Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аш-Шуара 26:64–133
ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் நாம் நெருக்கமாகக் கொண்டுவந்தோம். செல்லமுடியுமான பாதை என்ற எண்ணத்தில் அவர்கள் கடலில் புகுந்தனர்.
26:65Страница 370
وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ ٦٥
Мы спасли Мусу (Моисея) и тех, кто был с ним,
மூஸாவையும் அவருடன் இருந்த இஸ்ராயீலின் மக்களையும் நாம் காப்பாற்றினோம். அவர்களில் யாரும் அழியவில்லை.
பின்னர் ஃபிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் கடலில் மூழ்கடித்து அழித்துவிட்டோம்.
26:67Страница 370
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ٦٧
Воистину, в этом - знамение, но большинство их не стали верующими.
நிச்சயமாக மூஸாவுக்காக கடல் பிளந்து அவர் தப்பியதிலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அழிக்கப்பட்டதிலும் மூஸாவின் நம்பகத்தன்மைக்கான சான்று இருக்கின்றது. ஆயினும் ஃபிர்அவ்னுடன் இருந்தவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாய் இருக்கவில்லை.
26:68Страница 370
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٦٨
Воистину, твой Господь - Могущественный, Милосердный.
தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களுடன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
தூதரே!- அவர்களுக்கு இப்ராஹீமின் சம்பவத்தை எடுத்துரைப்பீராக.
26:70Страница 370
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ٧٠
Вот он сказал своему отцу и своему народу: «Чему вы поклоняетесь?».
அவர் தம் தந்தை ஆசரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?”
26:71Страница 370
قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ ٧١
Они сказали: «Мы поклоняемся идолам и постоянно предаемся им».
அவரது சமூகத்தார் அவருக்கு கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் தொடர்ந்தும் நிலைத்திருப்போம்.”
26:72Страница 370
قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ ٧٢
Он сказал: «Слышат ли они, когда вы взываете к ним?
இப்ராஹீம் அவர்களிடம் கேட்டார்: “நீங்கள் உங்கள் சிலைகளை அழைக்கும்போது உங்களின் அழைப்பை அவை செவியேற்கின்றனவா?
26:73Страница 370
أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ ٧٣
Помогают ли они вам? И причиняют ли они вред?».
அல்லது நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால் அவை உங்களுக்குப் பலனளிக்கின்றனவா? அல்லது மாறுசெய்தால் தீங்கிழைக்கின்றனவா?
26:74Страница 370
قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ ٧٤
Они сказали: «Но мы видели, что наши отцы поступали таким образом».
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அவற்றை அழைத்தால் அவை எங்களின் அழைப்பை செவியுறாது. அவற்றிற்குக் கட்டுப்பட்டால் எங்களுக்குப் பலனளிக்காது; மாறுசெய்தால் தீங்கிழைக்காது. மாறாக எங்களின் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம்.”
26:75Страница 370
قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ ٧٥
Он сказал: «Видели ли вы, чему поклоняетесь
இப்ராஹீம் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?
உங்கள் முன்னோர்களான உங்களின் தந்தைகள் வணங்கியவற்றையும் (குறித்து நீங்கள் சிந்தித்தீர்களா?)
26:77Страница 370
فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ ٧٧
Все они - враги мои, кроме Господа миров,
நிச்சயமாக அவையனைத்தும் எனக்கு எதிரிகள். ஏனெனில் நிச்சயமாக படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யானவை.
அவனே என்னைப் படைத்தான். இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மையின்பால் அவனே எனக்கு வழிகாட்டுவான்.
எனக்குப் பசியெடுத்தால் அவனே எனக்கு உணவளிக்கிறான். நான் தாகித்தால் அவனே எனக்கு நீர் புகட்டுகிறான்.
நான் நோய்வாய்ப்பட்டால் அவனே எனக்குக் குணமளிக்கிறான். அவனைத் தவிர என்னைக் குணப்படுத்தும் எவரும் இல்லை.
என் தவணை நிறைவடைந்தால் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். நான் மரணித்த பிறகு அவனே எனக்கு உயிரளிப்பான்.
26:82Страница 370
وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ ٨٢
Который, я надеюсь, простит мой грех в День воздаяния.
கூலிகொடுக்கப்படும் நாளில் அவனே என் பாவங்களை மன்னிப்பான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்.
26:83Страница 370
رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ٨٣
Господи! Даруй мне власть (пророчество или знание) и воссоедини меня с праведниками!
இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! எனக்கு மார்க்கத்தில் ஞானத்தை வழங்குவாயாக. என்னை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து எனக்கு முன் சென்ற நல்லவர்களான நபிமார்களுடன் சேர்த்தருள்வாயாக.”
26:84Страница 371
وَٱجۡعَل لِّي لِسَانَ صِدۡقٖ فِي ٱلۡأٓخِرِينَ ٨٤
Оставь обо мне правдивую молву в последующих поколениях!
எனக்குப் பிறகு வரும் தலைமுறைகளிடம் எனக்கு நற்பெயரை, அழகிய புகழை ஏற்படுத்துவாயாக.
26:85Страница 371
وَٱجۡعَلۡنِي مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ ٨٥
Сделай меня одним из наследников Сада блаженства!
நம்பிக்கை மிக்க உன் அடியார்கள் இன்பம் பெறும் சுவனத்தின் அந்தஸ்த்தை பெறக்கூடியவர்களில் என்னையும் ஆக்குவாயாக. அங்கு என்னை வசிக்கச் செய்வாயாக.
26:86Страница 371
وَٱغۡفِرۡ لِأَبِيٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ ٨٦
Прости моего отца, ибо он был одним из заблудших!
என் தந்தையை மன்னித்துவிடுவாயாக. நிச்சயமாக அவர் இணைவைத்து சத்தியத்தைவிட்டும் வழிகெட்டவர்களில் ஒருவராக இருக்கின்றார். இந்தப் பிரார்த்தனை இப்ராஹிம் தம் தந்தை நரகவாசிகளில் ஒருவர் என்பதை அறிவதற்கு முன்னர் செய்ததாகும். தம் தந்தை நரகவாசி என்பதை அறிந்த பின்னர் அவர் தம் தந்தையை விட்டும் நீங்கிவிட்டார், அவருக்காக பிரார்த்தனை செய்யவில்லை.
மக்கள் விசாரணைக்காக எழுப்படும் மறுமை நாளில் என்னை வேதனையால் இழிவுபடுத்திவிடாதே.
26:88Страница 371
يَوۡمَ لَا يَنفَعُ مَالٞ وَلَا بَنُونَ ٨٨
в тот день, когда ни богатство, ни сыновья не принесут пользы никому,
உலகில் மனிதன் சேகரித்த செல்வங்களோ அவனுக்கு உதவியாக இருந்த பிள்ளைகளோ அந்த நாளில் அவனுக்குப் பயனளிக்காது.
26:89Страница 371
إِلَّا مَنۡ أَتَى ٱللَّهَ بِقَلۡبٖ سَلِيمٖ ٨٩
кроме тех, которые предстанут перед Аллахом с непорочным сердцем».
ஆயினும் இணைவைப்பு, நயவஞ்சகம், முகஸ்துதி, தற்பெருமை ஆகியவை இன்றி தூய்மையான உள்ளத்துடன் அவனிடம் வந்தவர்களைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவன் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்த செல்வங்களைக் கொண்டு அவனுக்காக பிரார்த்தனை செய்யும் பிள்ளைகளைக் கொண்டு பயனடைவான்.
தங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்காக சுவனம் அருகில் கொண்டு வரப்படும்.
மஹ்ஷர் பெருவெளியில் சத்திய மார்க்கத்தை விட்டும் தடம்புரண்ட வழிகேடர்களுக்காக நரகம் வெளிப்படுத்தப்படும்.
26:92Страница 371
وَقِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تَعۡبُدُونَ ٩٢
Им скажут: «Где же те, кому вы поклонялись
அவர்களைக் கண்டிக்கும் விதமாக கேட்கப்படும்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கிக்கொண்டிருந்த சிலைகளெல்லாம் எங்கே?
26:93Страница 371
مِن دُونِ ٱللَّهِ هَلۡ يَنصُرُونَكُمۡ أَوۡ يَنتَصِرُونَ ٩٣
наряду с Аллахом? Помогут ли они вам и помогут ли они себе?».
அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்குபவை அல்லாஹ்வின் வேதனையைவிட்டும் உங்களைத் தடுத்து உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது அவை தங்களுக்காவது உதவி செய்யுமா?”
26:94Страница 371
فَكُبۡكِبُواْ فِيهَا هُمۡ وَٱلۡغَاوُۥنَ ٩٤
Они будут брошены туда вместе с заблудшими,
அவர்களும் அவர்களை வழிகெடுத்தவர்களும் சிலருக்கு மேல் சிலர் நரகத்தில் எறியப்படுவார்கள்.
