Аль-МухтасарАль‑Фуркан · 25:1–43

Аль-Мухтасар · Тафсир · на тамильском

الفرقان

Аль-Фуркан

аль-Фуркан · Мекканская · 77 аятов

25:1Страница 359

تَبَارَكَ ٱلَّذِي نَزَّلَ ٱلۡفُرۡقَانَ عَلَىٰ عَبۡدِهِۦ لِيَكُونَ لِلۡعَٰلَمِينَ نَذِيرًا ١

Благословен Тот, Кто ниспослал Своему рабу Различение (Коран), чтобы он предостерег миры.

சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக்கூடிய குர்ஆனை தம் அடியாரும் தூதருமாகிய முஹம்மதின் மீது இறக்கியவன் மிகவும் நலவுகள் நிறைந்தவன், கண்ணியம் மிக்கவன். அது அவர் மனித, ஜின் இனத்திற்கு தூதராகவும் அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து எச்சரிக்கை செய்பவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

25:2Страница 359

ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَمۡ يَتَّخِذۡ وَلَدٗا وَلَمۡ يَكُن لَّهُۥ شَرِيكٞ فِي ٱلۡمُلۡكِ وَخَلَقَ كُلَّ شَيۡءٖ فَقَدَّرَهُۥ تَقۡدِيرٗا ٢

Ему принадлежит власть над небесами и землей. Он не взял Себе сына и ни с кем не делил власть. Он сотворил всякую вещь и придал ей соразмерную меру (или предопределил ее).

வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் தனக்கு மகனை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அவனுடைய ஆட்சியதிகாரத்தில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவன் எல்லாவற்றையும் படைத்து தனது அறிவுக்கும் ஞானத்திற்கும் ஏற்ப ஒவ்வான்றுக்கும் பொருத்தமான அளவை படைப்புக்கு நிர்ணயித்துள்ளான்.

25:3Страница 360

وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا ٣

Они стали поклоняться вместо Него другим божествам, которые ничего не создают, хотя сами были сотворены. Они не властны принести вред или пользу даже самим себе и не распоряжаются ни смертью, ни жизнью, ни воскрешением.

இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு வணங்குபவைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். அவை சிறியதையோ பெரியதையோ எதையும் படைக்காது. மாறாக அவையே படைக்கப்பட்டவைதாம். ஒன்றுமே இல்லாமல் இருந்த அவர்களை அல்லாஹ்தான் படைத்தான். அவை தம்மைவிட்டு தீங்கினைத் தடுக்கவோ, தமக்கு பலனை ஏற்படுத்திக்கொள்ளவோ, உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்யவோ, மரணித்தவற்றை உயிர்ப்பிக்கவோ, இறந்தவர்களை அவர்களின் அடக்கஸ்த்தலங்களிலருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பவோ சக்தி பெறாது.

25:4Страница 360

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ إِفۡكٌ ٱفۡتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيۡهِ قَوۡمٌ ءَاخَرُونَۖ فَقَدۡ جَآءُو ظُلۡمٗا وَزُورٗا ٤

Неверующие говорят: «Это - всего лишь ложь, которую он выдумал с помощью других людей». Воистину, они поступают несправедливо и лгут.

அல்லாஹ்வையும் தூதரையும் நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்: “இந்த குர்ஆனை முஹம்மது சுயமாகப் புனைந்துகொண்டு அதனை அபாண்டமாக அல்லாஹ்வின்பால் இணைத்துவிட்டார். இதனைப் புனைவதற்கு வேறு சில மனிதர்களும் அவருக்கு உதவியிருக்கிறார்கள்.” இந்த நிராகரிப்பாளர்கள் அபாண்டமாக இட்டுக் கட்டுகிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கே அன்றி வேறில்லை. மனிதர்கள் மற்றும் ஜின்களால் இதைப்போன்று ஒருபோதும் கொண்டுவர முடியாது.

25:5Страница 360

وَقَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٱكۡتَتَبَهَا فَهِيَ تُمۡلَىٰ عَلَيۡهِ بُكۡرَةٗ وَأَصِيلٗا ٥

Они говорят: «Это - легенды древних народов. Он попросил записать их, и их читают ему утром и после полудня».

குர்ஆனை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இது முன்னோர்களின் கட்டுக் கதைகளும் புராணங்களுமாகும். அவற்றை முஹம்மது பிரதிபன்னியுள்ளார். இது காலையிலும் மாலையிலும் அவருக்குப் படித்துக் காட்டப்படுகிறது.

