Аль-МухтасарАн‑Намль · 27:90–93

Аль-Мухтасар · Тафсир · на тамильском

Ан-Намль 27:90–93

27:90Страница 385

وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَكُبَّتۡ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ هَلۡ تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٩٠

А те, которые предстанут с дурными деяниями, будут повергнуты в Огонь ничком: «Разве вы не получаете воздаяние только за то, что совершали?».

நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களைக் கொண்டு வருபவர்களுக்கு நரகம்தான் உண்டு. அவர்கள் நரகத்தில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள். கண்டிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் உலகில் செய்த நிராகரிப்பான மற்றும் பாவமான செயல்களைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படவில்லையே!.

27:91Страница 385

إِنَّمَآ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ رَبَّ هَٰذِهِ ٱلۡبَلۡدَةِ ٱلَّذِي حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَيۡءٖۖ وَأُمِرۡتُ أَنۡ أَكُونَ مِنَ ٱلۡمُسۡلِمِينَ ٩١

Скажи: «Мне велено только поклоняться Господу этого города (Мекки), который Он провозгласил заповедным. Ему принадлежит всякая вещь, мне же велено быть одним из мусульман

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் இந்த நகரத்தை - மக்காவை - கண்ணியப்படுத்திய இறைவனை வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். இந்த நகரத்தில் இரத்தம் சிந்தப்படக்கூடாது, எவர் மீதும் அநீதி இழைக்கப்படக்கூடாது, இங்குள்ள மரங்கள் வெட்டப்படக்கூடாது, விலங்குகள் வேட்டையாடப்படக்கூடாது. எல்லாவற்றின் ஆட்சியதிகாரமும் அவனுக்கே உரியது. நான் அவனுக்கு வழிப்பட்டு அடிபணிந்தவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளேன்.

27:92Страница 385

وَأَنۡ أَتۡلُوَاْ ٱلۡقُرۡءَانَۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَقُلۡ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُنذِرِينَ ٩٢

и читать Коран». Кто следует прямым путем, тот поступает во благо себе. А тому, кто впал в заблуждение, скажи: «Я - всего лишь один из тех, кто предостерегает».

நான் இந்தக் குர்ஆனை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளேன். யார் இதனைக்கொண்டு நேர்வழி பெற்று இதன்படி செயல்படுவாரோ அவர் தனக்குத்தான் நேர்வழியை தேடிக் கொண்டார். யார் வழிகெட்டு, அதில் இருப்பவைகளை விட்டும் நெறிபிறழ்ந்து, அதனை மறுத்து, அதன்படி செயல்படவில்லையோ, நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்பவர்களில் ஒருவன்தான். உங்களுக்கு நேர்வழியளிக்கும் அதிகாரம் என் கையில் இல்லை.”

27:93Страница 385

وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ سَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَتَعۡرِفُونَهَاۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ٩٣

Скажи: «Хвала Аллаху! Он покажет вам Свои знамения, и вы узнаете их». Твой Господь не находится в неведении о том, что вы совершаете.

தூதரே!- நீர் கூறுவீராக: “எண்ணற்ற அருட்கொடைகளை அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களிலும் வானத்திலும் பூமியிலும் வாழ்வாதாரத்திலும் விரைவில் தன் சான்றுகளை அவன் காட்டுவான். அப்போது உங்களை சத்தியத்தை ஏற்றுக்கொள்ள நேர்வழிவழிகாட்டும் அறிவைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English