в Последнюю жизнь, непременно сбиваются с пути.

மறுமை நாளின் மீதும் அங்கு இடம்பெறும் கேள்வி கணக்கு, வழங்கப்படும் நற்கூலி, தண்டனை என்பவற்றின் மீதும் நம்பிக்கைகொள்ளாதவர்கள் இஸ்லாம் என்னும் நேரான வழியை விட்டு நரகத்தின்பால் இட்டுச் செல்லக்கூடிய கோணலான வழிகளின் பக்கம் சாய்ந்துள்ளார்கள்.

23:75Страница 347

۞ وَلَوۡ رَحِمۡنَٰهُمۡ وَكَشَفۡنَا مَا بِهِم مِّن ضُرّٖ لَّلَجُّواْ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ٧٥

Если бы Мы смилостивились над ними и избавили их от беды, они все равно продолжали бы слепо скитаться, настаивая на своем беззаконии.

நாம் அவர்கள் மீது கருணைகாட்டி அவர்களைச் சூழ்ந்திருக்கும் பஞ்சத்தையும் பசியையும் போக்கிவிட்டால் அவர்கள் தடுமாறியவர்களாக சத்தியத்தை விட்டும் தங்களின் வழிகேட்டில் தொடர்கிறார்கள்.

23:76Страница 347

وَلَقَدۡ أَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ فَمَا ٱسۡتَكَانُواْ لِرَبِّهِمۡ وَمَا يَتَضَرَّعُونَ ٧٦

Мы подвергли их мучениям, но они не смирились перед своим Господом и не взмолились перед Ним.

நாம் பலவகையான சோதனைகளால் அவர்களைச் சோதித்தோம். ஆயினும் அவர்கள் தங்கள் இறைவனுக்கு அடிபணியவுமில்லை. துன்பங்கள் நிகழும் போது அவற்றைத் தம்மை விட்டும் நீக்குமாறு பயந்தவர்களாக அவனிடம் பிரார்த்திக்கவுமில்லை.

23:77Страница 347

حَتَّىٰٓ إِذَا فَتَحۡنَا عَلَيۡهِم بَابٗا ذَا عَذَابٖ شَدِيدٍ إِذَا هُمۡ فِيهِ مُبۡلِسُونَ ٧٧

Когда же Мы распахнем перед ними врата тяжких мучений, они придут там в отчаяние.

இறுதியில் நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்துவிட்டால் அவர்கள் எல்லா வகையான தீர்வு, நன்மை என்பவற்றை விட்டும் நிராசையடைந்துவிடுகிறார்கள்.

23:78Страница 347

وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ٧٨

Он - Тот, Кто сотворил для вас слух, зрение и сердца. Но как мала ваша благодарность!

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்களே!- அல்லாஹ்வே நீங்கள் செவியேற்பதற்காக செவியையும் பார்ப்பதற்காக கண்களையும் விளங்கிக்கொள்வதற்காக உள்ளங்களையும் உங்களுக்காக படைத்துள்ளான். இருந்தும் நீங்கள் இந்த அருட்கொடைகளுக்கு மிகக் குறைவாகவே நன்றிசெலுத்துகிறீர்கள்.

23:79Страница 347

وَهُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ ٧٩

Он - Тот, Кто расселил вас по земле, и к Нему вы будете собраны.

மனிதர்களே!- அவன்தான் உங்களைப் பூமியில் படைத்தான். மறுமை நாளில் விசாரணைக்காக கூலி வழங்குவதற்காக அவன் பக்கமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.

23:80Страница 347

وَهُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخۡتِلَٰفُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ أَفَلَا تَعۡقِلُونَ ٨٠

Он - Тот, Кто дарует жизнь и умерщвляет. Он чередует ночь и день. Неужели вы не разумеете?

அவனே உயிரளிக்கிறான். அவனைத் தவிர யாராலும் உயிரளிக்க முடியாது. அவனே மரணிக்கச் செய்கிறான். அவனைத் தவிர யாராலும் மரணிக்கச் செய்ய முடியாது. இரவு, பகல் என்பவற்றின் இருள், ஒளி, நீளம், சுருக்கம் என இரவு பகலில் ஏற்படும் மாற்றங்களும் அவனது ஏற்பாடே. அவனுடைய வல்லமையையும் அவன் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?