25:6Страница 360

قُلۡ أَنزَلَهُ ٱلَّذِي يَعۡلَمُ ٱلسِّرَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ٦

Скажи: «Ниспослал его Тот, Кому известны тайны на небесах и на земле. Он - Прощающий, Милосердный».

தூதரே!- இந்த பொய்ப்பிப்பவர்களிடம் நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்தான் குர்ஆனை இறக்கினான். நீங்கள் எண்ணுவது போல புனைந்து கூறப்பட்டதல்ல. அவர்களுக்கு பாவமன்னிப்பில் ஆர்வமூட்டிவனாக பின்பு கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

25:7Страница 360

وَقَالُواْ مَالِ هَٰذَا ٱلرَّسُولِ يَأۡكُلُ ٱلطَّعَامَ وَيَمۡشِي فِي ٱلۡأَسۡوَاقِ لَوۡلَآ أُنزِلَ إِلَيۡهِ مَلَكٞ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا ٧

Они сказали: «Что это за посланник? Он ест пищу и ходит по рынкам. Почему к нему не был ниспослан ангел, который предостерегал бы вместе с ним?

தூதரை மறுக்கும் இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்: “தான் நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் என்று எண்ணும் இவருக்கு என்னவாயிற்று? மற்ற மனிதர்கள் உண்பதைப்போலவே இவரும் உண்ணுகிறார். அவர்கள் கடைவீதிகளில் சம்பாதிப்பதற்காக சுற்றுவதைப்போலவே இவரும் சுற்றுகிறார். இவருடன் இவரை உண்மைப்படுத்தும், இவருக்கு உதவி புரிந்து தோழராக இருக்கும் ஒரு வானவரை அல்லாஹ் இறக்கியிருக்கக் கூடாதா?

25:8Страница 360

أَوۡ يُلۡقَىٰٓ إِلَيۡهِ كَنزٌ أَوۡ تَكُونُ لَهُۥ جَنَّةٞ يَأۡكُلُ مِنۡهَاۚ وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا ٨

Почему ему не даровано сокровище? Почему у него нет сада, из которого он бы вкушал?». Беззаконники сказали: «Воистину, вы следуете лишь за околдованным мужем».

அல்லது வானத்திலிருந்து ஏதேனும் பொக்கிஷம் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதன் பழங்களிலிருந்து இவர் உண்ண வேண்டாமா? அதனால் வாழ்வாதாரம் தேடி கடைவீதிகளில் சுற்றித் திரியாமல் தேவையற்றிருக்கலாம் அல்லவா?” அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள்: “-நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஒரு தூதரைப் பின்பற்றவில்லை. மாறாக சூனியத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு புத்தி பேதலித்த ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்.”

25:9Страница 360

ٱنظُرۡ كَيۡفَ ضَرَبُواْ لَكَ ٱلۡأَمۡثَٰلَ فَضَلُّواْ فَلَا يَسۡتَطِيعُونَ سَبِيلٗا ٩

Посмотри, как они приводят тебе притчи! Они впали в заблуждение и не могут найти дороги.

தூதரே!- அவர்கள் உம்மைப்பற்றி எவ்வாறெல்லாம் பொய்யான பண்புகளால் வர்ணிக்கிறார்கள் என்பதை ஆச்சரியமாக பாரும். “சூனியக்காரர் என்றும் சூனியம் செய்யப்பட்டவர் என்றும் பைத்தியக்காரர் என்றும் கூறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் சத்தியத்தைவிட்டும் வழிதவறி விட்டார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதற்கு சக்திபெற மாட்டார்கள். உமது அமானிதம், நம்பகத் தன்மையில் எவ்வகையிலும் அவர்கள் குறைகாண முடியாது.

25:10Страница 360

تَبَارَكَ ٱلَّذِيٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيۡرٗا مِّن ذَٰلِكَ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَيَجۡعَل لَّكَ قُصُورَۢا ١٠

Благословен Тот, Кто дарует тебе, если пожелает, нечто лучшее - Райские сады, в которых текут реки, а также дворцы.

அல்லாஹ் நலன் நிறைந்தவன். அவன் நாடினால் அவர்கள் உமக்கு ஆலோசனை கூறியதை விட சிறந்தவற்றை உமக்கு அளித்திடுவான். இவ்வுலகில் உமக்காக தோட்டங்களை ஏற்படுத்தி அவற்றின் மாளிகைக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகளை ஓடச் செய்திருப்பான். நீர் அவற்றிலிருந்து பழங்களை உண்டிருக்கலாம். நீர் சொகுசாக வசிப்பதற்காக கோட்டைகளையும் ஏற்படுத்தியிருப்பான்.