இப்லீஸின் உதவியாளர்களான ஷைத்தான்கள் என அவர்கள் அனைவரும் (எரியப்படுவார்கள்). அவர்களில் எவருக்கும் விதிவிலக்கில்லை.
அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களை வணங்கி, அவர்களை இணைகளாக ஏற்படுத்திய இணைவைப்பாளர்கள் தம்மால் வணங்கப்பட்டவர்களுடன் தர்க்கித்தவர்களாக கூறுவார்கள்:
26:97Страница 371
تَٱللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ٩٧
«Клянемся Аллахом, мы пребывали в очевидном заблуждении,
அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் சத்தியத்தை விட்டு தெளிவான வழிகேட்டில் இருந்தோம்.
அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகளைப் போல் உங்களை ஆக்கி அவனை வணங்குவது போன்று உங்களை வணங்கிவிட்டோம்.
26:99Страница 371
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلۡمُجۡرِمُونَ ٩٩
Только грешники ввели нас в заблуждение,
அல்லாஹ்வை விடுத்து தங்களை வணங்கும்படி அழைத்த குற்றவாளிகள்தாம் எங்களை சத்தியப் பாதையை விட்டும் வழிதவறச் செய்தார்கள்.
அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக அவனிடம் பரிந்து பேசுபவர்கள் யாரும் இல்லை.
எங்களைப் பாதுகாத்து எமக்காக பரிந்துரை செய்யக்கூடிய தூய அன்புள்ள எந்த நண்பனும் எங்களுக்கு இல்லை.
26:102Страница 371
فَلَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ١٠٢
Если бы у нас была возможность вернуться, то мы стали бы верующими!».
நிச்சயமாக நாங்கள் மீண்டும் உலக வாழ்க்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களாக ஆகிவிடுவோம்.
26:103Страница 371
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٠٣
Воистину, в этом - знамение, но большинство их не стали верующими.
நிச்சயமாக மேற்கூறப்பட்ட இப்ராஹீமின் சம்பவத்திலும் பொய்ப்பித்தவர்களின் முடிவிலும் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை.
26:104Страница 371
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٠٤
Воистину, твой Господь - Могущественный, Милосердный.
தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
26:105Страница 371
كَذَّبَتۡ قَوۡمُ نُوحٍ ٱلۡمُرۡسَلِينَ ١٠٥
Народ Нуха (Ноя) счел лжецами посланников.
நூஹின் சமூகத்தினர் அவரை நிராகரித்தபோது தூதர்களையும் நிராகரித்தார்கள்.
26:106Страница 371
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ نُوحٌ أَلَا تَتَّقُونَ ١٠٦
Вот их брат Нух (Ной) сказал им: «Неужели вы не устрашитесь?
அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா?
நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியின் மூலம் அறிவிப்பதை கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:109Страница 371
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٠٩
Я не прошу у вас за это вознаграждения, ибо вознаградит меня только Господь миров.
நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத வேறு எவரிடமும் இல்லை.
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:111Страница 371
۞ قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ ١١١
Они сказали: «Неужели мы поверим тебе, если за тобой последовали самые жалкие люди?».
அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: -“நூஹே!- தலைவர்களோ மரியாதைக்குரியவர்களோ உம்மைப் பின்பற்றாமல் தாழ்ந்த மக்களே உம்மைத் தொடர்வோராக இருக்கும் நிலையில் நாங்கள் உம்மீது நம்பிக்கைகொண்டு நீர் கொண்டுவந்ததைப் பின்பற்றி செயல்படுவதா?
26:112Страница 372
قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١١٢
Он сказал: «Не мне знать о том, что они совершают.
நூஹ் அவர்களிடம் கூறினார்: “இந்த நம்பிக்கையாளர்கள் செய்து கொண்டிருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவர்களின் செயல்களைக் கணக்கிடும் கண்காணிப்பாளன் அல்ல.
26:113Страница 372
إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ ١١٣
Только мой Господь предъявит им счет, если бы вы только понимали.
அவர்கள் இரகசியமாகச் செய்வதையும் வெளிப்படையாகச் செய்வதையும் அறிந்த அல்லாஹ்விடமே அவர்களின் கேள்விகணக்கு உள்ளது. என்னிடமல்ல. நீங்கள் கூறியதை நீங்கள் உணர்ந்திருந்தால் கூறியிருக்கமாட்டீர்கள்.
நான் உங்களின் வேண்டுகோளுக்கிணங்க நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பதற்காக நம்பிக்கையாளர்களை என் சபையைவிட்டும் விரட்டமாட்டேன்.
