Аль-Мухтасар · Тафсир · на тамильском
Аш-Шуара 26:134–200
தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் வழங்கியுள்ளான்.
26:135Страница 372
إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ١٣٥
Я боюсь того, что вас постигнут мучения в Великий день».
என் சமூகமே!- நிச்சயமாக நான் உங்களின் மீது மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.
26:136Страница 372
قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ ١٣٦
Они сказали: «Нам все равно, будешь ты увещевать или же не будешь в числе тех, которые увещевают.
அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “எங்களுக்கு நீர் அறிவுரை கூறுவதும் கூறாமல் இருப்பதும் ஒன்றுதான். நாங்கள் உம்மீது நம்பிக்கைகொள்ள மாட்டோம். நாங்கள் இப்போது இருப்பதை விட்டு ஒருபோதும் திரும்பிவிட மாட்டோம்.
26:137Страница 373
إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ ١٣٧
Это - всего лишь обычаи (или измышления) первых поколений,
இவை முன்னோர்களின் மார்க்கமும் வழமைகளும் குணங்களுமாகும்.
நாங்கள் தண்டிக்கப்படுபவர்களல்ல.
26:139Страница 373
فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٣٩
Они сочли его лжецом, а Мы погубили их. Воистину, в этом - знамение, но большинство их не стали верующими.
அவர்கள் தங்களின் தூதர் ஹூதை தொடர்ந்து பொய்ப்பித்தார்கள். எனவே நாம் அவர்களை நாசகரமான காற்றால் அழித்தோம். நிச்சயமாக இவ்வாறு அழிக்கப்பட்டதில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.
26:140Страница 373
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٤٠
Воистину, твой Господь - Могущественный, Милосердный.
தூதரே!- தன் எதிரிகளைத் தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
ஸமூத் சமூகமும் தங்களின் தூதர் ஸாலிஹை பொய்ப்பித்து தூதர்களை பொய்ப்பித்தனர்.
26:142Страница 373
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ ١٤٢
Вот их брат Салих сказал им: «Неужели вы не устрашитесь?
அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிட்டு அவனை அஞ்சமாட்டீர்களா?
நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:145Страница 373
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٤٥
Я не прошу у вас за это вознаграждения, ибо вознаградит меня только Господь миров.
நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத ஏனையவர்களிடமல்ல.
26:146Страница 373
أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ ١٤٦
Неужели вы будете оставлены в безопасности среди того, что есть здесь,
நீங்கள் இருக்கும் நன்மைகளிலும், அருட்கொடைகளிலும் உண்டு பயப்படாமல் அமைதியாக விடப்படுவதை எதிர்பார்க்கின்றீர்களா?
தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும்
26:148Страница 373
وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ ١٤٨
среди посевов и финиковых пальм с нежными плодами,
விளைநிலங்களிலும் மிருதுவான நல்ல பழங்களைக்கொண்ட பேரீச்சந்தோப்புகளிலும் (அச்சமின்றி அமைதியாக வாழ விட்டுவிடப்படுவீர்களா?)
26:149Страница 373
وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ ١٤٩
и будете искусно (или горделиво) высекать в горах жилища?
நீங்கள் மலைகளை குடைந்து நீங்கள் வசிப்பதற்கான வீடுகளை அமைக்கிறீர்கள். நீங்கள் அவற்றைக் குடையும் திறமையுடையவர்களாக இருக்கிறீர்கள்.
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவுபவற்றிலும் தடுப்பவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:151Страница 373
وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ ١٥١
и не слушайтесь повелений тех, кто излишествует,
பாவங்கள் புரிந்து தங்கள் மீதே வரம்புமீறிக்கொண்டவர்களுக்குக் கட்டுப்படாதீர்கள்.
26:152Страница 373
ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ١٥٢
кто распространяет на земле нечестие и ничего не улучшает».
அவர்கள் பாவங்களைப் பரப்புவதன் மூலம் பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்வதில்லை.
26:153Страница 373
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ١٥٣
Они сказали: «Ты - всего лишь один из околдованных.
அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் பலமுறை சூனியம் செய்யப்பட்டவர்களில் ஒருவராக இருந்ததால், அது மிகைத்து உமது அறிவைப் போக்கிவிட்டது.
26:154Страница 373
مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ١٥٤
Ты - всего лишь такой же человек, как и мы. Покажи нам знамение, если ты - один из тех, кто говорит правду».
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். நீர் தூதராக இருப்பதற்கு எங்களைவிட உமக்கு எந்தச் சிறப்பும் இல்லை. நிச்சயமாக தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று கூறும் விஷயத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் உமது நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரத்தைக் கொண்டு வாரும்.
26:155Страница 373
قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ ١٥٥
Он сказал: «Вот верблюдица! Она должна пить, и вы должны пить по определенным дням.
அவர்களுக்கு ஸாலிஹ் கூறினார்: -ஸாலிஹ் நபிக்கு அல்லாஹ் ஒரு அடையாளத்தை வழங்கினான். அவன் பாறையிலிருந்து வெளிப்படுத்திய பெண் ஒட்டகமே அதுவாகும்.- “இது தொட்டு பார்க்கக்கூடிய பெண் ஒட்டகமாகும். நீரில் இதற்கும் பங்குண்டு. உங்களுக்கும் குறித்த அளவு பங்கு உண்டு. உங்களுக்குரிய நாளில் இந்த ஒட்டகம் நீர் அருந்தாது. இது நீர் அருந்தும் நாளில் நீங்கள் அருந்த முடியாது.”
26:156Страница 373
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ ١٥٦
Не прикасайтесь к ней со злом, а не то вас постигнут мучения в Великий день».
அதற்கு அடித்தோ, அதனை அறுத்தோ எந்தத் தீங்கும் இழைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் மாபெரும் நாளில் அல்லாஹ்விடமிருந்து இறங்கும் வேதனை உங்களைத் தாக்கி அழித்து விடும்.
26:157Страница 373
فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ ١٥٧
Но они подрезали ей поджилки и стали сожалеть об этом.
அவர்கள் அதனைக் கொன்றுவிட முடிவு செய்தார்கள். அவர்களில் மிகவும் துஷ்டன் அதனைக் கொன்றுவிட்டான். நிச்சயமாக வேதனை தங்கள் மீது சந்தேகம் இல்லாமல் உறுதியாக இறங்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் தாங்கள் செய்த செயலுக்காக வருத்தப்பட்டு நின்றார்கள். ஆனால் வேதனையைக் கண்ணால் காணும் போது வருத்தப்படுவது எந்தப் பயனையும் தராது.
26:158Страница 373
فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٥٨
Их постигло наказание. Воистину, в этом - знамение, но большинство их не стали верующими.
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையான பூகம்பமும் சத்தமும் அவர்களைத் தாக்கியது. நிச்சயமாக மேற்கூறப்பட்ட ஸாலிஹ் மற்றும் அவரது சமூகத்தின் சம்பவத்தில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.
26:159Страница 373
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٥٩
Воистину, твой Господь - Могущественный, Милосердный.
தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளைத் தண்டிக்கும் உம் இறைவன் (யாவற்றையும்) மிகைத்தவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
26:160Страница 374
كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ ١٦٠
Народ Лута (Лота) счел лжецами посланников.
லூத்தின் சமூகம் அவரை பொய்ப்பித்ததன் மூலம் தூதர்களை பொய்ப்பித்தனர்.
26:161Страница 374
إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ ١٦١
Вот их брат Лут (Лот) сказал им: «Неужели вы не устрашитесь?
அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டு அவனை அஞ்ச மாட்டீர்களா?
நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:164Страница 374
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٦٤
Я не прошу у вас за это вознаграждения, ибо вознаградит меня только Господь миров.
நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத எனையவர்களிடமல்ல.
26:165Страница 374
أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ ١٦٥
Неужели вы будете возлежать с мужчинами из миров
நீங்கள் ஆண்களின் பின்புறத்தில் அவர்களுடன் உறவுகொள்கிறீர்களா?
26:166Страница 374
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ١٦٦
и оставлять ваших жен, которых ваш Господь создал для вас? О нет! Вы являетесь преступным народом».
உங்களின் இச்சையைத் தணித்துக்கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவியரை விட்டுவிடுகிறீர்களா? மாறாக யாரும் செய்யாத மோசமான இந்த செயலின் மூலம் நீங்கள் அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறிவிட்டீர்கள்.
26:167Страница 374
قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ ١٦٧
Они сказали: «О Лут (Лот), если ты не прекратишь, то окажешься одним из тех, кто был изгнан».
அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! நாங்கள் செய்யும் செயலைத் தடுப்பதிலிருந்து, மறுப்பதிலிருந்து நீர் விலகிக்கொள்ளாவிட்டால் எங்களின் ஊரிலிருந்து நிச்சயம் நீரும் உம்முடன் உள்ளோரும் வெறியேற்றப்பட்டுவிடுவீர்.”