25:11Страница 360

بَلۡ كَذَّبُواْ بِٱلسَّاعَةِۖ وَأَعۡتَدۡنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا ١١

Но они считают ложью Час, а для тех, кто считает ложью Час, Мы приготовили Пламя.

அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் சத்தியத்தை தேடியோ ஆதாரத்தை வேண்டியோ வெளிப்படவில்லை. மாறாக நடந்தது என்னவெனில் அவர்கள் மறுமை நாளை நிராகரித்துவிட்டனர். மறுமை நாளை மறுப்பவர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் பெரும் நெருப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.

25:12Страница 361

إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِيدٖ سَمِعُواْ لَهَا تَغَيُّظٗا وَزَفِيرٗا ١٢

Когда оно завидит их издалека, они услышат его яростное шипение и тяжелое дыхание.

நிராகரிப்பாளர்கள் கொண்டு வரப்படும் போது அவர்களை தூரத்திலிருந்து நரகம் காணும் போது, அவர்கள் மீதுள்ள அதன் கடும் கோபத்தினால் அதன் கடுமையான கொந்தளிப்பையும் பயங்கரமான இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.

25:13Страница 361

وَإِذَآ أُلۡقُواْ مِنۡهَا مَكَانٗا ضَيِّقٗا مُّقَرَّنِينَ دَعَوۡاْ هُنَالِكَ ثُبُورٗا ١٣

Когда их скованными бросят в тесное место, там они будут призывать погибель.

இந்த நிராகரிப்பாளர்கள் அவர்களது கரங்கள் கழுத்துகளுடன் இணைத்து விலங்கிடப்பட்டவர்களாக நரகத்தில் நெருக்கடியான இடத்தில் எறியப்படும்போது அதிலிருந்து விடுபட வேண்டி அழிவை அழைப்பார்கள்.

25:14Страница 361

لَّا تَدۡعُواْ ٱلۡيَوۡمَ ثُبُورٗا وَٰحِدٗا وَٱدۡعُواْ ثُبُورٗا كَثِيرٗا ١٤

Не призывайте сегодня одну погибели, а призывайте много погибелей!

நிராகரிப்பாளர்களே!- இன்று நீங்கள் ஒரு அழிவை அழைக்காதீர்கள். பல அழிவுகளை அழையுங்கள். உங்களின் கோரிக்கை ஏற்கப்படாது. மாறாக நீங்கள் வேதனை மிக்க தண்டனையில் நிலையாக வீழ்ந்திருப்பீர்கள்.

25:15Страница 361

قُلۡ أَذَٰلِكَ خَيۡرٌ أَمۡ جَنَّةُ ٱلۡخُلۡدِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۚ كَانَتۡ لَهُمۡ جَزَآءٗ وَمَصِيرٗا ١٥

Скажи: «Это лучше или же Сад вечности, который обещан богобоязненным и будет им воздаянием и местом прибытия?».

தூதரே!- நீர் கூறுவீராக: “மேலே வர்ணிக்கப்பட்ட வேதனை உங்களுக்குச் சிறந்ததா? அல்லது நிறுத்தப்படாத நிலையான அருட்கொடைகளை உள்ளடக்கிய சுவனமா? அதைத்தான் நம்பிக்கைகொண்ட, தன்னை அஞ்சக்கூடிய அடியார்களுக்கு கூலியாகவும், மறுமையில் திரும்புமிடமாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

25:16Страница 361

لَّهُمۡ فِيهَا مَا يَشَآءُونَ خَٰلِدِينَۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعۡدٗا مَّسۡـُٔولٗا ١٦

Там они получат все, что пожелают, и останутся навечно. Твой Господь взял на себя это испрошенное обещание.

அந்த சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பும் இன்பங்கள் உண்டு. இது அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். அவனை அஞ்சக்கூடிய அடியார்கள் அவனிடம் அதனைக் கேட்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். தன் வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான்.

25:17Страница 361

وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمۡ أَضۡلَلۡتُمۡ عِبَادِي هَٰٓؤُلَآءِ أَمۡ هُمۡ ضَلُّواْ ٱلسَّبِيلَ ١٧

В тот день Он соберет их и тех, кому они поклонялись вместо Аллаха, и скажет: «Это вы ввели в заблуждение этих Моих рабов, или же они сами сбились с пути?».

அல்லாஹ் நிராகரிக்கும் இணைவைப்பாளர்களையும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிய தெய்வங்களையும் ஒன்றுதிரட்டும் நாளில் வணங்கியவர்களைக் கண்டிக்கும் விதமாக வணங்கப்பட்டவர்களிடம் அவன் கேட்பான்: “நீங்கள்தாம் உங்களை வணங்குமாறு கூறி என் அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாங்களாகவே வழிகெட்டு விட்டார்களா?”

25:18Страница 361

قَالُواْ سُبۡحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِي لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنۡ أَوۡلِيَآءَ وَلَٰكِن مَّتَّعۡتَهُمۡ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ نَسُواْ ٱلذِّكۡرَ وَكَانُواْ قَوۡمَۢا بُورٗا ١٨

Они скажут: «Пречист Ты! Не подобало нам брать покровителей и помощников вместо Тебя. Однако Ты позволил им и их отцам пользоваться благами, так что они забыли Напоминание. Они были пропащим народом».

வணங்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ பரிசுத்தமானவன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னைத் தவிர வேறு இறைநேசர்களை பாதுகாவலர்களை ஏற்படுத்திக்கொள்வது எங்களுக்கு உகந்ததல்ல. நாங்கள் எவ்வாறு உன்னைவிடுத்து எங்களை வணங்குமாறு உன் அடியார்களை அழைத்திருப்போம்? ஆயினும் எங்கள் இறைவா! நீ இந்த இணைவைப்பாளர்களையும் இவர்களின் முன்னோர்களையும் படிப்படியாக தண்டிக்கும்பொருட்டு உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்தாய். அதனால் அவர்கள் உன்னை மறந்துவிட்டார்கள். உன்னுடன் மற்றவர்களையும் வணங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் துர்பாக்கியத்தினால் அவர்கள் அழிவுக்குரிய சமூகமாக இருந்தார்கள்.”

25:19Страница 361

فَقَدۡ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسۡتَطِيعُونَ صَرۡفٗا وَلَا نَصۡرٗاۚ وَمَن يَظۡلِم مِّنكُمۡ نُذِقۡهُ عَذَابٗا كَبِيرٗا ١٩

Они опровергли то, что вы говорите, и вы не можете ни отвратить наказание, ни помочь себе. Тем из вас, кто поступал несправедливо, Мы дадим вкусить великие мучения.

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கியவர்கள் அவர்களைப் பற்றி நீங்கள் கூறியவற்றில் உங்களைப் பொய்யர்களாக்கிவிட்டார்கள். உங்களால் உங்களை விட்டும் வேதனையை அகற்றவோ உதவிபுரியவோ முடியாது. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பின் மூலம் அநியாயம் செய்கிறாரோ நாம் அவரை மேற்கூறப்பட்டவர்களுக்கு சுவைக்கச் செய்ததைப் போன்று கடுமையான முறையில் வேதனையை சுவைக்கச் செய்வோம்.

25:20Страница 361

وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ إِلَّآ إِنَّهُمۡ لَيَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَيَمۡشُونَ فِي ٱلۡأَسۡوَاقِۗ وَجَعَلۡنَا بَعۡضَكُمۡ لِبَعۡضٖ فِتۡنَةً أَتَصۡبِرُونَۗ وَكَانَ رَبُّكَ بَصِيرٗا ٢٠

Мы не ниспосылали до тебя посланников, которые не принимали бы пищи и не ходили бы по рынкам. Мы сделали одних из вас искушением для других: проявите ли вы терпение? Твой Господь - Видящий.

தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்கள் உணவு உண்ணக்கூடியவர்களாகவும் கடைவீதிகளில் உலாவக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. -மனிதர்களே!- செல்வம், வறுமை, ஆரோக்கியம், நோய் போன்ற வேறுபாட்டின் காரணமாக உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். நீங்கள் உங்களின் சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்களா? அல்லாஹ் அதற்காக உங்களுக்குக் கூலி வழங்குவான். பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களையும் கடைப்பிடிக்காதவர்களையும் அவனுக்குக் வழிப்படுபவர்களையும் வழிப்படாதவர்களையும் உம் இறைவன் பார்ப்பவனாக இருக்கின்றான்.

25:21Страница 362

۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا لَوۡلَآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسۡتَكۡبَرُواْ فِيٓ أَنفُسِهِمۡ وَعَتَوۡ عُتُوّٗا كَبِيرٗا ٢١

Те, которые не надеются на встречу с Нами, говорят: «Почему к нам не ниспосланы ангелы? И почему мы не видим нашего Господа?». Они надменно возгордились в душе собой и проявили великое неповиновение.

நம்முடைய சந்திப்பை நம்பாத, நமது வேதனையை அஞ்சாத நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “முஹம்மதின் நம்பகத்தன்மையைக் எங்களிடம் எடுத்துரைக்கக்கூடிய வானவர்களை எங்களுக்கு அல்லாஹ் இறக்கியிருக்கக் கூடாதா? அல்லது நாங்கள் எங்கள் இறைவனைக் கண்ணால் கண்டு அவரது நம்பகத்தன்மையைக் குறித்து அவன் எங்களுக்கு அறிவிக்கமாட்டானா?” இவர்களின் உள்ளங்களிலுள்ள கர்வம் மிகைத்து நம்பிக்கைகொள்ள விடாமல் இவர்களைத் தடுத்துவிட்டது. தங்களின் இந்த வார்த்தையின் மூலம் இவர்கள் நிராகரிப்பிலும் அநியாயத்திலும் வரம்புமீறிவிட்டார்கள்.

25:22Страница 362

يَوۡمَ يَرَوۡنَ ٱلۡمَلَٰٓئِكَةَ لَا بُشۡرَىٰ يَوۡمَئِذٖ لِّلۡمُجۡرِمِينَ وَيَقُولُونَ حِجۡرٗا مَّحۡجُورٗا ٢٢

В тот день, когда они увидят ангелов, для грешников не будет никакой благой вести, и они (ангелы) скажут: «Вот преграда непреодолимая!».

மரணிக்கும் போதும், மண்ணறையிலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் போதும் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படும் போதும், நரகத்தில் நுழையும் போதும் நிராகரிப்பாளர்கள் வானவர்களைக் காணும் நாளில் இவர்களுக்கு முஃமின்களுக்கு உள்ளது போன்று எந்த நற்செய்தியும் இருக்காது. அப்போது வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “உங்களுக்கு நற்செய்தி கூறுவதை அல்லாஹ் தடுத்துவிட்டான்.”

25:23Страница 362

وَقَدِمۡنَآ إِلَىٰ مَا عَمِلُواْ مِنۡ عَمَلٖ فَجَعَلۡنَٰهُ هَبَآءٗ مَّنثُورًا ٢٣

Мы займемся деяниями, которые они совершили, и обратим их в развеянный прах.

உலகில் நிராகரிப்பாளர்கள் செய்த நற்செயல்கள் எந்தளவுக்கு வீணானவை, பயனற்றவை என்றால் அனைத்தையும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாக யன்னலினால் நுழையும் சூரிய கதிரில் காணப்படும் சிதறிய புழுதிகளைப் போல் ஆக்கிவிடுவோம்.

25:24Страница 362

أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ يَوۡمَئِذٍ خَيۡرٞ مُّسۡتَقَرّٗا وَأَحۡسَنُ مَقِيلٗا ٢٤

У обитателей Рая в тот день будет более хорошая обитель и более прекрасное место отдыха.

அந்த நாளில் சுவனவாசிகளான நம்பிக்கையாளர்கள் இந்த நிராகரிப்பாளர்களை விட சிறந்த தங்குமிடத்தையும் ஓய்விடத்தையும் பெற்றிருப்பார்கள். இது அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்ததனால் அவர்களுக்குக் கிடைத்ததாகும்.

25:25Страница 362

وَيَوۡمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلۡغَمَٰمِ وَنُزِّلَ ٱلۡمَلَٰٓئِكَةُ تَنزِيلًا ٢٥

В тот день небо разверзнется и покроется облаками, и будут низведены ангелы.

தூதரே!- வானம் மென்மையான மேகத்தால் பிளந்துவிடும் நாளை நினைவுகூர்வீராக. அந்நாளில் வானவர்கள் அதிகமானவர்கள் என்பதால் மஹ்ஷர் பெருவெளியின்பால் கூட்டம் கூட்டமாக இறக்கப்படுவார்கள்.

25:26Страница 362

ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّ لِلرَّحۡمَٰنِۚ وَكَانَ يَوۡمًا عَلَى ٱلۡكَٰفِرِينَ عَسِيرٗا ٢٦

В тот день власть будет истинной и будет принадлежать Милостивому, и день тот будет тяжким для неверующих.

அந்த நாளில் உண்மையான ஆட்சியதிகாரம் அளவிலாக் கருணையாளனுக்கே உரியதாகும். அந்த நாள் நிராகரிப்பாளர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். ஆனால் நிச்சயமாக அது முஃமின்களுக்கு இலகுவாக இருக்கும்.

25:27Страница 362

وَيَوۡمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيۡهِ يَقُولُ يَٰلَيۡتَنِي ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلٗا ٢٧

В тот день беззаконник станет кусать свои руки и скажет: «Лучше бы я последовал путем Посланника!

தூதரே!- தூதரைப் பின்பற்றாததன் காரணமாக அநியாயக்காரன் வருத்தப்பட்டு தன் கைகளைக் கடித்துக் கொள்ளும் நாளை நினைவுகூர்வீராக. “அந்தோ! தூதர் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததை நான் பின்பற்றியிருக்கக்கூடாதா? அவருடன் சேர்ந்து வெற்றிக்கான பாதையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே?” என்று அவன் கூறுவான்.

25:28Страница 362

يَٰوَيۡلَتَىٰ لَيۡتَنِي لَمۡ أَتَّخِذۡ فُلَانًا خَلِيلٗا ٢٨

О горе мне! Лучше бы я не брал такого-то себе в друзья!

கடும் கவலையினால் தனக்குத் தானே அழிவைக் கொண்டு பிரார்த்தனை செய்து, “என் கேடே! நான் அந்த நிராகரிப்பாளனை உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக்கூடாதா?” என்று கூறுவான்:

25:29Страница 362

لَّقَدۡ أَضَلَّنِي عَنِ ٱلذِّكۡرِ بَعۡدَ إِذۡ جَآءَنِيۗ وَكَانَ ٱلشَّيۡطَٰنُ لِلۡإِنسَٰنِ خَذُولٗا ٢٩

Это он отвратил меня от Напоминания (Корана) после того, как оно дошло до меня». Воистину, дьявол оставляет человека без поддержки.

நிராகரித்த அந்த நண்பன் தூதரின் மூலமாக நான் குர்ஆனைப் பெற்றபிறகும் என்னை வழிகெடுத்துவிட்டான். ஷைத்தான் மனிதனுக்கு சதிசெய்யக் கூடியவனாக இருக்கின்றான். மனிதனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அவனை விட்டும் அவன் நீங்கிவிடுவான்.

25:30Страница 362

وَقَالَ ٱلرَّسُولُ يَٰرَبِّ إِنَّ قَوۡمِي ٱتَّخَذُواْ هَٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورٗا ٣٠

Посланник сказал: «Господи! Мой народ забросил этот Коран».

அந்த நாளில் தூதர் தம் சமூகத்தின் நிலைமையைகுறித்து முறையிட்டவராகக் கூறுவார்: “எனது இறைவா! நிச்சயமாக நீ என்னை அனுப்பிய என் சமூகம் நிச்சயமாக இந்த குர்ஆனை விட்டுவிட்டார்கள். இதனைப் புறக்கணித்துவிட்டார்கள்.”

25:31Страница 362

وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا مِّنَ ٱلۡمُجۡرِمِينَۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيٗا وَنَصِيرٗا ٣١

Так для каждого пророка Мы создали врагов из числа грешников, но довольно того, что твой Господь наставляет на прямой путь и помогает.

தூதரே!- நீர் உம் சமூகத்தினால் அனுபவித்த தொல்லைகள், உம்முடைய வழியில் ஏற்பட்ட தடை போன்றே உமக்கு முன்னால் வந்த ஒவ்வொரு தூதருக்கும் அவரது சமூகத்திலுள்ள குற்றவாளிகளை எதிரிகளாக ஆக்கினோம். சத்தியத்தின்பால் வழிகாட்டுவதற்கும் உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவிபுரியும் உதவியாளனாக ஆகுவதற்கும் உம் இறைவனே போதுமானவன்.

25:32Страница 362

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡلَا نُزِّلَ عَلَيۡهِ ٱلۡقُرۡءَانُ جُمۡلَةٗ وَٰحِدَةٗۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَۖ وَرَتَّلۡنَٰهُ تَرۡتِيلٗا ٣٢

Неверующие сказали: «Почему Коран не ниспослан ему целиком за один раз?». Мы поступили так, чтобы укрепить им твое сердце, и разъяснили его самым прекрасным образом.

அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆன் முஹம்மதின் மீது சிறிது சிறிதாக இறக்கப்படாமல் ஒரேயடியாக இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? ” -தூதரே!- உம் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். விளங்குவதற்கும் மனனம் செய்வதற்கும் இலகுவாக அமைய வேண்டும் என்பதற்காகவே நாம் இதனை பகுதிபகுதியாக இறக்குகின்றோம்.

25:33Страница 363

وَلَا يَأۡتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئۡنَٰكَ بِٱلۡحَقِّ وَأَحۡسَنَ تَفۡسِيرًا ٣٣

Какую бы притчу они ни приводили тебе, Мы открывали тебе истину и наилучшее толкование.

தூதரே!- இணைவைப்பாளர்கள் உம்மிடம் எத்தகைய உதாரணத்தை கொண்டுவந்தாலும் நாம் அதற்கு சிறந்த சரியான பதிலையும் சிறந்த விளக்கத்தையும் கொண்டு வருவோம்.

25:34Страница 363

ٱلَّذِينَ يُحۡشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمۡ إِلَىٰ جَهَنَّمَ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ سَبِيلٗا ٣٤

Тем, которые будут собраны в Геенну ничком, уготовано наихудшее место, и они более других сбились с пути.

மறுமை நாளில் முகங்குப்புற நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுபவர்கள்தாம் மோசமான இடத்தைப் பெற்றவர்களாவர். ஏனெனில் நிச்சயமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும். மேலும் அவர்கள் சத்தியத்தை விட்டும் மிகத்தூரமான வழியில் உள்ளார்கள். ஏனெனில் அவர்களின் வழி நிராகரிப்பு, வழிகேடு ஆகியவற்றின் வழியாகும்.

25:35Страница 363

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ وَجَعَلۡنَا مَعَهُۥٓ أَخَاهُ هَٰرُونَ وَزِيرٗا ٣٥

Воистину, Мы даровали Мусе (Моисею) Писание и сделали его брата Харуна (Аарона) помощником ему.

நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அவருக்கு உதவியாளராக இருக்கும்பொருட்டு அவருடைய சகோதரர் ஹாரூனையும் தூதராக ஆக்கினோம்.

25:36Страница 363

فَقُلۡنَا ٱذۡهَبَآ إِلَى ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَدَمَّرۡنَٰهُمۡ تَدۡمِيرٗا ٣٦

Мы повелели: «Ступайте вдвоем к народу, который счел ложью Наши знамения». А потом Мы уничтожили его до основания.

நாம் அவர்கள் இருவரிடமும் கூறினோம்: “நம்முடைய சான்றுகளை பொய்ப்பித்த ஃபிர்அவ்னின் பக்கமும் அவனது சமூகத்தின் பக்கமும் செல்லுங்கள். நம்முடைய கட்டளையைச் செயல்படுத்துங்கள். தூதர்கள் இருவரும் அவர்களிடம் சென்று ஓரிறைக்கொள்கையின் பக்கம் அவர்களை அழைத்தார்கள். அவர்கள் இருவரையும் அவர்கள் பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.

25:37Страница 363

وَقَوۡمَ نُوحٖ لَّمَّا كَذَّبُواْ ٱلرُّسُلَ أَغۡرَقۡنَٰهُمۡ وَجَعَلۡنَٰهُمۡ لِلنَّاسِ ءَايَةٗۖ وَأَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمٗا ٣٧

Мы потопили народ Нуха (Ноя), когда они сочли лжецами посланников, и сделали их знамением для людей. Мы приготовили беззаконникам мучительные страдания.

நூஹின் சமூகம் அவரைப் புறக்கணித்து தூதர்களை பொய்ப்பித்த போது நாம் அவர்களை மூழ்கடித்து அழித்துவிட்டோம். அவர்களை அழித்ததை நாம் அநியாயக்காரர்களை அடியோடு அழிப்பதற்கு ஆற்றலுடையவர்கள் என்பதற்கான சான்றாக ஆக்கினோம். அநியாயக்காரர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தியுள்ளோம்.

25:38Страница 363

وَعَادٗا وَثَمُودَاْ وَأَصۡحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونَۢا بَيۡنَ ذَٰلِكَ كَثِيرٗا ٣٨

А также адитов, самудян, жителей Расса и многие поколения, которые были между ними.

நாம் ஹூத் உடைய மக்கள் ஆதையும், ஸாலிஹ் உடைய மக்கள் ஸமூதையும் கிணற்றுவாசிகளையும் அழித்துவிட்டோம். இந்த மூன்று சமூகத்துக்கு மத்தியில் பல சமூகங்களையும் நாம் அழித்துள்ளோம்.

25:39Страница 363

وَكُلّٗا ضَرَبۡنَا لَهُ ٱلۡأَمۡثَٰلَۖ وَكُلّٗا تَبَّرۡنَا تَتۡبِيرٗا ٣٩

Каждому из них Мы приводили притчи, и каждый из них Мы подвергли полному истреблению.

அழிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக முன்னர் வாழ்ந்த சமூகங்கள் அழிக்கப்பட்டதையும் அதன் காரணங்களையும் நாம் எடுத்துக் கூறினோம். ஒவ்வொரு சமூகத்தையும் அவர்களின் நிராகரிப்பினாலும் பிடிவாதத்தினாலும் அடியோடு அழித்துவிட்டோம்.

25:40Страница 363

وَلَقَدۡ أَتَوۡاْ عَلَى ٱلۡقَرۡيَةِ ٱلَّتِيٓ أُمۡطِرَتۡ مَطَرَ ٱلسَّوۡءِۚ أَفَلَمۡ يَكُونُواْ يَرَوۡنَهَاۚ بَلۡ كَانُواْ لَا يَرۡجُونَ نُشُورٗا ٤٠

Они уже проходили мимо селения, на которое выпал недобрый дождь. Разве они не видели его? О нет! Они не надеялись на то, что будут воскрешены.

உம் சமூகத்தைச் சேர்ந்த நிராகரிப்பாளர்கள் -ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும்- போது ஓரினச் சேர்க்கைக்கு தண்டனையாக அவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு கல்மழை பொழிவிக்கப்பட்டு அழிக்கப்பட்ட லூத்தின் சமூகம் வாழ்ந்த ஊரைக் கடந்து செல்கிறார்கள். அவர்கள் அந்த ஊரைப் பார்க்காமல் குருடாகிவிட்டார்களா என்ன? இல்லை, மாறாக அவர்கள் விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை எதிர்பார்க்காதவர்களாக உள்ளார்கள்.

25:41Страница 363

وَإِذَا رَأَوۡكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي بَعَثَ ٱللَّهُ رَسُولًا ٤١

Завидев тебя, они лишь насмехаются над тобой: «Неужели это - тот, кого Аллах отправил посланником?

தூதரே!- இந்த நிராகரிப்பாளர்கள் உம்மை சந்தித்தால், “இவரைத்தான் அல்லாஹ் எங்களிடம் தூதராக அனுப்பியுள்ளானா?” என்று கேலியாகவும், மறுத்தவர்களாகவும் கூறி உம்மைப் பரிகாசம் செய்கிறார்கள்.

25:42Страница 363

إِن كَادَ لَيُضِلُّنَا عَنۡ ءَالِهَتِنَا لَوۡلَآ أَن صَبَرۡنَا عَلَيۡهَاۚ وَسَوۡفَ يَعۡلَمُونَ حِينَ يَرَوۡنَ ٱلۡعَذَابَ مَنۡ أَضَلُّ سَبِيلًا ٤٢

Он готов был отвратить нас от наших богов, если бы мы не проявили терпение». Когда они увидят наказание, они узнают, кто больше других сбился с пути.

நாம் நம்முடைய கடவுள்களை வணங்குவதில் பொறுமையாக இல்லையெனில் அவற்றை விட்டும் இவர் நம்மை தனது ஆதாரங்களால் வழிகெடுத்திருப்பார் என்றும் கூறுகிறார்கள். மண்ணறையிலும் மறுமை நாளிலும் அவர்கள் வேதனையைக் கண்ணால் காணும்போது யார் வழிகெட்டவர்கள் அவர்களா? அல்லது அவரா? என்பதை அறிந்துகொள்வார்கள்.

25:43Страница 363

أَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيۡهِ وَكِيلًا ٤٣

Видел ли ты того, кто обожествил свою прихоть? Разве ты являешься его попечителем и хранителем?

தூதரே!- தன் மன இச்சையைக் தன் கடவுளாக்கி அதற்கு வழிபடுபவரை நீர் பார்த்தீரா? அவனை நிராகரிப்பை விட்டும் தடுத்து நம்பிக்கையின்பால் திருப்புவதற்கு நீர் அவனுக்குப் பொறுப்பாளரா என்ன?

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English