26:115Страница 372
إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ ١١٥
Я - всего лишь предостерегающий и разъясняющий увещеватель».
நான் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து தெளிவாக எச்சரிப்பவன்தான்.
26:116Страница 372
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ ١١٦
Они сказали: «О Нух (Ной)! Если ты не прекратишь, то непременно окажешься одним из тех, кого побили камнями».
அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நீர் எங்களை அழைக்கும் விடயத்தை விட்டும் நிறுத்திக்கொள்ளவில்லையென்றால் நீர் ஏசப்படுவதோடு கல்லெறிந்து கொல்லப்படுபவராக இருப்பீர்.”
26:117Страница 372
قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ ١١٧
Он сказал: «Господи! Мой народ счел меня лжецом.
நூஹ் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “என் இறைவா! நிச்சயமாக என் சமூகம் என்னை பொய்ப்பித்து உன்னிடமிருந்து நான் கொண்டுவந்ததில் என்னை உண்மைப்படுத்தவில்லை.
26:118Страница 372
فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ١١٨
Рассуди же нас окончательно и спаси меня и тех верующих, которые со мной».
எனவே அசத்தியத்தில் பிடிவாதமாக இருப்பதனால் அவர்களை அழித்து எனக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிப்பாயாக. என்னையும் என்னுடன் நம்பிக்கைகொண்டவர்களையும் நீ நிராகரிப்பாளர்களுக்கு அளிக்கும் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக.
26:119Страница 372
فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ١١٩
Мы спасли его и тех, кто был с ним, в переполненном ковчеге,
நாம் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்து அவரையும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களையும் மனிதர்களாலும் உயிரினங்களாலும் நிரப்பப்பட்ட கப்பலில் ஏற்றி காப்பாற்றினோம்.
பின்னர் அவர்களுக்குப் பிறகு மற்றவர்களை மூழ்கடித்துவிட்டோம். அவர்கள்தான் நூஹின் கூட்டத்தினர்.
26:121Страница 372
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٢١
Воистину, в этом - знамение, но большинство их не стали верующими.
நிச்சயமாக மேற்கூறப்பட்ட நூஹ் மற்றும் அவரது சமூகத்தின் சம்பவத்திலும் நாம் அவரையும் அவருடன் நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றி அவரின் சமூகத்தில் காணப்பட்ட நிராகரிப்பாளர்களை அழித்ததிலும் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.
26:122Страница 372
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٢٢
Воистину, твой Господь - Могущественный, Милосердный.
தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
ஆத் சமூகம் தங்களின் தூதர் ஹூதை பொய்ப்பித்து போது (ஏனைய) தூதர்களையும் பொய்ப்பித்தனர்.
26:124Страница 372
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ ١٢٤
Вот их брат Худ сказал им: «Неужели вы не устрашитесь?
அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹூத் அவர்களிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூறுங்கள்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா?
நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எடுத்துரைக்குமாறு எனக்கு கட்டளையிட்டதை கூட்டவோ, குறைக்கவோ மாட்டேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:127Страница 372
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٢٧
Я не прошу у вас за это вознаграждения, ибо вознаградит меня только Господь миров.
நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத ஏனையவர்களிடத்தில் அல்ல.
26:128Страница 372
أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ ١٢٨
Неужели вы будете понапрасну возводить на каждом холме по примете (по высокому строению),
உயரமான இடங்களில் எல்லாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பயன்தராத பெரும் கட்டங்களை வீணாக எழுப்புகிறீர்களா?
26:129Страница 372
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ ١٢٩
строить замки (или водохранилища), словно вы будете жить вечно,
நீங்கள் இவ்வுலகை விட்டுச்செல்லாமல் நிரந்தரமாக வாழ்பவர்களைப் போல கோட்டைகளையும் மாளிகைகளையும் நிர்மாணிக்கிறீர்களா?
26:130Страница 372
وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ ١٣٠
и хватать людей, подобно деспотичным тиранам?
நீங்கள் யாரையேனும் கொலை செய்தால் அல்லது தாக்கினால் இரக்கமின்றி கொடுங்கோலர்களாக தாக்குகிறீர்கள்?
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:132Страница 372
وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ ١٣٢
Бойтесь Того, Кто помог вам тем, что вам известно.
நீங்கள் அறிந்துள்ள தனது அருள்களை உங்களுக்கு வழங்கிய அல்லாஹ்வின் கோபத்திற்கு அஞ்சுங்கள்.
அவன் உங்களுக்கு கால்நடைகளையும் பிள்ளைகளையும் வழங்கியுள்ளான்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии