Аль-МухтасарАль‑Фуркан · 25:44–77

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Аль-Фуркан 25:44–77

25:44Страница 364

أَمۡ تَحۡسَبُ أَنَّ أَكۡثَرَهُمۡ يَسۡمَعُونَ أَوۡ يَعۡقِلُونَۚ إِنۡ هُمۡ إِلَّا كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّ سَبِيلًا ٤٤

Или ты полагаешь, что большинство их способны слышать или разуметь? Они - всего лишь подобие скотов, но они еще больше сбились с пути.

மாறாக -தூதரே!- ஏகத்துவத்தை ஏற்குமாறும், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுமாறும் நீர் அழைப்பவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்கிறார்கள் அல்லது ஆதாரங்களை விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் செவியேற்பதிலும் விளங்கிக் கொள்வதிலும் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக அவற்றை விடவும் வழிகெட்டவர்கள்.

25:45Страница 364

أَلَمۡ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيۡفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوۡ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنٗا ثُمَّ جَعَلۡنَا ٱلشَّمۡسَ عَلَيۡهِ دَلِيلٗا ٤٥

Разве ты не видишь, как твой Господь простирает тень? Если бы Он захотел, то сделал бы ее неподвижной. Затем Мы делаем солнце ее путеводителем

தூதரே!- அல்லாஹ் பூமியின் மீது நிழலை பரப்பும்போது அவனுடைய படைப்பின் அடையாளங்களை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை அசைவற்றதாக ஒரே நிலையில் அவ்வாறே ஆக்கி வைத்திருப்பான். பின்னர் நாம் சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கியுள்ளோம். நிழலை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது.

25:46Страница 364

ثُمَّ قَبَضۡنَٰهُ إِلَيۡنَا قَبۡضٗا يَسِيرٗا ٤٦

и затем постепенно сжимаем ее к Себе.

பின்னர் சூரியன் உயர்வதற்கேற்ப நாம் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கைப்பற்றிக் கொள்கின்றோம்.

25:47Страница 364

وَهُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِبَاسٗا وَٱلنَّوۡمَ سُبَاتٗا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورٗا ٤٧

Он - Тот, Кто сделал для вас ночь покровом, сон - отдыхом, а день - оживлением.

அல்லாஹ் உங்களுக்கு இரவை ஆடையைப் போன்று ஆக்கியுள்ளான். அது உங்களையும் பொருள்களையும் மறைக்கிறது. அவன் தூக்கத்தை உங்களது வேலைகளிலிருந்து உங்களுக்கு ஓய்வாகவும் பகலை உங்களது தொழில்களுக்குப் புறப்படும் நேரமாகவும் ஆக்கியுள்ளான்.

25:48Страница 364

وَهُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ طَهُورٗا ٤٨

Он - Тот, Кто посылает ветры с доброй вестью о Своей милости. Мы ниспосылаем с неба чистую и очищающую воду,

அவனே தன் அடியார்களின் மீது தனது அருளான மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியதாக காற்றுகளை அனுப்பி வைக்கிறான். நாம் வானத்திலிருந்து தூய்மையான மழை நீரை இறக்கினோம். அதனால் அவர்கள் சுத்தம் செய்கிறார்கள்.

25:49Страница 364

لِّنُحۡـِۧيَ بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗا وَنُسۡقِيَهُۥ مِمَّا خَلَقۡنَآ أَنۡعَٰمٗا وَأَنَاسِيَّ كَثِيرٗا ٤٩

чтобы оживить ею мертвую землю и напоить ею многочисленный скот и многих людей из тех, кого Мы сотворили.

இறக்கப்பட்ட அந்த மழை நீரைக் கொண்டு பயிரற்ற வறண்ட பூமியில் பலவகையான தாவரங்களை முளைக்கச் செய்கிறோம். மேலும் பச்சை பசேலென செழிக்கவும் செய்கிறோம். அந்த நீரைக் கொண்டு நாம் படைத்த கால்நடைகளுக்கும் ஏராளமான மனிதர்களுக்கும் நீர் புகட்டுகிறோம்.

25:50Страница 364

وَلَقَدۡ صَرَّفۡنَٰهُ بَيۡنَهُمۡ لِيَذَّكَّرُواْ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا ٥٠

Мы распределяем ее (дождевую воду) между ними, чтобы они помянули назидание, но большинство людей отказываются от всего, кроме неверия (или неблагодарности).

நாம் குர்ஆனில் அவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு பலவகையான ஆதாரங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை நிராகரித்தும், வெறுத்தும் மறுக்கிறார்கள்.

25:51Страница 364

وَلَوۡ شِئۡنَا لَبَعَثۡنَا فِي كُلِّ قَرۡيَةٖ نَّذِيرٗا ٥١

Если бы Мы пожелали, то послали бы в каждое селение предостерегающего увещевателя.

நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தூதரை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்யக்கூடியவராக அனுப்பியிருப்போம். ஆயினும் நாம் அதனை நாடவில்லை. நிச்சயமாக நாம் முஹம்மதை மனிதர்கள் அனைவருக்குமே தூதராக அனுப்பியுள்ளோம்.

25:52Страница 364

فَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَجَٰهِدۡهُم بِهِۦ جِهَادٗا كَبِيرٗا ٥٢

Посему не повинуйся неверующим и веди с ними посредством него (Корана) великую борьбу.

நிராகரிப்பாளர்கள் உம்மிடம் வேண்டும் மார்க்கத்தை விட்டுக் கொடுத்தலுக்கும் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படியாதீர். இந்த இறக்கப்பட்ட குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் கடுமையாகப் போராடுவீராக. அல்லாஹ்வின்பால் அழைப்பதில் அவர்களால் ஏற்படும் தொல்லைகளையும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக.

25:53Страница 364

۞ وَهُوَ ٱلَّذِي مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞ وَجَعَلَ بَيۡنَهُمَا بَرۡزَخٗا وَحِجۡرٗا مَّحۡجُورٗا ٥٣

Он - Тот, Кто смешал два моря (вида воды): одно - приятное, пресное, а другое - соленое, горькое. Он установил между ними преграду и непреодолимое препятствие.

அல்லாஹ்வே இரண்டு கடல் நீரையும் ஒன்றிணைத்தான். சுவையானதை உப்பு நீரோடு கலந்தான். அவையிரண்டும் கலக்காமல் இருப்பதற்காக இரண்டிற்குமிடையே ஒரு திரையையும் தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளான்.

25:54Страница 364

وَهُوَ ٱلَّذِي خَلَقَ مِنَ ٱلۡمَآءِ بَشَرٗا فَجَعَلَهُۥ نَسَبٗا وَصِهۡرٗاۗ وَكَانَ رَبُّكَ قَدِيرٗا ٥٤

Он - Тот, Кто сотворил человека из воды и одарил его родственниками и свойственниками. Господь твой - Всемогущий.

அவனே ஆண் மற்றும் பெண்ணின் விந்திலிருந்து மனிதனைப் படைத்தான். மனிதப் படைப்பில் இரத்த உறவுகளையும் திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். -தூதரே!- உம் இறைவன் பேராற்றல் உடையவன். எதுவும் அவனுக்கு முடியாதது அல்ல. ஆண் மற்றும் பெண்ணின் விந்திலிருந்து அவன் மனிதனைப் படைத்ததும் அவனுடைய ஆற்றலில் உள்ளடங்கியவைதான்.

25:55Страница 364

وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمۡ وَلَا يَضُرُّهُمۡۗ وَكَانَ ٱلۡكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرٗا ٥٥

Они поклоняются помимо Аллаха тому, что не может ни принести им пользу, ни причинить им вред. Неверующий является помощником против своего Господа.

வழிப்பட்டால் பலனளிக்கவோ, மாறு செய்தால் தீங்களிக்கவோ சக்தியற்ற அல்லாஹ் அல்லாத சிலைகளை நிராகரிப்பாளர்கள் வணங்குகிறார்கள். அல்லாஹ்வுக்கு கோபம் ஏற்படுத்துவதில் நிராகரிப்பாளன் ஷைத்தானைப் பின்பற்றக்கூடியவனாக இருக்கின்றான்.

25:56Страница 365

وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا مُبَشِّرٗا وَنَذِيرٗا ٥٦

Мы отправили тебя всего лишь добрым вестником и предостерегающим увещевателем.

தூதரே!- அல்லாஹ்வை வழிப்பட்டு நம்பிக்கைகொண்டு நற்செயல் புரியக்கூடியவர்களுக்கு நற்செய்திகூறக்கூடியவராகவும் நிராகரிப்பு மற்றும் பாவங்களின் மூலம் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியவராகவுமே நாம் உம்மை அனுப்பியுள்ளோம்.

25:57Страница 365

قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ٥٧

Скажи: «Я не прошу у вас за это никакого вознаграждения, кроме того, чтобы желающие встали на путь к своему Господу».

தூதரே!- நீர் கூறுவீராக: “நான் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும் உங்களில் செலவு செய்து அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புபவர்கள் செய்துகொள்ளட்டும்.”

25:58Страница 365

وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا يَمُوتُ وَسَبِّحۡ بِحَمۡدِهِۦۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا ٥٨

Уповай на Живого, Который не умирает, и прославляй Его хвалой. Довольно того, что Он ведает о грехах Своих рабов.

தூதரே!- உம்முடைய எல்லா விவகாரங்களிலும் நித்திய ஜீவனும் என்றும் நிலைத்திருப்பவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிவதற்குப் போதுமானவன். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

25:59Страница 365

ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ ٱلرَّحۡمَٰنُ فَسۡـَٔلۡ بِهِۦ خَبِيرٗا ٥٩

Он сотворил небеса и землю и то, что между ними, за шесть дней, а потом вознесся на Трон (или утвердился на Троне). Он - Милостивый. Спрашивай об этом Ведающего.

அவனே வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். அவன் அளவிலாக் கருணையாளன்.-தூதரே!- நன்கு அறிந்தவனிடம் அதனைக் கேட்பீராக. அவன்தான் ஒவ்வொரு பொருளையும் அறிந்த அல்லாஹ். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

25:60Страница 365

وَإِذَا قِيلَ لَهُمُ ٱسۡجُدُواْۤ لِلرَّحۡمَٰنِ قَالُواْ وَمَا ٱلرَّحۡمَٰنُ أَنَسۡجُدُ لِمَا تَأۡمُرُنَا وَزَادَهُمۡ نُفُورٗا۩ ٦٠

Когда им говорят: «Падайте ниц перед Милостивым!». - они говорят: «Что такое Милостивый? Неужели мы будем падать ниц перед тем, кому ты нам приказываешь?». Это приумножает их отвращение.

“அளவிலாக் கருணையாளனுக்குச் சிரம்பணியுங்கள்” என்று நிராகரிப்பாளர்களிடம் கூறப்பட்டால், “நாங்கள் அளவிலாக் கருணையாளனுக்குச் சிரம்பணிய மாட்டோம். அளவிலாக் கருணையாளன் என்றால் யார்? நாங்கள் அவனை அறிய மாட்டோம், அவனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். நீர் கூறுபவருக்கெல்லாம் எமக்குத் தெரியாவிட்டாலும் நாங்கள் சிரம்பணிய வேண்டுமா என்ன?” என்று கேட்கிறார்கள். சிரம்பணியுமாறு அவன் அவர்களுக்கு கட்டளையிட்டமை அவர்களை அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதை விட்டும் மென்மேலும் அப்புறப்படுத்திவிட்டது.

25:61Страница 365

تَبَارَكَ ٱلَّذِي جَعَلَ فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَجَعَلَ فِيهَا سِرَٰجٗا وَقَمَرٗا مُّنِيرٗا ٦١

Благословен Тот, Кто установил на небе созвездия Зодиака и установил на нем светильник и освещающую луну.

அவன் பெரும் பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நகரும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நிலைகளை ஏற்படுத்தினான். ஒளிரும் சூரியனையும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பைப் பெற்று பூமியை ஒளிரச் செய்யும் சந்திரனையும் வானில் ஏற்படுத்தினான்.

25:62Страница 365

وَهُوَ ٱلَّذِي جَعَلَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ خِلۡفَةٗ لِّمَنۡ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوۡ أَرَادَ شُكُورٗا ٦٢

Он - Тот, Кто чередует ночь и день для тех, кто желает помнить и благодарить.

அல்லாஹ்வே இரவையும் பகலையும் ஒன்றன்பின் ஒன்றாக வரக்கூடியதாக ஆக்கியுள்ளான். அது அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு படிப்பினை பெற்று நேர்வழியடையவும் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தவும் விரும்புவர்களுக்காகத்தான்.

25:63Страница 365

وَعِبَادُ ٱلرَّحۡمَٰنِ ٱلَّذِينَ يَمۡشُونَ عَلَى ٱلۡأَرۡضِ هَوۡنٗا وَإِذَا خَاطَبَهُمُ ٱلۡجَٰهِلُونَ قَالُواْ سَلَٰمٗا ٦٣

А рабами Милостивого являются те, которые ступают по земле смиренно, а когда невежды обращаются к ним, они говорят: «Мир!»

நம்பிக்கைகொண்ட அளவிலாக் கருணையாளனின் அடியார்கள் பூமியில் கண்ணியமாகவும் பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களுடன் உரையாடினால் அவர்களைப் போன்று எதிர்கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களுடன் அறியாமையுடன் நடந்துகொள்ளாமல் நல்ல வார்த்தையைக் கூறுவார்கள்.

25:64Страница 365

وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمۡ سُجَّدٗا وَقِيَٰمٗا ٦٤

Они проводят ночи, падая ниц и стоя перед своим Господом.

அவர்கள் தங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாவும் அல்லாஹ்வுக்ககாக நின்று தொழுதவர்களாவும் இரவுகளை கழிப்பார்கள்.

25:65Страница 365

وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ٦٥

Они говорят: «Господь наш! Отврати от нас мучения в Геенне, поскольку мучения там не отступают.

அவர்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றுவாயாக. நிச்சயமாக நரக வேதனை நிராகரித்த நிலையில் மரணித்தவர்களோடு நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளக்கூடியது.

25:66Страница 365

إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ٦٦

Как скверны эта обитель и местопребывание!».

நிச்சயமாக அதில் தங்குவோருக்கு அது மோசமான இருப்பிடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கின்றது.

25:67Страница 365

وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا ٦٧

Когда они делают пожертвования, то не излишествуют и не скупятся, а придерживаются середины между этими крайностями.

அவர்கள் தங்களின் செல்வங்களைச் செலவழித்தால் வீண்விரயம் செய்யும் அளவுக்கு செல்லமாட்டார்கள். செலவளிப்பது கடமையான தனக்கும் ஏனையோருக்கும் செலவளிப்பதில் கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அவர்களின் செலவு அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நடுநிலையானதாக அமையும்.

25:68Страница 366

وَٱلَّذِينَ لَا يَدۡعُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ وَلَا يَقۡتُلُونَ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّ وَلَا يَزۡنُونَۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ يَلۡقَ أَثَامٗا ٦٨

Они не взывают помимо Аллаха к другим богам, не убивают людей вопреки запрету Аллаха, если только они не имеют права на это, и не прелюбодействуют. А тот, кто поступает так, получит наказание.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை வணங்க மாட்டார்கள். அவன் தடைசெய்த உயிரை அநியாயமாகக் கொல்ல மாட்டார்கள். ஆனால் கொலைகாரன், மதம் மாறியவன், திருமணமான பின் விபச்சாரத்தில் ஈடுபட்டவன் ஆகிய அல்லாஹ் கொலைசெய்யுமாறு அனுமதித்தோரைத் தவிர. மேலும் விபச்சாரம் புரிய மாட்டார்கள். இந்த பெரும் பாவங்களை யார் புரிவாரோ அவர் மறுமை நாளில் தான் செய்த பாவத்திற்கான தண்டனையைப் பெறுவார்.

25:69Страница 366

يُضَٰعَفۡ لَهُ ٱلۡعَذَابُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَيَخۡلُدۡ فِيهِۦ مُهَانًا ٦٩

Его мучения будут приумножены в День воскресения, и он навечно останется в них униженным.

மறுமை நாளில் அவனுக்குப் பன்மடங்கு வேதனையளிக்கப்படும். அவன் இழிவடைந்தவனாக நிரந்தரமாக வேதனையில் வீழ்ந்துகிடப்பான்.

25:70Страница 366

إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلٗا صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمۡ حَسَنَٰتٖۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ٧٠

Это не относится к тем, которые раскаялись, уверовали и поступали праведно. Их злые деяния Аллах заменит добрыми, ибо Аллах - Прощающий, Милосердный.

ஆயினும் யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி நம்பிக்கை கொண்டு பாவமன்னிப்பை உண்மைப்படுத்தும் விதமாக நற்செயல் புரிகிறாரோ அவர்கள் செய்த தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிடுவான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

25:71Страница 366

وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحٗا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابٗا ٧١

Кто раскаивается и поступает праведно, тот действительно возвращается к Аллаху.

யார் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி அதனை உண்மைப்படுத்தும் விதத்தில் அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகுகிறார்களோ நிச்சயமாக அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பாவமன்னிப்பு கோரிக்கையாகும்.

25:72Страница 366

وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّواْ بِٱللَّغۡوِ مَرُّواْ كِرَامٗا ٧٢

Они не свидетельствуют лживо (или не присутствуют при лживых разговорах), а когда проходят мимо праздного, то проходят с достоинством.

அவர்கள் பாவம் நடைபெறும் இடங்கள், தடைசெய்யப்பட்ட கேளிக்கைகள் போன்ற கெட்டவைகளுக்கு செல்ல மாட்டார்கள். வீணான வார்த்தைகள், செயற்பாடுகள் ஆகியவற்றைக் கடந்துசெல்ல நேரிட்டால் அதில் கலந்துகொள்ளாமல் தூய்மையாக அவற்றைக் கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

25:73Страница 366

وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا ٧٣

Когда им напоминают о знамениях их Господа, они не падают на них глухими и слепыми.

அவர்களிடம் செவியேற்கக்கூடிய, பார்க்கக்கூடிய அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு நினைவூட்டப்பட்டால் அவற்றைச் செவியேற்காத காது செவிடர்களாகவும் காணாத குருடர்களாகவும் இருக்க மாட்டார்கள்.

25:74Страница 366

وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا ٧٤

Они говорят: «Господь наш! Даруй нам отраду глаз в наших супругах и потомках и сделай нас образцом для богобоязненных».

அவர்கள் தங்கள் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியர்கள் மற்றும் குழந்தைகள் மூலம், தனது இறையச்சம் சத்தியத்தில் உறுதி ஆகியவற்றினால், எங்களுக்கு கண்குளிர்ச்சியை தந்தருள்வாயாக. எங்களை இறையச்சமுடையோருக்கு முன்னுதாரணமான சத்தியத்தின் தலைவர்களாக ஆக்குவாயாக.

25:75Страница 366

أُوْلَٰٓئِكَ يُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُواْ وَيُلَقَّوۡنَ فِيهَا تَحِيَّةٗ وَسَلَٰمًا ٧٥

Они получат Наивысшее место в воздаяние за то, что были терпеливы, и их встретят там приветствием и миром.

இந்த பண்புகளை உடையவர்கள் பொறுமையாக இருந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டதனால் உன்னதமான சுவனத்தில் உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌசில் உயர்ந்த அறைகளைப் பெறுவார்கள். வானவர்கள் அவர்களை வாழ்த்து, சலாம் கூறி வரவேற்பார்கள். அவர்கள் அனைத்து வகையான தீங்குகளிலிருந்தும் பாதுகாவல் பெறுவார்கள்.

25:76Страница 366

خَٰلِدِينَ فِيهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرّٗا وَمُقَامٗا ٧٦

Они пребудут там вечно. Как прекрасна эта обитель и местопребывание!

அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் சிறந்த தங்குமிடத்தையும் இருப்பிடத்தையும் பெற்றிருப்பார்கள்.

25:77Страница 366

قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا ٧٧

Скажи: «Мой Господь не стал бы обращать на вас внимание, если бы не ваши молитвы. Вы сочли это ложью, и скоро оно (наказание) станет неотступным».

தூதரே!- நிராகரிப்பில் பிடிவாதமாக இருக்கும் நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் உங்கள் வழிபாட்டினால் தனக்கு பயன் கிடைக்கிறது என்பதற்காக உங்களைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையினாலும் வணக்கத்தினாலும் அவனை அழைக்கும் அடியார்கள் இல்லையெனில் அவன் உங்களைப் பொருட்படுத்தியிருக்கமாட்டான். நீங்கள் தூதரை அவர் தன் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததில் பொய்பித்து விட்டீர்கள். பொய்ப்பித்ததற்கான கூலி உங்களுடனே இருக்கும்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English