26:168Страница 374
قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ ١٦٨
Он сказал: «Я - один из тех, кому ненавистно ваше деяние.
லூத் அவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் செய்யும் உங்களின் இந்தச் செயலை நிச்சயமாக நான் மிகவும் கோபப்பட்டு வெறுக்கிறேன்.”
26:169Страница 374
رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ ١٦٩
Господи! Спаси меня и мою семью от того, что они совершают».
அவர் தன் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்யும் தீய செயலால் ஏற்படும் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக.”
நாம் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்து அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் காப்பாற்றினோம்.
26:171Страница 374
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ١٧١
кроме старухи, которая оказалась среди оставшихся позади.
நிராகரித்தவளாக இருந்த அவருடைய மனைவியைத் தவிர. அவளும் அழிந்து போகும் ஒருத்தியாகிவிட்டாள்.
லூத்தும் அவரது குடும்பத்தாரும் (சதூம்) என்ற ஊரிலிருந்து வெளியேறியவுடன் மற்றவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.
26:173Страница 374
وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ ١٧٣
и пролили на них дождь. Как же пагубен дождь тех, кого предостерегали!
நாம் அவர்கள் மீது வானிலிருந்து மழையை பொழியச் செய்வது போல் கல்மழையைப் பொழியச் செய்தோம். தாம் செய்யும் கெட்ட செயலில் தொடர்ந்திருந்தால் அல்லாஹ்வின் வேதனை ஏற்படும் என லூத் எச்சரித்த இவர்கள் மீது பொழிந்த (கல்) மாரி மிகவும் மோசமானதாகும்.
26:174Страница 374
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٧٤
Воистину, в этом - знамение, но большинство их не стали верующими.
நிச்சயமாக மோசமான செயல் செய்த காரணத்தினால் மேலேகூறப்பட்ட லூத்துடைய சமூகத்தின் மீது இறங்கிய வேதனையில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.
26:175Страница 374
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٧٥
Воистину, твой Господь - Могущественный, Милосердный.
தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன் அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவருடன் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
26:176Страница 374
كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ ١٧٦
Жители Айки сочли лжецами посланников.
சுருண்ட மரத்தையுடைய ஊர்வாசிகள் தங்களின் தூதர் ஷுஐபை பொய்ப்பித்ததோடு,(ஏனைய) தூதர்களையும் பொய்ப்பித்தார்கள்.
26:177Страница 374
إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ ١٧٧
Вот Шуейб сказал им: «Неужели вы не устрашитесь?
அவர்களின் நபியான ஷுஐப் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டு அவனை அஞ்ச மாட்டீர்களா?
நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
26:180Страница 374
وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٨٠
Я не прошу у вас за это вознаграждения, ибо вознаградит меня только Господь миров.
நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இல்லை.
26:181Страница 374
۞ أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ ١٨١
Наполняйте меру полностью и не будьте одними из тех, кто наносит урон.
நீங்கள் மக்களுக்கு விற்பனை செய்யும் போது நிறைவாக அளந்துகொடுங்கள்.அளவை நிறுவையில் குறை செய்ய வேண்டாம்.
நீங்கள் மற்றவர்களுக்கு எடைபோட்டால் சரியான தராசைக் கொண்டு எடைபோடுங்கள்.
26:183Страница 374
وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ١٨٣
Не убавляйте людям того, что им причитается, и не творите на земле зла, распространяя нечестие.
மக்களின் உரிமைகளில் குறை செய்யாதீர்கள். பாவங்கள் செய்து பூமியில் குழப்பத்தை அதிகப்படுத்தி விடாதீர்கள்.
26:184Страница 375
وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ ١٨٤
Бойтесь Того, Кто сотворил вас и первые поколения».
உங்களையும் உங்களுக்கு முந்தைய சமூகங்களையும் படைத்த அல்லாஹ் உங்களின் மீது வேதனையை இறக்குவதை அஞ்சுங்கள்.
26:185Страница 375
قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ١٨٥
Они сказали: «Ты - всего лишь один из околдованных.
ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக சூனியத்தால் உமது புத்தி பேதலித்து, மங்கி விடுமளவு நீர் பலமுறை சூனியம் செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராக இருக்கிறீர்.