23:81Страница 347

بَلۡ قَالُواْ مِثۡلَ مَا قَالَ ٱلۡأَوَّلُونَ ٨١

О нет! Они говорят то же, что говорили первые поколения.

மாறாக நிராகரிக்கும் தங்களின் மூதாதையர்களும், முன்னோர்களும் கூறியவாறே அவர்கள் கூறினார்கள்.

23:82Страница 347

قَالُوٓاْ أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ٨٢

Они говорят: «Неужели мы будем воскрешены после того, как умрем и превратимся в прах и кости?

நிராகரிக்கும் விதத்தில் அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் மரணித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப் போன பின்னர் விசாரணை செய்யப்படுவதற்காக நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா?

23:83Страница 347

لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٨٣

Это обещают нам, а еще раньше это обещали нашим отцам. Это - всего лишь легенды древних народов».

மரணத்தின் பின் எழுப்பப்படும்- என்ற இந்த வாக்குறுதி இதற்கு முன்னரும் எமக்கும் எங்களின் முன்னோர்களுக்கும் வழங்கப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேறியதை நாம் காணவில்லை. இது முன்னோர்களின் பொய்கள், கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை.

23:84Страница 347

قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٨٤

Скажи: «Кому принадлежит земля и те, кто на ней, если только вы знаете?».

தூதரே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரிக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “இந்த பூமி யாருக்குரியது? அதில் வசிப்பவர்கள் யாருக்குரியவர்கள்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் கூறுங்கள்.

23:85Страница 347

سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ ٨٥

Они скажут: «Аллаху». Скажи: «Неужели вы не помяните назидание?».

“இந்த பூமியும் இதிலுள்ளவர்களும் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக யார் பூமிக்கும் அதிலுள்ளவர்களுக்கும் சொந்தக்காரனோ அவன் நீங்கள் மரணித்த பிறகு உங்களை உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன் என்பதை புரிந்து மாட்டீர்களா?”

23:86Страница 347

قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ ٨٦

Скажи: «Кто Господь семи небес и Господь великого Трона?».

நீர் அவர்களிடம் கேட்பீராக: “ஏழு வானங்களுக்கும் இறைவன் யார்? படைப்புகளில் மிகப் பெரிய மகத்தான அர்ஷின் அதிபதி யார்?”

23:87Страница 347

سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ ٨٧

Они скажут: «Аллах». Скажи: «Неужели вы не устрашитесь?».

“ஏழு வானங்களுக்கும் மகத்தான அர்ஷுக்கும் அல்லாஹ்வே சொந்தக்காரனாவான்” என்று விரைவில் அவர்கள் கூறுவார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”

23:88Страница 347

قُلۡ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٨٨

Скажи: «В чьей Руке власть над всякой вещью? Кто защищает, и от Кого нет защиты, если только вы знаете?».

நீர் அவர்களிடம் கூறுவீராக: “தனது அதிகாரத்தை விட்டும் எதுவும் தவறிவிட முடியாதளவு அனைத்து அதிகாரங்களும் யாருடைய கையில் உள்ளது? அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உதவிசெய்கிறான். அவன் யாருக்கேனும் தீங்கிழைக்க நாடிவிட்டால் அதிலிருந்து யாரும் தப்பி தன்னை விட்டும் அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் கூறுங்கள்.

23:89Страница 347

سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ ٨٩

Они скажут: «Аллах». Скажи: «До чего же вы обмануты!».

அவர்கள் கூறுவார்கள்: “அனைத்துப் பொருளின் அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது.” நீர் அவர்களிடம் கேட்பீராக: “இதனை ஏற்றுக்கொண்டே அவனைத் தவிர மற்றவர்களை வணங்கும் உங்கள் அறிவு எங்கு போய்விட்டது? !”

23:90Страница 348

بَلۡ أَتَيۡنَٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ٩٠

Мы принесли им истину, однако они - лжецы.

அவர்கள் வாதாடுவது போலல்ல விடயம். மாறாக நாம் சந்தேகமற்ற சத்தியத்தைக் அவர்களிடம்கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணை உண்டு, மகன் உண்டு என்ற அவர்களின் வாதத்தில் அவர்கள் பொய்யர்களே. அவர்கள் கூறுவதைவிட்டும் அல்லாஹ் மிக மிக உயர்ந்தவன்.

23:91Страница 348

مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ٩١

Аллах не взял Себе сына, и нет наряду с Ним другого бога. В противном случае каждый бог унес бы с собой то, что сотворил, и одни из них возвысились бы над другими. Аллах превыше того, что они приписывают Ему!

நிராகரிப்பாளர்கள் நினைப்பது போல அல்லாஹ் எந்த மகனையும் ஏற்படுத்தவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய உண்மையான வேறு எந்த ஒன்றும் இல்லை. ஒருவேளை அவனுடன் உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு கடவுளும் இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக்கொண்டு தனியே சென்றிருக்கும். ஒன்றையொன்று மிகைத்திருக்கும். அதனால் பிரபஞ்சத்தின் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருக்கும். உண்மையில் இவற்றில் எதுவும் நிகழவில்லை. நிச்சயமாக இது வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே அவன் தான் அல்லாஹ் என்பதைக் கூறுகிறது. அவன் இணைவைப்பாளர்கள் கூறும் பிள்ளை, இணை ஆகிய தனக்குப் பொருத்தமற்ற பண்புகளைவிட்டும் தூய்மையாகி விட்டான்.

23:92Страница 348

عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ٩٢

Ведающий сокровенное и явное! Он превыше тех, кого они приобщают в сотоварищи!

படைப்புகளைவிட்டும் மறைவான ஒவ்வொன்றையும் புலனுருப்புகளால் அறியக்கூடிய, பார்க்கக்கூடிய அனைத்தையும் அவன் அறியக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனுக்கு இணை இருப்பதைவிட்டும் மிக உயர்ந்தவன்.

23:93Страница 348

قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ ٩٣

Скажи: «Господи! Если Ты покажешь мне то, что им обещано,

தூதரே!- நீர் கூறுவீராக: “என் இறைவா! நீ இந்த இணைவைப்பாளர்களுக்கு வாக்களித்த வேதனையை எனக்குக் காண்பிப்பதாயின்,

23:94Страница 348

رَبِّ فَلَا تَجۡعَلۡنِي فِي ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٩٤

то не делай меня, Господи, в числе несправедливых людей!».

என் இறைவா! நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது நீ அவர்களைத் தண்டித்தால் அவர்களுடன் என்னை ஆக்கிவிடாதே. அவ்வாறு செய்தால் அவர்களைத் தாக்கும் அதே வேதனையால் நானும் பாதிக்கப்பட்டு விடுவேன்.”

23:95Страница 348

وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمۡ لَقَٰدِرُونَ ٩٥

Воистину, Мы способны показать тебе то, что им обещано.

நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையை உமக்குக் காட்டுவதற்கு ஆற்றல் பெற்றவர்களாவோம். அதனை விட்டோ, மற்றவற்றை விட்டோ நாம் இயலாதவர்களல்ல.

23:96Страница 348

ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ ٩٦

Оттолкни зло тем, что лучше. Мы лучше знаем то, что они приписывают.

தூதரே!- உமக்குத் தீங்கிழைப்போரை சிறந்த பண்பால் எதிர்கொள்வீராக. அது அவர்களை மன்னித்து அவர்களின் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வதாகும். இணைவைத்தல், பொய்ப்பித்தல்ஆகிய அவர்களின் வர்ணனைகளையும், உமக்குப் பொருத்தமற்ற சூனியம், பைத்தியம் போன்ற பண்புகளால் உம்மை அவர்கள் வர்ணிப்பதையும் நாம் நன்கு அறிவோம்.

23:97Страница 348

وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ ٩٧

Скажи: «Господи! Я прибегаю к Тебе от наваждений дьяволов.

நீர் கூறுவீராக: “என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்தும், ஊசலாட்டங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

23:98Страница 348

وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحۡضُرُونِ ٩٨

Я прибегаю к Тебе, Господи, дабы они не приближались ко мне».

என்னுடைய ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்கள் என்னிடம் வருவதைவிட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.”

23:99Страница 348

حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ رَبِّ ٱرۡجِعُونِ ٩٩

Когда же смерть подступает к кому-нибудь из них, он говорит: «Господи! Верни меня обратно.

இறுதியில் இந்த இணைவைப்பாளர்களில் யாருக்கேனும் மரணம் நெருங்கிவிட்டால், தன் மீது இறங்குவதை அவர் கண்ணால் காணும்போது கடந்துபோன தன் வாழ்நாளுக்காகவும் அல்லாஹ்வின் விஷயத்தில் குறைவைத்ததற்காகவும் அவன் வருத்தப்பட்டுக் கூறுவான்: “என் இறைவா! என்னை மீண்டும் உலக வாழ்க்கையின்பால் அனுப்புவாயாக.

23:100Страница 348

لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كـَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ١٠٠

Быть может, я стану совершать праведные поступки, которые я отбросил». Но нет! Это - всего лишь слова, которые он произносит. Позади них будет преграда вплоть до того дня, когда они будут воскрешены.

"நான் அங்கு மீண்டும் அனுப்பப்பட்டால் நற்செயல்களைச் செய்வேன்".நீ வேண்டுவது போலல்ல விடயம். நிச்சயமாக அது அவன் வாயால் கூறும் வெறும் வார்த்தைதான். ஒருவேளை அவன் உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்பப்பட்டாலும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டான். இறந்துவிட்ட அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும்வரை உலகத்திற்கும், மறுமைக்கும் மத்தியில் ஒரு தடுப்பில் இருப்பார்கள். தவறியதை அடைவதற்கும், வீணாக்கியதை சீராக்கவும் மீண்டும் உலகத்தின்பால் திரும்ப மாட்டார்கள்.

23:101Страница 348

فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيۡنَهُمۡ يَوۡمَئِذٖ وَلَا يَتَسَآءَلُونَ ١٠١

А в тот день, когда затрубят в Рог, между ними не останется родственных связей, и они не будут расспрашивать друг друга.

சூர் ஊதுவதற்கு நியமிக்கப்பட்ட வானவர் மறுமை நாளை அறிவிக்கும் இரண்டாவது சூர் ஊதும் போது மறுமையின் பயங்கரங்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பதால் பெருமைப்பட்டுக் கொள்ளும் உறவுகள் எதுவும் இருக்காது. தமக்கு அவசியமானவற்றில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

23:102Страница 348

فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ١٠٢

Те, чья чаша Весов окажется тяжелой, обретут успех.

யாருடைய நன்மையின் எடைத்தட்டு தீமையின் எடைத்தட்டை விட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் பயப்படும் விஷயங்களிலிருந்து பாதுகாவல் பெற்று விரும்பும் விஷயங்களைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்களாவர்.

23:103Страница 348

وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ ١٠٣

А те, чья чаша Весов окажется легкой, потеряют самих себя и вечно пребудут в Геенне.

யாருடைய தீமையின் எடைத்தட்டு நன்மையின் எடைத்தட்டை விட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் தீங்கான காரியங்களைச் செய்து, பயனளிக்கக்கூடிய ஈமானையும், நற்செயல்களையும் விட்டுவிட்டு தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக்கொண்டவர்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அதிலிருந்து அவர்களால் வெளியேற முடியாது.

23:104Страница 348

تَلۡفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمۡ فِيهَا كَٰلِحُونَ ١٠٤

Огонь будет сжигать их лица, и там они будут корчиться.

அவர்களின் முகங்களை நெருப்பு பொசுக்கிவிடும். அதன் கடுகடுப்பின் கடுமையினால் அவர்களின் மேலுதடுகளும் கீழுதடுகளும் பற்களை விட்டும் சுருங்கி (விகாரமானதாக) தோற்றமளிக்கும்.

23:105Страница 349

أَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ ١٠٥

Разве вам не читали Мои аяты, а вы считали их ложью?

அவர்களைக் கண்டித்துக் கூறப்படும்: “உலகில் குர்ஆனின் வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்படவில்லையா? நீங்கள் அவற்றை நிராகரித்துக் கொண்டிருந்தீர்களே!”

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English