26:186Страница 375
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ١٨٦
Ты - всего лишь такой же человек, как и мы, и мы полагаем, что ты являешься одним из лжецов.
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எங்களைவிட உமக்கு எந்தச் சிறப்பும் இல்லை. ஆகவே நீர் எவ்வாறு தூதராக முடியும்? நிச்சயமாக தன்னைத் தூதர் என்று நீர் வாதிடும் விஷயத்தில் உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.
26:187Страница 375
فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ١٨٧
Низринь на нас осколок неба, если ты - один из тех, кто говорит правду».
நீர் வாதிடும் விஷயத்தில் உண்மையாளராக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து ஒரு துண்டை விழச் செய்யும்.
26:188Страница 375
قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ١٨٨
Он сказал: «Мой Господь лучше знает о том, что вы совершаете».
ஷுஐப் அவர்களிடம் கூறினார்: “நீங்கள் செய்யும் இணைவைப்பான காரியங்களையும் பாவங்களையும் என் இறைவன் நன்கறிவான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.”
26:189Страница 375
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ ١٨٩
Они сочли его лжецом, и их постигли мучения в день тени. Воистину, это были мучения в Великий день.
தொடர்ந்தும் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். அதனால் பெரும் வேதனை அவர்களைத் தாக்கியது. கடும் வெயிலுக்குப் பிறகு மேகங்கள் அவர்களுக்கு நிழலளித்தன. அவை அவர்களின் மீது நெருப்பை பொழிந்து அவர்களை எரித்துவிட்டன. நிச்சயமாக அவர்கள் அழிக்கப்பட்ட நாள் பெரும் பயங்கரமான நாளாக இருந்தது.
26:190Страница 375
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٩٠
Воистину, в этом - знамение, но большинство их не стали верующими.
நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட அந்த ஷுஐபின் சமூகம் அழிக்கப்பட்டதில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.
26:191Страница 375
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٩١
Воистину, твой Господь - Могущественный, Милосердный.
தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன் அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
26:192Страница 375
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٩٢
Воистину, это - Ниспослание от Господа миров.
நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
நம்பிக்கைக்குரிய ஜிப்ரீல் இதனைக்கொண்டு இறங்கினார்.
26:194Страница 375
عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ ١٩٤
на твое сердце, чтобы ты стал одним из тех, кто предостерегает.
தூதரே!- அவர் உமது உள்ளத்தில் இறக்கினார். அது நீர் மக்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அச்சுறுத்தி, எச்சரிக்கும் தூதர்களில் ஒருவராக வேண்டும் என்பதற்காகத்தான்.
தெளிவான அரபி மொழியில் இதனை அவர் இறக்கியுள்ளார்.
26:196Страница 375
وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ ١٩٦
и упоминается в Писаниях древних народов.
நிச்சயமாக இந்த குர்ஆனைக் குறித்து முன்சென்றவர்களின் வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. முந்தயை வானுலக வேதங்கள் இதனைக் கொண்டு நற்செய்தி கூறியுள்ளன.
26:197Страница 375
أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٩٧
Разве для них не является знамением то, что ученые сынов Исраила (Израиля) знают его?
உமக்கு இறக்கப்பட்டுள்ளதைக்குறித்து இஸ்ராயீலின் மக்களிலுள்ள அப்துல்லாஹ் இப்னு சலாம் போன்ற அறிஞர்கள் உண்மையாக அறிந்திருப்பது, உம்மை மறுக்கும் இவர்களுக்கு, உனது நம்பகத்தன்மைக்கான ஒரு சான்றாக இல்லையா?
26:198Страница 375
وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ ١٩٨
Если бы Мы ниспослали его кому-либо из неарабов
நாம் அரபி மொழி பேசாத வேறு சிலரின் மீது இந்தக் குர்ஆனை இறக்கியிருந்து
26:199Страница 375
فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ ١٩٩
и если бы он прочел его им, то они не уверовали бы в него.
அதனை அவர் அவர்களிடம் படித்துக்காட்டினால் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். “நிச்சயமாக எங்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது” என்று கூறுவார்கள். எனவே அவர்களின் மொழியில் இறக்கப்பட்டதற்காக அவர்கள் அல்லாஹ்வை புகழட்டும்.
26:200Страница 375
كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ٢٠٠
Так Мы внедряем его (неверие) в сердца грешников.
இவ்வாறு நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் நிராகரிப்பை, நிராகரிப்பை நுழைத்து விடுகின்றோம்.
Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии